Tuesday, April 27, 2010

நீ ஏன் இறந்து போனாய்?

தனது தாயிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய ஜோவிற்கு ஒரே ஆச்சர்யம். பக்கத்தில் இருக்கும் மற்றொரு கல்லறை அருகில் அமர்ந்து ஒருவன் நீண்ட நேரமாக, "நீ ஏன் இறந்து போனாய்?" என்று நொடிக்கொருதரம் கேட்டுக்கொண்டு இருந்தான்.  இவ்வளவு அன்புபும் பாசமும் கொண்டு இருப்பவனுக்கு இப்படி ஒரு சோகம் நிகழ்ந்து விட்டதே என்று பாவப்பட்டு, தன்னிடம் இந்த துக்க செய்தியை அவன் பகிர்ந்து கொண்டால் அவனுடைய சோகம் கொஞ்சம் குறையும் என்று எண்ணி, ஜோ அவனிடம்  "ஏம்பா இவ்வளவு சோகமா ரொம்ப வருத்தப்பட்டு அழுது கொண்டிருக்கிறாயே , இறந்து போனது யார்?" என்று கேட்டான்.

அதற்க்கு அழுதவன் அளித்த பதில்
"இல்லை, இது என் மனைவியின் முதல் புருஷனின் கல்லறை"

1 comment: