Wednesday, January 19, 2011

கண்ணாலம் கட்டிக்கிட்ட நாள்


வாரத்தில்
மாதத்தில்
வருடத்தில்
நாட்கள் பல தினுசில் -
உன்னைக் கரம் பற்றிய நாள்
என்றென்றும் என்வாழ்வில்
திருநாளே!!

(இப்படி வரிகளை மடக்கி எழுதியதால்... இக்கவிதை மடக்கு அணி எனும் சிறப்பு அந்தஸ்தை பெறுவதாக வைரமுத்து சிலாகித்து கூறினாராம். மேலும் ஒரு காதல் கவிதையாகவும் மலர்கிறது. )

இன்றைக்கு என்னோட கல்யாண நாள்.  எவ்ளோ நாள் இருந்தாலும் கல்யாண நாள் ஒரு விசேஷ நாள் அப்படின்னு பந்தாவா ஒரு கவுஜை எழுத வரமாட்டேங்குது. கல்யாணமான அடுத்த வருஷம் ஒரு நாள் காலையில தலை ஈரம் காய துண்டு சுத்தி கொண்டை போட்டு, சாம்ப்ராணி மனம் கமழும் வாசனையுடனும் அந்தப் புகையுடனும் மங்களகரமா இந்த மட சாம்பிராணியை எழுப்பி "இன்னிக்கி என்ன நாள்?" என்று ஆர்வமுடன் கேட்ட என் இதய ராணிக்கு "வெள்ளிக்கிழமை" அப்படின்னு பதில் சொல்லிட்டு அனல் பறக்கும் அவள் விழிகளில் இருந்து நக்கீரனாக ஆகாமல் தப்பித்தேன். என்னதான் இருந்தாலும் மூனு முடிச்சு போட்டவன் என்று மன்னித்து "பாவம்.. போனால் போகட்டும்" என்று கண்ணால் தகனம் செய்யாமல் தலையில் அடித்துக்கொண்டு "நீங்க என்னைக் கட்டிக்கிட்ட நாள்" என்றாள். இப்பதானே படுக்கையை விட்டு எழுந்திருக்கிறோம் என்னென்னமோ சொல்றாளே என்று நினைத்து மீண்டும் ஒரு அசட்டுக் கேள்வி கேட்கும்முன் சுதாரித்துக் கொண்டு "ஓ.. இன்னிக்கி நம்மளோட கல்யாண நாள்... கரெக்டா" என்று அசடு வழிய கேட்டு "அதான் நான் முன்னாடியே சொன்னேனே..." என்று சொல்லி வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டாள். 

தீடிரென்று கட்டியிருக்கும் சாரியின் முந்தானையை ஆட்டிக் காட்டி "இந்தப் புடவை எப்ப வாங்கினது தெரியுமா?" இல்லையென்றால் காலை (லேசாக) தூக்கி காண்பித்து "இந்த செருப்பு என்னிக்கி வாங்கினோம் தெரியுமா" போன்ற பொது அறிவுக் கேள்விக் கணைகள் தொடுப்பார்கள். கல்யாணம் பண்ணிய நிறைய 'பேச்சிலர்'களுக்கு இந்த அனுபவம் நிச்சயம் இருக்கும். உலகத்தோடு ஒட்ட ஒழுகி எல்லோரைப் போல பேய் முழி முழித்தபடி 'ஞே' என்று நிற்கும் போது கோபாவேசத்தில் "இது..நம்ம நிச்சயதார்த்த புடவை.." என்று திட்டிவிட்டு எஸ்.எஸ்.எல்.ஸியில் கோட் அடித்த உதவாக்கரை பையன் போல அவர்கள் விடும் அலட்சிய லுக் எழுத்தில் வடிக்க முடியாத ஷேம் ஷேம் பப்பி ஷேம்.

இந்த மரமண்டை மறந்த அந்த சம்பவம் நடந்த வருஷத்தில் இருந்து நிகழும் இந்த அலைக்கற்றை ஆண்டு வரை மறக்காத வகையில் மூளையில் உள்ள முடிச்சுகளில் ஒரு ஸ்பெஷல் 'கல்யாண' ந்யூரான் ஒன்றை கண்டுபிடித்து ஆணி அடித்தாற்போல் இந்த சுப தேதி நினைவடுக்கில் பச்சென்று ஒட்டிக்கொண்டது. இந்த வருஷம் "கலியுகத்தின் கல்யாண ராமனே!!" அப்படின்னு வீட்டு வாசலில் ரெண்டு பேர் முதல் மாடி வரை எட்டும் மெகா சைஸ் விண்ணளவு ஃப்ளெக்ஸ் பானேர் வைப்பது போன்ற கனவு வேற முதல் நாள் தூக்கத்தில் எக்ஸ்ட்ரா பிட்டிங்காக வந்தது.  இந்த அரசியல்வாதிகள் ரொம்பவே நம்மள கெடுத்துட்டாங்கப்பா! சென்னையின் எந்த குறுக்கு சந்து முட்டு சந்தில் கூட ஏதாவது வார்டு கவுன்சிலர் படம் போட்டாவது பத்துக்கு பத்து சைசில் வாழ்த்து பேனர் ஒன்று இல்லையென்றால் அது சென்னை இல்லை. மகாத்மா காந்தி சிலையை மறைத்து "வாழும் மகாத்மாவே" என்று ஏதோ ஒரு பாப ஆத்மாவிற்கு பதாகை வைக்கிறார்கள்.

இன்றைக்கு எனக்கு உதித்த ஒரு அபூர்வ சிந்தனை என்னவென்றால் தசரதருக்கு பதினாறாயிரம் பொண்டாட்டிகளாம். அப்படியிருந்தால் அவர் அனுதினமும் மேரேஜ் டே கொண்டாடினாரா? அப்படி கொண்டாடி இருந்தால் எந்த நாள் எந்த ராணியுடன் விவாஹம் செய்துகொண்டோம் என்று சொல்வதற்கு காலேண்டர் மற்றும் ஷெட்யூலர் இருந்ததா? யார் ப்ரோக்ராம் மேனேஜர்? சராசரியாக ஒரு நாளைக்கு 43.83 ராணிகளுடன் கல்யாண நாள் கொண்டாடினால் தான் ஒருவருடத்தில் தசரதர் அந்தப்புரத்தில் இருந்த அத்துணை பேருடனும் மேரேஜ் டே கொண்டாடியிருக்க முடியும். தசரதருக்கு அப்புறம் உடனே நினைவுக்கு வந்த அடுத்தவர் பெருமாள். திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள். காலவ மகரிஷியின் வருட நாட்கள் கணக்கில் பெற்ற அணைத்து பெண் செல்வங்களையும் தினத்துக்கு ஒவ்வொருவராக டைம் டேபிள் போட்டு திருமணம் செய்துகொண்ட சர்வ கல்யாண குணங்கள் நிரம்பிய நித்யவரதர். திருமணத்தின் போது மாப்பிள்ளைகளுக்கு வைக்கும் திருஷ்டி பொட்டு இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவ மூர்த்திக்கும் கன்னத்தில் வைக்கப்படுவது இத்தலத்தின் தனிச் சிறப்பு.

மத்தபடி...
பசங்க கர்க்கள்லையே ஸ்கூலுக்கு போயாச்சு....
ஆளுக்கு ரெண்டு இட்டிலியை உள்ளே தள்ளி ஆபிசுக்கு வந்தாச்சு..
சாயந்திரம் வரை கழுதை பொதி சுமப்பது மாதிரி வேலை செய்யணும்...
ஆட்டோகாரரிடம்  இடிபடாமலும் பஸ்காரரிடம் சொட்டை வாங்காமலும் வண்டி ஓட்டனும்..
ராத்திரிக்கா வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு படுத்துறங்கனும்...

ஜி.நாகராஜன் நாவல் தலைப்பை கொஞ்சம் உல்டா பண்ணினால்...
இன்று மற்றுமொரு நாளே...


nama shivaya


பட குறிப்பு: மேற்கண்ட சிவபெருமான் படம் இன்றைக்கு வாழ்த்தாக என் நண்பர் அனுப்பியது என் பாக்கியமே.

உங்கள் வாழ்த்துகளுக்கு அட்வான்ஸ் நன்றிகள்!

-

58 comments:

  1. தை மாதம்தான் உங்களுக்கும் திருமணம் ஆனதா? திருமண நாள் வாழ்த்துக்கள். எத்தனை வருட தண்டனை முடிந்து இருக்கு

    ReplyDelete
  2. HAPPY ANNIVERSARY!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  3. திருமண நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. //"முழி முழித்தபடி 'ஞே' என்று நிற்கும் போது"//

    "ஙே" என்றுதானே விழிக்க வேண்டும்...?

    திருமண நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. மண நாள் வாழ்த்துக்கள் R V S .

    ReplyDelete
  7. இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்...

    மடக்கு அணி எனும் புதிய அணியை தமிழிலக்கண உலகுக்கு அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்த்தாயும் வாழத்துவார்.

    முதல் பத்தி கமல் ரசிகன் என்பதை நிரூபித்து வீட்டீர்கள்...

    அலைகற்றை ஆண்டு .....டைமிங்கு....

    மாலை சூடிய மண நாளுக்கெல்லாம் பாட்டு போடாம விட்டுட்டிங்களே....

    ReplyDelete
  8. மணநாள் வாழ்த்துக்கள் RVS Sir!!!

    ReplyDelete
  9. முதலில் உங்களுக்கும், உங்கள் துணைவிக்கும் இனிய திருமண நல்வாழ்த்துகள்.

    //கல்யாணம் பண்ணிய நிறைய 'பேச்சிலர்'களுக்கு இந்த அனுபவம் நிச்சயம் இருக்கும்.//

    அடியேனுக்கும் உண்டு :))))))

    ReplyDelete
  10. இனிய மண நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. @எல் கே
    அப்ப நீங்களும் தையில் மணம் புரிந்தவர்.... ஓ.கே. பப்ளிக்கா சில கேள்விகள் கேட்கக் கூடாது. மாதர் சங்கம் வெளுத்துவிடும் உங்களை.. ஜாக்கிரதை!!! ;-)

    ReplyDelete
  12. @Chitra
    Thank You !!!! ;-)))))

    ReplyDelete
  13. @ச்சின்னப் பையன்
    நன்றிங்க.. ;-)

    ReplyDelete
  14. @sakthistudycentre-கருன்

    Thank You!!! ;-)))))

    ReplyDelete
  15. @Gopi Ramamoorthy
    மிக்க நன்றி. ;-)

    ReplyDelete
  16. @ஸ்ரீராம்.
    gneன்னு அடிச்சா அப்படித்தான் வந்துது. நீங்க எப்படி டைப் பண்ணினீங்க.. வாழ்த்துக்கு நன்றி ;-)

    ReplyDelete
  17. @கக்கு - மாணிக்கம்
    நன்றிங்க மாணிக்கம். ;-)

    ReplyDelete
  18. @பத்மநாபன்
    வரிக்கு வரி படித்து மணி மணியாய் கமென்ட் இடும் பத்துஜிக்கு ஒரு நன்றி. ;-)
    எதெது போய் சேரவேண்டும் என்று நினைத்தேனோ அவ்வளவையும் குறிப்பிட்டு கருத்துரைத்து விட்டீர்கள். ;-)

    ReplyDelete
  19. திருமண நாள் வாழ்த்துக்கள் சார்.


    அப்பறம் அந்த தசரதர் கால்குலேஷன் சூப்பர்.
    ஆனாலும் அவர் மேல உங்களுக்கு இவ்வளவு பொறாமை ஆகாது சார்.

    இத நான் எப்பவாச்சும் சந்தர்ப்பம் கிடைச்சா மிஸஸ் ஆர் வி எஸ் கிட்ட போட்டு தராம விடவே மாட்டேன்

    ReplyDelete
  20. @Porkodi (பொற்கொடி)
    நன்றிங்க.. செவ்வாய் அப்டேட் பண்ணலை போலருக்கு.. ;-)

    ReplyDelete
  21. @வெங்கட் நாகராஜ்
    அனுபவத்தை ஒத்துக் கொண்டதற்கு நன்றி. இதற்கு கூட தைரியம் வேணுங்க.. வாழ்த்துக்கு ஒரு நன்றி. ;-)

    ReplyDelete
  22. @சிவகுமாரன்
    மிக்க நன்றி சிவா!! ;-)

    ReplyDelete
  23. @raji
    தசரதர் கால்குலேஷனை ரசித்ததற்கு நன்றி. ;-)
    மிசஸ் ஆர்.வி.எஸ். மிஸ்டர் ஆர்.வி.எஸ்ஸை நன்கு அறிவார்கள். குனிந்த தலை நிமிராமல் அவர்களோடு சென்று வருவேன். ;-) ;-) போன பதிவிலேயே கும்மிக்கு கூப்பிட்டு விட்டீங்க.. யாரும் வரலை நான் தப்பிச்சேன்.. ;-) ;-) ;-)

    வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி. ;-)

    ReplyDelete
  24. http://lh3.ggpht.com/_L0WB6zwInMY/TTcwZ9o085I/AAAAAAAAADs/Smj6fpKVTks/114980_th.jpg

    ReplyDelete
  25. தசரதர் போல் நீங்களும் பத்தாயிரம் திருமணம் செய்து வாழ்க - ஏற்கனவே திருமணம் செய்த அதே நபரை.

    எனக்குத் தெரிந்த ஒரு தம்பதி தினமும் திருமண நாள் கொண்டாடுகிறார்கள் - முப்பத்து மூன்று வருடங்களாக. ஆளுக்கொரு ரோஜா கொடுத்து இரவில் marriage vows புதுப்பித்து விட்டுத் தான் சாப்பாடே! கிட்டத்தட்ட பத்தாயிரம் ரோஜாக்களுக்கு மேல் சேர்த்திருக்கிறார்கள். bit corny, ஆனால் அவர்களைப் பார்க்கும் பொழுது பொறாமை வரும். இப்படியும் சிலர்.

    (இன்று மற்றுமொரு நாளேவா?
    கொஞ்சம் வீட்டு போன் நம்பர் குடுங்க - வாழ்த்து சொல்லத்தான் வேறே எதுக்கும் இல்லை..)

    ReplyDelete
  26. RVS,
    திருமண நாள் வாழ்த்துக்கள்!!
    கல்யாண நாளிலும் கடமை தவறாமல் பதிவு போடும் RVS வாழ்க!
    (Ms RVS கவனத்திற்கு) :)

    ReplyDelete
  27. //குனிந்த தலை நிமிராமல் அவர்களோடு சென்று வருவேன். //

    அது எங்களுக்குத் தெரியும். அவங்க இல்லாதப்ப எப்படி இருப்பீங்கன்னு தெரியும் இல்ல.. இந்த வாரம் வீட்டுக்கு வந்து அண்ணிக்கிட்ட பேசறேன்

    ReplyDelete
  28. திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா..

    ReplyDelete
  29. நேற்று திருமண நாளை கொண்டாடிய உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் திருமண நாள் வாழ்த்துகளை (வலைராஜாவின் வலை ஆக்ரமிப்பால்) இன்று கூறிக் கொள்கிறேன்.
    பெண்களுக்கு எல்லாம் ஞாபகம் இருக்கும்.

    ReplyDelete
  30. வாத்யாரே,

    திருமண நாள் நல் வாழ்த்துக்கள். எல்லா வளமும் நலமும் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    அன்பன்

    குருகண்ணன், துபாய்

    ReplyDelete
  31. @raji
    Togetherness க்கு நன்றி ;-) ;-)

    ReplyDelete
  32. @அப்பாதுரை
    தினமும் கொண்டாடறவங்க ரோஜா மட்டும் கொடுத்துக்கறாங்க.. தேவலாம்.. வேற ஏதாவது வாங்கிக் கொடுத்துட்டு பொண்டாட்டி "நம்மளோட எட்டாவது திருமணநாளுக்கு நீங்க எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தீங்க சொல்லுங்க பார்ப்போம்.." அப்படின்னு கேள்வி கேட்டு சிக்க வைக்க மாட்டாங்க..
    நாங்கெல்லாம் Sprinkling Water கேஸ்... எதுக்கும் பயப்பட மாட்டோம்.. வீட்டு நம்பர் என்ன வீட்டுக்கே நேர வாங்க.. :-))))))))))))

    ReplyDelete
  33. @நவன்
    பின்னாடி நின்னு மிசஸ் ஆர்.வி.எஸ் கவனிச்சுகிட்டே இருக்காங்க.. மேலே இருக்கும் பின்னூட்டத்தில் ஆங்கில வார்த்தைகளை பார்க்கவும்.. ;-) வாழ்த்துக்கு நன்றி. ;-)

    ReplyDelete
  34. @எல் கே

    You are Most Welcome Sir!!! அப்பாஜிக்கு சொன்னது தான் உங்களுக்கும்.. நாங்கெல்லாம் தெளிச்சு விட்ட கேசு.. தேறாதுன்னு தெரியும்.. (எப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க வேண்டியிருக்கு..ச்சே.. கஷ்டமான உலகமடா சாமி!!! )

    ReplyDelete
  35. @இளங்கோ
    மிக்க நன்றி இளங்கோ.. ;-)

    ReplyDelete
  36. @கோவை2தில்லி
    கடைசி வரி ஒன்னு போட்டீங்க பாருங்க.. அது நிதர்சனமான உண்மை...
    வாழ்த்துக்கு நன்றி... ;-)

    ReplyDelete
  37. @JAGADEESAN GURUKANNA
    வாழ்த்துக்கு நன்றி தலைவா!! ;-)

    ReplyDelete
  38. சில சமயம் தினம் ரோஜாப்பூ கொடுக்குறதுனால தான் பெரிய பரிசுகளை வசதியா மறந்து போறாங்களோனு தோணும்.


    தெளிச்சு விட்ட கேசுக்கு வருவோம். அதெப்படி? தெளிச்சு விட்ட கேசுனா விட்டுறுவமா? எப்படி தெளிக்கறாங்கனு பாக்கணுமே?

    ReplyDelete
  39. "எல். கே." கேட்பதை பார்த்தால் - எல்லோருக்கும் தை பிறந்தால் வழி பிறக்கும் ஆனால் உங்களுக்கு ஆர்.வி.எஸ் என்று கேட்பது போல் உள்ளதே !!

    நாராயணா நாராயணா !!

    வாழ்த்துக்கள் ஆர்.வி.எஸ்.

    கல்யாண நாள் - huh !!!

    ReplyDelete
  40. அட இது தெரியாதா அப்பாதுரை சார்!வாசல் தெளிக்கும்போது பாத்ததில்லை,
    கட்டாயம் கையில துடைப்பம் வச்சுருப்பாங்களே!

    ReplyDelete
  41. /தெளிச்சு விட்ட கேசுனா விட்டுறுவமா? எப்படி தெளிக்கறாங்கனு பாக்கணுமே?/

    appaathurai intha vaaraum neenga freeyaa? rendu perum poidalaam

    ReplyDelete
  42. அதே, அதே raji!
    RVS கொஞ்சம் சரிகை கட்டிச் சொல்றாரோ?

    ReplyDelete
  43. ஆமாம் அப்பாதுரை சார்!பதிவு மெருகேற போடற சரிகையை ஆர் வி எஸ் சார் பின்னூட்டத்தில
    தன்னை பத்தி பதில் எழுதும்போதும் போட்டார் போல(நம்புவோம்னு நினச்சுருப்பார்

    ReplyDelete
  44. வாழ்த்துக்கள் அண்ணா! (ஸாரி ஃபார் தி லேட் )

    ReplyDelete
  45. @அப்பாதுரை
    ரோசாப்பு மேல பன்னீர் தெளிக்காரப்ல.. (இது எப்புடி இருக்கு.. ;-) )

    ReplyDelete
  46. @சாய்
    //கல்யாண நாள் - huh !!!//
    இங்க என்ன நடக்குது தெரியுதுல்ல... huh ன்னு எல்லாம் போடாதீங்க.. நான் ஒரு வார்த்தை சொல்லிட்டு என்னைய ஏறி அடிக்கறாங்க.. ஜாக்கிரதை... ;-)
    வாழ்த்துக்கு நன்றி. ;-)

    ReplyDelete
  47. @raji & @அப்பாதுரை
    தொடப்பகட்டைக்கு பட்டுக் குஞ்சலம்ன்னு சொல்றீங்களா.... ;-))))))

    ReplyDelete
  48. @எல் கே
    குதூகலமா இருக்கிற குடும்பத்துல கும்மி அடிக்கறதுன்னா ரொம்ப சந்தோஷமா இருக்குமே... ;-) ;-) ;-)
    அன்பர் அப்பாஜி வரவேண்டும் என்றால் குறைந்தது ஐம்பதாயிரம் செலவு செய்ய வேண்டும்.. அண்ணன் தயாரா? ;-) ;-)

    ReplyDelete
  49. @Balaji saravana
    நெஞ்சார்ந்த நன்றி தம்பி ;-)

    ReplyDelete
  50. @raji
    இன்னும் நீங்க நம்பலையா... ஒரே ஒரு தடவை நிமிர்ந்து பாக்கும்போது என் பொண்டாட்டி எடுத்ததுதான் நீங்க ப்ரோஃபைல்ல பார்க்கற அந்த ஃபோட்டோ. ;-) ;-)

    ReplyDelete
  51. எப்ப ஃபோட்டோ எடுத்தேனு சொல்லுங்க பாக்கலாம்னு
    அவங்க கேட்டா பதில் தெரியுமானு பாத்துக்கோங்க;விளைவை யோசிக்காம பின்னூட்டம்
    போட்டுட்டு மாட்டிக்க போறீங்க

    எல்லாரும் ஓட்டறதுலேர்ந்து தப்பிகணும்னா சீக்கிரம் அடுத்த பதிவை போட்ருங்க

    ReplyDelete
  52. @ராஜி
    கவலையி விடுங்க. சீக்கிரம் அவர் வீட்டுக்கு நான் போகப்போறேன். அப்ப விலாவரிய கேட்டு , தனிபதிவு போட்டுடலாம்.

    @ஆர்வீஎஸ்
    அவர் வரவேண்டிய அவசியம் இல்லை. நான் மட்டுமே வருவேன்.. (மாட்டிகிட்டீங்களா ??)

    ReplyDelete
  53. வரும்போது 'சாதிக்க' வேண்டியவைனு லிஸ்ட் போட்டு வச்சிருக்கம்ல?

    அடிச்சாங்க ஜாக்பாட் raji!
    >>>எப்ப ஃபோட்டோ எடுத்தேனு சொல்லுங்க பாக்கலாம்னு...

    ReplyDelete
  54. picture cardல் இங்கிலிபிசை இப்படி இந்தியாட்டம் எழுதியிருக்காங்களே? இப்பத்தான் பாத்தேன். புச்சாகுது.

    ReplyDelete
  55. உயர்திரு அப்பாதுரை, எல்.கே, மற்றும் ராஜி

    நீங்கள் எல்லோரும் என் வீட்டிற்கு அவசியம் வரலாம். குனிந்த தலை நிமிராமல் உங்கள் அனைவரையும் வரவேற்க நான் தயார். எல்.கே தனியாக வர ஆசைப்பட்டாலும் ஓ.கே. என்னிக்கி வரேன்னு சொல்லுங்க அவங்ககிட்ட கேட்டு நான் தலையை மேலே தூக்கணும். நன்றி ;-)

    ReplyDelete