மார்கழியில் வரும் மற்றுமொரு மஹா உற்சவம் திருவாதிரை. திருவாதிரை சிவபெருமானின் நட்சத்திரம். திருவாதிரை என்ற உடன் சிவபெருமான் மனதுக்கு வருகிறாரோ இல்லையோ நிச்சயம் நாவிற்கு தின்ற களி நினைவுக்கு வந்துவிடும். மீண்டும் ஒரு திருவிளையாடல் எடுத்தால் "பிரிக்க முடியாதது என்னவோ?" என்ற தருமி கேள்விக்கு அந்த ஆலவாயன் "களியும் கூட்டும்" என்று நடிகர் திலகம் சிவாஜி ஸ்டைலில் பதில் சொல்வது போல காட்சி அமைக்கலாம். ஐந்து, ஏழு என்று ஒத்தைப்படையில் காய்கறிகள் நறுக்கிப் போட்டு மணமாக செய்வது கூட்டு. தினமும் செய்யும் சாம்பாரை தண்ணீர் கொஞ்சம் குறைத்து கெட்டியாக செய்தால் அதுதான் களிக் கூட்டு. சாம்பாரை நீர்க்க வைத்தால் அது ரசமா என்றெல்லாம் எதிர் கேள்வி கேட்கக் கூடாது. எங்கள் வீட்டில் அது எப்போதும் சாம்பாராகவே பரிமாறப்படும். பொருளின் வடிவம் முக்கியமில்லை, தன்மை தான் முக்கியம் என்று பெரியமனது பண்ணி உள்ளே தள்ளிவிடுவோம். களி செய்வது ஒன்றும் பெரிய பிரமாதம் இல்லை. அரிசியை கொஞ்சம் வறுத்து பின்பு அதை உடைத்து வெல்லம் இட்டு பொங்கல் போல் செய்து நெய் முந்திரி பருப்பு ஏலக்காய் தூவி அடுப்பிலிருந்து இறக்கினால்... நிறுத்துப்பா.. நிறுத்துப்பா... உன் அடாவடி தாங்க முடியலை. "நாக்குக்கு மோட்சத்தில்" சமையர்க்கட்டுக்குச் சென்று ஒரு சுடு தண்ணீர் கூட வைக்கத் தெரியாதுன்னு சொல்லிட்டு வலையுலக மரகதக் கிச்சன் குவீன் புவனேஸ்வரி மேடம் இருக்கும்போது நீ எங்களுக்குக் களி பண்ண சொல்லித் தரியா என்று மக்கள் ஆர்ப்பாட்டம் ரோட் ரோக்கோ என்று போராட்டம் செய்வதற்கு முன் நான் இந்த மேட்டரில் இருந்து ஜகா வாங்கிக் கொள்கிறேன்.
திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற தலமான பாமணி எங்கள் வீட்டுக்கு பின்னால் பாமணியாற்றைக் கடந்து சென்றால் இருக்கும் ஒரு தேவாரத் திருத்தலம். ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜர் பல்லக்கில் புறப்பாடு செய்யப்பட்டு வெகு விமரிசையாக திருவாதிரை கொண்டாடப்படும். பல்லக்கில் நடராஜாவை அலங்காரமாக வைத்து திருச்சபை நடனம் ஆடிக்கொண்டே திருச்சுற்று வருவார்கள். காணக் கண்கோடி வேண்டும். திருவாதிரை முதல் நாள் அபிஷேகப்பிரியனை அந்த சபாபதியை வெகுவாக கவனித்து மறுநாள் அர்ச்சனை ஆராதனை என்று தடபுடலாக பிரார்த்தனைகள் நடக்கும். இந்தத் திருவாதிரை நன்னாளில் ராமநாதபுரம் அருகில் உள்ள உத்தரகோசமங்கை மரகதக் கல் நடராஜர் கண் முன் வருகிறார். அதி அற்புதமான மூர்த்தம். திருவாலங்காடு ஊர்த்துவ தாண்டவ நடராஜரும் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒரு மூர்த்தி.
சிதம்பரத்தில் பொற்சபையில் அம்பலவாணன் ஆடியது ஆனந்த நடனம். பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் என்ற முனிவர்களின் கடும் தவத்தின் பயனால் அவர்களுக்கு இந்த நடனம் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அந்தத் திருநடனமும் இந்த திருவாதிரை நட்சத்திரத்தில் நடந்தது தான். நித்யஸ்ரீ காதில் ஜிமிக்கி ஆனந்த நடனம் ஆட பாடும் பாட்டு...
தா தை என்றாடுவார்... அவர் தத்தித்தை என்றாடுவார்....
சுதா மாமியும் ஜிமிக்கி ஆடி அதிர பாடிய... போ சம்போ சிவ சம்போ... கங்காதர சங்கரா.. கருணாகரா.... நிர்குண பரப்ரும்ம ஸ்வரூப....
இத் திருவாதிரை நல்லாளில் சிவபெருமானை துதித்து சகலரும் சகல நன்மைகளும் பெற்று நல்வாழ்வு வாழ என் உள்ளங் கவர் கள்வன் அந்த ஈசனை வேண்டி வணங்குகிறேன்.
நமப் பார்வதி பதயே... ஹர ஹர மஹாதேவா...
பட உதவி: http://poetrypoem.com/cgi-bin/index.pl?poemnumber=1036522&sitename=viswabrahma&displaypoem=t&item=poetry
-
பாமணி ஒரு முறை போக வேண்டும்.
ReplyDelete@ஆர்வீஎஸ்
ReplyDeleteமரகத நடராஜரின் மேனியை திருவாதிரை அன்று மட்டுமே காண இயலும். மற்ற நாட்களில் காண இயலாது. போ சிவ சம்போ பாடல் மகாராஜபுரம் அவர்களின் வெண்கலக் குரலில் கேட்க வேண்டும். அட்டகாசமாக இருக்கும் ..
நமப் பார்வதி பதயே... ஹர ஹர மஹாதேவா..
தென்னாடுடைய சிவனே போற்றி ! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
திருவாதுரை அதுவுமா காலங்காத்தால உங்க ப்ளாக்ல நடராஜர் தரிசனம்! நல்லா இருக்கு. நித்யஸ்ரீ பாட்டு ஜோர். 'சம்போ சிவா சம்போ' இந்த பாட்டு மகாராஜபுரம் பாடினதை கேட்ட பிறகு வேற யாருதும் அந்த அளவு எடுபடலை அப்படிங்கறது என்னோட தாழ்மையான கருத்து. அதே சமயம் 'பிரம்மம் ஒக்கடே' சுதா பாடினதை ரசிச்ச அளவு வேற யார் பாடினதயுமே நான் அந்த அளவு ரசிச்சதில்லை.
ReplyDeleteஎனக்கு திருவாதுரை என்றாலே எங்க அம்மா வெண்கல உருளில பண்ற களி கூட்டுதான் சட்டுன்னு ஞாபகம் வரும். நாவிருக்கு உணவில்லாதபோது தான் சிறிது செவிக்கு ஈயப்படும். :) பதிவு சுவாரசியாமா இருந்துது.
விவரங்கள் அருமை. உங்கள் வீட்டுக்குப் பின்னால் கோவிலா..தனிப் பதிவு புகைப் படங்களுடன் போடலாமே... களி சுவையா கூட்டுச் சுவையா...கூட்டுச் சேர்ந்தால்தான் சுவை..!
ReplyDeleteஆஹா திருவாதிரை களியும் நெய் அப்பமும் நினைவில வந்துடுச்சே அண்ணே!
ReplyDeleteஎன்னை மாதிரி அயல்தேசத்தில இருக்கிறவங்கள பேரு மூச்சு விட வச்சுட்டீங்களே ;)
திருவாதிரை நன்னாளில் படிக்க மகிழ்ச்சியான செய்திகள். களியுடன், கூட்டும், அடையும் காலையில் இருந்தே கிச்சன் அமர்களப்படும்.
ReplyDeleteமார்கழி குளிரும், ஆண்டாள், மாணிக்கவாசகர் பாசுரங்களும், ஏகாதிசியும்,திருவாதிரையும்,வரும் தை பொங்கலுக்கு கட்டியம் கூறும்.
பகிர்ந்தமைக்கு நன்றி.
yenga uur pakkam yellam intha side dishai"Thaalakam"nu solluvaa.
ReplyDeletePoo sambo! songukku Maharajapuramthaan kinguu.(oru vellai avar jimikki pottukkalainu RVS anna miss panni irukkalaam)..:PP
//எங்கள் வீட்டில் அது எப்போதும் சாம்பாராகவே பரிமாறப்படும். பொருளின் வடிவம் முக்கியமில்லை, தன்மை தான் முக்கியம் என்று பெரியமனது பண்ணி உள்ளே தள்ளிவிடுவோம்.// ohoo, athaavathu neenga yenna solla varelnaa, ......(vendam public watching, namba kacheriyai thaniyaa vechukkalam)..:)
களியும் கூட்டும் சாப்பிட்டாச்சு.
ReplyDeleteநித்யஸ்ரீ பாட்டு அருமை...
மரகதக் கிச்சன் குவீன் - திருவாதிரை அன்னிக்கி இப்படி ஒரு பட்டமா. ரியல் கிச்சன் குவீன்ஸ் எல்லாம் சிரிக்கப் போறாங்க. மேடம்-லாம் எதுக்குங்க ஆர்.வி.எஸ். இன்னக்கி பாமணிய ஞாபகப்படுத்தினதுக்கும, வலைப்பூ அறிமுகத்துக்கும் மிக்க நன்றி. நித்யஸ்ரீ பாடல் அருமை.
ReplyDeleteதிருவாதிரை அன்று அந்த நாளுக்கு உண்டான செய்திகளை பகிந்தமைக்கு நன்றி. எங்கள் வீட்டில் வெங்கல உருளியில் களியும், ஏழுகறி கூட்டும் செய்து நைவேத்தியம் செய்தாச்சு. போ….சம்போ சுதா ரகுநாதன் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
ReplyDeleteதிருவாதிரை அன்று நடராஜனின் ஆனந்த நடன தரிசனம் – கூடவே நித்யஸ்ரீ மற்றும் சுதா ரகுநாதனின் ஜிமிக்கி நடன தரிசனம் [அடடா பாட்டுன்னு சொல்ல வந்தேன், உங்களால ஜிமிக்கி நடனம்னு சொல்லிட்டேனே, சரி பரவாயில்லை] உங்க புண்ணியத்தில். பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteதென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.
களி & தாளகம் - பிராமண போஜனப்ரியா என்பது அறவே உண்மை.
ReplyDeleteதொகுரும் சுகரில் கொழுப்பும் சேர்ந்து எகுறுவதால் சிவனுக்கு நிவைத்தியம் என்று பாவ்லா காட்டிவிட்டு மக்கள் சுவாக செய்வதுபோல் இப்போது எல்லாம் யாராவது இப்படி எழுதிதால் இது இருக்கு என்பதே எனக்கு தெரியும் !
நமப் பார்வதி பதயே... ஹர ஹர மஹாதேவா...
ReplyDeleteநாங்களும் கலந்துக்கிட்டோம் :)
http://www.youtube.com/watch?v=nK0ASl2W8tE&feature=related
ReplyDeleteநித்யஸ்ரீ பாடியது
/களி & தாளகம் - பிராமண போஜனப்ரியா என்பது அறவே உண்மை.//
ReplyDelete100% உண்மை
@Gopi Ramamoorthy
ReplyDeleteநிச்சயமா.. அந்தப் பக்கம் வரும்போது சொல்லுங்க.. ;-)
@எல் கே
ReplyDeleteஆமாம் எல்.கே. மகாராஜாபுரம் இதுல கிங்கு.. வித்தியாசமா இருக்கட்டுமேன்னு சுதா போட்டேன். சஞ்சய் தேடினேன் கிடைக்கலை. நன்றி ;-)
@meenakshi
ReplyDeleteநன்றி மீனாக்ஷி மேடம்!!
திருவாதிரை களிக் கூட்டுடன் அற்புதமாக சென்றது. கருத்துக்கு நன்றி. ;-)
@ஸ்ரீராம்.
ReplyDeleteமன்னையில் எங்கள் வீட்டிற்கு பின்னால் ஆறு தாண்டி அக்கரையில் பாமணி. பிரத்த்யேக போட்டோக்கள் எடுத்து பகிர்கிறேன். பாராட்டுக்கு நன்றி ஸ்ரீராம். ;-)
நித்யா அக்கா பாட்டை போட எதாவது சின்ன வாய்ப்பு கிடைச்சா போதுமே.. நிங்களும் போடாம விடமாட்டிங்க , நாங்களும் ரசிக்காம விடமாட்டோம்.
ReplyDeleteதிருவாதிரைக்களியா ...சாப்பிடுங்க சாப்பிடுங்க....அந்த 31 ஐட்ட விருந்துல 32 ஆவது ஐட்டமா இதையும் மறந்துராதிங்க...
சிவ தாண்டவப்படம் அருமை...
சுதா அவர்களின் சம்போ பாட்டும் அருமை பாட்டு கேக்கறப்ப நம்ம காதுல பாட்டை மட்டும் கேட்கணும். அவங்க காதையெல்லாம் பார்க்ககூடாது :)))
@Balaji saravana
ReplyDeleteஸாரி தம்பி! ஒரு வேகத்தில எழுதிட்டேன்... ;-)
@கக்கு - மாணிக்கம்
ReplyDeleteநன்றி மாணிக்கம். ஒரு பாரால ஒரு மாதத்தின் நிகழ்வுகளை சொல்லிட்டீங்க!! ;-)
@தக்குடுபாண்டி
ReplyDeleteதக்குடு....தக்குடு... என்ன சொல்றது.. ஜிமிக்கில மினிக்குன்டு பாடினாதான் உனக்கு பிடிக்கும்ன்னு தேடித்தேடி இந்த போஸ்ட்ல போட்ருக்கேன்!! என்னையே வார்றியா.... சைட்டுக்கு வந்து கச்சேரியை வச்சுக்கறேன். சாப்பாட்டில குத்தம் குறை சொல்லாமல் அன்னமிடும் கைகளில் ஆடி வரும் பிள்ளை இது... ;-);-);-) இது எப்படி இருக்கு.. ;-)
@வித்யா
ReplyDeleteநிஜமாகவே இந்த தடவை எங்க வீட்டில் களி கூட்டு ரெண்டுமே அமர்க்கள டேஸ்ட். ஒரு வெட்டு வெட்டியாச்சு.. நன்றி ;-)
@புவனேஸ்வரி ராமநாதன்
ReplyDeleteநீங்க நெஜமாகவே கிச்சன் குவீன்தாங்க.. எவ்ளோ ஐட்டம் பண்றீங்க.. போட்டோ புடிச்சு போட்டு சொல்லித்தரீங்க.. நான் கத்துகிட்டு உங்களோடு சமையல் போஸ்ட்டுக்கேல்லாம் கமென்ட் போடறேன்... நன்றி ;-) ;-)
@கோவை2தில்லி
ReplyDeleteஇந்தக் கலியில் களி நன்றாக செய்யத் தெரிந்தவருக்கு ஒரு போட்டி வைக்கலாம். நீங்க என்ன சொல்றீங்க.. ;-)
@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteரசித்ததற்கு நன்றி தல.. பயப்படாம ஜிமிக்கி பத்தி சொல்லுங்க.. வீட்ல ஒன்னும் சொல்லமாட்டாங்க.. நம்ம ஒரு தைரிய ரங்ஸ் கிளப் ஒன்னு ஆரமிச்சுடுவோம். ;-);-)
@சாய்
ReplyDeleteதாளகம்... தக்குடு மூலம் கேள்விப்பட்டேன். நீங்க சொல்ற ஸ்டேட்மென்ட் கரெக்ட்டுதான். சாப்பாட்டுக்கு சொத்தையே அழிச்சுருவாங்க... ;-);-);-)
@இளங்கோ
ReplyDeleteநடராஜ ஜோதியில் ஐக்கியமான இளங்கோவிற்கு இறைவன் அனைத்தும் அருள்வான்.. நன்றி.. ;-)
@எல் கே
ReplyDeleteமுன்னமே பார்த்தேன் எல்.கே. சுதா மாமி பாடினதை போடலாமேன்னு தான்.. நன்றி.. ;-)
///களி & தாளகம் - பிராமண போஜனப்ரியா என்பது அறவே உண்மை.//
ReplyDelete100% உண்மை//
நூத்துக்கு நூறு உண்மை.. ;-)
@பத்மநாபன்
ReplyDeleteசரி பத்துஜி .. இனிமே யார் காதையும் பார்க்கலை. காதப் பத்தி யாராவது ஏதாவது கேட்டா காது காது லேது லேதுன்னு சொல்லிடறேன். என்னோட ரெண்டு காதையும் குறுக்க பிடிச்சுகிட்டு பன்னெண்டு தோப்புக்கரணம் போட்டுடறேன். ;-) ;-) ;-)
Nice.
ReplyDeleteசம்போவை பால முரளி ஐயா குரலில் தான் முதன் முதலில் கேட்டேன்.[.பதினாறு வருடங்களுக்கு முன்.]
ReplyDeleteoho! naan kali saapten.. athoda history paththiyellaam kettukkala! :) thanks... ippo thaan therijunden!
ReplyDeleteஅருமையான தொகுப்பு... நிறைய விடயங்களை அறிய முடிந்தது பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete@ஜெரி ஈசானந்தன்.
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி. பால முரளி கிருஷ்ணா குரல் கேட்ட கானாமிர்தமாக இருக்கும். நன்றி ;-)
@Matangi Mawley
ReplyDeleteஇன்னும் நிறையா இருக்கு... ரொம்ப எழுதினா களி திகட்டிடுமோன்னு பயம்மா இருந்தது. அதான் ஒரு சுண்டு களி கிண்டி முடிச்சுட்டேன். நன்றி ;-)
@சந்ரு
ReplyDeleteவாங்க... பாராட்டுக்கு நன்றி. அடிக்கடி வாங்க.. ;-)
எங்கள் கூட்டுக்களியினிலே கவிதைகள் கொண்டு தர வேண்டும்னு பாரதி கேட்டார்.
ReplyDeleteகளி,கூட்டுலே எங்களுக்கு ருசி கொண்டு தர வேண்டும்னு ஆர்.வீ.எஸ் கேட்கிறார்!
பராசக்தி! பார்த்து செய்!
@மோகன்ஜி
ReplyDeleteஅண்ணா.. வழக்கம் போல் அட்டகாசமான கமென்ட்.. பாரதியை என் களி ருசிக்க வைத்ததற்கு நன்றி.. ;-)
//இத் திருவாதிரை நல்லாளில் சிவபெருமானை துதித்து சகலரும் சகல நன்மைகளும் பெற்று நல்வாழ்வு வாழ என் உள்ளங் கவர் கள்வன் அந்த ஈசனை வேண்டி வணங்குகிறேன்.
ReplyDeleteநமப் பார்வதி பதயே... ஹர ஹர மஹாதேவா...//
********
திருவாதிரை நன்னாளில் உங்களுடன் நானும் இணைந்து அந்த ஈசனை வணங்குகிறேன்...
/கேக்கறப்ப நம்ம காதுல பாட்டை மட்டும் கேட்கணும். அவங்க காதையெல்லாம் பார்க்ககூடாது/
ReplyDeleteசரியாகத்தான் சொல்லி இருக்கார்.