Monday, September 24, 2012

மோட்டார் காந்தி

பொதுவாகவே போரூர் சிக்னல் அருகே இராவேளையிலும் உழைத்துக் களைத்துத் திரும்பும் ஆஃபீஸ் அடிமைகள் கூட்டம் ஒருவர் மீது ஒருவர் சாய அலைமோதும். இன்று “போவோமா ஊர்கோலம்” கேட்டுக்கொண்டே ஹாயாக அதைக் கடந்து வந்தாயிற்று. உள்ளத்தில் உவகை பொங்கும் நேரத்தில் யார் வைத்தக் கண்ணோ தெரியவில்லை ஒரு அரைக் கிலோ மீட்டர் தூரத்தில் பீச் படகு மறைவுக்கு பின்னால் கொஞ்சிக் குலாவும் இளஞ் ஜோடிகள் போல ஈஷிக்கொண்டு நிற்கும்படியானது.

க்கத்தில் குடிதண்ணீர் கேனேற்றி நின்றிருந்த டாட்டா ஏஸ்காரருக்கு உடம்பில் என்ன உபாதையோ டர்டர்ரென்று உறுமிக்கொண்டே நின்றிருந்தார். கண்களில் ஒருவித வெறி தெரிந்தது. பார்வையில் பட்ட சைக்கிள் வீல் கேப்பிலெல்லாம் அந்தக் குட்டியானையை நுழைக்க எத்தனித்தார். அது நுழையும் என்று எண்ணி எண்ணி முயற்சித்த அவரது தீவிரத்தில் அவர் எதையும் செய்ய சித்தமாயிருக்கிறார் என்று புரிந்தது. எனது சேப்பாயியை அவருக்கு ஒரு வண்டி தள்ளியே பின்னால் ஜாக்கிரதையாக இன்ச்சினேன். கோஸ்ட் ரைடரில் வரும் ஹார்லே டேவிட்சன் போல ஒரு வண்டியில் ஒரு மோட்டார் ’சுந்தர’ பிள்ளையும் எங்களோடு ட்ராஃபிக் விடியலுக்காகக் காத்திருந்தார். இரு காலையும் படகுத் துடுப்பாக்கி ஆக்ஸிலேட்டரே தேவையில்லாமல் பெட்ரோல் சிக்கனத்தைக் கடைபிடித்து உருட்டிக்கொண்டு வந்தார். டாங்க்கில் பெட்ரோல் குறைவாக இருந்திருக்கக் கூடும்.

இன்ச் இன்சாக அந்த ரோடைக் கடந்து கொண்டிருந்த வேளையில் அது நடந்தது. நான் இதை எதிர்பார்த்தேன். கதாநாயகனை மயக்கும் கவர்ச்சிக் கன்னி போல நெருங்கி நெருங்கி வந்த அந்த தண்ணீர் வண்டிக்காரர் அந்த மோட்டார் பிள்ளையின் இடது காலில் லேசாக ஏற்றி இறக்கிவிட்டார். தமிழனின் தலையாய பழக்கமான வீதிச் சண்டை பார்ப்பதற்கு மளமளவென்று கார்க் கண்ணாடியை இறக்கினேன். அந்த தம்பி சடாரென்று அந்த வண்டியைப் பார்க்க திரும்பியதில் நான் சற்று பதற்றமானேன். அந்த மோட்டார் தம்பி பதற்றப்படாமல் ஹெல்மெட்டை கழற்றினார். அவரைப் பார்த்துச் சிரித்தார். “அண்ணே! எல்லோரும் தான் வீட்டுக்குப் போகணும். என் காலை முறிச்சிப்புட்டு நீங்க மட்டும் வீட்டுக்கு போகணும்னு நினைக்கிறீங்களே! இது நியாயமா?” என்று பதவிசாகக் கேட்டார். ஏஸின் பதிலுக்குக் காத்திராமல் இன்சிக்கொண்டே நகர்ந்துவிட்டார்.
 
 
இச்சம்பவத்திற்குப் பின்னர் மேற்படி தண்ணீர் வண்டி யாரையும் முந்தவும் இல்லை சக வண்டிகளின் இண்டு இடுக்களில் மூக்கை நுழைக்கவுமில்லை.

காந்தியின் அஹிம்சையையும் பகைவனுக்கும் அருளும் அன்பையும் கடைபிடித்தால் ஒரு சண்டை தவிர்க்கப்படுவதோடு குற்றம் புரிந்தவனைத் திருத்தவும் பயன்படுகிறது என்பதைக் கண்ணால் கண்ட நிகழ்வு இது.

#அந்த மோட்டார் காந்தி வாழ்க!

26 comments:

  1. டாடா ஏஸ் காலில் ஏறி இறங்கியும் ஒன்னும் ஆகலைனா அர்னால்ட் ஆ இருப்பார் போல ,அதான் கூலா பதில் சொல்லி இருக்கார். ஆனாலும் இப்படி பொறுமையா இருப்பது அபூர்வம்,பாராட்டுவோம் மோட்டார் காந்தியை.

    ReplyDelete
  2. Nice one! Recently I heard a phrase " when rape is inevitable, just enjoy it ". Enjoying small things in place like traffic jam is always unique. - Rob Anderson.

    ReplyDelete
  3. மோட்டார் காந்தியின் புகழ்பாடி போரூர் யாத்திரை செய்த ஆர்விஎஸ்ஜி! வாழ்க நீவிர்!

    ReplyDelete
  4. நேற்று அதீத ட்ராபிக்

    ReplyDelete
  5. @வவ்வால்
    லேசாக விரல்நுனியில் ஏறியிறங்கியது. உரசினாலே சண்டைபோடும் ஆட்கள் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  6. ஆமாம் அனானி! :-)

    ReplyDelete
  7. @ஸ்ரீராம்.
    அவர் காந்தி! காந்தியின் பெயரைத் தாங்கி சிலர் செய்யும் அட்டூழியங்களுக்கு இவர் நிஜமாகவே காந்தியாகத் தெரிந்தார் ஸ்ரீராம். :-)

    ReplyDelete
  8. @எல்.கே
    ஆமாம் எல்.கே

    ReplyDelete
  9. அதிசயம் ஆனால் உண்மை?

    ReplyDelete
  10. @ அப்பாதுரை
    ஆமாம்! என் கண்ணை என்னாலேயே நம்பமுடியவில்லை. இதுபோன்ற சிலரும் சென்னையில் வசிக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது அப்பாஜி! :-)

    ReplyDelete
  11. // தண்ணீர் வண்டி யாரையும் முந்தவும் இல்லை // காந்திகள் பிறப்பதில்லை உருவாக்கப் படுகிறார்கள்

    ReplyDelete
  12. @சீனு
    எதையும் சகித்துக்கொள்ளமுடியாத மக்களிடையே இதுபோல உருவாக்கப்படும் காந்திகளிடம் ரவையேனும் அஹிம்சையுள்ளம் இருந்தால்தானே உருவாகமுடியும். :-)

    ReplyDelete
  13. ஒரு சப்பை மேட்டரையும்... நயமா கருத்தோட சொல்லற திறமை உங்களுக்கு இருக்கு...

    Examples are very imaginative.. innovative(thinking)

    ReplyDelete
  14. இப்படி எல்லார்கிட்டயும் காந்தியப் பாக்கவும் எல்லாராலும் முடியாது ஆர்விஎஸ் !

    நீங்களும் காந்தியாகிகிட்டு வர்ரீங்க..இதைச் சொல்ற எங்கிட்டயும் ஒரு காந்தி இருக்காறாக்கும்...

    (அன்பே சிவம் எஃபக்டுக்குப் போயிட்டிருக்கோ?)

    ஆனாலும் சேப்பாயியை ரொம்பப் பொஸஸிவ்வாத்தான் வெச்சுருக்கீங்க...(அய்யோ, க.காரன் நினைவுல வருதே,ஆர்விஎஸ் அடிக்கப் போறாரே..)

    ()

    வன்புணர்வைத் தவிர்க்க முடியலைன்னா அனுபவிக்கனுமாமே...


    அப்புறம் என்ன கருமாந்திரத்துக்கு அல்லாரும் கேஸ் போடறாங்கன்னு தெரியல..எல்லாரும் 'அனுபவிச்சுட்டு'ப் போகலாம்..

    அந்த பொன்மொழித் திலகத்துக்கு கடற்கரையில் சிலை வெக்கணும் !

    ReplyDelete
  15. Arivan, I think the phrase i mentioned is said in a lighter sense by some 'Ponmozhi thilagam'. You don't need to take it in literal meaning. If you are caught in a traffic chaos and cannot do anything, just enjoying small things around you will make your mind 'All is well'. Correctaa Vantanaa?!! :)- Rob Anderson

    ReplyDelete
  16. @Madhavan Srinivasagopalan
    இது வாழ்த்தா வசவான்னு தெரியலை. இருந்தாலும் கடைசி வரியில காம்பன்சேட் பண்ணிட்டீங்க ப்ரதர். :-)

    ReplyDelete
  17. @அறிவன்
    ஒவ்வொருத்தருக்குள்ளுமொரு காந்தி்யார் இருக்கார்னு சொன்னீங்க பாருங்க.. அது டாப்பு.

    அன்பே சிவம் டாப்போ டாப்பு...

    Gandhi-Nehru correspondence - A selection - Edited by Arjun Dev படிச்சுக்கிட்டிருக்கேன். அதோட பாதிப்பா இல்லை பிரதிபலிப்பான்னு தெரியலை. கடித இலக்கியத்தில் இவங்க ரெண்டுபேரும் டாப்புன்னு நினைக்கிறேன்.

    கருத்துக்கு நன்றிங்க அறிவன்.

    ரேப்பை அனுபவிக்கமுடியுமான்னு கேட்ருக்கீங்க.... கஷ்டம்தான்.. நம்ம சக்திக்கு மீறி நடக்கிற செயல்களுக்கு இந்த வசனத்தை உபயோகிக்கிறார்கள். ஆண்டவன் செயல்ன்ணும் சொல்லலாம். ஆனா அது ரேப் இல்லை! :-)

    ReplyDelete
  18. @Rob Anderson

    Exactly! If there is no chance of getting rid of the situation, just enjoy that. :-)

    ReplyDelete
  19. மோட்டார் காந்தியை உண்மையிலேயே பாராட்ட வேண்டும்...

    ReplyDelete
  20. // பொதுவாகவே போரூர் சிக்னல் அருகே இராவேளையிலும் உழைத்துக் களைத்துத் திரும்பும் ஆஃபீஸ் அடிமைகள் கூட்டம் ஒருவர் மீது ஒருவர் சாய அலைமோதும். இன்று “போவோமா ஊர்கோலம்” கேட்டுக்கொண்டே ஹாயாக அதைக் கடந்து வந்தாயிற்று. உள்ளத்தில் உவகை பொங்கும் நேரத்தில் யார் வைத்தக் கண்ணோ தெரியவில்லை ஒரு அரைக் கிலோ மீட்டர் தூரத்தில் பீச் படகு மறைவுக்கு பின்னால் கொஞ்சிக் குலாவும் இளஞ் ஜோடிகள் போல ஈஷிக்கொண்டு நிற்கும்படியானது.//

    Ithu mattum Puriyavillai. Consider writing in a more simplistic way.

    Other than that, nice reading. Thankx.

    ReplyDelete
  21. //லேசாக விரல்நுனியில் ஏறியிறங்கியது.//
    You said "இடது காலில் லேசாக ஏற்றி இறக்கிவிட்டார்."

    1) That he was NOT injured was NOT clear from what you have written.

    2) //“அண்ணே! எல்லோரும் தான் வீட்டுக்குப் போகணும். என் காலை முறிச்சிப்புட்டு நீங்க மட்டும் வீட்டுக்கு போகணும்னு நினைக்கிறீங்களே! இது நியாயமா?”//

    If you are able to "hear" him say this, you must have stood close to the two wheeler, ie. to your right.
    The Tata ace should have stood further to the right.

    How is it possible to "see" this incident from inside the car?
    Normally you dont look below, standing in a signal.

    Is this a fiction?
    Did you really "see" the incident or hear him say the words?

    Point is that you should make the reader imagine these things without questions and expect such questions if writing is not clear.

    Please dont think I am only criticizing. Just wanted to point out. Thankx.

    ReplyDelete
  22. @திண்டுக்கல் தனபாலன்
    ஆமாம். பாராட்டத்தான் வேண்டும். :-)

    ReplyDelete
  23. @தக்குடு
    ரசித்ததற்கு நன்றி தக்குடு. :-)

    ReplyDelete
  24. அன்புள்ள அனானி,

    இவ்வளவு தூரம் பிரித்து மேய்கிற அளவிற்கு இந்தப் பதிவு உங்கள் சிந்தனையைத் தூண்டியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே!

    ரெஃபர் முதல் பாரா: ரோடிற்கு பீச் வந்ததெப்படி என்று நீங்கள் சந்தேகப்படலாம். இன்னமும் எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக எழுத முயற்சிக்கிறேன். விமர்சனத்திற்கு நன்றி.

    ”see" க்கு எனது விளக்கம்: டாட்டா ஏஸ் என்பது லாரி போன்று நீண்ட வாகனமல்ல. மொத்த ட்ராஃபிக்கும் இன்ச் பை இன்சாக ஊர்ந்துகொண்டிருந்தது. சேஃபாக என் சேப்பாயியுடன் போதிய இடைவெளியில் பின்னால் வந்தாலும் ஒரு சில லெஃப்ட் ரைட் இன்ச்சுகளில் அந்த மோட்டார் பையனின் பின்னால் வரும்படியாயிற்று. அப்போது தான் அந்தவண்டி காலில் ஏறப்போகிறது என்று பதைத்துக்கொண்டிருக்கும் போது அது நடந்தது. ஒருவர் காலில் வண்டியேறினால் சும்மா போவார்களா? வண்டியை நிறுத்தி அவர் ஹெல்மெட்டை கழற்றும் போது அந்த மோட்டார் காரருக்கு வலது புறத்தில் இன்ச்சிங் செய்து வந்து ஒரு கட்டத்தில் டாடா ஏஸ், அந்த மோட்டார் காரர் நான் மூவரும் ஒரே நேர்க்கோட்டிலிருந்தோம். ட்ராஃபிக் இரைச்சலில் அந்த ஏஸ் காரருக்கு கேட்கவேண்டும் என்று மோட்டார்காரர் இரைந்துதான் பேசினார். எனக்கு காதில் விழுந்தது. பார்த்தேன். கேட்டேன். இந்தப் பாராவையும் எழுதியிருந்தால் இந்தக் கேள்விகள் வந்திருக்காதோ?

    சிறுகதைகள் என்று ஒரு செக்ஷன் இந்த வலைப்பூவில் வைத்திருக்கிறேன். அது முழுவதும் ஃபிக்ஷன் தான்.

    இவ்வளவு கூர்ந்து படித்து கருத்திட்டமைக்கு நன்றி அனானி. உங்களது பெயர் தெரிந்தால் சந்தோஷப்படுவேன். நன்றி! :-)

    ReplyDelete
  25. // அஹிம்சையுள்ளம் இருந்தால்தானே உருவாகமுடியும்.// ஹா ஹா ஹா மிகச் சரி சார் :-)

    ReplyDelete