Tuesday, August 7, 2012

ஏடிஎம்


இன்னாரின்னார் இன்னின்னிக்கு இந்தந்த நேரத்தில் இவ்வளவ்விளவு பணம் எடுத்தார் என்று ஏடிஎம்மின் கதவிற்கும் எதிர்வீட்டு வாசற்படிக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். வாக்கிங் போகும்போதே ஹெச்டிஎஃப்சி ஏடிஎம் வாசலில் ஏகக் கூட்டம். ஒருவர் பின்னால் ஒருவர் நிற்க வெட்கப்பட்டுக்கொண்டு கோணல்மாணலாக பரமபத பாம்பு வரிசையாக நீண்டிருந்தார்கள்.

மாதத்தின் முதல் வாரத்தில் சம்பளப் பணத்தை ஏடிஎம் வாயிலாக உருவுபவர்களைப் பார்த்ததும் தொ. பரமசிவத்தின் ”உணர்வும் உப்பும்” என்கிற கட்டுரையில் சம்பளம் பற்றி படித்தது ஞாபகம் வந்தது. செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் ‘சம்பளம்’ என்ற சொல் பிறந்தது என்பர் சிலர் என்கிறார் தொ.ப. அந்தக் காலத்தில் சம்பளப் பட்டுவாடா இதுபோல ஏடிஎம்மாக வைத்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று ஒரு விபரீத யோசனை நான் காலையில் வாக்கிங் போய்க்கொண்டிருக்கும் போது சீன் சீனாய் என்னுள்ளே ஓடியது. அப்படியே நீங்களும் ராஜாக்கள் காலத்துக்கு என் கூட வந்துடுங்க.

இராஜாக்கள் மற்றும் பிரபுக்கள் அரசின் இலட்சிணைப் பொறித்துச் செப்புக்காசைத் தட்டையாக்கி அதில் 12 மாதங்களும் மாதத்துக்கு 4 தவணைகளையும் பொறித்து வேலையாட்களுக்குத் தருகிறார்கள். ஒவ்வொரு ஏடிஎம் வாசலிலும் ஒரு கண்காணிப்பாளர் முண்டாசும் கையுமாக சுத்தியல் மற்றும் உளி போன்ற ஒரு உபகரணத்துடன் தயாராய் உட்கார்ந்திருக்கிறார். செப்புத்தகட்டை நீட்டுபவரிடம் அந்தந்த மாதத்துக்கு நேரே அந்தந்த தவணைக்கு ஒரு துளையிட்டு திரும்பக் கையில் கொடுத்து உள்ளே அனுப்புகிறார். கீற்றுக்கூரை மேல் வைக்கோல் வேய்ந்த அந்த விவசாய ஏடிஎம்முள்ளே நெல்லுக்கு ஒரு பத்தாயமும் பக்கவாட்டில் உப்புக்கு ஒரு பெரிய மண் கலையமும் வைக்கப்பட்டிருக்கிறது.

செப்புத்தட்டைக்காசை பத்தாயத்தின் வாயில் சொருகியதும் அதன் ஓட்டை போய் அளவு வாரியாக அமைக்கப்பட்ட உள் தடுப்புகளின் மேல் அடிக்கப்பட்ட ஆணியில் ஒன்றை மாட்டி இழுத்துத் திறந்து அந்தத் தவணைக்கான நெல் சரிந்து வெளியேக் கொட்டுகிறது. அதே ஆள் அந்தச் செப்புத்தகட்டை உப்புக் கலையத்திற்குள் சொருகினால் ஒரு மரக்கால் உப்பைத் துப்பும். அள்ளிக்கொண்டு அப்படியே நகர்ந்துவிட வேண்டும். அது 24X7 ஏடிஎம் காலம் அல்ல. கதிரவன் சாய்வதற்குள் கடையடைத்து விடுவார்கள். ஏடிஎம்மின் ரீஃபில்லிற்கு அந்தந்த கிராமக் கோயிலின் நிலத்திலிருந்து சாகுபடியாகி வரும் நெல்லை அந்தந்தக் கோயிலின் நிர்வாகத்தார் கொண்டு வந்து நிரப்பவேண்டும். பத்தாயத்திலிருந்து நோ ஸ்டாக் வந்து நெல்மணிக்காக ஒரு பெண்மணி காத்திருக்கும் வேளையில்.........................

”பா..........................ம்” என்று காது கிழியும் டெஸிபலில் ஹார்ன் அடித்து இப்படியே தாறுமாறாக நீண்டு கொண்டிருந்த விபரீதக் கற்பனையைக் கலைத்தார் அந்த பொறியியல் கல்லூரி பஸ் டிரைவர். கற்பனாலோகத்திலிருந்து நிகழ்காலத்துக்கு வந்த பின்னர் சாதமும் உப்பும் இப்போதெல்லாம் கண்டமேனிக்கு எல்லோருக்கும் தாராளமாகத் தரமுடியுமா என்று யோசனை வந்தது. புழுங்கல் அரிசிதான் ஷுகருக்கு நல்லது. ப.அரிசி, பு.அரிசி என்று ரெண்டு பத்தாயம் வைக்கவேண்டும். டையூரிடிக்ஸ் மருந்து சாப்பிடும் பீ.பி ஆசாமிகள் உப்பைத் தொடமாட்டார்கள். பீபி ஆட்களுக்கு உப்புக்கு பதிலாக கூடுதல் அரிசி தரவேண்டியிருக்கும், ஷுகர்க்காரர்களுக்கு அரிசிக்குப் பதில் நிறைய கோதுமை தரவேண்டியிருக்கும்.. ஆமாம் அதற்குதான் இப்போது ரேஷன் கடை இருக்கிறதே... அதிலும் கார்டு கொண்டுவருபவரின் ஃபேமிலி ஹிஸ்டரி மற்றும் வியாதி பார்த்து பொருள் தருகிறார்களா? புழுக்கள் நெளியும் நான்வெஜ் அரிசி இல்லாமல் இருக்கிறதா? அவர்கள் அளக்கும் ஒரு கிலோ ஜீனி ஒரு கிலோவாகவே பைக்குள் விழுகிறதா? என்றெல்லாம் கண்டபடி யோசித்துக்கொண்டே வந்ததில் நடை வேகம் பாதிக்கப்பட்டு பத்து நிமிடம் லேட்டானதுதான் மிச்சம்.

#இந்த அவசரயுக ஜி.டி.நாயுடுவின் Wild Thinking. யாராவது ஏடிஎம். (Agri-products Transaction Machine) ஒன்று கண்டுபிடித்தாலென்ன?
பட உதவி: அந்த அழகிய தமிழ் மகனைக் கண்டெடுத்த இடம்  funxite.com

19 comments:

  1. அழகிய தமிழ்மகன் அருமை...

    ReplyDelete
  2. தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி


    வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

    தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

    ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

    அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


    மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
    95666 61214/95666 61215

    ReplyDelete
  3. போட்டோ சூப்பர்.

    ReplyDelete
  4. எப்டி இப்டில்லாம்???

    பின்றேள் போங்கோ..

    :))

    ReplyDelete
  5. மைனர்வாளுக்கு எப்போதும் கற்பனை உலக பிரவேசம் தான். ரசிக்கும்படியாவும் இருக்கு! :)

    ReplyDelete
  6. ஹா...ஹா.. ரசித்துப் படித்தேன்... தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)


    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
  7. :))))

    அருமையான படம்.

    கோதுமையுடன் மருந்துக் குளிசைகளும் கொடுக்கவேண்டி இருக்கும். :))))

    ReplyDelete
  8. தங்கள் தளத்தில் புதியதாய் இணைந்து கொண்ட சிறுவன் ....

    ReplyDelete
  9. @சங்கவி
    தங்களது பாராடுக்கு நன்றி சங்கவி!

    ReplyDelete

  10. @புதுகைத் தென்றல்
    ஃபோட்டோ மட்டும்தானாங்க.. :-)

    ReplyDelete

  11. @அறிவன்#11802717200764379909
    நன்றிங்க அறிவன். தினம் ஒரு பாடல் படித்துவந்தேன். இந்தப் பக்கமே சில நாட்களாக எட்டிப்பார்க்க முடியவில்லை. மீண்டும் முழு முச்சாக இயங்கவிருக்கிறேன். :-)

    ReplyDelete

  12. @தக்குடு
    நன்றி கல்லிடையின் காதல் மன்னா!

    ReplyDelete

  13. @திண்டுக்கல் தனபாலன்
    தொடர் வாசிப்பிறகு நன்றி தனபாலன்.

    ReplyDelete

  14. @வெங்கட் நாகராஜ்
    நன்றி தலைநகரத்தலை. இனிமே ரெகுலராக ப்ளாக் உலகில் பிரவேசிப்பேன் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

  15. @மாதேவி
    ம்... சரிதாங்க... :-)

    ReplyDelete

  16. @ஸ்ரீராம்.
    நன்றி ஸ்ரீராம்.

    ReplyDelete

  17. @சீனு
    நானே ஒரு பொடிப்பயல்தாங்க.. நன்றி. :-)

    ReplyDelete