Thursday, August 25, 2011

என்ன ...’ழ’வுடா...

என் ஸீமந்த புத்ரி வினயா பத்து தடவை கீழே இருக்கும் வாசகத்தை படபடவென்று என்னை சொல்லச் சொல்லி நாக்கை சுளுக்க வைத்தாள்.

வாழைப் பழத் தோல் வழுக்கி கிழவன் கிழவி குழியில் விழுந்து எழுந்து அழுதனர்!!

தமில் வால்க!! போன வாசகத்தை வழுக்கிச் சொன்ன நாவுக்கு கொஞ்சம் ரெஸ்ட்.

பத்து தடவை படுவேகமா சொல்லி ரிகார்ட் பண்ணி முகப்புஸ்தகத்தில் வலையேற்றுபவர்களுக்கு ஒரு ஆரூடம் சொல்கிறேன்

ஏழேழு ஜென்மத்துக்கும் வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சி பொங்கி வழியும்........

கொழுப்பைப் பார்ர்ர்ரா....... கடைசி வாசகத்திலும் எவ்வளவு “ழ”ன்னு..... கொழுப்புல ஒரு ’ழ’...  ச்ச்சே.... பொழப்பைப் பாருங்கப்பா...

மீண்டும் இன்னொரு ‘ழ’....  உன்னையெல்லாம் பழுது பார்க்கனும்யா...

இவன் பழக்கவழக்கமே வேண்டாம்ப்பா இவனைக் கழுமரத்தில ஏத்துங்கப்பா என்று பழிசுமத்தி ஏற்றிவிடாதீர்கள்.

என்ன பொழுது போகலையான்னு கேட்பவர்களுக்கு.....

தமிழினிது.... குழலினிது... யாழினிது.... :-))))

கழுகுக் கண்ணால் வெறித்து கழுத்தை நெறிக்க ஓடிவரும் தோழர்களிடம் ஒரு வார்த்தை...

நான் ஒரு அப்பழுக்கற்ற பழுத்த பழம்... கல்லடி படலாம்... ஆனால், கழுத்தை நெறித்தால் பூமிக்கு கனமழை வழாது... ச்சே... வராது.. மழுப்புகிறேன் என்று நினைக்காதீர்கள்.


மழுமழுன்னு ஷேவ் பண்ணிக்கிட்டா கூட ஐன்ஸ்டீனுக்கெல்லாம் “ழ” வராது. அப்புறம் எதுக்கு நாக்க இவ்ளோ பெரிசா நீட்றார்!! பாவம் இந்த மனுஷனுக்கு இழுக்கு!!

#பார்க்கலாம் எவ்ளோ தமிழ் மழலைகள் கழனி, பழனி, மழு, புழு, கழி, மழி, பிழி என்று பல “ழ”வைக் கமெண்ட்ல போடறீங்கன்னு.....

கொழுகொழு மாதிரி இரட்டைக் கிளவிகள் கூட எழுதலாம்.

எல்லாம் உங்க சுழி...

 நம்ம டாஸ்மாக்கின் சொந்தபந்தங்கள் மாதிரி சொல்லனும்னா... குழ் நைழ்...

வெட்டி வேலை...

பின் குறிப்பு: முழு மூச்சாக உட்கார்ந்து எழுதுவதற்கு நேரமில்லை. காதல் கணினி வேற பாதியில் இருக்கு. முகப்புஸ்தக நண்பர்களிடம் பகிர்ந்தது. உங்கள் பார்வைக்கும்...

-

30 comments:

  1. அழகான எழுத்து.வாழ்க உம் தமிழ் !!

    ReplyDelete
  2. கொழுந்தன் முன் செல்ல
    கொழுநன் பின் தொடர்ந்தான் - ராமாயணம்

    தொழுதிரு, வாழ்க்கையில்
    வழுவிருக்காது;

    எழிலன் அவன்;

    என்னை அழை; இல்லை
    என்னை அழி;

    எழுத்தாணி எழுத;
    வார்த்தை மொழிய;

    தழல் மேல்
    கழல் வைப்பது
    பிழை;

    ReplyDelete
  3. ழழழழழழழழழழழழழகலலகழழழழழழழ!!

    ReplyDelete
  4. நல்லதொரு பதிவு.

    இந்தத் தமிங்கிலர்களிடம் இந்த ழ படும் பாடு கொஞ்சமல்ல!!!!!!!

    ReplyDelete
  5. அழகான ‘ழ’ பற்றிய தமிழ் பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அழகான எழிலான பழமாக வாழ்த்து பெறும் பகிழ்வு.

    ReplyDelete
  7. இந்த பதிவை, நிறுத்தி நிதானமாக மூன்று முறை வாசித்தால், "ழ" வராதவர்களுக்கு எப்படியும் "ழ" சொல்ல பழகிவிடும். :-)

    ReplyDelete
  8. வழ வழ
    கொழ கொழ
    மொழ மொழ

    ReplyDelete
  9. ”ழ” வைத்து ஒரு பதிவா!!!
    நடத்துங்க...நடத்துங்க.....

    தமிழ் வாழ்க....

    ReplyDelete
  10. உங்கள் ஆசிரியர் பி”ழை”யாக உச்சரிப்பின் ப”ழி”ப்பாரா அல்லது சு”ழி”ப்பாரா வேறு வ”ழி”யின்றி க”ழி” கொண்டு அடித்தாரா?
    இப்படி தமி”ழ்” ம”ழை” பொ”ழி”ந்தால் நாங்கள் வ”ழு”க்கி வி”ழு”ந்து விடுவோம் என்பதை நா த”ழு” த”ழு”க்க கூறிக்கொள்கிறோம்.

    [காலையில் வெங்கட்(நாகராஜ்)-ன் முகநூலில் பார்த்த போதே உங்களை வா”ழ்”த்தத் தோன்றியது. வா”ழ்”க!!!
    வா”ழ்”க!!!]

    ReplyDelete
  11. ’ழ’ வச்சு கலக்கிட்டீங்க.

    ReplyDelete
  12. ஹாய் மைனரே சௌக்கியமா ? ராம்ஜி எங்கே காணோம்?

    ReplyDelete
  13. பழக்கமான வழுக்க விழுந்த கிழவருக்கு வழக்கமான பழம்விக்கும் கிழவி பழுத்த கொழுத்த வாழைப்பழத்தாரொன்று முழுவதுமாய் கொடுத்தால்

    ReplyDelete
  14. @சமுத்ரா
    வாழ்த்துக்கு நன்றிங்க.. :-)

    ReplyDelete
  15. @விஸ்வநாத்

    விசு... அசத்திட்டே!!
    ழழழழழாழாழா..... :-))

    ReplyDelete
  16. @முனைவர்.இரா.குணசீலன்

    மிக்க நன்றி முனைவர் அவர்களே!! :-))

    ReplyDelete
  17. @சத்ரியன்

    சேம் குழ் நைழ்... :-))

    ReplyDelete
  18. @RAMVI

    நன்றிங்க மேடம்.. :-))

    ReplyDelete
  19. @இராஜராஜேஸ்வரி

    நன்றிங்க மேடம். :-))

    ReplyDelete
  20. @Chitra

    நன்றிங்க சித்ரா!

    ReplyDelete
  21. @Madhavan Srinivasagopalan

    என்ன எழ எழ.. :-)

    ReplyDelete
  22. @கோவை2தில்லி
    நன்றி சகோ!! :-))

    ReplyDelete
  23. @அப்பாதுரை

    தமில் வால்க!! :-))

    ReplyDelete
  24. @வேங்கட ஸ்ரீனிவாசன்

    முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே!! :-)

    ReplyDelete
  25. @ரிஷபன்
    நன்றி சார்! :-)

    ReplyDelete
  26. @கக்கு - மாணிக்கம்
    என்ன ஆச்சு? ரொம்ப நாளா ஆளைக் காணோம்!! வருகைக்கு நன்றி..
    யாரு ராம்ஜி? கேள்வி புரியலை தல.. :-))

    ReplyDelete
  27. @தினேஷ்குமார்

    ழ ரொம்ப வழுக்குதுங்க.. நன்றி தினேஷ்குமார்! :-)

    ReplyDelete
  28. குழ் ஆழ்டர்னூன் சார்!!

    ReplyDelete