Thursday, December 2, 2010

மழை செய்யும் கோளாறு

நேற்று ராத்திரியில் இருந்து சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்க்கிறது மழை. காலன் காலனாக கொள்ளளவு கொண்ட தண்ணீர் மேகங்கள் போலிருக்கிறது. மழையை பேய் மழைன்னு சொன்னால் எனக்கு பிடிக்காது. ஏனென்றால் இந்தப் புண்ணிய பூமியில் ஏகப்பட்ட அழகான பெண்கள். அவர்களைப் பார்த்தால் பேயும் இறங்கும், மழை விடறதா என்ன? கன மழை என்று சொல்வது கூட கொஞ்சம் பிடிக்கும். வானம் அழுது பூமி சிரிக்கிறது என்ற சொலவடை மாறி இப்போது வானம் அழுதால் பூமியும் சேர்ந்து அழுகிறது. அதுவும் குளம் குளமாக, குட்டை குட்டையாக சென்னை மாநகரின் வீதிகளில். டிரஸ் போட்ட ரோடு, போடாத ரோடு என்று அந்தஸ்த்து வித்தியாசம் இல்லாமல் எல்லா ரோடுகளுக்கும் சம நீதி. டிரஸ் போட்ட ரோடு தார் ரோடு என்றும் போடாதது தன் வாழ்க்கையில் தாரே காணாத மண் ரோடு எனவும் வகைப்படுத்தி ஒரு PWD அன்பர் எனக்கு இந்த ரோடுகள் பற்றி நெடுநாள் முன்பு ஞான தீட்சை அளித்தார். குண்டு குழிகளால் நிரம்பிய ரோடுகளில் மழைத் தண்ணீர் அவைகளின் கண்ணீர் போல தேங்கி வண்டி விடுபவர்களுக்கு கட்டை விரலை நிமிர்த்தி காண்பித்து "முடிந்தால் என்னைத் தாண்டி போ பார்ப்போம்!!" என்று சவால் விட்டுக்காண்பிக்கறது. மாதம் மும்மாரி பொழிந்தால் தான் விளை நிலங்கள் செழித்து வாழ்க்கை மேன்மை அடையும் என்ற நிலைமை மாறி இப்போது வருடம் மும்மாரி வானத்தை கிழித்திக்கொண்டு கொட்டி தீர்த்துவிடுகிறது. ஊருக்கு ஊர் ஊரையே தெப்பம் விட்டு காண்பிக்கிறது.

mazhai
இப்படி மழை பொழியும் காலங்களில் அசட்டுத்தனமான ஓரிரு டெம்ப்ளேட் ஜோக்குகள் மக்கள் வாய்விட்டு சிரிப்பதற்காக சிலர் கைவசம் வைத்திருப்பார்கள். "என்னடா.. இப்படி பெயுதேன்னு நினைச்சேன். உங்கூருக்கு நான் வந்துருக்கேன்ல..." என்றும் தங்கள் ஊரை சென்று பத்திரமாக அடைந்த பின்னர் போன் போட்டு "என்ன அங்கே இப்ப மழ இருக்காதே.. ஏன்னா நான் தான் இங்க வந்துட்டேனே. இங்க பிச்சுக்கிட்டு ஊத்துது.." என்றும் அள்ளி விடுவார்கள். "ஞே" என்று விழித்து அசட்டு சிரிப்பு சிரித்து வைக்க வேண்டும். எல்லாம் இந்த தாடிக்காரரை சொல்லணும். "நல்லோர் ஒருவர் உளரே..." என்று ஆரம்பித்து எதையாவது சொல்லிவைக்க குரல் இல்லாதவர்கள் கூட அந்தக் குறளை கையில் எடுத்துக்கொண்டு சாலமன் பாப்பையா சன் டி.வி.யில் விளக்கம் சொல்றா மாதிரி விளக்கி படுத்துகிறார்கள்.

சிறுவயதில் இருந்து இன்று வரை ரேடியோ பொட்டியிலோ அல்லது இப்போதைய லேடஸ்ட் டிரன்ட் ஆக சாட்டிலைட் டி.வி.யில் வானிலை ரமணன் "சென்னைக்கு தென் கிழக்கே 500  கிலோ மீட்டர் தூரத்தில்..." என்று லைலா பற்றி வர்ணிக்கும் கால கட்டம் வரை வானம் என்றுமே பள்ளிச் சிறுவர்களுக்கு பொய்த்ததே இல்லை. "இயற்கையாகிய என்னை மனிதா நீ கருவி கொண்டு கணிக்கிராறாயா.. இந்தா பிடி உன் வாயில் மழை..... " என்று கருவிக்கொண்டு மழை மேகத்தை எல்லாம் பத்திரமாக கூட்டிக்கொண்டு நாடு தாண்டி கண்டம் தாண்டி போய் அமெரிக்காவில் கத்தரீனா என்று அவர்கள் நாட்டு பெயர் வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் வாரி சுருட்டி எடுத்துக்கொண்டு போய்விடுகிறது. இங்கே வெய்யில் கொளுத்தும். காலை பத்து மணிக்கெல்லாம் பந்தும் பேட்டும் கையுமாக டீம் பிரித்து நடு ரோடில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். என்ன மாயமோ தெரியவில்லை ரமணன் சொன்னால் வானம் கரேர்ன்னு இருந்தா கூட குழந்தைகளின் உள்ளம் போல பால் வெள்ளையாக மாறிவிடுகிறது.

அடுத்து கவனிக்கப் பட வேண்டியவர்கள் வேலைக்கு செல்லும் பிரகஸ்பதிகள். அடை மழையோ, புயலோ, சூறாவளிக் காற்றோ எதாகிலும், வானமே இறங்கி பூமிக்கு வந்தாலும் விண்வெளி வீரர் கணக்காக "மழை டிரஸ்" போட்டுக்கொண்டு ராக்கெட் விடும் நேரம் போல 8:30 மணிக்கு டான்னு வெளியே வந்துவிடுவார்கள். கொஞ்சூண்டு எங்காவது நீல வானம் தெரிந்தால் அவர்கள் தங்கள் இஷ்ட தெய்வத்திடம் வேண்டிக்கொண்டு ஆபிஸ் சென்று சேரும் வரை மழை பொய்க்க வேண்டும் என்று ரெயின் கோட் போடாமல் சுருட்டி பெட்டியில் வைத்துக்கொண்டு வீதியில் செல்வார்கள். இங்கே தான் இவர்களுக்கு ஒரு பெரிய ரிஸ்க் இருக்கிறது. ஏற்கனவே இன்று பெய்த மழையில் ரோடுகளில் தேங்கிய தண்ணீர் மீது சிலர் ஒரு துளிக் கூட கவலை இல்லாமல் ரெண்டு காலையும் தூக்கி சிறுவர்கள் "ஹே...." என்று கூச்சல் போட்டு தண்ணீரில் சைக்கிள் விடுவது போல வண்டி விடுவார்கள். வீட்டில் இருந்து வேண்டிக்கொண்டு களமிறங்கிய நம்மாள் மேலே அந்த சிறு குட்டையின் மொத்த தண்ணீரையும் வாரி அடித்து விடுவார்கள். மீண்டும் வீட்டுக்கு வந்து சட்டை மாற்றி, தங்கமணியிடம் திட்டு வாங்கிக்கொண்டு, ஆபிசுக்கு லேட்டாக போய் சொகுசு கார் வைத்திருக்கும் மேனஜரிடம் "உங்களுக்கெல்லாம் டைம் சென்சே இல்லை. மழை பேஞ்சா அரை மணி முன்னாடி கிளம்ப மாட்டீங்க" என்று அறிவுரை கலந்த ஹை கிரேட் திட்டு வாங்கிக்கொண்டு சீட்டில் போய் உட்காருவார்கள். உயர்ரக காருள்ள ஒரு டை கட்டிய ஆசாமி ரோடோரமாகவே சென்று அக்கரையேறிவிடலாம் என்ற நப்பாசையில் வண்டி விட்டு அரை வண்டி ஒரு யானை பிடிக்கும் பள்ளத்திலும் அரை வண்டி ரோடிலும் நிறுத்திவிட்டு எடுக்கமுடியாமல் கிரிடிகல் நிலைமையில் இருக்கும் பேஷன்ட் இல்லத்தோர் ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணிவிட்டு ஏதாவது அவசர உதவி கிடைக்குமா என்று காத்திருப்போர் போல வழிமேல் விழிவைத்து தூரக்க பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார்.

ரயில்வே பாலங்களின் கீழே இருக்கும் பாதைகளில் தண்ணீர் தேங்கி "தற்கொலை செய்து கொள்ள வா..வா.. " என்றழைத்தாலும் தெகிரியமாக TVS 50 வண்டியை கொண்டு போய் விடுவார்கள். மோகன் நடித்த திரைப்படத்தில் புதை மணலில் மறையும் அமலா போல வண்டியோடு சேர்ந்து முழுகும் வரை வண்டியை விட்டுவிட்டு தொபீர் என்று வண்டியில் இருந்து குதித்து தள்ளிக்கொண்டே கரை ஏறுவார்கள். இது போன்ற மழைக் காலங்களில் மொபைல் மெக்கானிக்குகள் இந்தப் பாலங்கள் ஓரத்தில் கடை விரித்துவிடுவார்கள். கார்பரேட்டரில் புகுந்த தண்ணியை வடித்து ஸ்பார்க் ப்ளக்கை துடைத்து போடுவதற்கு நூறு ரூபாய் கறந்துவிடுவார்கள். நேற்று தான் ஒரு நூறு ரூபாய் தண்டம் அழுதிருந்தாலும் மீண்டும் அதே தவறை மறுநாளும் அதே மாதிரி... அதே நூறு ரூபாய்.

வெல்ல சர்க்கரை கட்டியாய் தார் போல குழைத்து போட்ட ரோடுகள் ஒரு மழையில் கருங்கல் காட்டி பல்லிளிக்கின்றன. ஒவ்வொரு சிக்னல் தாண்டியும் பள்ளத்தில் விழுந்து எங்காவது பாதாள லோகத்திற்கு டிக்கெட் எடுத்து விடப் போகிறோம் என்று எல்லோரும் சர்வ ஜாக்கிரதையாக பயணிப்பதில் ஐந்து கிலோமீட்டருக்கு ஐம்பது நிமிடங்கள் எடுத்தது. கால் கடுக்க கிளட்சை மிதித்து இடது கால் ரத்தம் கட்டிக்கொண்டு விட்டது. முன்பெல்லாம் இது போல் மழை விட்டவுடன் மராமத்து பணிகள் செய்வார்கள். எங்கிருந்தோ ரப்பிஷ் கொண்டு வந்து வண்டிவண்டியாக அடித்து பள்ளத்தை மேடு பண்ணி அப்புறம் சிகரம் ஆக்கி ரெண்டு மூனு பேர் விழுந்து வாரி போகும்படியாக செய்வார்கள். இப்போது இது போன்ற பணிகளும் இல்லாமல் பள்ளம் மேட்டில் வண்டியை விட்டு இடுப்பு வலி கண்டுவிட்டது. யாரவது கர்ப்பஸ்திரி போனால் பிரசவம் நிச்சயம் இலவசம். சோலைக்கு பதிலாக சாலைன்னு பேர் சூட்டி மகிழலாம்.

பின் குறிப்பு பாடல்: நன்றாக நீல வான பின்னணியில் வானில் இருந்து விழுந்து புரண்டு கமல் ஸ்ரீதேவி பாடும் "மழைக்கால மேகம் ஒன்று" பாடல் மழை என்று வந்ததால் இங்கே. கனகை அமரன் இசையில் பாடும் நிலா பாலு மற்றும் வாணி ஜெயராம் பாடியது.  வாணியின் குரலில் ஒரு தனி கிக் உள்ளது. வாணியின் பாடல்களை தொகுத்து ஒரு பதிவு போடணும். இதை நோக்கும் தங்கமணிகளும், ரங்கமணிகளும் தங்களை கமல் ஸ்ரீதேவியாக பாவித்து கனவுலகில் சஞ்சாரித்து கண்டுகளித்து என்சாய் பண்ணவும்.


பட குறிப்பு: கங்கை போல தண்ணீர் புகுந்த இந்தத் கங்கை தெரு வில்லிவாக்கத்தில் உள்ளது. எடுத்த ஆண்டு 2008. எடுத்தவர் முகவரி கீழே.

பட உதவி: http://www.flickr.com/photos/keerthi/3062109629/

-

24 comments:

  1. மழை பெய்தாலும் கஷ்டம்தான், பொய்த்தாலும் கஷ்டம்தான்.. பாடல் அளித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  2. @வெங்கட் நாகராஜ்
    நன்றி ;-)

    ReplyDelete
  3. மழைக்கேற்ற பதிவு. பாடலும் தான்.

    ReplyDelete
  4. மழை வரவேண்டும்...ஆனா ரோட்டை இப்படி அனாதையா விட்ரக்கூடாது...

    ரோட்டவஸ்தை தாங்கமுடியாம தான் ஊர் தள்ளி ரோட்டோரமா ஜாகையை மாத்திக்கிட்டேன்..

    நம்ம ஆஸ்தான ஜோடிப்பாட்டு பார்த்ததனால .. வண்டிய விட்டுட்டு ஒரு கீமி லொங்கு லொங்கு..ஆனா ஜோடியின் பசுமை வெய்யிலிலும் குளிர்ச்சி...

    ( விட்ஜெட் போட்டாச்சு..வந்து ரிப்பன் வெட்டுங்க )

    ReplyDelete
  5. @பத்மநாபன்
    மொதோ வெட்டு என்னோடதுதான். ஓபன் பண்ணியாச்சு. இனிமே கில்லியா பதிவு போடணும். ஓகே வா.. ;-) மூன்றாம்சுழியில் இன்னும் ரெண்டு சுழி சுத்தியிருக்கேன். எட்டிப் பாருங்கள் பத்துஜி ;-)

    ReplyDelete
  6. @கோவை2தில்லி
    நன்றி.. எனக்கு ரொம்பவும் புடிச்ச பேர் அது. ;-)

    ReplyDelete
  7. @Madhavan Srinivasagopalan
    படிச்சேன். உன் அமர்க்களம் தாங்க முடியலை. ;-)

    ReplyDelete
  8. //யாரவது கர்ப்பஸ்திரி போனால் பிரசவம் நிச்சயம் இலவசம். சோலைக்கு பதிலாக சாலைன்னு பேர் சூட்டி மகிழலாம்.//

    Hahahha :)

    ReplyDelete
  9. கமலும் ஸ்ரீதேவியும் எவர் கிரீன் ஜோடி! நல்ல பதிவு!

    ReplyDelete
  10. மிகவும் ரசித்தேன்
    >>>பள்ளத்தில் விழுந்து எங்காவது பாதாள லோகத்திற்கு டிக்கெட் எடுத்து விட
    >>>கங்கா தெரு புகைப்படம்

    பேய் என்றாலே பெண்கள் நினைவு வருதா உங்களுக்கு? எனக்கென்னவோ இது சரியாத் தோணலிங்களே?

    ReplyDelete
  11. dear rvs

    subway ulle tvs ottuvadhai

    azhagai solliyirukkireergal.

    enna seyya innum konja naldhan mazhai

    balu vellore

    ReplyDelete
  12. மழைக்கால சென்னை ஒரு தனி ரகம்.
    வள்ளுவரிலிருந்து,ரமணன்வரை கலாய்த்து கபடி ஆடி இருக்கீங்க ஆர்.வீ.எஸ்.
    இன்னிக்கு "வீட்டைத் துறந்தேன்"ன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன் பாருங்க!

    ReplyDelete
  13. "சாலையோரம் சோலை ஒன்று"ன்னு பாடினது போயி "சாலை எங்கும் குளம் ஒன்று"ன்னு தான் இனிமே பாடனும் ;)

    ReplyDelete
  14. Andha dhadi vaicha periyavar sonna kuRaL... nammoda vasadhikku ippadiyum solvathundu -

    nallar oruval uLarel (uLarinaal) avar poruttu peyyane peyyum mazhai.

    Ithu, naam kadai pidikkum vazhi - eppodavathu nammai parthu yaravathu ' ularatheenga' enru sollumpodhellam.

    Atahnal epothellam mazhai peydhal, 'raghu' ethavathu thathu pithunu solliyiruppan enbargal nam veettil.

    Raghu

    Ippothellam bangaloril ammathiri peyvathillai - naan maritteno?

    ReplyDelete
  15. @சிவா என்கிற சிவராம்குமார்
    மிகவும் கவர்ச்சியான ஜோடி! ;-)

    ReplyDelete
  16. @அப்பாதுரை
    "பெண்ணும் பேயும்" ரொம்ப நாளா பெரியவங்க சொன்ன திருவாசகம் அது. அதான் நான் ரிபீட் பண்ணினேன். அது என்னோட வார்த்தை இல்லை. (எப்படி ஜகா வாங்கினேன் பார்த்தீங்களா.. ;-) நாங்கெல்லாம் ஆட்டோவுக்கே கட் கொடுக்கற ஆளுங்க.. சரியா... )

    ReplyDelete
  17. @balutanjore

    ஒரே கூத்துதான். ;-)

    ReplyDelete
  18. @மோகன்ஜி
    அரண்டு போனேன். இன்னும் கதையில் இருந்து வெளியே வரவில்லை. ;-)

    ReplyDelete
  19. @Balaji saravana
    சரியாச் சொன்னீங்க தம்பி ;-)

    ReplyDelete
  20. உங்களை நம்பி வசனம் பேசினா என்னாயிடுச்சு பாருங்க.. 'நான் வேணா ஸ்ரீதேவி மாதிரி, ஸ்ரீதேவி என்ன அவளை விட பெடரா நெனச்சுக்கலாம் - உன் மூஞ்சிக்கு உன்னை எப்படி கமலகாசனா நெனச்சு பாட்டு பாடுறது?'னு பதில் வந்துடுச்சுங்க.

    ReplyDelete
  21. @அப்பாதுரை
    அச்சச்சோ.. கதை அப்படி ஆயிடுச்சா.. கமலகாசன் அப்படின்னு சொல்லியிருக்ககூடாது... கமலஹாசன் அப்படின்னு சொல்லுங்க... ரெஸ்பான்ஸ் கிடைக்கலாம். ;-)

    ReplyDelete
  22. @Raghu
    உளறுவதைப் பற்றியும் வள்ளுவன் இப்படி சொல்லியிருப்பது அண்ணா நீங்கள் சொல்லித் தான் தெரியுது... ;-) கொஞ்சம் தமிழ்ல போடறத்துக்கு முயற்சி பண்ணுங்களேன். கும்மியை இன்னும் ஈசியாக படிக்க முடியும். நன்றி. ;-)

    ReplyDelete