உள்ளுக்குள் தூங்கிக்கொண்டிருந்த சிம்மத்தை பாட்டுப் பாடி எழுப்பியாச்சு. இந்த கர்நாடக சங்கீதம்...சினிமாவில் எப்படி உபயோகிச்சுருக்காங்கன்னு பார்த்தோம்னா.. ஐயோ.. ஒங்கூட ஒரே ரோதனையாப் போச்சுப்பான்னு நீங்கள் சாய் மாதிரி புலம்புவது கேட்கிறது. இது கொஞ்சம் வித்தியாசமான பதிவு. இவ்வளவு ரணகளப் பட்டதோடு ப்ளீஸ் கொஞ்சம் இதையும் கேளுங்களேன். இதில் நிறைய சேர நன்நாட்டுப் படங்கள் இடம் பெற்றிருக்கும். அங்கேதான் ஒரு மிருதங்கமும், தம்புராவையும் தூக்கிக்கொண்டு மரத்தூண் வைத்த விசாலமான திண்ணையிலோ அல்லது மழை விழும் முற்றத்திலோ உட்கார்ந்துகொண்டு பாட ஆரம்பித்துவிடுகிறார்கள். அரக்கு கலர் ரவிக்கைப் போட்டு கேரள முண்டு கட்டிக்கொண்டு முறைபெண்ணோ காதலியோ நெற்றியில் சந்தனக் கீற்றோடு தூணில் மறைந்து சங்கீத லுக் விடுவதற்கு உடனே தயார். சொல்லவா வேண்டும் கச்சேரி களை கட்டி விடும். இது போன்ற பத்துக்கு ஒன்பது படங்களில் மோகன்லாலும் நெடுமுடி வேணுவும் கட்டாயம் அடவு கட்டியிருப்பார்கள். "யாரானு... எந்தானு..." என்று கேட்டுக்கொண்டு தலையை ஆட்டி திண்ணைக் கச்சேரி, முற்றம் கச்சேரி என்று இன்ஸ்டன்ட்டாக தொடங்கிவிடுகிறார்கள்.
முதலில் தமிழில் ஆரம்பிப்போம். தமிழில் கே.பி தான் அதிகமாக கர்நாடக இசையை பிரதானமாக வைத்து படங்கள் இயக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன். உன்னால் முடியும் தம்பி, சிந்து பைரவி, அபூர்வ ராகங்கள்.... என்று வரிசை நீள்கிறது.
மஹா கணபதிம்... ஒரு கர்நாடக சங்கீத இசைக் களனில் உருவான படத்தை ஹிட் செய்த பெருமை இளையராஜாவுக்கு உண்டு. இசைக்கு போட்டியாக கே.பியின் டைரக்ஷன். இவ்விரு இமயங்கள் போட்டி போட்டுக்கொண்டு உழைத்ததில் ரசிகர்களுக்கு நல்ல விருந்து. சரக்கடித்துவிட்டு வந்த மிருதங்கிஸ்ட் டெல்லி கணேஷை அவையை விட்டு வெளியே போகச் சொல்லி ஒத்தை வயலினோடு ரசிகர்களின் கரவொலியையும் சேர்த்து இசைஅமைத்த பெருமை ராஜாவையே சேரும்.
என்னை என்ன செய்தாய் வேங்குழலே... சுதா ரகுநாதன் பாடியது.. இவன் படத்திற்காக. ஹெலிகாப்டர் விபத்தில் இறந்துபோன அழகுக் கோணல் வாய் சௌந்தர்யா கச்சேரியாக வாயசைத்தது. நடுநடுவில் வரும் பார்த்திபனின் கிறுக்கல்கள் அபாரம்... சபாக்களின் பாட்டுக் கச்சேரிகளின் போது சில கழிசடைகள் என்னென்ன சேட்டைகள் செய்கிறது என்று காண்பித்திருப்பார் ரா.பார்த்திபன். ரொம்ப நாளா ஆளையே காணோமே.. இக்கட ரா ரா பார்த்திபன்.
ஏழு ஸ்வரங்களுக்குள் - வாணி ஜெயராம் பாடிய பாடல். நல்ல தேஜஸோடு இளவயது ஸ்ரீவித்யா ரஜினியின் அறிமுகப் படமான அபூர்வ ராகங்கள் படத்திற்காக பாடியது. எம்.எஸ்.வி அவர்களின் இசை கோலத்தில்... யார் யாரை கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்பதை சிக்கு போட்டு பிரித்து எடுத்திர்ப்பார் கே.பி.
ஆந்தோளனம் - ஜேசுதாஸ்... சித்ரா.... பாடிய.. சர்க்கம் படப் பாடல்.. தமிழ்ப் படங்களில் தொடையழகியாக வலம் வந்த ரம்பா... இழுத்து போர்த்திக்கொண்டு கள்ளம்கபடமற்ற பெண்ணாக வீணை மீட்டி மாடு மேய்க்கும் வினீத்தை நினைத்து பாடும் பாடல்.. வாயில் வெற்றிலையுடன் நெடுமுடி வேணுவின் நடிப்பு அற்புதம். கிருஷ்ணனைப் பற்றிய பாடல்... அற்புதம்.. கேதார கௌள ராகம்.. கோக்களை மேச்சும் களிச்சும் சிரிச்சும்..
நகுமோ... மோகன்லால். நிறைய கர்நாடக சங்கீதப் பாடல்களில் வாயசைத்த பெருமையுடைவர் இந்த தம்பிரான். நன்றாக கூர்ந்து கவனித்தால் எவ்வளவு ஸ்பஷ்டமாக மோகன்லால் உதட்டசைத்து உள்ளம் உருகி நடித்திருப்பது தெரியும். நிறைய நடிகர்களுக்கு பெரிய பெரிய வசனங்களுக்கே லாங் ஷாட் போய்விடுவார்கள். ஒரு தியாகராஜர் கீர்த்தனைக்கு ஜேசுதாஸ் பாடியதற்கு க்ளோஸ் அப்பில் நடிகரின் முகம் காண்பிப்பது அங்கிள் பன்ணின் மேல் வைத்த அசைக்கமுடியாத நம்பிக்கை. சித்ரம் படப் பாடல்.
நாத ரூபிணி - எம்.ஜி. ஸ்ரீகுமார். ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா ஒரு ஹிட் ஃபிலிம். தற்போது கமல் கட்டுப்பாட்டில் இருக்கும் கவுதமி மோகன்லால் நடித்த படம். கர்நாடகப் பாடல்கள் நிறைந்த படம் என்றாலே அங்கே நெடுமுடி வேணுவும் ஆஜர். இந்தப் பாட்டிற்க்காக ஸ்ரீகுமாருக்கு தேசிய விருது கிடைத்தது என்று நினைக்கிறேன். ப்ருகாக்களை அள்ளி விட்ருப்பார்.
சாதிஞ்சனே - கே.ஜே ஜேசுதாஸ், டி.என். சேஷகோபாலன், சித்ரா. உங்கள் காது கர்நாடிக் காதாக இல்லாவிட்டாலும் நிச்சயம் கேளுங்கள். மூன்று பாடகர்களின் தேன் குரல் சங்கமத்தில் நீங்கள் முழுவதுமாக கரைந்து போவீர்கள். பாடல் முழுக்க அந்த ஹீரோ உட்கார்ந்து பாடும் இடங்களும், பாவாடை சட்டை போட்டு நெற்றியில் சந்தனக் கீற்றோடு ஹீரோயின் பார்க்கும் காதல் பார்வைகளும்... கேட்பது தியாகராஜர் கீர்த்தனையா அல்லது ரொமாண்டிக் டூயட்டா என்று தெரியாமல் போகிறது. பியூட்டிஃபுல். ஆரபி ராகம். (சிந்து பைரவியில் ஜட்ஜுக்கும் டிரைவருக்கும் வரும் சங்கீத சண்டையில் பேசப்படும் அதே ராகம்) படம் சோபனம்.
ராம கதா... சிபி மலையில் இயக்கத்தில் பல விருதுகளைக் குவித்த பரதம் படப் பாடல். வழக்கம் போல் ஜேசுதாஸ் பாடியிருக்கிறார். வழக்கம் போல் மோகன்லால் நடித்திருக்கிறார். வழக்கம் போல் நன்றாக இருக்கிறது. வழக்கம் போல் நீங்களும் கேளுங்கள்.
பாவயாமி... ஜெயா டி.வியில் ஹரியுடன் நானில் ஜேம்ஸ் மற்றும் ஹரியுடன் உட்கார்ந்து எல்லோரையும் கலாய்க்கும் சரத் இசையமைத்து பாடியது... எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம் மேடம் பின்னூட்டத்தில் இட்டது... அட்டகாசமான பாடல்....
படக் குறிப்பு: முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை முழு முதலாக் கொண்டு மார்கழி ராகம் என்று டி.எம். கிருஷ்ணா மற்றும் பாம்பே ஜெயஸ்ரீயை வைத்து ஒரு படம் எடுத்து திரையரங்குகளில் வெளியிட்டார்கள். ஓடியதா அல்லது தியேட்டரை விட்டு வெளியே ஓடியதா என்று தெரியாது. இந்தப்பதிவிற்கு ஒரு படமாக இந்தப் படம் உதவியது.
ரசிக நெஞ்சங்கள் விருப்பப்பட்டால் இன்னும் பகிர்வேன். ;-)
நன்றி.
-
மிருதங்க சக்ரவர்த்தியை விட்டுவிட்டீர்களே ?? அற்புதமான மிருதங்க வாசிப்பு அதில். சிவாஜி கொஞ்சம் ஓவர் ஏக்ட் பண்ணியிருப்பார் அதில். (டைரெக்டர் ஞாபகம் இல்லை ).
ReplyDeleteரசிக்கிறேன். தொடருங்கள்.
ReplyDeletenice work! keep it up
ReplyDeleteநல்ல பகிர்வு. மலையாளத்தையும் விட்டு வைப்பதில்லை என்று முடிவு பண்ணியிருக்கிறீர்கள் போலிருக்கிறது. தூள் கிளப்புங்கள்.
ReplyDeleteஆஹா ஆனந்தம்....
ReplyDeleteஹிஸ் ஹைனஸ் அப்துல்லா - அப்படத்தின் பாடல்களுக்காகவே நான் மிகவும் ரசித்த படம்.
பகிர்வுக்கு நன்றி.
RVS
ReplyDeleteஹிஸ் ஹைனஸ் அப்துல்லா - பாடல்களுக்காகவே நான் மிகவும் ரசித்த படம்.
எனக்கு தெரிந்து யேசுதாஸை வைத்துக்கொண்டு மலையாள படங்களில் கர்நாடக சங்கீதத்தை வைத்து கொடுத்த பாடல்கள் ஏராளம். எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். என் சித்தப்பா மகன் யேசுதாசின் கலக்க்ஷன் ஒரு பன்னிரண்டு ஜி.பி எம்.பி.3 பாடல்கள் வருகின்றது.
அபூர்வ ராகங்கள் - Class movie and class songs. எம்.எஸ்.வி. "டைரக்டர் 40" நிகழ்ச்சியில் அபூர்வ ராகங்கள் படித்தில் நாலே ஸ்வரத்தில் அமைத்த "அதிசய ராகம்" பாடலை பற்றி சொன்னார்.
தற்போது "மேகதீர்த்தம்" என்று ஒரு மலையாள படம். படம் ஒரு நாள் ஓடியிருந்தால் அதிகம். அனால் அதில் பாவயாமி பாடும் நேரம் என்று ஒரு அற்புதமான பாடல் இருக்கிறது. சரதத் இசையமைத்து அவரே பாடி இருக்கும் பாடல், திரையில் அற்புதமாய் அபிநயித்தவர் சாயிகுமார்.
ReplyDeleteஏழு ஸ்வரங்களுக்குள் ....
ReplyDeleteசிம்மம் சீறி பாய்ந்து கொண்டிருக்கிறது தெரிகிறது தேர்வுகளில்...
ReplyDeleteபாலசந்தரின் சிந்துபைரவி இசை தென்றலான படம்..ஒவ்வொரு பாத்திரத்தையும் இசை பேச வைத்திருப்பார்..
அதிசய ராகம்...ஜேசுஅண்ணாவின் ஆனந்த ராகம்..
அவ்விட தேசத்து பாட்டுக்களை ராத்திரி கேட்டு விட்டு வருகிறேன்...
நல்ல பகிர்வு..
ReplyDeleteஅற்புதமான தெரிவுகள்...
ReplyDeleteஅபூர்வ ராகங்களின் ஏழு ஸ்வரங்கள் பிடிக்கும். நகுமோ பால முரளி பாடி பிடிக்கும். ஆந்தோளனம் அழகு...ரம்பாவா அது? லாலேட்டா... அற்புதம். சரத் பின்னி விட்டார்
ReplyDeletedear rvs
ReplyDeletepinneyum valara nanni.
swathi thirunaal padathinde pattukal
kettutundo
pinne nirakudam padathil dasettan
padia NAKSHATRA DEEPANGAL ?
NANNI THODARUKA
BALU VELLORE
@எல் கே
ReplyDeleteஇன்னும் நிறைய இருக்கு எல்.கே. கையை இழுத்துக்கிட்டேன்.. ;-) அப்புறமா போடறேன்.. கர்நாடிக் ரொம்ப ஓவர் டோஸ் கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன். ;-)
@DrPKandaswamyPhD
ReplyDeleteநன்றி சார்! கொஞ்சம் கேப் விடலாமா என்று யோசிக்கிறேன். எதுக்களிக்கப் போகிறது.. ;-)
@Samudra
ReplyDeleteThanks ;-)
@கோவை2தில்லி
ReplyDeleteநன்றிங்க.. மலையாளத்தில் இதைத் தவிர்த்து இன்னும் சில நல்ல பாடல்கள் உள்ளன.. கொஞ்ச நாள் கழித்து போடுவோம்.. ;-)
@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteஆமாம் தல. மிக நல்ல படம். ;-)
@சாய்
ReplyDeleteஅந்த எம்.எஸ்.வி ப்ரோக்ராம் நானும் பார்த்தேன். அவர் பால முரளி கிருஷ்ணாவுக்கு நன்றி சொன்னார். ;-)
@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
ReplyDeleteநன்றிங்க.. இந்தப் பதிவில் சேர்த்துவிட்டேன்.. ரொம்ப அழகாகப் பாடுகிறார் சரத்... முதன் முறையாக கேட்கிறேன்.. ;-)
@கே.ஆர்.பி.செந்தில்
ReplyDelete//ஏழு ஸ்வரங்களுக்குள் ....// எத்தனை பாடல்..,.;-)
@பத்மநாபன்
ReplyDeleteபத்துஜி. கட்டாயம் அந்த மலையாளப் பாடல்களை பாருங்கள்.. அசந்து போவீர்கள்.. நன்றி ;-)
@வித்யா
ReplyDeleteநன்றி ;-)
@ஸ்ரீராம்.
ReplyDeleteரசித்து ஒவ்வொன்றாக டினாமிநேஷன் போட்டு ரசித்த கமென்ட் போட்டதற்கு நன்றி ;-)
@balutanjore
ReplyDeleteநன்றி சார்! ஆங்கில மலையாளத்தில் பின்னோட்டம்.. சூப்பர்.. ;-)
நீங்கள் சொன்ன பாடல்களும் உண்டு.. ரொம்ப கோர்க்க முடியலை.. ஆணியையும் பார்க்கணும் பதிவையும் பார்க்கணும்.. ஒன்னும் முடியலை.. ;-)
நகுமோ அபாரம், சித்ரம் படத்தில் இன்னொரு ஹீரோயின் நடித்திருப்பாரே, அவர் பெயர்.என்ன ?( ப்ரீத்தி?) சித்ரம் பாத்துட்டு வந்தப்ப கூட பசங்க நமுட்டு சிரிப்பு சிரிச்சாங்க.
ReplyDeleteஅழகான பாடல் தேர்வுகள். பரதம், ஹிஸ் ஐனஸ் அப்துல்லா இந்த படங்களெல்லாம் பாடல்களுக்காகவே ஓடிய படங்கள். கடைசி பாடல்கள் இன்னும் கேட்கவில்லை. இப்போது அப்பாதுரையின் எல்.ஆர்.ஈஸ்வரு முழ்ங்கிக் கொண்டு இருக்கிறார் காதில். அவர் முடித்த பின்பே சரத் பாடலைக் கேட்க வேண்டும். மொத்தத்தில் பலரக இசைமழையில் மூழ்கிக் கொண்டிருக்கிறொம். நன்றி RVS
ReplyDeleteகடைசி பாட்டையும் கேட்டாச்சு. காதில் இன்னும் ஒலித்துக்கொண்டு...
ReplyDelete//ரசிக நெஞ்சங்கள் விருப்பப்பட்டால் இன்னும் பகிர்வேன். ;-)//
இசை கேட்க விரும்பாத காதா எம்முடையது? சும்மா தொடருங்கள் RVS
நண்பரே நல்ல பகிர்வு,
ReplyDeleteஇசை அமைப்பாளர் சரத் ஜூன் ர (June R) என்ற தமிழ் படத்திற்கு இசை அமைத்துள்ளார் , அப் படத்தில் வரும் மழையே மழையே என்ற பாடல் அடிக்கடி வானொலியில் ஒலிக்கும் பிடித்த பாடல் ஆகும் . மேலும் அவர் பாலா முரளி கிருஷ்ணாவின் சிடர் இளையராஜாவின் ரசிகர் .
மலையாளப் பாட்டெல்லாம் கேட்டது கெடையாதுங்க..
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள்..
@சிவகுமாரன்
ReplyDeleteநம்ம மக்களுக்கு மலையாளப் படம் என்றாலே சிரிப்பு வந்துவிடும். ஒன்றும் செய்வதற்கில்லை. ஹீராயின் பேரல்லாம் எனக்கு தெரியாது சிவா! (என்ன சொல்றேன்னு தக்குடு எட்டிப் பார்த்துகிட்டே இருக்கு.. ;-) )
@ஆதிரா
ReplyDeleteரசித்ததற்கு நன்றி ஆதிரா... கைவசம் இன்னும் பல தீம் வைத்துள்ளேன்.. பார்க்கலாம்.. ;-)
@muchanthi
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி . (அதென்ன முச்சந்தியா?) அடிக்கடி வாருங்கள் ;-)
@இளங்கோ
ReplyDeleteபாட்டெல்லாம் கேட்டது கிடையாதுன்னா............ (நா வேற ஒன்னும் கேக்கலை கேக்கலை.... ) ;-)
Fantastic selection of songs.
ReplyDeletethe first and the third are my all time favourites.
WISH YOU A HAPPY ,PROSPEROUS NEW YEAR
@angelin
ReplyDeleteThank You! Wishing you the same. ;-)
@angelin
ReplyDeleteThe third one is excellent music composition by MSV and rendered beautifully by VANI... ;-)
நல்லா இருக்கு.
ReplyDeleteஒரு வேளை ஆண்டாள் இந்த ப்ளாக் எழுதியிருந்தால் ., - //அழகுக் கோணல் வாய் சௌந்தர்யா// என்பதற்கு - 'லிப்ஸ்டிக்' வாய் திறந்து கோணல்வாய் பாடின கான் - என்று மொழிந்திருப்பாரோ?
ச்ச்சும்மா மார்கழி - ஆண்டாள் impact!!!
ரகு
அத்தனை காணொளியையும் இப்போதான் ரசித்தேன்.உண்மையில் புத்தாண்டில் புதுத் தெம்பாயிருக்கிறது இசை.அற்புதம் ஆர்.வி.எஸ்.நன்றி !
ReplyDeleteஹிட்படம் ஹிஹைஅ அறிமுகத்துக்கு நன்றி.. சந்தடி சாக்குல இது என்ன? படிக்கவே பயமா இருக்குதே?
ReplyDelete>>>கமல் கட்டுப்பாட்டில் இருக்கும் கவுதமி மோகன்லால்
@ரகு
ReplyDelete//'லிப்ஸ்டிக்' வாய் திறந்து கோணல்வாய் பாடின கான் - என்று மொழிந்திருப்பாரோ? //
சார்!! அட்டகாசம்!!! ரசித்தேன்.... ;-)
@ஹேமா
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி ஹேமா ;-)
@அப்பாதுரை
ReplyDeleteஉங்களுக்கு தாய்நாட்டு சங்கதி எதுவும் தெரியாதா? கவுதமியும் கமலும் இணைந்து வாழ்கிறார்கள். ;-)
தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்
ReplyDeleteஅருமை அருமை அருமை
@பத்மா
ReplyDeleteஇதென்ன கவிதை நடையில் நன்றியா..
ரொம்ப நல்லா இருக்கு.. நன்றி பத்மா.. ;-)