Tuesday, February 14, 2012

கதையின் தலைப்பு கடைசியில் உள்ளது!


"எவ்வளவு ஆவும்?"
"அம்பது கோடி"
"அம்பது கோடி? டூ மச். ரொம்ப ஜாஸ்தி"
"அந்தக் காலத்த நினைச்சு பாரு...இது மாதிரி இன்ஸ்டென்ட்டா முடியுமா? பார்த்து, பேசி, பழகி, ஜல்சா பண்ணி...."
"இருக்கலாம்.. ஆனாலும் ரேட்டு ரொம்ப ஜாஸ்தி.."
"இந்த ஐட்டத்துக்குதான் அம்பது கோடி.. வேற ஏதாவது சப்பையைக் காமி ரேட் குறையுமான்னு பார்க்கலாம்"
"நானே போய் ஒருதடவை பேசி என் அதிர்ஷ்டத்தைப் பார்த்துடலாம்.."
"நாங்களா தடுக்கறோம்.. போய் பாருங்க.."
"கொஞ்சம் பார்த்து சொல்லுப்பா..." என்று ஐம்பதாவது முறையாக மானம் போக மண்டியிட்டு கேட்காத குறையாக கேட்டுவிட்டேன். ஆசை யாரை விட்டது.

There are two tragedies in life. One is not to get your heart's desire. The other is to get it. அப்டீன்னு பெர்னார்ட் ஷான்னு ஒரு ஆள் ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடியே சொல்லியிருக்கான்.

இந்த விலை படியாத போதுதான் ”ச்சீ..சீ.. இந்தப் பழம் புளிக்கும்னு” பல இளைஞர்கள் விர்சுவல் ரியாலிட்டி பக்கம் தாவிடறாங்க.

"இங்க பாருப்பா ஜீவன்... நீ நரசுக்கு தெரிஞ்ச பார்ட்டின்னுதான் இந்த ரேட்டு.. முடியாதுன்னா ஆள விடுப்பா.. கவர்ன்மென்ட்டுல கூட ஏக கெடுபிடியா இருக்கு.. இதுக்கு தண்டனை என்ன தெரியுமா? HPZ(Highly Polluted Zone) ஜெயில்ல ஆறு மாசம் கடுங்காவல். பழைய பாட்டரி, இருபதாம் நூற்றாண்டு கம்ப்யூட்டர் மானிடர், இத்துப்போன டி.வி, எலெக்ட்ரானிக் ஐட்டங்கள் எல்லாத்தையும் அடிச்சுத் துவைச்சு ரீ-சைக்கிள் பண்ற இடம். ஒரு மாசம் அங்க உள்ள இருந்துட்டு வந்தா தெரியும். தா பாரு.. இந்த இந்தப் பக்க காதும் அந்தப் பக்க கண்ணும் ஏன் இப்படி கருப்பா சூம்பிப் போன மாதிரி இருக்கு தெரியுமா? போன ஜூன்ல உள்ள போயிட்டு வந்தேன்.. அதனாலதான்.. அதெல்லா எதுக்கு உனக்கு.. "

புரோக்கர் கறார் பேர்வழி. கொஞ்சமும் விலை இறங்குவதாக இல்லை. ஆதி காலத்தில் ஏதோ இளவட்டக் கல்லாம். ஊருக்கு வெளியே மரத்தடியில் இருக்குமாம். தலைக்கு மேலே அதைத் தூக்கி நிரூபிச்சா போதுமாம். அப்படி இருந்தா எவ்வளவு ஈசி.

போன வாரம் ப்ரௌனி வீட்டுல கூட ஏதோ பழைய படத்துல பழந்தமிழன் ஒரு ஆள் வெள்ளை வேஷ்டி சட்டை போட்டுக்கிட்டு இருந்தான். ஒரு வயசான ஆளு. அந்த மாதிரி ஒரு பெரிய கல்லை எடுத்து அசால்ட்டா அந்தண்டை பக்கம் போட்டுட்டு ஒரு சிரி சிரிச்சுட்டு போனார். படம் பேரு சரியா தெரியலை, ஏதோ "மல்லு வேட்டி கட்டி இருக்கு.. அதுல மஞ்ச வந்து ஒட்டிக்கிச்சு" அப்பிடின்னு ஒரு பாட்டு பாடிச்சு. கீழே க்ளிப் போட்டு பாட விட்டாமாதிரி அவஸ்தையில பாடாம சுகமா இருந்தது அந்த இசை.

ஆனா இந்த மெதட் இப்பதான் லேட்டஸ்ட் ஹிட் ஆயிருக்கு. 100% உத்திரவாதம். நாம நினைச்சதை நிச்சயமா அடையலாம். போன வாரம் அந்த ஒட்டடை குச்சி நரசிம்மன் கூட நூறு மாடி "Splendor" பஜார் முழுவதும் பளபளக்க ராஜநடை போட்டு கைகோர்த்து கூட்டிட்டு போனபோது பாதிபேர் இரை விழுங்க வாய்திறக்கும் முதலை மாதிரியும், உள்நாக்கு தெரியும்படியும் "ஆ" காட்டி கண்ணால் பார்த்ததை நெஞ்சுக்குள் விழுங்கினார்கள். யாரோ நகாசு வேலை நன்றாக தெரிந்த பயோ டெக்னாலஜிஸ்ட் தான் இப்படி திறமை முழுவதும் காண்பித்து இதில் இழைத்து விளையாடியிருக்கவேண்டும். எல்லாமே ஒரு மில்லி மீட்டர் குறையாம பார்த்து பார்த்து அளந்து செஞ்சு ஆயில் போட்டு அசெம்பிள் பண்ணினாமாதிரி.

நான் முடிவு செய்து விட்டேன், அடைந்தால் அனாமிகா இல்லையேல் விஷ காஸ் ஸ்டேஷன் சென்று ப்ராணஹத்தி செய்துகொள்வதென்று. இப்படி தன்னுயிரை மாய்த்துக்கொள்ள ஏதுவாக மக்களுக்காக ஊருக்கு ஒன்றாக அரசு அமைத்திருக்கும் "விஷ வாயு கொட்டகை' க்கு ஒரு அநேக கோடி நமஸ்காரம். சிடிசன் கார்டை பிளாக்-ல் விற்றால் ஐம்பது கோடி கிடைக்கலாம். "காதல் நரம்பு" ஊசியை அந்த புரோக்கர் உதவியுடன் அவளுக்கு ஏற்றிவிட்டால், நம்மை ஓரக்கண்ணால் பார்த்தாலே அவளுக்கு நெஞ்சில் காதல் சுரக்கும். இந்த நூற்றாண்டில் நானும் நிஜ காதல் கொண்டேன் என்று எல்லோரிடமும் ஐ.பி பிராட்காஸ்ட் செய்துகொள்ளலாம். வெந்துபோவார்கள். எல்லாம் பயோகெமிஸ்ட் அருள் இருந்தால் நடக்கும். நடக்குமா பார்க்கலாம்.

(இந்த இடத்தில் ஜீவன் தன் வாயால் சொன்ன கதை முடிகிறது. இக் கதையின் அடிச் சொருகல் கீழே)

ஸிந்தெடிக் ரோடில் டிராஃபிக் அதிகமாக இருந்ததால் தன்னுடைய எரிவாயு இருசக்கர வாகனத்தில் 'Flight Mode'ஐ அழுத்தி லேன்ட் ஆகும் விமானத்தில் அடிபடாமல் ஒரு 'கட்' கொடுத்து லோ ஃபிளையிங்கில் ஆகாய மார்கமாக சிடிசன் கார்டை பிளாக் மார்க்கெட்டில் விற்க பறந்தான் ஜீவன்.

இந்தச் சம்பவம் நடந்த 3030 AD யில் வெகுஜனங்கள் Virtual Reality -இல் கல்வி, காதல், கலவி மூன்றையும் திகட்ட திகட்டப் பெற்றார்கள். ஜீவன் போன்றோர் ரத்தமும் சதையுமாக உயிரோட்டமுள்ள ஒரு பெண்ணின் கழுத்தில் இருக்கும் காதல் நரம்பில் ஏவப்படும் அவர்கள் பற்றிய தகவல் அடங்கிய விசேஷ ஊசியால் உயிர்க்காதல் வரம் வாய்க்கப்பெற்றார்கள்.

இந்தக் காதலர் தின சிறப்புக் கதைக்கு TAGS #சயின்ஸ் ஃபிக்ஷன், காதல் கதை
-----------------------------------------------------
கதையின் தலைப்பு: “காதல் நரம்பு”
---------------------------------------------------------

24 comments:

  1. கதை நன்றாக இருக்கிறது. ஹேப்பி வலன்டைன்ஸ் டே ...

    ReplyDelete
  2. அடுத்த புதுசு....!

    ReplyDelete
  3. காதல் நரம்பு, நன்றாக இருக்கு.

    ReplyDelete
  4. காதல் நரம்பு - காதலர் தின ஸ்பெஷல் கதையா மைனரே...

    என்னமா யோசிக்கிறீங்க!

    ReplyDelete
  5. @ஹாலிவுட்ரசிகன்
    பாராட்டுக்கு நன்றி. தங்களுக்கும் ஹாப்பி வாலண்டைன்ஸ் டே!!! :-)

    ReplyDelete
  6. @ஸ்ரீராம். :-))

    ReplyDelete
  7. @RAMVI
    நன்றிங்க மேடம். :-)

    ReplyDelete
  8. @வெங்கட் நாகராஜ்
    ஸ்பெஷல் ஸ்டோரி! தலைநகரமே அங்க கொண்டாட்டம் எப்படி? :-)

    ReplyDelete
  9. how did you get this title
    'கதையின் தலைப்பு கடைசியில் உள்ளது!'

    Because this is my friend's short film title.....

    ReplyDelete
  10. @karthikkumar.karu

    I do not want the readers to Guess the subject of the story through title. So, I put it at the bottom. That's it. :-)

    ReplyDelete
  11. காதல் நரம்பு நன்றாக இருக்கிறது சகோ......

    உண்மையிலேயே இப்படித் தான் ஆகும் போல.....

    ReplyDelete
  12. 'தலைப்பு என்ன பெரிய தலைப்பு மைனரே! நீர்ர்ர் காதல் நரம்பு/கத்திரிக்காய் குழம்பு'னு எந்த தலைப்பு வச்சாலும் நாங்க ரசிப்போம். நல்ல கற்பனை! :)

    ReplyDelete
  13. 'தலைப்பு கடைசியில்' எனறு எழுதாமல் straightஆ கதையைத் துவக்கி கடைசியில் விவரத்தை உடைச்சிருக்கலாம்னு தோணுது, on second thought.. :)

    ReplyDelete
  14. இப்பிடி எழுதறதுக்கு கடவுள் உங்களுக்கு மட்டும் ஏதாவது தனி நரம்பு வச்சுட்டாரோ?

    ReplyDelete
  15. வருங்காலத்துல இதெல்லாம் நடக்குமோ இல்லியோ, உங்க கற்பனையில் வாசிக்கவே ரொம்ப நல்லாருக்கு :-))

    ReplyDelete
  16. @அப்பாதுரை

    நன்றி தலைவரே! :-)

    ReplyDelete
  17. @கோவை2தில்லி
    பாராட்டுக்கு நன்றி சகோ! :-)

    ReplyDelete
  18. @தக்குடு
    லவ் கதை எழுதனும்னா அப்படியே பொளந்துண்டு வருது... என்ன பண்ண? :-))

    ReplyDelete
  19. @அப்பாதுரை
    அப்படியும் பண்ணியிருக்கலாமோ? :-)

    ReplyDelete
  20. @அப்பாவி தங்கமணி
    ரொம்ப நன்றிங்கோ! :-)

    ReplyDelete
  21. @raji
    பாராட்டுக்கு நன்றிங்க மேடம். :-)

    ReplyDelete
  22. @அமைதிச்சாரல்
    நடந்தாலும் நடக்கலாம்... கற்பனைதானே.. அள்ளிவிடுவோம்.. என்ன சொல்றீங்க? :-)

    ReplyDelete