நான் ஒன்றும் சுப்புடு இல்லை. பேரில் கொஞ்சம் சுப்ரமணியன் என்று வருகிறது அவ்வளவுதான். ஆனால் எங்காவது சங்கீதம் கேட்டால் கொஞ்சம் காது தீட்டி கூர்ந்து கேட்பவன். மிகப் புது வரவான, மணியின் "ராவணன்" பாடல்கள் கேட்டேன். சிவனுக்கு பிடித்த ராகம் என்று சம்பூர்ண ராமாயணம் ராவணன் சொன்னது "காம்போதி". எல்லோருக்கும் பிடித்த ராகத்தையும் பாடல்களையும் வழங்கியிருப்பது மணி+ரஹ்மான்+வைரமுத்து கூட்டணி. ஒவ்வொரு பாடலும் ஒரு ரகம். ஆஸ்காருக்கு பிறகு ரஹ்மான் உச்சத்தில் இருப்பதாக படுகிறது எனக்கு. வி.தா.வருவாயாவின் "ஹோ சோனா..." ராப்பிலிருந்து இன்னும் மீளாத மனதிற்கு அடுத்த போதை ராவணன் ரூபத்தில். படத் தலைப்பு ராவணன், ஆம், இசை உலகின் இசை ராட்சஷன் ரஹ்மான். எனக்கு பிடித்த சில வைர(முத்து) வரிகள், பாடல்கள் "சோனி மியூசிக்கில்" ஒரிஜினல் வாங்கி கேளுங்கள்.
1. உசுரே போகுதே : கார்த்திக்இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ளே தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மரக்காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து
புடிக்குதடி...
கருந்தேக்கு மரக்காடு
வெடிக்குதடி.
2. கெடாக்கறி : பென்னி தயாள், ரெஹைனா
இவ கண்ணால பார்த்த சானகி அம்சம்
கட்டில்மேல பார்த்தா சூர்பனக வம்சம்
3. கள்வரே : ஸ்ரேயா கோஷல்
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே...
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா...
4. காட்டு சிறுக்கி: ஷங்கர் மகாதேவன், அனுராத ஸ்ரீராம்
காட்டு சிறுக்கி
காட்டு சிறுக்கி
யார் காட்டு சிறுக்கி இவ...
ஏர் கிழிச்ச தடத்து வழி
நீர் கிழிச்சு
போவது போல்
நீ கிழிச்ச கொட்டு வழி
நீளுதடி எம் பொழப்பு
வீரா, கோடு போட்டா என்று இன்னும் இரண்டு பாடல்கள் உண்டு. சிறுவர்களை நிச்சயம் கவரும் "வீரா" என்ற பாடல், கோடு போட்டா ஒரு சண்டைப் பாடல் போல உள்ளது.
ரசித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள்...
usure poguthe pottu superrrrrrrrrrrrrrr
ReplyDeletesuper
ReplyDelete