அந்த ஆற்றங்கரையோரத்தில் யோஜனகந்தி உட்கார்ந்திருந்தாள். அவளிடம் அழகும் வனப்பும் வாளிப்பும் மதியூகமும் ஒருசேர நிறைந்திருந்தது. அதென்ன பெயர் யோஜனகந்தி. அவள் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு யோஜனை தூரத்திற்கு சுகந்தம் காற்றில் பரவி வாசனை மூக்கை துளைக்குமாம். உலகில் வாசனை மிகுந்த மலர்களுக்கு சவால் விடும் மணமாம். அதனால் அவள் பெயர் யோஜனகந்தி. அவள் மீனைப்போல் கண்ணுள்ள ஒரு மீனவப் பெண். வேல் விழி வீசி அவள் பேசும்போது வாள் வீசும் மன்னவரும் மயங்கிவிடுவர். அவள் மைவிழி வீச்சுக்கு எதிர் வீச்சு கிடையாது. நல்ல குணவதி. அந்தக் காட்டில் இருக்கும் முனிபுங்கவர்கள், ரிஷிகள், ரிஷிபத்னிகள் ஆற்றை கடந்து அக்கரைக்கு பயணிக்க உதவியாக துடுப்பு பிடித்து படகு ஓட்டுபவள்.
ஓர் நாள் அதுபோல அந்த ஆற்றங்கரயோர காட்டில் தனிமையில் அந்த மயில் இருக்கையில் கானகத்திற்கு வேட்டைக்கு வந்த அந்த நாட்டு மகாராஜா அவளைப் பார்த்து அந்தக் கணத்திலேயே மையல் கொண்டான். தனித்து இருக்கும் பெண்ணிடம் காதல் சொல்லக் கூட கூச்சப்பட்டு நின்றான். கண்ணியத்தை கடை பிடித்தான். தன் வயதுக்கு ஏற்றவளாக அவள் இல்லை என்றாலும் மண்ணாளும் அவனுக்கு அந்தப் பெண்ணின் மீது ஆசை விடவில்லை. இருந்தாலும் அது ஒவ்வாக் காதலாக இருக்குமென்று அஞ்சி அவள் தகப்பனிடம் சொல்லவும் மிகவும் தயங்கினான். மௌனமாக காட்டை விட்டு வெளியேறினான். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து நாள் ஆக ஆக துரும்பாக இளைத்தான். அரசாட்சியில் கவனம் செலுத்த முடியாமல் பகல்பொழுதிலேயே அவளைப் பற்றி கனாக் கண்டான். மன்னன் நிலை கொள்ளாமல் தவித்ததால் அமைச்சர்கள் தவித்தார்கள் மக்கள் தவித்தார்கள் நாடு தவித்தது. மன்னன் மனநிலை ஒருவராலும் அறியமுடியவில்லை.
முதல் பட்டத்து ராணிக்கு பிறந்த பையன் மிகவும் சூட்டிகை. தகப்பனாரின் துன்பம் அறிய துடித்தான். என்றிலிருந்து அப்பா துணுக்குற்று இருக்கிறார் என்று ஆராய்ந்தான். என்றைக்கெல்லாம் மன்னவன் வேட்டைக்கு யார் யாரை தேர் ஓட்ட அழைத்துச் சென்றான் என்று ஒரு பட்டியல் கேட்டான். கிடைத்த தேர்ப்பாககன்களின் பெயர்ப்பட்டியலில் அந்தக் குறிப்பிட்ட நாளில் யார் தகப்பனுக்கு சாரதியாக இருந்தார்கள் என்று கண்டுபிடித்தான். தனியே அழைத்து விசாரித்தான். அன்றைக்கு ஓட்டியவன் மன்னனின் துக்கத்திற்கு என்ன காரணம் என்று சொன்னான். கண்கள் விரிய காரணத்தை கேட்டுக்கொண்டான் மகன். அந்த சாரதியையும் அழைத்துக் கொண்டு அப்பெண்ணின் தகப்பனான மீனவத்தலைவனிடம் தன் அப்பாவிற்கு சம்பந்தம் பேசப் புறப்பட்டான்.
போதும் இதோட நிறுத்திப்போம். ஓ.கே. இப்போ கேள்விகள் என்னான்னா,
1. யார் அந்த யோஜனகந்தி?
2. அந்த ராஜா யார்?
3. அப்பாவிற்கு சம்பந்தம் பேசிய அந்த பிள்ளையாண்டான் யார்?
4. என்ன கதை இது?
2. அந்த ராஜா யார்?
3. அப்பாவிற்கு சம்பந்தம் பேசிய அந்த பிள்ளையாண்டான் யார்?
4. என்ன கதை இது?
பின்னூட்டத்துல சொல்லுங்க பார்ப்போம்.
படத்தின் கைவண்ணம்: ராஜா ரவி வர்மா.
படத்தின் கைவண்ணம்: ராஜா ரவி வர்மா.
அழகான பெயரா இருக்கு யோஜனகந்தி.உங்க கேள்விக்குள்ள என்னமோ இருக்கு.திடீர்ன்னு இப்பிடிக் கேள்வி கேட்டா எதுவும் புரியல ஆர்.வி.எஸ்.
ReplyDeleteமகாபாரத கதை. அப்பாவுக்கு சம்பந்தம் பேசிய அந்த பிள்ளை தான் .........................
ReplyDeleteபின்னாளில் பீஷ்மர்!
கதை நல்லாருக்கு...யார் என்னான்னு புரியலையே...நிங்களே சுவையா சொல்லுங்க....
ReplyDelete1.That Yojanakanthi is sathyavathi
ReplyDelete2.Raja is Santhanu
3.Pillayandan Bheeshmar
4.Mahabaratham
sariya RVS
Enna thalaiva, mahabarathama? . santhanu, sathyavathi (matsyagandhi) matrum devavrathan (bheeshma) thanae?
ReplyDeleteRaghu
பின் வரும் பின்னூட்டங்கள்ல இதைப் பத்தி தெரிஞ்சுக்குவீங்க ஹேமா அண்டு பத்து ... கக்கு-மாணிக்கம், ரகு மற்றும் ஸ்வாமி ஆகியோர் சரியான விடையளித்திருக்கிறார்கள். இன்று மாலை வரை வெயிட் பண்ணுவோம். எவ்ளோ பேர் கரீட்டா சொல்றாங்கன்னு..
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
சந்தனு பீஷ்மர் மகாபாரதம்
ReplyDelete1. யார் அந்த யோஜனகந்தி? சத்தியவதி - பீஷ்ம / மஹாபாரத காவியத்துக்கு அடிகோலியவர். மீனவப் பெண். (மீன் கந்தமா யோஜன தூரத்துக்கு? :-)
ReplyDelete2. அந்த ராஜா யார்? ஷந்தனு
3. அப்பாவிற்கு சம்பந்தம் பேசிய அந்த பிள்ளையாண்டான் யார்? தேவவ்ரதன் என்ற பீஷமர்.
4. என்ன கதை இது? சத்தியவதி பாண்டு / திருதராஷ்ட்ரர்களுக்கு பாட்டி.
Ithu mahabarathama?
ReplyDeleteYojanaghandhi = sathyavathy, Raja = Santhanu, Son = Davavrithan (bheeshma)
Raghu
யோஜனகந்தியே மகாராணி சத்தியவதி
ReplyDeleteராஜா சந்தனு
பிள்ளை தேவவிரதன் alias பீஷ்மர்.
கதை மகாபாரதம்.
"யோஜனகந்தி ரோலுக்கு y.விஜயா
ராஜா சந்தனு ரோலுக்கு விஜயகுமார்
பீஷ்மர் ரோலுக்கு ரித்திக்"
சின்ன பட்ஜெட்டாம். பைனான்சியர் பத்மநாபன் இவங்களையே முடிக்க சொல்றார்
காத்திருக்கிறேன். (விடைக்கு)
ReplyDeleteThe king who was enamoured of the girl was Shantanu. Bhishma was his son who spoke to the girl's father and asked her hand in marriage for his father. For the marriage to take place, he himself took a vow not to marry.
ReplyDeleteஆம் ஸ்வாமி... நீங்கள் கூறியது சரிதான். ;-)
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
ரெண்டு முறை கரீட்டா ஆன்சர் சொன்ன ரகுவுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
சைவகொத்துப்பரோட்டா விடைகளை கண்டுக்கோங்க...;-)
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
அட்டகாசம் மோகன்ஜி. கோலிவுட்டும் பாலிவுட்டும் நீங்கள் இல்லாமல் ஏங்குகிறதாம். பைனான்சியர் பத்மநாபன் பட்ஜெட்டு எவ்வளவு? அதெல்லாம் சரி இன்னும் "why" விஜயா?
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
யோஜனகந்தி என்ற அந்தப் பெயரின் வாசனையிலேயே மயங்கிவிட்டேன் நான். சத்யவதி பாட்டியின் கதை. கந்திக்கு என்னவொரு விளக்கம்? நாற அடிச்சுட்டீங்க கெக்கே பிக்குணி ;-) ;-) ;-)
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
வாங்க முத்துலெட்சுமி/muthuletchumi மேடம். சரியாச் சொன்னீங்க.. ;-)
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
மக்களே.. இதே பாணியில்... மஹாபாரத பாத்திரங்களை பற்றி எழுதலாம் அப்படீன்னு ஒரு எண்ணம். வியாசர் அருள்பாலித்தால் நடக்கும்.
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
அருமையான பகிர்வு
ReplyDeleteஇந்தக் கதையை கொஞ்ச நாளுக்கு முன்னர் தான் உப பாண்டவம் நாவலில் படித்தேன்.
ReplyDeleteபெயர்கள் மறந்து விட்டன. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதியதாகவே இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
நல்ல பகிர்வு... யோஜனகந்தி - புதிதான பெயர் மற்றும் விளக்கம்....
ReplyDeleteவெங்கட்.
நன்றி தியாவின் பேனா.
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
நன்றி தியாவின் பேனா.
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
நன்றி இளங்கோ..
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
நன்றி வெங்கட்..
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
நான் வந்து விடை சொல்லும் முன்பே எல்லாரும் சொல்லிடாங்க :)
ReplyDeleteஇருந்தும் என் பங்குக்கு ஒரு தகவல் , சத்யவதிக்கு மச்ச கந்தி என்று பெயர் , துர்வாசருக்கு பணிவிடை செய்து அவரின் வரத்தால் பரிமள கந்தி என்று மாறினார் :)
நன்றி டாக்டர்.
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
அருமையான பகிர்வு. யோஜனகந்தி புதுமையாய் இருக்கிறது. தொடர்ந்து இது போல் எழுதுங்கள்.
ReplyDeleteநன்றி கோவை டு டில்லி. ( சென்னை டு பாண்டிச்சேரி படமும் ... "அப்பா பக்கோடாப்பா" என்று வாய் பிளந்து கேட்கும் காதரும், நாகேஷும் நினைவுக்கு வருகிறார்கள்)
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
பட்ஜெட் பத்மநாபன் மூணு ரூவா பத்து பைசா அலாட் பண்ணியிருக்காரு இந்த பிராஜக்டுக்கு... அதுல பத்து பைசா எனக்கு வந்துறணும் - பைன்டர்ஸ் பீ (இங்க்லிபிசு பீங்க).
ReplyDeleteஅப்பாதுரை சார்.. சத்தமா பேசாதீங்க... இதுக்கு "WHY" விஜயாவை வைத்து ரூட் போட்டாரே ஒரு மனுஷன்... மோகன்ஜி ... அந்தப் பத்து பைசாவையும் பிடிங்கிடுவாறு. சத்தம் போடாம எஸ் ஆயிடுங்க.. மூணு ரூவா யாருக்கு? ஐ. இது நல்லா இருக்கே...
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
நான் பாட்டுக்கு சிவனேன்னு தெலுங்கு பாட்டு சேனல் பாத்துகிட்டே,உங்கப் பதிவைப் படிச்சேனா? பதில் பதிவு பன்றச்சே ஒய்.விஜயா பாடுன பாட்டு போட்டாங்களா? டக்குன்னு அவங்க பேரைப் போட்டுட்டேன்.. why whyன்னு வூடு கட்டுரீங்களே! அவங்க நடிச்ச காலத்துல நான் பொறக்கவே இல்லை தெரியுமா?
ReplyDeleteஹய்யோ! ஹய்யோ !! அப்பாதுரை சாருக்கே பைசால்லாம் குடுங்க. எங்கய்யா இந்த பைனான்சியரை காணோம்! எல்லாம் அந்த ஆள் சொன்ன பட்ஜெட்டால வந்தது. விட்டா எனக்கே சவுரி வச்சி, உடம்புல காட் லீவர் ஆயிலைத் தடவி, நீ தாண்டா மச்சி..மச்சகந்தின்னு துடுப்பு போட விட்டிருவாறு போல இருக்கே!
மோகன்ஜி நல்ல வேளை டி.வில கே.ஆர்.விஜயா படம் ஓடலை. அப்புறம் அந்த அம்மா அம்மன் வேஷத்துல துடுப்புக்கு பதிலா சூலத்தை எடுத்துக்கிட்டு வந்த்ருவாங்க. ராஜாலேர்ந்து கூஜாவரைக்கும் ஓட ஓட விரட்டி கண்ணை உருட்டி முழுச்சி பார்த்து... "டேய் நா ஆத்தா வந்துருக்கேன்.. கோயில் உண்டியலை உடச்சு பணத்தை எடுத்து படமா எடுக்குறீங்க" அப்படின்னு யார் ப்ரோடியுசரோ அவங்களை சிம்மவாஹினியா வந்து விரட்ட போவுது.
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
ரொம்ப சிம்பிளா கேட்டதுனாலத்தான் நான் பதில் சொல்லலை... நம்ம லெவலுக்கு கேளுங்க அண்ணாச்சி..
ReplyDeleteசரிங்க தம்பி ;-) ;-)
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
சுல்லாணிகளும்...இணயப்படுத்தலும்...வந்து வந்து போக வைத்தது ...நின்று பின்னுட்டமிடமுடியவில்லை....கதையை விலாவாரி பண்ணுவிங்கன்னு பார்த்தேன் ...
ReplyDeleteமோகன்ஜி சொன்ன மாதிரி படம் எடுத்தா, இப்படித்தான் தலைப்பு வைக்கணும்....
அப்பனுக்கு பொன்னு பார்த்த குப்பன்..
அப்பாதுரைஜி சன் நெட் வோர்க்கோட பேசிட்டு இருக்கோம்...கணிசமா ஒதிக்கிறலாம்...
24 September 2010 11:53 PM
நிறைய பேர் இப்போ இந்த படத்தை தன் பிளாக்கர் ப்ரோபிளில் யூஸ் செய்யறதை பார்த்திருக்கின்றேன்.
ReplyDeleteகணவனுடன் போதுமட போதுமட சாமி - ஆளை விடு ஆளை விடு சாமி என்று தனிமையில் இனிமை காண விரும்பும் நினைப்பை படம் தருகின்றது !
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ் சாய்..... ;-) ;-) என்னாச்சு உங்க ப்ளாக்குக்கு????
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
ரவி வர்மா படம் சூப்பர். சந்தனுவின் முறையற்ற செயல் தானே பீஷ்மனை விரத வீரனாக ஆக்கியது?
ReplyDeleteமாதா பிதா குற்றம் மக்கள் தலையிலே போல இதனால் தானே பீஷ்மனும் விழுந்தான்...
ஆமாம் ஆர்.ஆர்.ஆர். சார். ரவிவர்மா ஒரு தெய்வக்கலைஞன்.
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
dr suneel krishnan சொல்றாரு பாருங்க: //சத்யவதிக்கு மச்ச கந்தி என்று பெயர் , துர்வாசருக்கு பணிவிடை செய்து அவரின் வரத்தால் பரிமள கந்தி என்று மாறினார் :)// மச்சகந்திங்கற பெயருக்கும் நான் சொன்னதுக்கும் என்ன வேறுபாடு? :-)) நீங்க ஒரு யோஜன தூரம் "நறுமணம்"ங்கறீங்க - அதான் வேறுபாடு!!
ReplyDeleteகெ.பி.... ஒத்துக்கறேன். நீங்க கரீட்டாதான் சொன்னீங்கன்னு. துர்நாற்றம் நாற்றமான கதை. சரியா? போதுமா? ;-) ;-)
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
//விட்டா எனக்கே சவுரி வச்சி, உடம்புல காட் லீவர் ஆயிலைத் தடவி, நீ தாண்டா மச்சி..மச்சகந்தின்னு துடுப்பு போட விட்டிருவாறு போல இருக்கே!
ReplyDeleteநினைத்த்த்துப் பார்க்கிறேன்..