Tuesday, January 4, 2011

சங்கீத சிரிப்பு

இசை மூவர்!
sangeetha sirippu
சுதா ரகுநாதன், அருணா சாய்ராம், அனுராதா ஸ்ரீராம்
  1. மேலே காணப்படுபவர்கள் விளம்பர மாடல்கள் அல்லர்.
  2. மேற்கண்ட படம் ஜாக்கெட், புடவை, சுடிதார் போன்றவைகளின் விளம்பரம் அல்ல.
  3. மேலும் அவர்களின் கை, காது, கழுத்து மூக்கு போன்ற அவயங்களில் இருக்கும் அணிகலன்களின் விளம்பரமும் அல்ல.
  4. நாலே வாரத்தில் சிகப்பழகு க்ரீம்களின் விளம்பரமும் அல்ல.
  5. க்ளோஸ்-அப், கோல்கேட் போன்ற சுகந்த ஸ்வாச பற்பசை விளம்பரமும் அல்ல.
  6. மேற்கண்ட குறிப்புகள் கிண்டலோ கேலியோ அல்ல.
  7. நிச்சயமாக இது சங்கீத சிரிப்பு தான்.

பின் குறிப்பு: அக்கா நித்யஷ்ரீ மஹாதேவன் ஃபோட்டோ இதுபோல் கிடைக்கவில்லை. :-(

பட உதவி: தினமணி- இசைவிழா மலர்

-

31 comments:

  1. இசை மூவர்க்கு இவ்வளவு பீடிகை...சங்கித கச்சேரிக்கு போனா , பாட்டும் ம்யுசிக் தவிர மத்ததனைத்தும் நீங்க கவனிக்கிறது நல்லா தெரியுது ... படம் போட்டு விளக்கவேண்டியதே இல்லை... புரிஞ்சுக்கிட்டவங்கிட்ட இன்னைக்கு கச்சேரி தான் மாமு....

    ReplyDelete
  2. சிரிப்பிலேயும் சங்கீதமா? ரைட்டு :)

    ReplyDelete
  3. இவர்கள் யார் என்றுதான் தெரியுமே RVS !

    ReplyDelete
  4. நல்ல புகைப் படம். புத்தகம் நல்ல பொக்கிஷம்.

    ReplyDelete
  5. நித்யஸ்ரீ இவ்வளவு சிரித்து ஞாபகமே இல்லை போலிருக்கு.. அந்த அளவான சிரிப்பு தான் சில ஃபோட்டோக்களில் பார்த்திருக்கேன். எதுக்கு இத்தனை பீடிகை இவங்க ஃபோட்டோவுக்கு?!

    ReplyDelete
  6. நல்ல போட்டோ.

    ReplyDelete
  7. @எல் கே
    இல்ல எல்.கே. தேடினாலும் கிடைக்காது... கீழ பொற்கொடியோட கமெண்ட்டை பாருங்க... ;-)

    ReplyDelete
  8. @இளங்கோ
    Thank you Thambi ;-)

    ReplyDelete
  9. @பத்மநாபன்
    மூட்டி விடாம போகமாட்டீங்களே.. கண்ணில்லாதவன் கச்சேரிக்கு போனாதான் எதையும் பார்க்காம கேட்க முடியும் ஐயா!! ;-) இது எப்படி இருக்கு ;-)

    ReplyDelete
  10. @Balaji saravana
    எங்கெங்கும் சங்கீதம்.. எதிலும் சங்கீதம்.. ;-)

    ReplyDelete
  11. @கக்கு - மாணிக்கம்
    எல்லாருக்குமே தெரியும் மாணிக்கம். ;-)

    ReplyDelete
  12. @ச்சின்னப் பையன்
    Thank you!!!

    ReplyDelete
  13. @Porkodi (பொற்கொடி)
    சும்மா ஒரு பில்டப்புதான். எழுத நேரமே இல்லை.. என்ன பண்றது.. படம் கிடைச்சுது.... அதான்... பதிவில் இருக்கும் 2,3,4 பாயிண்டுகள் என் அன்பார்ந்த சகோதரிகளின் பார்வையில் இருந்து எழுதியது.. ஓ.கே ;-) ;-) ;-)

    ReplyDelete
  14. @ஸ்ரீராம்.
    புத்தகம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அற்புதமான ஒன்று. ;-)

    ReplyDelete
  15. @Gopi Ramamoorthy
    ஓ.கே. நன்றி கோபி ;-)

    ReplyDelete
  16. கபோதி கச்சேரிக்குப் போனாலும் பூ வாசம் பிடிச்சு இது மல்லி, இது ரோஜா, இது கனகாம்பரம் (வாசனை உண்டோ?)...

    என்ன? வாசனை வேணாமா? ஓஹோ அங்கே வரீங்களா? ப்ரெய்ல் சமாசாரமா?

    ReplyDelete
  17. @அப்பாதுரை
    ஐயோ அப்பாஜி.. ப்ரெயில்..... வேணாம்.. உட்ருங்க... நான் தப்பா கமேன்ட்டிடேன்.. பத்துஜிக்கு இது தான் வேலை.. ;-)

    ReplyDelete
  18. போட்டோவோட க்ளாரிட்டி பளீர்னு இருக்கு அண்ணா! அந்த 2 & 3 வது பாயிண்ட் நீங்க சொல்லமையே புரியர்து!..:)

    நித்யஷ்ரீ(ஸ்பெல்லிங் இதே சாச்வதம் ஆயிடுத்து போலருக்கு) போட்டோ தேடி பார்த்து இருந்தா அனுப்பி வைக்கறேன்.

    ReplyDelete
  19. //கச்சேரிக்குப் போனாலும் பூ வாசம் பிடிச்சு இது மல்லி, இது ரோஜா, //

    அடிச்சாரு பாருங்க அப்பாதுரை..

    ஆர்.வி எஸ்..
    பாட்டை கேளுங்க..சுருதி பாருங்க..சங்கதிகளை கேளுங்க...சுரசஞ்சாரத்துல கவனம் செலுத்துங்க..ஆலாபனையை புடியுங்க
    ( அவ்வளவு சங்கித வார்த்தைகள் தான் டிவி காரங்க கிட்ட கத்துக்க முடிஞ்சுது )

    சும்மா உடைகலன் அணிகலன் பார்த்துட்டு.....

    ( இசை கலைஞர்களின் மனம் விட்ட சிரிப்பை பகிர்ந்த உங்கள் கடமை உணர்வை பாராட்டாமலும் இருக்க முடியவில்லை ...)

    ReplyDelete
  20. சுதா ரகுநாதன் பாட்டு -- கிளாசிகல் இசை பசிக்கு நல்ல தீனி..
    அனுராதா -- திரைப் பாடல்கள் அருமை

    ReplyDelete
  21. @தக்குடு
    போட்டோ சர்விஸ் பண்றதுக்கு ஒரு தேங்க்ஸ்.
    சொல்லாமேலே புரிந்து கொண்டது தக்குடுவின் மதியூகம். ;-)

    ReplyDelete
  22. @பத்மநாபன்
    அப்பாஜி சொன்ன ப்ரையில் சமாசாரம்.. அவர் பாணியில.. கமலகாசன் ... ராஜபார்வையில் செய்ததுதான்... ;-)
    சரிங்க சார்! இனிமே நீங்க சொன்னா மாதிரி ரசிக்கிறேன்.. எப்டி.. கண்ணை மூடி.. காதைத் திறந்து.. ஓ.கே வா ;-) இருந்தாலும் ஒரு கிக் இருக்குமா என்று தெரியவில்லை. முயற்சி செய்து பார்க்கிறேன். ;-)

    ReplyDelete
  23. @Madhavan Srinivasagopalan
    கிளாசிகல் சொன்னது ஓ.கே.
    திரைப் பாடல்களுக்கு அனுராதாவை விட அட்டகாசமான பாடகிகள் அநேகம் பேர் உள்ளனர்.
    கருத்துக்கு நன்றி மாதவா.. ;-)

    ReplyDelete
  24. உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன் அண்ணா.
    மறுக்காமல் எழுத வேண்டுகிறேன்! :)

    http://balajisaravana.blogspot.com/2011/01/2010.html

    ReplyDelete
  25. //நிச்சயமாக இது சங்கீத சிரிப்பு தான்//

    ****

    அடடா... இவர்களும் சங்கீத மும்மூர்த்திகள் தானா?

    7 பாயிண்ட்ஸ் விளக்கம் பலே...

    ReplyDelete
  26. thanks for the pic..
    தலைப்பு தான் கொஞ்சம் ஓவர்...

    ReplyDelete
  27. சிரிப்பில் உண்டாகுமோ ராகம்!
    சங்கீதச் சிரிப்பு !முத்துச் சிரிப்பு!
    முல்லை விரிப்பு!கண்டு ரசிப்பு!
    பிறக்கும் சங்கீத ஆலாபனை!

    ReplyDelete
  28. @Rajeswari
    முதல் வருகைக்கு நன்றி. கவிதைப் பின்னூட்டத்திற்கும் நன்றி. ;-)

    ReplyDelete