Sunday, June 19, 2011

ஆயிரம் அப்பாக்கள்

father 

இன்றைக்கு அப்பாக்கள் தினம். கதை, கவிதை எழுதும் அளவுக்கு எனக்கு திராணியில்லை. அதனால் இந்த அப்பாவியின் ஒரு அப்பாக் கட்டுரை ஜல்லி.
 
ஆயிரம் அப்பாக்கள்

கண்ணை உருட்டி முறைத்துப் பார்க்கும் அப்பா.

பெல்ட்டை உருவி பட்டையைப் பேர்க்கும் அப்பா.

தோளில் கை போட்டுத்  தோழனாய் சில அப்பா.

தனது செய்கைகளினால் ஆசானாய் சில அப்பா, அசடாய் சில அப்பா.

மகனைப் பார்த்து முகம் நிமிர்த்தி பேசாமடந்தை அப்பாக்களும் இந்த யுகத்தில் உண்டு.

எதற்கும் சிரித்துக்கொண்டு டேக் இட் ஈசி அப்பாக்கள் சிலர்.

வார நாட்களில் காலை மாலை பணிகள் கழுத்தை நெரிக்க ஞாயிற்றுக்கிழமை அப்பா.

குழந்தை தன் கழுத்தைக் கட்டிக்கொண்டு உப்புமூட்டை சுமக்கும் இப்போது அப்பாவான புது அப்பா!

தான் சுமந்த குழந்தைகள் தன்னைச் சுமக்கும் குழந்தையான வயசாளி அப்பா.

ஒரு பெரியவீடு, ஒரு சின்னவீடு என்று ரெண்டு வீட்டுக்கு ஒரே அப்பா.

சொத்துள்ள அப்பா, சொத்தையான அப்பா.


குமாரப்பா, மாரப்பா, பங்காரப்பா, செல்லப்பா, கிட்டப்பா, கண்ணப்பா, திம்மப்பா, பட்டப்பா, குட்டியப்பா, வீரப்பா, ராஜப்பா, அப்பாதுரை, அப்பாசாமி, பக்கத்து வீட்டு வாண்டுவின் அப்பா... பிள்ளையாரப்பா......... ஸ்... அப்பப்பா எவ்வளவு அப்பாக்கள். பெரியப்பா, சிற்றப்பா, ஒன்றுவிட்ட ரெண்டுவிட்ட பெரிய சிற்றப்பாக்கள் என்று அப்பாக் கூட்டம் நிறைய குடும்பங்களில் ஏகத்துக்கும் உண்டு.

எல்லா அப்பாக்களுக்கும் இன்று எனது தந்தையர் தின வாழ்த்துக்கள்.

இந்த சரக்கோட, கொஞ்சம் சினிமாவையும் கலந்து டாடீஸ் ஸ்பெஷல்..

பெல் பாட்டம் பீச் காற்றில் அலைபாய பாக்யராஜ் பட "டாடி டாடி ஓ மை டாடி" பாடல்:


ரெண்டு ஆண் சிங்கங்களுக்கு அப்பாவான பின்னும் அர்விந்த் சாமி எல்லா அப்பாக்களின் ஆசையை சொல்லும் விதமாக பொட்டப்புள்ள பெத்துக் குடு என்று பாடும் பம்பாய் பாடல்..



அப்பா பெயரச் சொல்லி கூப்பிட்டு கல்லூரி வகுப்பை விட்டு கார்த்திக் அழைத்து வரும் ரேவதி... அப்புறம் 05:15ல் ரெஸ்டாரெண்டில் அப்பாவுக்கு பயந்து மறைந்து கொள்ளும் போது மிஸ்டர் சந்திரமௌலி என்று கலாய்க்கும் கார்த்திக். எண்பதுகளில் காதல் காட்சிகளில் புரட்சி ஏற்படுத்திய சீன் இது.


இரு இமயங்கள் அப்பா-மகன் வேஷத்தில் நடித்த தேவர் மகனில் இருந்து ஒரு காட்சி


பின் குறிப்பு: ஏதோ என்னால முடிஞ்சா அப்பா பதிவு... அப்பாடி....

பட உதவி: http://rhapsodani.com
-

40 comments:

  1. தந்தையர் தினத்தை நினைவுகூரும் நல்ல ஜாலி பகிர்வு...அப்பா என்றாலே ஜாலிதானே...

    ReplyDelete
  2. அப்பப்பா நல்ல அப்பா பதிவப்பா

    ReplyDelete
  3. @என்றென்றும் உங்கள் எல்லென்...
    சிலருக்கு ஜாலி.. சிலருக்கு ஜோலி...
    கருத்துக்கு நன்றி எல்லென். ;-))

    ReplyDelete
  4. @A.R.ராஜகோபாலன்
    நன்றியப்பா! ;-))

    ReplyDelete
  5. voted 2 to 3 in indli

    அப்பப்பா, அடேங்கப்பா !

    படையப்பா போல பின்னி எடுத்து விட்டீர்கள்.

    பாராட்டுக்கள்.

    [ டாடி...டாடி... ஓ மை டாடி சூப்பர் ]

    ReplyDelete
  6. நல்ல நகைச்சுவையோடு பகிரப்பட்ட
    தந்தையர் தின ஆக்கம் அருமை!..
    அத்துடன் என்சார்பிலும் தந்தையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்!..
    பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  7. வித்தியாசமாக அப்பாக்கள் தினப் பதிவைப்
    பதிவு செய்துள்ளீர்கள்
    ரசிக்கும் படியாகவும் இருக்கிறது
    எனது மகள் பொறியியல் கல்லூரியில்
    படித்துக்கொண்டிருக்கும் போது
    "நான் வியந்த மனிதர்"என்பது குறித்து
    ஒரு கட்டுரை நாளை எழுத வேண்டும் எனச் சொன்னாள்
    நானும் அவளுக்கு உதவ எண்ணி
    உலகத் தலைவர்களில் மிக முக்கிமானவர்கள் குறித்தெல்லாம்
    குறிப்புகள் எடுத்துவைத்திருந்தேன்
    அவள் கல்லூரியில் இருந்து திரும்பியதும்
    அவைகளை அவளிடம் கொடுத்தபோது
    "அப்பா இவைகள் எல்லாம் தேவையில்லை
    நான் உன்னைப்பற்றி எழுதலாம் என இருக்கிறேன்"
    என்ச் சொன்னதோடு எழுதி கல்லூரியில்
    பாராட்டும் பெற்று வந்தாள்
    ஒவ்வொரு தந்தையர் தின நாளிலும்
    இதை நினைத்து புளங்காகிதம் அடைந்து போவேன்
    நல்ல மகனாக நல்ல சகோதரனாக என் நல்ல கணவனாக
    இல்லாத பலர் நல்ல தந்தையாக இருப்பதைப்
    பார்த்து வியந்திருக்கிறேன்
    அப்பா என்பது நண்பன் வழிகாட்டி என்பதைவிட
    மிகப் பெரும் பொறுப்பு எனக் கொள்ளலாமா?
    தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அப்பப்பா...நான் அப்பனல்லடா...தப்பப்பா நான் தாயுமல்லடா...பாடலை சேர்த்திருக்கலாமே....!
    அப்புறம் இந்த அக்கா தங்கை அண்ணன் தம்பிக்கெல்லாம் 'நாள்' கிடையாதோ...?!!

    ReplyDelete
  9. ஒரு சீனியர் அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. @வை.கோபாலகிருஷ்ணன்
    மிக்க நன்றி சார்! ;-) படையப்பா நான் விட்டுட்டேன்... ;-))

    ReplyDelete
  11. @அம்பாளடியாள்
    முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க... அடிக்கடி வாங்க... நன்றி. . ;-))

    ReplyDelete
  12. @Ramani
    சார்! உங்கள் பெண் செய்தது முற்றிலும் சரியே! நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் தான் ஹீரோ. கருத்துக்கு நன்றி சார்! ;-))

    ReplyDelete
  13. @ஸ்ரீராம்.
    ரொம்ப அடா .. புடா... கடா.. புடான்னு இருக்குமேன்னு உட்டுட்டேன்... நன்றி ஸ்ரீராம்! ;-))

    ReplyDelete
  14. @எல் கே
    நன்றி ஜூனியர் அப்பா! ;-))

    ReplyDelete
  15. பாடம் : தமிழ் இலக்கணம்
    கேள்வி : 'பா'க்கள் எத்தனை வகை படும். விளக்குக.

    பதில் : இங்கு க்ளிக் செய்யவும்

    ReplyDelete
  16. தௌஸ்ண்ட் வாலா மாதிரி கொளுத்திப் போட்டுட்டீங்க ஆர்விஎஸ். ப்ரகாசமான ஒளியும் ஒலியும் சூழ அப்பாக்கள் எல்லாரும் பாரதிராஜா ஹீரோயின்கள் போல வெண்ணுடை தேவர்களா ஸ்லோ மோஷன்ல தாவி வர்ற மாதிரி தோணிடுத்து.

    ReplyDelete
  17. இனிய பகிர்வு.... மிஸ்டர் சந்திரமௌலி.... நல்ல நகைச்சுவை... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு காட்சி....

    தந்தையர் தின வாழ்த்துகள் மைனரே.... [கொஞ்சம் லேட்டோ?]

    ReplyDelete
  18. தேவர் மகன் அப்பா!
    அப்பாக்கள் பதிவின் சிகரம்..

    ReplyDelete
  19. வித்தியாச்மான தந்தையர் தின வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  20. அப்பா வகையில் நீங்க எந்த ரகம்ன்னு தெரியும் ஜாலியான அப்பா ன்னு நான் சொல்றேன் ( குட்டீஸ் வேற பெயர் வெச்சிருப்பாங்க )..

    மெளன ராகம் +மெளன கீதங்கள் போட்டு என்பதுகளுக்கு அழைத்து சென்று விட்டீர்கள்..

    மகனின் பணிவும் அப்பாவின் பாசத்தையும் வெளிப்படுத்திய தேவர்மகன் சரியான தேர்வு.

    ReplyDelete
  21. சூப்பர் பதிவு. என் அப்பாவின் நினைவுகளுடன் தூங்கினேன்.

    ReplyDelete
  22. @Madhavan Srinivasagopalan
    மாதவா! ரசித்ததற்கு நன்றி. ;-))

    ReplyDelete
  23. @சுந்தர்ஜி
    ஜி! நீங்க சொன்ன சீனை நினைச்சுப் பார்த்தேன். அற்புதமா இருக்கு.. ;-))

    ReplyDelete
  24. @வெங்கட் நாகராஜ்
    வாழ்த்துக்கு லேட்டே கிடையாது தலைவரே! நன்றி. ;-))

    ReplyDelete
  25. @ரிஷபன்
    எவ்ளோ அர்த்தத்துல ஒரு வாசகம் எழுதுறீங்க சார்! ரொம்ப நன்றி. ;-))

    ReplyDelete
  26. @இராஜராஜேஸ்வரி
    நன்றிங்க மேடம்! வலைச்சரத்தில எங்க குரூப்பை அறிமுகப்படுத்தியமைக்கு மற்றுமொரு நன்றி., ;-))

    ReplyDelete
  27. @பத்மநாபன்
    சரியா சொன்னீங்க.. நான் ஜாலியா சாதுவான அப்பா!
    கருத்துக்கு நன்றி பத்துஜி! உங்களுக்கும் டாடீஸ் டே வாழ்த்துக்கள். ;-))

    ReplyDelete
  28. @வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
    நன்றி மேடம்! முதலில் கதை எழுதலாம் என்றிருந்தேன். நேரமில்லை.. ஆகையால் என்னுடைய ஜல்லி அடிக்கும் பணியைத் தொடர்ந்தேன். கருத்துக்கு நன்றி ;-))

    ReplyDelete
  29. @ RVS anna, லட்டுவா ரெண்டு பொட்டைபுள்ளை இருக்கரவா கூட "சிங்ககுட்டி பெத்துக்குடு!"னு ஒரு சேஞ்சுக்கு பாடிபாக்காலாம்.

    நான் பொதுவா தான் சொன்னேன்....:)

    ReplyDelete
  30. @தக்குடு
    ஹா.ஹா..ஹா... இதை விட வேறெதுவும் இப்ப சொல்ல முடியாது... நெக்ஸ்ட் மீட் பண்றேன்... ;-))

    ReplyDelete
  31. 'ஒரு பெரியவீடு, ஒரு சின்னவீடு என்று ரெண்டு வீட்டுக்கு ஒரே அப்பா'

    நுணுக்கமான பார்வை))).

    ReplyDelete
  32. அப்பா பதிவு தப்பில்லாப் பதிவு

    ReplyDelete
  33. @bogan
    நன்றி போகன்! ;-))

    ReplyDelete
  34. @சந்ரு
    நன்றிங்க... ரொம்ப நாள் கழிச்சு வரீங்களோ? ;-))

    ReplyDelete
  35. ஆர்.வீ.எஸ்! தப்பா ஆடாம அப்பா ஆட்டம் போட்டிருக்கீங்க! தககுடுவை வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  36. @சாய்
    நன்றி சாய்! ;-))

    ReplyDelete
  37. @மோகன்ஜி
    என்னது... தக்குடுவை வழிமொழியிரீங்களா!! கொளுத்திப்போட்ட தக்குடு வாழ்க. ;-))

    ReplyDelete
  38. //ஒரு பெரியவீடு, ஒரு சின்னவீடு என்று ரெண்டு வீட்டுக்கு ஒரே அப்பா.//

    இது தான் கிளாசிக் ஆர்.வி.எஸ் லைன்

    ReplyDelete
  39. நான் உக்கிர தாண்டவ அப்பா

    ReplyDelete