Wednesday, September 15, 2010

எமனை ஏமாற்றியவர்கள்

justmiss
ஜஸ்ட் மிஸ்ஸு.....
இதைக் கண்டால் பயம் அதைக்கண்டால் பயம் ஆயாவைக் கண்டால் பயம் என்று தெனாலி கமலஹாசன் கணக்காக உடம்பு உதறி பயப்படும் ஆம்பிளை சிங்கங்கள் ஏன் பெண் சிங்கங்கள் கூடத்தான் இந்த வீடியோவை பார்க்கவேண்டாம். இது ஒன்றும் ஒரு ஆளை உட்கார்த்தி ஐந்து பேர் சுற்றி நின்று ஆடு அறுப்பது போல் கழுத்தை அறுக்கும் வீடியோ அல்ல. ஆனால் இந்த வீடியோவில் இடம் பெறுபவர்கள் எமனை ஏமாற்றியவர்கள். சே.. ஜஸ்ட் மிஸ்டா... என்று தனது பாசக்கயிற்றில் மாட்டாமல் தப்பித்தவர்களை பார்த்து சத்தம் வர இடது கை மடித்து வலது உள்ளங்கை குத்தி எமன் ஏமாந்து போன கட்டங்கள். (நடுவுல ஒரு கடி... இதனால என்ன தெரியுது.. எமன் ஒரு லெஃப்டிஸ்ட்!! சே.சே. அவன் ஒரு ரேஷனலிஸ்ட் என்கிறார் கட உபநிஷதம் கரைத்துக் குடித்த ஒரு வேதாந்தி. )


அரை டவுசர் போட்ட வயசில் பக்கத்து வீட்டு கோபி "முக்கு திரும்புற இந்த பஸ்ஸோட ரெண்டு வீலுக்கு  நடுவுல படுப்பியா..பார்ப்போம்.." என்ற வில்லத்தனமான கேள்வியை ஏதோ காதலை டெஸ்ட் பண்ணும் ஃபிகர் கேட்டது போல அடிபணிந்து சேலஞ்சா எடுத்துகிட்டு போய் தார் ரோட்டுல சாஷ்டாங்கமா படுக்க, நாப்பது தாண்ட முடியாத அந்த தள்ளாத வயதான பஸ்ஸோட டிரைவர் வண்டியை ஸ்லோமோஷனில் நிறுத்திவிட்டு வந்து "ஏம்பா.. இவ்ளோ சின்ன வயசிலேயே வாழ்க்கையில் விரக்தியா? தற்கொலை முயற்சியா?" என்று கேட்டது (இதே சென்னையில் நடந்திருந்தது என்றால் "ஐயே..த்தோடா...சாவு கிராக்கி. வூட்ல சொல்ட்டு வன்ன்ட்டியா.. பேமானி... கய்தே... கஸ்மாலம்...என்று புரியாத நல்ல தமிழில் சகட்டுமேனிக்கு அர்ச்சனை வாங்கியிருக்கக்கூடும்) இப்போது கூட காதை "ஞொய்" என்று குடையுது. அப்புறமும் அந்த பஸ் ஒரு வாரத்துக்கு எங்கள் வீட்டருகே ஒரு பிரேக் போட்டு எட்டிப் பார்த்துவிட்டு மெதுவாகத் தான் தாண்டி சென்றது என்ற செய்தி இந்த ப்ளாக்கிற்கு வேண்டாத மேட்டர். இந்த வீடியோவில் வாழ்க்கையில் திரில் கேட்கும் சில நெப்போலியன்கள் ( உள்ள ஒரு ஃபுல் நெப்போலியன் போயிருக்கும் போல.) ரயில் தண்டவாளத்துக்கு நடுவே தண்டம் சமர்ப்பித்து தில்லாக படுத்து வீர சாகசம் புரிகிறார்கள். பாக்கற நமக்கு நெஞ்சில தடக்...தடக்... தடக்.. தடக்..




இந்த வீடியோவின் தலை திரும்ப விடாத சில திக். திக். நிமிடங்கள்.... சீட்டிலிருந்து கீழே விழாத வண்ணம் கைப்பிடியை பிடித்துக் கொள்ளுங்கள்.
2:24
3:05
3:20
5:30
5:50
கடைசியாக எருமைக்கு பதிலாக ட்ரைன் வாகனத்தில் வந்த எமன் பிரேக் போட்ட கட்டம். 9:08 நிச்சயம் பார்க்க வேண்டும்.

கிளைமாக்ஸ் திகில்:
இவர்கள் நடிகையிடம் சிநேகிதம் வைக்காத ஒழுக்கமான சாமியாரிடம் "தீர்காயுஷ்மான் பவ:" என்று ஆசீர்வாதம் வாங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். என்ன சரியா?

12 comments:

  1. //கிளைமாக்ஸ் திகில்:
    இவர்கள் நடிகையிடம் சிநேகிதம் வைக்காத ஒழுக்கமான சாமியாரிடம் "தீர்காயுஷ்மான் பவ:" என்று ஆசீர்வாதம் வாங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். என்ன சரியா?//

    மாப்பு... இது ரொம்ப சூப்பரு ?

    ReplyDelete
  2. பட படக்க வைத்த நேரங்கள்.....

    ReplyDelete
  3. மயிரிழையில் தப்புறது இது தானோ? அதெல்லாம் சரி.. போற போக்கில கதவ தொறடா.. காத்து வருதுன்னு இடிச்சிட்டு போறீயளே ஸ்வாமி !

    ReplyDelete
  4. நன்றி மாதவா...

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  5. Very Thrilling Chitra...

    anbudan RVS

    ReplyDelete
  6. மோகன்ஜி இந்த பதிவுக்கு அதுதான் பஞ்ச். ;-) ;-)

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  7. யப்பா... மயிரிலையில் தப்புவது எப்படி .. திகில் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. பார்த்து முடிச்சதுக்கப்புறம் யாரோ வந்து பின்னாடி உடற மாதிரேயே இருக்கு மதுரை சரவணன்.

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  9. திகில் தொகுப்பு உண்மையில் திடுக் திடுக்...திடீர், திடீர் ன்னு வரும் வண்டிகளிலிருந்து எப்படித்தான் தப்பித்தார்களோ....

    பன்ச் ம் நல்லாத்தான் வைக்கிறிங்க.....

    ReplyDelete
  10. பன்ச் பாராட்டுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் ;-) ;-)

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  11. கிளைமாக்ஸ் திகில் பஞ்ச் டயலாக் ரொம்ப நல்லா இருந்தது...

    அதுல குறிப்பிட்டு இருக்கற மாதிரி “சாமியார்” யாராவது இருந்தா, அவங்கள இமயமலை போன்ற இடங்களில் தான் பார்க்க இயலும்....

    ReplyDelete
  12. அது சரி.. கோபி...

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete