Tuesday, March 29, 2011

செத்து ஒழி!



fear


உனக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லையா? 

பாவம் ஒரு பொண்ணா அவளும் என்ன தான் செய்வா. உன் கூட மாரடிக்கறதே அவளுக்கு வேலையாய்ப் போச்சு.

இதே வேற யாராவது செஞ்சிருந்தா அவ்ளோதான். ஈவ் டீசிங்க்ல புக் பண்ணி மாமியார் வீட்ல தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி வூடு கட்டி கவனிச்சுருப்பாங்க. 

நான் அப்படி என்ன பண்ணினேன்னு மீசையை முறுக்கி கேக்கறியா. உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கும். கல் நெஞ்சக்காரன் நீ.

அவ யார் தெரியுமா? அவளோட ஸ்டேடஸ் தெரியுமா உனக்கு? அவங்க வீட்ல அவ சொல்றதை தான் எல்லோரும் கையை கட்டி எதிர் பேச்சு பேசாம அடக்கமா கேக்கறாங்க. அவளுக்கு அவ்ளோ மருவாதி. நீ கொஞ்சம் கூட மதிக்காம அவ கைலயே ராங்கு காட்ற!! உம்..

முந்தாநாள் பாத்ரூம்ல போய் கதவை தாழ் போட்டு குளிக்க போயிருக்கா. நீ என்ன பண்ணின... என்ன பண்ணின... சீ. நினைக்கவே கூசுது. கதவுக்கு பின்னாடி மறைஞ்சு நின்னு உன் வேலையை காட்டியிருக்கே. சீ.ச்சீ... வெட்கம் கெட்டவனே.. அவ எப்படி அலறினா தெரியுமா.. ராஸ்கல்ஸ். உங்க குடும்பத்துக்கே வெட்கம் மானம் கிடையாதே.. உனக்கு எப்படி இருக்கும்?

சரி. அதை விடு. உன்னைக் கண்டாதான் பிடிக்கலைன்னு தெரியுது இல்ல. அப்புறமும் பெட்ரூம்ல உனக்கு என்ன வேலை. அடுத்தவங்க படுக்கையறைக்குள்ள நுழையறது அநாகரீகம் அப்படின்னு தெரியாது. அதுவும் எப்ப? ராத்திரியில. ஒரு கல்யாணம் ஆன பொண்ணோட அந்தரங்கமான அறையில நுழைஞ்சு அந்த நேரத்தில அவங்க மனசை காயப்படுத்தறதில உனக்கென்ன லாபம். உம். சொல்லு.  அவங்களுக்கெல்லாம் ஒரு ப்ரைவசி வேணாம். உன்னை மாதிரி ஒரு மானங்கெட்டவன் இந்த உலகத்திலயே கிடையாது.

அன்னபூரணி வாசம் செய்யும் இடம் அடுக்களை. அங்க கூட அவ நிம்மதியா இருக்க முடியலையே. அவ பின்னாடியே போய் நின்னு உன்னோட துஷ்டத்தனத்தை அங்கேயும் கொண்டு போய் காமிக்கற. முந்தாநாள் வாங்கின நான்-ஸ்டிக் தவா. உன்னைக் கண்ட எரிச்சல்லையும் பயத்துலையும் பதறிப் போய் தூக்கி அடிச்சு...   இப்ப அது Non-Usable தவா.

இன்னொரு விஷயமும் கேட்கனும். ஏதோ கொஞ்சம் ஆயாசமா ஆனந்தமா பால்கனியில நின்னுருக்கா. நிக்கக் கூடாதா? பாவம் இல்லை. நீ என்ன பண்ணின. பாவி.. ஏதோ fairy மாதிரி உல்லாசமா பறந்து வந்துருக்க. அவளுக்கு அப்டியே சப்தநாடியும் அடங்கிப் போச்சு. உன் கிட்டேயிருந்து தப்பிச்சா போதும்ன்னு விழுந்தடிச்சி ஓடியிருக்கா. நாளுக்கு நாள் உன்னோட அராஜகம் தாங்க முடியலை. 

எனக்குத் தெரியும். ஊழிக் காலம் வந்தாக் கூட நீ ஒழிய மாட்டே!! இப்ப அடிக்கறேன் ஹிட்டு..

நீ செத்து ஒழி

கரப்பானே!

பட உதவி: http://guardian.co.uk

-

32 comments:

  1. ஆரம்பத்திலேயே. என்னால் 'கரப்பான்' என ஊகிக்க முடிந்தது..
    சச்பென்சே இல்லை.. விறுவிறுப்பு இல்லை..

    ReplyDelete
  2. என்ன ஆச்சு..
    என்னைய மாதிரி சரக்கு இல்லாத ஆளு எழுதுற மாதிரி
    மொக்கை ஆரம்பிச்சிட்டீங்க ?

    ReplyDelete
  3. அறை அறையாய் கரப்பான் சரியான அலப்பறை

    ReplyDelete
  4. பாதியிலேயே தெரிஞ்சு போச்சு கரப்பந்தான்னு. உலகத்தில் தங்கமணிகள் பயப்படும் ஒரே ஜீவன் அதுமட்டுமே :)

    ReplyDelete
  5. ஹா...ஹா...ஹா...

    கரப்பானின் அலப்பறை....படு தூள்...

    யூகிக்க முடியாத கிளைமாக்ஸ்.....

    நம்ம தலைவர்களின் தேர்தல் அறிக்கையை போல் படு விறுவிறுப்பு..

    வாழ்த்துக்கள் ஆர்.வி.எஸ்...

    ReplyDelete
  6. @Madhavan Srinivasagopalan
    கருத்துக்கு நன்றி மாதவா... இது சஸ்பென்ஸ் இல்லை.. ;-)))

    ReplyDelete
  7. @Madhavan Srinivasagopalan
    மாதவா! இதுவும் ஒருவித சரக்குதான். அப்பப்ப கொஞ்சம் இந்த மாதிரியும் எழுதினா தான் நல்லா இருக்கும்ன்னு தோணிச்சு.. அதான்... பொறுத்தருள்க எஜமானனே! ;-))

    ReplyDelete
  8. @பத்மநாபன்
    கமண்ட் திலகத்திற்கு நன்றி... ;-))

    ReplyDelete
  9. @எல் கே
    நீங்க ஸ்மார்ட் எல்.கே. கொஞ்சம் சுவையாய் இருக்கட்டுமேன்னு எழுதினது தான். மத்தபடி சஸ்பென்ஸ் வைக்கணும்ன்னு எண்ணம் இல்லை.. நன்றி. எல்.கே. ;-)

    ReplyDelete
  10. @R.Gopi
    உங்களோட அரசியல் நையாண்டி உங்களை விட்டு போகவே போகாது.. என்னமா ஒப்புமை படுத்துறீங்க.. நன்றி கோபி. வீடியோ பார்த்துட்டு சொல்றேன். ஆரம்பம் நல்லா இருந்தது.. ;-))))

    ReplyDelete
  11. கலக்கலான பதிவு..முடிவு சூப்பரு..

    http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_29.html

    ReplyDelete
  12. தலைப்பைப் பார்த்ததும் நடுங்கி திரும்பிடலாமானு தோணிடுச்சு தலைவரே.

    ReplyDelete
  13. நா ஆரம்பத்திலேயே "கரப்பான் பூச்சி" அப்டீங்கறத படிச்சிட்டேனே!
    :))))))

    ReplyDelete
  14. உலகத்தில் தங்கமணிகள் பயப்படும் ஒரே ஜீவன் அதுமட்டுமே//

    நான் அதுக்கும் பயப்படமாட்டேனே!! சின்ன வயசுலேயே கரப்பானை அடிச்சு மீசையை பிடிச்சு ஊஞ்சாலட்டுவோம்ல :)))

    ReplyDelete
  15. ச்சே.. ஒரு கரப்பான் எத்தன வேலை செய்யுது !!

    ReplyDelete
  16. @!* வேடந்தாங்கல் - கருன் *!
    பாராட்டுக்கு நன்றி கருன். ;-))

    ReplyDelete
  17. @அப்பாதுரை
    கரெக்ட்டுதான்! இந்த தலைப்பு வைக்க கொஞ்சம் யோசித்தேன். வேற ஒன்னும் சட்டுன்னு ஆப்டலை ... அதான்.. மன்னிச்சுக்கோங்க தல. ;-))

    ReplyDelete
  18. @கக்கு - மாணிக்கம்
    தல நீங்க கிரேட்டு.. ;-)))

    ReplyDelete
  19. @புதுகைத் தென்றல்
    ஓ.... நீங்க ரொம்ப தைரியமானவங்களா?... நா கொஞ்சம் சாக்கிரதையா இருக்கோணும்... ;-))))

    ReplyDelete
  20. @இளங்கோ
    எதுக்கு ச்சே.. நம்மால இந்தக் காரியம் பண்ண முடியலைன்னு ஆதங்கத்துலையா.. ;-)))))

    ReplyDelete
  21. ஊழிக் காலம் வந்தாக் கூட நீ ஒழிய மாட்டே!! இப்ப அடிக்கறேன் ஹிட்டு..

    நீ செத்து ஒழி

    கரப்பானே!

    .... ha,ha,ha,ha,ha.. funny!

    ReplyDelete
  22. கரப்பான்னு தெரிஞ்சுடுத்து.
    நான் வர வரை சூப்பர் பதிவெல்லாம் போட்டுடாம
    இப்படியே மொக்கையா மெயின்டெயின் பண்ணிக்கங்க,ஓகே?!!! ஹி ஹி :-)

    ReplyDelete
  23. ”நீ செத்து ஒழி“ ஒழிச்சிடுங்க. யாருக்கு வெற்றி எனப் பார்த்திடுவோம் :)

    ReplyDelete
  24. வாழ்க்கை ஒரு வட்டண்டா!
    கரப்புக்கு எலிய பாத்தா பயம்.
    எலிக்கு பூனையை பாத்தா பயம்.
    பூனைக்கு நாயைப் பாத்தா பயம்.
    நாய்க்கு நம்மைப் பாத்தா பயம்.
    நமக்கு பொண்டாட்ட்டியப் பாத்தா பயம்.
    பொண்டாட்டிக்கு கரப்பைப் பாத்தா பயம்..

    ReplyDelete
  25. மீசைக்காரன்னு சொன்னதுமே புரிஞ்சிபோச் :-))

    @மோகன்ஜி.. உங்க பின்னூட்டத்தை இடுகையா தேத்தியிருக்கேன்.இன்னிக்கு அந்த இடுகைக்கு முதல் பிறந்தநாள்
    :-)))

    http://amaithicchaaral.blogspot.com/2010/03/blog-post_30.html

    ReplyDelete
  26. நானெல்லாம் பயப்படறதில்லை.. டிசெக்ட் செஞ்சுடுவேனோன்னு அதுதான் என்னைக்கண்டு பயப்படும் :-))))

    ReplyDelete
  27. @raji
    ஓ.கே மேடம். மொக்கையும் கலையின் அம்சம்... ;-))))

    ReplyDelete
  28. @மாதேவி
    ஹிட் இருக்கும் வரை நமக்குத் தான் வெற்றி. ;-))

    ReplyDelete
  29. @மோகன்ஜி
    டி.ஆர் மாதிரி என்னமா பேசுறீங்க அண்ணா! கலங்கிட்டேன்.. ;-))

    ReplyDelete
  30. @அமைதிச்சாரல்
    மேடம் நீங்க டாக்குடருக்கு படிச்சீங்களா? அறுத்துடுவேன்னு சொல்றீங்க.. ;-)))

    ReplyDelete
  31. இப்படி எழுதியதும் நல்லாத்தான் இருக்கு.
    கரப்பான் எனக்கும் பயம் இல்லை. ஆனா அருவருப்பு!

    ReplyDelete