Tuesday, September 21, 2010

எஸ்.பி.பியின் ராக மாளிகை

ரெண்டு மூனு நாளா ஒரே பிஸி. நாமதான் கம்பெனியின் பில்லர்.(அப்படின்னு நினைப்பு!) அதனால ப்ளாக் பக்கம் தலை காட்ட முடியலை. ராத்திரி நேரங்களில் சமர்த்தா பாட்டு கேட்டுவிட்டு தூங்க தான் நேரம் சரியாக இருந்தது. டச்ல இல்லைனா எந்த பழக்கமும் மறந்திவிடும். அதனால இந்த ப்ளாக். யானை கூத்துக்கு பின்னாடி இது போலவும் ஒரு பதிவு. இரவு நேரங்களில் எழுபது என்பது வருடத்திய எஸ்.பி.பி கேட்க ஆரம்பித்தால் அவ்வளவுதான். என்னுடைய ஒரு எஸ்.பி.பி இமாலய கலெக்ஷனில் இருந்து எஸ்.பி.பி பாடும் ஒரு ராகமாலிகை. எழுதியது வாலி என்று நினைக்கிறேன். எவ்வளவு ராகம். அதுவும் ஒரு பெண்ணோடு ஒப்புமை படுத்தி என்றால் கேட்கவா வேண்டும். மனதைப் படுத்துகிறது. ஹாட்ஸ் ஆஃப் டு ஹிம். நான் படுத்தியது போதும் பாட்டை கேளுங்கள்...



பாடல் இதோ...

உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
உன் இளநடை மலயமாருதம் ஆகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
நீ ஒரு
ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு
ராகமாலிகை

நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
நீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி
இன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி
குரல்வழி பிறந்தது அம்சத்வனி
உன் குரல்வழி பிறந்தது அம்சத்வனி
உன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி

நீ ஒரு
ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு
ராகமாலிகை

நான் வாவனெ அழைக்கையில்
விரைந்தோடி வந்து தழுவிடும் தேவமனோஹரி
ஆரபிமானமும் தேவையில்லை
இந்த அகிலத்தில் உன்போல் பாவையில்லை

நீ ஒரு
ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு
ராகமாலிகை

நீ எனக்கே தாரம் என்றிருக்க
உனை என் வசம் தாவென நான் கேட்டேன்
நீ எனக்கே தாரம் என்றிருக்க
உனை என் வசம் தாவென நான் கேட்டேன்
என் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே
இந்த நாயகன் தேடிடும் நாயகியே

நீ ஒரு
ராகமாலிகை
உன் நெஞ்சம் என் காதல் மாளிகை
நீ ஒரு
ராகமாலிகை

வேறு ஒரு சங்கதியுடன் நாளை பார்ப்போம்.....

26 comments:

  1. அற்புதமான பாடல். உங்களை போல் நானும் மயங்கினேன்

    ReplyDelete
  2. SPB ன் குரலுக்கு மயங்காதவர் யார்?! அருமையான பாடல்.

    ReplyDelete
  3. அற்புதமான பாட்டு பாஸ். இப்போ இதைப் பதிவிட்டுக் கொண்டிருக்கும் போது எஸ்.பி.பி யின் 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே" கேட்ட படியே... டி.எம்.எஸ் வத்தக் குழம்புன்னா,எஸ் பி.பி மிளகு ரசம். மத்த ஆண் பாடகர்களுக்கெல்லாம் ஐட்டம் தேட வேண்டியது உங்க பொறுப்பு. விருந்தில்லையா அதான்.அப்புறம் ராக மாளிகையை 'ராக மாலிகை' யா மாத்துங்க

    ReplyDelete
  4. நன்றி தமிழ் உதயம், ரிஷபன்..

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  5. மோகன்ஜி டைட்டில் ராக மாளிகை தான்... ராகமாலிகை உள்ளே மாற்றிவிட்டேன். நன்றி..

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  6. சூப்பர் ஆர்.வி.எஸ். நல்ல பாட்டு. எண்பதுகளில் என்று சொல்லி நீர் எழுபதுகளில் பிறந்தவர் என்று சொல்லாமல் சொல்லிவீட்டீர். அப்படி என்றால் உம்மிடம் நிறைய இளையராஜாவின் இசையில் கமலுக்காக அவர் பாடியது நிறைய இருக்கும். சென்னை அடுத்த முறை வரும்போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் இசையில் என்னிடம் இருக்கும் அவரின் சில பல அறிய பாடல்கள் தருகின்றேன். அப்புறம் நீர் சொல்லும் அவரின் நல்ல இசை எப்போது என்று !!

    எந்த ஐ.டி கம்பெனிக்கு இப்படி குப்பை கொட்டுகிறீர் ? நான் இது வேலை செய்ய ஆரம்பித்து இருபத்தைந்தாவது வருடம். அதில் இருபத்து இரண்டாவது ஐ.டி. இண்டஸ்ட்ரியில் !! அனைத்தும் விற்பனை துறையில். இந்த பத்து வருடங்களாக லண்டன் மற்றும் அமெரிக்காவில்.

    குரங்கு போல் வேலைக்கு வேலை தாவும் இந்திய இளைஞர்களை வைத்து தொழில் செய்வது கடினம் சாமி. ரொம்பவே படுத்தறாங்க !

    ReplyDelete
  7. எனக்கும் மிகவும் பிடித்த பாடல். எஸ் பி பி லேசான ஜலதோஷத்துடன் பாடியது போல இருக்கும்! எஸ் பி பியின் இமாலய கலெக்ஷன் இருக்கிறதா? ஓகே அப்புறம் ஓரிரு பாடல்கள் உங்களிடம் இருக்கிறதா என்று செக் செய்து கொண்டு, இருந்தால் வாங்கிக் கொள்கிறேன்...

    ReplyDelete
  8. எஸ்.பி.பி யின் டை ஹார்ட் விசிறி நான். கேட்டுப்பாருங்கள் ஸ்ரீராம் இருந்தால் தருகிறேன்.... ;-)

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  9. உழைத்துக் கொட்ட ஆரம்பித்து சில்வர் ஜுபிலி கொண்டாடும் சாய்க்கு ஒரு வாழ்த்துக்கள்.

    உத்தியோகத்தை பற்றி நேரில் பேசுவோம். குரங்கு போல் இல்லாமல் பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி ஒரே இடத்தில் இருக்கிறேன் என்று கம்பனி விட்டு கம்பனி தாவும் என் அக்காள் அங்கலாய்க்கிறாள்.

    சென்னை விஜயத்தின் போது நேரில் சந்திப்போம்.

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  10. ஆகா அருமையான பாடல்... கேட்கக் கேட்க ஆனந்தம்... நன்றி நண்பரே...

    வெங்கட்.

    ReplyDelete
  11. காதுகுளிர கேட்டதற்கு நன்றி வெங்கட்.

    (சில பேர் என்னை வெங்கட் என்று கூபிடுவதால், உங்களுக்கு பதிலளிக்கும் போது எனக்கு நானே என்று தோன்றும்)

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  12. எஸ்.பி.பி யின் விசிறி நான்.
    அற்புதமான பாடல்.

    ReplyDelete
  13. ரசித்ததற்கு நன்றி சே.குமார்..

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  14. எங்காத்து கொழந்தைக்கு நன்னா ரசிக்க தெரியுமோன்னோ ?!
    பின்னே?

    தலீவா சூப்பராகீது செலக்ஷனு , தூள் பண்ணு கண்ணு !
    --

    ReplyDelete
  15. நன்றி கக்கு..

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  16. நடுவுல சிரிப்பாரே அதுக்கு நான் ரசிகை வெங்கட்.
    நல்ல பதிவு.
    புதுசு புதுசா சிந்திக்கிறதுன்னா இதுதானா? நான் இதைச்சொல்லல.. யானை கட்டி போரடித்தீர்களே அதைச்சொன்னேன். மூன்று பேரும் சேர்ந்து கும்மி அடித்தது நன்றாக இருந்தது..

    ReplyDelete
  17. யானை கட்டி "போர்" அடித்தோமோ இல்லை போரடித்தோமா ஆதிரா... ;-) ;-)

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  18. பாட்டை நெஞ்சார கேட்டு விட்டு வஞ்சனை இல்லாமல் பாராட்டுவது தான் என் வழக்கம் ...( அதனாலேயே `` செவிக்கின்பம்`` இன்னமும் பாக்கி இருக்கிறது.....)

    எஸ்.பி.பி... ``இயற்கை எனும்ம்ம்ம்ம் இளைய கன்னிஇ `` ஆரம்பித்து இன்னமும் வற்றாத ஸ்திரமான குரல்.... வண்ணம் கொண்ட வெண்ணிலவே`` பாட்டையும் நினைவுபடுத்தியது..( ரசனையில் மோகன்ஜி.. நம்மளோட க்ராஸ் ஆயிட்டே இருக்காரே ) அதுல ``தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள யாரும் இல்லை`` வரியும் ஞாபகம் வந்தது....
    .
    அப்புறம் ராகம்சமான, இந்த பாட்டை இவ்வளவு விஸ்தாரமாக கேட்க வைத்ததற்கு நன்றி...உங்கள் ரசனை வாழ்க.....

    ReplyDelete
  19. இதோ இதோ என் பல்லவி.. எப்போது கீதம் ஆகுமோ.. இவன் உந்தன் சரணம் என்றால்.. அப்போது வேதம் ஆகுமோ... எஸ்.பி.பி ஒரு சங்கீத சாகரம். பாட்டுக்களின் இடையே சிரிப்பது ஒரு தனி ராகம்.

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  20. பல்லவி, சரணம்-Daughter and Son names.
    எஸ்.பி.பி ஒரு சங்கீத சாகரம், SPB paadinaal kamal, Rajini thalimurai nadigargal muthal Ajith thalimurai varai avargale paadiyathai pondra oru "Kural- Accent" iruppathai gavanikkalaam, nadippavarin pesum style-(accent) thaguntha maathiri paada vendum ena paadi kaanbithavar.

    ReplyDelete
  21. ஆமாம் சாய் கோகுலக்ருஷ்ணா.. ரஜினி கமல் படங்களில் இந்த வேறுபாடு அப்பட்டமாக தெரியும். ;-)

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  22. எஸ்.பி.பி.யோட குரல் பிடிக்காதோர் உண்டோ...!!

    நன்னா கொசுவத்தி சுத்தி விட்டேள் போங்கோ!!

    ReplyDelete
  23. எஸ் கோபி ;-)

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  24. எச்சூச் மி ஜென்டில்மென்! அ யாம் சாரி. இந்தப் பாடல் ராகமாலிகை இல்லை (நன்றாகப் பாடப்பட்டிருந்தாலும்..) இதில் பல ராகங்களின் பெயர்கள் வந்துள்ளன. ஆனால் பாடல் வரிகளில் வந்துள்ள ராகங்கள் எதுவும் பாடலில் இருப்பதாகத் தெரியவில்லை. இராகப் பெயர்களுடன் கூடிய அந்தந்த ராகங்களின் பெயர்களை அந்தந்த ராகத்திலேயே பாடியுள்ள மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம் பாடல்களை (ஆர வி எஸ்) கேட்டிருக்கின்றீர்களா? உங்கள் மெயில் ஐ டி கொடுங்கள். சில ராகமாலிகைப் பாடல்களை உங்களுக்கு அனுப்புகின்றேன். உங்கள் மெயில் ஐ டி அனுப்பவேண்டிய விலாசம்: kggouthaman@gmail.com

    ReplyDelete
  25. கௌதமன் சார்...நான் கர்நாடக சங்கீதம் கேட்பேன் அவ்வளவுதான்.. ப்ருஹாக்கள் பிடிக்கும்... கொஞ்சம் கொஞ்சம் ராகம் சொல்வேன். கட்டாயம் உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன். நன்றி.

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  26. i like spb voice

    ReplyDelete