Friday, November 12, 2010

பொதுவாழ்வு

என் ஏழுயிர் நண்பன் "என்ன தருமா? போலாமா டயம் ஆவுது.." என்று மணிக்கட்டில் வாட்சைத் தட்டி வாஞ்சையுடன் அழைத்தான். சௌகார்பேட்டையில் ரெண்டு, சைதாப்பேட்டையில் ரெண்டு, அண்ணா நகரில் ஒன்று, அமிஞ்ஜிக்கரையில் ரெண்டு மொத்தம் ஏழுபேரை எனக்காக போட்டுத் தள்ளியவனை ஏழுயிர் நண்பன் என்று அழைப்பதுதானே சாலச் சிறந்தது. எனக்காக பிறர் உயிர் எடுக்கும் என் உயிர் நண்பன். என்னுடைய இடுக்கண் களைய அவன் எடுத்துக்கொள்ளும் எதிர்நோக்கும் சாகசங்கள் வார்த்தையில் வடிக்கமுடியாது. "போலாம்... எந்த வண்டிய ரெடி பண்ணின...". கேள்விக்கு பதில் அடுத்த செய்கையில் காண்பிப்பான் அவன். "நீ சொல்லு பார்த்தி.. ராஜாதான் வண்டி செலெக்ட் பண்ணனும்.." என்று கஞ்சாப் பல் தெரிய சிரித்தான். "ஸ்கார்பியோல போவமா" என்ற கேள்விக்கு கேனத்தனமா இருக்கே என்பது போல் பார்வை பார்த்தான். "ஏன் வேண்டாமா?" என்று திரும்ப நெற்றி சுருக்கி கேட்டபோது "மூத்திர சந்து மாதிரி இருக்கும் அந்த இடம்.. அங்ககூட ஸ்கார்ப்பியோல போவியளோ..." என்று எகத்தாளமாக கேட்டான். நான் பதில் பேசாமல் மடிப்பு கலையாத மினிஸ்டர் ஒயிட் சட்டையும் ஒரு காந்தியவாதி போல கதர் வேட்டியும் கட்டிக்கொண்டு கைகட்டாத குறையாக மாடியில் இருந்து இறங்குபவனை பின்பற்றி நடந்தேன். கொஞ்சம் காலச் சக்கரத்தில் ஏறி பின்னாடியும் நடந்தேன்.

man
ஊரில் வீட்டில் நடந்த ஒரு கள்ள உறவு களேபரச் சண்டையில் கத்தி எடுத்து "வாலா"ட்டியவனை கதறக் கதற ஒட்ட நறுக்கி காக்காய்க்கு வீசி எறிந்து விட்டு ஓடிவந்தவன் நான். அந்த திருட்டு உறவில் ருசி கண்ட எங்கள் குடும்பத்து பெண் பூனையை என் மாமனே மேலோகத்திர்க்கு அருவாள் டிக்கெட் வாங்கி அனுப்பிவிட்டு ரத்தம் சொட்டும் ஆயுதத்துடன் போலீசில் சரண்டர் ஆகி எனக்கு தியாகியும் ஆனான். அவன் குருதி சொட்ட அருவாளுடன் நடந்து போனது வாய்க்கால்கரை அய்யனார் போலவும் அந்தக் ரத்தக்கறை வீதியெங்கும் ஒரு மாதம் வரைக்கும் மண்ணோடு கலந்து செம்மண்ணாக இருந்ததாகவும் பிறிதொருநாள் நான் நல்லவனாக ஊருக்கு உழைக்கும் உத்தமனாக போனபோது பேசிக்கொண்டார்கள். அப்படி போன போது அனாதரவாக இருந்த மாமன் பொண்ணுக்கு தாலி என்ற தாம்புக் கயிறு கட்டி என்னோடு இழுத்து வந்துவிட்டேன். திடகாத்திரமான குட்டி அது. சின்ன வயசில் குளக்கரை அரசமரத்தடியில் விளையாடும்போது சூட்டாங்காய் தேய்த்து தொடையில் சூடு வைத்தது இன்னமும் எனக்கு போலீஸ் ஸ்டேஷன் அடையாளமாய் இருக்கிறது. வாய் அசராமல் "டேய்.. தருமு..." என்று அழைத்தவள் இப்போது "ஏங்க..ஏங்க..." என்று ஏங்குகிறாள். கருப்பழகி. காந்தலே ருசி. சிகப்பு கண்ணாடி வளையல் அணிந்தவளை இப்போது தங்கத்தால் இழைத்திருக்கிறேன். கருப்புக்கும் தங்கத்துக்கும் தான் என்ன பொருத்தம். பள பளவென்று மின்னுகிறது.

இங்கே பட்டணத்தில் கால் வைத்து முதன் முதலில் குடிபுகுந்தது கூவம் வாசமும் கருவாட்டு மணமும் வீசும் பேட்டை ஒன்றில்தான். நான் நிர்கதியாக பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்தபோது ரெண்டு இட்லி டீ வாங்கிக் கொடுத்து ஆதரித்தவன் இவன்தான். இவனை எனக்கு முன்னப் பின்ன தெரியாது. ஒருக்கால் இவனும் யாரையாவது இருகூறாக வகுந்துவிட்டு ஓடியிருப்பான். வேறு யாரோ இவனுக்கு பொறையும் டீயும் இதுபோன்று வாங்கிக் கொடுத்திருப்பார்கள். "என்ன பிரச்சன?" என்று என் கொலைக் கண்களை பார்த்தே கண்டுபிடித்துவிட்டான். வாங்கித் தந்த ரெண்டு இட்லியும் டீயும் வஞ்சனை இல்லாமல் என்னை ஒன்று விடாமல் அவனிடம் சொல்ல வைத்தது. நவீன பாஞ்சாலியாக ஐந்தாவது புருஷனாக ஒருவனை  தேர்வு செய்து ஓடிய அவன் அம்மாவின் சரித்திரம் போலிருந்தது என்று என்னை ஆதரவுடன் கட்டி அணைத்துக்கொண்டான். அவனுக்கு தெரியாது இதுவும் அதே போன்று ஒரு கதை என்று. ஒரு ஆட்டோ வைத்து என்னை அவன் பேட்டைக்கு அழைத்துச் சென்றான். நாலைந்து உடைந்த ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், "எங்கள் பாசமிகு அண்ணன்" என்று தலைவர் இளித்தபடி விளிக்கும் வினையில் போஸ்டர் போன்ற உபகரணங்களால் உண்டாக்கப்பட்டது அவன் குடிசை. "என்ன பேட்டரி... புச்சா யாரையோ இட்டாந்திருக்க..." என்று சென்னையின் குப்ப ராகத்தில் நீட்டி முழக்கி கேட்ட செல்வி அக்காதான் நான் சென்னையில் பார்த்த முதல் பெண். "எல்லாம் நம்ம கூட்டாளிதான்.." என்று குப்பத்து வாசலில் நட்டிருந்த கட்சி கொடி பார்த்து சொன்னான். அப்போதுதான் எனக்கும் அவன் பெயர் பேட்டரி என்று தெரியும்.

இரண்டு நாட்கள் கூடி வாழ்ந்ததில் தெரிந்து கொண்ட சங்கதி. எரிசாராயம் காய்ச்சும் தயாரிப்பாளர்களுக்கு பழைய பேட்டரி சப்பளை அளிப்பது எனக்கு ஆதரவளித்த அனாதை ரட்ஷகன் தானாம். அதான் பேட்டரி என்ற நாமகரணம். எப்பவும் "ஃபுல்" சார்ஜிலேயே இருந்தது. செல்வி அக்காவோட பொண்ணு பூரணி. செல்வி அக்கா கஷ்டப்பட்டு நாலு வீட்டில் வேலை செய்து பொண்ணை படிக்க வைத்து புருஷனுக்கும் "தண்ணீ" ஊற்றிக்கொண்டிருந்தது. செல்வி அக்கா குடும்பத்திற்கு அவர் தான் கேப்டன். எப்போதும் ரத்தச் சிகப்பேறிய கண்கள். பன்னிரெண்டாவது படிக்கும் பருவச் சிட்டான பூரணி ஆங்கிலத்தில் சந்தேகம் கேட்க வெள்ளைக்கார துரைமார் போல நான் சொல்லிக்கொடுக்க குப்பம் என்னை இங்கிலீசு வாத்தியாராக அடையாளம் கண்டு கொண்டது. ஷெல்லியும் கம்பனும் மாறி மாறி என்னுள் வந்து போனார்கள். கல்லூரியில் பாடம் எடுத்த பேராசிரியர்களுக்கு அனேக கோடி நமஸ்காரம். அவ்வப்போது பேட்டரியின் குடிலுக்கு வந்து போன பூரணிக்கு என்னால் காதல் சார்ஜ் கிடைக்கப்பெற்றாள். "யே..த்தோடி..எப்பபாரு வெறிக்க பாத்துகினே இருக்கியே.. மென்டளு ஆயிட்டியா.." என்ற தாயாரின் வசவுகளுக்கு பல்லைக் காட்டி சிரிக்க ஆரம்பித்தாள். 

போன ரெண்டு பாரா பட்டண வாழ்வுக்கு அப்புறம் ஒரு நாள் சொட்டையும், வெள்ளையும் சொள்ளையுமா இருந்த ஒரு பெரிய மனிதரிடம் அழைத்துப் போனான் பேட்டரி. "அண்ணே... இவன் நம்ம ஃபிரண்டு. நல்ல படிப்பாளி.. கிரகம் நம்ம கூட வந்து சேர்ந்துட்டான்.. உங்க கூட இருந்தா உபயோகப்படுவான்.." என்று என்னைப் பற்றி நல்லது சொல்லி சேர்த்துவிட்டான். தலைவர் பார்த்துவிட்டு.. "எந்தூரு..." என்று திருவாய் மலர்ந்தருளினார். ஊர் பேரைச் சொன்னேன். "டேய் சந்தானம்... க்காளி... அந்த வயத்தரிச்ச பார்ட்டி பலனிவேலு ஊருதானே..." என்ற தலைவர் கேள்விக்கு தவறாமல் தலையை ஆட்டினான் அந்த அல்லக்கை. அறுபதாவது அகவையில் அடியெடுத்து வைக்கும் தலைவருக்கு போஸ்டர் வாசகம் ரெடி பண்ணிக்கொண்டிருந்த கோஷ்டியிடம்



தமிழக அரசியலின் புது அவதாரமே..
அரசியல் சாசனமே.....உனக்குத்தான் அரியாசனமே..
சாமான்யனின் சன்னதியே..
வேற்றுக்கிரகவாசியிடம் கூட வேற்றுமை பாராட்டாத பண்பாளரே..

போன்ற போஸ்டர் வாசங்களை அள்ளி வீசுவதைப் பார்த்த தலைவர் அகமகிழ்ந்து அவருடைய கட்சியில் இலக்கிய அணியில் என்னை சேர்த்துக்கொண்டார்.  தலைவரின் அறுபத்து ஓராவது பிறந்த நாளில் பஞ்ச பூதம் என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை என்னை மாநில இலக்கிய அணி செயலாளர் ஆக்கியது. அந்தக் கவிதை உங்கள் மேலான பார்வைக்கு இங்கே...

நீ எதிரிக்கு சுடும் நெருப்பு
ஏழைக்கு கருணை மழை 
இகழ்வாரையும் தாங்கும் நிலம் 
எங்களின் சுவாசக் காற்று 
அண்ணாந்து பார்ப்போருக்கெல்லாம் ஆகாயம்  


இப்படி கவிதையாய் ஆரம்பித்த என் பொதுவாழ்வுப் பயணம் இப்போது என்னை ஒரு மாநில மந்திரி அந்தஸ்த்துக்கு உயர்த்தியிருக்கிறது. நேற்றுக் கூட இரண்டு ஸ்தாபனங்கள் திறப்பு விழாக்கள், ஒரு திருமணம், ஒரு கருத்தரங்கம் என்று சூறாவளியாய் சுற்றுகிறேன். நான் தான் எதிர்கால முதல்வராம். எதிரி கோஷ்டியில் இருக்கும் எட்டப்பன்கள் கூட "அண்ணே.. நீங்கதான் அடுத்து.." என்று ஒத்துக்கொள்கிறார்கள். கட்சியில் எழுபது சதவிகிதம் பேர் என்னை அடுத்ததாக தலைவர் பதவிக்கு போட்டியிட சொல்கிறார்கள். இது ஜனநாயக கட்சி. நல்லவேளை தலைவருக்கு வாரிசுகள் யாரும் இல்லை. நான் செய்த புண்ணியம் மூன்றாவது நான்காவது பொண்டாட்டிக்கு கூட பிள்ளைச் செல்வம் வாய்க்கவில்லை. அடுத்த தலைவர் பதவிக்கு என்னை தகுதிவாய்ந்தவனாக மேம்படுத்திக்கொள்ள அணைத்து முயற்ச்சிகளையும் எடுத்துவிட்டேன். எதிர்த்தால் போட்டுத் தள்ளுவதற்கும் கட்டை பஞ்சாயத்துக்கள் செய்து காசு பார்ப்பதற்கும் ஒரு மாவட்ட செயலாளர் பதவி கொடுத்து பேட்டரியை பக்கத்தில் வைத்துக் கொண்டேன். எந்தெந்த வழிகளில் பிறர் கண்ணில் மணல் தூவி பணம் அடிக்கலாமோ அதையெல்லாம் சொல்லித் தருவதற்கு டை கட்டிய விசுவாசமான மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை வலதுகையாக அமர்த்திக் கொண்டேன். பல மாநிலங்களில் பறந்து விரவி கிடக்கும் என் எல்லா அசையும் அசையா சொத்துக்களையும் பாதுகாப்பாக அந்தத் தலை எடுத்த தியாகி மாமாவும் இன்ன பிற பந்துக்களும் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் என் பினாமிக்கள் என்று சுனாமியில் வீடிழந்தவர்கள் போல் என் அரசியல் எதிரிகள் மைக் பிடித்து கதறினார்கள்.

உன் பழங்கதை போதும். எல்லாம் சரி நேரமாச்சு என்று பேட்டரி அழைத்து இப்போது எங்கே போகிறேன் என்று கேட்கிறீர்களா. தலைவரானால் வேலைப்பளு மனஅழுத்தம் ஆகியவற்றை சமாளிப்பதற்கும் என்னை அவ்வப்போது ஆசுவாசப்படுத்தி தேற்றிக் கொள்வதற்கும் குறைந்தது மூன்று பெண்டாட்டிகள் தேவை. என் மாமன் மகளும், பூரணியும் முதல் இரண்டு இடத்தை நிரப்பி விட்டார்கள். மூன்றாவதை தேடித்தான் இன்று என் பயணம். அது என் வசமாக போகின்ற காரியம் கைகூட நான் தர்மகர்த்தாவாக இருக்கும் எல்லாம் வல்ல கொசப்பேட்டை திரௌபதி அம்மனை வேண்டி புறப்படுகிறேன் உங்கள் வாழ்த்துக்களுடன். தலைவர்ன்னா சும்மாவா?


பட உதவி : all-free-download.com

-

46 comments:

  1. ”பொது வாழ்வுன்னா சும்மாவா?” - நல்ல புனைவு. ஆனாலும் நிஜத்திலும் இது போலத்தானே நடந்து கொண்டு இருக்கிறது நண்பரே. எல்லாரும் ஆருயிர் நண்பன் என்று சொன்னால் நல்லாவா இருக்கு, அதனால உங்கள் “ஏழுயிர்” நண்பன் நல்ல ஆரம்பம்.

    ReplyDelete
  2. @வெங்கட் நாகராஜ்
    நன்றி ;-)

    ReplyDelete
  3. புனைவு நல்லாத்தான் இருக்கு. ஆனால் எதோ மந்திரியை நினைவு படுத்து. ஆட்டோ வராம இருந்த சரி

    ReplyDelete
  4. அண்ணே புதுப்பேட்டை பட எபெக்ட் வருது! சூப்பர்!

    ReplyDelete
  5. அன்பின் எல்.கே
    இது முழுக்க முழுக்க கற்பனையே. எனக்கு எந்த மந்திரி அரசியல்வாதியையும் தெரியாதுங்கோ!!

    ReplyDelete
  6. @Balaji saravana
    தம்பி நான் அந்தப் படம் பார்க்கலை... பாராட்டுக்கு நன்றி ;-)

    ReplyDelete
  7. புனைவும் புனைவில் கவிதையும் சூப்பர். எதிர்பாராத கோணத்தில் முடிவு சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  8. @நாகராஜசோழன் MA
    வாங்க எம்.எல்.ஏ. வாழ்த்துக்கு நன்றி. நீங்க எப்போ மந்திரி ஆவீங்க. ;-) ;-)

    ReplyDelete
  9. //வேற்றுக்கிரகவாசியிடம் கூட வேற்றுமை பாராட்டாத பண்பாளரே..
    //
    நல்லா சிரிச்சேன்!

    ReplyDelete
  10. மொத்தத்தில் பதிவு சூப்பர்!

    ReplyDelete
  11. நன்றி எஸ்.கே. ;-)

    ReplyDelete
  12. // RVS said...

    @நாகராஜசோழன் MA
    வாங்க எம்.எல்.ஏ. வாழ்த்துக்கு நன்றி. நீங்க எப்போ மந்திரி ஆவீங்க. ;-) ;-)//

    உங்க ஆதரவு இருந்தா போதும் நானும் மந்திரி ஆகிடுவேன்.

    ReplyDelete
  13. ஐ அண்ணனுக்கு மூணாவது அண்ணி வரப் போறாங்க... ஆமாண்ணே.. இவங்க மூணு பேர்ல யாரு கொ.ப.செ...

    டி.எஸ். வரதன்.

    ReplyDelete
  14. @நாகராஜசோழன் MA
    நம்ம ஆதரவு எப்பவும் உங்களுக்கு உண்டு தல... ;-)

    ReplyDelete
  15. @Anonymous
    அண்ணே பதில் சொன்னப்புறம் இங்கே வெளியிடறேன்... நன்றி ;-) ;-)

    ReplyDelete
  16. அழகா நிதானமா தொகுத்து எழுதுற முறை பாராட்டலாம் ஆர்.வி.எஸ்.ஆனா அரசியல் இல்லாம கதை எழுதுங்க.நான் முழுசா வாசிக்கிறேன் !

    எங்கே மோகண்ணா ?

    ReplyDelete
  17. நவரசமும் வேனும்ங்கரத்துக்காக எழுதியது ஹேமா.. மோகன்ஜியைத் தான் தேடிக்கிட்டு இருக்கோம். போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன். ;-)

    ReplyDelete
  18. பொது வாழ்வை "தெளிவா" சொல்லீட்டீங்க.

    ReplyDelete
  19. பாதிதான் படிச்சேன்.. மூட் அவுட்டு
    அப்புறம் முழுசும் படிச்சிட்டு கமெண்டு போடுறேன்.

    ReplyDelete
  20. ஹி ஹி ஆமாம்.. சை.கொ.ப ;-)

    ReplyDelete
  21. //நான் பதில் பேசாமல் மடிப்பு கலையாத மினிஸ்டர் ஒயிட் சட்டையும் ஒரு காந்தியவாதி போல கதர் வேட்டியும் கட்டிக்கொண்டு //

    மி(னி)ஸ்டர் ..

    How is that ?

    ReplyDelete
  22. பலே பலே... சூப்பரப்பு.. மாதவா...
    ;-)

    ReplyDelete
  23. தலைவர்ன்னா சும்மாவா?..
    :)

    ReplyDelete
  24. அரசியல் சரக்கு நிறையவே வெச்சுருக்கிங்க போல... ரிஷிமூலம், நதிமூலம் லிஸ்டல் மந்திரிமூலமும் விரைவில் சேர்ந்துரும்... ரிஷிகளும்(பழைய) நதிகளூம் நன்மை புரிவதால் மூலம் பார்க்ககூடாது என்பார்கள்...மந்திரிகள் மூலம் மேலும் எரிச்சலைத்தான் கிளப்பும்...பத்தாக்குறைக்கு அவங்க ஆசுவாசத்துக்கு மூணு வேற...

    எழுத்தோட்டத்தில் அப்படியே காட்சிபடுத்துகிறிர்கள் ஆர்.வி.எஸ்....

    ReplyDelete
  25. @இளங்கோ
    எப்புடின்னு சொல்லணும்... சும்மா :) போட்டா பத்தாது... ;-) ;-) ;-)

    ReplyDelete
  26. @பத்மநாபன்
    மிக்க நன்றி பத்துஜி.

    மந்திரி மூலமும் மந்திரிகளின் குமாரிகளின் மூலமும் கூடத்தான் எரிச்சலாக வருகிறது... ஒன்றும் செய்வதற்கில்லை... :-( புனைவு எழுதி விட்டு கமென்ட் போடா வேண்டியதுதான்.. :-) :-) ;-)

    ReplyDelete
  27. தானைத் தலைவர் கதையா? தலே, தலே!

    (உங்கள் எழுத்திலிருந்து நிறைய தமிழ்ச்சொற்களைக் கற்றுக்கொள்கிறேன்... அல்லக்கை என்றால் என்ன?)

    ReplyDelete
  28. அப்பாஜிக்கு இந்த தலை தறுதலை தமிழ் தெரியப்படுத்தும் ஆவலில்...

    அல்லக்கையின் அருஞ்சொற்ப்பொருள்:
    1. தலைவர் பின்னாலேயே வால் பிடித்து சுற்றுவது

    2. தலைவர் டீக்கடையை பார்த்தாலே ஓடிப்போய் டீ வாங்கி வந்து ஆற்றி தருவது

    3. தலைவர் இரவு தாக சாந்தி செய்யும்போது சைட் டிஷ் வாங்கி வந்து பிரித்து கொடுத்து... அந்த புட்டி வைத்திருக்கும் டீப்பாய் கீழே உட்கார்ந்து
    துண்டால் முகத்தை மறைத்து திரும்பி குடிப்பது...

    4. தலைவர் வெளியே சுற்றுப்பயணம் மேற்கொண்டால்... "தலைவர் வால்க.." என்று முதல் குரல் கொடுத்து எல்லோரையும் குக்குரலிடச் செய்வது.

    இன்னும் பல விளக்கங்கள் உள்ளது... இனிமேல் இங்கே கொடுத்தால் அது ஒரு பதிவாகவிடும் என்பதால் இத்தோட நிறுத்திக்கிறேன்...

    ReplyDelete
  29. இது முடிவில்லா தொடர்கதை...என்ன சொல்ல..!

    ReplyDelete
  30. //எப்புடின்னு சொல்லணும்... சும்மா :) போட்டா பத்தாது... ;-) ;-) ;-) //

    தலைவர் என்பது இங்கே எங்கள் தலைவர் ஆர்விஎஸ் அவர்களையே குறிக்கும்.

    ஆகவே, 'தலைவர்ன்னா சும்மாவா?' என்பது எங்கள் அண்ணன் அவர்கள் எழுதிய இந்தப் பதிவு, 'அண்ணன் எழுதினால் சும்மாவா' என மாற்றிப் படிக்கவும். :)

    ReplyDelete
  31. top takkara keedhu thaliva

    irundalum yaro sonnaple AUTO vadichinna inna seyradhu?

    konjam bayamathan keedhu

    balu vellore

    ReplyDelete
  32. நல்லா இருக்குங்க கதை....

    ReplyDelete
  33. @ஸ்ரீராம்.
    நாளாக நாளாக கப்படிக்கும் தொடர்கதை.. ;-) ;-) நான் சொல்றது சரிதானே...

    ReplyDelete
  34. @இளங்கோ
    இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளம் பண்ணிட்டாங்கப்பா... ;-) ;-)

    ரசித்தேன் இளங்கோ... ;-)

    ReplyDelete
  35. @balutanjore
    வாங்க பாலு சார்!
    மேலே ஆகாயம் கீழே பூமி.. வரத பாத்துப்போம்.. ஹி ஹி.. ;-) ;-)

    ReplyDelete
  36. @இராமசாமி கண்ணண்
    வாங்க கண்ணன்.. பாராட்டுக்கு நன்றி.. அப்பப்ப எட்டிப் பாருங்க.. ;-);-)

    ReplyDelete
  37. அல்லக்கை விளக்கங்கள் அருமை... துண்டு மறைச்சு தண்ணி போடுவது சரியான நகைச்சுவை

    அல்லக்கைகள் கள்ளக்கைகள்...மந்திரிகளை ஒரு மயக்கத்திலேயே வைத்திருந்து சுருட்டுவதில் சூரர்கள்...

    அப்பாஜிக்கு தெரியாதது ஆச்சர்யம்...

    ReplyDelete
  38. @பத்மநாபன்
    இன்னும் தூங்கலையா.. ;-)

    ReplyDelete
  39. பத்மநாபன்... ஒரு காலத்துல தமிழ்ல நல்ல வீச்சு இருந்திச்சு. (அப்பவே கூட அல்லக்கை சொல் தெரியாதுனு வையங்க.)

    என்னோட தமிழ் துருப்பிடிச்சு ரொம்ப வருசமாச்சுங்க. தமிழ்லயே பேசவும் எழுதவும் முயற்சி பண்ணிட்டு வரேன். துணை ஆள் தான் இல்லே. (நண்பர் அரசன் என்னை பிளாக் எழுதத் தூண்டுனது அதுக்கு தான்.) முன்னேறிக்கிட்டு வருது, இருந்தாலும் அப்பப்போ கியர் மாறிக்கும். தமிழ் அகராதி இல்லாம படிக்கவோ எழுதவோ சிரமப்படுகிறேன் என்பது தான் உண்மை. தமிழில் பேச எழுத வரவில்லைன்னு நினைக்குறப்ப வெட்கமா இருக்கும்.. ஏன் ஒதுங்கினேன்னு ரொம்ப நெனச்சிருக்கேன்.

    ReplyDelete
  40. அப்பாஜி..உங்க தமிழுக்கு துருவா..நிச்சயமா இல்லை..சீ.சி யை எடுத்து எவ்வளவு அழகா எளிமைப்படுத்திருக்கிங்க..உங்க தன்னடக்கத்தை பாராட்டவேண்டும்..

    அல்லக்கை, கில்பான்சி, ஜுஜுபி, சூப்பர் ..போன்ற தமிழின் செம்மொழி சொற்களை விட்டுத்தள்ளுங்கள்..



    இன்னும் தூங்கலையா.. ;-) ஆர்.வி.ஸ்.. திடிர்னு முழிப்பு (ப்ளோக்கோமேனியா )வந்து அமைதியா உட்காந்தேன்...நிங்க போன் அடித்து :)வீட்டை எழுப்பிவிட்டுட்டிங்க.. பாட்டுகேட்டுட்டே தூங்கியாச்சு...

    ReplyDelete
  41. //அல்லக்கை, கில்பான்சி, ஜுஜுபி, சூப்பர் ..போன்ற தமிழின் செம்மொழி சொற்களை விட்டுத்தள்ளுங்கள்..//
    கரெக்ட்டுதான் அப்பாஜி.. இதெல்லாம் என்போன்ற அல்லக்கைகள் உபயோகப்படுத்துவது. பத்துஜி சொல்வது போல சீ.சி யை சீ.சீ என்று நினைத்தவர்கள் எல்லோரையும் ஆஹா ஓஹோ என்று படிக்க வைத்துவிட்டீர்கள். நம்மளோடது கலீஜ் தமிழ். "என்னாபா ஒரே கலீஜா இருகுது..." அந்தத் தமிழ்.. உங்களைத்தான் அமரருள் வைக்கும்...

    ReplyDelete
  42. @பத்மநாபன்
    ஒரு ஆர்வத்துல கூப்பிட்டுட்டேன்... ஸாரி...

    ReplyDelete
  43. அட... ஸாரியெல்லாம் எதுக்கு ஸார்.. கொஞ்ச நேரம் வலை மேஞ்சிருப்பேன் அவ்வளவு தான்....

    ReplyDelete
  44. @அப்பாதுரை
    உங்களோட துருப்பிடிச்ச தமிழே இப்படி இருக்கே... இன்னும் சாணம் தீட்டினால் பளபள தமிழ் எவ்ளோ கூர்மையா இருக்கும். எங்களுக்கு தான் விருந்து..

    ReplyDelete
  45. ஆட்டோ வந்துட்டு இருக்கு :)
    அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் அப்பா !!

    ReplyDelete
  46. இப்பல்லாம் ஸ்கார்ப்பியோ அப்படின்னு பேசிக்கிட்டாங்க டாக்டர்! ;-)

    ReplyDelete