Friday, December 31, 2010

கடேசிப் பதிவு

அப்பாடா ஒழிந்தான் எதிரி! இவ்வளவு காலம் பதிவுலகை பிடித்து ஆட்டிய ஏழரை நாட்டு சனி விலகியது, பின்னூட்டத்தில் நக்கலடிக்கும் பிசாசு ஒழிந்தது, பாட்டு கூத்து என்று பதிவெழுதி ப்ளாக்கில் எந்தொரு சத் விஷயங்களின் சாரமே இல்லாமல், இலக்கியமே இல்லாமல், இலக்கணமே தெரியாமல் நம்மையெல்லாம் பீடித்த ஒரு வைரஸ் இன்றோடு அழிந்துவிட்டது என்று தலைப்பை பார்த்து ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று டி.கே. பட்டம்மாள் குரலில் (தோ பார்டா.. இங்கேயும் பாட்டு...) நீங்கள் துள்ளிக் குதித்து சந்தோஷத்தில் மிதப்பது என் அஞ்ஞானக் கண்களுக்கு இங்கிருந்தே தெரிகிறது. அப்படி எல்லாம் ஒரு விடுதலை உங்களுக்கு அவ்வளவு சுலபத்தில் சீக்கிரத்தில் கிடைக்காது.

happy new year


ஊரில் ரொம்ப வருஷங்களுக்கு டிசம்பர் முப்பத்தொன்றாம் தேதி எந்த கொட்டாய்க்கு ரெண்டாம் ஆட்டம் சினிமா பார்க்க போனாலும் சரியாக நடு ராத்திரி பன்னெண்டு மணிக்கு படத்தை பாதியில் நிறுத்திவிட்டு சகலகலாவல்லவனில் கமல் மோட்டார் சைக்கிளில் சர்க்கஸ் காண்பிக்கும் பாடலைப் போட்டு எல்லோருக்கும் எஸ்.பி.பி ஹை எவரிபடி.. விஷ் யூ அ ஹாப்பி நியூ இயர்... என்று புத்தாண்டு வாழ்த்துப் பாடுவார். இதே பதிவில் கடைசியில் நானும் இதை செய்திருக்கிறேன். இரவு பனிரெண்டு தான் என்று இல்லை உங்கள் விருப்பம் போல் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் கேட்கலாம் கொண்டாடலாம்.

நடு ராத்திரி வரை கண் முழித்து குட்டிச் சுவற்றில் உட்கார்ந்து அரட்டை அடித்து மணி சரியாக பனிரெண்டு அடித்ததும் சைக்கிளை எடுத்துக் கொண்டு தெப்பக்குளத்தின் நாலு கரையையும் சுற்றி வந்து சைக்கிள் மணியை டிங்கிடிங்கி "ஹாப்பி நியூ இயர் ஹாப்பி நியூ இயர்" என்று வாழ்த்துக் கூச்சல் இடுவர். எந்த வீட்டில் இருந்தும் மருந்துக்கு ஒரு ஆள் கூட வந்து எட்டிப் பார்த்து எதிர் வாழ்த்து சொல்ல மாட்டார்கள். வயதான பெருசு யாராவது தூக்கம் வராமல் அர்த்தராத்திரி அற்ப சங்கைக்கு எழுந்து வந்தால் "போக்கத்தவங்களா போய் படுங்கோடா... நடு ராத்திரில கூச்சல் போட்டுண்டு..." என்று சொல்லிவிட்டு கொட்டாவி விட்டு தூங்கிக் கொண்டே சாலையை கடந்து திண்ணையில் போய் சரிந்துவிடுவார்கள். பனிரெண்டு மணிக்கு தான் புத்தாண்டு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று இல்லை. நிதானமாக பாப்பையா பட்டிமன்றம் பார்க்கும் போது சொன்னாலும் அது புத்தாண்டு வாழ்த்துதான்.

குடிமன்னர்கள் "மாப்ள.. இன்னிக்கிதான் இந்த வருசத்தோட கடேசி நாள்.. ஃபுல்லா அடிடா.." என்று கார வேர்க்கடலையும் கையுமாக ஆஃப் ஃபுல் என்று நெப்போலியன் மான்க் வாங்கி நண்பர்களுக்கு சுதி ஏத்தி விட்டு மட்டையாக்கி மடக்கி வீட்டிற்கு தூக்கிக் கொண்டு போய் விட்டு வருவார்கள். நம் நாட்டில் ஜனநாயகத்தை பார்க்கவேண்டும் என்றால் டாஸ்மாக் பாரில் பார்க்கலாம். அவ்வளவு ஒற்றுமையாக இருப்பார்கள். அன்னதானத்தை விட சிறந்தது பாரில் சிகரெட் தானம். இல்லேன்று வருவோர்க்கு வாரி வழங்கி அவர்களை ஊக்குவிப்பார்கள். வருகிற புத்தாண்டில் பாருக்கு வெளியே உள்ள பாரிலும் எல்லோரும் ஒற்றுமையாக ஓர் குலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

புத்தாண்டில் ஸ்வாமி பார்க்க கோவிலுக்கு போவது மற்றுமொரு முக்கியமான விஷயம். முண்டியடித்துக் கொண்டு புத்தாண்டு காலையில் பார்த்தால் தான் நமக்கு அருள் புரிவார் இல்லையென்றால் "போடா.. அசடு... முதல் தேதி பார்க்கவில்லை.. அதனால் சொர்க்கத்தில் உனக்கு சீட் இல்லை" என்று விரட்டிவிடுவார் என்று எண்ணிக்கொண்டு பெரியவர், சிறியவர், வயதானர் முடிந்தவர் முடியாதவர் என பார்க்காமல் ஏறி மிதித்துக் கொண்டு ஸ்வாமி பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வது. இப்படி ஸ்வாமி கும்பிட்டால் நிச்சயம் அருள் புரிய மாட்டார். அப்புறம் அந்த ஒரு நாளைக்கு மட்டும் தான் ஸ்வாமி தரிசனம் செய்வது போல அப்படி ஒரு அலப்பறை. அன்று முழுக்க எப்ப வேண்டுமானாலும் சேவிக்கலாம். கூட்டம் குறைவாக இருக்கும் நேரத்தில் ஆலயத்தில் தரிசனம் செய்வது உகந்தது. உள்ளம் திருக்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர் கணக்காக தேமேன்னு வீட்டில் உட்கார்ந்திருக்கும் சில ப்ரஹஸ்பதிகளும் உண்டு. ஆலயம் தொழுவது சாலவும் நன்று. போய் ஒருமுறை கடவுளர்க்கும் ஹாப்பி நியூ இயர் சொல்லலாம். தப்பில்லை.

அப்புறம் சிகரெட் பிடிப்பதை விடுவது, தண்ணியடிப்பதை தவிர்ப்பது, புத்தாண்டில் டைரி எழுதுவது என்று புதுப்புது அரிய முயற்சிகள் எல்லோரும் செய்வதுதான். சிகரெட்டை விட சிறந்த வழி நினைக்கும் போது அக்கணமே புகைக்கும் கிங்க்ஸ்சை காலடியில் போட்டு நசுக்குவதுதான். குடும்ப வாத்தியாரிடம் (ப்ரோஹிதர்) சென்று நாள் நட்சத்திரம் பார்த்தெல்லாம் புகையை நிறுத்த முடியாது. வருஷத்தின் கடைசி ராத்திரி 11:59 ஒரு சிகரெட் பிடித்துவிட்டு மறுநாள் காலை 11:59 க்கு கையில் வத்தி ஏற்றி வைத்த நிறைய போதை அடிமைகளை பார்த்திருக்கிறேன். டைரி எழுதுவது என்பது புத்தாண்டு தொடக்கத்தின் ஒரு தவிர்க்கமுடியாத சம்பிரதாயம் என்று எடுத்துக்கொண்டு பலர் பல நல்ல டைரிகளை கோழிக் கிறுக்கல் கிறுக்கி பாழ் பண்ணி விடுவார்கள். முதல் இரண்டு நாட்களுக்கு இஸ்திரி கணக்கு, "இன்று பேருந்தில் சென்ற போது என் காலை ஷு காலால் ஒருவன் மிதித்தான்" என்று நிகழ்வுகளையும் சேர்த்து வாழ்வும், அன்றாட கணக்குவழக்குகளையும் ஒரு வாரம் எழுதிவிட்டு தூக்கி பரண் மேல் போட்டுவிடுவார்கள். இன்னும் சிலர் முதல் பக்கத்தில் உள்ள முகவரி, தொலைபேசி எண், எல்.ஐ.ஸி பாலிசி நம்பர், கார் நம்பர், டிரைவிங் லைசென்ஸ் நம்பர், பாஸ்போர்ட் நம்பர் இத்யாதி இத்யாதிகளை மட்டும் நிரப்பி பத்திரமாக பெட்டியில் வைத்திருப்பார்கள். டைரியில் கணக்கு எழுதுவது எவ்ளோ அபாயகரமான செயல் என்று தற்போதைய சி.பி.ஐ ரெய்டுகளின் மூலமாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆகையால் எதிலும் எழுதி வைக்காத ஒரு சர்வ சுதந்திர வாழ்க்கை வாழுங்கள். மகிழ்ச்சியில் முகிழ்த்திருங்கள்.

இந்தப் புத்தாண்டில் தாத்தா, அம்மா, ஐயா, தளபதிகள், அன்னை, தில்லியில் இருக்கும் ஜீக்கள் (இது அரசியல் ஜீக்கள் நமது பதிவுக் கும்மி ஜீக்கள் இல்லை), தோழர்கள் என்று சகலரும் மக்கள் நலனுக்கு ஒன்றாக சேர்ந்து பாடுபடவேண்டி அந்த இறைவனை வேண்டுவோம். ஓட்டுக்கு பைசாவிற்கு பதிலாக வீட்டில் பிள்ளைகளுக்கு நல்ல தரமான கல்வி வழங்கச் சொல்லி கேட்கலாம்.

என்னை நேரடியாக தொடர்பவர்கள், மறைமுகமாக தொடர்பவர்கள், வாழ்த்துபவர்கள், வைபவர்கள் என்று எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வழக்கமா எல்லோரும் சொல்றா மாதிரி மீண்டும் அடுத்த வருஷத்தில் சந்திப்போம் என்பதை சொல்லிக் கொள்கிறேன். நான் சொன்னதோட நிறுத்தாம எஸ்.பி.பியும் சொல்றார் கீழே பாருங்க...




விஷ் யு ஆல் எ ஹாப்பி நியூ இயர் 

புத்தாண்டிலும் தொந்தரவுகள் தொடரும்....

நன்றி.

-

65 comments:

  1. அவ்வளவு சீக்கிரம் போக விட்டுடுவோமா ?? மிக சமீபம் வரை இந்தப் பாடல்தான் ஒலித்தது. உங்களுக்கு உங்கள் குடும்பத்தினருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பாடும் நிலா எஸ் பி. பி பாட்டு போட்டதுக்கு ஸ்பெசல் நன்றி

    ReplyDelete
  2. விஷ் யு எ ஹாப்பி நியூ இயர்.. :)

    ReplyDelete
  3. அண்ணா இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  5. பதிவுலக ஆல்-ரௌண்டருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. உங்களுக்கும் உங்கள் துணைவிக்கும், குழந்தைகளுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    வெங்கட் நாகராஜ்
    புதி தில்லி[ஜி]

    ReplyDelete
  7. உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நெனச்சேன்.. ஆனா ஒரு பாட்டோட எப்படி விட்டிங்க ..

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. தனிப்பட்ட முறையில் எனக்கு.. வலையுலகத்தில் ஒரு தொடர் ஈடுபாட்டை எற்படுத்தி ஒரு இனிய நட்பை வழங்கிய உங்களுக்கும் 2010 ற்கும் நன்றி,,

    ReplyDelete
  9. விஷ் யு எ ஹாப்பி நியூ இயர் 2011

    ReplyDelete
  10. அண்ணா உங்களுக்கு லட்சோப லட்சம் ரசிகர்கள் இருப்பா, அதுல கடைசி வரிசைல நின்னுன்டு தக்குடுவும் ஹேப்பி நியூ இயர் சொல்லிக்கர்து!!..:)

    எங்க அக்காவுக்கும் மன்னார்குடியின் இளவரசிகளுக்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. //"போடா.. அசடு... முதல் தேதி பார்க்கவில்லை.. அதனால் சொர்க்கத்தில் உனக்கு சீட் இல்லை" என்று விரட்டிவிடுவார் என்று எண்ணிக்கொண்டு பெரியவர், சிறியவர், வயதானர் முடிந்தவர் முடியாதவர் என பார்க்காமல் ஏறி மிதித்துக் கொண்டு ஸ்வாமி பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வது. இப்படி ஸ்வாமி கும்பிட்டால் நிச்சயம் அருள் புரிய மாட்டார். அப்புறம் அந்த ஒரு நாளைக்கு மட்டும் தான் ஸ்வாமி தரிசனம் செய்வது போல அப்படி ஒரு அலப்பறை.//சூப்பர் :)
    தங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும் வரும் ஆண்டு ஆக்கப்பூர்வமாகவும் ,அமைதியாகவும் அமைந்திட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. Happy New Year.

    Raghu

    ReplyDelete
  14. //தெப்பக்குளத்தின் நாலு கரையையும் சுற்றி வந்து சைக்கிள் மணியை டிங்கிடிங்கி "ஹாப்பி நியூ இயர் ஹாப்பி நியூ இயர்" என்று வாழ்த்துக் கூச்சல் இடுவர். எந்த வீட்டில் இருந்தும் மருந்துக்கு ஒரு ஆள் கூட வந்து எட்டிப் பார்த்து எதிர் வாழ்த்து சொல்ல மாட்டார்கள். வயதான பெருசு யாராவது தூக்கம் வராமல் அர்த்தராத்திரி அற்ப சங்கைக்கு எழுந்து வந்தால் "போக்கத்தவங்களா போய் படுங்கோடா... நடு ராத்திரில கூச்சல் போட்டுண்டு..." என்று சொல்லிவிட்டு கொட்டாவி விட்டு தூங்கிக் கொண்டே சாலையை கடந்து திண்ணையில் போய் சரிந்துவிடுவார்கள். //

    என்னஃப்ளோ? நாங்க சொல்றோம்..

    உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எல்லா நலத்தையும் கொண்டுவந்து சேர்க்க..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. @எல் கே
    அன்பிற்கு மிக்க நன்றி எல்.கே. ;-)

    ReplyDelete
  16. @இளங்கோ
    அதையே நானும் சொல்லிக்கறேன்.. ;-)

    ReplyDelete
  17. @dineshkumar
    புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி ;-)

    ReplyDelete
  18. @பிரஷா
    நிறைய தடவை ஓட்டு போட்ருக்கீங்க. இன்னிக்கிதான் முதன் முதலா கமென்ட் போடறீங்க. நன்றி.. புத்தாண்டு வாழ்த்துக்கள். ;-)

    ReplyDelete
  19. சுகமான நினைவுகள்.

    புத்தாண்டு வாழ்த்துக்கள். இதை இப்பவேயும் படிக்கலாம். ராத்திரி பனிரண்டு மணிக்கும் படிக்கலாம். ஏன் நாளைக் காலை கூடப் படிக்கலாம்!

    ReplyDelete
  20. @புவனேஸ்வரி ராமநாதன்
    நித்யஸ்ரீ ரசிகர் மன்றத் தலைவர்
    பதிவுல ஆள் ரௌன்டேர் ன்னு...
    ஒரே பட்டமா தரீங்களே... பயமா இருக்கு.. எப்படி ரெண்டாயிரத்து பதிநொன்னுல தக்க வைக்கிறது.. பொழுது போகாம எழுத ஆரம்பிச்சது பொழுதுக்கும் எழுதும்படியா ஆயிடுச்சு..
    மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ;-)

    ReplyDelete
  21. @வெங்கட் நாகராஜ்(ஜி)
    ஜி ரொம்ப நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். (டில்லியில் குளிர் விட்டுப் போச்சா? )

    ReplyDelete
  22. @இனியவன்
    நன்றிங்க.. உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ;-)

    ReplyDelete
  23. @பத்மநாபன்
    என்னுடைய ரசிக நண்பர் நீங்கள் பத்துஜி. உங்களுடைய கமென்ட் கண்டு இன்னும் நல்லா எழுதணும்ன்னு தோணும். நான் பதிவுல விட்ட வார்த்தையை நீங்க கமெண்ட்ல போடுவீங்க... ;-) ;-)
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். ;-)

    ReplyDelete
  24. @கக்கு - மாணிக்கம்
    விஷ் யு தி சேம் மாணிக்கம். ;-)

    ReplyDelete
  25. @வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)

    Thank you Madam and wish you the same. ;-)

    ReplyDelete
  26. @தக்குடுபாண்டி
    என்னிக்குமே உனக்கு அவாதான் ஸ்பெஷல். எனக்கு தெரியும். கோந்தே கோடியில(எந்தக் கோடியிலன்னும் எடுத்துக்கலாம்) நின்னாலும் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்.. ஓ.கே வாழ்த்துக்கு நன்னி ஹை. அடுத்த வருஷ தீபாளி தல தீபாளியா இருக்கனும்ன்னு வாழ்த்தறேன்.

    ReplyDelete
  27. @இராகவன் நைஜிரியா
    நன்றி சார்! உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடிக்கடி வந்து போங்க சார்! ;-)

    ReplyDelete
  28. @dr suneel krishnan
    ஆக்கப்பூர்வமான வாழ்த்துக்கு நன்றி டாக்டர். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லிக்கறேன். ;-)

    ReplyDelete
  29. @Raghu
    Thank you sir! Wish you the same.

    ReplyDelete
  30. @ஆதிரா
    மிக்க நன்றி. உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு நல் வாழ்த்துக்களை மனமார தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி ;-)

    ReplyDelete
  31. @ஸ்ரீராம்.
    உங்களுக்கும் முக்காலத்திற்கும் ஒரு நன்றி. ;-)
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். ;-)

    ReplyDelete
  32. // டைரியில் கணக்கு எழுதுவது எவ்ளோ அபாயகரமான செயல் என்று தற்போதைய சி.பி.ஐ ரெய்டுகளின் மூலமாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். //

    பயமுருத்துராங்களே..
    நா 12 வருஷமா டயரி எழுதுறேனே ? I am back

    ReplyDelete
  33. // RVS said...
    @இராகவன் நைஜிரியா
    நன்றி சார்! உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடிக்கடி வந்து போங்க சார்! ;-)//

    எனக்கும் ஆசைதான். இந்த சம்பளம் கொடுக்கிறவங்க ... வேலை செய்யணும் என்று சொல்றாங்க. ஒரு மனுஷன் பாருங்க.. சம்பளமும் வாங்கிக்கணும், வேலையும் செய்யணும் என்று சொன்னா என்ன செய்வது. சம்பளம் மட்டும் வாங்கிக்கிறேன்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறாங்க.

    நிச்சயம் முயற்சி செய்கின்றேன்.

    ReplyDelete
  34. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. அருமை... இதே போல வைகுண்ட ஏகாதசி அன்றும் கோயில் கச்சேரி நடக்கும். இதைப் படித்ததும் எனக்கு அதுதான் நினைவுக்கு வந்தது. புத்தாண்டு நல்ல விஷயங்களைத் தரட்டும்.

    ReplyDelete
  36. RVS உங்களோட பதிவுகளை ரொம்ப நாளா படிச்சுண்டிருக்கேன். இன்னிக்குத்தான் முதல் பின்னூட்டம். உங்கள் எழுத்து நடை சூப்பர்.

    இந்த புத்தாண்டிலும் தொடர்ந்து எழுதி எல்லாரையும் வறுத்தெடுக்க எனது வாழ்த்துக்கள்.

    உமா, தில்லி.

    கக்கு மாணிக்கம் - நீங்க கும்பகோணமா? உங்க மெயில் id குடுங்களேன்.

    ReplyDelete
  37. எங்க போறதா உத்தேசம்.லீவுக்கு வீட்டுக்குப் போய்ட்டு வந்திடுங்க.அப்பிடியே மோகண்ணாவையும் கூட்டிக்கிட்டு வாங்க ஆர்.வி.எஸ்.மனம் நிறைவாய் அமையட்டும் 2011ன் வருகை.இன்னும் நிறைந்த பதிவுகள் வரட்டும் ஆர்.வி.எஸ் !

    ReplyDelete
  38. dear rvs

    wishing you and your family a very happy and prosperous new year

    balu vellore

    ReplyDelete
  39. முன்னரே வாழ்த்தினாலும் ,புத்தாண்டு தினத்தன்றும் இனிய நல்வாழ்த்துக்கள்..

    பாட்டுக்காரனுக்கு ஒரு சின்ன சீண்டல் வாருங்கள் என்னுடைய பதிவிற்கு...

    ReplyDelete
  40. @Madhavan Srinivasagopalan
    மாதவா ஜாக்கிரதை! ஏம்ப்பா நீங்களே அப்ரூவரா ஆயிடுறீங்க.. ;-)

    ReplyDelete
  41. @இராகவன் நைஜிரியா
    இது ரொம்ப அநியாயம்.. சம்பளத்தையும் கொடுத்து வேலையையும் கொடுக்கறாங்களே... சம்பளம் மட்டும்ன்னா ஓ.கே. ;-) அட்டகாசமான பின்னூட்டத்திற்கு நன்றி. ;-)

    ReplyDelete
  42. @அப்பாதுரை
    நன்றி அப்பாஜி.. உங்களுக்கும் அதே..அதே.. ;-)

    ReplyDelete
  43. @வழிப்போக்கன் - யோகேஷ்
    முதன் முறையா வந்து கமேண்டறீங்க.. ஜோதியில வேற ஐக்கியம் ஆயிட்டீங்க.. இந்தப் புதுவருஷம் உங்களுக்கு ஜோர்தான்.. (கொஞ்சம் ஓவரா இல்லை.. ) வாழ்த்துக்கு நன்றி.. உங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ;-)

    ReplyDelete
  44. @yeskha
    புத்தாண்டு எப்போதும் ஒன்றுதான்.. நாம் தான் நல்ல விஷன்யங்களை தேடித் போகவேண்டும்.. கருத்துக்கு நன்றி .... முதல் வருகைக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி. உங்களுக்கு என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். ;-)

    ReplyDelete
  45. @Uma
    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் என் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இனிமே அடிக்கடி கமெண்ட்டுங்க.. ;-)

    ReplyDelete
  46. @ஹேமா
    எங்கேயும் இல்லை.. வாழ்த்துக்கு நன்றி.. உங்களுக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். ;-)

    ReplyDelete
  47. @தமிழ்வாசி
    Thank you and Wish you the same. Please visit again. ;-)

    ReplyDelete
  48. @balutanjore
    உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பாலு சார்! நன்றி ;-)

    ReplyDelete
  49. @பத்மநாபன்
    பத்துஜி .... வந்துட்டேன்.. கமென்ட்டிடேன்... ;-)

    ReplyDelete
  50. ரைட்டோ.
    >>இப்படி ஸ்வாமி கும்பிட்டால் நிச்சயம் அருள் புரிய மாட்டார்.

    ReplyDelete
  51. புத்தாண்டு வாழ்த்துக்கள். நகைச்சுவை இழையோடும் உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  52. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  53. ஆர்.வீ.எஸ் ஸின் பிரத்தியேக முத்திரையுடன் 2011 துவங்கட்டும்.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  54. ஹாப்பி நியூ இயர் ஹாப்பி நியூ இயர் :)

    //அதனால் சொர்க்கத்தில் உனக்கு சீட் இல்லை //
    அக்மார்க் ஆர்விஎஸ் குறும்பு :))

    ReplyDelete
  55. @சிவகுமாரன்
    ஆண்டாண்டாய் உங்களின் இந்த வாழ்த்துக்கள் என் நெஞ்சில் நிறைந்து இருக்கும். நன்றி சிவாகுமரன். உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ;-)

    ReplyDelete
  56. @அப்பாதுரை
    ரைட்.. ரைட்டோ... சரியா அப்பாஜி ;-)

    ReplyDelete
  57. @geetha santhanam
    ரொம்ப நன்றி மேடம்.. உங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ;-)

    ReplyDelete
  58. @raji
    நன்றி. உங்களுக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ;-)

    ReplyDelete
  59. @மோகன்ஜி
    நன்றி. உங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மோகன் அண்ணா.. ;-)

    ReplyDelete
  60. @Balaji saravana
    நன்றி பாலாஜி. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். ;-)

    ReplyDelete
  61. dear RVS

    Wishing you and your family a very happy and prosperous new year

    ReplyDelete
  62. أتمنى لكم سنة جديدة سعيدة جدا 2011

    Sesha
    دبي

    ReplyDelete
  63. @Sesha/Dubai

    Dear Sesh,

    Thank you and wish you the same. When is your India Trip?

    ReplyDelete