Friday, March 23, 2012

ஈ காஃபி

*********** பேப்பர் பெரியவர் **********
ஒரு நூறு மீட்டர் தள்ளி அந்தப் பெரியவர் நடந்து வந்துகொண்டிருந்தார். கையில் 40 micronக்கு குறைவாய் மாசு ஏற்படுத்தும் ஒரு கேரி பேக். அதிலிருந்து இரும்புச் சத்துக் கீரை அதிகப்படியாக துறுத்திக்கொண்டு தெரிந்தது. மலச்சிக்கலும் இருக்காதாம். பெங்களூர் தக்காளி தனது சிகப்பின் அதிக வேவ்லெங்த்தினால் கண்ணுக்குப் புலப்பட்டது. அகிலேஷ் யாதவ் முதல் மந்திரியாக தேர்தெடுக்கப்பட்ட மாலைமலர் கையில் படித்துக்கொண்டு வந்தது பக்கத்தில் வந்தபோது தெரிந்தது.

அவர் சுவாரஸ்யமாக பேப்பர் படித்துக்கொண்டு இடது ஓர சாலையில் ஊர்ந்து வரும்போது அவருடைய காலை உரசிக்கொண்டு ரெண்டு நாய் சண்டை போட்டுக்கொண்டது அவருக்கு தெரியவில்லை. அவசரமாக பிள்ளையை கையில் பிடித்துக்கொண்டு போன பெண் டேஷ் செய்வது போல வந்து கடைசி நொடியில் கட் அடித்தது அவருக்கு தெரியவில்லை. சைக்கிளில் ட்யூஷன் போட்டு வந்த பையன் இடிக்காமல் துள்ளி ஒதுங்கியது அவருக்கு தெரியவில்லை.

நான் நின்றுகொண்டிருந்த இடத்தைத் தாண்டியும் அந்த பேப்பர் படிக்கும் மோன நிலையில் ஒரு யோகியைப் போல சென்றுகொண்டிருந்தார். இவர் வீட்டிற்கு எப்படி போய் சேருவார் என்று ஆவலாக திரும்பிப்பார்த்தேன். நான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அடுத்த பில்டிங்கிற்குள் நுழைந்தார். வைத்த கண்ணை எடுக்காமல் பேப்பர் படித்துக்கொண்டே!

அதிசயமாக இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டே தலையைத் திருப்ப எத்தனித்தபோது அது நடந்தது.

“டமார்” என்று ஒரு ஆஜானுபாகுவான மாமி மேல் மோதினார்.

“என்ன எழவோ! ரோட்லேர்ந்தே பேப்பர் படிச்சுண்டே வர பழக்கம். ஒரு நாள் எவனாது ஒரேடியா ஏத்திட்டுப் போய்டப்போறான். வைகுண்டத்தில போயும் மாலைமலர் படியுங்கோ!!”

தொடர்ந்த வசவுகளைப் பார்க்கும் போது நிச்சயம் அவரது மனைவியாகத் தான் இருக்கவேண்டும். ஒரு செகண்ட் பேப்பரிலிருந்து கண்ணை எடுத்தார். அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தார். திரும்பவும் படித்துக்கொண்டே மாடிப்படி ஏற ஆரம்பித்தார். இந்த செய்கையில் உறுதியாக சொல்கிறேன், அவர் அந்த ஆ.பெண்மணியின் கணவராகத்தான் இருக்கவேண்டும்.

************** நதியில் ஆடும் பூவனம் *************** 
பழைய பேப்பர் போடும் ஆதி கடையில் இன்னும் கொஞ்சம் நாழி இருக்க மாட்டோமா என்கிற ஆவல் எழுந்தது.

“சார் இந்தாங்க!” என்று அழுக்குக் கல்லாவைத் திறந்து காசு எடுத்துக் கொடுத்தும் அவ்விடத்தை அகல மனம் வரவில்லை.

பின்னாடி எஸ்.பி.பி தூண்டில் போடுகிறார். எப்படி நகர்வது. அந்தப் படம் சரியாகப் போகவில்லை. புதுமுகம் கண்ணன் சரியாக நடிக்கவில்லை. கதை சுகமில்லை. என்றெல்லாம். பாரதிராஜாவுக்கு அடிதான்.

ஆனால், ராஜாவும் எஸ்.பி.பியும் புகுந்து விளையாடிய படம். இந்த ஸ்டேட்டஸோடு அட்டாச் செய்த பாடல் அற்புதமான மெலோடி.

கறுப்பு ராதாவை நதியில் ஆடும் பூவனம் என்று வைரமுத்து கவிஞர்களின் கவித்துவ புரட்டோடு எழுதியிருந்தாலும்... கேட்க..கேட்க.... எஸ்.பி.பி நெஞ்சை அள்ளும் பாடல்...

இரண்டாவது சரண ஆரம்பத்திற்கு முன் எஸ்.பி.பியின் அமர்க்களமான ஆலாபனைக்கு ராதாவின் சாணி மிதிக்கும் பரதநாட்டியம் கர்ண கொடூரமாக இருப்பது அவசியமில்லாமல் ஞாபகம் வந்தது.

ஜானகியும் எஸ்.பி.பியும் ஹம்மிங்கில் மங்களம் பாடி முடிந்தவுடன் கிளம்பினேன். பாடிய இடத்தை நான் பார்த்த பார்வையில்....

“சார்! இது எஸ்.பி.பி. டிவிடி.”

“என்னென்ன பாட்டெல்லாம் இருக்குப்பா?”

மாஸ்டரிலிருந்து பிரிண்ட் போட்டு கருப்பாக ஜெராக்ஸ் எடுத்து உள்ளடக்கம் தயார் செய்திருந்தார்கள். தூசி தட்டி எடுத்துக் காண்பித்தான்.

ஒன்று விடாமல் எல்லாமே என்னிடம் இருந்தது.

“வேணுமின்னா காப்பி பண்ணிக்கிட்டு குடுங்க..”

“வேண்டாம்பா”

“பிடிக்கலையா?”

”சுருக்” என்று நெஞ்சுக்குள் நெருஞ்சி ஏறியது. சிரித்துக்கொண்டே சொன்னேன்.

“எஸ்.பி.பியோட எல்லாமே எங்கிட்ட இருக்கு! அவனொரு பாட்டு ராக்ஷசன்!!”

http://www.youtube.com/watch?v=W02st3WU-sE

************* சாஸ்திரிகளுக்கு நன்றி **************
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி மாபெரும் வெற்றியாம். கோட் சூட்டுடன் சூர்யாவை நிற்க வைத்து போஸ்டர் அடித்து ஒட்டி தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் வீட்டில் நடத்திய கணபதி ஹோமத்திற்கு கூட நல்ல ஆதரவு. விமரிசையாக நடந்தது. வீதிக்கு வீதி போஸ்டர் அடித்து ஒட்டலாம் என்று விரும்புகிறேன்.

“கணபதி ஹோமத்தை சிறப்பாக நடத்தித் தந்த கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளுக்கு அநேக கோடி நமஸ்காரங்களும், நன்றிகளும்”

அரச இலைப் பிள்ளையார் படத்தைப் போட்டு.... :-)

********** ஈ காஃபி *************
ஈ விழுந்த காஃபியை திருப்பிக் கவுண்டரில் கொடுத்தால் புதுசாக ஒரு காஃபி போட்டுக் கொடுத்தார்கள். ரிட்டர்ன் காஃபியை வீணாக்காமல் அப்படியே வைத்திருந்தார்கள்.

காஃபியை உறிஞ்சிய பின் பச்பச்சென்று கையில் ஒட்டியதை ஈரத்தண்ணீரில் தொட்டு துடைத்துக்கொண்டு வரும்வரை அக்காஃபி அங்கேயே தவமிருந்தது.

கடையை விட்டு அகலும் போது இருவர் காஃபி டோக்கனுடன் கவுண்ட்டரை அடைந்தனர். கண்ணை விட்டகலாமல் அக்காஃபியும் இருந்தது. எச்சரிக்கலாமா? கூடாதா? என்ற எண்ணத்தின் பின்னல்களின் இடைவெளியில் எழுந்த கேள்வி.

ஈ ரெண்டு பேரில் ’ஈ’ காஃபி எவருக்கு?

********** ராத்திரி பாடல்கள் **********
இது போல் மையிருட்டில் எடுக்கப்படும் பாடல்களுக்கு

அத்தியாவசியத் தேவை ஆறு
1. பெட்ருமாஸ் லைட்
2. ஒரு கூடாரம்
3. ஒரு தேன் நிலா
4. கேம்ப் ஃப்யர்
5. அழகான ஜோடி
6. ராஜாவின் இசையில் பாடல்

தேவையில்லாதவை ஆறு
1. பளபள ட்ரெஸ்
2. தேவதைக் கூட்டம்
3. இயற்கைக் காட்சி
4. ஆடம்பர செட்
5. காதைக் கிழிக்கும் இசை
6. விசுக்விசுக்கென்ற நடனம்

#அமலா மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா மம்மூட்டி ஏன் லோலோன்னு அலைஞ்சு லாலான்னு பாட மாட்டார்?

www.youtube.com/watch?v=OWm9kRMfcGQ

******* ப்ளேன் ஓட்டக் கற்றுக்கொண்டேன் ******
“என் வயிற்றில் ஏதோ கவ்வியது. முதன்முதலாக பூமி ஈர்ப்பை இப்படி எதிர்த்துச் செல்கிறேன். வேகமான லிஃப்டில் அல்லது மிக வேகமாக ஊஞ்சலில் மேற்செல்வது போல உணர்ச்சி என்று சொல்லலாம். அதனுடன் கூட நம் ஸீட்டுக்கு அடியில் ஒன்றுமில்லை என்று உணர்ச்சி. அதற்கு ஈடாக பூமியில் ஒன்றும் கிடையாது. எனக்குப் பயமாக இருந்தது. லலிதா சஹஸ்ரநாமம் சொல்ல வேண்டும் போலிருந்தது”

#என் வசம் இருக்கும் சுஜாதா புத்தங்களை ஃபிக்ஷன், நான் - ஃபிக்ஷன் என்று இரு வரிசைகளாக அடுக்கினேன். தராசில் வைத்து நிறுத்தது போல சமமாக வந்து நிற்கிறது.

## மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்! புஸ்தகத்தில் “ப்ளேன் ஓட்டக் கற்றுக்கொண்டேனி”லிருந்து...

###முதன் முதலாக பறக்கும் படபடப்பை, அனுபவத்தை வாத்தியார் போல யார் எழுத முடியும்? சூப்பர்ப்!! வணக்கம் வாத்யாரே!
*********** புழல் ஏரி *********


-

30 comments:

  1. ஏதாவது புத்தகம் பேர் யாராவது சொல்லி விட்டால் அதை எடுத்து ஒரு தரம் பார்க்க வேண்டும் போல உள்ளது. குறிப்பாக சுஜாதா புத்தகம்! இது எதாவது வியாதியா? என்ன செய்யலாம்?

    ReplyDelete
  2. @ ஸ்ரீராம்....உண்மைதான் ஸ்ரீராம்... சுஜாதாவின் புத்தகங்களை மீண்டும் என் கரம் தானாக தடவிப்பார்த்துக்கொண்டது.

    அமலா போல ஒரு பெண்ணிற்காக எத்தனை நாள் வேண்டுமானலும் லாலா பாடலாம்... ஹி..ஹி..

    நட்புடன்
    கவிதை காதலன்

    ReplyDelete
  3. Long time...!!!

    அந்த ராதா பரத நாட்யம் பத்தி படிச்சப்போ semma comedy! ஒரு சில பாட்டெல்லாம் கேக்க அவளோ நல்லா இருந்தாலும், scene பாத்தா கேவலமா இருக்கும்... அந்த விதத்துல, நான் கொஞ்சம் lucky தான்... ரொம்ப காலம் வரைக்கும் நான் கேட்ட பாட்டெல்லாம் scene பாத்ததே கிடையாது. சின்ன வயசுல, எங்க வீட்டு பக்கத்துல ஒரு tea கடைல பொழுதன்னைக்கும் பாட்டு ஓடும். எனக்கு பிடிச்ச hero-heroine அ எனக்கு பிடிச்ச location ல ஆட விட்டுப்பேன்... இந்த college போனப்றம் தான் நிறையா பாட்டு முதல் தடவ பாத்ததே... College cut அடிச்சுட்டு மத்தியானமா வெயில் ல கூட்டத்துல நெறி பட்டுண்டு தஞ்சாவூர் லேர்ந்து திருச்சி வரணும் (அந்த அவஸ்தைக்கு ரெண்டு Rod ரம்யா class கூட attend பண்ணிடலாம்...). கூட கார பாட்டி correct ஆ கால மிதிப்பா. வீடியோ bus ல ரொம்ப நல்ல பாட்டு அப்போதான் வரும். Scene அ பாத்தா comedy தான்! T R punch லேர்ந்து, தமிழ் cinema சம்பந்தப்பட்ட அத்தனை "கலைத்துவம்" வாய்ந்த விஷயங்களும் அந்த bus பயணத்தின் மூலமா தான் தெரிஞ்சுக்க கிடைச்சது...
    ராத்திரி பாட்டுக்கான list -class! :D

    ReplyDelete
  4. எல்லாமே சூப்பர்....
    அந்த பாட்டு அருமையான பாட்டு. கல்லூரி நாட்களில் பேருந்து பயணத்தில் தான் எத்தனை பாடல்களை கேட்டு ரசித்திருக்கிறேன்....

    ஈ காபியும், சாஸ்திரிகளுக்கு போஸ்டரும் ”அவரு”டன் சேர்ந்து முகப்புத்தகத்தில் படித்தேன்.

    நேற்று தான் சுஜாதாவின் ”ஓடாதே” படித்து ரசித்தேன்.

    ReplyDelete
  5. கதம்பம் மணமாய் கமழ்ந்து ஆளை தூக்கியது...

    ReplyDelete
  6. ஈ காபி குறித்து.. பொதுவாக நான் கவனித்தவரையில், கம்ப்ளைன் பண்ணியவுடன் வேறு காபி தருகிறார்களே ஒழிய ஈ விழுந்த காப்பியை எடுப்பதில்லை. எங்கே ஈயை எடுத்து வேறு யாருக்காவது தள்ளிவிடுவார்களோ என்று நாம் நினைக்க கூடாதென்னும் முன்னெச்சரிக்கை தான்!
    புழல் ஏரி அருகில் இவ்வளவு வீடுகளா? நான் கூட அது எங்கோ அத்வானத்தில் இருக்கிறது என்றல்லவா நினைத்தேன்?

    ReplyDelete
  7. coffee-ல் ஈ இருப்பது தப்பில்லையே..

    இதுல ஒண்ணே ஒண்ணுதானே விழுந்துருக்குது. அது எவ்ளோ குடிச்சுருக்கப்போவுது. போட்டும் விடுங்க :-)

    ReplyDelete
  8. முகப் புத்தகத்தில் படித்து ரசித்தவற்றை மீண்டும் ஒரு முறை படிக்கத் தந்தமைக்கு நன்றி மைனரே.....

    ReplyDelete
  9. “எஸ்.பி.பியோட எல்லாமே எங்கிட்ட இருக்கு! அவனொரு பாட்டு ராக்ஷசன்!!”

    :)

    ReplyDelete
  10. அருமையாய் ரசிக்கவைக்கும் கதம்பம் ..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  11. கேட்ட பாட்டெல்லாம் scene பாத்தால் வெறுத்துவிடும்..

    நம் கற்பனைக்கு கொஞ்சமும் அருகில் வ்ந்திருக்காது..

    அவள் ஒரு நவரச நாடகம் ..பாட்டு அருமை.. சீன் பார்க்காதீர்கள்..

    ReplyDelete
  12. ப்ளேன் பறக்கக் கத்துக்கிட்டீங்களா இல்லை சுஜாதா வரிகளை கொண்டாடுறீங்களா?

    ReplyDelete
  13. ஒரு யோசனை சொல்லலாமா?
    காலவிரயம், காசுவிரயம், தண்டம், மோசம், தேவலாம், அருமை, அற்புதம்னு வகை பிரிச்சு உங்க சுஜாதா புத்தகங்கள்ள எது எந்த வகைல விழுதுனு பாருங்களேன்?

    ஓகே.. இப்ப வேணாவா.. ஒரு வருசம் கழிச்சுப் பாருங்களேன்..:)

    ReplyDelete
  14. //“டமார்” என்று ஒரு ஆஜானுபாகுவான மாமி மேல் மோதினார்.

    “என்ன எழவோ! ரோட்லேர்ந்தே பேப்பர் படிச்சுண்டே வர பழக்கம். ஒரு நாள் எவனாது ஒரேடியா ஏத்திட்டுப் போய்டப்போறான். வைகுண்டத்தில போயும் மாலைமலர் படியுங்கோ!!”

    தொடர்ந்த வசவுகளைப் பார்க்கும் போது நிச்சயம் அவரது மனைவியாகத் தான் இருக்கவேண்டும்.//

    ;))))) மிகவும் ரஸித்தேன்.

    ReplyDelete
  15. அவர் ப்ளைட் ஓட்டிய போது ஒரு தற்செயல் பயணியை டில்லிவரை அழைத்துப் போய் மறந்து விட்டு பெங்களூர் வந்ததையும், அவர் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்து திட்டியதையும் எழுதியிருப்பார் பாருங்கள்... படிக்கவே ரசனையா இருக்கும். பாட்டு ராக்ஷசனை எனக்கும் பிடிக்கும். ஐயோ பாவம்... அந்த ஈ காபி எவருககுப் போச்சோ!

    ReplyDelete
  16. @ஸ்ரீராம்.

    ஆம்! அந்த வியாதிக்கு பெயர் சுஜாதோமேனியாக்! :-)

    ReplyDelete
  17. @கவிதை காதலன்
    லா..லா..லா.... :-)

    ReplyDelete
  18. @Matangi Mawley
    இளையராஜாவின் பல பாடல்களை படுபாதகமாய் படமாக்கியிருப்பார்கள். அவரே பார்த்தால் நொந்துபோவார்.
    கருத்துக்கு நன்றி! :-)

    ReplyDelete
  19. @கோவை2தில்லி
    கருத்துக்கு நன்றி சகோ! :-)

    ReplyDelete
  20. @”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
    நன்றி மூவார் சார்! :-)

    ReplyDelete
  21. @bandhu
    ஈ காஃபிக்கு வேறொரு கோணம் கொடுத்ததற்கு நன்றிங்க.. :-)

    ReplyDelete
  22. @அமைதிச்சாரல்
    அவுன்ஸ் கணக்கா காஃபிக்கு காசு வாங்கறாங்க.. அதனால ஈ குடிச்ச அவுன்ஸுக்கு யார் காசு கொடுப்பா... நா மாட்டேம்ப்பா..

    :-)

    ReplyDelete
  23. @வெங்கட் நாகராஜ்
    நன்றி தலைநகரத் தல! :-)

    ReplyDelete
  24. @ரிஷபன்
    :-))

    ReplyDelete
  25. @மாலதி
    எதுக்கு நன்றின்னு தெரியலை.. இருந்தாலும் நானும் சொல்லிக்கிறேன்.. “நன்றி” :-)

    ReplyDelete
  26. @இராஜராஜேஸ்வரி
    கருத்துக்கு நன்றி மேடம். :-)

    ReplyDelete
  27. @அப்பாதுரை
    என்னோட ரசனையின் அளவா அல்லது ஒரு தனிமனித வழிபாடு போல அவரை ரசிக்கிறேனா என்று தெரியவில்லை. சுஜாதாவை பிடிக்கிறது சார்! :-)

    ReplyDelete
  28. @வை.கோபாலகிருஷ்ணன்
    நன்றி வைகோ சார். :-)

    ReplyDelete
  29. @கணேஷ்
    நன்றிங்க.. ஈ காஃபி எவருக்கும் போயிருக்க வாய்ப்பில்லை என்று பந்து சொல்கிறார். மேலே பாருங்கள். :-)

    ReplyDelete