Wednesday, August 4, 2010

வானவேடிக்கை

fireworksதீபாவளிக்கு ஒரு மாதம் முன்னரே முக்குக் கடை கற்பகம் ஸ்டோர்சில் ஒரு ரூபாய்க்கு ஒத்தை வெடி வாங்கி வெடிப்போம். ஒன்று ஒன்றாக, ரோட்டில், விட்டு படிக்கட்டில், வாசலோரத்தில் இருக்கும் மின்கம்ப ஓட்டையில், ஒதியமரப் பொந்துகளில், கொட்டாங்குச்சியின் கண்ணில் துளை போட்டு அதில் என்று சகல இடத்திலும் வைத்து வெடிப்பது வழக்கம். சிறு பிராயத்தில் சரம் போன்ற வெடிகளில் அவ்வளவு நாட்டம் இல்லை. ஒன்று விலை அதிகம், மற்றொன்று ஒரே நேரத்தில் அனைத்து வெடிகளும் வெடித்து தீர்ந்து விடும். அப்புறம் யார் வெடிப்பதையாவது பார்த்துக் கொண்டு அக்கடா என்று உட்கார்ந்திருக்க வேண்டும்.

அப்புறம் கொஞ்சம் வயது ஏறஏற ஒத்தை வெடியிலிருந்து ரெட்போர்ட் செங்கோட்டா சரம், 1000 மற்றும் 2000  வாலாக்கள் என்று ஒரே வெடிச்சர மழையில் நனைந்தோம். யார் விட்டு வாசலில் வெடித்த வெடிகளின் குப்பை நிறைய இருக்கிறதோ அவரே அந்த ஏரியாவின் பெருமைக்குரியவர். சாலையில் வலதும் இடதும் செல்லும் பேருந்துகள் மற்றும் லாரிகள் வெடிக்குப்பைகளை வீடு மாற்றி வீடு புரட்டி போடும். நாம் வெடித்த குப்பை அடுத்தவன் வீட்டிற்கு போகும்போது மனசு விட்டுப்போய்விடும். வீட்டு வாசலில் நிறைய குப்பை சேர வேண்டும் என்பதற்காக நண்பர்கள் சிலர் உலக்கை வெடி என்று ஒன்று வாங்கி வந்து வெடிப்பர். ஒரு வெடியில் ஒரு வண்டி குப்பை வரும். அதிலும் சில துரதிர்ஷ்டசாலிகள் வெடிப்பது "புஸ்" ஆகி அப்படியே செக்கொலக்கை மாதிரி அப்படி நடுரோட்டில் நிற்கும். எங்கயாவது வெடித்து குப்பை நிறைய வந்துவிடப் போகிறதே என்று வெடியை புட்பால் ஆடி தள்ளி விடுவர். 

ராஜகோபால சுவாமி கோயில் திருவிழாக்களில் வெட்டுங்குதிரை வாகனம் அன்று வானவேடிக்கை உண்டு. வெட்டுங்குதிரை மண்டகப்படிதாரர்கள் வஞ்சனம் இல்லாமல் வான் பட்டாசுகள் வாங்கித் தந்து ஒரு ஐந்து பேரை பிடித்து நிறுத்து, ஒவ்வொன்றாக மேலே வீசி எறிந்து வேடிக்கை காண்பிப்பார்கள். குளக்கரையில் நின்று அவர்கள் மேலெறிந்து வீசுவதும், அக்கரையில் நின்று நாம் வேடிக்கை பார்ப்பதும் ஒரு சுகானுபவம். கடையில் பாராசூட் என்று ஒன்று விடுவார்கள். அது மிக உயரத்தில் சென்று ஒரு குடை போல கலராக விரிந்து, ஆடி ஆடி கொஞ்சம் கொஞ்சமாக அணையும்.

மேற்கண்ட பாராக்களில் சொன்னது நம்மோட தீபாவளி ராமாயணம். இங்கே 15000 வெடிகளை ஒன்றாக பிடித்து கட்டி, ஒரு பீச்சோரத்தில் வண்டி கட்டி நிறுத்தி பற்ற வைக்கிறார்கள். பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. இரண்டு நிமிடத்தில் அவ்வளவு காசையும் கரியாக்கிவிட்டார்கள்.




பட உதவி: epicfireworks.com

6 comments:

  1. 'ஆடியே' முடியலை ( http://madhavan73.blogspot.com/2010/08/18.html ).. அதுக்குள்ளே தீபாவளிப் பட்டாசா ? அட்லீஸ்ட் 'ஆனி' மாசத்துல இந்த பதிவ போட்டிருந்தீங்கன்னா.. தொப்பத் திருவிழா எபெக்டுன்னு நெனச்சிருப்பேன்..

    ReplyDelete
  2. தீபாவளிக்கு இதைவிட ஸ்பெஷல் ஏதாவது போடுவோம். ஒ.கே வா மாதவா. உங்களோட "ஆடி ஆடி " பெருக்குவது நன்றாக உள்ளது. இதே போல் அடித்துப் பெருக்குவது இருக்கிறதா?

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  3. வீடியோவைபார்த்த பின் ரூம் முழுக்க வடிமருந்து நாத்தம் ! :)
    Visit my Blog http://ponmaalaipozhuthu.blogspot.com/

    ReplyDelete
  4. appadiya kakku.. ha ha ha...

    anbudan RVS

    ReplyDelete
  5. DINAMNI moolamaaga intha blog patri arinthen.. romba arumaiyaaga ullathu..

    ungal intha pani thodara en vaalthukkal...

    anbudan,
    R.ManiSekaran
    Avathuvadi (po)
    Nagarasampatti (Via)
    Krishnagiri (Dt)-635204

    ReplyDelete
  6. Nandri Manisekaran.

    anbudan RVS

    ReplyDelete