Monday, March 8, 2010

கவிதை ஜாக்கிரதை!


ஓவியம்: ராஜா ரவிவர்மாவின் கைவண்ணம்



சேலையில் தொட்டில்  கட்டி  
சாலை வேலை பார்க்கும் அம்மாவுக்கும்

கலர் புடவை கட்டி
காக்கி சட்டை போட்டு
ஆட்டோ ஓட்டும் அம்மணிக்கும்

பத்து செங்கல்லை தூக்கும் சித்தாளாய்
வேலை பார்க்கும் பெரியாளுக்கும்

நாலு வீடு பத்து பாத்திரம் தேய்த்து
நாலு எழுத்து படிக்க அனுப்பும் தாயம்மாவுக்கும்


கல் கணவனிடமும்  புல் புருஷனிடமும்  
குப்பை கொட்டும் குணவதிகளுக்கும்

அந்நியனாய் அயல் தேசம் சென்ற புதல்வனிடம்  
கண்ணியமான பாசத்திற்காக ஏங்குபவளுக்கும் 

உயிரை ஒருவனுக்கு கொடுத்து உடம்பை 
மற்றவனுக்கு கொடுத்தவளுக்கும்

வறுமையில் தன்னை தொலைத்து கரு அறையில்
சிவப்பில் வாழும் 'அவளு'க்கும்

குடும்பத்தை பேண பஸ் பயண
கூட்டத்தில் இடிபடுபவளுக்கும்

காதலிப்பவளுக்கும்
காதலித்து கைவிடப்பட்டவளுக்கும்

நேரிலும்  நிழலிலும்,
விண்ணிலும் மண்ணிலும்
இக பர சுகமளிப்பவளுக்கும்

என் சிரம் தாழ்ந்த
மனம் கனிந்த
மகளிர் தின வாழ்த்துக்கள்.
இது கவிதை அல்ல கவிதை மாதிரி

பின் குறிப்பு: ப்ளாக் எழுத ஆரம்பிச்சதிலேர்ந்து இந்த 'கவிதை' மட்டும் விட்டு வைத்திருந்தேன். இன்றைக்கு அந்த குறையும் நிவர்த்தி செய்தாயிற்று. இனிமேல் பல பேர் என்னை "எப்போ கவிதை?" என்று தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.  இப்பதிவின் தலைப்பே இது எப்படி என்று கூறுமே....

5 comments:

  1. nallavelai sariyana thalaipu....

    ReplyDelete
  2. அன்பின் ஆர்விஎஸ்

    கவிதை எழுதுக - நல்லாத்தான் இருக்கு - எழுத எழுதத்தான் வரும். சரியா

    ஆமா பெண்கள் இத்தனை அவதாரம் எடுக்கிறார்களா - ம்ம்ம்ம்ம்ம் - ரூம் போட்டு யோசிச்சதா

    நல்வாழ்த்துகள் ஆர்விஎஸ்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  3. @cheena (சீனா)
    நன்றி சீனா சார்!! ;-)

    ReplyDelete
  4. @சாய்
    கரெக்ட்டுதான் சாய்.. அந்தக் கொடுமையை நீங்க அப்ப அனுபவிக்கலை... ;-)

    ReplyDelete