Sunday, May 15, 2011

மன்னிக்க வேண்டுகிறேன்

கொஞ்சம் உங்ககிட்ட சொல்லிக்காம கொள்ளா(ல்லா)ம தின்னவேலி, தென்காசி, குற்றாலம் அப்படின்னு போயிட்டேன். ஸாரி. இலக்கியப் பணிகளுக்கு மத்தியில ஒரு சின்ன ட்ரிப். வெய்யில் கொளுத்தினான். காற்று சட்டையை கழற்றினான். இன்னும் நிறைய இருக்கு. சிலிகான் காதலி வேற காத்துகிட்டு இருக்கா. இப்பதான் ரயிலைவிட்டு இறங்கி வீட்டுக்கு வந்தேன். எழுத்தார்வத்துல பொட்டியத் தொறந்து அடிச்சுகிட்டு இருக்கேன். ஆடியகாலும், சொரிஞ்ச கையும் சும்மா இருக்காதாம். மீதிய பதிவுக்கு வைத்துக்கொள்கிறேன்.

எனக்காக பத்மினி உங்களை கேட்டுக்கிறாங்க. அவரை கேட்க விடாம சிவாஜி கட்டி கட்டி பிடிக்கிறாரு. பார்த்துகிட்டே இருங்க.... இனி புல்லெட் ஸ்பீடில் பதிவுகள்.




பின் குறிப்பு: இந்த பதிவுல ப்ளாக் அண்ட் வொயிட் பாட்டு போட்டாலும் பசுமையான பதிவுகள் பின்னால வருது. நன்றி.
-

26 comments:

  1. வந்ததும் வராததுமாய் போஸ்ட் போட்டாச்சா ??

    உங்க இலக்கிய ஆர்வத்துக்கு அளவில்லமா போய்டுச்சு

    ReplyDelete
  2. தலைப்பு மன்னிக்க வேண்டுகிறேன் என போட்டிருக்கிறீர்கள்
    உள்ளே பதிவில் இனி புல்லட் ஸ்பீடுல் பதிவு என
    எங்கள் ஆசையைத் தூண்டுகிறீர்கள்
    ஆவலுடன் காத்திருக்கிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கோடையில் குற்றாலம் போய் வந்திருக்கிறீர்கள்..உண்மையில் அதிர்ஷ்டம் தான்.. கொட்டுங்கள் எழுத்தருவியை....

    ReplyDelete
  4. //தின்னவேலி, தென்காசி, குற்றாலம் அப்படின்னு போயிட்டேன்.//

    அப்படின்னா, பயணக்கட்டுரை வரும். மகிழ்ச்சியுடன் குளிர்ச்சியை அனுபவிக்கக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  5. மைனரே, ஜல்லி அடிக்கவில்லை, உண்மையிலேயே, காலையிலிருந்தே இந்த பாடல் என் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது எவ்வித காரணமும் இல்லாமல். இங்கு வந்து பார்த்தல் வீடியோ ஓடுது.

    ReplyDelete
  6. மைனரே "சற்றே காற்று வரும் திசையில் " பதிவினை சென்று பாருங்கள்.

    ReplyDelete
  7. ஆவலாய் காத்திருக்கிறோம் வெங்கட்

    ReplyDelete
  8. இப்பத்தானே வந்திருக்கீங்க? ரொம்ப களைச்சிருப்பீங்க, பாவம்.

    ReplyDelete
  9. ஆகா!குற்றாலம் அருவியில் குளியல் போட்டாச்சா?’குளு,குளு’ன்னு எழுத ஆரம்பியுங்க1

    ReplyDelete
  10. வடிவேலுவ விடவா நீங்க தப்பு செஞ்சிட்டீங்க..
    மன்னிப்புலாம் எதுக்கு..

    பின்குறிப்பு : போன வாரம் மன்னை சென்று வந்தேன்.. V ராஜா, முரளி -- இவர்களை சந்தித்தேன்..

    ReplyDelete
  11. சிவாஜி பத்மினியை பார்த்ததுல எல்லாம் மறந்து போச்சு.. மன்னிச்சுட்டோம்..

    ReplyDelete
  12. :)
    Nice. Waiting for a nice and wonderful travelogue.

    ReplyDelete
  13. @எல் கே
    ஹி..ஹி.. ஒன்னும் செய்ய முடியலை எல்.கே. ;-))

    ReplyDelete
  14. @ஷர்புதீன்
    முதல் வருகைக்கும் சிரிப்புக்கும் நன்றி. மீண்டும் வருக. பதிலுக்கு என்னுடைய சிரிப்புகள். ;-)))))))))))))

    ReplyDelete
  15. @Ramani
    நன்றி சார்! உங்களை ஏமாற்றாமல் பதிவிட முயற்சிக்கிறேன். ;-))

    ReplyDelete
  16. @பத்மநாபன்
    குற்றாலத்தில் பேரருவி இல்லை. சென்பாகாதான் போனோம். எழுதியாச்சு பத்துஜி. ;-))

    ReplyDelete
  17. @அமைதி அப்பா
    எழுதியாச்சு அமைதி அப்பா! கருத்துக்கு நன்றி. ;-))

    ReplyDelete
  18. @கக்கு - மாணிக்கம்
    நாம் இருவரும் ஒரே அலைவரிசையில் இருக்கிறோம் நண்பரே! ஹிந்தி பாடல்கள் கேட்டு இன்புற்றேன். நன்றி. ;-))

    ReplyDelete
  19. @A.R.RAJAGOPALAN
    பாதியை பூர்த்தி செய்திருக்கிறேன் தோழா! ;-))

    ReplyDelete
  20. @அப்பாதுரை
    களைப்பா! எழுதற ஆர்வம் மத்தியானம் கூட என்னை தூங்க விடலை தலைவரே! ;-))

    ReplyDelete
  21. @சென்னை பித்தன்
    எழுதியிருக்கேன் சார்! படிச்சு பாருங்க.. நன்றி. ;-))

    ReplyDelete
  22. @Madhavan Srinivasagopalan
    ராஜாவை நான் பார்த்து ரொம்ப நாளாச்சு.. என்ன சொன்னான்? ;-)

    ReplyDelete
  23. @ரிஷபன்
    மன்னிச்சதுக்கு நன்றி சார்! ;-))

    ReplyDelete
  24. @வெங்கட் நாகராஜ்
    நன்றி தல! என்ன இங்கிலிஷ்ல வருது கமெண்ட்டு! ;-))

    ReplyDelete
  25. //
    ராஜாவை நான் பார்த்து ரொம்ப நாளாச்சு.. என்ன சொன்னான்? ;-) //

    ட்ராவல்ஸ் நடத்துவதாகச் சொன்னார். அவர் சகோதரர் வாசுவைப் பற்றியும் நினைவு கூர்ந்தோம்.

    நண்பர் ஏ.ஆர்.ஆர் ரமேஷ் இப்பொழுதும் விடாமல் கிரிக்கெட் ஆடிவருவதாகவும்(!) சொன்னார் V. ராஜா

    ReplyDelete