Saturday, July 9, 2011

பீஷ்மரின் டாம் அண்ட் ஜெர்ரி

டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பிடிக்காதவர்களை உலக வரைபடத்தில் உள்ள நாடுகளில் பார்க்க முடியாது. வீட்டில் பெரியவளும் சின்னவளும் ஜெர்ரி அடிக்கும் லூட்டிகளைப் பார்க்கும் போது நானும் அந்த ஜமாவில் சேர்ந்து கொண்டு அடிதடி சீனுக்கு தக்கவாறு கைதட்டி, பல்லிளித்து, கண்களில் நீர் வரச் சிரித்துப் பார்ப்பேன். என்னைபோல நிறைய தகப்பன்கள் இதையே செய்யக் கூடும். "நியூஸ் பார்க்கணும் மாத்து" என்று குழந்தைகளுக்கு நிகராக ஒற்றைக்காலில் நின்று அழுது அரற்றி சேனல் போட்டி போடும் தாத்தாக்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழிக்கும் அனேக கோடி அப்பாக்களில் நானும் ஒருவன். சரி. டைட்டிலுக்கு வருவோம்.

உருவத்திலும், வலுவிலும் எளியதாக இருக்கும் எலியார், பூனையாருக்கு கொடுக்கும் சங்கடங்களும், சீண்டல்களும், அதைப் பூனையார் எதிர்கொள்ளும் விதங்களுமாக தினத்தந்தி கன்னித்தீவு போல பல பார்ட் எடுத்துவிட்டார்கள். பார்த்த பார்ட்டாக இருந்தாலும் பார்க்க விழி கெஞ்சும். இந்த ஜோக்கு டாம் அண்ட் ஜெர்ரி போல டாப்டக்கர் ஜெர்ரியையும் ஒரு பூனையையும் பற்றி சாந்தி பர்வத்தில் பீஷ்மர் நீதிக்கதை ஒன்றை அம்புப் படுக்கையில் கிடந்த போது தர்மபுத்திரர்களுக்கு சொல்லியிருக்கிறார். அது என்ன கதை?

cat-mouse

ஒரு அடர்ந்த காடு. அங்கே ஓங்கி உயர்ந்த ஒரு ஆலமரம். அந்த ஆலமரத்தின் கீழே பொந்து பறித்து ஒரு எலி வாழ்ந்து வந்தது. ஆலமரத்திற்கு மேலே பூனை ஒன்று ஜீவனம் செய்து வந்தது. ஒரு நாள் வேடன் ஒருவன் சாயந்திர வேளையில் ஒரு பெரிய வலையை அந்த மரத்திற்கு கீழே விரித்து விட்டு சென்றுவிட்டான். காலையில் வந்து பார்த்ததும் அதில் சிக்கியிருக்கும் மிருகங்களை பிடித்துக்கொண்டு போய் இல்லறத்தை நல்லறமாக நடத்திக்கொண்டிருந்தான்.

ஒரு நாள் அவன் விரித்த வலையில் ஆலமரப் பூனை வசமாக மாட்டிக்கொண்டது. பகையாளியான பூனை மாட்டிக்கொண்டதும் எலி சந்தோஷமாக மரத்தைச் சுற்றி சுற்றி விளையாண்டது. மரத்துக்கு கீழிருக்கும் எலியை எப்போது கவ்வலாம் என்று ஒரு கோட்டானும் கீரிப்பிள்ளையும் எந்நேரமும் தாக்குவதற்கு ஆயத்தமாக ஆலமரக் கிளையில் உட்கார்ந்திருந்தது. எலி இதைப் பார்த்தது. இப்போது எலி-பூனை இரண்டிர்க்குமே பிரச்சனை.

பூனை, கோட்டான், கீரிப்பிள்ளை மூன்றுமே எலிக்கு எதிரிகள். இருக்கும் பேராபத்தை உணர்ந்து எலி ஒரு உபாயம் யோசித்து பூனையுடன் சமாதானம் பேசியது. "என்னை விழுங்குவதற்காக ரெண்டு பேர் காத்திருக்கிறார்கள். நீயும் வலையில் சிக்கிக்கொண்டு ஆபத்தில் இருக்கிறாய். இப்போது நான் வந்து உன் மடியில் படுத்துக் கொள்கிறேன். நீ எனக்கு மிகவும் சிநேகமாக இருக்கிறாய் என்று தெரிந்ததும் அவர்கள் என்னை விட்டு விடுவார்கள். அவர்கள் இங்கிருந்து சென்றதும் உன்னுடைய வலையைக் கடித்து உன்னை நான் வெளியே விடுவிக்கிறேன்." என்றது. பூனைக்கும் இது ஒரு நல்ல யோசனையாக தோன்றியது. "சரி. வந்து என்னோடு படுத்துக்கொள்" என்று கூப்பிட்டு எலியை கட்டி அணைத்துப் படுத்துக்கொண்டது. இதைப் பார்த்த கோட்டானும், கீரிப்பிள்ளையும் பூனை-எலியின் ஆத்மார்த்த நட்பைப் பார்த்து வியந்து அந்த இடத்தை விட்டு ஏமாற்றத்துடன் காலி செய்தது.

கோட்டானும், கீரிப்பிள்ளையும் சென்ற பிறகு பூனையின் மடியில் இருந்து எலி வெளியே குதித்து ஓடியது. "ஏய்! நீ என்னை விடுவிக்கிறேன் என்று வாக்கு கொடுத்தாயே நினைவில்லையா?" என்று கேட்டது பூனை. "நிச்சயமாக விடுவிப்பேன்" என்று கூறிய எலி மெதுவாக வலையின் ஒவ்வொரு கயிறாக கடிக்க ஆரம்பித்தது. பூனை "வேடன் வருவதற்குள் சீக்கிரம் அறுத்து எறி " என்று அவசரப்படுத்தியது. மிக மெதுவாக கடித்த எலியைப் பார்த்து பூனை கோபமுற்று "நீ செய்வது உனக்கு நியாயமாக படுகிறதா? உன்னை நான் காப்பாற்றியது போல நீ என்னை காப்பாற்ற மாட்டாயா?" என்று கேட்டது.

"நீயும் நானும் பிறவி எதிரிகள். எக்காலத்திலும் நண்பர்களாக முடியாது என்று கூறியது. இப்போதே உன்னைக் காப்பாற்றினால் நீ என்னைக் கடித்து தின்றுவிடுவாய். ஆகையால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வலையைக் கடித்து வைத்துக்கொள்வேன். வேடன் அருகாமையில் வருவது தெரிந்ததும் நொடியில் அனைத்தையும் அறுத்தெறிந்து உன்னைக் காப்பாற்றுவேன். கவலையை விடு" என்று தைரியம் சொன்னது.

தூரத்தில் வேடன் வருவது தெரிந்தது. எலி கடகடவென்று கடித்து வலையை அறுத்தெறிந்து சொன்ன சொல் காப்பாற்றியது. உயிர்பிழைக்கும் அவசரத்தில் பூனையும் ஓடிப் போய் மரத்தின் மேல் ஏறிக்கொண்டது. வேடன் வலை அறுந்ததைப் பார்த்து வருத்தத்துடன் வீடு திரும்பினான். மீண்டும் மரத்தில் மேலிருந்து பூனை எட்டிப்பார்த்து "எலியாரே! நீங்கள் எனக்குப் புரிந்த உதவியை நான் என்றும் மறவேன். நீங்கள் என் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களை நான் தின்பேனா? வெளியே வாருங்கள்" என்று பரிவாக அழைத்தது.

எலி கடைசி வரை அந்தப் பக்கமே எட்டிக் கூட பார்க்கவில்லை.

இந்த எலியை உதாரணமாக வைத்துப் பல நீதிகள் பீஷ்மர் உரைத்தார். அவற்றில் ஒரு சில
 1. பகைவனாக இருந்தாலும் தேவையான நேரத்தில் அவனடித்திலும் உதவி பெறலாம்
 2. பிறவிப் பகைத் தீரவே தீராது.
 3. சிறிதும் பலமில்லாத எலி தன் புத்தி கூர்மையால் மூன்று பகைவர்களிடம் இருந்து ஒரே நேரத்தில் தன்னைக் காப்பாறிக்கொண்டது.
 4. பூனையிடம் எலி தைரியமாக படுத்துக் கொண்டது போல பயமுள்ளவன் பயமற்றவன் போல நடந்துகொள்ளவேண்டும்.
இதுபோல எலிக்கும் பூனைக்கும் நடக்கும் உரையாடலில் நிறைய அரசியல் நுணுக்கங்களை பிதாமகன் பகிர்ந்திருப்பார். சமகால அரசியலில் இந்த எலி போல நடந்து கொள்கிறவர்கள் புத்தியுடன் பிழைத்துக் கொள்வார்கள்.

பின் குறிப்பு: நட்சத்திர வாரத்தில் எல்லா சப்ஜெக்ட்டுகளிலும் எழுதலாம் என்ற விருப்பத்தில் விளைந்தது இது.


பட உதவி: http://www.saidaonline.com

-

  50 comments:

  இராஜராஜேஸ்வரி said...

  நட்சத்திர வாரத்தில் எல்லா சப்ஜெக்ட்டுகளிலும் எழுதலாம் என்ற விருப்பத்தில் விளைந்தது இது.//

  அருமையான ஆரம்பம். தொடர வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். பயனுள்ள பகிர்வு.

  Unknown said...

  mee the firstu...

  A.R.ராஜகோபாலன் said...

  அமர்க்களமான நீதிக்கதை வெங்கட்
  அதை நீ சொன்ன விதமும்
  தொடங்கிய லாவகமும்
  அசத்தல் , இன்னும் இது போல நிறைய வேண்டுகிறேன்

  இளங்கோ said...

  :)

  Unknown said...

  வாவ் சிம்பிள் சூப்பர்
  கருத்து
  சொன்ன
  மன்னை மைனர்வாள்
  வாழ்க

  பத்மநாபன் said...

  டாம் அண்ட் ஷெர்ரி சரியான களைப்பு நிவாரணி...

  இக்கதை வேடன்+மான் வைத்து சொல்வார்கள் .. பூனை எலிக்கதை தான் பொருத்தமாக வருகிறது...அதான் மேலாண் கருத்துக்களும் அருமை.. மகாபாரதமே ஒரு மேலாண்மை கையேடு....அதில் பீஷ்மர் பகுதி நுட்பம் கூடியது ...

  RAMA RAVI (RAMVI) said...

  “உடல் பலத்தையும் உருவத்தையும் வைத்து ஒருவரை எடை போடாமல் புத்தியை வைத்து எடை போட வேண்டும்” என்ப்தை தெரிவிக்கும் வகையில் உள்ளது.
  மிகவும் அழகாக விளக்கியுள்ளீர்கள் RVS சார்..

  Anonymous said...

  அசத்துது RVS...

  RVS said...

  @இராஜராஜேஸ்வரி
  நன்றிங்க மேடம். ;-)

  RVS said...

  @siva
  உஹும். லேட்டு... ;-)

  RVS said...

  @A.R.ராஜகோபாலன்
  நிச்சயம் நண்பா. ;-) நன்றி

  RVS said...

  @இளங்கோ
  ;-))) ;-))

  RVS said...

  @siva
  பாராட்டிய மன்னை மைந்தன் சிவா வாழ்க. ;-))

  RVS said...

  @பத்மநாபன்
  தலைவரே! மிருகங்களை வைத்து நிறைய கதைகள் மஹாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. முடிந்தால் சிலவற்றை பகிரலாம் என்று எண்ணுகிறேன். பார்க்கலாம். கருத்துக்கு நன்றி பத்துஜி! ;-)

  RVS said...

  @RAMVI
  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. நீங்களும் ஒரே வரியில் சொல்லிட்டீங்க. அடிக்கடி வாங்க. நன்றி! ;-)

  RVS said...

  @Reverie
  நன்றிங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும். ;-)

  creativemani said...

  நல்ல கதை.. நல்ல கருத்தும்..

  வெங்கட் நாகராஜ் said...

  டாம் அண்ட் ஜெர்ரி.... ரசிக்காதவர்கள் தான் யார். என்னுடைய பெண்ணிற்காக என்று வாங்கிய 6 டாம் அண்ட் ஜெர்ரி டிவிடிக்கள் அவளை விட அதிக நேரம் நான் தான் பார்த்திருக்கிறேன்... பார்த்துக் கொண்டு இருக்கிறேன்....

  மஹாபாரதத்தில் கொட்டிக் கிடக்கும் நீதிக்கதைகள் தான் எத்தனை எத்தனை.... தொடர்ந்து எழுதுங்கள் மைனரே...

  பத்மநாபன் said...

  மகாபாரதம் நான் முழுமையாக படித்ததில்லை.. பிட் பிட்டாக அதன் மேலாண்மை உணர்த்தும் கதைகள் படிக்கவும் கேட்கவும் பிடிக்கும்... எழுதுங்கள்.. படிக்க காத்திருக்கிறோம்....

  raji said...

  உலக வாழ்வு மொத்தத்திற்கும் மகாபாரதத்தில் இல்லாத நீதிக்கதைகளா?
  இன்றைய தலைமுறையினரை இவற்றை எல்லாம் அவசியம் அறிய செய்தல் வேண்டும்

  Angel said...

  எனக்கு ரொம்ப பிடிக்கும் tom and jerry கார்டூன் .
  வாழ்த்துக்கள் அருமையாக இருந்தது .

  CS. Mohan Kumar said...

  நீதிகள் அருமை

  CS. Mohan Kumar said...

  கொசுவர்த்தி...

  கணேசா பஸ்ஸை நினைவு படுத்திடீங்க. Thanks

  ரிஷபன் said...

  பூனையிடம் எலி தைரியமாக படுத்துக் கொண்டது போல பயமுள்ளவன் பயமற்றவன் போல நடந்துகொள்ளவேண்டும்.

  அருமையான/தேவையான புத்திமதி.

  சாய்ராம் கோபாலன் said...

  ஆர்.வி.எஸ். நீங்கள் சொன்னது போல் எப்போது பார்த்தாலும் அலுக்காத கார்ட்டூன் டாம் அண்ட் ஜெரி தான். மனதை மகிழ வைக்கும் அரு மருந்து.

  ரொம்ப கஷ்டப்படுவதால் நிறைய பேருக்கு பூனையார் தான் பிடிக்கும் ! ஐயோ பாவமே என்று

  Unknown said...

  //பகைவனாக இருந்தாலும் தேவையான நேரத்தில் அவனடித்திலும் உதவி பெறலாம்//
  காங்கிரஸ் – தி.மு.க. தற்போதைய நிலை.

  //பிறவிப்பகை தீரவே தீராது.//
  தி.மு.க. – அ. தி.மு.க.

  // சிறிதும் பலமில்லாத எலி தன் புத்தி கூர்மையால் மூன்று பகைவர்களிடம் இருந்து ஒரே நேரத்தில் தன்னைக் காப்பாறிக்கொண்டது.//
  கலாநிதி (இன்றுவரை எஸ்கேப்).

  // பூனையிடம் எலி தைரியமாக படுத்துக் கொண்டது போல பயமுள்ளவன் பயமற்றவன் போல நடந்துகொள்ளவேண்டும்//
  எவ்வளவு விலைவாசி இருந்தாலும் அசராமல் இந்தியாவில் திரிந்துகொண்டிருக்கும் சாமான்யன்.

  வாழ்க பொதுப்பணித்துறை பதிவர் ஆர்.வி.எஸ்.!!

  RS said...

  //ரொம்ப கஷ்டப்படுவதால் நிறைய பேருக்கு பூனையார் தான் பிடிக்கும் ! ஐயோ பாவமே என்று//

  me too.

  அருமையான கதை.

  ஸ்ரீராம். said...

  அருமை.

  எல் கே said...

  எங்க வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். அதனால் நோ ப்ராப்ளம். மகாபாரதம் / ராமாயணம் சொல்லாத நீதி எதுவும் இல்லை மைனர்வாள். எல்லாமே சொல்லி இருக்கு அதில்

  மோகன்ஜி said...

  இன்னமும் கொஞ்சம் டாம் அண்ட் ஜெர்ரி கதைகள் சொல்லுங்கோ அங்கிள்..
  கேட்டுந்தே இருந்தா அப்பியே தூங்கிடுவே....

  தக்குடு said...

  எனக்கு ஜெர்ரியை பிடிக்கும்!னு தனியா சொல்ல வேண்டியதில்லை...:) கதை அழகா சொல்றேளே அண்ணா!

  RVS said...

  @அன்புடன்-மணிகண்டன்
  நன்றிங்க.. முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

  RVS said...

  @வெங்கட் நாகராஜ்
  விடீயோ டெக் முதல் முறை எங்கள் ஊரில் அறிமுகப்படுத்தப் பட்ட போது ஒரு நாள் முழுக்க டாம் பார்த்திருக்கிறோம். கருத்துக்கு நன்றி தல. ;-)

  RVS said...

  @பத்மநாபன்
  உத்தரவு பத்துஜி! செய்கிறேன். ;-)

  RVS said...

  @raji
  வாழ்க்கை தத்துவங்கள் அடங்கிய பெரும் இதிகாசம் அது. நன்றி. ;-)

  RVS said...

  @angelin
  நன்றி சகோ. ;-)

  RVS said...

  @மோகன் குமார்
  நீதிக்கு நன்றி! கொசுவர்த்தி ச ரி க ம ப த நி க்கு போட வேண்டிய கமெண்ட். ஓ.கே. நன்றி. ;-)

  RVS said...

  @ரிஷபன்
  கருத்துக்கு நன்றி சார்! ;-)

  RVS said...

  @சாய்
  குறும்புத்தனத்தை ரசிப்பவர்களுக்கு எலியை பிடிக்கும். சுய பச்சாதாபம் மிக்கவர்களுக்கு பூனையை பிடிக்கும்.
  சரியா சாய்? ;-)

  RVS said...

  @! சிவகுமார் !
  தம்பி உங்களுக்கு அரசியலில் பெரிய எதிர்காலம் இருக்கு. ;-) கருத்துக்கு நன்றி. ;-)

  RVS said...

  @RS
  நன்றிங்க... முதல் வருகைக்கும் கருத்துக்கும். ;-)

  RVS said...

  @ஸ்ரீராம்.
  நன்றி! ;-)

  RVS said...

  @மோகன்ஜி
  ஹா..ஹா.. அண்ணா.... ;-)

  RVS said...

  @தக்குடு
  எல்லாம் படிச்சது தான். எனக்கு புரிஞ்சா மாதிரி எழுதினேன். நன்றி தக்குடு. ;-)

  தோஹா அன்பன் said...

  வியாச பாரதத்தில் எத்தனை நுணுக்கமான விஷயங்கள் இருக்கின்றன என்பதை வியாச - விநாயக சம்பாஷணையில் இருந்தே புரிந்து கொள்ளலாம். ஓய RVS அண்ணா ஆரம்பத்திலிருந்தே இக்கதையையும் அதில் உள்ள நுணுக்கங்களையும் எழுதினால் உமது தொடர் பதிவு மேலும் அர்த்தமுள்ளதாக இருக்கும். படிப்பவர்களுக்கும் நாலு விஷய ஞானம் கிடைக்கும். உமது (எழுத்து) நடை அழகை மனதில் கொண்டே இதை கூறுகிறேன்.

  சாந்தி மாரியப்பன் said...

  கதையும், சொல்லியவிதமும் அசத்தல்..

  ADHI VENKAT said...

  டாம் அண்ட் ஜெர்ரி பிடிக்காதவர்கள் உண்டா?
  நீதிக்கதைகள் அருமையாய் இருக்கு. தொடருங்கள்.

  RVS said...

  @தோஹா அன்பன்
  அன்பருக்கு நன்றி! மேலும் இதுபோல எழுதுவதற்கு முயற்சிசெய்கிறேன்.

  RVS said...

  @அமைதிச்சாரல்
  நன்றி சகோ ;-)

  RVS said...

  @கோவை2தில்லி
  நன்றி சகோ. தொடர்கிறேன். ;-)

  ஆடிய பிற ஆட்டங்கள்

  Related Posts with Thumbnails