Sunday, December 19, 2010

கூடாநட்பு

rain forest
தலைக்கு மேலே தூக்கி சம்மட்டியால் ஒரே போடு. நடு மண்டையில் நச்சென்று இறக்கினான். "பச்ச்ச்" என்று சம்மட்டி இறங்கிய சத்தம் வந்தது. தண்ணீர் வற்றிய வறண்ட நிலம் போல வகிடு எடுத்த இடத்தில் ஒரு எம்.எம். பிளந்து பிசுபிசு என்று குருதி கொப்புளிக்க ஆரம்பித்தது. நெற்றிவழியே ஆறு போல வழிந்தோடும் ரத்தத்தை கண்கொட்டாமல் ரசித்துவிட்டு ஒரு இரண்டு நிமிடங்கள் கழித்து மீண்டும் இரண்டாவது முறை பலங்கொண்ட மட்டும் இறக்கினான். இந்தமுறை மண்டை இரண்டாக பிளந்து கபால மோட்சம் அடைந்திருந்தான். சாராயம் கலந்த ரத்தம் பொத்துக்கொண்டு கொட்டியது. தூறிக்கொண்டிருந்த மழை இப்போது நன்றாக வலுத்துப் பிடித்திருந்தது. அந்தக் கார்கால மழையில் சவுக்குக்காட்டின் ஊடே சென்று திரும்பிய அலைக்கழிக்கப்பட்ட காற்று "சா.....வூ..... சா.....வூ...." என்று பலமாக ஊதி பகிரங்கமாக அறிவித்தது போல இருந்தது அவனுக்கு. வெகுதூரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக விளக்கு மினிக்கி பெரிதும் சிறிதுமாய் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. மழை ரோட்டில் வண்டிச் சக்கரங்கள் "டர்..ர்..ர்...ர்" என்று இருட்டைக் கிழித்து ஓலமிட்டது. மணி இப்போது என்ன இருக்கும். லைட்டரை ஏற்றி வலது மணிக்கட்டில் டைட்டனை பார்த்தான். சரியாக பதினொன்று காட்டியது. 

சவமாகியிருந்த சங்கருக்கு பக்கத்தில் கிடந்த பெரிய பாறங்கல்லில் உட்கார்ந்தான். நிலாவை பூமிக்கு காட்டாமல் மழை மேகம் கடத்தி வைத்திருந்தது. மழைநீரால் நனைந்திருந்த அந்தக் கல் அவன் உள்ளுக்குள் அணிந்திருந்த வி.ஐ.பி 90 செ.மீ வரை ஈரம் பண்ணியது. நிதானமாக சட்டைப் பையில் இருந்து ஒரு கிங்க்ஸ் எடுத்து பற்றவைத்தான். ஆழ உள்ளுக்கு இழுத்து பொறுமையாக புகையை வெளியே விட்டான். புகைவிட்ட அந்த வாய் "ஊ" என்ற நிலையில் இருக்க செல் கினிகினித்தது. சுந்தரியின் கால். எடுக்கலாமா வேண்டாமா என்று செல்லையே பார்த்துக்கொண்டிருந்தவன் கால் கட் ஆகும் தருவாயில் "ஹலோ.." என்றான். 
"எங்க இருக்கீங்க" என்ற மறுமுனை கேள்விக்கு
"பிரண்டோட.. வெளியில.. நீ சாப்ட்டு படுத்துடு.." என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் இணைப்பை துண்டித்தான்.
இரண்டு கையையும் பிடித்து பிரேதத்தை தரதரவென்று இழுத்து முட்கள் அடர்ந்த ஒரு புதர் மறைவில் கிடத்தினான். சவுக்குக்காட்டின் ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்த சுமோவிடம் சென்றான். பின் கதவு திறந்து வெள்ளைக் கலர் பத்து லிட்டர் பெட்ரோல் கேனையும், ஆண்டாள் கற்பூர பாக்கட்டையும் எடுக்கும் போது அந்த கார் விளக்கு வெளிச்சத்தில் பார்த்த போது கட்டை எறும்பு ஊர்வலம் போவது போல சட்டையின் பாக்கெட்டில் இருந்து இடது புறம் அடி நுனி வரை குறுக்காக சங்கரின் ரத்தம். என்ன செய்வது என்று யோசித்தான். சரி ஒவ்வொன்றாக பார்ப்போம் என்று தலை முதல் கால் வரை மழை நீர் நனைக்க சொட்டசொட்ட சவுக்குக் காட்டினுள் நுழைந்தான். புதருக்கு காவலாக சங்கர் அப்படியே போட்டபடி கிடந்தான். ஐந்தடிக்கு இரண்டு அங்குலம் குறைவாக சவுக்கு குச்சி போல இருந்த உடம்பிற்கு மொத்த பெட்ரோலையும் கவிழ்க்காமல் அரை கேன் எல்லா இடங்களிலும் படும்படி தெளித்து ஊற்றினான். தலை முதல் கால் வரை சூடக் கட்டியை வரிசையாக அடுக்கினான். கால் மாட்டில் குனிந்து பேண்ட் அடியை கையால் இழுத்து லைட்டரால் பற்ற வைத்தான். தலைப் பகுதிக்கு வந்து நீலக் கலர் பீட்டர் இங்கிலாந்த் காலரில் இரண்டு வினாடிகள் லைட்டரை காட்டினான். நீரும் நெருப்பும் விரோதிகள். செந்தழலும் பெட்ரோலும் கல்யாணம் நிச்சயம் ஆன காதலர்கள். பக்கத்தில் வைத்தால் உறுதியாக பற்றிக்கொள்வார்கள். தீயும் அந்த அடையார் சிவன் பெட்ரோல் பங்க் சரக்கும் சேர்ந்து திகு திகு என்று கொழுந்துவிட்டு எரிந்தது. தகனம் முடியும்வரை இருக்கலாமா என்று டைட்டனை பார்த்தான். பனிரெண்டு கடந்து ஐந்து நிமிடம் ஐந்து வினாடிகள் ஆகியிருந்தது. 

மழை சுத்தமாக விட்டிருந்தது. வானத்தில் மேகச் சிறையில் இருந்து நிலா விடுதலையாகிருந்தது. மீதம் இருந்த பெட்ரோலை அரைவேக்காடாக எரிந்துகொண்டிருக்கும் நண்பன் மேல் சாய்த்தான். எரிபவனை தனியாக விட்டுவிட்டு கிளம்பத் தயாரானான். உட்கார்ந்திருந்தக் கல் மேலே காலை ஊன்றி ஷு லேசை இருக்கக் கட்டினான். சம்மட்டியை எடுத்துக் கொண்டு வண்டியைப் பார்த்து நடக்க ஆரம்பித்தான். சாவியின் ஒரே திருகலுக்கு சுமோ உடனே அடிபணிந்து சண்டித்தனம் பண்ணாமல் கிளம்பியது. மழையினால் ஏற்ப்பட்ட சகதியில் சுமோவின் டயர் கஷ்டப்பட்டு இறங்கி ஏறி சுடுகாடாய் மாறிய சவுக்குக் காட்டிலிருந்து மெயின் ரோடுக்கு வந்துவிட்டது. 

சட்டையில் ஏற்ப்பட்ட ரத்தக் கறையை என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தான். அவ்வப்போது "பா....ங்..." என்று ஹாரன் அடித்துச் செல்லும் ஓரிரு லாரிகளைத் தவிர சாலையில் ஆள் அரவம் இல்லை. கிளத்ச்சில் இருந்து காலை எடுத்து மடக்கியவனுக்கு சீட்டுக்கு அடியில் ஏதோ தட்டுப்பட்டது. ரோட்டில் இருந்து கண்ணை எடுக்காமல் குனிந்து கையை துழாவி எடுத்தது ஒரு கறை களையும் பேனா வடிவ வாஷிங் பொருள். போன வாரம் சங்கரின் ஒன்று விட்ட மாமா பையன் அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்த வீட்டு உபயோகப் பொருள் இப்போது காட்டு உபயோகப் பொருளாய். படிப்படியாக வேகத்தை குறைத்து சுமோவை ஒரு மர ஓரமாக நிறுத்தினான். அந்தப் பேனாவை திறந்து ஒவ்வொரு கட்டெறும்பு ரத்தக்கறையாக அழிக்க ஆரம்பித்தான். ஒரு பத்து நிமிடத்தில் சட்டைப் பளிச்சிட வண்டியை நூறு அழுத்தி வீடு வந்து சேர்ந்தான்.

வண்டியை வாசலில் விட்டு விட்டு காலிங் மணி அடிக்கையில் மணி ஒன்று அடித்திருந்தது. வீட்டு வாசலில் வாலைக் குழைத்து படித்திருந்த தெருநாய் ஒன்று தலையை அண்ணாந்து "ஊ..ஓ.." என்று கத்திக்கொண்டு ஓடியது. உள்ளே விளக்குகளைப் போட்டு கதவைத் திறந்தாள் சுந்தரி. அர்த்தராத்திரியிலும் அரிதுயில் நேரத்திலும் அழகாகத்தான் இருந்தாள். மெல்லிய துணியினால் நெய்யப்பட்ட நைட்டியில் அந்த அழகு பன்மடங்கு கூடியிருந்தது.
"என்னங்க.. இவ்ளோ நாழி..." என்று வாயில் துவங்கியை கொட்டாவியை கையால் அணைபோட்டு ஊளையிட்டு கேட்டாள்.
"இல்லை.. ஒரு பிசினஸ் விஷயமா மும்பை பார்ட்டி ஒன்னு வந்திருந்தது.. அதான்.."
"எங்க போயிருந்தீங்க.."
"தாஜ்.... கன்னிமேரா.."
"சொட்ட சொட்ட நனிஞ்சிருக்கீங்க.."
"பார்க்கிங் கொஞ்சம் வெளியில.. வேலட் பார்க்கிங் கொடுக்கலை.. பசிக்குது.. சாப்பட்லாமா.." கொஞ்சம் எரிச்சலுடன் கேட்டான்.

டைனிங் டேபிளில் ஹாட் பேக்கில் இருந்ததை எடுத்துப் பரிமாறி கடைசியாக அவன் மோர் ஊற்றி சாப்பிட்டவுடன் பாத்திரங்களை அடுக்களை சிங்க்கில் அள்ளிப் போட்டு விட்டு பள்ளியறை புகுந்தாள் சுந்தரி. கண்ணை மூடி படுத்திருந்தவன் கழுத்தைச் சுற்றி பாம்பு போல் வளைத்துப் பிடித்து "நீங்க நல்ல காரியம் பண்ணிட்டு வந்துருக்கீங்க.. ஒரு ட்ரீட் கிடையாதா.." என்று சிணுங்கினாள் சுந்தரி. அதிர்ச்சியில் தூக்கிவாரிப் போட்டு திரும்பி படுத்தான் குணசீலன். இரவு விளக்குக்கு போட்டியாக கண்கள் இரண்டையும் அகல விரித்து "என்ன சொல்ற.." என்று கேட்டவன் அவள் அளித்த பதிலால் அப்படியே உறைந்து போனான். "சங்கர் முதல் நாள் வீட்டுக்கு வந்தப்ப காபி கொடுத்தப்ப என் சுண்டுவிரலை லேசாக நிரடினான். ஏதோ தவறி பட்டுடுச்சுன்னு நினைச்சேன். போகப்போகத்தான் அவன் ஒரு சபலிஸ்ட்ன்னு தெரிஞ்சுது. ஒருநாள் சமையல்கட்டில் என்னைப் பின்னால அணைக்கறாப்ல நின்னு "ஒரு ஸ்ட்ராங் காபி கிடைக்குமா"ன்னு அவன் கேட்டப்ப நீங்க வராண்டாவிலிருந்து பார்த்தது எனக்கு தெரியும். உங்களுக்கு வேற பெண்களோட தொடர்பு இருக்குன்னு சொல்லி என்னை சரிக்கட்டப் பார்த்தான். நீங்க எங்கயோ ஒரு பார்ல இருக்கும் போது எனக்கு போன் பண்ணி "உன் புருஷனோட வண்டவாளத்தைப் இப்ப பாருன்னு சொன்னான். சரி.சரி அதெல்லாம் எதுக்கு இப்போ. நீங்க தூங்குங்க.. காலையில் பேசிக்கலாம்" என்று சொல்லி அவனைப் பார்த்து ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள்.

காலையில் போலீஸ் வந்து கையில் விலங்கு போட்டு ஜீப்பில் ஏற்றினாலும் இனிக் கவலை இல்லை என்று நிம்மதியாக குறட்டை விட்டு உறங்கினான் குணசீலன்.
பின் குறிப்பு: குணசீலன் கொன்றது சுந்தரிக்கு எப்படி தெரிந்தது. ஏதாவது ஒரு வழியில நாட் சொல்லுங்க பார்ப்போம். என்னோட வெர்ஷனை கடைசியா சொல்றேன். இதுக்கு ரெண்டு முடிவு வைத்திருக்கிறேன். மேலே குணசீலன் தூங்கிப் போனது ஒரு முடிவு. இன்னொன்று சுந்தரி குணசீலனை லாக்கப்பில் தள்ளிவிட்டு தன்னுடைய கல்லூரிக் காதலன் கூட உல்லாச வாழ்வுக்கு போனது.
படக் குறிப்பு: மழைக் காட்டுக்குள் போன போது .....உதவி.wallpapers.free-review.net

-

27 comments:

பொன் மாலை பொழுது said...

எடுத்த எடுப்பிலேயே இப்படி ஒரு டெர்ரர், வயலன்ட் காட்சி?!
நாட் - அம்பிதான் சொல்லணும்.
.

Chitra said...

நான் சும்மா வேடிக்கை பார்த்துட்டு போக வந்தேன் - சாட்சி ஆகவும் இல்லை - துப்பறிய வந்தவராகவும் இல்லை. :-)

எல் கே said...

அவனோட செருப்பில் ஒட்டி இருந்த சேறு

Madhavan Srinivasagopalan said...

படிச்சிட்டு வரேன்..

புவனேஸ்வரி ராமநாதன் said...

பாபு தான் சுந்தரியோட கல்லூரிக் காதலனா?!

Anonymous said...

ஒன்னும் யோசிக்க முடியல.. நீங்களே சொல்லிடுங்க ;)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
சொல்றேன்.. சொல்றேன்... மாணிக்கம். ;-)

RVS said...

@Chitra
பயப்படாதீங்க.. உங்களை கோர்ட்டுக்கு கூப்பிட மாட்டாங்க.. ;-) ;-) ;-)

RVS said...

@LK
இல்லை எல்.கே. கொஞ்ச கமெண்ட்டுக்கு அப்புறம் சொல்றேன். ;-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
இன்னுமா படிக்கிறீங்க... ;-) ;-)

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
மேடம்.. பாபுங்கர பேர் தப்பா வந்திடுச்சு..வேற மாதிரி ப்ளாட் வச்சுருந்தேன். ராத்திரி பதினொன்னரை ஆயிடிச்சு... அப்படியே வலையேத்திட்டேன். இப்ப மாத்திட்டேன். உன்னிப்பாக படித்து கருத்துரைத்தமைக்கு நன்றி ;-)

RVS said...

@Balaji saravana
ஏம்பா.. ரொம்ப வேலையா.. சரி சொல்றேன்.. ;-)

Anonymous said...

என்ன? ஷங்கர் மொபைல் வீடியோவை ஆன் செய்து வைத்திருந்தானா?

இல்லை, சுந்தரி ஷங்கருக்கு இந்த ஐடியாவை சொல்லி இருந்தாளா? அதை குணசீலன் கேட்டு விட்டானா?

ரகு

இளங்கோ said...

நல்ல வேளை.. சின்ன வயசுல க்ரைம் நாவல் படிச்சது இப்போ உதவுது. எதுக்குன்னு கேக்கறிங்களா, இப்படி பயப்படமா படிக்கரதுக்குதான்.

அப்புறம், முடிவு.. நீங்களே சொல்லிடுங்க. காலையில யோசிக்க முடியல. :)

Vidhya Chandrasekaran said...

குணசீலனின் ஃபோன் பேச்சு. முதலில் நண்பனுடன் வெளியில் இருப்பதாக சொல்பவன் பின்னர் மும்பை க்ளையெண்ட்ஸ் எனச் சொல்வது..

வேறெதுவும் இப்போதைக்கு தோணலை. மீண்டுமொருமுறை வாசித்துச் சொல்கி்றேன்.

வெங்கட் நாகராஜ் said...

ம்.... இது வரை கொலை எதுவும் பண்ணலையே அதுனால எப்படின்னு புரியலை :)))) நீங்களே சொல்லிடுங்க, எப்படின்னு யோசிச்சு எதாவது ஏடாகூடமா ஆயிடப்போகுது :))))

Unknown said...

நல்ல கதை சொல்லல், ஆனால் முடிப்பதற்கு தடுமாறியிருப்பது சுவாரஸ்யத்தை குறைத்துவிட்டது ..

ஆனால் சுவாரஸ்யமான கதையாடல் பண்ணும் திறமைக்கு ஒரு சபாஷ் ...

பத்மநாபன் said...

கிரைம் கதைக்கே உரித்தான வார்த்தை பிரயோகங்கள் நிறைய இருந்தது... முன் கதை தெரியாமல் முடிச்சு அவிழ்ப்பது கடினம் தான் ...

கல்லூரிக் காதலன் முடிவு சப் முடிவாக இருக்கும்..ஆனால் அதில் தான் நாட் அவிழ வாய்ப்பு... அந்த காதலன் குணசீலனை பின் தொடர்ந்து ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துள்ளான் ..

தூங்கிப்போன முதல் முடிவை வைத்துக்கொண்டு சொன்னால் ,கோவக்கார புருஷன் இந்த நியாயமான காரணத்துக்காக கண்டிப்பாக ஒரு நாள் வெட்டுவான் எனும் உள்ளூணர்வு பதட்டத்தை பார்த்தவுடன் பிடிபட்டுவிட்டது அல்லது .. இருந்தே இருக்கிறது.. அந்த சமயத்தில் அலை பேசி அவனுக்கே தெரியாமல் எதோ பட்டு மனைவியின் எண்ணோட தொடர்பியிருக்கலாம்.அதில் அவன் திட்டிக்கொண்டே வெட்டி பத்தவெச்சுருக்கலாம்.

முடிவு எப்படியோ...கிரைம் மாஸ்டராயிட்டிருக்கிங்க... தொடரட்டும் முடிச்சு கதைகள்....

RVS said...

@ரகு
//என்ன? ஷங்கர் மொபைல் வீடியோவை ஆன் செய்து வைத்திருந்தானா?//
முடிவு நம்பர் 1:
சார்! எக்சாக்ட்லி... மொபைல் வீடியோ இல்லை.. குணாவை சீண்டி அவனை ஒரு பெண் பித்தன் என்று நிரூபிப்பதற்காக மொபைலை ஆன் செய்து வைத்திருந்தான். இதைத்தான் கடைசி பாராவில் ஒருக்களித்து படுக்கும் முன் சுந்தரி சொன்னாள்.
முட்டமுட்ட சங்கரை குடிக்க வைத்து அந்த சவுக்குக் காட்டுக்கு தள்ளிக்கொண்டு போனான் குணசீலன். சம்மட்டி எடுத்து தலையில் போடு போட்டது "சத்.." தென்று அவள் காதுக்கு கேட்டது. அவளை அடிக்கடி பாலியல் தொந்தரவுகள் செய்து வந்த நண்பன் வேஷத்தில் இருந்த துரோகியை கொன்றது அவளுக்கு சந்தோஷமே.


//இல்லை, சுந்தரி ஷங்கருக்கு இந்த ஐடியாவை சொல்லி இருந்தாளா? அதை குணசீலன் கேட்டு விட்டானா?
//
இது இல்லை.

RVS said...

@இளங்கோ
இதெல்லாம் நம்மளோட சின்ன சின்ன ட்ரை தான் இளங்கோ. ஆட்டம் பிடிபட்டதும்தான் நீங்கெல்லாம் பயப்படனும். ;-)

RVS said...

@வித்யா
அது ஒரு சின்ன பொய்தான். அதில் ஆளைக் கொல்வதற்கான துப்பு எதுவும் இல்லை. மேலே ரகு சார் சொல்லியதுதான் மெயினான ப்ளாட். ஏதோ எனக்கு தெரிஞ்சதை எழுதறேன். என்னோட கதைக்காக யோசித்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றிங்க.. ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
இது கொஞ்சம் டூ மச்சா இல்லை தலைநகரம். அப்போ வாத்யார் எவ்ளோ கொலை பண்ணியிருப்பார்?
ஹி.. ஹி.. ஆனா நல்ல கமென்ட். ரசித்தேன். ;-) ;-)

RVS said...

@கே.ஆர்.பி.செந்தில்
செந்தில்! மிகவும் பெரிதாக வளர்ந்துவிடப் போகிறதே என்று வாச்சோம் பொழச்சோம் என்று முடித்துவிட்டேன். எனக்கே நன்றாக தெரிந்தது. கூர்ந்து படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. அடுத்தமுறை பொறுமையாக கதை வளர்ந்தாலும் பரவாயில்லை என்று நிதானமாக முடிக்கறேன். இரண்டு பாராக்களுக்கு பின்னர் இதை ஒரு தொடர் கதையாக போடலாமா என்று ஒரு எண்ணம் எழுந்தது. பின்னர் நாம தொடர் எழுதினா எவ்ளோ பேர் படிப்பாங்க என்ற அச்சத்தினால் அரக்கபரக்க முடித்து இரவு பதினொன்று நார்ப்பத்தைந்திர்க்கு வெளியிட்டுவிட்டேன். கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. ;-)

RVS said...

@பத்மநாபன்
சரியாச் சொன்னீங்க பத்துஜி. முன்கதை தெரியாமல் முடிச்சவிழ்க்க முடியாது. ஆனால் என்னுடைய முடிச்சு கடைசி பாராவில் சுந்தரி பேசியதில் எடுத்துக்கொண்டேன்.
//நீங்க எங்கயோ ஒரு பார்ல இருக்கும் போது எனக்கு போன் பண்ணி "உன் புருஷனோட வண்டவாளத்தைப் இப்ப பாருன்னு சொன்னான்.//
இதுல இன்னிக்கின்னு ஒரு வார்த்தை சேர்த்திருக்கணும். மிஸ் பண்ணிட்டேன். சேர்த்திருந்தால் நீங்களும் கண்டு பிடித்திருப்பீர்கள். ரகு சார் கண்டுபிடித்து விட்டார். ஏதோ எனக்கு தெரிஞ்ச கதை விடும் பாணியில் வைத்த ஒரு சிறு பொறி.

//கல்லூரிக் காதலன் முடிவு சப் முடிவாக இருக்கும்..ஆனால் அதில் தான் நாட் அவிழ வாய்ப்பு... அந்த காதலன் குணசீலனை பின் தொடர்ந்து ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துள்ளான் ..//
முடிவு நம்பர் 2:
இதைத் தான் ரெண்டாவது முடிவாக எழுதலாம் என்று இருந்தேன். கமெண்டரி கொடுப்பது என்று எழுதாமல், கல்லூரிக் காதலன் குணசீலன் அலுவலகத்தில் வேலை செய்பவன். சங்கரின் தொந்தரவு குணாவிற்க்கும் கல்லூரிக்காதலன் பாபுவிற்க்கும் தெரிந்து இருப்பதால் அலுவலகத்தில் குணாவை சீண்டி விட்டு கொலைத் திட்டத்தை தயாரித்தவனே பாபு தான். அவனை நிம்மதியாக தூங்கவிட்டு போலிசுக்கு தகவல் கொடுத்து அவனை கைது செய்துகொண்டு போனபின்னர் பாபுவிடம் தஞ்சமடைந்தாள் சுந்தரி. இப்படித்தான் முதல் முறை எழுதாலாம் என்று இருந்தேன். அப்புறம் ஏனோ மாற்றிவிட்டேன்.

என்னுடைய வார்த்தை பிரயோகங்களை பாராட்டியதற்கு மிக்க நன்றி. இனிமேல் பொறுமையாக வலையேற்றவேண்டும். செந்தில் கமெண்ட்டை பார்த்தீர்களா. நேரமாகிவிட்டதே தங்க்ஸ் எழுந்து திட்டப்போகிறார்களே என்று தெரிந்தே அரைகுறையாக ஏற்றினேன். என் மேல் தான் பிசகு. இது போல் இன்னும் சில முடிச்சுக் கதைகள் எழுதாலாம் என்று விருப்பம். "முடிச்சுக் கதைகள்" லேபிலுக்கு வைத்துக் கொள்கிறேன். நன்றி. ;-)

அப்பாதுரை said...

இதையும் தங்க்ஸ் மேலே தள்றீங்களா.. சரிதான். ரொம்ப தில்காரர்.

மழையில சிகரெட் எப்படிப் பத்த வச்சார்ன்ற மர்மமே எனக்கு இன்னும் விளங்கலே.. அதுக்குள்ளாற கொலை சமாசாரத்தைக் கேட்டா எப்படி?

எனக்கென்னவோ சுந்தரியும் குணசீலனும் ஒரே ஆசாமினு தோணுது - ஸ்கிட்ஸ்.

RVS said...

@அப்பாதுரை
பாலிதீன் பாக் பிரிக்காத புது கிங்க்ஸ் பாக்கெட். பத்த வச்சது லைட்டர்னால... ஹி...ஹி.. அப்பாஜி போலிஸ் விசாரணையை ஆரம்பிச்சுட்டீங்க.. நடத்துங்க.. தெரிந்த வரையில் சொல்லுகிறேன்... நீங்க படிச்சு இதுமாதிரி கேக்கறதே என் பாக்கியம். ;-) ;-)

ஸ்ரீராம். said...

அப்பாஜியோட திரவியம் படிச்சிருக்கீங்களா ஆர் வி எஸ்? அநியாயமா பாதியிலேயே நின்று விட்ட கதை அது...

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails