Saturday, November 6, 2010

'ஊசி'ப் பட்டாசுகள்



சூடு
poorgirl
பலகாரம் சுட்டு
பட்டாசு சுட்டு
கழிந்தது தீபாவளி;
சீமான் மகளுக்கு
கையில் சூடு
வெறுமான் மகளுக்கு
நெஞ்சில் சூடு









ஒளி
dark hut
அமாவாசையிலும்
பௌர்ணமியாய்
ஜொலித்தது ஆகாயம் -
தீபாவளியாம்!  
என் வாழ்வில்
ஒளி வருமா என்று
ஏங்கியது
ஏழை வீட்டு அகல் விளக்கு









பட உதவி: வேலி கடித்து ஏங்கிப் பார்க்கும் அந்த சிறுமி கிடைத்த இடம் djiin.wordpress.com. விளக்கில்லா வீட்டிற்கு இருட்டில் தடுமாறிக்கொண்டே நடக்கும் அந்த குழந்தையை கண்டெடுத்த இடம் memsaabstory.wordpress.com

36 comments:

  1. நன்றுக்கு ஒரு நன்றி ;-)

    ReplyDelete
  2. nalla irukku aar.vee.es gangaasnaanam aachchaa?

    ReplyDelete
  3. ரெண்டே ரெண்டு தானா :(

    ReplyDelete
  4. \\சீமான் மகளுக்கு
    கையில் சூடு
    வெறுமான் மகளுக்கு
    நெஞ்சில் சூடு\\

    அந்த படத்தையும் இந்த வாரத்தைகளையும் கண்டவுடன் என் நெஞ்சிலும் வலி!!!!

    ReplyDelete
  5. @மோகன்ஜி
    ஆச்சுண்ணா...
    ரெண்டு ரெண்டு வீதியில் வந்த எல்லோருக்கும் கொடுத்துட்டு வெடிக்கும் போது தோணினது.... இங்கே.. கவிதை மாதிரி.... ;-) ;-)

    ReplyDelete
  6. @philosophy prabhakaran
    அப்பப்போ இதுபோல் எழுதலாம் என்று விருப்பம். பார்க்கலாம். நன்றி.

    ReplyDelete
  7. @சிவா
    வலித்து ரசித்தமைக்கு நன்றி சிவா.. ;-)

    ReplyDelete
  8. கவிதை மாதிரி அல்ல கவிதையே தான். முதலாம் கவிதை மனதைப் பிழிந்தது..

    ReplyDelete
  9. @வெங்கட் நாகராஜ்
    நன்றி வெனா நானா ;-) ;-)

    ReplyDelete
  10. மனது சங்கடமானது...

    ReplyDelete
  11. படத்தில் குத்திக் கிழிப்பது கம்பியா.. இந்தச் சமூகமா ?
    நன்று அண்ணா.

    ReplyDelete
  12. சுடுகிறது.

    இரண்டுமே அருமை RVS.

    ReplyDelete
  13. @இளங்கோ
    கமெண்டே கவி பாடுது....

    ReplyDelete
  14. @சைவகொத்துப்பரோட்டா
    நன்றி ;-)

    ReplyDelete
  15. ஆஜர் R V S , I wanted to tell something but not now.

    ReplyDelete
  16. @கக்கு - மாணிக்கம்
    What?

    ReplyDelete
  17. சிறப்பான கவிதைகள்!

    ReplyDelete
  18. நன்றி எஸ். கே ;-)

    ReplyDelete
  19. சிறுமியும் ஏக்கமும், குழந்தையின் இருட்டில் தனிப்பயணமும் ..பென்சில் பட்டாஸின் கடைசி சூடு போல சுருக் சூடாக சூடுகிறது...
    கவியான வார்த்தைகள் பொருத்தம்..

    நெஞ்சுச்சூடு ஆறவும்..அகல்விளக்குகளை சற்று எண்ணை விட்டு தூண்டவும் பிரார்த்தனையோடு முயற்சி செய்வோம்

    ReplyDelete
  20. ஆமாம். பத்மநாபன். பிரார்த்திப்போம். ;-(

    ReplyDelete
  21. கவியான வார்த்தைகள் - Apt for photos.

    Wow, RVS

    ReplyDelete
  22. ஏங்கும் விழிகளின் சூடு எம் மனதையும் சுட்டது.

    ReplyDelete
  23. @சாய்
    நன்றி ;-)

    ReplyDelete
  24. @ஆதிரா
    நன்றி ;-) தவறிய அழைப்புகள் படிக்கலையா?

    ReplyDelete
  25. Hmm... manasukku varuthamaathan irukku RVS anna!!..:(

    ReplyDelete
  26. RVS....

    படங்களும், படங்களுக்கான உங்களின் வரிகளும் ரொம்பவே “சூடு”..........

    ReplyDelete
  27. @தக்குடுபாண்டி
    ஆமாம் வலிக்குது ;-(

    ReplyDelete
  28. @R.Gopi
    எனக்கும் சுட்டது கோபி..

    ReplyDelete
  29. சூட்டில் ஒளி அதிகம்.

    ReplyDelete
  30. @சே.குமார்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  31. @அப்பாதுரை
    நன்றி அப்பாஜி ;-)

    ReplyDelete
  32. இந்தக் கவிதை நன்றாக உள்ளது. படித்த அன்று விட்டு இன்றும் மனதில் நிற்கிறது.

    ReplyDelete
  33. @நீச்சல்காரன்
    நன்றி நீச்சல்காரரே..
    இது போன்ற மக்கள் வாழ்க்கையில் எவ்வளவு எதிர்நீச்சல் போட வேண்டி வரும்.. வருடாவருடம் என்னால் முடிந்த பட்டாசு சிறுவர்களுக்கு கொடுப்பேன். இந்த வருடம் கொடுத்த போது தோன்றியது இது..

    ReplyDelete