Wednesday, November 24, 2010

தீர்த்தக்கரையினிலே.....

பள்ளி விட்டு நடு ரோடில் சைக்கிளை தாங்கி நின்றுகொண்டு "அடியே... வாடி.. போடி... " என்று இரைந்து பேசி அளவளாவும் பள்ளியில் பயிலும் பெண் பிள்ளைகள் பேச்சே அலாதியானது. போன வாரத்தில் இதை கூர்ந்து கவனித்ததில் மிஸ், பசங்க, சினிமா, வீடு, ஆன்செர் ஷீட் என்று மூச்சுவிடாமல் இருபது நிமிஷம் பேசியிருக்கிறார்கள். அதுபோல இதுவும் ஒரு திண்ணைக் கச்சேரி....

பெண்களுக்கு நாயுடு ஹாலில் வம்பு.
பயபுள்ள சூர்யா சரியான வயமான்பா..
தேறல் குடிச்சா நீ தேறமாட்டே..
சேக்கையில் மன்மத சேர்க்கை
குருவம்மா சரியான கருப்பு குரூஉ


இவைகளைப் பற்றி அறிய எப்பாடுபட்டாவது கீழ்வருவனவற்றை எல்லாம்  படித்துவிட்டு கட்டக்கடைசிக்கு வருக.

**********நோய்நாடி ***********

பல் தேய்த்து, காபி குடித்து, வாக்கிங் போய், குளித்து டிபன் சாப்பிட்டு கச்சேரிக்கு கிளம்பினால் இரவு ஒன்பது மணிக்கு வீடு திரும்பல். இப்படி இந்த நித்யப்படி வாழ்க்கையில் கொஞ்சம் மாற்றம் நிகழ்ந்தால் போச்சு. போன வாரத்தில் முதலில் தொண்டை உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்தது. உப்புத்தாள் வைத்து பரபரவென்று தேய்த்துவிட்டா மாதிரி முதலில் கரகரத்தது. கொஞ்சம் அலட்சியம் செய்ததில் இன்பெக்ஷன் அதிகமாகி நேரே ஜுரத்தில் கொண்டு வந்து இறக்கியது. வாய் பேச முடியாமல் மௌனத்தில் அலைபாயும் மனசு மட்டும் உள்ளுக்குள்ளேயே சத்தமாக பேசினால் எப்படி இருக்கும். பொறுக்க முடியலை. பால்கனியில் தொங்கு சேரில் இரண்டு காலையும் மேலே தூக்கி வைத்து உட்கார்ந்து கொண்டு மோட்டுவளை பார்ப்பது எவ்வளவு பெரிய கொடுமை. மாலை குடும்ப டாக்டரிடம் உடம்பை காண்பிக்க போனால் அவர் மடியில் நாலு பேர் ஏறி உட்கார்ந்திருந்தார்கள். அவ்வளவு கூட்டம். சிரித்துக்கொண்டே ரெண்டு பாரசிடமால் ரெண்டு அண்டிபயாடிக் என்று எழுதிக்கொடுத்து இரத்தின சுருக்கமாக ப்ரிஸ்க்ரிப்ஷனை முடித்துக்கொண்டார். இந்த வாரத்தில் தான் ஒரு கட்டுப்பாட்டுக்கு வந்தது உடம்பு. இன்னமும் தொண்டை கர கர....


************மார்னிங் ராகா ***********
ஷபனா அஸ்மியின் பிரமாதமான நடிப்பு. மஹா கணபதிம்... இந்தப் படத்தில் ஏற்கனவே தாயே யசோதா வெளியிட்டிருந்தேன் என்று நினைக்கிறேன். ஒரு மியூசிகல் ஃபீஸ்ட் இந்தப் படம். இசைப்பிரியர்கள் தவறாமல் பார்க்கவேண்டிய படம்.  இந்தப் பாடலின் கடைசி இருபது வினாடிகள் கட்டாயம் பாருங்கள். சுதா மாமி பாடியிருக்கிறார்.




********* நெடுநல்வாடை**********
இலக்கியத்திற்கும் நமக்கும் எஸ்கலேடர் வைத்தாலும் எட்டாமல் இருந்துவந்தது. சங்க கால இலக்கியங்களை கற்று அறிந்து நாமும் ஒரு தீவிர இலக்கியவாதி ஆக வேண்டும் என்று என்னுள் எழுந்த தமிழ்க் கனல் ஜுரவேகத்தில் பற்றிக்கொண்டு கொழுந்து விட்டு எறிய ஆரம்பித்தது. அதன் முதல் முயற்சியாக வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் இயற்றிய ஆராய்ச்சி உரையுடன் இருந்த நெடுநல்வாடை பற்றி படித்துக்கொண்டிருக்கிறேன். பிரிந்து வருந்தும் தலைவிக்கு நெடிதாகத் தோன்றும் வாடையை கூறுவதால் நெடுநல்வாடை. இதை இயற்றியவர் "நீயே முக்கண் முதல்வனாவும் ஆகுக..." என்று பொற்றாமரைக்குளத்தில் சிவனாரிடம் வம்பு பண்ணிய நக்கீரன். கூதிர்க்க்காலத்தை பற்றிய வர்ணனைகள் மிக்கதாகும் இந்த பத்துப்பாட்டில் உள்ள இத்தொகுப்பு. ஐப்பசி கார்த்திகை மாதங்களை கொண்ட காலம் கூதிர்க்காலம். பதிவின் ஆரம்பத்தில் இருக்கும் அசால்ட் வார்த்தைகளுக்கான பொருள்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வம்பு - கச்சு, வயமான் - சிங்கம் , தேறல் - கள்,  சேக்கை - படுக்கை , குரூஉ - நிறம்

******** தீர்த்தக்கரையினிலே..... ********
ஆற்றங்கரைகளில் தோன்றிய நமது நாகரீகங்கள் மனிதனின் ஒழுங்கான வாழ்வியலுக்கு ஒரு உன்னத ஆரம்பம். கீழே இந்தக் கால்வாய்க் கரையில் இருக்கும்  வீடுகளும், கோயிலும், ஆர்ப்பாட்டமில்லாத அந்த நீர்நிலையும் மனதுக்கு ஒரு ரம்மியமான தோற்றத்தை தருகிறது. பார்க்க பார்க்க கொள்ளை இன்பம். படம் எடுத்த கைகளுக்கு தங்கக் காப்பு செய்து போடவேண்டும்.  கவிதைப் படம் கீழே...

kalvaai nagareegam



****** மன்மதன் அம்பு ************
கமல் கவிதை என்ற தலைப்பில் வெளியான மன்மதன் அம்பு பாடல் ஒன்றை சமீபத்தில் கேட்டேன். கவிதை ஒன்றை கமல் படிக்கிறார். எழுதியது கமல் தான். நல்ல கணவன் வேண்டும் என்று ஒரு பெண் ஸ்தோத்திரம் செய்வது போல எழுதப்பட்ட கவிதை. வழக்கம் போல் தன்னுடைய நோ சாமி கருத்துக்களை கமல் புகுத்தியிருந்தாலும் வார்த்தை பிரயோகங்கள் அமோகம். பாடலில் இரண்டு நிமிடங்களுக்கு பிறகு தன் திருவாயால் கவிதை படிக்கிறார் கமல். கவிதைக் காது இருப்பவர்கள் கொஞ்சம் கேளுங்களேன்.. மூளை மடிப்புகள் அதிகம் இருக்கும் மேதாவிகள் வேண்டும் என்கிறார்.



********** தட்டிக்கொடுத்த பிரதமர் *************
அலை ராசா
அலைக் கற்றை கேசில்
அலையாய் அலைந்தார் போன வாரத்தில்.
நாடாளுமன்றத்தில் முரசொலி மாறன் நினைவு தினத்தில் தி.மு.க கட்சி அலுவலகம் பக்கம் சென்ற பிரதமர் மன்மோகன் ராசா முதுகில் ஆறுதல் தட்டு ஒன்று கொடுத்தாராம். பா.ஜ.க மக்கள் இந்த நிகழ்ச்சியை எடுத்து வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் தையா தக்கா வென்று ஆடோ ஆடென்று ஆடுகிறார்களாம். அலையடிக்குது விவகாரம்.

பின் குறிப்பு பாடல்:
தலைப்பை வைத்துவிட்டு இந்தப் பாடல் போடாவிட்டால் பந்திக்கு இலையை விரித்து பதார்த்தம் பரிமாராதது போல. ஆகையால்..... பாரதியை சொல்வதா... பாடிய எஸ்.பி.பி யை சொல்வதா... இசை அமைத்த எம்.எஸ்.வியை சொல்வதா.. நடித்த கமல், ஸ்ரீதேவியை சொல்வதா... இயக்கிய பாலச்சந்தரை சொல்வதா...



-

39 comments:

  1. கவிதைப்படமும், கமலின் கவிதையும் நன்று..

    ReplyDelete
  2. தீர்த்தக் கரையினிலே
    பார்த்த நிறைவினிலே
    தூங்கப் போறேனே!

    ReplyDelete
  3. உடல் நிலை முற்றிலும் குணமடைந்தது பதிவில் நன்றாக தெரிகிறது ...
    நன்றாக கலந்து கட்டி அடித்து இருக்கிறிர்கள்.
    மஹா கணபதிம் நல்ல ஃபுயுஷன். சொன்ன மாதிரி கடைசி 20 நொடி அவர்களோடு சேர்த்து கப்சிப் ன்னு ரசிக்க வைத்து விட்டது. .
    டாக்டர் மடியில் நாலு பேர் நல்ல நகைச்சுவை ...குடும்ப டாக்டர் என்பதை தப்பாக புரிந்து கொண்டு விளையாட ஆரம்பித்து விடுகிறார்கள்...
    இலக்கிய சேவை புழிந்து நல்ல குருமாவோடு படைக்க வாழ்த்துக்கள்..
    கமல் ... என்னவோ தெரியவில்லை பாரதியை ரொம்ப படிக்க ஆரம்பித்து விட்டார் போலும்... கவி பிரவாகுகிறது ... பெண் குரல் சாமி மாமியின் சொந்த குரலா? தமிழ் தேரும் போல ?

    // பாரதியை சொல்வதா... பாடிய எஸ்.பி.பி யை சொல்வதா... இசை அமைத்த எம்.எஸ்.வியை சொல்வதா.. நடித்த கமல், ஸ்ரீதேவியை சொல்வதா.///
    இதை பின்னுட்டத்தில் நாங்கள் சொல்ல வேண்டியது.....

    ReplyDelete
  4. S.P.ன் குரலில் மயங்கிப் போனேன்.
    அவ்வளவு அந்தக் குரலின் வசீகரம் !

    கமலின் கவிதை....சகலாகலாவல்வன் !

    ReplyDelete
  5. அந்தப் படம் நீங்களா சொன்னது போல் கவிதை தான் அண்ணே!
    கமல் சாங் இன்னும் கேக்கல.. கேக்கணும்..

    அப்பப்போ "நெடுநல் வாடை"க் காத்த இந்தப் பக்கமும் திருப்பி விடுங்க :))

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. அப்பப்பா, என்னவொரு பாடல் - “தீர்த்தக்கரையினிலே.....” அற்புதம். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. //******** தீர்த்தக்கரையினிலே..... //

    என்னதான் நீங்க போட்டோ போட்டாலும் மனசில
    'ஹரித்ராநதிக் கரை' தான் வருது

    ReplyDelete
  9. dear rvs

    enna sir dideernu NEDUNAAL VADAI

    pathi ellam ezhudarele.

    engeyo poytel pongo

    nandraga irundathu

    belu vellore

    ReplyDelete
  10. //பாரதியை சொல்வதா... பாடிய எஸ்.பி.பி யை சொல்வதா... இசை அமைத்த எம்.எஸ்.வியை சொல்வதா.. நடித்த கமல், ஸ்ரீதேவியை சொல்வதா... இயக்கிய பாலச்சந்தரை சொல்வதா...//

    Extra.: இதை எங்களுடன் பகிர்ந்த தங்களைச் சொல்வதா...

    Very nice :)

    ReplyDelete
  11. நல்லாத்தான் கவிதை சொல்லியிருக்கார் கமல்.

    ReplyDelete
  12. அனைத்துமே அருமை.

    ReplyDelete
  13. @அமுதா கிருஷ்ணா
    ரசித்தமைக்கு நன்றி ;-)

    ReplyDelete
  14. @மோகன்ஜி
    அதையே கவிதைபோலா.. ம்.. கவிதைக்காரர் நீங்கள்.. ;-)

    ReplyDelete
  15. @பத்மநாபன்
    ஆமாண்னே!!! கரெக்ட்ட கண்டுபிடிச்சுடீங்க. நன்றி.. இந்த தீர்த்தக் கரையினிலே பாட்டு எந்த வாத்தியமும் இல்லாமல் குரலையும் மெட்டையும் நம்பியே போடப்பட்டது. என்னா சூப்பர். எஸ்.பி.பி குழைய வேண்டிய இடத்தில் குழைந்து... அடாடா... அம்சம் போங்க..

    ReplyDelete
  16. @ஹேமா
    ஆமாம் ஹேமா.. உன்னத கலைஞர்களின் உன்னத படைப்பு.. ;-)

    ReplyDelete
  17. @Balaji saravana
    வாடைக் காற்று இனிமேல் அப்போப்போ வீசும் தம்பி ;-)

    ReplyDelete
  18. @KANA VARO
    நன்றி ;-)

    ReplyDelete
  19. @வெங்கட் நாகராஜ்
    நன்றி.. ;-)

    ReplyDelete
  20. @Madhavan Srinivasagopalan
    நெசம்தான் மாதவா.. ;-)

    ReplyDelete
  21. @balutanjore

    Thank You !!! ;-)

    ReplyDelete
  22. @இளங்கோ

    Thank you for enjoying ;-)

    ReplyDelete
  23. @ஸ்ரீராம்.
    நிஜமாவே ஒரு நல்ல கவிதை அது.. இருந்தாலும் மனிதர் ஆங்காங்கே அவரது நோ சாமி கருத்துக்களை திணிக்க மறப்பதில்லை.. ;-)

    ReplyDelete
  24. @கோவை2தில்லி
    நன்றிங்க.. ;-)

    ReplyDelete
  25. @எஸ்.கே
    நன்றி ;-)

    ReplyDelete
  26. அந்த புகைப்படம் கொள்ளை அழகு.

    ReplyDelete
  27. Very nice flow.Good article

    ReplyDelete
  28. @சைவகொத்துப்பரோட்டா
    ஆமாம். பார்த்தவுடன் என்னை கொள்ளைகொண்டு போனது. ;-)

    ReplyDelete
  29. @LK
    எனக்கும் தான் எல்.கே. ;-)

    ReplyDelete
  30. Oru velai, nakkeranaarai ippo kettal -

    Q - pirikka mudiayathathu ennavo?

    A - pengalum vambum.

    Eppadi?

    Raghu

    ReplyDelete
  31. உடல் நலம் இப்போது தேவலையா?

    பதிவில் முழு வீச்சு தெரிகிறது...

    கமல் கவிதையில் “அம்மண துறவிகள் கூடிட கண்டேன்”... எங்கே பார்த்தாராம்..??

    ReplyDelete
  32. @R.Gopi
    உடம்பு நலமாக உள்ளது. நன்றி ;-)
    நாத்திக சுழலில் மாட்டிக்கொண்டவர் அவர்!!! ஒன்றும் செய்வதற்கில்லை.. ;-)

    ReplyDelete
  33. நெடுநல்வாடையை நீங்க படிங்க
    நெடுநாள்வாடையை நான் புடிக்கிறேன்.

    ReplyDelete
  34. பதினஞ்சு வருசத்துக்கு முன்னால 'தமிழ் இலக்கியமா, வேறே வேலை இல்லை?'னு நெனச்சிட்டிருந்தேன். இப்ப ரெண்டு மூணு வருசமா திடீர்னு தமிழ்ப் புத்தகமா படிக்கத் தோணுது. மாற்றமா ஏமாற்றமா புரியவில்லை.

    ReplyDelete
  35. @அப்பாதுரை
    கொஞ்சம் கடமுடான்னுதான் இருக்கு. இருந்தாலும் கஷ்டப்பட்டு படிக்கறேன். வேறு யாராவது நல்ல உரைநடைத் தமிழில் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை அப்பாஜி! ;-)

    ReplyDelete