Tuesday, October 26, 2010

மன்னார்குடி டேஸ் - சை.சிகா - எக்ஸ்ட்ரா பிட்

wheelingஇந்த அண்ட சராசரத்திலேயே சைக்கிளுக்கு டிரைவர் வைத்த ஒரு ஒரே மாதிரிக் குடும்பம் எங்களதுதான். ஐந்தாம் வகுப்பிலிருந்து தேறிய என்னை மேல்படிப்புக்கு தேசிய மேல் நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு இங்கிலீஷ் மீடியம் சேர்த்து விட்டார்கள். இப்போது போல் பிள்ளைகளை வீடுவீடாக கலெக்ட் பண்ண ஸ்கூல் பஸ் கிடையாது. ஆகையால் நன்றாக சைக்கிள் ஓட்டத் தெரிந்த ஒரு அன்பரை எனக்கு பைலெட்டாக ஏற்பாடு செய்தார்கள். இடையில் ஒரு அழுக்கு வேஷ்டி. கடைசி ரெண்டு பட்டன் மட்டும் கடனுக்கு என்று போட்ட கட்டம் போட்ட சட்டை. நாற்பதிலிருந்து நார்ப்பத்தைந்து தாண்டாத இளங்கிழவர். தலையின் முன் பாகத்தில் கால் கிரவுண்டு சொத்து சேர்த்து வைத்திருந்தார். வாய் மட்டும் ஒன்னும் இல்லாமலேயே மாவு மிஷின் போல அரைத்து கொண்டிருக்கும். சில சமயம் நமக்கு அர்ச்சனை நடக்கிறதோ என்று கூட தோன்றும். இந்த லட்சனங்களுக்கு சொந்தக்காரர் கோவிந்து. எனக்கு சைக்கிளோட்டி.  போய் வர ஸ்கூல் தூரம் ஜாஸ்தி என்பதால் இந்த வாகன ஏற்பாடு. தினமும் ஒரு வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு வருவார். காலையில் ஸ்கூல் வாசலில் இறக்கிவிட்டு விட்டு மாயமாய் மறைந்து விடுவார். மாலை பள்ளி விட்ட உடன் திருவிழா கூட்டத்தில் தவறிய குழந்தை போல பேபே என்று பேய் முழி முழித்துக்கொண்டு தேடினால் பள்ளிக்கு வெளியே ஒரு மூலையில் சைக்கிளை சுவற்றுக்கு முட்டுக்கொடுத்து சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருப்பார். "எங்க மாமா போய்ட்டீங்க?" என்றால் "எவ்வளவு நாளி உன்ன தேடறது?" என்று வாய் அரவைக்கு கண நேரம் ஒய்வு கொடுத்து முகத்தை சுளுக்கி கேள்வி கேட்பார். அப்படியே பயந்து டிராயர் நனைவதற்குள் ஏறி உட்கார்ந்து விடவேண்டும்.

அவர் ஒரு வாடகை சைக்கிள் எடுத்து வரும் வாடகை டிரைவர் ஆகையால் பல குறுக்கு வழிகளில் வீட்டிற்கு அழைத்து வருவார். நேரே பந்தலடி வந்து உடுப்பி கிருஷ்ண பவன் தாண்டி பால் சொசைட்டி சந்து வந்து திரும்பி மீன் மார்க்கட் வாசனையுடன் தாமரைக்குளம் வடகரை அடைந்து உப்புக்கார தெரு மாரியம்மன் கோயில் வழியாக சின்ன கான்வென்ட் தாண்டி வீட்டில் வந்து இறக்குவார். நடுவில் நோ பேச் மூச். கப் சிப். சில சமயம் பெல் அடிக்காத சைக்கிள் என்றால் மாட்டு வண்டி போல வாயாலே விரட்டிக்கொண்டு வருவார். தெருவில் பலபேரது வித்தியாசமான பார்வை எங்கள் மேல் விழும். ஆனால் மனிதர் எதையும் பொருட்படுத்த மாட்டார். கருமமே கண்ணாயினார்.

ஒரு நாள் மாலை கேரியர் வைத்த சைக்கிள் வாடகைக்கு கிடைக்காமல் முன்னால் பாரில் உட்காரவைத்துக்கொண்டு புறப்பட்டார். புறப்படும் போதே புத்தக மூட்டை ரெண்டு மூன்று முறை அவர் காலில் தட்டிற்று. "ச்... ச்..." என்று சொல்லிக்கொண்டே ஓட்டிக்கொண்டு வந்தார். வீட்டுக்குளிருந்து யாராவது கேட்டால் நடு சாலையில் சத்தமாக கிஸ் அடிக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வார்கள். பால் சொசைட்டி சந்திலிருந்து மீன் மார்க்கெட் வருவது ஒரு நாலடி அகல சந்துதான். மிகக் குறுகிய ஒன்று. எதிரே ஷகீலா நடந்து வந்தால் சைக்கிளை பின்னால் எடுத்து அவர் போனபின்பு தான் நாம் போக முடியும். அதற்குள்ளே ஒரு வளைவு வேறு. எல்லோர் வீட்டிலிருந்தும் கழுவியது குளித்தது என்று சகல தீர்த்தங்களும் ஒன்றாக சேர்ந்து ஒரு சிற்றாறு போல சாக்கடை ஒன்று அரையடிக்கு ஓடிக்கொண்டிருக்கும். நீங்கள் கணக்கில் கெட்டி என்றால் இப்போது மீதமிருப்பது மூனரை அடி என்று நான் இங்கே சொல்ல வேண்டியதில்லை. அப்போது தான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. எங்களைப்போல் குறுக்கு வழி தெரிந்த இரண்டு பேண்ட் போட்ட பெரிய கிளாஸ் அண்ணாக்கள் நம்ம பைலட்டை ஒரு கட் கொடுத்து முந்தி சென்றார்கள். ஏற்கனவே புத்தக மூட்டை வேறு இடித்ததால் அவ்வப்போது ஆட்டி ஓட்டியவர் பிட்ஸ் வந்தவர் ஹாண்டில் பார் பிடித்த கணக்காக ஆட்டி ஆட்டி மிகச் சரியாக நேரே கொண்டு போய் அந்த புண்ணிய தீர்த்தத்தில் என்னை "தொப்" என்று இறக்கினார். அதென்னவோ என்ன மாயமோ தெரியலை ஒட்றவங்களுக்கு எதுவுமே ஆகறதில்லை. பொறுமையாய் என்னை மீட்டெடுத்து ஒரு அதீத வாசனையுடன் என்னை வீடு வந்து சேர்த்தார்.  "ஏண்டா தம்பி ஸ்கூல்ல ஒழுங்கா படிக்கலைன்னு பனிஷ்மென்ட்டோ" என்று வழக்கம் போல் எகத்தாளத்துடன் முன் பல் தெரிய சிரித்தாள் என் பாட்டி.

வெளிச் சேர்க்கை: சைக்கிளை நேரே ஓட்டுவதர்க்கே ததிகினத்தோம் போடும் நிறைய மகானுபாவர்கள் நிறைந்த இன் நன்னாட்டில், நம்மூர் திருவிழாவில் விடியவிடிய சைக்கிள் ஒட்டும் வீரர்கள் செய்யும் சாகசங்கள் போல கீழே ஆட்டம் போடும் இந்த வெள்ளைக்காரனை பாருங்கள்.  அதுவும் ஒரு சைக்கிளில் இருந்து இன்னொரு சைக்கிளுக்கு தாண்டி அதை ஓட்டிச் செல்வான் பாருங்கள். காண கண் கோடி வேண்டும்.



அது சரி. இந்த வீடியோவை நம்ம கோவிந்து பார்த்திருந்தால் என்ன நினைத்திருப்பார்? யோசியுங்கள்! நானும் திங்க் பண்றேன். அடுத்த பதிவில் சந்திப்போம்.

பட உதவி: மேலிருக்கும் சைக்கிள் வீலிங் படத்தில் இருப்பது நான் என்று இந்நேரேம் நீங்கள் எடுத்துக் கொண்டிருந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. அந்தப் படம் cycling.bikezone.com என்ற இடத்தில் இருந்து சந்தோஷமாக எடுத்தது.

-

43 comments:

  1. எக்ஸ்ட்ரா பிட்.. காமெடி பிட் :)

    ReplyDelete
  2. உங்கள தள்ளிவிட்ட கோவத்த, ட்ரைவர வர்ணிச்ச விதத்துலயே காமிச்சிட்டீங்க.

    ReplyDelete
  3. மற்றுமொரு முத்தான சைக்கிள் பதிவு. எனது சைக்கிள் அனுபவங்களை எழுதத் தூண்டும் விதமாய் இருந்தது. பார்க்கிறேன், ஆணி குறைந்த உடன் எழுத முடியுமா என!

    ReplyDelete
  4. கோவிந்தோ, கோவிந்து..

    ReplyDelete
  5. எனக்கும் 6 - வது படிக்கும்போது சைக்கிளுக்கு டிரைவர் வைத்தார் எனது தாத்தா. என்னுடைய பள்ளியின் தூரம் 6 கிமீ அதுவும் கல் ரோடு.

    ReplyDelete
  6. அம்பி, சைக்கில் புராணம் போதும். எப்போது "வடை" புராணம்?
    மன்னார்குடி ஸ்பெஷல் - ரெசிப்பி என ஒண்ணுமே கிடையாதா?

    நீர் ஆத்துக்கு தெரியாம மீன் தின்ற கதையையும் போட்டாகனும்.
    தேரியுமோன்னோ?!

    ஆடு மாட்டிகிச்சி ................

    ReplyDelete
  7. நன்றி பாலாஜி தம்பி... நாளையில் இருந்து வேற...

    ReplyDelete
  8. @புவனேஸ்வரி ராமநாதன்
    அப்படின்னு இல்லை.. எக்ஸாக்ட்லி.. ;-)

    ReplyDelete
  9. @வெங்கட் நாகராஜ்
    நன்றி ;-)

    ReplyDelete
  10. @மாதவன்
    கோவிந்தா சைக்கிள் சங்கீர்த்தனம்.

    ReplyDelete
  11. @நாகராஜசோழன் MA
    தாத்தாவுக்கு ஒரு ஜே. ;-)

    ReplyDelete
  12. கக்கு... கொஞ்சம் பொறுமையா இருங்கோ... வடை பாயாசம் எல்லாம் கிடைக்கும். ;-) ;-)

    ReplyDelete
  13. சைக்கிளுக்கு டிரைவர் வச்ச அண்ணாச்சி.. கோவிந்துக்கு கோவிந்தா...

    ReplyDelete
  14. dear rvs

    nijama sollungo

    inda meen samacharam ellam unmaiya

    balu vellore

    ReplyDelete
  15. செந்தில்... ;-) ;-) கோவிந்தா கோவிந்தா...

    ReplyDelete
  16. @balutanjore
    என்ன எல்லாரும் மீன் மீன்றா.. .;-) ;-) நான் சுத்தமான அக்மார்க் சைவம் ஓய்!

    ReplyDelete
  17. எனக்கு தெரிந்து சைக்கிளுக்கு பைலெட் வைத்த ஒரு ஒரே Blogger நீங்க தான் .................................

    hello sir enga
    unga
    இணைந்த கரைகள்(the cricket champions)

    ReplyDelete
  18. @padma hari nandan
    amaam. ;-) ;-)

    ReplyDelete
  19. //சைக்கிளுக்கு டிரைவர் வச்ச அண்ணாச்சி..//

    நம்ம கல்லூரி முதல்வர் tvs -50க்கு டிரைவர் வெச்ச கதைதான்.

    ReplyDelete
  20. @மாதவன்
    ஆமாம். அதேதான். ;-)

    ReplyDelete
  21. சைக்கிளுக்கு பைலட், கேப்டன் எல்லாம் போட்டு கெளரவித்திருக்கிறீர்கள்...

    யு மீன் ....மீன் அசைவமா..கல்கத்தாவில் கடல் புஷ்பம்ன்னு சைவமா சொல்லறாங்களே ..கல்கத்தாவில் இருந்த மோகன்ஜி யைத்தான் கேட்டு பார்க்கணும்..

    சைக்கிள் வித்தைகள் அபாரம்... இம்மாதிரி சைக்கிள்களை அக்காலத்தில் சர்க்கஸில் மட்டும் பார்த்திருப்போம்.கண்ணில் பட்டிருந்தால் கோவிந்து இதை விட கலக்கியிருப்பார்.

    ReplyDelete
  22. அந்த சைக்கிள் கால நினைவுகள் இப்போது நினைத்தாலும் மனதில் கிளிங் கிளிங் என்று மணி அடிக்கிறது பத்துஜி ;-) ;-)

    மோகன்ஜி இன்னும் இன்னிக்கி வரலை. பார்த்தால் பெண்கள் கண்ணில் உள்ள மீன் சைவம் என்றும் தண்ணீரில் வாழும் மீன் அசைவம் என்றும் சொன்னாலும் சொல்லுவார். ;-)

    ReplyDelete
  23. சைக்கிளின் அனுபவத்தின் சந்தோசம் கூடப் படித்த பெண்களுக்கு வீடு தெருமுனை வரை சவாரி கொடுத்தது. வீடு வாசல் வரை கொண்டு விட அனுமதிக்க மாட்டார்கள்.(இங்கியே எறக்கி விடுரா... வேணாம்டா, நான் குதிச்சுருவேன்... நிறுத்துறியா இல்லையா?..)

    ReplyDelete
  24. மொபெட் என்று இடையில் ரெண்டுங்கெட்டான் சைக்கிள் ஒன்று இருந்ததே, நினைவிருக்கிறதா? (டிவிஎஸ்50 லூனா நாட்களுக்கு முன்)

    ReplyDelete
  25. என் கூட படித்த பெண்கள் லேடிஸ் சைக்கிள் வைத்திருந்தார்கள். நான் துர்பாக்கியசாலி. ;-(

    அதற்க்கு பெயர் சுவேகா.. அப்பாதுரை சார். ;-)

    ReplyDelete
  26. ஆர்.வீ.எஸ் ! மீன் சைவமா அசைவமா என்று பட்டி மன்றம் வைத்து என்னை நடுவராய் இழுத்து விட்டிருக்கிறீர்கள்.. மஹாவிஷ்ணுவே மச்சாவதாரம் எடுத்ததினால், மீன் சைவமும் அல்ல அசைவமும் அல்ல.. 'வைஷ்ணவமே' என்று தீர்ப்பளிக்கிறேன்..
    அதை தொட்டில வச்சு அழகு பாருங்கோ..கடல் புஷ்பம் கடல் வாழக்கான்னு கட்டு கட்றேளே?நியாயமா ஆர்.வீ.எஸ்?

    ReplyDelete
  27. அப்பாஜி அதுக்கு பேர் "விக்கி". எங்க மைலாபூர் விவேகானந்தா காலேஜில் ஒரு ப்ரொபசர் விக்கியிலே வருவார்.. அவருக்கு பேரே விக்கி வெங்கட்ராமன்.

    ReplyDelete
  28. உங்க கூட நாங்களும் சைக்கிள்ல சுத்திட்டு இருக்கோம். நீங்க கேர்ரியர் ல உட்கார வெச்சு கூட்டிட்டு போவிங்கன்னு பார்த்தா, உங்களையே ஒருத்தர் கூட்டிட்டுப் போயிருக்கார். :(

    ReplyDelete
  29. அபச்சாரம் அபச்சாரம்.... நான் கட்டலை.. கட்டலை.. பத்துன்னா இழுத்து விட்டுட்டு போய்ட்டார். நான் நீஞ்சற மீனைத் தான் பார்த்திருக்கேன். இதுக்கெல்லாம் மூல காரணம் இந்த கக்கு தான். என்னை இப்படி மீன் மார்க்கெட்ல இழுத்து விட்டுட்டு போய்ட்டார். ;-) ;-)

    ReplyDelete
  30. அப்ப அந்த சுவேகா எந்த காலத்துது மோகன்ஜி!

    ReplyDelete
  31. @இளங்கோ
    அட்டகாசமான அமர்க்களமான கமெண்டு. அப்படி போடுங்க... ;-);-)

    ReplyDelete
  32. படம் சூப்பர்! அனுபவமும்...

    ReplyDelete
  33. absolutely ரைட் மோகன்ஜி. 100/100. பேர் யோசிச்சு யோசிச்சுப் பாத்தேன். (வயசு பத்தலிங்க)
    >>>அப்பாஜி அதுக்கு பேர் "விக்கி".

    இந்த விக்கி சுவேகா லூனா எல்லாம் ஏதாவது அருங்காட்சியகத்துல இருக்கா?
    என் கிட்டே ஒரு யெஸ்டி பைக் இருந்தது. இப்ப தேடினா கூடக் கிடைக்காது போலிருக்கு.
    சைக்கிள் திரிவிளக்கு, பிறகு சின்ன ஸ்விட்ச் போட்ட பேட்டரி விளக்கு, அதுக்கும் பிறகு பின் சக்கரத்தில் குட்டி டைனமோ இதெல்லாம் யாராவது சேத்து வச்சிருப்பாங்களா?

    ReplyDelete
  34. மீன்.
    எத்தனை நிறம் எத்தனை வகை
    எல்லாரும் இன்னாட்டு டின்னர்.

    ReplyDelete
  35. நன்றி எஸ்.கே ;-)

    ReplyDelete
  36. அப்பாஜி பழங்காலத்துலு இருந்த இன்னொரு வண்டி ராஜ்தூத். ஹெட்லைட் மன்னடைக்கு மேல சாவி போடற மாதிரி.... ;-)

    ReplyDelete
  37. வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்... அப்படின்னு நம்ம கானா உலகநாதன் பாட்டு நீங்க கேட்ருக்கீங்களா அப்பாஜி... எ கிளாசிக்.... ;-)

    ReplyDelete
  38. >>பழங்காலத்துலு இருந்த இன்னொரு வண்டி ராஜ்தூத்

    huh?

    ReplyDelete
  39. சைக்கிள் அனுபவங்கள் அருமை. இன்னும் தொடருங்கள்.

    ReplyDelete
  40. @கோவை2தில்லி
    நன்றி -;) ;-)

    ReplyDelete
  41. புண்ணிய தீர்த்தத்தில் நீராடல் :))

    ReplyDelete
  42. @மாதேவி
    ஒரு முங்கு முங்கி எழுந்தாச்சு... அதான் இப்ப நல்லா இருக்கோம். ;-) ;-)

    ReplyDelete