அடங்காதது
கொட்டித் தீர்த்த
மழை அடங்கியது
இலை சொட்டிய
நீர் அடங்கியது
அர்த்தஜாமம் முடிந்த
கோயில் அடங்கியது
எரிந்து அலுத்த
தெருவிளக்கு அடங்கியது
சப்தம் இரைத்த
வாகனம் அடங்கியது
சிக்னலில் கையேந்திய
பிச்சை அடங்கியது
காதலர்கள் மோகித்த
கடற்கரை அடங்கியது
பண்டம் விற்ற
கடை அடங்கியது
அழுது வடிந்த
டிவி அடங்கியது
பேசி அலுக்காத
ஊர் அடங்கியது
வாசலில் உட்கார்ந்த
செக்கியூரிட்டி அடங்கியது
வாலாட்டித் திரிந்த
தெருநாய் அடங்கியது
பேட்டரி கரைந்த
கடிகாரம் அடங்கியது
நாள் முழுவதும்
அலைந்த மனசு
இன்னும் அடங்கவில்லை!!
படம்: இணையத்தில் அகப்பட்டது.
சிங்கில் மால்ட் நீட்டா ரெண்டு பெக் அட்சா அடங்கும்.
ReplyDeleteஅடங்காததும் ஒருவகையில் நல்லதே
ReplyDeleteஇல்லையெனில் ஒரு நல்ல படைப்பு
கிடைக்காமலும் போயிருக்கலாம்
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
த.ம 2
சூப்பர்!
ReplyDeleteஅது மனுஷனை சுட்டெரிக்க வேண்டிய சமயத்துலதான் அடங்கும்.இல்லையா?
ஏற்கனவே முகப்புத்தகத்தில் சொன்ன மாதிரி நல்லா இருக்கு! :)
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteநாள் முழுவதும்
ReplyDeleteஅலைந்த மனசு
இன்னும் அடங்கவில்லை!!
அது அடங்கிட்டா அப்புறம் ஏது சுவாரசியம்
அடக்கம்
ReplyDeleteஆகும் வரை
அடங்காதிருக்கும்,
அதுவே மனிதமாகும்;
மனம் ஒரு குரங்கு!! அது அடங்கவே அடங்காது.
ReplyDeleteமனசு அடங்காத வரை பதிவுகள்தான்.
ReplyDeleteபிரமாதம்.
ReplyDeleteமனம் அடங்கிட்டால் அப்புறம் ஞானியாகி சும்மா இருக்க வேண்டியதுதான். அது போருங்க....(Bore)
கவிதை ரொம்ப நல்லா இருக்கு சகோ.
ReplyDelete@அப்பாதுரை
ReplyDeleteதலைவரே! அட்டகாசம் போங்க. :-)
@Ramani
ReplyDeleteஹா..ஹா.. நீங்கல்லாம் கவிதை எழுதுறீங்க.. நான் கவிதை மாதிரி எழுதறேன் சார்! நன்றி. :-)
@raji
ReplyDeleteஹா..ஹா.. இதுக்கு பதில் பெருசா இருக்கு. முடிஞ்சா ஒரு பதிவா தட்டலாம். நன்றி. :-)
@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteபாவம் உங்களை மாதிரிஆட்களை ரொம்ப படுத்தறேனோ? மூஞ்சிப் புஸ்தகம் இங்கே ரெண்டுத்லேயும் ஒரே சரக்கைப் போட்டு...இரண்டிலும் வேறுவேறு எழுத நேரமில்லை. நன்றி. :-)
@கும்மாச்சி
ReplyDeleteநன்றி கும்! :-)
@ரிஷபன்
ReplyDeleteஅதானே! :-)
@ViswanathV
ReplyDeleteவிசு! கவிதைக்கு கவிதையாவே கமெண்ட்டிட்டியா? ஒ.கேப்பா.. :-)
@RAMVI
ReplyDeleteஆமாம். குரங்கு மாதிரி சொறிஞ்சுகிட்டே இருக்கும். :-)
@ஸ்ரீராம்.
ReplyDeleteஞானிங்களுக்கு அது ஜோராம்! :-)
@கோவை2தில்லி
ReplyDeleteநன்றி சகோ! :-)
ஆஹா.. அட்டகாசம் :-)
ReplyDeleteமனங்கள் ஓய்வதில்லை!..அருமையாகச் சொன்னீர்கள் .இந்த மனம் எப்போது அடங்குகின்றதோ அப்போதுதான்
ReplyDeleteவாழ்வில் நின்மதி கிட்டும் .அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி .என் தளத்தில் இன்று பட்ட மரங்களும் பறவைகளும்
முடிந்தால் உங்கள் கருத்தினையும் தாருங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் .