Sunday, December 26, 2010

சிவபெருமான் கேட்ட சங்கீதம்

சென்னையெங்கும் இசைமழை பொழிகிறது. சபாக்கள் நிரம்பி வழிகின்றன. தனுர் மாச குளிருக்கு காஷ்மீர் கம்பளி சால்வையை கழுத்தை சுற்றியும் காதுகளை மறைத்தும் முகத்தில் மூக்குக் கண்ணாடி மட்டும் தெரியும்படி இழுத்து போர்த்திக்கொண்டு தள்ளாத வயதிலும் கடமை தவறாமல் கச்சேரி அட்டென்ட் செய்கிறார்கள். மயிலையை சுற்றியுள்ள இடங்கள் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இசை தெரியாதவர் கால் வைத்தால் சர்.....ரென்று வழுக்குகிறது. ஒபாமா ஆளும் யூஎஸ்ஸில் மைக்ரோசாஃப்டில் பில் கேட்ஸ் அலுவலகத்தில் பணிபுரியும் என் பள்ளிகால நண்பன் விஜய் "மத்தியான்னம் ஒன்னரைக்குள் வந்து என்னைப்பார் இல்லேன்னா நான் கச்சேரிக்கு போய்விடுவேன்" என்று மிரட்டி நட்புக்கு கண்டிஷன் போடுகிறான். பக்கத்து வீட்டு மாமி கூட காதால் சங்கீதம் கேட்பதோடு நிறுத்திவிட்டாள். எனக்கும் பூனை கரண்டுவது போலிருக்கும் மியூசிக்கிலிருந்து விடுதலை. மாமி இப்போது மருந்துக்கு கூட வாயைத் திறப்பது இல்லை. மகா நிம்மதி. சரி.  ஏதாவது ஒரு சபாவை கொஞ்சம் நெருங்கி டிக்கெட் வாங்கலாம் என்றால் ஐநூறு ஆயிரம் என்று விலை. அப்படி இல்லை என்றால் ஏதாவது தேங்காமூடி கச்சேரிக்கு ஃப்ரீ பாஸ் தருகிறார்கள். ஆளை விட்டால் போதும் என்று ஓடி வந்து பனியில் நனையாமல் காலையில் ஜெயா டிவியில் மார்கழி மஹா உற்சவம் பார்த்து என்னுடைய சங்கீத அறிவை வளர்த்துக்கொள்கிறேன்.

இவ்வளவு விஸ்தாரமான முதல் பாராவை படித்துவிட்டு நாளைக்கு ஜிப்பாவோடு மேடையேறி கச்சேரி பண்ணும் லெவெலில் எனக்கு இசை ஞானம் இருப்பதாக யாரும் கிஞ்சித்தும் எண்ணி விடவேண்டாம். எனக்கு தெரிந்த ரஞ்சனி, வசந்தா, கல்யாணி, பைரவின்னு  ராகத்தோட பெயர்களைச் சொன்னால் கூட என் தர்மபத்தினி "எல்லாம் பொம்னாட்டி பேர்ல இருக்கு. அதான் கரெக்டா ஞாபகம் வச்சுருக்கீங்க." என்று நாலு பேர் முன்னால் நாட்டியாக பேசி தாறுமாறாக காலை வாறுகிறாள். கர்நாடக சங்கீதம் கேட்க வேண்டும் என்றால் மனதை ஒருமுகப்படுத்தி, இப்போது சினிமாக்களில் பாடும்/கத்தும் பாடகர்களின் அவலமான உச்சரிப்பையும் அபஸ்வரமான சுரப்ரஸ்தாபங்களையும் நினைவில் நிறுத்திக் கேட்டால் போதும். கர்நாடக சங்கீதம் பேதமில்லாமல் புரிந்துவிடும். ராகம், தாளம் தெரியவேண்டும் என்று தேவையில்லை. சுபபந்துவராளியில ஷட்ஜமத்தில இழுத்து பஞ்சமத்தில இறங்கி காந்தாரத்தில ஏறினா என்ன ராகம் வரும் போன்ற இசையறிஞர்கள், சங்கீத ஜாம்பவான்கள் பதிலளிக்கும் பத்து மார்க் பெரிய கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கும் ஞானம் வளர்ந்த பிறகுதான் கர்நாடக சங்கீதம் கேட்கவேண்டும் என்பது அத்தியாவசியம் இல்லை. அவசியமும் இல்லை.

கேட்கும் இசை தமிழிசை என்றால் உங்கள் காதுகளுக்கு பாதி சுமை குறைந்தார்ப் போல் இருக்கும். ஏனென்றால் பாடலுக்கு அர்த்தம் புரிதலில் கொஞ்சம் முழித்துக் கொள்வீர்கள். கையை தொடையில் தோசை திருப்பி போல தப்புத்தப்பாக திருப்பிப் போட்டு தூக்கத்தை கலைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக மாட்டீர்கள். இயக்குனர் கே.பி சார் சிந்துபைரவியில் இதைத் தான் அழுத்தம் திருத்தமாக சுஹாசினியை வைத்து சொல்லியிருப்பார். உன்னால் முடியும் தம்பியில் கூட மானிட சேவை துரோகமா என்று கர்நாடகத் தமிழ் கச்சேரியில் மேடையில் கமலை பாட வைத்து அசத்தியிருப்பார். இந்த மனோதிடத்துடன் போய் யார் வேண்டுமானாலும் எந்தப் பாடகரின் கச்சேரியை வேண்டுமானாலும் கேட்கலாம். பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மாமா "இந்த ராகம்னா எனக்கு உசுரு.. என்ன ராகம் சொல்லுங்கோ பாப்போம்..." என்று ரொம்ப சீண்டிப்பார்த்தால் "இது அபூர்வமான ராகமாச்சே..."ன்னு சொல்லிட்டு வலது பக்கம் உட்கார்ந்திருக்கும் வாட்ச் இல்லாத அன்பரிடம் "இப்ப டயம் என்ன?" என்று கேட்டு தப்பித்துக் கொள்ளுங்கள். இல்லையேல் உங்களை சங்கீத மும்மூர்த்திகளாலும் காப்பாற்ற முடியாது. 

தமிழ்ப்பண்ணை வெளியீடாக 1947-ல் வெளிவந்த சங்கீத யோகம் என்ற புஸ்தகத்தை வானதி பதிப்பகத்தார் முதல் வெளியீடாக 1998-ல் வெளியிட்டார்கள். அதன் ஒரு பதிப்பு என்னிடம் பத்திரமாக இருக்கிறது. இசைக்கடலில் மூழ்கி முத்தெடுத்து விட வேண்டும் என்ற உத்வேகத்தில் இப்படி படித்ததெல்லாம் பார்த்திருக்கிறேன். அந்த யோகம் எனக்கு வாய்க்கவில்லை. இன்று அதைப் புரட்டிப் பார்த்ததில் கிடைத்த சங்கதிதான் கீழே உள்ளது. கல்கி அவர்களின் கைவண்ணத்தை அப்படியே தட்டச்சு கைங்கர்யம் செய்து இங்கே வழங்கியிருக்கிறேன். படித்து ரசியுங்கள்.

சங்கீத சபைகளில் டிக்கெட் வைத்து சங்கீதக் கச்சேரி நடத்தும் வழக்கத்தைப் பற்றிச் சமீபத்தில் ஒரு வாதம் எழுந்தது.

தமிழ் நாட்டில்  உள்ளவை போன்ற சங்கீத சபைகளும், டிக்கெட் வைத்துக் கச்சேரி நடத்தும் வழக்கமும் வட இந்தியாவிலே கிடையாது.

அதாவது வெகு சமீபகாலம் வரையில் இல்லை; இபோதுதான் தமிழ் நாட்டிலிருந்து இந்த ஏற்பாடு வடக்கே போயிருக்கிறது.

சரியோ, தவறோ, தமிழ் நாட்டுக்கே சிறப்பாக உரிய இந்த ஏற்பாடு எப்போது ஆரம்பமாயிற்று?

ஏதோ அறுபது வருஷம், நூறு வருஷத்துக்கு உட்பட்டதாயிருக்கும் என்று இதுவரை நினைத்திருந்தேன்.

தமிழ் நாட்டில் சுமார் ஆயிரத்து நூறு வருஷகாலமாகப் பணங் கொடுத்துப் போட்டுக் கேட்கும் வழக்கம் உண்டு என்று சில நாளைக்கு முன்புதான் தெரிய வந்தது.
இதற்கு ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அத்தாட்சி கூறுகிறார்.

mappillai swami
மாப்பிள்ளை ஸ்வாமி 


முதன் முதலாகத் தமிழ்நாட்டில் பணங்கொடுத்துக் பாட்டுக் கேட்டவர் யார் தெரியுமா?

சாக்ஷாத் பரமசிவனேதான்!

அதிலும் அவர் காசுகொடுத்துக் கேட்டது தமிழிசை தானாம்!
"தெரிந்த நான்மறையோர்க் 
கிடமாய திருமிழலை
இருந்துநீர் தமிழோ டிசைகேட்கும் 
இச்சையாற் காசுநித்தம் நல்கினீர்!"
என்று திருவீழிமிழலைப் பதிகம் எட்டாவது பாசுரத்தில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி அருளியிருக்கிறார்.


அந்தக் காலத்தில் சிவபெருமான் தமிழிசை கேட்டதற்காகக் கொடுத்த காசு, பொற் காசு! இந்த நாளில் நாம் கொடுக்கும் காசு கடிதாசு! அவ்வளவுதான் வித்தியாசம்.

தமிழிசை ஒரு நாள் கேட்டதோடு சிவபெருமான் திருப்தியடைந்து இருந்து விட்டாரா? இல்லை. நித்தம் நித்தம் காசுகொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு போய்க் கேட்டார்! தமிழோடு சேர்ந்த இசை அவ்வளவாக அவரை கவர்ந்திருந்தது!

சிவபெருமான் அவ்விதம் காசு கொடுத்துத் தமிழிசை கேட்ட இடம் எது? நாலுவேதங்களையும் ஓதி உணர்ந்த மறையோருக்கு இருப்பிடமான திருவீழிமிழலை என்னும் ஊர். வேத கோஷங்களுக்கு மத்தியில் தமிழிசையும் பெருமான் கேட்டு அனுபவித்திருக்கிறார்!

இப்படியெல்லாம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் சொல்லியிருப்பதிலிருந்து, அந்த நாளில் நமது முன்னோர்கள் தமிழிசையை எவ்வளவாக மதித்தார்கள் என்பது நன்கு தெரிகிறது.

பின் குறிப்பு:
இத்தனை வலுவான மேற்கண்ட பாராக்களுக்கு பிறகு நான் எழுதுவது அவ்வளவு உசிதம் இல்லை. ஆகையால் எனக்கு மிகவும் பிடித்த கீழ்கண்ட தாயுமானவர் பாடல்  சஞ்சய் சுப்ரமண்யத்தின் குரலில்... ராகமாலிகா ராகத்தில்... மனுஷன் அப்படியே ஆளை உருக்கியிருப்பார்... மீண்டும் சொல்கிறேன்... கர்நாடக சங்கீதம் தெரியாவிட்டாலும் என்னை போல் அவர் பாடியிருக்கும் பாவத்தை வைத்து பாடலை முழுமையாக கேளுங்கள்.. உங்கள் மன மகிழ்ச்சிக்கு நான் உத்திரவாதம்.

கர்நாடக சங்கீத தமிழ்ப் பாடல்:
பெற்ற தாய் தனை மகமறந்தாலும்..


சஞ்சய்க்கு மீசை நன்றாக இல்லை...


படக் குறிப்பு:
2008  திருவீழிமிழலை விஜயத்தின் போது அடியேன் எடுத்த மாப்பிள்ளை ஸ்வாமி என்றழைக்கப்படும் கல்யாண சுந்தரேஸ்வரர் படம்.

நன்றி ;-)

-

64 comments:

  1. மார்கழி மாசம் ஒரு தடவையாவது வடை கிடைக்குமா பார்க்கலாம்...

    ReplyDelete
  2. dear rvs

    oru vaaramaai officele bayangara aani.

    ippothan ella post um padichen.

    karnataka sangeetham pathi padichale

    manasu niraigirathu.

    thank you

    balu vellore

    ReplyDelete
  3. சங்கிதஞானமெல்லாமல் கிஞ்சித்தும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக ரசிப்பதில் ஆர்வம்..அதே போல் சுப்புடு வி.யெஸ்.வி அவர்களின் விமர்சனத்தை படிப்பதிலும் ஒர் ஆர்வம் . உ.மு.தம்பி பாட்டும் சி.பைரவி பாட்டும்...புரியப் பாடுங்க சொன்னதை ரசித்ததுக்கு காரணம் சங்கீதம் பிடிபடாமை தான்.

    அவ்வளவு உத்திர வாதம் கொடுத்ததால் சஞ்சயின் பாட்டை கட்டி இழுத்து இறக்கிவிட்டுக்கொண்டிருக்கிறேன்...ஒன்னரை மணி நேரம் ஆகும் என யூ-ட்யுப் என சொல்கிறது .. கேட்டுவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  4. காரோளி வீசும் கண்ணனே ,கண்ணனே, கண்ணனே என்று உச்சத்தை தொட்ட சஞ்சயோடு.. வயலின் காரரும் வந்தது சுகமாக இருந்தது...

    சஞ்சய்க்கு அந்த மந்திரிமீசை வித்தியாசமாகத்தான் இருந்தது...போக போக பழகிவிடும்...

    ReplyDelete
  5. படிக்க ஆரம்பித்தபோதே ஏதோ சற்று விளங்கியதுபோல இருந்தது. எங்கோ படித்த அதே மொழி நடை. கல்கியின் விமர்சனங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் குறைவிருக்காது. அம்பிக்கு கொஞ்சம் சங்கீத ஞானம் உண்டு போலும்.
    மாழ்கழி மிளகு பொங்கல் போல சூடாக நெய் மணக்க வருது.

    ReplyDelete
  6. @பத்மநாபன்
    பத்துஜி இந்த முறை ஹனுமத் ஜெயந்தி ஜனவரி ரெண்டோ மூனோ வருது. அதற்கு முன்னாலேயே உங்களுக்கு அது போன்ற ஒரு வடைமாலையில் இருந்து ஒரு வடை உங்களுக்கு.. என்ஜாய். ;-)

    ReplyDelete
  7. @balutanjore
    ரொம்ப நாளா ஆளைக் காணோமேன்னு நெனச்சேன். ஆணி பிடுங்கி களைப்பா வந்ததற்கு இதமா இருந்ததா? நன்றி ;-)

    ReplyDelete
  8. @பத்மநாபன்
    எப்படி பாடினாரோ? பத்துஜி சஞ்சய் எப்படி பாடியிருந்தார். இரண்டு முறை கேட்டேன். தாயுமானவரின் வரிகளுக்கு.... அடாடா... என்ன ஒரு rendition.... பொதுவாகவே சஞ்சய் நிறைய தமிழ்க் கீர்த்தனைகள் பாடும் வழக்கமுடையவர். எனக்கு ரொம்ப பிடிக்கும். (தக்குடு கவனிக்க!!)
    நன்றி ;-)

    ReplyDelete
  9. @கக்கு - மாணிக்கம்
    மாணிக்கம்... கொஞ்சூண்டு ஞானம் உண்டு. என் அம்மா சிறுவயதில் கர்நாடக மேடைக் கச்சேரி செய்தவர்கள். ஜீன் செய்யும் வேலை என்று நினைக்கிறேன். மற்றபடி மிருதங்கம் ஆதி தாளம் வரை கற்றுக்கொண்டேன். என் சங்கீத முயற்சிகளை ஒரு தனி பதிவாக பதிகிறேன். படித்து ரசியுங்கள். நன்றி ;-)

    ReplyDelete
  10. "ஏங்க தப்பு தப்பா தாளம் போடறீங்க.. நிறுத்துங்களேன்.."

    "அதை நிறுத்தச் சொல்லுங்க..நான் நிறுத்தறேன்.."

    பாடகரையா..என்னங்க மரியாதை இல்லாம..."

    "யோவ் நான் கொசுவைச் சொன்னேன்யா...காத்து பாடாத இடம்னு தொடைல உட்கார்ந்து கடிச்சிகிட்டே இருக்கு.."

    என் சங்கீத ஞானம் இவ்வளவுதான்!

    ReplyDelete
  11. ஒத்துக்க மாட்டேன். இவ்ளோ தெரிஞ்சு வச்சிருக்கீங்களே. அப்ப நீங்க பெரிய வித்துவான் தான்;)

    ReplyDelete
  12. //சிவபெருமான் காசு கொடுத்து கேட்ட இசை.. // அருமை :)
    ராகம் தெரியுதோ இல்லையோ சில பாடல்கள் நம்மை உருக்கி விடும் :)

    ReplyDelete
  13. //உன்னால் முடியும் தம்பியில் கூட மானிட சேவை துரோகமா என்று கர்நாடகத் தமிழ் கச்சேரியில் மேடையில்//

    அந்த பாட்டு என்ன ராகம்?னு சொல்லுங்கோ பார்ப்போம்!..:) அதுல ஒரு சூட்சமம் இருக்கு!!

    ReplyDelete
  14. //"எல்லாம் பொம்னாட்டி பேர்ல இருக்கு. அதான் கரெக்டா ஞாபகம் வச்சுருக்கீங்க//

    எனக்கும் அக்கா சொல்லர்து சரினுதான் படர்து!! ப்ருந்தாவனசாரங்கா,தோடி, நாட்டை இந்த மாதிரி ஒன்னு கூட வாய்ல வரலையே பாவி மனுஷா!!..:PP

    ReplyDelete
  15. நல்ல பகிர்வு. கல்கியின் சங்கீத விமர்சனங்கள் நகைச்சுவை ததும்ப இருக்கும். மீசை ? ஆமாம் இல்லாம பார்த்துப் பார்த்து இப்ப இருக்கும்போது நன்றாக இல்லை. :) நாம் பாட்டை எங்க கவனிக்கிறோம், சஞ்சய் பாடினா மீசை, வேற யாராவது பாடினா ஜிமிக்கி......

    ReplyDelete
  16. சிவபெருமான் காசு கொடுத்து பாட்டு கேட்டதாகச் சொல்லப்படும் திருவீழிமலைக் கோவிலுக்கு இரு வருடங்கள் முன் சென்றிருந்தேன். நான் இதை முழுமையாக நம்புவதால் உடல் சிலிர்த்தது. அருமையான பழமையான கோவில்.
    // மாமி இப்போது மருந்துக்கு கூட வாயைத் திறப்பது இல்லை//

    மாமிக்கு ப்ளாக் படிக்கும் வழக்கம் உண்டா என்று கேட்டீர்களா?

    ReplyDelete
  17. // "தெரிந்த நான்மறையோர்க்
    கிடமாய திருமிழலை
    இருந்துநீர் தமிழோ டிசைகேட்கும்
    இச்சையாற் காசுநித்தம் நல்கினீர்!"//
    புத்தம் புதிய செய்தி தெரிந்து கொண்டேன். தமிழிசை இறைவன் கேட்டது என்பதை சுந்தரமூர்த்தி நாயனாரின் “ஏழிசையாய் இசைப்பயனாய் என்னுடைய தோழனுமாய” என்று கூறியதில் அறிந்தேன். காசு கொடுத்து கச்சேரி கேட்கப் போனதை இப்போது அறிந்தேன்.
    நல்ல இலக்கியச் செய்தியைப் பதிந்தமைக்கு நன்றி..

    அம்மா மேடைக்கச்சேரி செய்பவர் என்றால் தாங்களும் பாடித்தானே ஆக வேண்டும். இசைக்கு மட்டும் அப்படி ஒரு ஜீன் உண்டே..

    சஞ்சை நல்லா பாடராரு.. ஆனா கண்ணை மூடிக்கிட்டே கேக்கனும் போல இருக்கே
    RVS

    இலக்கிய இசையறிவை அறிய ஆசையாய்..காத்திருக்கிறோம்..

    நல்ல பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  18. சஞ்சய் சுப்பிரமணியம் பாடல் பார்த்தேன்/ கேட்டேன். அருமை. வீட்டில் கேட்டு விட்டு சஹானா, சாரங்கா அல்லது ஹமீர் கல்யாணி, காபி பாடுகிறார் என்றார்கள். பஃபர் ஆக தாமதம் ஆகும்போது அவர் முகம் ...!

    ReplyDelete
  19. //இவ்ளோ தெரிஞ்சு வச்சிருக்கீங்களே. அப்ப நீங்க பெரிய வித்துவான் தான்;)// RVS anna, ithu yethoo sendil&koundamani jokela varum nakkal maathiri irukkumonu konjam doubtaa irukku! yethukkum jakkrathaiyaavey irungo!!,,:))

    ReplyDelete
  20. இசை அலசல்....தெளிவான நிறைவான சங்கீத ஞானம் உங்களுக்கு.நிச்சயம் ஒருநாள் உங்கள் கச்சேரியின் காணொளியும் போடணும் !

    ReplyDelete
  21. சிவனே காசு கொடுத்திருக்கார், அப்புறம் நாமெல்லாம் எங்க?.

    அப்புறம் அந்த பக்கத்துக்கு வீட்டு மாமி, ஒருவேளை டிசெம்பர் சீசன் முடிஞ்சு பாட ஆரம்பிச்சாலும் ஆரம்பிப்பாங்க. :)

    தமிழ்ல பாடுனா கொஞ்சம் புரியுது, ராகம் தெரியலன்னாலும் குறைஞ்சது வார்த்தைகளாவது புரிகிறது.

    அப்புறம் இந்த தொடை தட்டுறது, காத்துல கைய வீசுறது.. இதெல்லாம் எதுக்குன்னே தெரிய மாட்டேங்குது :(.

    ReplyDelete
  22. @ஸ்ரீராம்.
    நல்ல ஜோக். நிசமாவா.. அப்படி தெரியலையே.. ;-)

    ReplyDelete
  23. @வித்யா
    ஹையோ..ஹையோ.. வித்துவானும் இல்லை தத்துவானும் இல்லை.. சும்மா கத்துவேன் அவ்வளவுதான்...
    பாராட்டுக்கு நன்றி.. ;-)

    ReplyDelete
  24. @Balaji saravana
    இதப் பாட்டு அப்படித்தானே இருந்தது பாலாஜி? ;-)

    ReplyDelete
  25. @தக்குடுபாண்டி
    சுப்புடுக்கு தம்புடு... தெரியலையே... நீயே சொல்லப்பா.. ;-)

    ReplyDelete
  26. @தக்குடுபாண்டி
    இப்படி ஏதாவது எழுதினா உடனே தலையை நீட்டி கமென்ட் போட்டே காச்சி எடுத்துடு..... இன்னமும் ஜகன்மோகினி போன்ற ராகங்கள் எல்லாம் வேற இருக்கு. நித்யஷ்ரீ அக்கா ஜெகன்மோகினியில் ஒரு ராகம் தானம் பல்லவி பாடியிருக்கா பாரு... அடாடா.. கேட்டுண்டே இருக்கலாம். சென்னை வரும்போது நோக்கு சி.டி தரேன்.. ஓ.கே ;-)

    ReplyDelete
  27. @வெங்கட் நாகராஜ்
    கண்ணை மூடி பாட்டு கேட்கும் பக்கும் இன்னும் எனக்கு வரவில்லை தல. ;-) ;-)

    ReplyDelete
  28. @geetha santhanam
    மேடம் திருவீழிமிழலை ஒரு அற்புதமான சிவத்தலம். மூலவர் சந்நிதியில் பின்னால் தம்பதி சமேதராய் சிவன் வீற்றிருப்பார். இப்போது வரும் நிறைய படங்களில் பாடலுக்கு இது தான் ஷூட்டிங் ஸ்பாட். ராசியாக இருக்கிறதாம். பக்கத்திலேயே இன்னொரு பாடல் பெற்ற சிவத்தலம் உள்ளது. கருவேலி கொட்டிட்டை. அற்புதமான கோவில். கருத்துக்கு நன்றி ;-)
    அப்புறம் ... அந்த பக்கத்து வீடு மாமி கம்ப்யூட்டரை பார்த்தால் "டி.வி. புது மாடலா இருக்கு..." என்று கேட்கும் அளவிற்கு ஞானம் உள்ளவர். நன்றி ;-)

    ReplyDelete
  29. @ஆதிரா
    கச்சேரி செய்பவர் அல்ல.. கச்சேரி செய்தவர் அவ்வளவுதான்.. ஒன்றும் பெரிய ஸ்டார் இல்லை.
    என் மனைவிக்கு வீணை வாசிக்கத் தெரியும். எங்கள் வீட்டில் நான் தான் சங்கீத ஞான சூனியம். உங்கள் பாராட்டுக்கு நன்றி. ;-)

    ReplyDelete
  30. ஆஹா... இதப்பார்ரா... இவங்க ஞான் சூனியமாம்.

    சூனியம் என்றால்... முழுமை என்றும் ஒரு பொருள் உண்டு.. அதுவா!!!

    அடக்கம் அமரருள் உய்க்கும்..கதையா...இது..

    ReplyDelete
  31. @ஸ்ரீராம்.
    இப்படி ஜிமிக்கி மீசை என்று எழுதினால் பாட்டைக் கேட்டாதானே என்று தலைநகரத் தலை வெங்கட் நாகராஜ் கிண்டல் பண்றார். என்ன செய்யறது.. ;-)

    ReplyDelete
  32. @தக்குடுபாண்டி
    யாராவது உண்மையிலேயே பாராட்டினாக் கூட காணவிட்டேன் என்கிறாய். சங்கீதத்தில் நான் துக்கடா நீ கீர்த்தனை போதுமா.. ;-) ;-)
    (ஒரு பாராட்டு கிடைக்க விடமாட்டேன்றாங்கப்பா.. ;-) )

    ReplyDelete
  33. @ஹேமா
    அப்படி ஒன்னும் பெரிய ஞானம் கீனம் எல்லாம் ஒன்னும் இல்லைங்க... நிறைய பாட்டுக் கேட்பேன்.. அவ்வளவுதான்.. பாராட்டுக்கு நன்றி.. ;-)

    ReplyDelete
  34. @இளங்கோ
    பக்கத்து வீட்டு மாமி பாடனும்ன்னு சொல்லி ஏம்ப்பா என்னை சபிக்கிற...
    நமக்கு நாமே தெம்பூட்டிக்க தானே இவ்ளோ பெருசா எழுதினேன்.. ஒன்னும் இல்லை.. குரலை நெளிச்சு, இழுத்து, வளைச்சு எப்படி பாடறாங்கன்னு கூர்ந்து கவனித்தாலே அதன் மேல் ஒரு பிடிமானம் வந்துடும்... ஒன்னுரெண்டு நாம் முயற்சி பண்ணி பார்க்கும் போது அது எவ்ளோ கஷ்டம் என்று தெரியும். அப்போது அதன் மேல் மதிப்பு வந்துவிடும்..
    கருத்துக்கு நன்றி இளங்கோ ;-)

    ReplyDelete
  35. @ஆதிரா
    நமக்கு எதிலுமே அடக்கம் கிடையாது.. வாயாடறதில் ஆரம்பித்து எல்லாத்திலும் அடங்காமை தான் ஆதிரா... பாடல்கள் நிறைய கேட்டு கேட்டு புரிந்து கொள்ள முயல்கிறேன். அந்த அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து "கொல்கிறேன்". கணக்குல சூனியம் வாங்கினா பாஸ் போட மாட்டேன்க்ராங்களே!!! என்ன பண்ணலாம்.. சும்மா தமாசுக்கு.. நன்றி ஆதிரா... ;-)

    ReplyDelete
  36. dear rvs

    enakkum kelvi gnanam mattumthan.

    (sangeetha) vathiyar pillai makkuthane?

    ungal idhu ponra sangeetham patriya pathivugalai aavaludan ethirpaarkkiren.

    balu vellore

    ReplyDelete
  37. "வாசி தீரவே காசு நல்குவீர்
    மாசின் மிழலையீர் ஏசல் இல்லையே"-
    என்று ஒரு பதிகம் உண்டு. படிக்காசு பெற்ற பதிகம் என்றே பெயர். ஒவ்வொரு ஈரடிக்கும் ஒரு பொற்காசு பரிசாகத் தந்தாராம் ஈசன்."சிவபெருமான் கேட்ட சங்கீதம்"- தலைப்பே என்னை கவர்ந்தது. உண்மை. நிச்சயமாய் அவன் தமிழ்ப் பிரியன். நான் சிவபக்தன். இப்போதெல்லாம் நான் தேவாரம் திருவாசகம் அதிகம் பாடுவதில்லை.நானே கவிஎழுதி இறைவன் முன்னே பாடுகிறேன். நிறைய எழுதிவிட்டேன். இறைவன் ஆணையிட்டால் அவற்றிற்காக தனி ப்ளாக் தொடங்க உத்தேசம்.

    ReplyDelete
  38. உங்கள் பின்னூட்டத்தில் ஒரு திருத்தம் RVS ."பெற்ற தாய்தனை மக மறந்தாலும்"- தாய்மானவரின் பாட்டல்ல. வள்ளலாருடையது. இதற்கு அடுத்த வரிகள் இன்னும் உருக்கமாக இருக்கும். "இன்னும் பற்பல நாளிருந்தாலும், இக்கணந்தனிலே இறந்தாலும் .......நமச்சிவாயத்தை நான் மறவேனே" என்று போகும். திருவருட்பாவை திருவாசகத்தின் தொடர்ச்சி எனலாம்.

    ReplyDelete
  39. //மானிட சேவை// பாட்டு பூர்ணசந்த்ரிகா ராகத்துல அமைஞ்சது. இந்த ராகத்தோட சிறப்பு இது அச்சு அசல் ஜனரஞ்சனி ராகம் மாதிரியே இருக்கும், ஆனா ஜனரஞ்ஜனி கிடையாது, சில கல்யாண ஆத்துல ஒரே மாதிரி ரெண்டு பேர் நாம பாக்கறோம் இல்லையா அதை மாதிரி(ரெண்டு பிகர்னு நான் சொல்லலை என்பதை பத்துஜிக்கு சொல்லிகறேன்). இந்த ஜனரஞ்ஜனியோட அப்பா தியாகராஜர்தான். அவர் தான் பூர்ணசந்த்ரிகாலேந்து ஜனரஞ்ஜனியை ஸ்ருஷ்டிச்சார்.

    ReplyDelete
  40. எங்கே இருக்கிறது திரு..மலை?

    ரெண்டு பதிவா பக்கத்து வீட்டு மாமியைக் காணோமேனு பாத்தேன்..

    இந்த கர்னாடக சங்கீதம் பெங்களூர்ல பாடுவாங்களே அதா?

    ReplyDelete
  41. திருவீழிமிழலை.. வெட்டு ஒட்டு வேலை செய்யவில்லை திடீரென்று. எங்கே இருக்கிறது திருவீழிமிழலை?

    ReplyDelete
  42. ஸ்ரீராம் தாளம் தான் எனக்கும் பழக்கம்.

    அட்டகாசம் ஸ்ரீராம்.. நான் ஏதோ நாயகன் டயலாக் எடுத்து விடறீங்களோனு நெனச்சேன்.

    ReplyDelete
  43. சங்கீத சீசன் சூப்பர்.
    //திருவீழிமிழலை விஜயத்தின் போது அடியேன் எடுத்த மாப்பிள்ளை ஸ்வாமி என்றழைக்கப்படும் கல்யாண சுந்தரேஸ்வரர் படம்.//
    திருவீழிமிழலை எங்கேங்க இருக்கு?

    ReplyDelete
  44. // (ரெண்டு பிகர்னு நான் சொல்லலை என்பதை பத்துஜிக்கு சொல்லிகறேன் ) // தக்குடுக் கண்ணா நீ சொன்னாலும் தப்பில்லை ..சொல்லலாம் ...ஜொள்ளலாம் ..லாம் ..லாம் ..அதுக்கு உனக்கு எல்லா உரிமமும் இருக்கு ( உரிமத்தை விரைவில் பிடுங்க கல்லிடையில் வேலை நடந்துக்கிட்டு இருக்கு ).

    அதே சமயத்தில் உன்னை கேடயமாக வைத்துக்கொண்டு வலிக்காமல் பண்டிகை கொண்டாடுபவர்களை என்ன சொல்வது ?

    ReplyDelete
  45. // ஸ்ரீராம். said... "யோவ் நான் கொசுவைச் சொன்னேன்யா...காத்து பாடாத இடம்னு தொடைல உட்கார்ந்து கடிச்சிகிட்டே இருக்கு.." என் சங்கீத ஞானம் இவ்வளவுதான்!//

    ஸ்ரீராம் சூப்பர். நானும் அப்படியே. எனக்கு பிடிக்கும் ஆனால் ஒரு சில பாடல்கள் தான்.

    அப்பாதுரை

    கர்நாடக இசை பெங்களூரில் பாடுவது தானே - துரை திருவையாறு பிள்ளை நீங்கள் - ரொம்ப கிண்டலு உங்களுக்கு

    ReplyDelete
  46. கச்சேரி களை கட்டுது. தக்குடுவின் விளக்கமும் அருமை.

    ReplyDelete
  47. //ரெண்டு பதிவா பக்கத்து வீட்டு மாமியைக் காணோமேனு பாத்தேன்//

    போறபோக்கை பாத்தா பக்கத்தாத்து மாமிக்கு தனியா ஒரு ரசிகர் மன்றம் வந்துடும் போலருக்கே!!
    தஞ்சாவூர் பாலு அண்ணாவும் சங்கேத பாஷைல அதைதான் சொல்றாரோ??..:P

    அப்பாஜி, ப்ரொபைல் போட்டோல என்னது அது நரியா?

    ReplyDelete
  48. RVS sir, first time in your blog, coming from thakkudu blog. music Post romba beautifula irukku, congrats!!

    Note - Music sambanthama yeluthinaa magudi uuthina maathiri Thakkudu anga vanthuduvar..:) Maharajapuram-nu google pannumpothuthan naan avaroda blogai pudichen.

    Ranjani Iyer

    ReplyDelete
  49. @balutanjore
    அப்பா..சங்கீதம் கற்றுக்கொடுக்கும் வாத்தியாரா.. மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி சார்! ;-)

    ReplyDelete
  50. @சிவகுமாரன்
    தாயுமானவர், வள்ளலார் எப்பவுமே எனக்கு சிறு குழப்பம் எப்பவுமே வரும். நன்றி. பெயருக்கு ஏற்றாற்போல் சித்தமெல்லாம் சிவமயமாக இருக்குறீர்கள். மிகவும் மகிழ்ச்சி. நன்றி ;-)

    ReplyDelete
  51. @தக்குடுபாண்டி
    ஆஹா... அற்புதமான விளக்கம்.. என்னக்கி கச்சேரியை வச்சுக்கலாம்? நடு நடுவே... பத்துஜியை வம்புக்கு இழுத்து அது என்ன கொனஷ்டை.. ;-) ;-) பேஷ் பேஷ்.. பலே..பலே.. ;-)

    ReplyDelete
  52. @அப்பாதுரை
    திருவீழிமிழலை... கும்பகோணம் - மாயவரம் நாச்சியார்கோயில் பேருந்து தடத்தில் செல்லும் போது பேரளத்திர்க்கு பக்கத்தில் வரும். அதி அற்புதமான இயற்கை எழில் சூழல் நிறைந்த கோயில்.

    ReplyDelete
  53. @ஜிஜி
    நன்றி ஜிஜி.
    திருவீழிமிழலை வழித்தடம் மேல் கமென்ட்டில் காண்க. நன்றி ;-)

    ReplyDelete
  54. @புவனேஸ்வரி ராமநாதன்
    அப்டியெல்லாம் சொல்லாதீங்க.. எனக்கே இது அப்படித்தான்.. கேள்வி பதில் ஞானம் எல்லாம் வைத்து ஏதோ புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். நன்றி ;-)

    ReplyDelete
  55. @பத்மநாபன்
    ஒ. இந்தக் கூத்தில உரிமம் வேற இருக்கா? யார் தராங்க இந்த உரிமம். நீங்க தான் ஏஜென்டா.. உங்களை அணுகலாமா..
    (சிவனேன்னு போய்கிட்டு இருந்தவனை... ம்..ம்.. ;-) ;-) )

    ReplyDelete
  56. @Ranjani Iyer
    Welcome. மிக்க மகிழ்ச்சி. நன்றி தக்குடு பெரிய பாகவதர், உம்மாச்சி உபன்யாசகர்.. இப்படி பன்முகத்தன்மை படைத்த கட்டிளம் காளை.
    (யப்பா... தக்குடு.. உன்னைப் பற்றி நிறைய சொல்லியிருக்கேன்.. திரும்ப திரும்ப செட் சேர்த்துண்டு அடிக்காதே... நன்றி ;-) ;-) ;-) ;-) ஹா ஹா ;-) )

    ReplyDelete
  57. கேள்வியை பார்த்தா , கெடச்சா இரண்டு உரிமம் வாங்கிருவிங்க போலிருக்கு ...குளிர் காலத்தில் குளிர் விட்டுபோச்சு ..வரட்டும் மோகன்ஜி வூடு கட்ட சொல்றேன் ....

    ReplyDelete
  58. @சைவகொத்துப்பரோட்டா
    நன்றி பரோட்டா.. நடுவில உங்களை மிஸ் பண்ணிட்டேன். ;-)

    ReplyDelete
  59. @பத்மநாபன்
    குளிர்ல துளிர் விட்டு போய்டுச்சு... ரைட்டா... எல்லாம் சகவாச தோஷம் பத்துஜி.. தக்குடுவோட சகவாச தோஷம்.. சொன்னா நீங்க வேறேதாவது சொல்லி எம்மேலே குண்டைத் தூக்கிப் போடுறீங்க.. என்ன பண்றது? ;-) ;-)

    ReplyDelete
  60. என்னைப் பாத்தா நரியாட்டமா இருக்கு தக்குடு..சரிதான். ஐமீன், சரிதான்னேன்.
    (அப்பாவைப் படம் வரைஞ்சு கொடுன்னு மகனைக் கேட்டா, இதைக் கொடுத்தான்.)

    ReplyDelete
  61. //@அப்பாதுரை
    திருவீழிமிழலை... கும்பகோணம் - மாயவரம் நாச்சியார்கோயில் பேருந்து தடத்தில் செல்லும் போது பேரளத்திர்க்கு பக்கத்தில் வரும். //

    இந்த மாதிரி ஊர்களின் பெயர்களை நடத்துனரிடம் சொல்லி டிக்கெட் வாங்குவதற்கு இது உதவும். யாரு உச்சரிக்க ட்ரை பண்ணறது ?

    ReplyDelete
  62. தி. ஜானகிராமன் கதை ஒன்று நினைவு வருகிறது. ஒரு VIP கச்சேரி ஒன்றிற்கு வருவார். கச்சேரியை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசுவார். பிறகு பாகவதரை தனிமையில் சந்தித்து அவரிடம் பாடம் படிக்க வேண்டும் என்பார் பிறகு அவரிடம் நீங்க பாட்டெல்லாம் சொல்லித்தர வேண்டாம். இந்த மாதிரி கச்சேரிக்கு நடூல நடூல எந்தெந்த இடத்துல ஆஹா சொல்லணும், எப்போ பேஷ் பேஷ்ணு சொல்லணும், எங்க கண்ணை மூடி தலையை ஆட்டி ரசிக்கனும்னு சொல்லித்தந்தா போதும்னுவார். உங்கள் பதிவுகள் அசத்தலாக இருக்கின்றன வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  63. @வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
    மேடம்... தி.ஜா கதை மூலம் என்னை VIP ஆக்கியதற்கு நன்றி ;-) இம்முறை தினமணி தீபாவளி மலரில் இந்தக் கதை இடம் பெற்றிருக்கிறது. நானும் படித்தேன்.
    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் இன்னொரு நன்றி ;-)

    ReplyDelete