Saturday, August 7, 2010

சனிக்கிழமை சங்கதி - சைனா பஜார்

chinaஎதை எடுத்தாலும் பத்து ரூபாய் பதினைந்து ருபாய் என்று மூலைக்கு ஒன்றாய் திறந்திருக்கும் சைனா பஜார் நம் எல்லோருக்கும் தெரிந்த அடிமாட்டு விலை நியாயக் கடை. ஸ்க்ரூ டிரைவர் செட், பென் டார்ச் பாட்டரி, உருண்டு ஆட்டம் போடும் குரங்கு பொம்மை, ப்ளாஸ்டிக் பவுல், சோப்பு டப்பா, செருப்பு, துடைப்பக்கட்டை, மொபைல் என்று சகல விதமான ஐட்டங்களும் கிடைக்கும், சைனா அம்மா சைனா அப்பா தவிர. சீனர்கள் உழைப்பு அசாத்தியமானது. கூலி குறைவாக மற்றும் மலிவாக கிடைப்பதால் ஏகத்திற்கும் உற்பத்தியை பெருக்கி பல நாடு நகரங்களுக்கு ஏற்றி விட்டு விட்டார்கள். ஆனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஐட்டங்கள் தரத்தில் மிகவும் தாழ்ந்து வீணாய்ப்போன பிளாஸ்டிக், ஆஸ்பத்திரி கழிவுகள் போன்றவற்றிலிருந்து தயாரித்தவை என்ற உண்மை ஒரு சோகமான விஷயமே. 


சைனாவில் கைவினைப்பொருள் உற்பத்தி பெருக்கமாகட்டும் பிள்ளை குட்டி பெற்றுத் தள்ளுவதாக இருக்கட்டும் ஒன்றும் பெரிய வித்தியாசம் கிடையாது. மக்கள்தொகை பட்டியலில் மிகவும் ஸ்ட்ராங்காக நம்பர் ஒன் இடத்தை பிடித்து வைத்திருப்பவர்கள் அவர்கள். நாம் இரண்டாவது ரேங்க். இதிலும் முதலிடம் இல்லை. நம் நாடு போலவே  அங்கும் தெருக்களில், சந்துகளில், பஜாரில், திரையரங்குகளில், உணவு விடுதிகளில், பஸ்களில், ரயில்களில் என்று வீதியெங்கும் மக்கள் வழிகிறார்கள். எந்த இடத்திற்கு கிளம்பினாலும் எப்போது  போய் சேருவோமோ என்று சைனா மதுரைவீரன் குல சாமிக்கு நேர்ந்துகொண்டுதான் பயணிக்கிறார்கள். நம்மூர் நிலைமையும் கிட்டத்தட்ட அப்படித்தான். விஜய்யுடன் விவேக் இரண்டு சக்கர வாகனத்தில் இண்டர்வியூ செல்லும் காமடி காட்சியில்,   டேக் டைவர்ஷன் சொல்லி சொல்லி திருப்பதிக்கு திருப்பி விட்டு சுற்றி விட்டு "ஏழு கொண்டல வாடா..." சொல்ல வைப்புது போல, இன்றிருந்தார் நாளை இல்லை என்ற பெருமை படைத்து உலகு  என்று சொல்வார்கள், அதுபோல் இன்றிருந்த வழி நாளை இருக்குமா என்று தெரியாத பெருமை படைத்தது சென்னை.

"என்னா ரோடு சார்.. எல்லோரும் ரோட்டிலேயே நிக்கறான்.. ரெண்டு ஓரத்திலே வெட்டி போட்டுட்டான்.. எங்கே போறது... எதுக்கு சார் நாம டாக்ஸ் கட்டறோம்.. இந்த நாட்டுலே ஒரு அடிப்படை வசதி கூட இல்லாத சுடுகாடா போச்சு சார்.. யாராவது இதுக்கு ஒரு தீர்வு காண மாட்டாங்களா.. எல்லோரும் காசை அடிக்கரானுங்க.. மக்களுக்கு ஏதாவது செய்யனும்னு ஒரு எண்ணமே இல்லாம போய்டிச்சு..." இப்படி பலவாறு புலம்பி தீர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அந்த நாட்டு ஒரு ஜி.டி.நாயுடு மாடி பஸ் விட்டு  கீழ் போர்ஷனை காலியாக விட்டு சின்ன வண்டிகளை எல்லாம் கீழே போகுமாறு ஒரு மாதிரியை வடிவமைத்திருக்கிறார்.

கீழ்காணும் வீடியோவில் ஒருவர் சைனீஸ் மொழியில் படங்காட்டி விளக்குகிறார்.  அவர் யார் என்ன ஊர், குலம், கோத்திரம், மொழி புரியாவிட்டாலும், படம் புரிகிறது. கீழ் போர்ஷன் காலியாக வடிவமைக்கப்பட்ட மாதிரி மாடி பஸ்கள். சூப்பர்.




மேற்காணும் வீடியோவின் நேரடி இணைப்பு:  http://www.umiwi.com/video/detail1541

நடு ரோட்டல நிக்கறான் பாரு அப்படின்னு மாநகர பஸ்களை திட்டிய காலம் போய், நடு ரோட்டிலியே பஸ் நிறுத்தம் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.  Its my Grandpa's Road, Its my Dad's Road என்று சகட்டு மேனிக்கு நம்பர் பிளேட் கிழே இருக்கும் மட்கார்டில் எழுதி வீதிகளில் வலம் வரும் ரோமியோக்கள் இந்த பஸ் அடியில் சென்று முட்டி தரையில் இடிக்க கட் அடித்து ஓட்ட முடியுமா?  அது சரி, ஆட்டோ கூட இந்த மாதிரி ஜெயன்ட் சைஸ்ல வருமா? வந்தால் சென்னை வாழ் மகாஜனங்களுக்கு விடிமோட்சம் கிட்டும்.

பட உதவி: blog.analogmedium.com

5 comments:

  1. Kakku.. Please try in Mozilla FireFox.. It is opening here..

    anbudan RVS

    ReplyDelete
  2. வீடியோ Mozilla FireFox.க்கும் திறக்கவில்லை.

    மற்றபடி பதிவு வர்ணனைகள் ஆர்வத்தை வரவைத்தது.வாழ்த்துக்கள். வீடியோ லிங்க்கை இணைத்தால் ,அதன் தளத்திலெயே போய் காணலாம்:)

    ReplyDelete
  3. வீடியோவின் நேரடி இணைப்பு: http://www.umiwi.com/video/detail1541

    kakku, rasigan kandu rasiyungal.

    anbudan RVS

    ReplyDelete
  4. >>>சைனாவில் கைவினைப்பொருள் உற்பத்தி பெருக்கமாகட்டும் பிள்ளை குட்டி பெற்றுத் தள்ளுவதாக இருக்கட்டும் ஒன்றும் பெரிய வித்தியாசம் கிடையாது

    அந்தக்காலம் போன நூற்றாண்டு வாக்கிலேயே முடிந்துவிட்டது - பிள்ளைக்குட்டி பெருக்கத்தைச் சொல்கிறேன். இப்போது ஒரு குழந்தைக்கு மேல் அனுமதி கிடையாது. முதல் குழந்தையே அனுமதியோடு தான் என்றால் பாருங்கள்! ஒரே குழந்தை இறந்தாலும் இன்னொரு குழந்தை பெற அனுமதி வாங்க வேண்டும்.

    ஒரு வகையில் இது இந்தியாவுக்குச் சாதகமாகலாம் - சைனாவைப் போல் உழைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால். இந்தியாவின் 'working population age' தான் உலகத்திலேயே குறைந்தது. இந்தியாவின் மக்கள்தொகையில் இருபது வயதுக்குட்பட்டோர் கிட்டத்தட்ட 40% சதவிகிதமாம். அடுத்த இருபது முப்பது ஆண்டுகளின் productive workforce இவர்கள் தான் - உலகத்திலேயே நம்பர் ஒன். சைனாவின் productive workforce இந்தியாவை விடக் கம்மியாகும் சாத்தியம்'ஒரு பிள்ளை' கொள்கையினால் ஏற்படும்.

    productive workforce வெண்ணையை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் இந்தியத் தலைவர்கள்? சுவாரசியமான கேள்வி. இலவசமாக ஆட்டுக்குட்டி தருகிறாராமே ஜெயலலிதா? இன்னொருவர் வேர்கடலை கொடுத்தால் அத்தனை பேரும் காந்தியாகலாம்.

    அது சரி, இந்த மாதிரி சைனா பஜார் ஒன்று கூட கண்ணில் படவில்லையே? அடுத்த முறை சென்னை வரும்பொழுது இது போன்ற கடைக்கு அழைத்துப் போங்கள். விஷயம் இருக்கிறது - ரகசியமாகச் சொல்கிறேன்.

    ReplyDelete