Thursday, June 16, 2011

புருஷன் பொண்டாட்டி

1. மளிகை சாமான் 
ஒருத்தனுக்கு சாமியக் கண்டாலே வேப்பங்காயா பிடிக்காதாம். நீங்க நினைக்கிற மாதிரி சாமிங்கறது பக்கத்து வீட்டு ஆசாமி இல்லை. கோவிலில் இருக்கும் கும்புடுற சாமி. ஆனால் அவன் பொண்டாட்டிக்கு பக்தி ரொம்ப ஜாஸ்தியாம். எப்போப் பார்த்தாலும் ஸ்லோகம், ஜபம், தபம்ன்னு பக்தி பழமா இருப்பாளாம். இவன் நாஸ்திகனா இருந்தாலும் பொண்டாட்டியோட பக்தியை குத்தம் குறை சொல்லாம அவ இஷ்டத்துக்கு சாமி கும்பிட விட்டுட்டானாம்.

ரத்தம் சுண்டிப் போய் வயோதிக காலம் வந்தது. ஆடி அடங்கி படுத்த படுக்கையாக ஆறடி படுக்கையில காலை நீட்டி விழுந்துட்டானாம். பொண்டாட்டிக்கு ஒரே வருத்தம். கடைசி வரைக்கும் சாமி கும்பிடாம செத்துப் போகப் போறாரே, இவருக்கு மோட்சம் கிடைக்காதே அப்படின்னு ரொம்ப கவலைப்பட்டாளாம். சரி, அவரு சாமி கும்பிடாட்டாலும் பரவாயில்லை, சாவும்போது சாமி பெயரைச் சொல்லிட்டு செத்துப் போனால் சொர்கத்துக்கு போவாரே அப்படின்னு ஆசைப்பட்டு பக்கத்து வீட்டு குப்புசாமி மகன் முருகனை கொண்டு வந்து அவன் கண்ணு முன்னாடி நிறுத்தி "ஏங்க... இவன் யாரு தெரியுதா?" அப்படின்னு கேட்டாளாம். கண்ணை முழிச்சி திருதிருன்னு அவனை பார்த்துட்டு பழைய கோபத்தை மனசுல வச்சுக்கிட்டு "உம் தெரியுது... தெரியுது.. பக்கத்து வீட்டு திருட்டுப்பய மவன்தானே..." ன்னு சொல்லிட்டு கண்ணை மூடிட்டானாம்.

அவன் சம்சாரத்துக்கு ஒரே வருத்தம். மூக்குகிட்ட கையை வச்சுப் பார்த்து இன்னும் உசுரு இருக்குன்னு தெரிஞ்சுகிட்டாளாம்.  இன்னும் சாவலை, இருந்தாலும் கடைசி வரை சாமி பேர் இவன் வாய்லேர்ந்து வராது போலருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு யோசிச்சாளாம். அப்ப பக்கத்து வீட்டு கோமளத்துக்கிட்ட ரோசனை கேட்டாளாம். அவ சொன்னாளாம் "ஏய்.. உம்புருஷன் கிட்ட ஜீரகத்தை எடுத்துக் காமி. அதப் பார்த்துட்டு அவரு சீராமான்னு கேள்வி கேப்பாரு... ராமன் பேரச்சொல்லி புண்ணியத்தைக் கட்டிப்பாரு..."ன்னு ஐடியா கொடுத்து அனுப்பிச்சாளாம்.

அடுப்பாங்கரையிலேர்ந்து அஞ்சறைப் பெட்டியைத் தொறந்து ஒரு கைப்பிடி ஜீரகத்தை எடுத்துக்கிட்டு படுக்கையில கிடக்கிற புருஷன்கிட்டே காமிச்சு "இது என்னா?"ன்னு கேட்டாளாம். முழிச்சி பார்த்து "மளிகை சாமான்"ன்னு சொல்லிட்டு செத்துப் போயிட்டானாம்.

இது எப்படி இருக்கு?

********************
Jodi Fighting
*******************

2. அமெரிக்கனுக்கு விடுதலை

அமெரிக்காவுலேர்ந்து ஒருத்தன் நம்மூரு சாமியாரைப் பார்க்க வந்தானாம். பல சிஷ்ய கோடிங்க கூட பந்தாவா இருந்த சாமியாரை படாதபாடு பட்டு வி.ஐ.பி டிக்கெட் வாங்கி பார்த்தானாம்.

"மகனே உனக்கு என்ன வேண்டும்?"ன்னு கேட்டாராம் சாமியார்.

"சாமி! நான் நினச்சது பலிக்க எனக்கு ஏதாவது ஒரு மந்திரம் சொல்லித்தாங்க"ன்னு கேட்டான் அமெரிக்கன்.

அவனை பக்கத்துல கூப்ட்டு உட்காரவச்சு காதுல ஒரு மந்திரத்தை உபதேசிச்சு, "மகனே.. அனுதினமும் இதை ஸ்ரத்தையாக உச்சாடனம் செய்து வா. ஆனால் யார் கேட்டாலும் என்ன மந்திரம் என்று மட்டும் சொல்லாதே! வெகு விரைவில் நல்ல பலன் உண்டாகும்"ன்னு ஆசீர்வாதம் பண்ணி ஊருக்கு அனுப்பினாராம்.

இந்தியாவுலேர்ந்து ஊருக்கு வந்த புருஷன் எப்பப்பார்த்தாலும் எதையோ முணுமுணுத்துக்கிட்டே இருக்கறத பார்த்து அவன் பொண்டாட்டி "என்னய்யா.. எதையோ முனுமுனுத்துகிட்டே இருக்கியே... என்னா" ன்னு அமட்டலா கேட்டாளாம்.

"உஹும்... சாமி சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு.."ன்னானாம். பொண்டாட்டி சரி கழுத நாளைக்கு சொல்லட்டும்ன்னு ஃப்ரீயா விட்டுட்டாளாம். மறுநாளும் இந்த அமெரிக்கன் நடு கூடத்துல சோஃபால உட்கார்ந்துகிட்டு ஓயாம முனுமுனுத்துகிட்டே இருந்தானாம். இதைப் பார்த்த அவன் பொண்டாட்டி ஏகத்துக்கும் டென்ஷனாயிட்டாளாம். முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்க "யோவ்! முச்சூடும் எதையோ முனவுறியே மரியாதையா அது என்னன்னு சொல்லப்போறியா இல்லையா?"ன்னு மிரட்டினாளாம். இவன் வாயே தொறக்காம தலையை மட்டும் மாட்டேன் மாட்டேன்னு ஆட்டி ஆட்டி காமிச்சுகிட்டே அவள்ட்டேர்ந்து பிச்சுகிட்டு வெளியே ஓடினானாம்.

ஒரு மணிநேரம் கழிச்சு திரும்ப வந்தானாம். டேபிள் மேல "நான் இனிமே உன்கூட வாழமாட்டேன்"ன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு அவன் பொண்டாட்டி ஓடிப்போய்ட்டாளாம்.

அவனுக்கு ஒரே ஆச்சர்யம். என்னன்னா கேக்குறீங்க? வேறென்ன.. மந்திரம் பலிச்சுடுச்சேன்னுதான்!!

பின் குறிப்பு: உங்களோட பக்கத்துல உட்கார்ந்து அரட்டை அடிக்கறா மாதிரி ஒரு பதிவு எழுதணும்னு ரொம்ப நாள் ஆசை. இந்த ரெண்டு குட்டிக் கதை மூலமா தீர்த்துக்கிட்டேன்.

பட உதவி: http://novygallery.blogspot.com/

-

37 comments:

  1. // "இது என்னா?"ன்னு கேட்டாளாம். முழிச்சி பார்த்து "மளிகை சாமான்"ன்னு சொல்லிட்டு செத்துப் போயிட்டானாம்.//

    இது சூப்பர் முடிவு.

    //அவனுக்கு ஒரே ஆச்சர்யம். என்னன்னா கேக்குறீங்க? வேறென்ன.. மந்திரம் பலிச்சுடுச்சேன்னுதான்!!//

    நினைச்சேன். அதே மாதிரி தான். சூப்பர்.

    ReplyDelete
  2. ஒண்ணுல பிடிவாதமா போய் சேர்ந்தான்..இன்னோன்னுல பிடிவாதமா துரத்தி விட்டான் ...

    நேர்ல பேசுற மாதிரி கதை சொல்லிட்டிங்க ஆர்.வி.எஸ்...

    ReplyDelete
  3. //அவனுக்கு ஒரே ஆச்சர்யம். என்னன்னா கேக்குறீங்க? வேறென்ன.. மந்திரம் பலிச்சுடுச்சேன்னுதான்!!//

    ரெண்டும் ரெண்டு சுவை..

    ReplyDelete
  4. @வை.கோபாலகிருஷ்ணன்
    கருத்துக்கு நன்றி சார்! ரெண்டு பேருமே ஒன்னை நம்பினாங்க... ;-))

    ReplyDelete
  5. @பத்மநாபன்
    ரொம்ப நன்றி பத்துஜி! ;-))

    ReplyDelete
  6. @ரிஷபன்
    நன்றி சார்! ;-))

    ReplyDelete
  7. // மளிகை சாமான்//
    இதான் விதிங்கறது போல...:))

    //அமெரிக்கனுக்கு விடுதலை//
    இது அமெரிக்கருக்கு மட்டும் தான் பலிக்குமானு இங்க ஒருத்தர் ஆர்வமா கேக்கறாரு...:)))

    ReplyDelete
  8. @அப்பாவி தங்கமணி
    ச்சே..ச்சே.. யார் சொன்னா.. யாருக்கு வேணும்ன்னாலும் பலிக்கும். ட்ரை பண்ணச் சொல்லுங்க.. ;-))

    ReplyDelete
  9. ரெண்டுமே சுவாரஸ்யம்...

    ReplyDelete
  10. //இது அமெரிக்கருக்கு மட்டும் தான் பலிக்குமானு இங்க ஒருத்தர் ஆர்வமா கேக்கறாரு...:)))//

    கோவிந்த் மாம்ஸ் இப்படி கேக்கற அளவுக்கு அவருக்கு ப்ரீடம் இருக்கா ??

    ReplyDelete
  11. இதை எழுதினவருக்குத்தான் இது பலிக்க மாட்டேங்குதாம்

    ReplyDelete
  12. @ஸ்ரீராம்.
    நன்றி ஸ்ரீராம்! ;-))

    ReplyDelete
  13. @எல் கே
    ஏம்ப்பா... இதுவரைக்கும் நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது.... ;-))))

    ReplyDelete
  14. இப்படியெல்லாம் புதுசா எதாவது சொல்லிக் கொடுக்கறீங்க... ஆனா குழப்பம் இல்ல அதிகமாகிடும்... :)))) ஏற்கனவே கோவிந்த் கேட்டதா அ.த. சொல்லிட்டாங்க...

    இருந்தாலும் நல்லா இருந்தது மளிகை சாமானும், விடுதலையும்... :)

    தொடருங்கள் மைனரே உங்கள் குட்டிக் கதைகளை....

    ReplyDelete
  15. இரண்டு கதைகளும் அருமை
    ரசித்துச் சிரிக்க முடிந்தது
    இலட்சம் பேரின் கரகோஷத்தைப்
    பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. இது வரை கேட்காத கதைகள். நன்று.

    ReplyDelete
  17. @வெங்கட் நாகராஜ்
    நன்றி தலைநகரத் தல.. ;-)) உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை... நீங்க ரொம்ப தைரியமானவரு... ;-)))

    ReplyDelete
  18. @Ramani
    வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்! ;-))

    ReplyDelete
  19. @வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
    நன்றி மேடம்! ;-))

    ReplyDelete
  20. @இளங்கோ

    Thank you! ;-)

    ReplyDelete
  21. இரண்டு கதையுமே சூப்பராக இருந்தது. இது மாதிரி குட்டி கதைகள் அடிக்கடி வர வேண்டும் என நேயர் விருப்பம்.

    ReplyDelete
  22. manthiram therinthum use pannalaina gifta innum onnu varumam. yetherkum calling bell sathathai yethir parthu irrungal

    ReplyDelete
  23. நடுநடுவிலோ நடு ஓரமாகவோ இப்படியும் ரெண்டு இடுகை பதியுங்கள். ஸ்வாரஸ்யமாக இருந்தது. சபாஷ் ஆர்விஎஸ்.

    ReplyDelete
  24. @கோவை2தில்லி
    நன்றி சகோ..அடிக்கடி இதுபோல எழுதுவதற்கு முயலுகிறேன். ;-))

    ReplyDelete
  25. @murali
    அழைப்பு மணி ஒலிக்குமான்னு எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன். ;-))

    ReplyDelete
  26. @சுந்தர்ஜி
    நன்றி ஜி! ;-))

    ReplyDelete
  27. ஆர்.வீ.எஸ்! உம்ம பதிவெல்லாம் பக்கத்துல உக்காந்து பேசற மாதிரி தானே இருக்கும்? இதுவோ மடில உக்காத்தி வச்சு கதை சொன்னா மாதிரி... சபாஷ்!

    ReplyDelete
  28. எல்.கே said // கோவிந்த் மாம்ஸ் இப்படி கேக்கற அளவுக்கு அவருக்கு ப்ரீடம் இருக்கா ??//

    கார்த்திக் - என்னைக்காச்சும் அவர நேர்ல மீட் பண்ணத்தானே போற... அப்ப புரியும்...:))

    ReplyDelete
  29. @மோகன்ஜி
    நன்றிண்ணா! ;-))

    ReplyDelete
  30. tops! உங்கள் பதிவும் எல்கே க்மென்டும்.

    ReplyDelete
  31. KONJAM

    late:))

    but 2 story also nice

    Valakkam pola unga pativila oru touch...(second one nice)

    ReplyDelete
  32. கதை ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  33. @நன்றி சிவா! ;-))

    ReplyDelete
  34. @N.H.பிரசாத்
    நன்றி பிரசாத் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும். அடிக்கடி வாங்க. ;-))

    ReplyDelete
  35. செம ஜாலியான பதிவு.
    மளிகை சாமான் - யோசிக்க வைத்தது. பெரியாருக்கு அப்புறமா உண்மையான நாத்திகன் இவர் தான் போலும்,

    ReplyDelete
  36. ரெண்டு கதையும் செமை தான்

    ReplyDelete