Monday, June 13, 2011

மேகமே.... மேகமே....

திண்ணைக் கச்சேரி எழுதும் ஆசை நேற்றைக்கு ராத்திரி வந்தது. பார்த்த விஷயங்கள் அப்படி. விளம்பர தொந்தரவுகள் இல்லாமல் நேரே செல்வோம்...


********** விஸ்வரூப ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயசுவாமி **********
நேற்றைக்கு மாலை ஆறரை வாக்கில் நங்கை ஆஞ்சநேயர் கோவில் சென்றிருந்தேன். என்னையும் நம்பி கண்ணாலம் கட்டிக் கொண்டவளுக்கு பிறந்த நாள். ஆவக்காய் மாங்கா வெட்டி விற்கும் தள்ளுவண்டி பெண்மணியிடம் கூட்டம் அம்மியது, ஆன்மீக புத்தக் கடையில் சுதா "டோலாயம்" பாடிக்கொண்டிருந்தார், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சில் இன்னும் சர்க்கரைநோய் தாக்காத புண்ணியாத்மாக்கள் நெய்யொழுகிய இனிப்புகளை நொசுக்கிக்கொண்டிருந்தன, பக்கத்தில் இருந்த ஆதித்ய பிர்லா கம்பெனியின் பலசரக்கு கடையில் மாம்பழ மெகா சேல் மாமிகளின் அமோக ஆதரவுடன் நடைபெற்றுக்கொண்டிருந்தது, வியாபார வசிய யந்திரம் தந்திரமாக விற்கும் மற்றுமொரு ஆன்மீகக் கடையில் நல்ல கூட்டம் இருந்தது, செருப்பு விடும் இடத்தில் ஒருவர் தனது தொலைந்த ஜோடியை கண்களை "கண்ணாளனே..." பாடல் மனிஷா கொய்ராலா மாதிரி சுழற்றி தேடிக்கொண்டிருந்தும் மற்றவர்கள் சட்டை செய்யாமல் ஐநூறு ரூபாய் காலணிகளை கழற்றி விட்டுக்கொண்டிருந்தார்கள், இத்தனை அமர்க்களத்திற்கிடையே கோவிலின் உள்ளே ஹனுமன் கூட்டமே இல்லாமல் ஏகாந்தமாக சேவை சாதித்தார்! திவ்ய தரிசனம். வெளியே வரும்போது சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் கொடுத்து வெளியே சென்று சாப்பிட பணித்தார்கள். வரும் வழியெங்கும் பிச்சுபிச்சு என்று சர்க்கரைப் பொங்கல் காலில் ஒட்டியது மனதை உறுத்தியது.

********* பட்டம் பறக்குது.. பள்ளிக்கொடம் தொறக்குது... *********

இன்றிலிருந்து என் பிள்ளைகளுக்கு பள்ளி ஆரம்பம். லேட்டா எழுந்து, லேட்டா பல் தேய்த்து, லேட்டா சாப்பிட்டு, நிறைய விளையாடி, நிறைய கார்ட்டூன் பார்த்து, லேட்டா படுத்து தூங்கியவர்களுக்கு இன்றிலிருந்து முன்னால் போட்ட பட்டியலில் லேட்டுக்கு சீக்கிரமும், நிறையக்கு கொஞ்சமும் போட்டு செய்யவேண்டியிருக்கும். துக்கம் தொண்டையை அடைத்தாலும் மகராசிகள் சிரித்துக் கொண்டே "டாடா" காண்பித்துவிட்டு பள்ளி சென்றார்கள். எனக்கு தொண்டையை அடைத்தது.

*********** ஸ்பீட் ஆட்டோகார் **********

ஆட்டோகாரர்கள் ரொம்பவும் திருந்திவிட்டார்கள். நடுரோட்டில் யூவாக வளையும் பொழுது இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு திரும்பினார் ஒரு அசாதாரண ஆட்டோ ஓட்டுனர். இந்த ஆச்சர்யத்தில் பிரேக் மேல் வைத்த காலை எடுக்காமல் உறைந்து நோக்கிய என்னை பின்னால் காது கிழிய ஹாரன் அடித்து கிளப்பினார்கள். பக்கத்தில் கொண்டு போய் வண்டியை நிறுத்திவிட்டேன் என்று முறைத்துக்கொண்டு வண்டியை உறுமிக்கொண்டே முந்திச் சென்றார் பின்னால் இருந்து வாயுவேகத்தில் சென்ற ஸ்பீட் ஆட்டோக்கார். என் மேல் இருந்த கோபத்தில் எனக்கு முன்னால் சென்ற ஆட்டோவின் பின் சீட்டில் பிருஷ்டம் தெரிய கம்பி மேல் உட்கார்ந்து சென்ற பெண்மணியை ஒட்ட ஒட்ட வழித்திருப்பார். வால் தப்பியது தம்பிரான் புண்ணியம்! மொத்தம் இந்த பாராவில் எவ்வளவு ஆட்டோகாரர்கள் ஓட்டினார்கள்?

*********** ரஜினி வாழ்க ***********

உடம்புக்கு முடியாமல் சிங்கப்பூரில் வைத்தியம் பார்த்துக் கொண்டாலும் சன் குழுமம் இன்னமும் ரஜினியால் வாழ்கிறது. சனிக்கிழமை நூறாவது முறையாக படையப்பா போட்டார்கள். ஆயிரம் விளம்பரங்களுக்கு மத்தியில் எல்லோரும் நூறாவது முறையாக ஸ்ரத்தையாக பார்த்தார்கள். எல்லாப் படங்களிலும் வரும் பேமிலி செண்டிமெண்ட், மகள் செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட், அம்மா செண்டிமெண்ட், லவ்வு செண்டிமெண்ட், செண்டிமெண்ட் செண்டிமெண்ட் என்று ஆயிரம் செண்டி வைத்து எடுத்தாலும் நீலாம்பரி ஸ்டைலில் சொல்வதென்றால் "அழகும், ஸ்டைலும் இன்னமும் உன்னை விட்டு போகலை..." தலைவா! சீக்கிரம் குணமடைய கடவுளை ப்ரார்த்திக்கிறோம்.

*********** திஹார் ஸ்பெஷல் இட்லி, தோசை ***********

ஜெயிலுக்கு போனால் களி தான் கிடைக்கும் என்று முன்பெல்லாம் சொல்வார்கள். இப்போது திஹார் முழுக்க தென்னிந்திய உணவு வகைகள் கமகமக்கிறதாம். இட்லி, தோசை என்று மூக்க பிடிக்க சாப்பிடுகிறார்களாம். தென்னிந்திய கைதிகள் மட்டுமல்லாமல் வடஇந்திய கைதிகளும் விரும்பிச் சாப்பிடுகிறார்களாம். கைதிகளுக்கு இவர்கள் செய்யும் உபசாரங்களைப் பார்த்தால் யாரும் சிறையை விட்டு வெளிய வரமாட்டார்கள் போலிருக்கிறது. இட்லி, தோசை ஆசையில் பிச்சைக்காரர்களாக சேர்ந்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரி!

********* செல்லாக் **************

அமெரிக்காவின் Magnum P.I என்ற மெகாத்தொடரில் நடித்து வரும் புகழ்பெற்ற நடிகர் டாம் செல்லாக்கின் புகைப்படத்தை கீழ்காணும் விதத்தில் போட்டோஷாப்பி மகிழ்ந்திருக்கிறார்கள். உங்களுடைய பார்வைக்கும்....


கொஞ்சம் உற்றுப் பார்த்தால் நிறைய செல்லாக்குகள் கண்மூடி தெரிவார்கள். இதைப் பார்க்கும் போது இராவணன் நினைவுக்கு வந்தால் அவர்களுக்கு நிச்சயம் ஸ்ரீராமன் அருள் பாலிப்பார்!

************ ABC... RVS **********

textify.it என்ற வலைமனையில் எந்தப் படம் கொடுத்தாலும் ABC யில் வரைந்து கொடுக்கிறார்கள். என்னுடைய படம் ABC யில்... "ஏபிசி நீ வாசி... எல்லாம் என் கைராசி... சோ ஈசி...."

என்னுடைய ஒரு காதில் 'A' வும் மறுகாதில் 'B' யும் தொங்குவது தெரிகிறதா?

*************** மேகமே.... மேகமே.... **************

மனம் மயக்கும் வீடியோ ஒன்று. பத்து நிமிடங்கள் இதற்கு நீங்கள் ஒதுக்க வேண்டும். மனதிற்கு இதம் கியாரண்டி. ரம்மியமாக மேகங்கள் ஒன்று கூடி, கலைந்து, இருட்டும் வரையில் கை நோக எடுத்ததை வேகமாக ஒட்டி வீடியோ தயாரித்திருக்கிறார்கள். அற்புதம். இதற்கு time-lapse ஃபோட்டோக்ராபி என்று சொல்வார்கள். பூ மொட்டு விரிப்பது, பல்லி நாக்கை நீட்டி கொசு பிடிப்பது என்று நிறைய நேஷனல் ஜியாக்ரபிக் சேனலில் பார்த்ததுதான், இங்கே மழை தரும் மேகத்தை படம் பிடித்து அசத்தியிருக்கிறார்கள். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். இன்பமேகங்கள் எல்லோரையும் சூழ்க.



பின் குறிப்பு: தீராத விளையாட்டுப் பிள்ளை இலட்சம் பார்வையாளர்களை தாண்டி பயணிக்கிறான் என்பது சந்தோஷமான செய்தி!
-

46 comments:

  1. செருப்பு விடும் இடத்தில் ஒருவர் தனது தொலைந்த ஜோடியை கண்களை "கண்ணாளனே..." பாடல் மனிஷா கொய்ராலா மாதிரி சுழற்றி தேடிக்கொண்டிருந்தும் மற்றவர்கள் சட்டை செய்யாமல் ஐநூறு ரூபாய் காலணிகளை கழற்றி விட்டுக்கொண்டிருந்தார்கள்,//

    so nice ...

    ReplyDelete
  2. //கைதிகளுக்கு இவர்கள் செய்யும் உபசாரங்களைப் பார்த்தால் //
    கைது பண்ணவங்க
    கழட்டி விட்டாலு
    கூட இட்லி தின்னவங்க
    இருக்க சொல்லி
    கெஞ்சு வாங்களோ !!!

    ReplyDelete
  3. துக்கம் தொண்டையை அடைத்தாலும் மகராசிகள் சிரித்துக் கொண்டே "டாடா" காண்பித்துவிட்டு பள்ளி சென்றார்கள். எனக்கு தொண்டையை அடைத்தது.

    அப்பன் அப்பன் தெரிந்தான் உன் பதிவில்
    என் துக்கம் தொடையை அடைக்க போகும் நாள் வர புதன் கிழமை
    நவரசப் பதிவு

    ReplyDelete
  4. கெட்ட கனாவின் அதிர்ச்சி தீர இங்கு வந்தால் டாம் செலக் படம். இன்றைய பொழுது நன்றாகவே விடிந்திருக்கிறது :)

    எத்தனை ஆட்டோ ஓட்டினார்கள்? ரசித்தேன்.

    ReplyDelete
  5. @இராஜராஜேஸ்வரி
    Thanks madam! ;-)

    ReplyDelete
  6. @ViswanathV
    இருக்கலாம் விசு. எவர் கண்டார்! ;-))

    ReplyDelete
  7. @A.R.ராஜகோபாலன்
    ஹா.ஹா... நன்றி கோப்லி. ;-)

    ReplyDelete
  8. @அப்பாதுரை
    அதென்ன கெட்ட கனா? ;-))
    ரசித்ததற்கு நன்றி சார்! ;-)

    ReplyDelete
  9. ஒரு மழைநாளின் சூடான கதம்ப சாதம்.

    எதைத் தொட்டாலும் மணக்குது.

    ReplyDelete
  10. லட்சம் பார்வையாளர்கள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. //மொத்தம் இந்த பாராவில் எவ்வளவு ஆட்டோகாரர்கள் ஓட்டினார்கள்?//
    நேரில் பார்த்த உங்களுக்கே குழப்பம்னா, படிக்கிற எங்களுக்கு எவ்வளவு குழப்பம் இருக்கும். :)

    //என்னுடைய ஒரு காதில் 'A' வும் மறுகாதில் 'B' யும் தொங்குவது தெரிகிறதா?//
    பரவா இல்லை.. ரெண்டு காதோடு போச்சு... உங்களுக்கு நெறைய காது இருந்திருந்தா ?... மீதி 24 எழுத்தும் எங்க போகும் ? :)

    // தீராத விளையாட்டுப் பிள்ளை இலட்சம் பார்வையாளர்களை தாண்டி//
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  12. நெடும் உயர ஆஞ்சனேயரையும் அவரை சுற்றிய விஷயங்கள் நல்ல கவனிப்பு... அருமையாக பிரசாதம் கொடுக்கிறார்கள்.. பிச்சு பிச்சுக்கு ஒரு வழி செய்ய வேண்டும்

    ஜெட்லாக் மாதிரி நமக்கும் ஸ்கூலுக்கு அனுப்பிய லாக் வருவது வாஸ்தவம்...

    இப்ப ஆட்டோ நண்பர்கள் அடக்கமாக இருப்பதாகத்தான் படுகிறது....

    சூப்பர் ஸ்டார் சுறுசுறுப்பாக வாக்கிங் போவதாக சிங்கை செய்திகள்....

    இட்லி தோசைக்கு பொடியும் வெங்காய சட்னியும் திஹாரில் பாக்கி ....

    செல்லாக்கின் மீசை புருவமாகவும் உதடு மூடிய கண்களாகவும் ..நல்ல கிராப்டிங்....

    ABC... கண்ணாடிக்கு பின் நிற்பது மாதிரி வித்தியாச முயற்சி..

    மேகப் படபிடிப்பு அருமை பகிர்வு .. உதகையில் நேரில் மிதந்த நினைவுகள் வந்தது..

    லட்சார்ச்சனை வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  13. @சுந்தர்ஜி
    இந்த இளையோன் கரண்டி பிடித்து சமைத்த கதம்ப சாதத்தை ருசி பார்த்ததற்கு நன்றி ஜி!

    ReplyDelete
  14. @!* வேடந்தாங்கல் - கருன் *!
    வாழ்த்துக்கு நன்றி கருன். ;-)

    ReplyDelete
  15. @இளங்கோ
    இலட்சம் வாழ்த்துக்கு நன்றி இளங்கோ. ;-))

    ReplyDelete
  16. @பத்மநாபன்
    எப்படி பத்துஜி! அணுஅணுவா ரசிச்சு கமென்ட்டறீங்க...
    உங்களோட இரசிகத்தன்மைக்கு தலை வணங்குகிறேன். ;-))

    ReplyDelete
  17. //என்னுடைய ஒரு காதில் 'A' வும் மறுகாதில் 'B' யும் தொங்குவது தெரிகிறதா?//

    Mannargudi Sri. Rajagopalaswamy has ring in one ear & 'olai' in other ear.

    ReplyDelete
  18. //என் மேல் இருந்த கோபத்தில் எனக்கு முன்னால் சென்ற ஆட்டோவின் பின் சீட்டில் பிருஷ்டம் தெரிய கம்பி மேல் உட்கார்ந்து சென்ற பெண்மணியை ஒட்ட ஒட்ட வழித்திருப்பார். வால் தப்பியது தம்பிரான் புண்ணியம்!//

    மீதியெல்லாம் நன்கு விளங்கிப் [பின்] போய் விட்டது.

    இந்த பிருஷ்டமும் வாலும் தான் மனதிலிருந்து போகாமல், ஒன்றும் விளங்காமலும் என்னைக் குழப்புகிறது, சார்.

    ReplyDelete
  19. inbetween-- Charu and Sujatha style. RVSM.. Please don't read Sujatha anymore, too much bathippu.

    ReplyDelete
  20. //யாரும் சிறையை விட்டு வெளிய வரமாட்டார்கள் போலிருக்கிறது//

    ஆஹா..இறைவா உன் கருணையே கருணை. அம்மாவின் ஆஸ்தான ஜோதிடர் யார் என்று தேடிக்கொண்டிருந்தேன். இன்றுதான் அது நம்ம ஆர்.வி.எஸ். என்று தெரிந்து கொண்டேன். வெளியே வரமாட்டார்கள் என்று 'அவர்களை' பற்றி சொன்னீர்கள். உள்ளே போவாரா என்று 'அவரை' ப்பற்றியும் சொல்லுங்க தலைவா. அடுத்த அஞ்சி வருஷம் நம்ம ஆட்சிதான். டோன்ட் வொர்ரி. தைரியம் இருந்தா எங்க அண்ணன் 'தீராத விளையாட்டுப்பிள்ளை' கிட்ட இப்ப மோதுங்கடா..டேய்!!

    ReplyDelete
  21. /தீராத விளையாட்டுப் பிள்ளை இலட்சம் பார்வையாளர்களை தாண்டி பயணிக்கிறான் என்பது சந்தோஷமான செய்தி//

    விரைவில் 1.76 கோடி ஹிட்சை தொட ஸ்பெக்ட்ரம் க்ரூப் ஆப் கம்பனிஸ் சார்பாக வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  22. என்னதான் இருந்தாலும் எனக்கு நங்கை ஆஞ்சநேயர் கோவில் செல்லும்பொழுது அங்கு ஒரு திருப்தி கிடைப்பதில்லை. வெட்டவெளியில் நிற்கும் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இருக்கும் திருப்தி இங்கு கிடைப்பதில்லை ஆர் வீ எஸ்.

    மன்னிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஒரு லட்சம் ஹிட்ச்க்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. தீராத விளையாட்டுப் பிள்ளை இலட்சம் பார்வையாளர்களை தாண்டி பயணிக்கிறான் என்பது சந்தோஷமான செய்தி! //

    வாழ்க வளமுடன் .
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    நல்ல கதம்பம்

    ReplyDelete
  24. சித்ரான்னம் உண்ட திருப்தி ஏற்பட்டது. லட்சம் பார்வையாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. @Madhavan Srinivasagopalan
    கோபாலா! கோபாலா! ;-))

    ReplyDelete
  26. @வை.கோபாலகிருஷ்ணன்
    சார்! மனசுலேர்ந்து வாலை ஒட்ட நறுக்கிடுங்க... எல்லாம் சரியாய்டும்.. ஹி..ஹி.. ;-))))

    ReplyDelete
  27. @yugandar
    Thank you Yugandar. I am mad of sujatha. made by sujatha. What to do? Will try to make own sentances... Thanks once again for your feedback.
    BTW... How is Life? Where are you? Come on FB.... ;-))

    ReplyDelete
  28. @! சிவகுமார் !
    சிவா... அன்பு சிவா.... அரசியல் எனக்கு ஒத்து வராது... இந்தப் புள்ளப்பூச்சியை ஏன் எல்லார்ட்டயும் புடிச்சிக் குடுக்குறீங்க.. நான் பாவம்.. விட்டுடுங்க... ;-)))

    ReplyDelete
  29. @! சிவகுமார் !
    இப்படி வாழ்த்தினா நா வேறென்ன சொல்ல முடியும்.... "ஸ்பெக்ட்ரம் வாழ்க!!"
    வாழ்த்துக்கு நன்றி சிவா! ;-))

    ReplyDelete
  30. @எல் கே
    அப்டீன்னா உங்களுக்கு பஞ்சவடியும் பிடிச்சிருக்கும்.. பஞ்சமுக ஆஞ்சநேயர்.. அதுவும் ரமணி அண்ணா இனிஷியேடிவ் தான்....
    வாழ்த்தை சொல்லிடறேன்.... லட்சம் வாழ்த்துக்கு மிக்க நன்றி.. ;-)))

    ReplyDelete
  31. @siva
    நன்றி சொந்தமண்ணே! ;-))

    ReplyDelete
  32. @வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
    மேடம்... உங்கள் வாழ்த்து என்னை இன்னமும் மேன்மை அடையச் செய்யட்டும். நன்றி. ;-))

    ReplyDelete
  33. திண்ணைக் கச்சேரி கலக்கல்...

    இங்கே தில்லியில் பள்ளி விடுமுறை ஆரம்பித்ததே மே 14 முதல்.. அதனால் ஜூலை 1 அன்று வரை ராஜகுமாரியின் ராஜ்ஜியம்தான்.... :)

    லட்சம் ஹிட்ஸ்.... வாழ்த்துகள்...

    ReplyDelete
  34. @வெங்கட் நாகராஜ்
    வாழ்த்துக்கு நன்றி தலைவா! ;-))
    ஸ்கூல் திறக்காதவரைக்கும் ஜாலி.... உங்களுக்கும்.. உங்க பொண்ணுக்கும்.... சரியா? ;)

    ReplyDelete
  35. very good analysis. yatharthmana nadai.keepit up

    ReplyDelete
  36. @தி. ரா. ச.(T.R.C.)
    நன்றி சார்! ;-))

    ReplyDelete
  37. de mama, ellam ethi vuduranunga! uruppadiya ethavathu ezhuthu :p

    ReplyDelete
  38. @The Ugly One
    சரி நைனா! ;-))

    ReplyDelete
  39. பிறந்தநாள் + தீராத விளையாட்டுப் பிள்ளை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. @மாதேவி
    நன்றி+நன்றி ;-))

    ReplyDelete
  41. பிறந்த நாள் நல் வாழ்த்துகள்..
    சர்க்கரைப் பொங்கலாய் இனிக்கிறது தொகுப்பு

    ReplyDelete
  42. @ரிஷபன்
    வாழ்த்துக்கு நன்றி சார்! ;-))

    ReplyDelete
  43. கதம்பம் கலக்கல்..... காணொளியை பிறகுதான் பார்க்கணும்.... நன்றி.

    ReplyDelete
  44. @சி.கருணாகரசு
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...
    அடிக்கடி வாங்க.. ;-))

    ReplyDelete
  45. லட்சங்களை லட்சியம் செய்யாமல் லட்சணமாய் எழுதும் மன்னையின் மைனருக்கு வாழ்த்துக்கள்!..:)

    ReplyDelete
  46. @தக்குடு
    வாழ்த்துக்கு மிக்க நன்றி தக்குடு. ;-))

    ReplyDelete