Thursday, October 7, 2010

எந்திரன் - உயர்திணையின் அரசன்

roboமுதல் பாட்டுக்கு கேசத்தை சிலுப்பி விட்டுக் கொண்டு நண்பர்களுடன் ஓடி வந்து தலையால் பூசணிக்காய் உடைத்து "நான் ஆட்டோகாரன்" என்று ஆட்டம் போடுவது, "அது அண்டா இது அண்டா..... அருணாசலம் நான்தான்டா.." என்று முன்னும்பின்னும் கை விசிறி பாடுவது, குதிரைச் சவாரியில் சாட்டை சுழற்றி "கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்" போன்ற கருத்துக்கள் சொல்வது போலல்லாமல் ஷங்கருக்கு அடங்கிய எந்திரனாக ரஜினி நடித்த படம் இது. ஒலக சினிமா பார்த்தவர்களுக்கு இது ஒரு மீடியாகர் படமாக இருக்கலாம் ஆனால் தமிழ் சினிமாவில் அரசியல், கள்ள உறவு, அண்ணன்-தங்கை, அம்மா-மகன், அப்பா-பிள்ளை, தாலி, பச்சப் பிள்ளை, வயசுக்கு வந்தால் குச்சி கட்டுவது  போன்ற செண்டிமெண்ட் பார்த்தவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான படம் என்பதில் சந்தேகமேயில்லை. விஞ்ஞானி பஞ்ச் டையலாக் சொன்னால் நமக்கு பின்ச். ஆகையால் காமராவிற்கு நேராக ஆட்காட்டி விரலால் தட்டி டாட் என்று மூன்று பைட் அளவிற்கு மட்டும் அவ்வப்போது சொல்கிறார் ரஜினி. ஒரு ரோபோ கட்டளையின் முடிக்கும் எழுத்து டாட்(.).

ரிஷி தாடி, சயின்டிஸ்ட் மீசை, கூந்தல் கலைந்த கேசம், மொபைல் ஃபோனில் லவ்வர் சானாவின் 102  மிஸ்டு கால்கள் என்று மெய்வருத்தி, தவமாய்த் தவமிருந்து ஒரு ரோபோ பிள்ளையை தயாரிக்கிறார் வசீகரன் என்ற கவர்ச்சிகரமான பெயர் மற்றும் தோற்றத்தில் வரும் விஞ்ஞானி ரஜினி. ஒரு இயந்திரத்திற்கு என்னவெல்லாம் ஊட்டினால் அது ரோபோ ஆகும் என்பதை Module by Module ஆக காண்பித்திருக்கிறார்கள். அதுவும் இது ஒரு விசேஷ humanoid ரோபோ. மனித உருக்கொண்ட ரோபோ. முதல் பாதியில் இயந்திரத்தனமான ரோபோவையும் ரெண்டாம் பாதியில் உணர்ச்சிப்பூர்வமான ரோபோவையும் பிரித்து காட்டியிருக்கிறார்கள். ரோபோவிற்கு உணர்வில்லை என்று இடைவேளைக்கு முன்பும், ஐஸை காதலிக்கும் காதல் உணர்வுள்ள இரும்பு இதய ரோபோவை இ.வேளைக்கு பின்பும் காண்பித்திருக்கிறார்கள்.

with aisசந்தானமும் கருணாஸும் செய்யும் வேடிக்கைகள் துர்சேஷ்டைகள் கொஞ்சம் கூட சிரிப்பை வரவழைக்கவில்லை. சிட்டி ரஜினியின் வியத்தகு திறமைகளால் பெண்கள் புடைசூழ நிற்பதை காணப் பொறுக்காமல் சவும் கவும் "எங்ககிட்ட இருக்கற ஒன்னு உன்கிட்ட இல்லையே.." என்றவுடன் நேரே வசியிடம் போய்  அந்தக் கேள்வியை கேட்டு என்ன அது என்று கேட்கும் இடம் பாராட்டலாம். அதற்க்கு "ஃபீலிங்க்ஸ்" என்ற ச.கவின் கூட்டணி பதில் அருமை. இந்தப் படத்தில் ஹீரோ, வில்லன், காமடியன் என்று மூன்று முகங்களில் நம்ம எந்திரகாந்த் ஸாரி ரஜினிகாந்த். தான் வடிவமைத்த ரோபோவைக் தன் வீட்டிற்கு வசி கொண்டுபோனதில் இருந்து ஆரம்பிக்கிறது லூட்டி. "நீ யார்" என்று கேட்டால் " 1 டெர்ரா ஹேர்ட்ஜ் ஸ்பீட் 1 ஜெட்டா பைட் மெமரி" என்ற சிட்டி ரோபோவின் சுய அறிமுகம் ரசிக்க வைக்கிறது. ஜெட்டா பைட் என்றால் எவ்வளவு என்று இங்கே இருக்கிறது.

"சிட்டி அந்த டி.வியை போடு" என்றால் தூக்கி கீழே போட்டுவிட்டு நிற்கும். கட்டளையும் பேச்சும் மிகத் தெளிவாக இருந்தால்தான் இயந்திரம் வேலை செய்யும் என்பதை விளக்கும் சீன் இது. விஞ்ஞானியிடம் விவாகரத்து போல காதல் ரத்து கேட்கிறார் ஐஸ். ஆரம்பத்தில் கிழடு தட்டிப்போன மாதிரி இருந்த ஐஸ் காதல் அணுக்களில் ஆர்.ஜி.பியின் இரண்டு மில்லியன் கலர்களாக ஜொலிக்கிறார். ஆப்பிளை கீழே எறிந்து "இது நியூட்டன் நியூட்டனின் விதியா?" என்று அந்தப் பாடலில் ஐஸைப் பார்த்து பாடுகிறார் ரஜினி.  எந்திரன் பாடல்கள் பற்றிய தனி பதிவு இங்கே. "இது யாரு உன்னோட பாய் ஃப்ரெண்டா?" என்று கேட்கும் அம்மாவிடம் "இல்ல இது டாய் ஃப்ரெண்டு" என்று சிரிக்கும் ஐஸ் நம் நெஞ்சை ஜில்லாக்குகிறார். போக்குவரத்து போலீஸ் பாத்திரத்தில் வரும் வி.எம்.ஸி ஹனீபாவுடன் சிட்டி அடிக்கும் கொட்டம் தாங்க முடியவில்லை. நோ பார்க்கிங்கில் நிறுத்தியதால் கொஞ்சம் வெட்டினால் உன்னை விடுவேன் என்று "கை" நீட்டும் ஹனீபாவை பக்கத்தில் காய்கறி விற்பவனின் கத்தியை எடுத்து கையில் வெட்டுவது லஞ்சம் கேட்பவனை தண்டித்த சீனாக வைத்துவிட்டார் ஷங்கர். சபாஷ். ஐசிடம் வம்பிழுக்கும் ஆலையம்மன் கோயிலில் கூழ் ஊத்தும் ரவுடிகளை மக்னெடிக் மோட் கொண்டு எல்லா "சாமான்களையும்" ஈர்த்து தன்னோடு ஒட்டிக்கொள்ளும் சிட்டி ரோபோ பின்னால் சூலம், வேல், முன்னால் அருவாள் என்று எல்லாமுமாக நிற்பதை பார்த்து விட்டு குலவை இட்டு எல்லோரும் "ஆத்தா...தா....தா..." என்று காலில் விழுவது கூட ஒரு சூப்பர் சீன். ஐஸை கடித்த "ரங்குஸ்கி" கொசுவைத் தேடி செல்லும் ரஜினியிடம் பேசும் கொசு ஒன்று விதிக்கும் நிபந்தனைகளும் "நான் சீஃப் மினிஸ்டரையே கடிச்சவன்" என்று சொல்வதும் சுவாரஸ்யத்தின் உச்சம். வெஸ்ட் மாம்பலம், மைலாப்பூர், அண்ணா நகர் என்று ஏரியா பிரித்துக் கொண்டு கடிக்கும் கொசு பற்றிய கற்பனை நல்ல தமாஷ்.

ஐஸ் ஸுக்கு பரிட்ச்சைக்கு உதவும் போது என்ன பிட்டா என்று கேட்கும் போது பைட் சொல்லும்போதும்,  இன்ஃப்ரா ரெட் ரிமோட் சொல்லும் போதும், நேச்சுரல் லாங்குவேஜ் ப்ரோசசிங் போதும், ஹோமோசேபியன்கள் போல ரோபோசேபியன்கள் என்று சொல்லும்போதும், நக்கலா என்றால் நிக்கல் என்று சொல்லும் போதும், ரோபோவின் அமைப்பை விளக்கும் போதும், வர்ச்சுவல் பிங் போதும்,  சிட்டி வழியாக விஞ்ஞானம் வழியிது நம் காதுகளிலும் சீன்களிலும். பிரசவம் பார்க்கும் ரோபோ, மருதாணி போடும் ரோபோ, சமைக்கும் ரோபோ, கராத்தே கற்றுக் கொடுக்கும் ரோபோ, தீ விபத்தில் மாட்டிக் கொண்டவர்களை காப்பாற்றும் ரோபோ என்று ரோபோ ரோபோ ரோபோ ரஜினி ரஜினி ரஜினி படமெங்கும். படம் முழுக்க அலுக்காமல் திகட்டாமல் ரஜினி தரிசனம். அப்பப்போ ஜில்லென்று ஐஸுடன்.

endhiran villanவில்லனாகிய ரோபோ ரஜினி நிச்சயம் பாராட்டப் படவேண்டிய கதாப்பாத்திரம். சயின்டிஸ்ட் ரஜினி வந்துபோனதர்க்கான அடையாளமாக தரையில் ரத்தம் சிந்திக் கிடப்பதை பார்த்து விட்டு ஒரு ரோபோ அணிவகுப்பிற்கு அனைவரும் அழைக்கிறது தலைமை ரோபோ சிட்டி. இது இடைவேளைக்கப்புறம் அழிவு சக்தியாக ரஜினியின் ப்ரோஃபசரால் அப்கிரேட் செய்யப்பட வில்லன் ரோபோ. ஒவ்வொரு வரிசையாக கத்தியால் ரோபோக்களின் தொடையில் தட்டிப் பார்த்து "ரோபோ...." என்று சொல்லும் ரஜினியும், "ஹு இஸ் தி ப்ளாக் ஷீப்" என்று கேட்டுவிட்டு "ம்மே.ம்மே...." என்று குனிந்து ஆடு மாதிரி கத்தும் ரஜினியும் நடிப்பில் நம்மை மெய்மறக்க வைக்கிறார். அந்த சீனுக்கு எவ்வளவு முறை "ரிப்பீட்டேய் ...யேய்.." கேட்டாலும் தகும். நிஜ ரஜினியை கண்டிபிடிக்க தலையை 360 டிகிரியில் எல்லோரையும் சுற்றசொல்ல, மனித ரஜினி ரோபோ ரஜினிகளில் இருந்து தனித்து இருந்ததால் கண்டுபிடிக்கப்படும் காட்சி நல்ல லாஜிக்.

பொய் சொல்றது மனுஷங்களோட குணம், ரோபோ பொய் சொல்லுமா அப்படின்னு கேட்கும் போது வசனம் சூப்பர். பாடல்களில் பிரித்து மேய்ந்த இசை பின்னணியில் அவ்வளவாக இல்லை. ஸ்கோப் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ரஹ்மான் மேல் குற்றம் ஏதும் இல்லை. கடைசியில் ஸெல்ஃப் டிஸ்டரக்ஷன் என்று செய்து கொண்டு தற்கொலை செய்துகொள்கிறது ரோபோ ரஜினி சிட்டி. சாகும்(?!) போது "உங்ககிட்ட இல்லாதது எங்கிட்ட இருந்தா என்ன ஆவுது பார்த்தீங்களா" என்று  டச்சிங்கான வசனம் வேறு. எல்லா ஷங்கர் படம் போல இதிலும் கிராஃபிக்ஸ் ஒரு முக்கிய கதாப்பாத்திரம். நிறைய உழைப்பு தெரிகிறது. படம் முழுக்க அவுட்டோரை விட இன்டோர் உழைப்பு தான் ஜாஸ்தி. 

இவ்வளவும் எழுதியது கொஞ்சம் தான். திரையில் பார்த்தால்  பாதி நேரம் வாத்தியார் சுஜாதா அரூபமாக வந்துவந்து போனார். நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் குடும்பத்தோடு பார்க்கவேண்டிய முழு நீள பொழுதுபோக்கு படம். வேறென்ன சொல்ல, படங்களே பொழுதுபோக்கிற்கு தானே.

எந்திரன் -  ஷட்டவுன் செய்ய முடியாதவன்.
-

37 comments:

  1. நல்ல விமர்சனம்!
    //படங்களே பொழுதுபோக்கிற்கு தானே//
    இதை பல பேர் புரிந்துகொள்ள மாட்டேங்கிறாங்க!

    ReplyDelete
  2. நன்றாக எழுதியுள்ளீர்கள்..
    முக்கியமாக 'ரோபோ-செப்பியன்' -- ஹை லைட்டு செய்தது சூப்பர். படம் பார்த்தவர்கள், உங்கள் விமர்சனத்தை கண்டிப்பாக ரசிப்பார்கள்.. பார்க்காதவர்களின்ஆவலை தூண்டுவதுபோல இருக்கிறது இந்த விமர்சனம்.

    நான் முதல் ரகம்.

    ReplyDelete
  3. கருத்துக்கு நன்றி எஸ்.கே

    ReplyDelete
  4. நன்றி மாதவா!

    ReplyDelete
  5. ரொம்ப அனுபவித்து விமரிசனம் பண்ணியிருக்கிறீர்கள். ரஜினி படம் பார்க்கும் போது ஏற்படும் உற்சாகம் இதிலும் இருந்தது. அப்புறம் ஒரு உபரியான செய்தி..

    ஐசைக் கடித்த கொசுவின் பெயர் "ரங்குஸ்கி" அது திரு சுஜாதா அவர்களின் பள்ளிப் பருவ பட்டப் பெயராம்.

    ReplyDelete
  6. மோகன்ஜி. என்னுடைய கீழ் கண்ட பதிவில் "ரங்குஸ்கி" பற்றியும் எழுதியிருக்கிறேன்.
    http://mannairvs.blogspot.com/2010/09/blog-post_13.html

    ReplyDelete
  7. இந்தப் படத்தின் கரு ஒரு சூபர் ஸ்டார் ஸ்டேடஸ் கலைஞனுக்கு ரொம்ப ரிஸ்கி. அதைத் தெரிஞ்சு இதுல இறங்கின ரஜினியை கண்டிப்பா பாராட்டணும். ஒண்ணு தெளிவாயிட்டு வருது. வில்லத்தனம் காட்டாம ரஜினி படம் ஹிட்டாகாது போல இனி. சமீப படங்கள் எல்லாத்திலயும் ஒரு முரட்டுக் கேரக்டர் தான் வெற்றிப் பாதைக்கு வழி காட்டியிருக்கு.

    ரொம்ப ரசிச்சு விமர்சனம் எழுதியிருக்கீங்க. 'எஞ்சாய்' என்று சொல்வேன். (இந்தப் படம் பார்த்ததும் என் ஜாய் எல்லாம் காணாமப் போயிடுச்சுங்க. கேட்டா ஆராய்ச்சி பண்ணாதே, அனுபவினு சொல்ல வந்துடறாங்க இப்பல்லாம். ஆகையினாலே, மி ஷட்டிங் தி ட்ராப்பு.)

    ReplyDelete
  8. ரசித்து பார்த்து இருக்கிறீர்கள்!

    ReplyDelete
  9. ரஜனியின் படமென்றாலே....அதுவும் இப்போ வருகிற ரஜனி படங்கள் எல்லாமே பொழுது போக்குப் படங்கள்தானே !

    ReplyDelete
  10. ஒத்துக்கறேன் அப்பாதுரை சார். இதுக்கு சூப்பர் ஸ்டார் இல்லாமல் வேறு யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். கதை அந்த மாதிரி. ஆனால் அந்த வில்லத்தனம் செய்யும் ரோபோ பாத்திரம் மத்த ஆளுங்களுக்கு கொஞ்சம் கஷ்டம். சொதப்பிடுவாங்க. விக்ரமை ட்ரை பண்ணியிருக்கலாம். ஆனா ரஜினி அப்படிங்கற மாஸ் புல்லிங் ஃபாக்டார் பண்ற அதிசயங்கள் தமிழ்நாட்டில் ரொம்பவே ஜாஸ்தி.

    ReplyDelete
  11. ஆமாம் சை.கொ.ப . ரசித்துப் பார்த்தேன்.

    ReplyDelete
  12. பொழுது போக்குவதற்கு தானே படத்திற்கு போகிறோம் ஹேமா! ;-) ;-)

    ReplyDelete
  13. //"சிட்டி அந்த டி.வியை போடு" என்றால் தூக்கி கீழே போட்டுவிட்டு நிற்கும்.//
    // "கை" நீட்டும் ஹனீபாவை பக்கத்தில் காய்கறி விற்பவனின் கத்தியை எடுத்து கையில் வெட்டுவது//

    in your next review, try not to reveal the interesting scenes like above!

    ReplyDelete
  14. அருமையோ, அருமை.

    sganeshmurugan.blogspot.com

    ReplyDelete
  15. //இதுக்கு சூப்பர் ஸ்டார் இல்லாமல் வேறு யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். கதை அந்த மாதிரி. ஆனால் அந்த வில்லத்தனம் செய்யும் ரோபோ பாத்திரம் மத்த ஆளுங்களுக்கு கொஞ்சம் கஷ்டம். சொதப்பிடுவாங்க. விக்ரமை ட்ரை பண்ணியிருக்கலாம். ஆனா ரஜினி அப்படிங்கற மாஸ் புல்லிங் ஃபாக்டார் பண்ற அதிசயங்கள் தமிழ்நாட்டில் ரொம்பவே ஜாஸ்தி. //

    உண்மை. வேறு யாரும் வில்லத்தனம் கூடிய அந்த பிரம்மாண்ட சிரிப்புடன் செய்வது கடினம். விக்ரம் / கமல் எல்லாம் ஒரு வகை. அந்நியன் படம் கூட ரஜினி அவரின் ட்ரேட்மார்க் கொண்டு பின்னி இருப்பார் என்று எனக்கு தோன்றுகின்றது.

    ரஜினி அவருடைய சிரிப்பு, வசனம் டெலிவரி என்று இந்தப்படத்தில் நிஜமாகவே பாராட்டப்பட வேண்டியவர். எல்லாவற்றையும் பிரித்து மேய்ந்த நீங்கள் சொல்லாத இன்னொரு இடம் - சிட்டி / வசீகரன் முதன்முதலில் ஐஸ்வர்யாவுக்காக சண்டை போடும்போது கோபாவேசத்துடன் வசீகரன் பேசும் இடங்கள். சிம்ப்லி சுபெர்ப்.

    ரஜினி வில்லனாகவே அடிக்கடி படம் செய்யவேண்டும் எனக்கு தோன்றும். நான் எந்திரன் இரண்டு முறை பார்த்தாகிவிட்டது. சந்திரமுகி "லக லக விட" இந்த படத்தில் சிட்டி ரோபோவின் வில்லத்தனத்துக்கு அவரின் வில்லத்தனம் சுபெர்ப்.

    என் இரு பிள்ளைகளும் எப்போதுமே ரஜினி ரசிகர்கள் - இந்த படம் பார்த்தபிறகு அவரை பற்றிய கருத்து இன்னும் மேலோங்கி உள்ளது. அவரின் வில்லன் பட லிஸ்ட் தயார் செய்து பார்க்கவைக்கவேண்டும். ஆடு புலி ஆட்டம், மூன்று முடிச்சு படம் போல்.

    ReplyDelete
  16. அன்புள்ள முதல் அனானி,
    இது போல் இன்னும் நிறைய சீன் இருக்கிறது. மக்களை கொட்டாய்க்கு இழுப்பதற்காக அப்படி செஞ்சேங்கன்னா.....

    ReplyDelete
  17. அன்புள்ள இரண்டாம் அனானி,
    ரசித்ததற்கு நன்றி. ;-)

    ReplyDelete
  18. சாய்,
    சந்தானம் கருணாஸை இருவரையும் துரத்தி செருப்பால் அடிப்பது,
    நகரத்தின் ஒட்டு மொத்த மின்சாரத்தை அனைத்தாலும், கார் பேட்டரியில் சார்ஜ் செய்வது,
    NLP பற்றி ப்ரொபசர் கேட்கும் பொது வசியை கேட்டுதான் சொல்லவேண்டும் என்று சிட்டி சொல்லும் சீன்,
    பார்பர் ஷாப்பில் புத்தகத்தையும், டெலிபோன் டிரெக்டரி போன்றவற்றை படித்து விட்டு அட்ரஸ் சொல்வது,
    உங்க வயசு என்ன என்று கேட்டால் "ஒரு நாள்" என்று சொல்வது...

    இன்னும் பல சீன்கள் கைவசம் வைத்திருந்தேன். படத்தில் பார்க்கட்டும் மக்கள்..

    ReplyDelete
  19. மந்திரக்கூட்டணியில் எந்திரன் ..... மடமட வென்று எழுதி தள்ளிவீட்டீர்கள்..என்ன ஆர்.வி.எஸ் நிங்க பேச பேச தட்டுறதற்கு எதாவது எந்திரன் செட்அப் செய்து வைத்துள்ளீர்களோ.... ஆவலை பெருக்கியுள்ளது இந்த பதிவு......தீபாவளி கணக்குல தான் இதை பார்க்கமுடியும்....

    ReplyDelete
  20. பிரிச்சி மேயறது என்பது இதுதானா ஆர் வி எஸ்...

    ReplyDelete
  21. தீபாவளிக்கு சொந்த மண்ணுக்கு வரதா இருந்தா ஒரு எட்டு நம்மளையும் பார்த்துட்டு போங்க பத்துஜி ;-);-)

    ReplyDelete
  22. மேஞ்சதை ரசித்ததற்கு நன்றி ஸ்ரீராம் ;-)

    ReplyDelete
  23. mikka nandri, RVS,
    Itha itha ithathan ethir parthen... Enna irunthaalum unga vimarsanam thanithaan...
    Mani..

    ReplyDelete
  24. SANA missed call 112, not 102.. Please verify sir,

    Mani,,

    ReplyDelete
  25. காதல் அணுக்கள்... ச்சே..ச்சே.. மிஸ்டு கால்கள் மொத்தம் எத்தனை... அப்படின்னு சரியா பார்க்கலை மணிசேகரன். ரசித்ததற்கு நன்றி ;-)

    ReplyDelete
  26. சார் இவ்வளவு விஷயங்களையும் பிரித்து சொன்ன உங்கள் பதிவு சுவாரஸ்யமாக உள்ளது. ஆனால் என்னை போன்றவர்களால் பார்க்க முடியவில்லையே என்று ஏக்கமாக உள்ளது.

    ReplyDelete
  27. அருமையாக அலசியிருக்கிறீர்கள் நண்பா

    ReplyDelete
  28. வாங்க மனசாட்சியே நண்பன். முதல் வருகைக்கு நன்றி! அடிக்கடி வாங்க. உங்கள் ஏக்கம் விரைவில் தீர வேண்டுகிறேன். ;-)

    ReplyDelete
  29. வாங்க கவிதைக் காவலன். பாராட்டுக்கு நன்றி. மீண்டும் வருக. ;-)

    ReplyDelete
  30. நல்ல விமர்சனம்..

    ReplyDelete
  31. வாங்க பதிவுலகில் பாபு. முதல் தடவையா வரீங்க. நன்றி. பாராட்டுக்கு இன்னொரு நன்றி. ;-)

    ReplyDelete
  32. எனக்கு படம் ரொம்ப பிடிச்சுது , அதுவும் முதல் பாதி ரொம்ப ரொம்ப ..வில்லன் ரஜினி கலக்கி இருக்காரு. சுஜாதா அவர்களுக்கு ஒரு சின்ன அஞ்சலி செலுத்தி இருக்கலாம் ஷங்கரும் மாறனும்

    ReplyDelete
  33. எனக்குக்கூட அதுமாதிரி பட்டது டாக்டர். இப்பெல்லாம் இருக்கற ஆளையே கவனிக்க மாட்டேன்றாங்க. போனவரை கண்டுப்பாங்களா.

    ReplyDelete
  34. எனக்கு போதிய நேரமின்மையால் தங்களுடைய சில பதிவுகளைப் பர்ர்க்க இயலவில்லை. விரைவில் அனைத்தைய்ம் படித்து பதிவிட விரும்பி..இப்போது இப்பதிவை மட்டும் பார்த்து...விடைபெறுகிறேன்..

    ReplyDelete
  35. நேரம் கிடைக்கும் பொது ஆற அமர படியுங்கள் ஆதிரா.. ;-)

    ReplyDelete