Wednesday, October 20, 2010

மன்னார்குடி டேஸ் - பாட்டி! ஐ லவ் யூ

hari2சென்ற பதிவில் பார்த்த அந்த 'ஹிட் அண்ட் ரன்' நிகழ்ச்சிக்கு பிறகு, ஒரு பதினைந்து இருபது நாளைக்கு பேட்டையும் பந்தையும்  கண்டாலே அடிபட்ட மாமியும் அடிக்க வந்த மாமாவும் நினைவுக்கு வர நாலு கால் பாய்ச்சலில் எல்லோரும் அலறி அடித்து  ஓடினார்கள். அந்த மாமி வீட்டிற்கு பத்து மீட்டர்  சுற்றளவிற்கு 'எலெக்ட்ரிக் ஃபென்ஸ்' போட்டது போல, அவர்கள் வீட்டை கடக்கும் போதெல்லாம் கால் கடுக்க சுற்றி சுற்றி  பயணித்தார்கள். மற்றொருநாள், பெ.கி.மாமாவும் மாமியும் வாசலில் நின்று ஆசையாக அளவலாவிக்கொண்டு நிற்க குளத்தின்  மதில் சுவருக்கு பக்கத்தில் இருக்கும் சுற்றுப்பாதையில் மங்கம்மா படித்துறை வழியாக இறங்கி தலையை குனிந்து கடன் வாங்கி சேட்டுக்கு காசு கொடுக்காமல் தப்பிப்பது போல பெ.கி.மாமாவிற்கு தெரியாமல் நடந்து, அவர்கள் வீட்டை கடந்ததும் பத்து வீட்டுக்கு எதிர்புறம் உள்ள படித்துறையில் கரையேறி கடை கன்னிக்கு போய் வந்தார்கள். அப்படியே நேரே போனாலும் கழுத்து சுளுக்கியது போல அவர்களுக்கு எதிர்திசை பார்த்துக்கொண்டே "வ்ருட்.." என்று சைக்கிளில் பறந்தார்கள். 

என்னதான் உயிரற்ற அஃறினை பொருளாக இருந்தாலும் எங்கள் லூட்டியின் பெரும் பங்கு அந்த நாயக்கர் ராசா வெட்டிய நீர்நிலைக்கும் உண்டு. என்பதுக்கு மேல் வயதான என் பாட்டி நாலு கரையையும் ப்ரதக்ஷிணம் என்று புண்ணிய யாத்திரையாக சொல்லிக்கொண்டு வாக்கிங் வருவாள். 'வாக்'கும்போதே பார்த்த பேருடன் 'டாக்'குவாள். தென்கரை ஸ்வாமி மண்டபம் வரை ரெண்டாம் கியரில் போவாள், அதற்க்கப்புறம் மூன்று நான்கு என்று வேகத்தை கூட்டுவாள். மேல்கரை நளபாகம் பிச்சுமணி ஐயர் சமையல்காரர் வீட்டிலிருந்து கிட்டுப் பிள்ளையின் குளத்தோர "மீன் பிடி குழுமத்தை" டாப் கியரில் கடந்து பச்சைக்கல் ஐயங்கார் வீட்டருகில் கொஞ்சம் மெதுவாக வருவாள். வடகரையில் மணி டீக்கடை தாண்டி பாட்டியின் அபிமானிகள் ஜாஸ்த்தி. கொஞ்சம் பேச்சுக் கொடுத்து அப்புறமாகத்தான் அனுப்புவார்கள். இந்தச் சுற்றில் யார் வீட்டு பெண் திரண்டது, மெட்ராஸ்லேர்ந்து பாமாவாத்துக்கு யார் வந்தா, கோபால கிருஷ்ணன் மாட்டுப்பொண்னுக்கு எப்போ பிரசவம் என்று பல அரிய தகவல்கள் அவளுக்கு கிடைக்கும். Information is Wealth!! இங்கே வித் ஹெல்த்.

hari3அந்தக் குளத்தின் மதில் சுவற்றில் அழகாக விளக்கு மாடங்கள் இருக்கும். கார்த்திகை தீபத்தின் போது எல்லாக்கரையிலும் என்போன்ற ஊருக்கு உழைக்கும்(?!) சமூக சேவகரை அடையாளம் கண்டு விளக்கு ஏற்றுவதற்கு பொறுப்பு கட்டுவார்கள். வாலிப வயதில் மிகவும் பொழுதுபோக்கான "வாலிப விளையாட்டு" இது. எவ்வளவு மின் விளக்குகள் இருந்தாலும் ஒரு யுவதியின் முகத்தை மூச்சுக்காற்று படும் கிட்டத்தில் அகல் விளக்கில் பார்ப்பது இதயத்தின் நிமிஷத்துக்கு என்பது என்பதை நூற்று என்பது என்று அதிகரிக்கும் அல்லவா? "எண்ணெய்" எடுத்துக் கொடுக்கும் சாக்கில் "என்னை பார். என் கண்ணைப் பார்" என்று கொஞ்சம் ட்ரை பண்ணலாம். மங்கிய வெளிச்சத்தில் நாம் கூட மன்மதன் போல் தெரியலாம். அதிர்ஷ்டசாலிகளுக்கு குளக்கரையில் மீன் சிக்கும். வீதியில் விளக்கேற்றியவள் நாளைக்கு வீட்டில் விளக்கேற்ற வரலாம்.

வானிலே முழுநிலா 
பக்கத்தில் ஒரு தேனிலா 
அதன் நெருக்கத்திலா 
யாருமில்லா ஏகாந்தத்திலா
அந்த அகல் வெளிச்சத்திலா
இந்த குளக்கரையிலா
என் மனதின் இன்ப உலா 
யேய். போதும். நிறுத்து நிறுத்து நிப்பாட்டு....
"என்ன லா". என்ன கவுஜையா? நிப்பாட்டு.  போன பாரா எண்டுலேர்ந்து ஒரு மாதிரியா எழுதரியேன்னு பார்த்தேன்.அதையும் நாரடிக்காத. உட்டுட்டு..அடுத்த பாரா போ.

இந்த மினி எமெர்ஜென்சி காலத்தில் பல 'உள் அரங்கு' விளையாட்டுகளை விளையாட முடிவு செய்தோம். அப்படி வீட்டிற்குள் விளையாடுவதற்கு உள் அரங்கு தேர்வு செய்வது மிகவும் கடினமான ப்ராசெஸ்ஸாக இருந்தது. பத்து வீட்டில்  விளையாடலாம் என்றால் அவன் அக்காள் மகன் கார்த்திக் மகா விஷமி. வன்முறையாளன். விஷமத்தில் தீவிரவாதி. கார்ரோம்போர்டை கம்மோடாக பயன் படுத்திவிடுவான். சுச்சா, கக்கா என்று சகல இயற்கை உபாதைகளையும் அதன் மேலேயே கழிப்பான். செஸ் கொண்டு போனால் பாதி விளையாட்டில் குதிரையை எடுத்துக்கொண்டு L மாதிரி ஓடி, நமக்கு ஆட்டம்  காட்டி விளையாட்டிர்க்கே 'செக்மேட்' வைப்பான். ஆனந்த் வீட்டு திண்ணையில் விளையாடலாம் ஆனால் பக்கத்து  வீட்டு, காது அசுத்தமாக கூட கேட்காத சோனாம்பா பாட்டி  எங்களை "சத்தம் போடாதிங்கோடா" என்று கூம்பு  ஸ்பீக்கர் 'full volume'ல் கத்தி படுத்தி, தன் PWD கிளார்க் மகனை வைத்து விரட்டுவாள். கோபி வீட்டு திண்ணை  அவ்வளவு பேர் கொள்ளாது. இப்படி அரங்கம் தேடி அலைந்தபோது கிடைத்தது, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்காக சிக்கியது நம்பர் பத்து, ஹரித்ராநதி கீழ்கரை.

ஒரு குழந்தைகள் மாநாட்டு கூட்டமாக இவ்வளவு பேரை பாட்டி எதிர்பார்க்கவில்லை. ஆனால் வெய்யிலில் இல்லாமல் கூரைக்குள்  விளையாடுவது அவளுக்கு மகிழ்ச்சியே. கூட்டம் அதிகம் சேர்ந்ததால் உள் விளையாட்டுகள் வீட்டுக்குள்ளேயே ஓடி  ஆடும் விளையாட்டுகளாகியது. முதல் ஓரிரு நாட்கள் தாக்கு பிடித்த பாட்டி, எப்போதும் மீன் மார்க்கெட் போலவும்,  செவ்வாய் சந்தை போலவும் பசங்கள் கூவுவதை பார்த்து ஒரு சுபயோக சுபதினத்தில் "அடாடா...குழந்தைகளா  கோட்டான்களான்னு தெரியலையே!!" என்று எங்கள் ஜென்டரையே கேள்விக்குறியாக்கி அனைவரையும் வெளியே  தள்ளி கதவை சார்த்தினாள். விளையாட்டா அலைந்தது போய் விளையாட்டுக்காக அலைய வேண்டியதாயிற்று.  நோமேடியன்கள் போல கரைகரையாகவும் வீடு வீடாகவும் வெளிய உலவ ஆரம்பித்தோம்.

hari1காலாண்டு பரீட்சை வந்து, 'தேர்வு ஜுரம்' கண்டு, புத்தக மூட்டையை திறந்து, புது வாசனை மாறாத புத்தகத்தை   கொஞ்ச நாள் எல்லோரும் படிக்கும் தருணத்தில், பாட்டி தனது தோஸ்த் கோபி பாட்டியிடம் "எங்காத்து தம்பி,  புஸ்தகத்தை திருப்பி சேப்பா கருப்பான்னு கூட பார்க்கறதில்லை" என்று அங்கலாய்த்துக்கொள்வாள். நான் தேமேன்னு பாடம் படித்தாலும், "தம்பி...தூங்கறா மாதிரி இருக்கே" என்று கூறி கலாய்ப்பாள். ஒருவாராக வெள்ளை தாள்களை  நீலமாக்கிய பரீட்சைகளை முடித்தபின் வந்த அந்த விடுமுறையில் மறுபடியும் எல்லோருக்கும் 'கிரிக்கெட் ஜுரம்'  காண்பதற்கு முன்னால் நவராத்திரி வந்தது.  நவராத்திரியின் ஆண்டாள் கோபால் பற்றிய பதிவு இங்கே.


நவராத்திரி முடியும் தருவாயில் துக்கம் தொண்டையை அடைக்கும். சின்ன வயசில்  பல வீட்டு சுண்டல்கள் பெரிய வயசில் பல வீட்டு பெண்டுகள். பொடியனாக இருந்தபோது வாய்க்கு ருசியாக பல வீட்டு சுண்டல் சாப்பிட்டு வயிற்றை ரொப்பினோம். கொஞ்சம் தடியனாக வளர்ந்தபிறகு கண்ணுக்கு ருசியாக நம் வீட்டுக்கு வெத்திலை பாக்கு பழம் வாங்க வரும் பெண்டுகளைப் பார்த்து ரசித்தது. "ஏண்டிம்மா.. ஒரு பாட்டு பாடேன்.. எங்காத்து கொலுவுக்கு" என்று பாட்டி கேட்டால் தட்டாமல் "ஹிமகிரி தனயே ஹேமலதே.." என்று பாடுகிற பெண்களை காட்டிலும் "அலைபாயுதே கண்ணா..என் மனம்.." என்று ஊத்துக்காடு தமிழ் கீர்த்தனை பாடும் கீதுக்களை தான் ரொம்ப பிடிக்கும். அப்படியே கதவில் சாய்ந்துகொண்டே ஒரு கனவு சீன் முடித்து வாசல் வரை கொண்டு வந்துவிட்டு "போய்ட்டு வாடீம்மா"ன்னு வழியனுப்பலாம். பெயர் சொல்லாமல் சொல்லுகிறேன், ஒரு முறை கொலுவிற்கு வந்த பொண்குழந்தை சமர்த்தா வெத்தலை பாக்கு வாங்கிண்டு போகாம உள்ளே சுண்டல் மடிக்க உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருந்த என்னை கூப்பிட்டு "ந்நா...நா போய்ட்டு வரேன்..." என்று நளினமாக தலை ஆட்டி சொல்லிவிட்டு குஞ்சலம் வைத்து கட்டியிருந்த பின்னல் ஆட ஒரு சாயந்திரம் அவள் வீட்டுக்கு சென்றதர்க்கப்புறம் கொலு காலத்தில் மாலை நேரங்களில் நான் வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டேன்.

குளக்கரை ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாக இருக்கும். அந்தக் காலத்தில் எங்களுடைய மெர்சிடஸ் பென்ஸ் எங்கள் சைக்கிள் தான். சுத்தமாக கழுவி, சந்தனம் குங்குமம் இட்டு "ஹோய்..." என்று பெரும் சத்தமிட்டு கும்பலாக ரவுண்டு வருவார்கள். பொதுவாக சாயந்திரம் நடக்கும் கூத்து இது. ஒரு புண்ணிய ஆயுத பூஜை தினத்தன்று ஆர்.வி.எஸ். சைக்கிளை நன்றாக பளீரென்று துடைத்தான். அப்புறம் ஈர்க்குச்சி கொண்டு வண்டி முழுக்க மைகேல் அஞ்சேலோ போன்று ஓவியம் தீட்டலானான். ரொம்ப நாழியாக இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்க்காமல் கை கால் கடுக்க வண்டியை அலங்கரித்தான். வாசலில் நடைபெற்ற இந்த சைக்கிள் அலங்காரம் வெகு நேராமாக யாராலும் கவனிக்கப் படாமல் இருந்தது. கைக்காரியம் ஒழிந்து பாட்டி உள்ளேயிருந்து வாசலுக்கு வந்தாள். சைக்கிளை பார்த்து "என்னடா.. இது... என்னமோ கச்சா முச்சான்னு சைக்கிள் பூரா கிறுக்கி இருக்கே" என்றாள். ஒரு மணி நேரமாக அசராமல் ஆட்டின் வரைந்து அம்பு விட்டிருந்தேன். கிறுக்கி இருக்கே என்று சொன்னவுடன் அடக்கமுடியாமல் "ஐயோ பாட்டி! ஐ லவ் யூ!" என்று அடிவயிற்றில் இருந்து கத்தி சொன்னேன். அதே சமயம் வாசலில் பவனி வந்து கொண்டிருந்த மகா, ஜெம்பா போன்ற நம் வயதை ஒத்த பெண்கள் "களுக்" என்று ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

இந்த ஐ லவ் யூவும், பெண்கள் கேலிச் சிரிப்பும் நடந்த போது எட்டிப் பார்க்கவா வேண்டாமா என்று எனக்கு மீசை கொஞ்சம் அரும்பியிருந்தது.


பின் குறிப்பு: ஹரித்ரா என்றால் மஞ்சள், மஞ்சள் பூசி கோபியர்கள் கிருஷ்ண  பரமாத்மாவுடன் இங்கே ஜலக்க்ரீடை செய்ததால் ஹரித்ராநதி என்ற பெயர். அடுத்த பதிவில் ஹரித்ராநதி விட்டு கொஞ்சம் வெளியே செல்வோம்.

பட உதவி: rajamannargudi.blogspot.com
-

50 comments:

  1. "ஐயோ பாட்டி, ஐ லவ் யூ!” நானும் இந்த பதிவை ரசித்தேன். அடுத்த பதிவு எப்போது என்ற ஆர்வத்துடன்....

    வெங்கட்.

    ReplyDelete
  2. //வெள்ளை தாள்களை நீலமாக்கிய பரீட்சைகளை முடித்தபின்..//
    கத எழுதுனத எவ்வளோ அழகா சொல்லுறீங்க அண்ணா.. ம்..ம்.. :)

    ReplyDelete
  3. கூடிய விரைவில் வெங்கட்... ரசித்ததற்கு நன்றி... ;-)

    ReplyDelete
  4. ஆமாம் பாலாஜி. அதுக்கு பேரு பேப்பரை ரொப்பி ஒப்பேத்தறது... ;-) ஒப்பேற்றியே முன்னுக்கு வந்தவர்கள் நாங்கள்... ;-)

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு. சிறு வயது நிகழ்ச்சிகள் என்றும் பசுமையானவை.

    ReplyDelete
  6. @கோவை2தில்லி
    ஆமாம். இளம் பிராயத்தில் அடித்த கொட்டங்கள் எப்போதும் நெஞ்சை விட்டு நீங்கா.. ;-)

    ReplyDelete
  7. பசுமையான சிறுவயது நிகழ்ச்சிகள்.

    நல்ல பகிர்வு.

    I love ur Pakirvu....

    ReplyDelete
  8. நன்றி சே.குமார் ;-) ;--)

    ReplyDelete
  9. //ஒரு பதினைந்து இருபது நாளைக்கு பேட்டையும் பந்தையும் கண்டாலே அடிபட்ட மாமியும் அடிக்க வந்த மாமாவும் நினைவுக்கு வர நாலு கால் பாய்ச்சலில் எல்லோரும் அலறி அடித்து ஓடினார்கள்.//

    எல்லோரும் = சிவன் கோவிலில் (cricket) விளையாடிய நீங்கள் ?

    //'வாக்'கும்போதே பார்த்த பேருடன் 'டாக்'குவாள். //
    //விளையாட்டா அலைந்தது போய் விளையாட்டுக்காக அலைய வேண்டியதாயிற்று. //

    classic..

    பெண்கள் மேட்டர லைட்ட ஆரம்பிக்கராமாதிரி இருக்குதே....?

    ReplyDelete
  10. //வாக்'கும்போதே பார்த்த பேருடன் 'டாக்'குவாள்//
    என்ன ஒரு எதுகை மோனை.. ;)

    ReplyDelete
  11. கொஞ்சமா ஆட்டம் போட்டிருக்கீங்க??

    ReplyDelete
  12. கொஞ்சம் கொஞ்சமா பார்க்கலாம் மாதவா... ;-) ;-)

    ReplyDelete
  13. ஆமாம் இளங்கோ... ;-) ;-)

    ReplyDelete
  14. கொஞ்ச ஆட்டம் தான் ஜி, ரொம்பல்லாம் இல்லை.. ;-) ;-)

    ReplyDelete
  15. எதுகையும் மோனையும் கலந்து கட்டி நையாண்டி நகைசுவையுடன் நன்றாகே வருகிறது உங்களுக்கு R V S.
    "பாட்டி ஐ லவ் யு " நல்ல கூத்து. நீங்க ரொம்பவே ஆடியிருக்கீங்க (கிரிகெட்!)
    பொட்டி தட்ற்றதொட எழுதவும் செய்யலாம். அதான் நடக்கிறதே (மாட்டிகிட்டடது நாங்க!) :)

    ReplyDelete
  16. பாராட்டுதலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி கக்கு..;-) ;-)
    ஒரு ஐந்தாறு பெரிய கூத்துக்களை எழுதலாம் என்று விருப்பம். பார்க்கலாம். ;-)

    ReplyDelete
  17. இந்தப் பகுதியில் NHSS பள்ளி , வெங்கட்டா (ஹெச் எம்) மற்றும் மீரா டீச்சர் பற்றியெல்லாம் வருமான்னு பார்க்கறேன்...

    ReplyDelete
  18. நல்லா எழுதுறீங்க.... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. @ஸ்ரீராம் (சத்தமாக கூப்பிட்டேன்)
    மீரா டீச்சர் எப்படி தெரியும்? நீங்கள் எந்த ஊர்? (கை கால் எல்லாம் பரபரங்குதே...)

    ReplyDelete
  20. உங்களுடைய தொடர் ஊக்கத்திற்கு நன்றி சித்ரா! ;-)

    ReplyDelete
  21. @ Sriram,
    மீரா டீச்சர் வரமாட்டாங்க.. அவுங்க ஸ்கூலுல ஆர்.வீ.எஸ் படிக்கலையே..

    ReplyDelete
  22. @மாதவன்
    அவங்க ஸ்கூல்ல படிக்கலைனாலும் எவ்ளோ தடவை காலேஜ் முடிக்கறவரை அவங்க வீட்ல உட்கார்ந்து பேசி அரட்டை அடிச்சிருப்பேன். என் அக்காவிற்கு டீச்சர். கோபாலசமுத்ரம் ஸ்கூலில்.
    நாம யாரையும் வுடமாட்டோம்ல.. ;-) ;-)

    ReplyDelete
  23. dear rvs

    pinni pedal edutthttel pongo.

    super

    aduttha padivukkaga wait panren

    balu vellore

    ReplyDelete
  24. மீரா டீச்சர் வீட்டுல இருந்திருந்தா சசி, விசு (டெப்போ) வல்லாம் தெரியுமான்னு தெரியலை.

    ReplyDelete
  25. அசத்தல் ஆர்.வி.எஸ் ...இப்படி கோர்த்து கோர்த்து நகைச்சுவையோடு எழுதுவது கொடுப்பினை அதை படிக்கும் வாய்ப்பு எங்கள் கொடுப்பினை.
    ஹிட் & ரன், பாட்டியின் நகர் உலா, ஹிமகிரிதனேயெ x அலை பாயுதே , சைக்கிளங்காரம் , ஐ லவ் யு பாட்டி இப்படி எல்லாமே அருமை...

    ReplyDelete
  26. @balutanjore
    நன்றி பாலு ;-)

    ReplyDelete
  27. @புவனேஸ்வரி ராமநாதன்
    நன்றி ;-) ;-) ;-) ;-)

    ReplyDelete
  28. @ஸ்ரீராம்
    நாம நேர்ல பேசுவோம். ;-) ;-)

    ReplyDelete
  29. நன்றி பத்துஜி ;-) உங்களை போன்றோரின் ஊக்கம் உயர்வு தருகிறது. ;-)

    ReplyDelete
  30. //Information is Wealth!! இங்கே வித் ஹெல்த்.//
    ரசித்தேன்.
    ஆயுத பூஜை சைக்கிள் அலங்காரம் அருமையான நினைவுகள் ....வாழ்த்துகள் !

    ReplyDelete
  31. நன்றி தமிழ் திரு. ;-) இன்னும் நிறைய ரகளை இருக்கு... ;-)

    ReplyDelete
  32. "மன்னார் குடி ஸ்பெஷல்" ன்னு ஏதும் இருக்குமே அந்த ரெசிபிகளில் எதாவது தட்டி விடறது?
    சுவையாக இருக்கும் அல்லவா? "தெரியாது" என்று மகா பொய் சொல்லவேண்டாம். அயன் மீர் தாங்கள் சிறந்த நல பாக வல்லுனர் என்று எங்களுக்கு தெரியும்.

    ReplyDelete
  33. சுடு தண்ணீர் வைப்பதற்கும், புல்லாங்குழல் ஊதி விறகு அடுப்பு பற்ற வைத்த காலத்தில் மட்டும் தான் அடுப்பங்கரை போயிருக்கிறேன். வாஸ்த்துப்படி நான் அங்கு இருக்கக்கூடாது என்று யாரோ ஜோசியன் சொல்லிவிட்டானாம் கக்கு. ;-) ;-)

    ReplyDelete
  34. மன்னாருக்கும் குடிக்கும் நடுவில் ஒரு இடைவெளி உள்ளது எனக்கு தெரியாதே கக்கு ;-)
    (இவ்ளோ பப்ளிக்கா சொன்னா என்னோட இமேஜ் என்ன ஆறது?)

    ReplyDelete
  35. நீங்க பாட்டிகிட்ட சொன்ன "ஐ லவ் யூ", ஹா...ஹா...

    ReplyDelete
  36. நன்றி சை.கொ.ப ;-)

    ReplyDelete
  37. haha nalla irukku unga malarum ninaivugal

    ReplyDelete
  38. நம் முதியவர்களின் agility and endurance என்னைத் தொடர்ந்து வியப்பில் ஆழ்த்தி வருகிறது. காம்ப்ளேன் இன்க்ரெமின் மற்றும் இன்றைய ஊட்டங்கள் எதுவும் இல்லாமல் நாளைக்குப் பதினெட்டு மணி போல் இருட்டில் இருந்தவர்களுக்கு எங்கிருந்து வந்தது இந்த stamina? நாம் என்ன தொலைத்திருக்கிறோம்? >>>என்பதுக்கு மேல் வயதான என் பாட்டி நாலு கரையையும் ப்ரதக்ஷிணம் என்று புண்ணிய யாத்திரையாக சொல்லிக்கொண்டு வாக்கிங் வருவாள்..

    ஹிமகிரி சமாசாரம் ஒண்ணு நினைவுக்கு வருது. குரோம்பேட்டை நாட்களில் கொலு சமயம். ஒரு பெண் 'ஹிமகிரி தனயே ஹே.. ஹிமகிரி தனயே ஹே' என்று சீர் சரியாகப் பிரிக்காமல் இழுத்துக்கொண்டிருந்ததைப் பொறுக்காத ஒரு விபரீதக்கதை மாமா அவசரமாகச் சுண்டல் கொண்டு வந்து கொடுத்து அவளை அனுப்பிவிட்டு, "மலத்தை விடுமா கொழந்தே" என்றார். அன்றைக்கு முழுமையாகப் புரியவில்லை என்றாலும், அந்தப் பெண்ணைத் தொடர்ந்தால் சீக்கிரம் சுண்டல் கிடைக்கும் என்பது மட்டும் புரிந்திருந்தது.

    ReplyDelete
  39. நல்லா நகைச்சுவையா இருந்தது தொடரட்டும்!

    ReplyDelete
  40. ஒரு முறை கொலுவிற்கு வந்த பொண்குழந்தை சமர்த்தா வெத்தலை பாக்கு வாங்கிண்டு போகாம உள்ளே சுண்டல் மடிக்க உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருந்த என்னை கூப்பிட்டு "ந்நா...நா போய்ட்டு வரேன்..." என்று நளினமாக தலை ஆட்டி சொல்லிவிட்டு குஞ்சலம் வைத்து கட்டியிருந்த பின்னல் ஆட ஒரு சாயந்திரம் அவள் வீட்டுக்கு சென்றதர்க்கப்புறம் கொலு காலத்தில் மாலை நேரங்களில் நான் வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டேன்.
    When you had absorbed the whole scene especially every moment and move of her, how did you expect you would be allowed to be remain there again? (Your move might have been watched by your family)
    The flow of words with the touch of humor is tireless.

    ReplyDelete
  41. ஆமாம் காயத்ரி... மலர்ந்த நினைவுகள்... ;-) ;-) இன்னும் நிறைய இருக்கு... பார்க்கலாம் எவ்ளோ எழுத முடியும் என்று... ;-)

    ReplyDelete
  42. அப்பா சார்! பாட்டி பற்றி எழுத ஓராயிரம் பதிவு வேண்டும். ஜுரமாக இருந்தாலும் இருபது படி இறங்கி அந்த குளத்தில் தான் குளிப்பாள். தன் துணிமணிகளை தானே துவைப்பாள். எனக்கு தோசை வார்த்து தருவாள். பட்ஷணம் பண்ணி தருவாள். "சந்தி" பண்ணுடா என்று வற்புறுத்துவாள். "காயத்ரி" காப்பாத்தும்பாள்.
    என் மனசிலிருந்து ஆத்மார்த்தமாக வந்த "ஐ லவ் யு" அது.

    என்னதான் இருந்தாலும் ஹேமலதேவை ஹே மலத்தே என்று பாடினால் யார் தான் "பிடி சுண்டல் கட்டு நடையை" என்று சொல்ல மாட்டார்கள்.

    ReplyDelete
  43. நன்றி எஸ்.கே ;-)

    ReplyDelete
  44. முதல் வருகைக்கு வணக்கம் "எரிதழல்" வாசன். என் பாட்டியை விட மோசமா இருப்பீங்க போலிருக்கு. நீங்க இருந்தா ஊரை விட்டு விரட்டியிருப்பீங்களோ!!. ;-) ;-) வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. ;-) ;-) அடிக்கடி வந்து போங்க... எல்லாம் கலந்துகட்டி அடிக்கறேன்...

    ReplyDelete
  45. தம்பி,

    அட்டகாசம்... காமெடில பிண்ணி பெடலெடுக்கிற.

    காமடியாக எழுதுவது என்பது கடவுள் கொடுத்த வரம். வாழ்த்துகள்!

    //டாப் கியரில் கடந்து பச்சைக்கல் ஐயங்கார் வீட்டருகில் கொஞ்சம் மெதுவாக வருவாள்.//

    பச்சைக்கல் ஐயங்காரா? அம்மா அவரை பச்சைக்கல் ஐயர் என்றுதான் சொல்வார். பச்சைக்கல் ஐயங்காரைப்பற்றி இந்த பதிவில் எழுதியுள்ளேன்.

    http://vssravi.blogspot.com/2010/08/blog-post.html

    //வடகரையில் மணி டீக்கடை தாண்டி பாட்டியின் அபிமானிகள் ஜாஸ்த்தி.//

    அடடா... மணி கடை மசால் வடை ஞாபகம் வந்துடுச்சு:(

    ReplyDelete
  46. ரவி அண்ணே!

    புகழுரைக்கு நன்றி. தங்களது தகப்பனாரை என் அப்பாவிற்கு தெரியுமாம். காண்ட்ராக்டர் பருத்திக்கோட்டை கணேசன் உங்களுக்கு உறவா? மற்றவை மெயிலில்.

    ReplyDelete
  47. நன்றாய் ரசித்துப்படித்தேன்.

    "குஞ்சலம் வைத்து கட்டியிருந்த பின்னல் ஆட.." :)))

    ReplyDelete
  48. நன்றி மாதேவி. ;-) இன்னும் நிறைய இருக்கு. ;-)

    ReplyDelete
  49. Dei RVS.. konjam Ramu sir cricket team, pinnangal pidari pathi ellam ezuthuda .. Romba naal achu Mannargudi kathai padichu!

    ReplyDelete