Sunday, February 20, 2011

மனதை மயக்கிய மலேஷியா

இருவர் என்று ஒரு நிகழ்ச்சி நாலைந்து வருடங்களுக்கு முன் விஜய் டி.வியால் ராயப்பேட்டையில் ராயலாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு இரு இமயங்கள் என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஒருவரில் ஒருவர் எஸ்.பி.பி அடுத்தவர் மலேஷியா வாசுதேவன். இவர்கள் இருவரும் திரையில் ரெண்டுபேர் சேர்ந்து பாடும் பாடல்கள் நிறைய பாடியிருக்கிறார்கள். இருவரும் ஜோடியாக மேடையில் தோன்றிய போது பலத்த கரகோஷம். ஏறியவுடன் பாடிய முதல் பாடல் என்னம்மா கண்ணு சௌக்யமா? ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான். அப்போதே சற்று சோர்வாகத்தான் இருந்தார். அவர் இழுத்த இழுப்புக்கு குரல் வரவில்லை. எஸ்.பி.பி அவருக்கு நன்றாக ஒத்துழைத்தார். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து சிரித்துப் பாடினார்கள். மேடையில் பார்ப்பதற்கு அவ்வளவு இனிமையாக இருந்தது. சிறிதுகாலமாக உடல்நலம் குன்றி இருந்த மலேஷியா வாசுதேவன் இன்று இயற்கை எய்தினார். சமீப காலத்தில் பாடக சமூகத்தில் பேரிழப்பான இரண்டாவது மரணம்.

இளையராஜா-மலேஷியா வாசுதேவன் ஜோடி தமிழ் ரசிக நெஞ்சகளுக்கு நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளனர். முதல் மரியாதையில் கிட்டத்தட்ட ஒரு படத்தையே ம.வாசுதேவனுக்கு அர்பணித்தார் இளையராஜா. எஸ்.பி.பி, ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் போன்ற ஸ்டார் பாடகர்கள் ஜொலித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு புது மாதிரியான வசீகரக் குரல் வாசுதேவனுடையது. ஒரு சிலப் படங்களில் சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் குரலில் கூட சில பாடல்கள் ராஜாவின் இசையில் பாடியிருந்தார். எந்தப் பாடகரின் குரலிலும் சாராத ஒரு தினுசானக் குரல் மலேஷியா வாசுதேவனுடையது. ஆகாய கங்கையில் வரும் குரலும் அண்ணனுக்கு ஜே.. காளிங்கனுக்கு ஜே...வில் வரும் குரலும் இருவேறு சங்கதிகள் காட்டும். டி.எம்.எஸ்ஸுக்கு பிறகு கடைசி கால சிவாஜிக்கு எல்லாப் பாடலும் மலேஷியா பாடினார் என்று ஞாபகம்.

என்னையும் நிச்சயம் உங்களையும் கவர்ந்த சில மலேஷியா வாசுதேவன் பாடல்கள் இங்கே அவருக்கு அஞ்சலியாக...

கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ..


 தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி...


நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே...


காதல் வைபோகமே...


கோடை கால காற்றே....


மலையோரம் மயிலே...


பொதுவாக எம்மனசு தங்கம்...


பூவே இளைய பூவே...


பேர் வச்சாலும் வைக்காம போனாலும்....



கட்டி வச்சுக்கோ என் அன்பு மனசை...


அவருடைய அன்பு மனசை நாம் கட்டிவைத்துக்கொள்வோம். மறைந்த மலேஷியா வாசுதேவனுக்கு எனது இசையஞ்சலியாக இதை சமர்ப்பித்தேன். அன்னாரின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

பட உதவி.: www.raaga.com

-

51 comments:

  1. முதல் மரியாதை பாடல்கள், படிக்காதவனில் ஒரு கூட்டுக் கிளியாக, ஆனந்தப் பூங்காற்று தாலாட்டுதே .... போன்ற இனிமையான பாடல்கள் இன்னும் கேட்டால் மனம் மயங்கும்.

    ReplyDelete
  2. 'மலையோரம் மயிலே' - இதுவரை கேட்டதில்லை. இனிமையான பாடல். நன்றி.

    ReplyDelete
  3. எல்லாமே நல்ல கலெக்ஷன்.
    அள்ளித் தந்த பூமி, ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே, எந்தாத்து பையனவன், நெஞ்சில் ஆடும் பூவொன்று பாடல்கள்...இன்னும் இன்னும் எவ்வளவோ நல்ல பாடல்கள். எங்கள் அஞ்சலிகளும்.

    ReplyDelete
  4. ஆமாம் கடைசி கால சிவாஜி பாட்டுகள் பல பாடியுள்ளார்

    ReplyDelete
  5. மலேஷியா வாசுதேவன அவர்கள்
    ஆன்மா சாந்தி அடைய
    பிராத்திக்கிறோம்
    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  6. மலேசியா வாசுதேவனின் குரல் கம்பீரமும் வசிகரிப்பும் கூடியது ...குறிப்பிட்ட பாடல்கள் அனைத்தும் காலாகாலத்துக்கும் சளிக்காமல் கேட்க வைக்கும் பாடல்கள்...
    அவர் உடலில் மறைந்தாலும் பாடலில் உயிர்ப்பாக இருக்கிறார்.

    ReplyDelete
  7. எல்லாமே நல்ல கலெக்ஷன்.

    ReplyDelete
  8. lovely songs collection... He will be missed!

    ReplyDelete
  9. படிக்காதவன் -ஒரு கூடு கிளியாக பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ,
    கலைஞன் மறைவதில்லை அவனது படைப்புகள் மூலம் வாழ்கிறான் ..
    .

    ReplyDelete
  10. //கலைஞன் மறைவதில்லை அவனது படைப்புகள் மூலம் வாழ்கிறான் //

    மிகவும் சரியான கருத்து....

    ReplyDelete
  11. படைப்பாளிகள் என்றுமே சிரஞ்சீவிகள்! அவனுடைய கடைசி வாசகன்/ரசிகன் உள்ள மட்டும் அந்த ரசிகனின் இதயத்தில் வாழ்ந்து வருவார்கள். அவருடைய பூத உடல் மட்டுமே மறைந்துள்ளது. அன்னாரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!..:(

    ReplyDelete
  12. ஆமாம்.மலேசியா வாசுதேவனின் குரல் unique தான்

    நீங்கள் அளித்த பாடல்கள் எனக்கும் பிடித்தவையே

    ReplyDelete
  13. மனதைத் தொடும் பாடல்களுடன் திரு மலேசியா வாசுதேவன் அவர்களைப் பற்றி சொல்லி இருக்கீங்க.அவரது பாடல்கள் எல்லாம் அவ்வளவு அருமையாக இருக்கும்.அவற்றுக்கு நான் ரசிகை.அத்தகைய நல்ல பாடகரை இன்று நாம் இழந்துவிட்டோம். அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  14. @அப்பாதுரை
    ஒருவர் வாழும் ஆலயத்தில் இடம் பெற்ற பாடல் மலையோரம் மயிலே.. தேவி பாலா மினி தியேட்டரில் நானும் என் சித்தப்பாவும் பார்த்தது. ஒரு பதிவு காணும் அந்த அனுபவங்கள்.
    மலேஷியா ஒரு அற்புதமான கலைஞன். நல்ல குரல்வளம். சோகமாகத்தான் இருக்கிறது. ;-(

    ReplyDelete
  15. @சிவகுமாரன்
    ஆமாம் சிவா! நிறைய ஹிட் கொடுத்துள்ளார் மலேஷியா! ;-( ;-(

    ReplyDelete
  16. @ஸ்ரீராம்.
    சொல்லுவதற்கு நிறைய இருக்கிறது ஸ்ரீராம். வலையேற்றும்போது மணி பதினொன்றுக்கு மேல் ஆனதால் நிறுத்திக்கொண்டேன். இழப்பு பேரிழப்பாகும். ;-(

    ReplyDelete
  17. @எல் கே
    ஆமாம் எல்.கே. சத்த்யராஜ் சிவாஜியுடன் ஜல்லிக்கட்டு படத்தில் சிவாஜி பாடும் ஓடையில் ஒரு ஓடம்..ஓடம்.. என்ற பாட்டு கூட மலேஷியா பாடியதுதான்.

    ReplyDelete
  18. @siva
    ஆமாம் சிவா. இதுவே அவருக்கு ஒரு இசைஅஞ்சலி. ;-(

    ReplyDelete
  19. @பத்மநாபன்
    உடல் மறைந்தாலும் பாடலில் உயிர்ப்பாக இருக்கிறார்! மிக மிக சரி பத்துஜி

    ReplyDelete
  20. @வேடந்தாங்கல் - கருன்
    இந்தக் கலெக்ஷன் இனிமேல் வளராது. ;-(

    ReplyDelete
  21. @dr suneel krishnan
    // கலைஞன் மறைவதில்லை அவனது படைப்புகள் மூலம் வாழ்கிறான் ..//
    நிதர்சனமான உண்மை டாக்டர்!

    ReplyDelete
  22. @MANO நாஞ்சில் மனோ
    கரெக்ட்டுதான்....

    ReplyDelete
  23. @தக்குடு
    ஆமாம்.. அவர்களது படைப்புகள் அமரத்துவம் பெற்றவை...

    ReplyDelete
  24. @raji
    என்ன சொல்ல ராஜி?
    பல ஹிட் பாடல்களை அனாயாசமாக கொடுத்தவர் மலேஷியா... ;-(

    ReplyDelete
  25. @ஜிஜி
    ஆமாம். அவர் குடும்பத்திற்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள். ;-(

    ReplyDelete
  26. அவருக்கு எனது கண்ணீர் துளிகளும்.

    ReplyDelete
  27. நல்ல பாடகர். நிறைய டப்பாங்குத்து பாடல்கள் பாடி இருந்தாலும், அவர் பாடிய மெலோடி பாடல்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்கும். “தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி” என்னுடைய ஆல் டைம் Favorite. திரு மலேசியா வாசுதேவன் அவர்களது ஆன்மா சாந்தி அடையட்டும்.

    ReplyDelete
  28. ஆர்.வீ.எஸ்! இதுக்கு கமென்ட் போட்டதாய் எண்ணிக்கொண்டு பாட்டைக் கேட்டுவிட்டு போய்விட்டேன் போலிருக்கிறது.மலேசியாவின் சில பாடல்கள் அவர்மட்டுமே பாடியிருக்கக் கூடியவை.
    ஒரு கலைஞனுக்கு நீண்ட காலம் தன் கலையை வெளிப்படுத்த இயலாத நிலை
    ஒரு பெரிய தண்டனை. அவரின் கடைசிகால பேட்டிகள் சில இந்த வேதனையை வெளிப்படுத்தின.

    ReplyDelete
  29. எல்லாமே அற்புதமான பாடல்கள் ,கோடைகால காற்றே எனக்கு மிகவும் பிடித்த பாட்டு .பூங்காற்று திரும்புமா பாட்டு கேட்கும்போது இனி மனசு வலிக்கும் .எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாருக்கு .

    ReplyDelete
  30. @வெங்கட் நாகராஜ்
    மெலடிகளிலும் ஜமாய்த்தவர் மலேஷியா.. ;-(

    ReplyDelete
  31. @மோகன்ஜி
    ஆமாம் ஜி! கடைசியில் மிகவும் கஷ்டப்பட்டார். ;-(

    ReplyDelete
  32. @angelin
    ஆமாம். மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ;-(

    ReplyDelete
  33. பூங்காற்று திரும்புமா:(((

    ReplyDelete
  34. அனைத்துமே அருமையான பாடல்கள்.. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் ஒரு பாடல் பாடியிருந்தார்.. அது, “ஆகாய கங்கை, பூந்தேன் மலர் சூடி”..

    பின்னர் ரஜினிக்காக அவர் பாடிய “ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா” என்ற பாடலும் மெகாஹிட் ரகம்...

    அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய
    பிராத்திக்கிறேன்...

    ஒரு நல்ல பகிர்வு...

    ReplyDelete
  35. தெங்கிழக்குச் சீமையிலே பாடலின் மடியில் தலைசாய்க்கிறேன் ஆர்விஎஸ்.

    இந்தப் பூங்காற்று இனித் திரும்பாது.நம்முடன் எப்போதுமே வரும்.

    ReplyDelete
  36. அவர் பாடியதில் மிகச்சிறந்த பாடல் என்றால் அது கருத்தம்மா படத்தில் பாடிய 'காடு பொட்டல் காடு' பாடல்தான் என்பது என் கருத்து. வறட்சியில் இருக்கும் கிராம மக்களின் வலியை இதை விட இயல்பாக பாடி இருக்க முடியாது. எவராலும் நகல் எடுக்க முடியாத தனித்துவம் வாய்ந்த குரல்!

    ReplyDelete
  37. ஒரு சின்ன ஆலோசனை ஆர்.வி.எஸ்.

    நல்ல பாட்டுக்களை இசையும் மொழியும் சேர்ந்ததாய் மட்டுமே வகைப்படுத்திப் பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு.

    அவற்றைக் காட்சி வடிவில் பார்க்கும்போது பல நேரங்களில் அவற்றின் நேர்த்தி குறைந்துவிடுகிறது.

    குறிப்பாக அஞ்சலி செலுத்தும் இடுகைகளில் ஒலிவடிவத்தை மட்டும் கொடுக்கும்போது நீங்கள் நினைப்பதற்கு மிக நெருக்கமாக உங்கள் இடுகை அமையும்.

    ReplyDelete
  38. மலேசியா வாசுதேவனின் ஆத்மா சாந்தியடைய ஆழ்ந்த பிரார்த்தனைகள்.
    அவ்ர் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்.

    ReplyDelete
  39. மலேஷியா வாசுதேவனின் மிகச் சிறந்த பாடல்களின் தொகுப்பாக இருந்தது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். :(

    ReplyDelete
  40. @வித்யா
    நிச்சயமாக நம்மிடம் இருக்கும் அவரது ஆல்பங்களில்.. ;-(

    ReplyDelete
  41. @R.Gopi
    அந்த ரெண்டும் தேன். எல்லோரும் போடும் பாடல் என்று தெரிந்தே அதைத் தவிர்த்தேன். பேரிழப்பு தான் ;-(

    ReplyDelete
  42. @சுந்தர்ஜி
    //இந்தப் பூங்காற்று இனித் திரும்பாது.நம்முடன் எப்போதுமே வரும்.//
    பளிச் வரிகள். உண்மை. ;-(

    ReplyDelete
  43. @! சிவகுமார் !
    அந்தப் பாடல் பாரதிராஜா பாடியது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  44. @சுந்தர்ஜி
    ஆலோசனைக்கு நன்றி ஜி! நிச்சயம் அமுல் படுத்துகிறேன்.

    ReplyDelete
  45. @இராஜராஜேஸ்வரி
    என்னுடைய அனுதாபங்களும் தான்!

    ReplyDelete
  46. @கோவை2தில்லி
    ஆன்மா சாந்தியடையட்டும். ;-(

    ReplyDelete
  47. அப்பாடல் பாரதிராஜா மற்றும் வாசுதேவன் இருவரும் சேர்ந்து பாடியது. விக்கிபீடியா மற்றும் பிற தளங்களில் பார்த்தேன்.

    ReplyDelete
  48. @! சிவகுமார் !
    ஆமாம். சிவா. ஒத்துக்கொண்டேன்.. நன்றி.. ;-) ;-)

    ReplyDelete