Sunday, March 20, 2011

சிரிச்சே ஆகணும்!

நாம ஒன்னும் ஷேக்ஸ்பியர் ஃபேமிலி இல்லை. இருந்தாலும் மௌலி இந்தக் காட்சியில் பண்ணும் அட்டகாசம் சொல்லில் அடங்கா. இவ்ளோ தூரம் அவரிடம் இங்கிலீஷ் பேசி படுத்தியதற்கு அதை எடுத்து ஊதிக் காட்டியிருக்கலாம்.

வாட் டூ யு டூ.
ஐ டூ நாதஸ்வரம்!


இந்த வார ஞாயிறு உலகக் கோப்பை போட்டியில் கழிந்தது. ஒன்றும் சுவாரஸ்யமான மேட்ச் இல்லை.  இருந்தாலும் நீண்ட நெடுநாள் கழித்து கிரிக்கெட் பார்த்தேன். கிரிக்கெட் ஜென்டில்மேன் கேம் என்பதை எடுத்துக்காட்டிய டெண்டுல்கருக்கு நன்றி. ஒரு உலகக் கோப்பை போட்டியில் கர்ட்னி வால்ஷ் நான் ஸ்ட்ரைக்கர் முனையில் ரன் அவுட் ஆக்காமல் கையை கட்டிக்கொண்டு நின்றது நினைவுக்கு வந்தது. 

பை.பை.
-


43 comments:

  1. தலைவர் வால்ஷ் என்றுமே ஜென்டில்மேன் தானே. பிளைட் நம்பர் 172. மறக்க முடியாத நாடகம். பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைத்ததற்கு நன்றி!

    ReplyDelete
  2. thanks for sharing... enjoyed it...

    ReplyDelete
  3. மௌலியின் இந்த நகைச்சுவை எனக்கும் ரொம்பப் பிடிக்கும்!

    ReplyDelete
  4. ஆகா... இன்னும் சிரிப்பு நிக்கல...

    ReplyDelete
  5. ஆர்வீஎஸ் கொஞ்ச நாளுக்கு முன்னாடி இதை நான் போட்டேன். இப்ப நீங்க. எதனை முறை பார்த்தாலும் சலிக்காது .

    சச்சின்- மேன்மக்கள் மேன்மக்களே

    ReplyDelete
  6. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத நாடகம். பகிர்வுக்கு நன்றி. சச்சின் மாதிரி வருமா? முதல் நாள் Ricky Ponting செய்த அடாவடி :(

    ReplyDelete
  7. மௌலி ஒரு க்ரேட் காமெடியன்
    நானும் இதை ரசித்திருக்கிறேன்

    சச்சின் பாராட்டுக்குரியவர்

    பகிர்வுக்கு நன்றி

    ஆனா ஏன் குட்டியூண்டு பதிவா போட்டு ஏமாத்திட்டீங்க.டைம் இல்லையா?

    ReplyDelete
  8. செம காமெடி :)

    //எல் கே said...


    சச்சின்- மேன்மக்கள் மேன்மக்களே //

    கண்ணா பின்னா ரிப்பீட்டு! :)

    ReplyDelete
  9. ம்ம்.. அது காமெடியான (ஆனால் முடியும்) தொடராச்சே.... 87 -88la ரசிச்சு பாத்தது..


    சச்சின்.. சச்சின்.. தான்..
    சும்மா செஞ்சுரி அடிக்குறதுக்கு சச்சினோட போட்டி போட்டு (அது கூட உறவுக்கு மேல நடக்கலை) அவர பீட் பண்ணப் பாத்தா மட்டும் போதாது..
    இது மாதிரி ஜென்டில் மேனாகவும் இருக்க போட்டி போடணும்.. புரியலையா 'பாண்டிங்' உங்களுக்குத்தான் இப்படி சொல்லுறேன்.. என்னது.. உங்களுக்கு தமிழ் தெரியாதா? அட.. இம்மா நேரம் எழுனதுலாம் வேஸ்டா போயிடிச்சே..

    ReplyDelete
  10. தீ.வி.பி யில் இவ்வளவு சின்ன பதிவா!!!!!
    மெளலி நாடகம் சூப்பர். இப்போ தான் முதன் முறையாக பார்க்கிறேன்.
    கிரிக்கெட்டுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்!

    ReplyDelete
  11. இது சினிமாவா டிராமாவா?

    கோவை2தில்லி கமென்ட் நியாயமானதே! இவ்வளவு சின்ன பதிவா!

    ReplyDelete
  12. @! சிவகுமார் !
    நன்றிங்க.. இதோட சேர்ந்து தூர்தர்ஷன்ல வண்ணக்கோலங்கள் கூட வரும்.. அற்புதமா இருக்கும்.. விளம்பரம் அதிகம் இல்லாமல்.. ;-))

    ReplyDelete
  13. @தமிழ்ப்பறவை
    Thank you!! ;-))) Pl. do visit again.

    ReplyDelete
  14. @ஸ்ரீராம்.
    நன்றி ஸ்ரீராம்! ரொம்ப பேருக்கு பிடிச்சது இது. ;-)

    ReplyDelete
  15. @!* வேடந்தாங்கல் - கருன் *!
    மத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்த்ததுல எனக்கு சந்தோஷம் கருன்! ;-))

    ReplyDelete
  16. @எல் கே
    எப்ப எல்.கே?
    சங்கு சுட்டாலும் வெண்மை தரும். ;-))

    ReplyDelete
  17. @வெங்கட் நாகராஜ்
    ரிக்கி பாண்டிங்.. அவங்க ரத்தத்துல ஊறினது அது. ஒன்னும் செய்ய முடியாது... ;-)

    ReplyDelete
  18. @siva

    OK. Attendance marked.... ;-))

    ReplyDelete
  19. @raji
    நன்றிங்க..
    மேச் பாக்கறதுல டயம் போய்டுச்சு... புதுசா எழுத நேரம் இல்லை. அதோட மட்டும் இல்லாம நான் இப்போ இந்த முகரக்கட்டை புஸ்தகத்திலும் பிஜி. ;-))
    இன்னிக்கி ராத்திரி ஒன்னு புதுசாப் போடறேன்.. என்னோட வழக்கமான நீளத்தோட... ;-))

    ReplyDelete
  20. @Balaji saravana
    எப்படியெல்லாம் இங்கிலீஷ் பேசறாரு... அடாடா.. ;-))
    எல்.கே வுக்கு ஒரு கமெண்ட்டு போட்ருக்கேன்.. தம்பி அங்கேயும் பார்க்கவும்.. ;-)

    ReplyDelete
  21. @Madhavan Srinivasagopalan
    யப்பா.. நீ வருஷம் எல்லாம் ஞாபகம் வச்சுருக்கே! நன்றி மாதவா! ;-))

    ReplyDelete
  22. @கோவை2தில்லி
    இன்னிக்கி ராத்திரி இந்தக் குறையை பூர்த்தி பண்றேன்.. கவலையை விடுங்க.. (இப்பத்தான் கவலைப் படறேன்னு சொல்றீங்களா? ;-))) )
    நிச்சயம் விழுந்து விழுந்து சிரித்திருப்பீர்கள்..
    நன்றி. ;-)

    ReplyDelete
  23. @அப்பாதுரை
    சார்! இது டிராமாதான்.. சாதா டி.வியில வந்தது (தூர்தர்ஷன்)
    இன்னிக்கி பெருசா ஒன்னு போட்டுடறேன்! ;-)))

    ReplyDelete
  24. மெளலி நாடகம் சூப்பர்.

    ReplyDelete
  25. @இராஜராஜேஸ்வரி
    நன்றிங்க.. ;-))

    ReplyDelete
  26. முகரக்கட்டை புஸ்தகம் - FACE BOOK

    (எல்லாரும் உங்க அளவுக்கு இலக்கியவாதியா இருக்க முடியாதில்லை.
    அதான் யாருக்காச்சும் புரியலன்னா என்ன பண்றதுன்னு உங்க உரைக்கு ஒரு விளக்க உரை போட்டேன்.
    ஏதோ என்னால முடிஞ்சது.பின்ன என்ன என்னால கீதைக்கா உரை போட முடியும்,வேணும்னா
    தலைகாணி உரை போடுவேன்.நல்ல நோட் பண்ணிக்கங்க.அப்பறம் கிண்டலடிக்க வேணாம்.
    நான் சொன்னது தலைகாணி உரைதான்.மந்திரம் இல்லை)

    ReplyDelete
  27. நம்ம பதிவுல டைம் பாக்க வரவே இல்லையே நீங்க?

    ReplyDelete
  28. நம்மாளுங்க யாரப் பாத்தாலும் இந்த மாதிரிதான் பேசுறாங்க!! ஹா..ஹா..ஹா.. இதை விட சேது படத்துல, விக்ரம் தன்னிடம் ஹால் டிக்கெட் வாங்கித் தரச் சொல்லி சிபாரிசுக்கு வரும் மாணவிகளிடம் ஆங்கிலம் பேசும் காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா? மனம் விட்டு சிரித்தேன். [விக்ரம் ஆங்கில காண்வேண்டில் படித்தவர், ஆங்கிலம் நன்றாகத் தெரியுமென்பது வேறு விஷயம்...!!!]

    ReplyDelete
  29. செம சிரிப்பு. இந்த நாடகம் பார்த்ததில்லை DVD-ல் கிடைக்குதா? விசாரிக்கணும்

    ReplyDelete
  30. @raji
    ஹி..ஹி..... நான் எதுவுமே சொல்லலை டீச்சர்! கப்சிப். ;-)))

    ReplyDelete
  31. @raji
    காலத்தின் கோலங்களை ரசித்தேன். ;-))

    ReplyDelete
  32. @Jayadev Das
    இது ஜோக்கு தானே! மௌலி நன்றாக இங்கிலீஷ் பேசுவார் என்று நினைக்கிறேன். கருத்துக்கு நன்றி. முதல் வருகை தொடரட்டும்.. ;-))

    ReplyDelete
  33. @மோகன் குமார்
    லான்ட்மார்க்கில் கிடைக்கிறது மோகன். ;-))

    ReplyDelete
  34. Flight No.172 Super comedy...

    Mouli is a great comedian and has given many comedy hits...

    Sachin is really a GEM

    ReplyDelete
  35. மைனரே இது நம்ம ரெண்டு பேரும் பேசுரமாதிரி இல்லை??

    ReplyDelete
  36. // RVS said...

    @Madhavan Srinivasagopalan
    யப்பா.. நீ வருஷம் எல்லாம் ஞாபகம் வச்சுருக்கே! நன்றி மாதவா! ;-)) //

    ம்..
    அந்த சமயத்துலதான் நம்ம வூட்டுலே டி.வி வாங்கின புதுசு....
    ஆல்சோ.. ஒரு தொடர் நாடகம்னா மொத்தம் 13 எபிசோட்தான்..
    நடுநடுவில விளம்பரம் வராது..

    ReplyDelete
  37. இந்த வீடியோ எங்களிடமும் இருக்கிறது. எதனை முறை பார்த்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

    ReplyDelete
  38. @R.Gopi
    ஆமாம் கோபி... எவ்ளோ பிளேயர் இருந்தாலும் சச்சினுக்கு ஈடாகுமா? ;-)

    ReplyDelete
  39. @கக்கு - மாணிக்கம்
    இதுல நீங்க யாரு.. நான் யாரு.. ;-)))

    ReplyDelete
  40. @Madhavan Srinivasagopalan
    நிறைய டீடைல் வச்சுருக்கப்பா.. ;-))

    ReplyDelete
  41. @வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
    கருத்துக்கு நன்றி மேடம்! கொஞ்சம் கதை கிதை எல்லாம் எழுதறேன்.. முடிஞ்சா பாருங்களேன்.. ;-))

    ReplyDelete