Sunday, September 12, 2010

கரடி விளையாட்டு

karadi taleகாட்டுல கொட்டாய் போட்டுக்கிட்டு குடியிருக்கும் ஆண்டி குத்த வச்சு உட்கார்ந்து பல் தேய்ச்சுகிட்டு இருக்காரு. தீடீர்னு ஒரு கரடி அங்க வந்துடிச்சி. அசரீரி மாதிரி நாலு பேர் பின்னாடிலேர்ந்து  "ஆண்டி.. விடாதே.. சுடு.. சுடு..." அப்படின்னு காது கிழிய கத்தறாங்க.. சுடவா சுட வேணாமான்னு ஆண்டி முடிவு பண்ணனும். இந்த நேரத்தில அவர் என்ன பண்ணனும்னு நாம கூட டிசைட் பண்ணலாம். இப்படி ஒரு விளம்பரம். "SHOOT THE BEAR" இல்லைனா "DON'T SHOOT THE BEAR"  இன்னு திரையில் தெரியும் ரெண்டு சாய்ஸ்ல ஒன்றை நாம் செலக்ட் பண்ணி உள்ள போனா... அடடா.....  சூப்பர். TIPP-EX என்ற ஒரு இங்க் அழிப்பானின் விளம்பரம் இது. யூட்யூபை துணைக்கு வைத்துக் கொண்டு அட்டகாசமான ஐடியாவோடு அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். வீட்ல சின்ன பசங்களை கூட பக்கத்தில் உட்கார வைத்து பார்க்க வேண்டிய வீடியோ இது. ஷூட், டோன்ட் ஷூட்டிற்கு அப்புறம் கரடி உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை ஒரு கட்டத்தில் டைப் பண்ண சொல்கிறார்கள். ஆங்கில  வினைச்சொற்க்கள் நமக்கு தெரிந்த வரை நிரப்பி கரடியும் ஆண்டியும் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்து ரசிக்கலாம்.



என்வீட்டு குட்டிகள் கீழ்கண்ட வார்த்தைகளால் கரடியுடன் விளையாடினார்கள்.
1. jump
2. play
3. fishing
4. dance
5. sing
6. eat
7. brush
8. bath
9. watching movie
10.phone

நல்லா இருக்கு. யாராவது விஷமிகள் ஏடாகூடமாக கெட்ட காரிய வார்த்தைகள் அடித்து கரடியை சீண்ட முயன்றால் அதற்க்கும் சமாளிக்கும் வகையில் நன்றாக ப்ரோக்ராம் செய்திருக்கிறார்கள். சமீப காலங்களில் நான் பார்த்த அதிரடி விளம்பர வீடியோ இதுதான். தூள் கிளப்பியிருக்கிறார்கள்.  என்ஜாய்!!!!

10 comments:

  1. அற்புதம் ஆர்.வி.எஸ்..எப்படி இப்படியெல்லாம்...யு.டூய்ப் தாண்டி கை நீட்டியது உண்மையிலேயே தொழில் நுட்ப ஆச்சர்யம்..இன்னமும் விளையாட ஆவல்.
    பிறரை மகிழ்வித்து பார்ப்பதில் இருக்கும் உங்கள் நற்செய்கைக்கு மிண்டும் ஒரு உதாரணம்.

    ReplyDelete
  2. நீங்கள் வார்த்தை அடிக்கும் இடம், யுட்யுபில் வேறொரு யு.ஆர்.எல். அதில் தங்கள் ப்ரோக்ராம்மிங் கைவண்ணத்தை காட்டியிருக்கிறார்கள். எது எப்படியோ நம்மை ஆட வைத்துவிட்டார்கள் இல்லையா பத்மநாபன்?

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  3. விளையாட்டு நீண்டுகொண்டே போகிறது,
    மகிழ்ச்சியும் அப்படித்தான்!

    ReplyDelete
  4. யாரோ எதோ ‘கரடி’ விடுகிறார்களோ என்று நினைத்தேன். உண்மையிலேயே சூப்பர்!

    ReplyDelete
  5. அமைதி அப்பா... நீங்கள் மகிழ்ந்ததில் எனக்கும மகிழ்ச்சி... :)))))

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  6. டெக்னாலஜியில் புகுந்து விளையாடுகிறார்கள் ஆர். ஆர். ஆர். சார்.

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  7. நான் கூட வேற ”கரடி”ன்னு நெனச்சுக்கிட்டே குஷியா வந்தான்... பரவாயில்ல...

    அந்த கரடிக்கு இந்த கரடி எவ்வளவோ மேல்....

    ReplyDelete
  8. கோபி நீங்க என்னென்னா வார்த்தைகள் கரடி கூட விளையாட்னீங்க.....

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  9. நல்ல விளையாட்டு. உட்கார்ந்து யோசிப்பாய்ங்க போலிருக்கு!

    வெங்கட்.

    ReplyDelete
  10. எவ்வளவு நேரம் விளையாடினீர்கள் வெங்கட்?

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete