Saturday, September 22, 2012

ஆனந்த விகடனில் அடியேன்!



இந்த வார “என் விகடனி”ல் எனது www.rvsm.in வலைப்பூ வலையோசை பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆ.வி ஆசிரியர் குழுவிற்கு நன்றி. திரு. ரா. கண்ணன் மற்றும் திரு. கலீல் ராஜா இருவருக்கும் பிரத்தியேகமான நன்றிகள். இவர்களைத் தவிர இது வெளியாவதற்கு முயற்சியெடுத்த, பெயரில் மன்மதனின் மனைவி பெயரைப் பாதியாகக் கொண்ட, நண்பனொருவனுக்கும் (”என் பெயரைக் குறிப்பிடாதீர்கள். ப்ளீஸ்!” என்று கேட்டுக்கொண்டதினால் இப்படி கிசு கிசு போல எழுதவேண்டியதாயிற்று) மனமார்ந்த நன்றி.

பன்னெடுங்காலத்துக்கு முன்பு நான் கொடுத்த பேட்டியை கீழே பதிகிறேன். படித்து இன்புறவும்.

நீங்கள் எப்போதிருந்து எழுதுகிறீர்கள்?
ஒரு விஜயதசமி நன்னாளில் என் பிஞ்சுக் கரத்தை அழுத்திப் பிடித்து கோபாலக்ருஷ்ண வாத்தியார் காவிரி பாய்ந்த எங்கள் பூமியில் செழிப்பாக விளைந்த பொன்னி ரக நெல் மணிகளை வீட்டின் நடுஹாலில் ஒரு பித்தளைத் தாம்பாளத்தில் பரப்பி 'சுர்க்  சுர்க்' என்று அது ஆள்காட்டி விரலில் குத்த குத்த 'அ' எழுத வைத்த நாளிலிருந்து.. தேவலாம் எழுதுகிறீர்கள் என்று கேட்டீர்கள். நிறைய பேர் கிறுக்குகிறீர்கள் என்று சொல்லித் தான் சிரித்திருக்கிறார்கள். நன்றி. வலையின் முதல் போஸ்டு இங்கே.


இலக்கணங்கள்... இலக்கியங்கள்... பற்றி...
(நெடுநேரம் வாய்விட்டு சிரிக்கிறார்!! பரவாயில்லை சொல்லுங்க என்றதும் தொடர்ந்தார்)
நல்ல கேள்வி. கபிலர் எனக்கு பக்கத்து வீடு மாதிரி கேட்கிறீர்கள். கம்பர் எனக்கு ஒன்றுவிட்ட சித்தப்பா போல கேட்கிறீர்கள். இலக்கண சுத்தமாக எழுதவதற்கு முன்னர் எனக்கு எழுத்துப் பிழை இல்லாமல் எழுதத் தெரியுமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். வாழ்க்கையில் இலகுவாக கடக்கின்ற கணங்களை இலக்கணங்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். இலக்கியம் என்பதை உள்ளூர் அரசியல் கட்சிகளின் மாடுகள் சுவைக்கும் வால் போஸ்டர்கள் மற்றும் பதாகைகளில் இருக்கும் இலக்கிய அணி என்று அச்சடித்திருக்கும் இடத்தில் இருந்தும் அறிகிறேன். இது தவிர இலக்கியா என்று வெடவெடவென்று சோனியாக ஒரு பள்ளித் தோழி இருந்தாள். இலக்கியம் பற்றி எனக்கு தெரிந்தது இவ்வளவே.

உங்களுடைய கதாவிலாசங்கள்....
பொழுதுபோகாத ஒரு வாலிபனின் எண்ணங்களாக இவை பிரதிபலிக்கின்றன. கார்த்திக்கின் காதலிகள் என்று ஒரு தொடர் எழுதியவுடன் ஆயிரம் பேர் (சொல்லிக்கொல்வேமே யாருக்கு தெரியப்போவுது என்று முனுமுனுக்கிறார்) வரிந்து கட்டிக் கொண்டு உன் கதையை எழுதுகிறாயா? எனக்கு தெரியாதா? "உன் சாயம் வெளுத்துப் போச்சு." என்று முண்டு முட்டி மோதி தட்டிக் கேட்டார்கள். அதிர்ந்து விட்டேன். ஏன் ஐயா நான் காதல் கதை எழுதக் கூடாதா? எனக்கு அந்த அருகதையில்லையா? என்று பாவமாக கேட்டபோது சிறிதும் இரக்கமில்லாமல் அனுபவிக்காமல் இப்படி எழுதமுடியாது என்கிறார்கள். அனுபவித்து தான் எழுதவேண்டும் என்றால் கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் குறைந்தது ஆயிரம் கொலையாவது பண்ணியிருக்கவேண்டும். வாத்தியார் ஒரு ஏ க்ளாஸ் 420 ஆக இருந்திருக்க வேண்டும். கல்கி சோழர் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். இருந்தார்களா? சிறுவயது முதலே நாலு பேர் சேர்ந்தால் கதை விட ஆரம்பித்த பழக்கம் இன்றுவரை தொடர்கிறது.

கவிதைகள் இப்போதெல்லாம் எழுதுவதில்லையே..
மாதிரி போட்டு எழுதியதற்கே சக பதிவர்களும் படித்த அப்பாவிகளும் ரொம்ப பயந்துட்டாங்க. ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதால் நிறுத்தி விட்டேன்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைப் பார்த்து அதைப் பற்றி எதுவும்...
வேலை பார்க்கும் துறை பற்றி எழுதினால் நமது முகமூடி கிழிந்து நாறிவிடும் என்று பயம் இருப்பதால் அவ்வளவாக எழுதுவதில்லை. அப்படியே ஒன்றிரண்டு எழுதினாலும் வேறு துறை பற்றி ஏதாவது கிறுக்கியிருப்பேன். வலையில் சமூக கட்டமைப்பு மற்றும் சில புரட்சி கர டெக்னாலஜிகள் பற்றி எழுதிப் பார்த்தேன். ஒரு நாள் வாத்தியாரின் சயின்ஸ் புத்தகம் ஒன்றை படித்துவிட்டு இனி எழுதக் கூடாது என்று ஞானோதயம் வந்து நிறுத்திவிட்டேன். சர்வ ஜன சுகினோ பவந்து.

பார்வை ஒன்றே போதுமே இதிகாச காதலர்கள் போன்ற சீரியல்கள் துவங்கி பாதியில் விட்டதை பற்றி..
முதலில் நடிகைகளின் கண்ணழகை கொண்டாடும் விதமாக இதை துவங்கினேன்.  ஒன்றிரண்டு எபிசோடுகளில் பழைய கருப்பு வெள்ளை நடிகைகளையும் மாதவி போன்ற இடைக்கால நட்சத்திரங்களை பற்றியும் பிரசுரித்தேன். நீ ஒரு ஓல்டு. அதான் பழய்யய்ய்ய்ய ஜில்பான்ஸ் போட்டக்களை போடுகிறாய் என்று போர் தொடுத்தார்கள். சமீபத்திய அழகுகளின் அஞ்சனங்களை பற்றி போடலாம் என்றால் கண்ணைத் தவிர மற்றதெல்லாம் பளீரென்று தெரியும்படி போஸ் கொடுத்து அந்த பகுதியை (பா.ஒ.போ) மூடிவிட்டார்கள். இதிகாசக் காதலர்கள் மேட்டர் இருக்கு எழுதி படுத்தணுமா என்கிற உயர்ந்த எண்ணம் எழுந்ததால் இன்னமும் எழுதவில்லை.


இசை பற்றி நிறைய எழுதுகிறீர்களே...
ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் பார்க்கில் பெஞ்சில் உட்கார்ந்து இருப்பது போன்ற போஸில் என் காரில் பயணிக்கிறேன். வெளியிலிருந்து வரும் காதைக் கிழித்து கூறுபோடும் ஏர் ஹார்ன் சப்தம் மற்றும் மாசு உள்ளே புகாதவாறு கார் கண்ணாடிகளை தூக்கி விட்டுக்கொண்டு உடையாளூர் பஜனை பாடல்களிலிருந்து தேவாவின் தித்திக்கும் 'கானா' பாடல்கள் வரை கேட்டுச் செல்கிறேன். அதைத் தவிர கல்லூரி நாட்களில் இருந்து பஸ்ஸ்டாண்ட் ராஜ் மியூசிக்கல்ஸ் கடையில் விருப்பப் பாடல்களை கேசெட்டுகளில் காப்பி செய்து டேப் ரேகார்டரின் ஹெட் தேயும் வரை கேட்டதால் .... தொட்டில் பழக்கம்...  இதைத் தவிர எனக்கு இசை பற்றி அணுவளவும் வேறு எதுவும் தெரியாது. அரசியல் தெரியாதவர்கள் அரசியல் புரிவதும், கம்பவுண்டர் டாக்டர் தொழில் பார்ப்பதும், கிளீனர் லாரி ஓட்டுவதும் இந்தியாவில் சகஜம் தானே. அதைப்போல் இதையும் சகித்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய பெயர்காரணம் மற்றும் இளமைப் பருவம் பற்றியெல்லாம் கொஞ்சம்...
என்னுடைய பெயர் ஆர்.வெங்கடசுப்ரமணியன். இந்த ப்லோகின் இடது புறத்தில் நிரந்தரமாக அச்சடித்து வைத்திருக்கிறேன். ஆறாம் வகுப்பில் எஸ்.வெங்கடசுப்ரமணியன் என்று ஒரு புத்திசாலி மாணாக்கர் வந்து சேர்ந்தவுடன் வித்தியாசம் தெரிவதற்காக ஆர்.வி.எஸ்.எம் என்று எனக்கும் எஸ்.வி.எஸ்.எம் என்று அவருக்கும் கிளாஸ் டீச்சர் தாண்டான் பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஆர்.வி.எஸ் என்று ஆரம்பித்தாலே அடிக்கத்தான் கூப்பிடுகிறார் என்று கையை பின்பக்க டிராயரில் துடைத்துக் கொண்டு தயாராகிவிடுவேன். இன்னமும் அதே நிலையில் தான் தொடருகிறேன். ஏழாவதோ எட்டாம் வகுப்போடோ எஸ்.வி.எஸ்.எம் (என் போன்ற மாங்காவுடன் படிக்கமுடியாமல்) சென்றவுடன் என் ஒருவனுடைய ரயில் நீள பெயருக்காக வருகைப்பதிவேடு ஒரு எக்ஸ்ட்ரா பக்கம் வாங்கியது. சிக்கன நடவடிக்கையில் நான் படித்த பள்ளிக்கூடம் இருந்திருந்தால் என்னை அதற்காகவே மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அணுப்பியிருக்கலாம். இளமைப் பருவம் பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த ஒரு பதிவு, ப்ளாக் பத்தாது. வாய்க்கால் வரப்பு, மரத்தடி, பஸ் ஸ்டாண்டு, தேரடி, பந்தலடி, காந்தி ரோடு, காளவாய்க்கரை, ஒத்தை தெரு, முதல் தெரு, மூன்றாம் தெரு, புதுத் தெரு, கீழப்பாலம், மேலப்பாலம், ஹரித்ராநதி என்று எந்த இடத்திலும் ஒரு பெண்ணைக் கூட தலை நிமிர்ந்து பார்க்காத கண்ணியம் இன்றுவரை தொடர்கிறது. மன்னார்குடி டேஸில் இதைப் பற்றியெல்லாம் விலாவாரியாக பகிர்ந்துள்ளேன்.

பேட்டி கொடுத்த இந்த பிசாத்து பதிவருக்கு வலையில் இன்றோடு ஒருவருடம் முடிவடைகிறது. நானும் கொளந்தைதான். இரண்டாயிரத்து ஏழில் பிள்ளையார் சுழி போட்டாலும் பத்தில் தான் எழுத ஆரம்பித்தேன். இவ்வளவு காலம் பொறுமையாக படித்த மக்களுக்கு கோடி நன்றிகள். கொஞ்ச நாள் எழுதாம மேயலாமா என்று ஒரு எண்ணம் இருக்கிறது. இன்னும் எழுத்துப் போதையில் நடுங்கும் கரங்களிடம் கேட்கவில்லை. பார்க்கலாம். என்னுடைய அருகாமை சீனியர்கள் பத்துஜி மற்றும் தக்குடு ஆகியோருக்கு இந்த ஜூனியரின் வந்தனங்கள். வலை உலகில் பிரமாதமாக எழுதும் பலருக்கு இந்த பிசாத்து பதிவரின் மரியாதைகள்.


43 comments:

  1. பேட்டி - கலக்கல்...

    பட குறிப்பு - என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க...! உங்கள் எழுத்து நடையும் உங்களைப் போல - அழகு...

    மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    முழு நாள் செமினார் பகிர்வு எப்போ...?

    ReplyDelete
  2. தனபாலன் சொல்வது சரி. நீங்களும் அழகு. உங்கள் பதிவும் அழகு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் சார். யூ ஆர் தி ஜெயன்ட் ரைட்டர். சந்தேகமின்றி!!

    ReplyDelete
  4. ஆனந்த விகடனுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  5. ஆஹா... உஙகள் பேட்டி அருமை. நான் எழுத வந்து ஒரு வருடம்தான் ஆகிறது. உங்கள் எழுத்துக்களைப் படிக்கையில் நாற்பது வருடம் எழுதி வருபவராகத்தான் தெரிகிறீர்கள். சிவா சொன்னதுதான் சரி. நீங்க ஜெயண்ட் ரைட்டர்தான் ஸார். என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. @பால கணேஷ்

    அப்ப ஆர்.வி.எஸ் வயசு சுமார் 70+ இருக்குமோ?

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்.பேட்டி அருமை.

    ReplyDelete
  8. இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  9. congrats! அருமையான பேட்டி!

    ReplyDelete
  10. @திண்டுக்கல் தனபாலன்
    நன்றிங்க. உங்களைக் கூட பார்க்கிறதுக்கு டாக்டர். ராஜசேகர் மாதிரியே இருக்கீங்க! :-)

    ReplyDelete
  11. @ஸ்ரீராம்.
    அன்புக்கு நன்றி ஸ்ரீராம்! :-)

    ReplyDelete
  12. @! சிவகுமார் !
    சிவாஆஆஆஆ..... நன்றி! :-)
    அப்படியொன்னும் நான் ரொம்ப பெரிசா இல்லையே! :-)))))))))))))

    ReplyDelete
  13. @மோகன் குமார்
    தேங்க்ஸ் மோகன். நீங்களெல்லாம் பிரிண்ட் எடிஷன் பார்த்தவர்கள்! :-)

    ReplyDelete
  14. @ பால கணேஷ்
    பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க... அப்படியெல்லாம் ஒன்றும் இல்லீங்க... நானும் ஒரு ரெண்டு வருஷமாத்தான் எழுதறேன். :-)

    ReplyDelete
  15. @ ! சிவகுமார் !
    அது சரி............ :-)

    ReplyDelete
  16. @ஸாதிகா
    நன்றி! பேட்டியை ரசித்தமைக்கு.. :-)

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  18. @ரிஷபன்
    நன்றி சார்! :-)

    ReplyDelete
  19. @ ஷைலஜா
    நன்றிங்க.. :-)

    ReplyDelete
  20. @ kg gouthaman
    நன்றி சார்! :-)

    ReplyDelete
  21. வாழ்க,.. இன்னும் அண்ணாந்து பார்க்கும் உயரத்திற்கு மென்மேலும் வளர்க ;-)

    ReplyDelete
  22. வாழ்த்துகள் சார்...வாத்தியார் ஸ்டைலை உங்கள் எழுத்தில் காண்கிறேன்.

    ReplyDelete
  23. வாழ்த்துகள் ஜூ(சீ)னியர்

    ReplyDelete
  24. வாழ்த்துகள் சார்

    ReplyDelete
  25. விகடனில் இடம் பெற்ற விகட எழுத்தாளருக்கு வாழ்த்துகள் ....... இரண்டாம் சுற்றின் இனிய ஆரம்பம் ...... வலையோசை கல கல வென தொடருங்கள் .....

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள்.
    இனிமேல் பத்மநாபன், ஸ்ரீராம் இவர்களுக்கு முன் பின்னூட்டமிட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன்.

    ReplyDelete
  27. @அமைதிச்சாரல்
    நன்றிங்க மேடம். :-)

    ReplyDelete
  28. @சேலம் தேவா
    நன்றிங்க.. வாத்தியாரோடெல்லாம் கம்பேர் பண்ணாதீங்க பாஸ்! நானெல்லாம் கொசு! :-)

    ReplyDelete
  29. @எல் கே
    ஜூனியர்.. ஜூனியர்.. இரு மனம் கொண்ட... :-)

    ReplyDelete
  30. @Avargal Unmaigal
    மிக்க நன்றிங்க.. :-)

    ReplyDelete
  31. @பத்மநாபன்
    ரசிகமணிக்கு நன்றி! கலகலவென கவிதைகள் படிக்குது உங்கள் கமெண்ட்.. :-)

    ReplyDelete
  32. @அப்பாதுரை
    மிக்க நன்றி அப்பாஜி! :-)

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் சார்!

    பாட்டிலில் அடைத்து வினியோகித்துக் கொண்டிருந்த தண்ணீரை மீண்டும் மடையைத் திறந்து நதி நீராக வழங்கத் தீர்மானித்திருப்பதற்கு மற்றுமொரு வாழ்த்துக்கள்.தங்கள் வரவு நல்வரவாகுக.

    அந்த கிசுகிசுல சொல்லப் பட்டிருக்கறவர் இதுல 23 வது கமெண்ட் ல இருக்கறவருதான? எப்புடி :-)

    ReplyDelete
  34. யாரங்கே! மன்னை மன்னரின் வருகைக்கு சிகப்பு கம்பளம் விரிக்கவும்.

    வரப் போகும் எழுத்துக்களுக்கு முரசு கொட்டட்டும்.

    *************
    ***********
    *********
    *******
    *****
    ***
    *

    இம்புட்டு பூதான் தூவ முடிஞ்சது சகோதரரே :-)

    ReplyDelete
  35. மன்னார் குடி மைனரே, கடைசியில் சேரவேண்டிய இடத்தில்தான் சேர்ந்துள்ளீர்கள்.
    நொம்ப நொம்ப சந்தோஷம். குருவின் அசீர்வாதாமோ !

    ReplyDelete
  36. மிக்க மகிழ்ச்சி Sir. ;)
    மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  37. கலக்கல் பேட்டி தான் போங்க... விகடனில் வந்ததுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்..:)

    ReplyDelete
  38. @raji

    நன்றிங்க மேடம். கம்பளம்லாம் விரிச்சுட்டீங்க.. ஒரு கதை எழுதிடவேண்டியதுதான். :-)

    ReplyDelete

  39. @Manickam sattaathan
    பாராட்டுக்கு நன்றி. வாத்தியாரின் ஆசீர்வாதம் என்றுதான் சொல்லணும் பாஸ்!

    ReplyDelete

  40. @வை.கோபாலகிருஷ்ணன்
    பாராட்டுக்கு நன்றி சார்!

    ReplyDelete

  41. @அப்பாவி தங்கமணி
    பேட்டியை ரசித்ததற்கு நன்றி. வாழ்த்துக்கு ஸ்பெஷல் நன்றி. :-)

    ReplyDelete
  42. ஓய்ய் மைனர்வாள்! ரசிகமணியை சொன்னேர் அதுல ஒரு நியாயம் இருக்கு ஆனா ஆவணிக்கு ஒருதடவை பெளர்ணமிக்கு ஒருதடவை தத்துபித்துனு உளரிக்கொட்டும் இந்த சுண்டெலியை எதுக்கு சீனியர்ல போடறேள்? வாழ்த்துக்கள் அண்ணா!

    ReplyDelete
  43. ஆனந்த விகடன் இன்னும் எனக்கு எட்டக் கனியாகவே உள்ளது.
    நீங்க எங்கேயோ போயிட்டீங்க பாஸ் .
    வாழ்த்துக்கள்

    ReplyDelete