Thursday, December 23, 2010

லஞ்ச லாவண்ய மேம்பாட்டுக் கழகம்

இந்த பூலோகத்தில் நிறைய விஷயங்கள் பெருமையாக சொல்லிக்கொள்ளும் படியாக நடக்கவில்லை. அதற்காக பேசாமால் நம்முடைய வாய்க்கு பூட்டு போட்டுக்கொள்ள முடியுமா. அதுவும் முடியாது. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்று சொல்வது போல இக்காலத்தில் பேச்சு நாம் விடும் மூச்சை விட அதிமுக்கியம். அதுபோல வாய்ச்சொல் வீரர்கள் தான் நிறைய பேர் கோட்டையை பிடித்திருக்கிறார்கள். சரி...ரொம்ப அறுக்காமல் திண்ணைக் கச்சேரிக்குள் போவோமா...

************பெரீரீரீய்ய்ய்ய வெங்காயம்***********
போன வாரம் தமிழகமெங்கும் வெற்றிநடைப் போட்டது ஸ்பெக்ட்ரம் ரெய்டுன்னா இந்த வாரம் நாடெங்கும் விலையில் ஏறு நடை போடுவது வெங்காயம். 'பெரிய' வெங்காய விலை ஏற்றத்தால் "அதை உரிச்சா கண் ஏறியும், பச்சையா சாப்பிட்டா வாய் நாறும்" என்று நமக்கு நாமே திட்டத்தில் சுய தேறுதல் ஆறுதல் சொல்லிக் கொண்டு மக்கள் காலத்தைக் கழிக்கின்றனர். பூசணிக்காய், பரங்கிக்காய் போன்றவற்றை பத்தை போட்டு மூன்றாம் பிறை நிலாத் துண்டாக நறுக்கி வாங்குவது போல வெங்காயம் ஒன்று அரையாக வெட்டி வாங்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை போலிருக்கிறது. ஆனியன் அரைக்கிலோ வாங்கிக்கொண்டு வீடு திரும்பும் வேளையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி அடித்துச் சென்று விட்டார்கள் என்பது தலைப்பு செய்தி ஆகும் காலமாகிவிட்டது. மக்களுடைய ஷேமலாபங்களை பார்க்காத எந்த அரசும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. இத்தகைய கொள்ளையர்கள் மலிந்துபோன இக்கலிகாலத்தில் நமையாண்ட வெள்ளையர்களே மேல்.

************** லஞ்ச லாவண்ய மேம்பாட்டுக் கழகம்**************
இந்திய திருநாட்டில் நடக்கும் அரசியல் கொள்ளைகளைப் பார்க்கும் போது முன்பொரு காலத்தில் நூறு ஆயிரம் என்று கை நீட்ட ஆரம்பித்து அப்புறம் லகரங்களை அடைந்து பின்பு எவ்ளோ 'சி' என்று கணக்குப் பண்ணி வாங்கிக்கொண்டிருந்தவர்கள் இப்போது 'சி'யின் நூறு, ஆயிரம் மடங்கைத் தொட்டிருப்பது லஞ்சத் துறையின் அபரிமிதமான வளர்ச்சியை காட்டுகிறது. நீதிபதிகள் நாட்டில் லஞ்சம் இருக்கிறது என்று நீதி தேவதையின் முன்னால் கற்பூரம் ஏற்றி அணைத்து சத்தியமாக கூறுகிறார்கள், எல்லோரும் நாடு லஞ்சத்தில் புரள்கிறது, நாட்டில் லஞ்சலாவண்யம் தலைவிரித்து பிரேக் டான்ஸ் ஆடுகிறது என்றெல்லாம் சொன்னாலும் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லை. இப்படி கண்ணுக்குத் தெரியாமல் அங்கிங்கெனாதபடி நீக்கமற பஞ்சமில்லாமல் லஞ்சம் எங்கும் வியாபித்திருப்பதால் அது கடவுளுக்கு சமமாகிறது.

லஞ்சத்தினால் இரு பயன்கள்.
1) வேலை சட்டென்று முடிகிறது.
2) கைநீட்டி காசு வாங்கியபின் அதிக சிரத்தையுடனும் பொறுப்பாகவும் அந்த வேலை வெற்றிகரமாக நிறைவேற்றப்படுகிறது.

மேற்கண்ட காரணங்கள் இரண்டும் இருப்பதால் சம்திங் நிறைய கிடைக்கும் துறைகளில் சம்பளத்தை நிறுத்திவிட்டு வேலையின் தன்மையையும் அளவையும் பொறுத்து கலெக்ஷன் பார்த்து கல்லாக் கட்டிக் கொள்ளச் சொன்னால் அந்த ஏற்பாடு எப்படி இருக்கும். வரும் வரும்படியில் ஒரு குறிப்பிட்ட பர்சென்ட் அல்லது வேலைக்கேற்ற ஒரு தொகையை அரசுக்கு கப்பம் கட்டச் சொல்லிவிடலாம். அப்புறம் அதை சீரமைக்கும் பொறுப்பை ஒரு லஞ்ச நல வாரியம் அமைத்து பேணி பாதுகாக்கலாம். (ச்.சீ. தூ.. இது ஒரு யோசனையா என்று காறித் துப்புபவர்கள் கண்டிப்பாக கருத்துரைக்கு வரவேற்க்கப்படுகிறார்கள்)

என்ன ஒன்று கரன்ஸிக்கு காந்தி படம் போட்டு அதன் மாட்சிமையை நாரடிப்பதை கதராடை காந்தியவாதிகள் எப்படி பொருத்துக்கொள்கிரார்களோ? (என்னா.... காந்தியவாதின்னா... சோனியா, ராகுலை பின்பற்றும் பக்தர்களா... ஐ அம் ஸாரி.. தப்பா சொல்லிட்டேன்...எஸ்கேப்....)

*********** சங்கீத சீசன் ஜோக் **************
அவர் ஒரு பெரிய பாகவதர். பெரிய பாகவதர்னா சரீரத்தில் அல்ல சாரீரத்தால் புகழ் பெற்ற பாகவதர். ஊர் ஊராக சென்று கான மழை பொழிபவர். அமிர்தவர்ஷிணி பாடினா மழை பெய்யும். அவருக்கு ஹார்மோனிய பொட்டி போடுவதற்கு, தம்புரா மீட்டுவதற்கு என்று ஒரு பக்கவாத்தியப் படை ஒன்று உண்டு. ஒரு ஊரில் கச்சேரி முடித்து அடுத்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கவாத்தியத்திய அச்சுப்பிச்சுவிற்கு அவசரமாக நம்பர் ஒன் வந்து விட்டது. பின்னால் தன் கூட உட்கார்ந்திருக்கும் சக பக்கவாத்தியங்களிடம் "எங்கயாவது நிறுத்துங்கோ.. அவசரமா வரது..." என்று கெஞ்சியது. "அண்ணா.. இருக்கார்.. நடுப்பர நிறுத்தினா கோச்சுப்பார்... கொஞ்சம் அடக்கிக்கோ..." என்று பாகவதருக்கு பயந்து வண்டியை நிறுத்தாமல் போய்க்கொண்டிருந்தனர்.

மார்கழியில் குளிர் வேறு அதன் பங்கிற்கு இன்னும் அற்ப சங்கையை துரிதப் படுத்தியது. "முட்றது.... எங்கயாவது நிறுத்துங்கோ..." என்று அவசரத்தில் கிடந்து நெளிந்ததது அந்த ப.வா. இப்படி அவர் கேட்பதும் மீதம் இருந்த பேர் அவர் வாயை அடைக்க ஏதோ பேசுவதுமாய் பின் சீட்டில் ஒரே கசமுசா. லேசாக தூக்கம் கலைந்த பாகவதர் அண்ணா பின்னால் திரும்பி பார்த்து "என்னடா அங்கே ஒரு சத்தம்..." என்று கேட்டார். முட்டிய ஆள் உடனே "அண்ணா.. ரொம்ப நாழியா ஒன்னுக்கு வரதுன்னு சொல்லிண்டுருக்கேன்.. யாருமே வாய தொறக்க மாட்டேங்கறா.." என்று ஒரு போடு போட்டதும் அண்ணா வாய் விட்டு சிரித்து வண்டியை நிறுத்தச் சொன்னார்.

*************ஐயப்ப சாமி****************
கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து பயபக்தியோடு சபரி மலை செல்லும் பத்தர்கள் இருக்கிறார்கள். சாமிக்காக டீக்கடைகளில் சுத்தமாக பிரத்யேக டம்பளர் போன்றவைகளை கொடுத்து மதிப்பாக இருக்கும் வேளைகளில் மாலையும் கழுத்துமாக நின்றுகொண்டு சிகரெட் பிடிப்பவர்களை என்னவென்று சொல்வது. இதானும் பரவாயில்லை தண்ணியடிக்கும் சாமிகளும் இருக்கிறார்களாம். பார்களில் அவர்களுக்கு 'சிறப்பு' கவனிப்பு இருக்குமாம். விரதம் இருப்பது என்பது நம்முடைய மனதை கட்டுப்படுத்தத்தான். இப்படி சிற்றின்பகளை கட்டுப்படுத்த தெரியாத ஜென்மங்கள் எப்படி இறையின் பேரின்பத்தை காண்பார்கள். ஒருக்கால் மதுரை வீரனுக்கு மாலை போட்டுக்கொண்டதாக நினைத்துக் கொண்டார்களோ என்னவோ?

************** ரெசார்ட்? *****************
மனசுக்கு பிடிச்சவங்க கூட ஒரு நாலு நாள் தங்கினா எப்படி இருக்கும். ( டி.வி, செல் ஃபோன் உண்டான்னு கேக்குறீங்களா? )

இந்தப் படத்தை எடுத்த மகானுபாவரின் விலாசம் Not as it seems to be by Thomas Gauck


********** இந்த வார ஸ்பெஷல்... வெங்காயப் பாட்டு ***********
உன்னில் உருவான ஆசைகள் என் அன்பே.. அந்த வெங்காய விலை போல இறங்காதது..


-

58 comments:

  1. அந்தப் படம் வாவ். சூப்பர். ஆமாம் அது என்ன மனசுக்குப் பிடிச்சவங்க . மனைவின்னு சொல்லணுமே . ஏன் சொல்லல (எதோ என்னால முடிஞ்சது )

    ReplyDelete
  2. அந்த வெங்காயப் பாட்டு, முன்புவிலை ஏறிய பொழுது வந்தது

    ReplyDelete
  3. /* லஞ்ச நல வாரியம் அமைத்து பேணி பாதுகாக்கலாம்.*/


    அப்படின்னா அது தான் உண்மையிலேயே நல்ல "வாரி"யமா இருக்கும்.

    ReplyDelete
  4. @எல் கே
    மனைவி இல்லாதவங்க.. அதாவது கல்யாணம் கட்டாதவங்க என்ன பண்ணுவாங்க.. அதான் மனசுக்கு பிடிச்சவங்கன்னு போட்டேன்.. எல்.கே.. நாங்க ஆட்டோக்கே டாட்டா காட்ரவங்க.. தெரியுதா... எப்டி தப்பிச்சேன் பாருங்க... ;-)

    ReplyDelete
  5. @எல் கே
    எக்காலத்திற்கும் பொருந்தும் பாடலாக அமைந்து விடப் போகிறது.. ;;-)

    ReplyDelete
  6. // கல்யாணம் கட்டாதவங்க என்ன பண்ணுவாங்க..//

    gf :P

    ReplyDelete
  7. ரிசார்ட் படம் நன்று. நிச்சயமாய் போக வேண்டிய இடம்! மனதுக்குப் பிடித்தவருடன்....

    லஞ்சம் ஒன்றும் சொல்வதிற்கில்லை. இறப்புச் சான்றிதழ் வாங்கக்கூட லஞ்சம் கேட்கும் நிலை. வெட்கம்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. @நையாண்டி நைனா
    ரொம்ப சரியாச் சொன்னீங்க நை.நை. ;-)
    நம்ம சைட்ல நான் லஞ்சம் எதுவும் குடுக்காம நீங்க முதன் முறையா கருத்துரைத்தமைக்கு நன்றி. அடிக்கடி வாங்க. ;-)

    ReplyDelete
  9. @எல் கே
    gf அப்புறம் அவங்களுக்கு bf! ;-) ;-) ;-) இது மாதிரி எழுதிக்கிட்டே இருக்கணும்.. ஆளை விடுங்க சாமி!! ;-) ;-)

    ReplyDelete
  10. @வெங்கட் நாகராஜ்
    ஆமாங்க.. கரெக்டுதான்.. நேத்து ராத்திரி கூப்ட்டேன்.. பிசியோ.. ;-)

    ReplyDelete
  11. அண்ணா இந்த வாரம் சூப்பர்

    எதிர்பார்ப்புகள் என்று மறையும் வரை மாறாதோ லஞ்சம்

    ReplyDelete
  12. @dineshkumar
    நன்றி தினேஷ்...
    உங்களோட மயான ஆட்சியா அற்புதம்.. ;-)

    ReplyDelete
  13. இதிலோ வெட்கபட யாருக்கும் ஒன்றும் இல்லை.லஞ்ச லாவண்யா மேம்பாட்டுகழக்கம் உண்மையில் ஒரு நல்ல யோசனைதான் .இதில் காறித்துப்ப ஒன்றுமில்லை. துப்பினால் மட்டும் இங்கு எவருக்கும் மானம் கேட்டுபோயவிடுமா என்ன? இருக்கும் அத்தனை கூட்டங்களும் அந்த சாக்கடை நீரில்தானே குளித்து கும்மாளம் போடுகின்றன! நம் ஜனங்கள் உட்பட.
    கரன்சி காந்தி படத்துக்கும் காங்கிரஸ் காரர்களுக்கும் என்ன தொடர்பு R V S ?

    ReplyDelete
  14. கச்சேரி களை கட்டிருச்சு.

    பெரிய வெங்காயம், உண்மையிலியே 'பெரிய' வெங்காயம் தாங்க.

    லஞ்ச மேம்பாட்டுக் கழகம் (ல.மே.க) தலைவர் யாருங்க ? :)

    ReplyDelete
  15. ஆசிரியராக பணியில் இருந்த என் அப்பா இறந்த போது அரசு கொடுக்கும் ரூபாய் 20 ஆயிரத்தினை வாங்க என் அம்மாவினை அழைத்துக் கொண்டு போனேன்.(20 வருடங்களுக்கு முன்பு)கவுண்டரில் அவர்களாகவே 2 ஆயிரம் எடுத்துக் கொண்டு மீதி 18 ஆயிரம் மட்டும் தான் தந்தார்கள். டீன் ஏஜில் அப்ப அதனை கேட்க பயமாகவும், வெட்கமாகவும் இருந்தது.இயலாமை அவர்களுக்கு லாபம்.சாபம் மட்டும் தான் கொடுக்க முடிந்தது.

    ReplyDelete
  16. //லஞ்ச லாவண்ய மேம்பாட்டுக் கழகம் //
    தலைவர் ஆசியோடு ராஜாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ;)

    //வெங்காயம்//
    உரிக்க உரிக்க ஒன்னுமில்லைதான், ஆனா தேர்தல் ரிசல்ட் பார்த்து அழுகை தான் வரப் போகுது அவங்களுக்கு ;)

    எக்சலன்ட் போட்டோ அண்ணே!
    //மனசுக்கு பிடிச்சவங்க கூட// :)

    ReplyDelete
  17. ரிசார்ட் படம் ரொம்ப நல்லா இருந்தது. கணவர் குழந்தையுடன் போக வேண்டும்.!!!!!! வெங்காயப் பாடல் அப்போதைய ஹிட் பாடல். இப்பவும் ஒத்து போகுது. லஞ்சம் எல்லா இடத்திலயும் இருக்குது.
    அரசு ஆஸ்பத்திரியில் லஞ்சம் கொடுத்தால் படுக்கை கிடைக்கும் இல்லையென்றால் பாய் தான்.

    ReplyDelete
  18. படம் சூப்பர்.

    அந்த வீடியோ அருமையான குரல். டைமிங் வீடியோவா ரைட்டு..

    ReplyDelete
  19. பத்த வச்சுட்டிங்களே எல்கே...

    மொதல்ல ஆப்பிரிக்கா தனிப்பயணம்.. இப்ப மனசுக்குப் பிடிச்சவங்களோட தனியிருப்பா? (செல்போன் கூட வேண்டாமாமே? ஓஹோஹோ)

    ReplyDelete
  20. அமுதா கிருஷ்ணா சொல்வது உண்மை. படிக்கும் பொழுது ஆற்றாமை பொங்கி வருகிறது. எப்படி இவ்வளவு மோசமானோம்!?

    ReplyDelete
  21. புதிதாக நிறையக் கற்றுக் கொள்ள முடிகிறது உங்கள் பதிவிலிருந்து.
    >>>ஆட்டோக்கே டாட்டா காட்டுறவங்க

    ReplyDelete
  22. holodays to 'blogspot'
    இங்க என்னோட பாரேன்ட்ஸ் வந்திருக்காங்க...

    ReplyDelete
  23. //மாலையும் கழுத்துமாக நின்றுகொண்டு சிகரெட் பிடிப்பவர்களை என்னவென்று சொல்வது. இதானும் பரவாயில்லை தண்ணியடிக்கும் சாமிகளும் இருக்கிறார்களாம். பார்களில் அவர்களுக்கு 'சிறப்பு' கவனிப்பு இருக்குமாம்//

    ஐயோடா. நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்த மாலை போடும்போது தோதாக இருக்கு என்று நினைப்பவன் இவர்கள் இப்படி இருக்கின்றார்களே ? கொடுமை. டாஸ்மாக் கோவிலுக்கு முன் போய் இப்போது கர்ப்பகிரகத்துள் கடையை வரும் அளவு ஆனபிறகு வேறு என்ன ?

    உங்கள் கடைசி கமெண்ட் சூப்பர் - மதுரை வீரன். கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை போகும் வழியில் உள்ள ஆடுதுறை (குரங்காடுதுறை என்றும் சொல்லுவார்கள்) ஊரில் உள்ள மதுரை வீரன் சாமி தான் எங்கள் குல தெய்வம் என்று என் தந்தை வழி தாத்தா கடைசி காலத்தில் சொன்னதால் அங்கு படையெடுத்த கும்பல் எங்களுடையது. அவருக்கும் படையலுக்கு சாராயம் வைக்க வேண்டுமாம். என் பெரியப்பா / சித்தாப்பாக்கள் பாரு நம் குல தெய்வமே அப்படி இருக்கும்போது என்னை கேட்க்காதே என்று கிண்டலடிப்பார்கள் அவரவர் மனைவிகளிடம் !!

    அந்த கோவிலில் என் பெயர் பதித்து இருக்கும் - நான் இறந்தபிறகும் என் பெயர் நெட்டை தவிர அங்கே இருக்காலம் !!

    ReplyDelete
  24. ஆர்.வீ.எஸ்! வந்காயத்தை பத்தை போட்டு விற்பது.. கலக்கிட்டீங்க. புது லஞ்ச கழகத்திற்கு என் வாழ்த்துக்கள்.. நினைவுக்கு வரும் ஒரு "பழைய" புதுக்கவிதை! கவிஞர் பெயர் நினைவில்லை.

    வாங்கினேன்...பிடித்தார்கள்.
    கொடுத்தேன்... விட்டார்கள்.

    மகாத்மா காந்திகி ஜே!

    ReplyDelete
  25. வேறு எதிலும் இல்லாவிட்டாலும் லஞ்சத்திலும் ஊழலிலும் அபரிமிதமான வளர்சிதான் நம் நாட்டுக்கு.
    அதென்ன ரெசார்ட் படம். எங்கள் ஊரில் பார்க்கமுடியாதபடி block செய்திருக்கிறார்களே!

    ReplyDelete
  26. வெங்காயம்.. பாட்டை எப்படி உள்ள போய் பிடிச்சிருக்கிங்க ..உங்க கடமை உணர்ச்சிக்கு எல்லையே இல்லையா....

    லஞ்சம்...கை நீட்டுபவன் முதல் குற்றவாளி.. பொறுமை கொஞ்ச கூட இல்லாமல் அதை ஊக்கப்படுத்துபவன் அதற்கு இணையான குற்றவாளி...
    இருக்கப்பட்டவன் அவசரத்திற்கு இல்லாதவன் பலி எனும் சமுக நீதி லஞ்ச விஷயத்திலும் தான் .

    சங்கித ஜோக்...வாத்தியாரோடதுதான்...

    வித்வானிடம் கேள்வி:
    இவ்வளவு தூரத்தில் இருப்பவர்களை எப்படி இசையால் எப்படி கவர்கிறிர்கள்

    பதில் : பக்கத்தில் இருப்பவர்களூக்கு வாய்... தூரத்தில் இருப்பவர்களுக்கு கை...

    (மைக்செட்டுக்கள் வராத காலத்தது )

    ரீசார்ட் ...போட்டோ அருமை...

    ReplyDelete
  27. @புவனேஸ்வரி ராமநாதன்
    யாரைச் சொல்றீங்க? சும்மா தமாசுக்கு... நன்றி ;-)

    ReplyDelete
  28. @கக்கு - மாணிக்கம்
    மாணிக்கம்.. காந்தின்னு பேர் வந்ததால இவங்க கர்ண பரம்பரை மாதிரி காந்தி பரம்பரைன்னு நினைப்பு தான்........ சும்மா ஒரு கற்பனை தான்.. ;-)

    ReplyDelete
  29. @இளங்கோ
    ல.லா.மே.க ன்னு தானே இருக்கணும்.. ல. மே. கல ஏன் லாவண்யாவை விட்டுட்டீங்க.. தெரிஞ்சவங்களா.. ;-)

    ReplyDelete
  30. @அமுதா கிருஷ்ணா
    இது தான் கேடுகெட்ட உண்மை. நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புற அரசு அலுவலகங்களில் பொது மக்களிடம் தொடர்பில் உள்ள துறைகளில் லஞ்சம் கொஞ்சமாகத் தான் உள்ளது. ஏனென்றால் ல. வாங்குபவருக்கு ல. கொடுப்பவர் ஏதேனும் ஒரு விதத்தில் தெரிந்தவராக அல்லது உறவினராக இருப்பார். என்ன சொல்றீங்க.. எல்லோரும் ஏதோ ஒரு விதத்துல சில விதிகளை மீறுவதால் சாபங்கள் இப்போ பலிக்கரதில்லைன்னு நினைக்கிறேன்.. ;-)

    ReplyDelete
  31. @Balaji saravana
    சரவணா.. (வெங்)காயத்தை உரிக்க உரிக்க ஒன்னும் இல்லைன்னு ஒரு மிகப் பெரும் தத்துவத்தை ரெண்டே வரி கமெண்ட்டா போட்டு அசத்துறியே... சபாஷ்... ;-)

    ReplyDelete
  32. @கோவை2தில்லி
    படுக்கைக்கு பதிலா பாய் கிடைத்தால் பரவாயில்லை.. ஒரு நோயுடன் இன்னொரு நோய் இலவசமாக வராமல் இருந்தால் சரி... ;-)

    ReplyDelete
  33. @வித்யா
    வாழ்த்துக்கு நன்றிங்க... உங்க சைட்ல எங்க கமேன்ட்டுக்கேல்லாம் கொஞ்சம் பதில் போட்டீங்கன்னா உங்க வாசகர்களாகிய நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம். நன்றி ;-)

    ReplyDelete
  34. @அப்பாதுரை
    அப்பாஜி! யாரும் என்னைப் பத்த வைக்க முடியாது. நானொரு Cast Iron. ;-) டி.ஆரோ அ.துரையோ ஆதிரையோ யாரும் என்னை அசைக்க முடியாது. புதுசா எல்.கேவையும் சேர்த்துகிட்டு எனக்கு எதிரா ஒரு கூட்டணி அமைக்கிரீங்களா.. மோகன சாமி மலைக்கு போயிட்டு வந்தப்புறம் நான் ஸ்ட்ராங் ஆயிடுவேன். ஜாக்கிரதை.. ;-)
    (ஏதோ ஆர்வத்துல போட்டுட்டேன்... வாங்க...வந்து குமுறுங்க... ;-) )

    ReplyDelete
  35. @அப்பாதுரை
    //புதிதாக நிறையக் கற்றுக் கொள்ள முடிகிறது உங்கள் பதிவிலிருந்து.
    >>>ஆட்டோக்கே டாட்டா காட்டுறவங்க//

    இதெல்லாம் விடலை பாஷை.. ;-)

    ReplyDelete
  36. @Madhavan Srinivasagopalan
    O.K Spend time with them. How is your Father? Convey my Namaskarams to him. in his 80s or 90s? ;-)

    ReplyDelete
  37. @சாய்
    மனிதனுக்கு பிடித்ததை இறைவனுக்கு படைக்கிறான்.. சரிதானே..
    குரங்காடுதுறையில் ஒரு சிவன் கோயில் உண்டு. ஆஞ்சநேயர் வழிபட்ட சிவன். பார்த்திருக்கிறீர்களா... தின்னவேலியா இருந்தாலும் எங்க பக்கத்துல குலதெய்வம் வச்சுருக்கீங்க... சோ.. உங்களுடைய பூர்விகம் எங்க பக்கமோ... ;-)

    ReplyDelete
  38. @மோகன்ஜி
    சார்! புதுக்கவிதை... அட்டகாசம்.. காந்தி எந்திருச்சு வந்துடப்போறார்.
    என்ன கழகத்துக்கு வாழ்த்து சொல்லியிருக்கீங்க... வந்து சேரப்போறீங்களா... யார் தலைவர்ன்னு ஏற்கனவே இளங்கோ கேட்கறார். ஒரு தினுசாத்தான் இருக்கீங்க... ( BTW பேர் நல்லா இருக்கா... ;-) ;-) ரிஜிஸ்டர் பண்ணிடலாமா... ) ;-)

    ReplyDelete
  39. @geetha santhanam
    ரிசார்டை முடிந்தால் என் சைட்டிலேயே கொடுக்கிறேன்.. உங்கள் வருகைக்கு சந்தோஷம்.. நன்றி ;-)

    ReplyDelete
  40. @பத்மநாபன்
    பாட்டு போடும் கடமை வீரன் நானாக்கும்..
    லஞ்சமா பாதகர்கள்... ஒன்றும் செய்வதற்கில்லை...
    வாத்தியாரோட சங்கீத ஜோக் அட்டகாசம். எங்க புடிச்சீங்க.. கற்றதும் பெற்றதுமா...
    நன்றி பத்துஜி ;-)

    ReplyDelete
  41. அருமை.

    காரியம் சீக்கிரம் முடிய லஞ்சம் என்பது எப்போதோ அரசு சட்டமாக்கப்பட்டது - 'தட்கல்' முறைப்படி. இதுவும் அரசு நிர்ணய விலைப்படியே.

    ரகு

    ReplyDelete
  42. // ல. மே. கல ஏன் லாவண்யாவை விட்டுட்டீங்க.. தெரிஞ்சவங்களா..//
    எப்படி எல்லாம் கண்டு பிடிக்கறீங்க. :)
    அண்ணா, என்ன இருந்தாலும் பெண் பாவம் பொல்லாதது. (பெண் பேரா இருக்குது !!)

    So, நீங்கதான் ல.மே.க சாரி ல.லா.மே.கழகத்தின் தலைவர். !

    ReplyDelete
  43. @அப்பாஜி
    நடத்துங்க..

    ReplyDelete
  44. @இளங்கோ
    லாவண்யம்னா அழுகுதான் இளங்கோ.. கழகத்தின் அழகு... ஓ.கே... பொம்பளைப் பேரையே நினைச்சுக்கிட்டு இருக்ககூடாது... ;-) ;-) ;-)
    வீட்டுக்கு தெரியாம ஓடி வந்துடுங்க... உங்களுக்கு பெரிய போஸ்ட் எங்கள் கழகத் தலைவர் எல்.கே தருவாரு... ;-)

    ReplyDelete
  45. @எல் கே
    இப்படி என் மேல் அப்பாஜியை ஏவி விடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.. ஏற்கனவே பத்துஜி பதிவில் அவரிடம் சிக்கியுள்ளேன் என்பதை சிரம் தாழ்த்தி தெரிவித்துக் கொள்கிறேன்.
    (எவ்ளோ இடத்தில அடி வாங்கறது எல்.கே.. முடியலை.. ;-) )

    ReplyDelete
  46. Nice timbits... ella areavum cover panni oru post...super... andha joke kooda super..padam adhai vida super...

    ReplyDelete
  47. Mohanji - Super

    //அமுதா கிருஷ்ணா said... ஆசிரியராக பணியில் இருந்த என் அப்பா இறந்த போது அரசு கொடுக்கும் ரூபாய் 20 ஆயிரத்தினை வாங்க என் அம்மாவினை அழைத்துக் கொண்டு போனேன்.(20 வருடங்களுக்கு முன்பு)கவுண்டரில் அவர்களாகவே 2 ஆயிரம் எடுத்துக் கொண்டு மீதி 18 ஆயிரம் மட்டும் தான் தந்தார்கள். //

    உங்களுக்கு நடந்தது கொடுமை கொடுமை. கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி என்பது போல்.

    - என் சிறிய மகனின் ஒரே ரெகார்ட் "பிறப்பு சான்றிதழில்" லண்டன் செல்லும்முன் பாஸ்போர்ட் வாங்க பெயர் மாற்றம் செய்ய முப்பந்தைந்து ரூபாய்க்கு மேல் ஒரு நயாபைசா கொடுக்க மாட்டேன் என்று பெங்களூரில் கார்பரேஷன் அலுவலகத்துக்கு ஒரு வருடம் அலைந்தவன் நான் (year 2000).
    - சென்னை கே.கே.நகர் வீட்டிற்கு எலெக்ட்ரிசிட்டி மீட்டர் என் பெயரில் மாற்றம் செய்ய 500 ரூபாய் கேட்ட மின்வாரிய அதிகாரியை ஏன் வாசிலில் உட்கார்ந்து பிச்சை எடுக்க கூடாது என்ற கேட்டவன்.

    நல்ல வேலை நான் நாட்டை விட்டு வெளியில் வந்தேன். அங்கேயே இருந்து இருந்தால் நாலு பேரை போட்டு தள்ளியிருப்பேன் எனக்கு வரும் கோவத்திற்கு !!

    ஜெயலலிதா முதலமைச்சாராய் அரசாங்க உழியர்களுக்கு சில வாரம் வேளையில் இருந்து கல்தா கொடுத்த பொது சந்தோஷபட்டவன் நான். ஆனால் அவர்கள் மாத சமபளத்தை விட தினசரி கோட்டை விட்ட லஞ்சம் பணத்தை விட முடியாமல் திரும்பி சேர்ந்து நம் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள்.

    வாங்குபவர்களை விட கொடுத்து பழகியவர்கள் நாமோ என்று எனக்கு தோன்றும். அந்நியன் படம் பார்ப்போம் கை தட்டுவோம் மறந்து விடுவோம். நமக்கு காரியம் ஆக கொடுத்து பழகிய நாமும் குற்றவாளிகளே.

    இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு செய்தி பார்த்தேன். இந்தியாவில் நூற்றுக்கு 54 பேர் வாழ்க்கையில் லஞ்சம் கொடுத்து இருக்கின்றார்களாம். கொடுக்காதவர்கள் இந்தியாவை விட்டு வெளியில் இருப்பவர்களாக இருக்கலாம் !!

    திருத்தணி கோவிலில் காசு வாங்கி விபூதி கொடுக்கும் வாத்தியும், கோடிகோடியாக அள்ளும் அரசியல்வாதிகளையும் கொண்ட புண்ணிய பூமி நம்முடையது !!

    ReplyDelete
  48. //RVS said...குரங்காடுதுறையில் ஒரு சிவன் கோயில் உண்டு. ஆஞ்சநேயர் வழிபட்ட சிவன். பார்த்திருக்கிறீர்களா. தின்னவேலியா இருந்தாலும் எங்க பக்கத்துல குலதெய்வம் வச்சுருக்கீங்க... சோ.. உங்களுடைய பூர்விகம் எங்க பக்கமோ... ;-)//

    பார்த்து இருக்கின்றேன் என்று நினைக்கின்றேன். 2003-2004 இல் எல்லா நவக்ரஹக கோவில் மற்றும் எல்லாம் சுத்தும்போது அங்கும் போய் இருக்க சாத்தியம் உள்ளது. எனக்கு நேற்று நடந்தது இன்று நினைவில்லை. என் பெரிய மகனிடம் என்னை போல் கோலிகுண்டு சைஸ் மூளையில் மெமரி flush செய்து வேண்டுவதை மட்டும் நினைவில் வைக்கும் ஆராய்ச்சியை சொல்லிக்கொண்டு இருக்கின்றேன் !! எனக்கு அது ரொம்ப தேவை.

    என்னவோ தெரியாது. எங்களை பொறுத்தவை நாங்கள் திருநெல்வேலிகாரர்கள் தான். இப்போதைக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் வெரைட்டி நான் !

    என் ப்ளோகில் சொன்ன பள்ளிக்கூடம் குரங்காடுதுறையில் தான் இருக்கு.

    ReplyDelete
  49. //உங்களுக்கு பெரிய போஸ்ட் எங்கள் கழகத் தலைவர் எல்.கே தருவாரு... ;-)//
    அந்த போஸ்ட் கிடைக்க எவ்ளோ லஞ்சம் கொடுக்கணும் ? :) :)

    ReplyDelete
  50. @ sai - //என்னவோ தெரியாது. எங்களை பொறுத்தவை நாங்கள் திருநெல்வேலிகாரர்கள் தான். இப்போதைக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் வெரைட்டி நான் !//

    ஒரு வணக்கம் போட்டுக்கரேன்.

    இப்படிக்கு,
    அல்வா தேசத்து அன்பன்

    ReplyDelete
  51. வில்லங்கமான கேள்வி எதுவும் இந்தவாட்டி உங்களுக்கு இல்லை, பாவம் நீங்களும் எத்தனைவாட்டிதான் பொய் சொல்லர்து!!..:PP

    ReplyDelete
  52. @ரகு
    ஆமா சார்! கரெக்ட்டுதான். ஆனா தட்கல் காசு நேரா அரசு கஜானாவுக்கு போய்டுது... ;-)

    ReplyDelete
  53. @அப்பாவி தங்கமணி
    நன்றிங்க... உங்க கிறிஸ்துமஸ் கதை அட்டகாசம். ;-)

    ReplyDelete
  54. @இளங்கோ
    அது உங்க வசதியைப் பொறுத்து... அதற்க்கு தகுந்தார்ப்போல் பதவியும் கிடைக்கும்... மோர் மணி மோர் பதவி.. இதுதான் கொளுகை.. ;-)

    ReplyDelete
  55. @தக்குடுபாண்டி
    நீங்க எந்தமாதிரி வில்லங்க கேள்வி கேட்டாலும் ஒரு அப்ராணியை பார்த்து பேசுறீங்க அப்படின்னு மட்டும் நினைச்சு பேசுங்க... சரியா.. ;-)

    ReplyDelete
  56. //தக்குடுபாண்டி said... @ sai - //என்னவோ தெரியாது. எங்களை பொறுத்தவை நாங்கள் திருநெல்வேலிகாரர்கள் தான். இப்போதைக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் வெரைட்டி நான் !//

    ஒரு வணக்கம் போட்டுக்கரேன்.

    இப்படிக்கு,
    அல்வா தேசத்து அன்பன்//

    தக்குடுபாண்டி - நீங்கள் அல்வாவுக்கு அன்பர அல்லது அல்வாதேசத்துக்கு அன்பர ? திருநெல்வேலியில் எந்த ஊர் !!

    ReplyDelete
  57. //நீங்கள் அல்வாவுக்கு அன்பர// RVS அண்ணாவுக்கு தோஸ்த் அப்பிடிங்கர்தை சொல்றேளா??..:) கல்லிடைக்குறிச்சி தான் நம்ப ஊர். நீங்க எந்த ஊர்?

    ReplyDelete