Monday, March 21, 2011

கூட்டணி (அ)தர்மம்

அது ஒரு அடர்ந்த வனம். அந்த அத்துவானக் காட்டில் ஒரு குள்ள நரி தன்னுடைய நண்பர்களான புலி, எலி, ஓநாய் மற்றும் கீரிப்பிள்ளையுடன் சுகஜீவனம் நடத்தி வந்தது. ஒரு நாள் அந்தக் காட்டில் நன்கு புஷ்டியாக வளர்ந்த ஒரு மானைக் கண்டார்கள். அடித்து ஐந்து நாட்களுக்கு உட்கார்ந்து சாப்பிடும்படியான நல்ல வாட்டசாட்டமான மான் அது. அந்தப் பகுதியின் மான் கூட்டத் தலைவன் போல இருந்தது. கண்ணெதிரே வேட்டையை பார்த்ததும் நாக்கை சப்புக்கொட்டினாலும் அந்த மானுடைய ஓடும் திறனும், சக்தியும் இவர்களை அதை நெருங்கவொன்னாதவாறு கட்டிப்போட்டு இருந்தது. நித்யமும் அதைப் பார்த்து "ஹும்....." என்று சேர்ந்தார்ப்போல் ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டு இந்தக் கூட்டணி வேடிக்கைப் பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டது.

KanikaNeedhi

எப்படியும் அந்த மானை ருசிக்கும் நோக்கோடு குள்ளநரி ஒருநாள் ஒர் அவசரக் கூட்டம் ஒன்றை கூட்டியது. நண்பர்கள் அனைவரும் உட்கார்ந்து கூடிப் பேசும்போது குள்ளநரி ஒரு அபாரத் திட்டம் வகுத்து பின்வருமாறு பேசியது:
"தோழர்களே! நம்மிடம் மிக வலிமை வாய்ந்தது புலிதான். அவரால் தான் இந்த மானை அடித்து வீழ்த்தமுடியும்  இருந்தாலும் மான் மிகவும் இளமையாகவும் உறுதியாகவும் இருக்கிறது. முழு வலுவுடன் நன்றாக துள்ளிக்குதித்து மிகவேகமாக ஓடுகிறது. மேலும் நம்மைவிட கொஞ்சம் புத்திசாலியாகவும் தெரிகிறது. ஆகையால் புலி நினைத்தாலும் கனவில் கூட அதை அடித்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு துளிக்கூட இல்லை. ஆகையால் நான் ஒரு உபாயம் கூறுகிறேன். அந்த மான் தூங்கிக்கொண்டிரும் போது உருவில் சிறியதாக இருந்தாலும் நம் எலியார் சென்று அந்த மானின் காலைக் கடித்துவிட்டு வந்துவிடட்டும். கால் கடிபட்டவுடன் அந்த மானால் முன்னைப்போல் வேகமாக ஓடமுடியாது. காலை இழுத்துக்கொண்டு நொண்டி நொண்டித்தான் ஓடும். அந்த சந்தர்ப்பத்தில் நம் புலியார் ஓடிச்சென்று அதை அடித்துக் கொன்று விடுவார். அதற்குப் பிறகு நாம் அனைவரும் அதை பங்கு போட்டு கூட்டாக தின்னலாம்." என்று கதை, திரைக்கதை அமைத்து இயக்கம் புரிந்தது.

நினைத்தபடியே முதல் நாள் எலியார் புகுந்து மானின் காலைக் கடிக்க, அது மறுநாள் ஓடுவதற்கு திணற, புலியார் துரத்தி அடித்துக் கொன்றுவிட்டார். இப்போது எல்லோரும் விருந்துக்கு ரெடி. செத்துக்கிடக்கும் மானின் அருகில் உட்கார்ந்து கொண்ட குள்ளநரி, "நண்பர்களே! நான் இதை பத்திரமாக பாதுகாத்துக் கொண்டு இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன். நீங்கள் இந்த இரையை அருந்துவதற்கு முன் கைகளை அங்கிருக்கும் மடுவில் அலம்பிக்கொண்டு சுத்தம் செய்து திரும்பி வாருங்கள். அப்புறம் நான் போய் கைகள் கழுவிக்கொண்டு வந்தவுடன் எல்லோரும் சேர்ந்து இதை உண்ணலாம்" என்று தந்திரமாக வழிநடத்தியது.

எதிர்பார்த்தபடியே வேகவேகமாக முதலில் திரும்பியது வலுவான புலி. குள்ளநரி முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு வருத்தத்துடன் உட்கார்ந்திருந்தது. "என்னாயிற்று? ஏன் சோகமாக இருக்கிறாய்? நாம் நினைத்தபடியே மானை வீழ்த்திவிட்டோம். எல்லோரும் மகிழ்ச்சியாக உண்ணலாமே" என்று புலி குஷியாக அலம்பிய கைகளை தட்டிக்கொண்டே கேட்டது. அதற்கு குள்ளநரி "அதை ஏன் கேட்கிறீர்கள் புலியாரே, இந்த எலி சொன்ன வார்த்தையை என்னால் தாங்க முடியவில்லை. நெஞ்சு பொறுக்கவில்லை. அதனால் தான் சோகமாக இருக்கிறேன்" என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறியது.
"என்ன சொல்லிற்று? என்று பதிலுக்கு உறுமியது புலி.
"இந்தத் தீனி என்னால் தான் உங்களுக்கு கிடைத்தது. நான் மட்டும் மான் காலைக் கடிக்காவிட்டால் இந்த கிழப் புலி அடித்திருக்குமா என்று என்னிடம் சவால் விட்டுக் கேட்டது. கேவலம் அப்படி ஒரு எலி கேட்ட பின்பும் நாம் இதை உண்ணவேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று ஒரு பொய்யைச் சொன்னது.
"எனக்கு இன்னமும் தெம்பு இருக்கிறது. இப்படி ஒரு அற்ப பதரான எலியின் உதவியில் எனது வயிறை கழுவ நான் விரும்பவில்லை. என் சொந்த முயற்சியால் எனக்கு விருப்பப்பட்ட விலங்கை அடித்து சாப்பிடுவேன்" என்று வீராப்புடன் சொல்லிவிட்டு இடத்தை காலி செய்தது புலி.

அடுத்தது வெகு ஜாலியாக கல்யாண சாப்பாடு சாப்பிடும் ஆசையில் சீட்டியடித்தபடி குதித்து வந்தது எலி.  "சற்றுமுன் தான் கீரிப்பிள்ளை வந்தது. புலி தனது அழுக்கு காலினால் இந்த மானை அடித்ததால் இதன் உடம்பில் விஷம் ஏறியுள்ளதாம். இதை சாப்பிட்டால் தனக்கு மரணம் சம்பவிக்கும் என்றும் மிகவும் பசியாக இருப்பதால், நீ வந்தவுடன் உன்னை அடித்து நாங்கள் சாப்பிடலாம் என்றும் பிரியப்படுகிறது" என்று எலியிடம் ஒரு புருடா விட்டது குள்ளநரி. இதைக் கேட்ட மாத்திரத்தில் அலறியடித்துக்கொண்டு தனது வலைக்குள் போய் புகுந்துகொண்டது எலி.

இரையை சாப்பிட சித்தமாக வந்த ஓநாயிடம் "என்னவோ தெரியவில்லை புலி உன்னிடத்தில் மிகவும் கோபமாக உள்ளது. உன்னை தனது குடும்பத்தோடு உண்பதற்காக மனைவியை அழைத்து வருவதற்காக என்னிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறது. இதற்கு மேலும் நீ இங்கு இருக்கிறாயா அல்லது தப்பித்து ஓடுகிறாயா. உனக்கு வசதி எப்படி." என்று மிரட்டியது. அரண்டு மிரண்ட ஓநாய் தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலைதெறிக்க ஓடிவிட்டது.

கடைசியாக வந்த கீரிப்பிள்ளையை பார்த்து, "டேய் கீரி! இதுவரை வந்த எல்லோரையும் என்னுடைய புஜபல பராக்கிரமத்தால் அடித்து துரத்தி விட்டேன். வா! வந்து என்னுடன் முதலில் மோது. நீ ஜெயித்தால் பிறகு நீ ஒருவனே அனைத்தையும் சாப்பிடு" என்று முண்டா தட்டி சண்டைக்கு அழைப்பு விடுத்தது. புலியை கூட தனி ஒருவனாக இவன் ஜெயித்து விட்டானே என்று நம்பிய அந்த முட்டாள் கீரியும் பயந்து ஓடிவிட்டது. எல்லோரையும் விரட்டி விட்டு நிம்மதியாக தான் ஒருவனே அந்த முழு மானையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு சந்தோஷமடைந்தது அந்த குள்ளநரி.
மேற்கண்ட கதை ஐந்தாவது வேதமாகிய மஹாபாரதத்தில் ஆதி பர்வத்தில் கணிக நீதியில் இடம் பெற்றது. துரியோதனன் என்னதான் மோசமான ஒரு பிள்ளையாய் இருந்தாலும் அவன் மீது தந்தைப் பாசம் கொண்டு வலிமை மிகுந்த பாண்டவர்களை எதிர்த்து போர் புரிவதா அல்லது சமாதானமா என்று குழம்பிய திருதிராஷ்ட்ரன் கணிகர் என்ற அரசியல் ஆசானிடம் ஆலோசனை கேட்டார். அப்போது ஒரு மன்னனானவன் கூட்டாளிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர் கூறிய கதை தான் இது.

தற்போது நடந்து வரும் அரசியல் பேரங்களில், இந்தக் கதையில் இருந்து நமக்கு விளங்கும் கருத்தை தமாஷாக கீழ்கண்ட சமன்பாடுகளில் நாம் சரிபார்த்துக் கொள்ளலாம். புத்திக் கூர்மை படைத்த மக்கள் இன்னும் பல வழிகளில் அவரவர்களுடைய கற்பனைக்கு ஏற்ப இந்தக் கூற்றை சமன்படுத்திக் கொள்ளலாம்.
  1. வசிக்கும் நாடு = அடர்ந்த வனம் 
  2. வாக்குரிமை பெற்ற மக்கள் = மான்
  3. பெரிய கழகங்கள் = கு.நரி 
  4. பெ.கழகங்களை அண்டிப் பிழைக்கும் சிறிய கட்சிகள் =  புலி, எலி, கீரிப்பிள்ளை, ஓநாய்
  5. மக்களுக்கு வழங்கப்படும் இலவசங்கள்  = மானை எலி கடித்தல்
சென்ற பதிவு மிகவும் தக்குடுயூண்டு... ச்சே.. தக்கினியூண்டு இருந்ததாக புகார் கூறியவர்கள் இப்பதிவில் சந்தோஷப்பட்டுக்கொள்ளவும். போன பதிவு சிறியதாக இருந்ததால் அகமகிழ்ந்தவர்கள் இப்பதிவில்....... தயவு செய்து அடிக்க வரவேண்டாம்.

படம்: கூகிளில் வேட்டையாடி இந்த மிருகங்களின் படங்களை எடுத்து பிகாசாவில் இட்டு ஒரு கலக்கு கலக்கி அடியேனே கொலாஜ் பண்ணிய ஓர் அற்புத படம். அற்புதம், அதி அற்புதம் என்பதெல்லாம் ஒருவருக்கொருவர், மனசுக்கு மனசு வித்தியாசப்படுபவை என்பதை யாம் அறிவோம். நன்றி.

-

37 comments:

  1. மக்கள் ஓட்டு போட்டு ஏமாறறதை எதுக்கு சமனா சொல்லறது?

    மானும் மக்கள் மாதிரியே ஏமாந்த மான்தான்.ஆனாலும் மான் தானா
    பேராசைப்பட்டு இலவசக் கடி வாங்கலை.தூங்கும் போது கடி வாங்கிச்சு.
    ஆனா மக்கள் முழிச்சிக்கிட்டே தெரிஞ்சே கடி வாங்கறதுல ஆர்வம்
    காட்டறாங்க.

    ஏற்கனவே தன் வீட்டில அந்த சாதன(னை)ப் பொட்டி இருந்தாலும்
    பேராசைல அதை வாங்காம விடறதில்லை படிச்சவங்க கூட.
    அதுக்கு மனுஷனை விட மான் எவ்வள்வோ தேவை.அதுக்கு முதுகெலும்பு இருக்கு

    ReplyDelete
  2. அட இங்கயும் அரசியலா? :) மஹாபாரத அரசியலைச் சொன்னேன்! நல்ல கதைதான். பகிர்வுக்கு நன்றி மைனரே.

    ReplyDelete
  3. விரைவில் வேட்பு மனு தாக்கல் செய்து சீறும் சிறுத்தையாக வென்று எங்களை சீரும் சிறப்புமாக வாழ வைக்க வருக..வருக..

    ReplyDelete
  4. படித்துக் கொண்டு வரும்போதே அரசியல் காட்சிகளுக்கு பொருந்துவதாக மனதில் பட்டது. சரிதான்!

    ReplyDelete
  5. கதை அருமை
    விளக்கம் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. தலைப்புப் பொருத்தம். ஆனாலும் இங்கே இஷ்டப்பட்டே அல்லவா கடி வாங்கிக் கொள்கிறார்கள்

    ReplyDelete
  7. பேராசைல அதை வாங்காம விடறதில்லை படிச்சவங்க கூட.
    அதுக்கு மனுஷனை விட மான் எவ்வள்வோ தேவை.அதுக்கு முதுகெலும்பு இருக்கு
    ///

    நானும் வழி மொழிகின்றேன் sagovin kootrai..

    பெரியார், காந்தி சொல்லி திருந்தாத மேன்மக்கள்
    நம்மை போன்ற வர்கள் சொல்லிய திருந்த போறாங்க...

    என்னமோ...பதிவில நீங்க சொல்ல வந்த கருத்தை சொல்லிவிடீங்க

    ReplyDelete
  8. கதை நல்லா இருக்கு. (காங்கிரஸ் சிறிய கட்சியா?)

    ReplyDelete
  9. சரியான நேரத்தில் போட்ட பதிவு...மிருகங்களே பரவாயில்லை எனும் வகையில் நமது அரசியலாரின் கூட்டணி.... எதிலும் சந்தர்ப்பவாதம் ..நரி இவர்களிடம் பாடம் கற்க வேண்டும்...

    ReplyDelete
  10. இப்போ நடக்குற மேட்டர பத்தி எப்போவோ சொல்லி வச்சிட்டாங்க! ம்..
    வெல்டன் அண்ணா, சரியான நேரத்தில சொன்னதுக்கு! :)

    ReplyDelete
  11. கூகிளில் வேட்டையாடி இந்த மிருகங்களின் படங்களை எடுத்து பிகாசாவில் இட்டு ஒரு கலக்கு கலக்கி அடியேனே கொலாஜ் பண்ணிய ஓர் அற்புத படம். அற்புதம், அதி அற்புதம் // மிகவும் கவர்ந்தது கொலாஜ் வொர்க்.

    ReplyDelete
  12. @raji
    மேனுக்கு மான் பரவாயில்லை அப்படின்னு சொல்றீங்க? கரெக்ட்டுதான்.. ;-))

    ReplyDelete
  13. @வெங்கட் நாகராஜ்
    பாராட்டுக்கு நன்றி தல. கணிக நீதி முழுவதும் அரசியல் மற்றும் அரசியல் வாதிகள் பற்றியது.. பிறிதொரு சமயத்தில் முழுவதுமாக பகிர்கிறேன். ;-))

    ReplyDelete
  14. @! சிவகுமார் !
    ஹா.ஹா.. ரணகளப் படுத்திடுவீங்க போலருக்கு.. ;-)))

    ReplyDelete
  15. @ஸ்ரீராம்.
    நன்றி ஸ்ரீராம்! ;-)

    ReplyDelete
  16. @Ramani
    நன்றி சார்! ;-)

    ReplyDelete
  17. @எல் கே
    பாராட்டுக்கு நன்றி எல்.கே. நீங்க சொல்றது சரிதான்.. இஷ்டப்பட்டு கடி வாங்கிக்கொண்டு கஷ்டப்படுகிறார்கள். ;-))

    ReplyDelete
  18. @siva
    சிவா.. சரியா இருக்கா இல்லையா? சொல்லுங்க.. ;-)))

    ReplyDelete
  19. @அப்பாதுரை
    ஆமாம் சார்! சோனியா, ராகுல், பிரியங்கா என்ற மூன்று பேர் மட்டும் கொண்ட சிறிய கட்சி. ;-))

    ReplyDelete
  20. @பத்மநாபன்
    நீண்ட நாட்களுக்கு பிறகு நாடு திரும்பிய தலைவர் பத்துஜியை வரவேற்கிறோம். ;-))
    மிருகங்கள் தேவலாம். .. சரிதான்.. ;-))

    ReplyDelete
  21. @Balaji saravana
    நன்றி தம்பி. மஹாபாரதம் முழுவதுமே அரசியல் தான்.. ;-))

    ReplyDelete
  22. @இராஜராஜேஸ்வரி
    பாராட்டுக்கு நன்றி.. சும்மா பக்கத்துல பக்கத்துல வச்சு கோர்த்துப் பார்த்தேன். ;-)))

    ReplyDelete
  23. மஹாபாரதம் பேசுகிறது !

    ReplyDelete
  24. ஆர்.வி.எஸ்....

    இந்த மிருகங்களை அப்படியே நடப்பு அரசியலுக்கு பொருத்தி பார்த்தால், இன்றைய நடப்பு அரசியல் பளீரென தெரிகிறது...

    அதென்ன, காட்டு அரசியலை வைத்து நாட்டு அரசியல்.. காட்டிலுள்ள மிருகங்கள் இவர்களை கம்பேர் பண்ணினால், எவ்வளவோ மேல்...

    ReplyDelete
  25. @R.Gopi
    என்ன தலீவா... ரொம்ப நாளா ஆளைக் காணோம். ;-))

    ReplyDelete
  26. மஹாபாரதத்தில் இருந்து எடுத்த நல்ல நீதிக்கதை பகிர்வுக்கு நன்றி.. படங்களின் கொலாஜ் நன்று.

    ReplyDelete
  27. மைனரே இப்போ நல்லா வந்துகிணுது ராசா! அத்து இன்னா து டபக்குன்னு அல்லாம் பெரிசா கீது, படா பேஜாரா பூட்சி கண்ணு ஆகாங் ! அப்பால எல்லாம் சையாகீது நைனா. இன்னா வர்டா??

    ReplyDelete
  28. மிருகங்கள் கூட்டம் போட்டு திட்டும் இதைப் படித்தால்.. நான் காட்டு மிருகங்களைச் சொன்னேன்

    ReplyDelete
  29. Nice one...Thanks

    ReplyDelete
  30. @Madhavan Srinivasagopalan
    மாதவா.. கரெக்ட்டு.. ;-))

    ReplyDelete
  31. @கோவை2தில்லி
    ரசித்ததற்கு நன்றி சகோ. ;-))

    ReplyDelete
  32. @கக்கு - மாணிக்கம்
    நன்றி மாணிக்கம். நீங்க என்னுடைய பதிவுகளைப் படிக்காம டபாய்க்க முடியாது. தன்னால சரி ஆயிடுச்சு பாருங்க.. ;-))

    ReplyDelete
  33. @ரிஷபன்
    ஹா.ஹா.. கரெக்ட்டு சார்! நூத்துல ஒரு வார்த்தை.. ;-))

    ReplyDelete
  34. @Anonymous
    நன்றி அனானி! பெயரையாவது போடுங்களேன்! ;-))

    ReplyDelete
  35. மானை நரி தின்னதோட விட்டிருக்கலாம்... நாங்க கற்பனைப் பண்ணியிருபோம்ல எது மான்..எது கீரிப் புள்ள..எது எலின்னு..
    போங்க ஆர்.வி.எஸ்?

    ReplyDelete
  36. @”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
    சார்! கதையை கொஞ்சம் இழு........த்து சொன்னேன்.. ஹி.ஹி.. ;-)

    ReplyDelete
  37. நன்னாவே கதை அளக்கறேள் அண்ணா!...:)) கடைசில தக்குடுவையும் வம்புக்கு இழுத்தாச்சு!!..;P

    ReplyDelete