Showing posts with label வலை. Show all posts
Showing posts with label வலை. Show all posts

Sunday, March 27, 2011

மாறுதல் செய்வோம்

எங்களோட தீவுல நாங்க ஃபுட்பால் பார்க்க ரொம்ப பிரியப்படுவோம். ஆனா பாருங்க யாருமே ஒரு தடவை கூட வெளையாண்டதில்லை. நாங்க இருக்கிற மிதக்கும் தீவுல ஒரு பொட்டு நிலம் கூட கிடையாது. எல்லா இடமுமே தண்ணிதான்.  இங்க நாங்க வெளையாடற ஒரே விளையாட்டு படகுப் போட்டி தான். அப்புறம் பெருசுங்கெல்லாம் சேர்ந்து புடிச்ச மீன்ல எது பெரிசு, எது ரொம்ப வெயிட் அதிகம் போன்ற அக்கப்போர் பேச்செல்லாம் தான்.

marudhal seivom

நாங்கெல்லாம் சேர்ந்து ஒரு கால்பந்து டீம் அமைக்கனும்ன்னு ஒரு நாள் எங்க கோஷ்டியில ஒரு பையனுக்கு ஐடியா ஒன்னு தோணிச்சு. எங்க கிராமத்து ஜனங்கெல்லாம் இதை பார்த்து "இது என்ன கொடுமை?"ன்னு எண்ணி சிரிச்சாங்க." போட் கடைக்கார  போன்மீ இதைப் பார்த்துட்டு "டேய்.. பசங்களா என்ன பண்றீங்க.. கும்பலா நின்னு தையாதக்கான்னு ஆடி மீனையெல்லாம் மிரட்டி வேற பக்கம் விரட்டுறீங்க..."ன்னு சொல்லி சத்தம் போட்டாரு. அதுக்கு எங்க க்ரூப்ல இருந்த நண்பன் பன்யாத் "மாமா.. நாங்க புட்பால் டீம் ஆரம்பிக்க போறோம். எதிர்காலத்துல நாங்கதான் உலக சாம்பியன்"ன்னு சந்தோஷமா கூச்சலிட்டு சாலஞ்ச் பண்ணினான். நாங்கெல்லாம் கூட நின்னு கோரஸாக ஆரவாரித்தோம். பதிலுக்கு போன்மீ "ஹே..ஹி. உங்களை சுத்தி என்ன இருக்கு பார்த்தீங்களா? நீங்கெல்லாம் எங்க இருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியுதா?"ன்னு சொல்லி கெக்கெக்கேன்னு எக்காளமா சிரிச்சாரு. 

அவரு சொன்னதும் ரைட்டுதான். நாங்க பயிற்சி செய்ய எங்களை சுத்தி மைதானம் ஏது. எங்களுக்குள்ள ஒரே எண்ணமா ஒரு புட் பால் டீம் இருந்திச்சு. ஆனா ப்ராக்டீஸ் பண்ண மைதானம் இல்லை. எல்லோரும் அப்படியே இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டோம். நண்பன் குண்டன் பில்லி ஆவேசமா நாம உடனடியா ஒரு பிச் தயார் பண்ணனும்ன்னு எந்திரிச்சி வீராவேசமா பேசினான். உடனே நாங்க எங்க மிதக்கும் கிராமத்தை சுத்தி இருக்கிற இடங்கள்ள இருந்து பழைய மரங்களை சேகரிக்க ஆரமிச்சோம். பழைய இத்துப்போன மீன்பிடி படகுகளை ஒன்னு சேர்த்து, அங்கங்க சுத்தி திரிந்து கொண்டு வந்த மரக்கட்டைகளை வச்சு ஸ்கூல் விட்டு வந்தப்புறம் கர்ம ஸ்ரத்தையாக ஆத்மசுத்தியுடன் பிச் தயாரிச்சோம். 

நீண்ட நாளைய கடும் உழைப்புக்கு அப்புறம் எங்களுக்கான ஒரு பிச் தயாரானது. ஓடி ஆடும் போதும் அந்த பிச் தண்ணியில நிக்கரதுனால தள்ளாடும், ஒரு கட்டை மேலேயும் இன்னொரு கட்டை கீழேயும் சமம் இல்லாமல் மேடுபள்ளமாக இருக்கும், ஏன் இன்னும் சில இடத்ல சின்னப் பசங்களா நாங்க அடிச்ச ஆணி துருத்திக்கிட்டு இருக்கும். அடிக்கடி பந்து தண்ணிக்குள்ள போய் நீச்சலடிக்க விழுந்துடும். பின்னாலையே நாங்களும் போய் தொபுகடீர்ன்னு விழுவோம். அதனால பிச் எப்போதும் தண்ணியா சொதசொதன்னு இருக்கும். வழுக்கும் வேற. பிச் ரொம்ப சின்னதா இருந்ததால எங்களோட ஃபுட்வொர்க் ரொம்ப பிரமாதமா அமைஞ்சு போச்சு. "ஹே..நீங்கெல்லாம் சாம்பியன் ஆவ முடியாதுப்பா..."ன்னு போட் கடைக்கார போன்மீ வயித்தை பிடிச்சுகிட்டு விழுந்து விழுந்து சிரிச்சாரு.

ஒரு நாள் நம்ம குண்டன் பில்லி கையில ஒரு நோட்டீஸ தூக்கி விசிறிகிட்டே ஓடிவந்தான். அது டவுனுல நடக்கப்போற "பங்கா கப்"ங்கற ஒரு நாள் கால்பந்து போட்டியின் அறிவிப்பு. இதைப் பார்த்தவுடனே எங்களுக்குள்ள பல பேர் பல விதமா பேசிக்கிட்டாங்க. "நம்மால கலந்துக்க முடியுமா? நமக்கு தகுதி இருக்கா"ன்னு ஆழமா யோசிச்சோம். கலந்து பேசினோம். கடைசியில போட்டியில கலந்துக்கறதுன்னு தீர்மானம் பண்ணினோம்.

போட்டியில கலந்துகிட்டு விளையாடறதுன்னு முடிவு பண்ணின பிறகு நாங்க டவுனுக்கு புறப்படற வேளையில போட் கடை பான்மீ "தம்பிகளா! உங்களோட ட்ரெஸ்ஸ பார்த்தா விளையாடப் போற மாதிரி தெரியலை.. இந்தாங்க இதை போட்டுக்கிட்டு போங்க..."ன்னு கையில ஒரு நீல கலர் டி-ஷர்ட்டை ஆட்டிக்கிட்டு அவரோட வழக்கமான சிரிப்பு இல்லாமல் எங்களை உற்சாகப்படுத்தும் வகையில பேசி சிரிச்சாரு. அப்பத்தான் எங்களுக்கு தெரிஞ்சுது, இவ்ளோநாள் நாங்க ப்ராக்டீஸ் பண்றதை எங்க ஊர் முழுக்க கவனமா பார்த்திருக்கு. எங்களுக்கு ஊக்கமா டிரஸ், ஷூ எல்லாம் ஊர்ல வாங்கி கொடுத்தாங்க. இன்னும் கொஞ்சம் பேர் எங்களோட மேட்ச் பாக்கறதுக்கு எங்க கூடவே டவுனுக்கும் வந்தாங்க.

மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு முன்னால எங்களுக்கு ஒரே பதட்டமா இருந்தது. ஆனா கொஞ்சம் கொஞ்சமா விளையாட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நாங்க எங்களைப் பத்தி நினைச்சதை விட நல்லாத்தான் விளையாடறோம்ன்னு தோணிச்சு. அந்தப் பழைய கட்டு மரத் தோனியிலும், பழைய தட்டுமுட்டு மரத்திலும் தயாரிச்ச பிச்ல விளையாண்டது எங்களது திறமையை நல்லா செழுமையா வளர்த்திருந்தது. அவ்வளவு குட்டியோண்டு இடத்தில விளையாண்டதினால டவுன் மைதானத்தில இருந்த  அவ்ளோ பெரிய கோல் போஸ்ட்ல எங்களுக்கு ரொம்ப சுலபமா கோல் அடிக்க முடிஞ்சுது. ஊர் மக்கள் ஆச்சர்யத்தக்க வகையில நாங்கள் செமி பைனல் வரைக்கும் முன்னேறி வந்துட்டோம்.

செமி பைனல் மிகவும் மோசமா துவங்கிச்சு. ஒரே காட்டு மழை அடிச்சு பெஞ்சுது. எங்களோட ஷூக்குள்ளலாம் ஒரே தண்ணீ. எங்களோட போட்டிபோட்ட டீம் முதல் அரையில் ரெண்டு கோல் போட்டு முன்னனியில இருந்தாங்க. நாங்கெல்லாம் மனசுடைஞ்சு நொந்து போய்ட்டோம். எப்படி இந்த கேம்ல ஜெயிக்கரதுன்னு தெரியலை. அந்த மோசமான முதல் அரை மணிக்கு பிறகு நாங்க ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். எங்களோட தண்ணீ பூந்த ஷூவை கழற்றி வீசினோம். வெறும் காலோடு விளையாட ஆரம்பித்தோம். சொன்னா நம்பமாட்டீங்க.. ரொம்ப நல்லா ஓட முடிஞ்சுது. எங்க ஊர்ல நாங்க விளையாண்டதே இப்படித்தானே. அதனால எங்களுக்கு ரொம்ப சுலபமா இருந்திச்சு. பதிலுக்கு அசராம நாங்களும் முயற்சி பண்ணி ரெண்டு கோல் தட்டிட்டோம். ஆனா, கடைசி நிமிஷத்ல அவங்க அடிச்ச ஒரு கோல்னால ஜெயிச்சுட்டாங்க. நாங்க ரொம்ப சோகமாயிட்டோம். இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்தது எங்களுக்கு சந்தோஷம்தான். எங்க ஊரே எங்களை பார்த்து ரொம்ப பெருமைப்பட்டுச்சு.  போன்மீ காலரியிலேர்ந்து "எலே.. நீங்கதான் டாப்பு..."ன்னு மகிழ்ச்சியா கத்தி மெச்சினாறு. எங்களுக்கு ரொம்ப உச்சி குளுந்துபோச்சு.

அப்புறம் ஃபுட்பால் தான் எங்க பான்யீ கிராமத்தின் முதன்மை பொழுதுபோக்கா மாறிச்சு. வழவழன்னு ஆணி குத்தாத சமமா இருக்கிற பிச்செல்லாம் தயார் பண்ணினோம்.
(இது Panyee FC -என்ற தாய்லாந்து நாட்டின் முன்னணி கால்பந்து அணியின் உண்மைக் கதை)

கீழே இருப்பது நான் இவ்வளவு நேரம் மேலே தமிழில் குதறி(உளறி) வைத்ததின் வீடியோ.


நன்றி.

நல்ல தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு என்று ஒரு பின்னூட்டமாவது வரும் என்ற நம்பிக்கையில்...

பின் குறிப்பு: போன்மீ, பன்யாத் போன்ற தாய்லாந்து பேர்லாம் நான் சூட்டியது.

-

Friday, July 9, 2010

உசுரே போகுதே....

கால்பந்து உலகக்கோப்பை நிறைவுபெறும் சமயத்தில் அதுபற்றிய மற்றுமொரு பதிவு.

டச்சுக்காரர்கள் இந்த வருட உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் இறுதிக்கு தகுதி பெற்றதை பாராட்டும் வகையில், நெட்டில் கிடைத்த ஒரு பழைய உலகக்கோப்பை (1998) காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டைனாவிர்க்கு எதிராக விளையாடிய நெதர்லாந்தின் டேவிட் பெர்க்கம்ப் அடித்து உள்ளே தள்ளிய ஒரு கோலிற்கு வர்ணனையாளர் உயிர் போகும் அளவிற்கு பெர்க்கம்ப் பெயரை அஷ்டோத்ரசதம் சொல்லி மகிழ்ந்து செய்யும் வர்ணனை தான் இந்த வீடியோவின் முக்கிய அம்சம். டச்சு ரேடியோ வர்ணனையை வீடியோவில் கோர்த்து வாங்கியிருக்கிறார்கள். கம்ப்யூட்டர் ஸ்பீக்கரை ஆன் செய்து வர்ணனையுடன் கேட்டால் தான் இந்த வீடியோவிற்கு அழகு. அந்த ரேடியோ வர்ணனையாளர் பெர்க்கம்ப் பெயரை உச்சரிக்கும் தொனியில் தெரியும் உங்களுக்கு அவர்களது சாக்கர் ஆசை.







பார்த்து முடித்த பின்பும் காதை துளைத்து அந்த வர்ணனையாளர் பெர்கம்ப் சொன்னது எதிரொலியாய் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. உசுரே போகுதே.... உசுரே போகுதே......

காலம் பேசும் சுவரோவியங்கள்

மிக்கேல் அஞ்சேலோ, டாவின்சி போன்ற அதீத திறமை படைத்த மேலை நாட்டு ஓவிய அறிஞர்களும், பூ வரைந்தால் வாசமும், தீ வரைந்தால் நம்மை தீண்டும் அளவிற்கு அளப்பரிய உயிரோவியங்கள் பல வரைந்த நம் தேசத்து ஓவியர்களான ராஜா ரவிவர்மா தொடங்கி மணியம் செல்வம், சில்பி, ஆதிமூலம், மருது போன்றோரும் தூரிகை கொண்டு தீட்டிக் காட்டிய ஓவியங்களை கணினியின் துணைகொண்டு பிங் பாங் கோட்பாட்டிலிருந்து ஆரம்பித்து பரிணாம வளர்ச்சியினை சுவற்றுச் சித்திரங்களாக வரைந்து தள்ளி கணினியில் உள்ளே கொடுத்து அட்டகாசமான அனிமேஷன் கிராபிக்ஸ்  செய்து வெளியே எடுத்து படம் ஒன்று தயாரித்திருக்கிறார்கள். மச்ச, கூர்ம அவதாரங்கள் கூட அதில் இடம்பெற்றிருக்கின்றன. அதிலும் நடந்து செல்லும் ஒரு நங்கை சுவரில் தோன்றும் டினோசரை பார்த்து அலறி அடித்து ஓடுவதும், குரங்கிலிருந்து பரிணாம ப்ரமோஷன் பெற்ற மனிதன் துப்பாக்கி மற்றும் ஏவுகணை கொண்டு ஒருவரைஒருவர் தாக்கிக் கொல்வதும் அடடா... காண்பதர்க்கரிய கிராபிக்ஸ் அனிமேஷன் கலக்கல்.




மாடர்ன் ஆர்ட் ஓவியங்களை "நீ படைப்பாளி.. நான் துடைப்பாளி " என்று எச்சை துப்பி "காதலா.. காதலா" கமல்ஹாசன் துடைக்கும் ஓவியங்களும், பலகோடி மக்கள் துதித்து வணங்கும் தெய்வத் திருவுருவங்களை ஆடை இல்லாமல் வரைந்து அசிங்கப்படுத்தும் எம்.எப். ஹுசைன், "தளபதி", "அம்மா", "ஐயா", "அப்பா" என்று பலரும் பல இடங்களுக்கு அழைப்பதாக சுவர்கள் அனைத்திலும் வரைந்து வருகவென்று அழைக்கும் ஓவியக்காரர்களும், ஆஞ்சநேயர், மதர் தெரசா சித்திரங்களை நடைபாதையில் வரைந்து காசு பொறுக்கும் நடுத்தெரு நாயகர்களும் இப்பதிவு எழுதும் போது ஏனோ மனதில் வந்து வந்து மறைந்தனர்.

Wednesday, July 7, 2010

இறந்தவனின் உரையாடல்கள்

irandhavanin


நீ வீட்டுக்கு போய்க்கொண்டிருக்கும்போது இறந்துவிட்டாய்.

அது ஒரு கார் விபத்து. ஒன்றும் பெரியதாய் சொல்வதற்கில்லை. அவ்வளவு பெரிய விபத்து இல்லைதான், ஆனால் நீ உன்னுடைய ஒரு மனைவி குழந்தைகளை தவிக்கவிட்டு இறந்துவிட்டாய். தீவிர சிகிச்சை பிரிவில் முயன்று பார்த்தார்கள் ஆனால் முடியவில்லை. விதி. நீ சின்னாபின்னமாகி விட்டாய். ஒன்றும் தேறவில்லை.

அப்போது தான் நீ என்னை பார்த்தாய்.

நீ கேட்டாய் "என்ன ஆச்சு.. என்ன நடந்தது... நான் எங்கே இருக்கேன்?"

"நீ இறந்து விட்டாய்"  நான் சொன்னேன்.

"ஒரு ட்ரக் முன்னால் வந்தது, ஒரு கார் காரன் ஹார்ன் அடிச்சிக்கிட்டே பின்னாடியே வந்தான்.. அப்புறம்.... அப்புறம்.."

"ஆமாம்"

"நான்..? நான் செத்துட்டேனா?"

"ஆமாம்.. கவலைப்படாதே எல்லோரும் ஒரு நாள் சாகணும்"

நீ திரும்பி சுற்றும்முற்றும் பார்க்கிறாய். ஒரே மயான அமைதி. ஒரு அகண்ட பெருவெளி. "இது என்ன இடம்?"  "இது தான் வாழ்க்கைக்கு அப்புறம் உள்ள வாழ்விடமா?" என்று கேட்டாய்.

"கிட்டத்தட்ட அப்படித்தான் என்று வைத்துக்கொள்ளேன்" நான் சொன்னேன்.

"அப்ப.. நீ என்ன கடவுளா?" நீ கேட்டாய்.

"ஆமாம்..நான் கடவுள். " நான் சொன்னேன்.

"அப்ப என் பசங்க.. பொண்டாட்டியெல்லாம்..." நீ கேட்டாய்.

"அவுங்களுக்கென்ன இப்ப..." நான் கேட்டேன்.

"நான் இல்லாம அவங்கெல்லாம் சௌகரியமா இருப்பாங்களா" நீ கேட்டாய்..

"அதத் தான் நான் பார்க்கனும்னு ஆசைப்படறேன்.. நீ செத்துட்டே இங்க வந்துட்டே .. உன் குடும்பத்தை பத்தி கவலைப்படற... ஆனா அவுங்க  நல்லாத்தான் இருப்பாங்க. நீ இங்க வந்துட்டியே."

நீ ரொம்ப வித்தியாசமாக என்னைப் பார்த்தாய். உனக்கு நான் கடவுள் மாதிரி இல்லாமல் இருக்கலாம். வேட்டி துண்டு உடுத்திய ஒரு சாதாரண ஆம்பிளையாக தெரியலாம், ஏன் ஒரு நீண்ட குச்சி வைத்து மிரட்டுகிற கண்ணாடி போட்ட ஸ்கூல் டீச்சர் போல் கூட நீ என்னை நினைத்துப் பார்க்கலாம்.

"கவலைப்படாதே, உன் பசங்க உன்னை பத்தி எப்போதும் நினைச்சுகிட்டே இருப்பாங்க. உன்னை வெறுப்பேற்றவோ அலட்சியம் செய்யவோ இனிமே அவங்களால முடியாது. உன் பொண்டாட்டி ஊருக்காக அழுவா... ஆனா உள்ளுக்குள்ள ஒரு சர்வ சுதந்திரப் பறவை போல குஷியா வாழ்க்கையில் ஏற்ப்பட்ட ஒரு மிகப்பெரிய ஆபத்திலிருந்து விடுபட்ட மகிழச்சியில ஜாலியா இருப்பா..." நான் சொன்னேன்.

"ஓ", "இப்ப நான் சொர்க்கத்துக்கு போணுமா, இல்ல நரகத்துக்கா, இல்ல வேறெங்காவதா.."  நீ கேட்டாய்.

"எங்கேயும் இல்லை..நீ மறுபிறப்பு காணப்போகிறாய்". நான் சொன்னேன்

"ஓ அப்ப நா ஒரு ஹிந்து.."

"சே சே.. எல்லா மதமும் ஒண்ணுதான் இங்க. வா என் பின்னாடி" என்றேன் நான்.

நாம் இருவரும் வேகவேகமாக சென்றோம். "நாம எங்கே போறோம்" நீ கேட்டாய்.

"எங்கேயும் இல்லை. சும்மாதான்.. பேசிக்கொண்டே நடப்பது  மிகவும் சுகமாய் இருக்கிறது" நான் சொன்னேன்.

"அப்புறம் என்ன இருக்கு. நா திரும்பவும் பிறக்கும்போது ஒரு வெற்றுக் காகிதம் போல..இந்தப் பிறவியில படிச்சது, சம்பாதிச்சது, வசதி வாய்ப்புகள், அதிகாரங்கள் அப்படி இப்படின்னு என்ன என்ன தகுதிகள் இருந்ததோ எதுவுமே இருக்காது. சரியா" நீ கேட்டாய்.

"எல்லாமே உன்கிட்ட இருக்கு. உன்னுடைய ஆன்மா மலையளவு இருக்கும் சாதனைக் கிடங்கு. மனிதனா பிறந்தப்புறம் நமக்கு தான் எதுவுமே அதைப் பற்றி தெரியறதில்லை..." நான் சொன்னேன்.

"என்னவென்று நீதான் சொல்லேன்.." நீ கேட்டாய்.

"530 AD ல நீ ஒரு சீன தேசத்து பிச்சைக்காரி.." நான் சென்னேன்.

"ஓ..."

"போன பிறவியை விட அந்தப் பிறவியில நீ இன்னும் சந்தோஷமா இருந்தே" நான் சொன்னேன்.

"என்னை இப்போ அந்த காலத்திற்கு அழைச்சிக்கிட்டு போகப்போறியா?" நீ கேட்டாய்.

"ம்ம்ம்... இல்லை. ஆனா காலம்தான் எப்போதுமே நிலையானது. காலத்திற்கு அழிவு கிடையாது. உனக்கு எனக்கு சகலருக்கும் பொதுவானது காலம்தான். ஆனா என்னோட உறைவிடத்தில எல்லாமே வித்தியாசமா இருக்கும்"

"அது எந்த இடம்"

"அது ஒரு இடம். ஒரு விசேஷமான இடம். தனி இடம். வேறு உலகம். என்னை மாதிரி நிறைய பேர் இருக்கிற இடம். உனக்கு சொன்னா புரியாது" நான் சொன்னேன்.

"சரி. எனக்கு ஒரு சந்தேகம். இது போல எனக்கு பல பிறவிகள் இருந்தா.. நானே என்னை ஒவ்வொரு பிறவியிலும் பார்த்திக்கிட்டு வந்திருப்பேன் இல்லையா" நீ கேட்டாய்.

"ஆமாம். ஆனா ஸ்தூல சரீரத்தில இருக்கும்போது நம்மோட பௌதீக உடம்பை நாம்ப மட்டும் தான் பார்க்க முடியும் போது , இன்னொரு உடம்புல இருக்கிற நம்மளை நாமளே எப்படி பார்க்கமுடியும்" நான் சொன்னேன்.

"அப்புறம் எதுக்கு இதெல்லாம்"

"நிஜமாவா? நிஜமாவேவா கேட்கிற?.... இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்ன்னு" நான் சொன்னேன்.

"ஆமா. நான் கேட்டது நல்ல கேள்விதானே.." நீ கேட்டாய்.

நான் உன்னை தீர்க்கமாக பார்த்து அழுத்திச் சொன்னேன் "இந்த லோக மாய வாழ்க்கையின் அர்த்தம், இந்த உலகத்தை படைத்தது, உன்னை சிந்திக்க வைத்தது இப்படி எல்லாமே நீ வளர்ச்சி அடையணும். அதற்காகத்தான்."

"நான் வளர்ச்சி அடையணுமா இல்லை இந்த மானுட சமுதாயமா?" நீ கேட்டாய்.

"நீதான். இந்த உலகத்தை உனக்காகத்தான் படித்தேன். உன்னுடைய ஒவ்வொரு பிறவியிலும் படிப்படியாக நன்றாக வளர்ந்து உன் அறிவை மேம்படுத்தி, புத்திசாலித்தனத்தை மெருகூட்டி, இன்னும் இன்னும் பெரிய ஆளாக வளரவேண்டும்,  உயர வேண்டும், முதிர்ச்சி அடையவேண்டும், வளர்ச்சி அடையவேண்டும் என்பதற்காக.." நான் சொன்னேன்.

"நான் மட்டுந்தான் வளரணுமா? மத்தவங்களெல்லாம் எங்கே? அவங்கெல்லாம்...." நீ கேட்டாய்.

"இந்த அண்டசராசரத்தில் வேறு யாருமே எங்குமே கிடையாது. நீயும் நானும் மட்டும் தான் தனியா இருக்கோம்" நான் சொன்னேன்.

சுற்றிலும் ஒரு வெத்துப் பார்வை சுழலவிட்டு "அப்ப பூமியில இருக்கிற எல்லோரும்...." நீ கேட்டாய்.

"எல்லாம் நீ தான். எல்லோரும் உன்னுடைய அவதாரங்கள் தான். அம்சங்கள்தான்.."

"நிறுத்து நிறுத்து நிறுத்து நானா எல்லோரும்..எல்லோரிலும் நானா?"

"இப்ப உனக்கு புரிந்தது.. " நீ புரிந்து கொண்டதற்கு அடையாளமாக  நான் உன்னை செல்லமாக  பின்னால் தட்டினேன்.

"இந்த உலகத்தில் வாழ்ந்த, வாழுகிற, வாழப்போகிற எல்லா உயிர்களும் நானா?"

"ஆம்" நான் சொன்னேன்.

"அப்ப நான் காந்தியா?"

"ஆமாம். கோட்சே கூட நீதான்" நான் சொன்னேன்.

"நான் ஹிட்லரா?"

"ஆமாம். ஹிட்லர் கொன்ற கோடானு கோடி மக்களும் நீதான்"

"நான் ஜீசஸ்ஸா?"

"ஆமாம். அவரை பின்பற்றுபவர்களும் நீதான்"

நீ அமைதியாகி விட்டாய். உனக்கு முற்றிலும் விளங்கிவிட்டது.

"ஒவ்வொரு முறையும் யாரையாவது நிந்தித்துவிடுகிறாய்" நான் சொன்னேன் "உன்னையே.. உன்னை நீயே.. ஒவ்வொருவரையும் அன்பு செலுத்தும் போது அப்போது உனக்கும் அதை செய்து கொள்கிறாய். எந்த நேரத்திலும் சுகம் மற்றும் துக்க தருணங்களை மனித சமுதாயத்தில் யார் உணர்ந்தாலும் அதை நீயும் உணர்கிறாய்..." நான் சொன்னேன்.

உன்னுடைய நீண்ட யோசனைக்குப் பின்..

"ஏன்?" ஏன் இப்படியெல்லாம்...?" நீ கேட்டாய்.

"ஏனென்றால், என்றைக்காவது ஒருநாள் நீ என்னைபோல ஆவாய். நீ என்னைபோல ஒருவன். என்னுடைய குழந்தை.."

சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கித் திளைத்த நீ கேட்டாய்.. "அப்ப நானும் என்ன உன்போல கடவுளா?"

"இல்லை இல்லை இன்னும் இல்லை.. இப்போது நீ கருவில் வளரும் மனிதனின் முதல் நிலையில் இருக்கிறாய். நிறைய மனிதப் பிறவிகள் நீ பிறந்து இளைத்தபின் முற்றிலும் கருவில் வளர்ந்து என்னைப்போல் பிறப்பதற்கு, வெளி உலகிற்கு வருவதற்கு  தயாராகிவிடுவாய்" நான் சொன்னேன்.

"அப்போ நான் இருக்கும் இந்த உலகம்..." நீ கேட்டாய்.

"ஒரு முட்டை" என்று நான் சொன்னேன்.

"நீ அடுத்த பிறவி எடுக்க நேரம் வந்துவிட்டது. நீ போகலாம்." நான் சொன்னேன்.

உன்னை வழி காண்பித்து அனுப்பிவைத்தேன்.

நெட்டில் கிடைத்த கதை இது. மிக சுவாரசியமாக மூன்று நான்கு அனானிகள் சேர்ந்து உருவாக்கிய கூட்டுக்கதை இது. தமிழ் மொழியாக்கத்தில் சில சில இடங்களில் என்னுடைய சொந்த சரக்கின் சேர்க்கை இருக்கிறது.  சரக்கின் தரம் உங்கள் முடிவில். கடவுளும் மனிதனும் ஒன்று என்று சொல்லும் சில இடங்களில் இந்தக்கதை பேசுவது அத்வைதமோ?.

மேலே படித்ததின் ஆங்கில மூலம் இங்கே: http://i.imgur.com/VlwP6.jpg
பட உதவி: http://community.livejournal.com/ru_foto/42034316.html

Tuesday, July 6, 2010

மூளை முடிச்சுகள்


 வண்டி ஓட்டும்போது லெப்ட்ல கட் பண்ணனுமா இல்லைன்னா ரைட்லயா, ஆட்டோகாரனை திட்டனுமா முறைக்கனுமா, நடைவண்டி மாதிரி கார் ஓட்டுற அந்த பழத்தை முந்தனுமா வேண்டாமா, பக்கத்து வீட்டு ஆன்டி ஷகிலா மாதிரி இருக்கா, அந்த சுருட்டைத்தலையன் பைக் பின்னாடி உட்கார்ந்து போறது எதிர்த்த வீட்டு பி.ஈ படிக்கற பொண்ணா, ஏன் இன்னிக்கி ரசத்துல உப்பே இல்லை, அஞ்சும் மூனும் எட்டுதானா, நமக்கு இருக்கிற புத்தி ஏன் பக்கத்து வீட்டு ஆளுக்கு இல்லை குப்பையை நம்ம வீட்டு வாசல்ல வந்து கொட்டறான், அற்ப சங்கைக்கு எங்க ஒதுங்கணும், ரோடுல என்னென்ன செய்யணும், வீட்டுல நாலு சுவத்துக்குள்ள என்னென்ன செய்யணும், ராமராஜன் படம் பார்கலாமா கூடாதா, எக்ஸாமுக்கு இந்த சாப்ட்டர் படிக்கலாமா இல்லன்னா சாஸ்ல விடலாமா, நாம எப்படி வித்தியாசமா லவ் லெட்டர் கொடுத்தா அந்த பிஃப்டி கே.ஜி தாஜ்மஹால் ஏத்துக்கும், அவங்க அப்பன் அருவா எடுத்து வெட்ட வருவானா, அம்பது வயசுல நமக்கு ஜீன்ஸ் டீ ஷர்ட் போட்டா நல்லா இருக்குமா அதை கண்ணாடில பார்த்தோமா, அத பார்த்துட்டு ரோட்ல நாலு பேர் நடமாட முடியுமா...............

.............இருக்குற வேலையை விட்டுட்டு பறக்குற வேலைக்கு மனு போடலாமா, இலக்கியத்துக்கும் இலக்கணத்தும் தலைக்கனத்துக்கும் என்ன சம்பந்தம் அல்லது வித்தியாசம், அம்மா யாரு, அன்னை யாரு, ஐயா யாரு, பொண்டாட்டி யார், ரெண்டாவது பொண்டாட்டி யாரு, பத்தினி யாரு, மேட்டர் பார்ட்டி யாரு, இந்த மாசத்துக்கு எவ்வளவு ரூபா இருந்தா வண்டி ஓடும், யாரு முதலாளி, யார் பாஸ், யாரு மொட்டை பாஸ், இன்னிக்கு ஷேர் மார்க்கட் கரடியா, மாடா, மனுஷனா, நம்ம குலசாமி யாரு, சூப்பர் கம்ப்யூட்டர், ஜெட் ரயிலு, சார்டெட் பிளேனு, அரசியல்வாதி எல்லாம் ஏன் வெள்ளைல இருக்காங்க, நீல் மெட்டல் பனால்கா குப்பைத்தொட்டி, சென்னை கார்போரேஷன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ரஹ்மான், பாடும் நிலா எஸ்.பி.பி,  கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி, வைரமுத்து, தியாகராஜர் கீர்த்தனை, கர்நாடிக் மியூசிக், திருவையாறு, கள்ளக்காதலன் கொலை, பாங்கில கொள்ளை, வில்ஸ் சிகரெட், பான்பராக் குட்கா, கஞ்சா, சுண்டிசோறு இதுல எது போதை அதிகம் தரும், இராப்பிச்சைக்காரன் யாரு, அம்பானி யாரு அதிலயும் அனில்யாறு முகேஷ் யாரு, தோனி-பள்ளித்தோழி கல்யாணம், சானியா மிர்சா- ஷோயப் இன்டர்நேஷனல் நிக்காஹ், ஒபாமா ஏன் அமெரிக்க தேர்தல்ல நிக்கும்போது ஆஞ்சநேயர் சிலை கைல வச்சிருந்தார், எப்ப தூங்கணும், எப்ப எழுந்திருக்கணும், நாம ஏன் இப்படி எல்லாம் பதிவு எழுதிக்கிட்டு இருக்கோம்...........

இப்படி நம்மோட சகல சௌபாக்கியத்திற்கும் காரணகர்த்தாவாக இருக்கிற மூளையின் ந்யூரான்களின் தோற்றம் தான் மேலே இருக்கும் படத்தில்... .............. 

 பட உதவி: http://kottkegae.appspot.com/images/1899-neurons.jpg

கிரேன் டிரைவர்

இந்த படங்களை பார்த்தவுடன், நாலு தடி ஆட்கள் என் கனாக்களில் வந்து என்னை என்  கற்பனை குதிரையில் ஏற்றி வலுக்கட்டாயமாக உட்காரவைத்து கல்கியின் வந்தியத்தேவன் மாதிரி சவாரி செய்து ஒரு  விறுவிறு கதை எழுத சொன்னார்கள். இந்த படங்களை ஆர்வத்துடன் கிளிக்கிய http://catkid.livejournal.com க்கு இருகை கூப்பி  நெஞ்சார்ந்த ஒரு நன்றி கார்ட் டைட்டிலில் போட்டுவிட்டு ஆரம்பிப்போம். எல்லாத்துக்கும் நாலு பேர் தேவைப்படுகிறது. ஒ.கே ரெடி ஸ்டார்ட்... டேக்.. இந்தக் கதையை காக்க காக்க அன்புச்செல்வன் சொல்வது போல படிக்கவும்..

1ரொம்ப நாள் முன்னாடி நான் வேலைப்பார்த்த கம்பனி இது. முதலாளி சுத்த மோசமான ஆள். தன்னை சுத்தி இருக்குற யாரையும் துளிக்கூட நம்பமாட்டான். கட்டுன பொண்டாட்டி, பையன், பொண்ணு அப்படின்னு யாரையுமே. காலையில ஆறு மணி ஷிப்ட்டுக்கு போனா சாயந்திரம் ஆறு மணி வரைக்கும் வேர்வையோட ரத்தம் சொட்ட சொட்ட உழைக்கணும்.  என்னோட வேலை நீங்க பார்க்கிற இந்த கிரேன் ஓட்டனும், ஒண்ணுல்ல ரெண்டுல்ல பன்னெண்டு மணி நேரம்.


2
இந்த வலதுகைப் பக்கம் நீங்க பார்க்குற தெருவின் கடைசி மூலையில தான் எங்க முதலாளியோட வீடு இருந்தது. ரொம்ப பெரிய பங்களா. அஞ்சாறு காரு, ஆள், அம்பு சேனைன்னு ஒரு பெரிய கூட்டமே உள்ள இருந்தது. கம்பனி சுத்திப்பாக்க ஒரு நாள் அவரோட பொண்ணு வந்தப்ப என்னோட மொத ஷிப்டு ஆளு மேலேர்ந்து ஒரு கான்க்ரீட் ஸ்லாப் எடுத்து வேற இடம் மாற்றும் போது இவ மேல போட்ருப்பான்.  பாவி. உலகத்துல அழகுக்கு எடுத்துக்காட்டே இல்லாம போயிருக்கும். இவ மேல படும்னு நான் பாஞ்சு அவளை அணைத்து அந்தப் பக்கம் உருண்டேன். உருண்டதுல அவளுக்கு தலையில லேசா ரத்தம் வந்து, என் சட்டையை கிழிச்சு கட்டு போட்டு.. இப்ப எதுக்கு அதெல்லாம் விடுங்க. அப்ப அவளை வீட்டுக்கு இந்த வழியாத்தான் கொண்டுவந்து விட்டேன்.


3இப்ப நீங்க இடது கைப்பக்கம் பார்க்கறது என்னோட வீட்டுக்கு போற வழி. சுடுகாடு தாண்டி போகணும். அந்த அசம்பாவித சம்பவம் நடந்த முடிஞ்ச பிறகு ஒரு நாள் சாயந்திரம் ஆறரை மணி வாக்கில் ஹவாய் செருப்பு தேய நான் இந்த வழியா நடந்து போற போது அவ வந்து கார்ல வரியா அப்படின்னு கேட்டா. பர்சுல வைக்குற பணம் லாக்கர்லையும் கால்ல போடற வாக்கர் வெளியிலையும் கிடக்கணும் அப்படிங்கற மனுஷ ஜாதியின் எளிய விதி எனக்கும் தெரிஞ்சிருந்தது. இல்லைங்க பரவாயில்ல.. நீங்க போயிட்டு வாங்க அப்படின்னு சொல்லி அனுப்பினேன். என்னோட மனசு மட்டும் அவளோட கார் ஏரி அப்பவே போய்டிச்சி.


4நீங்க பார்க்கிற இந்த வலது கைப்படம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. யாராவது ஒளிஞ்சிருந்து "பா..." அப்படின்னு பயம் காட்டினாலே நாலு நாள் ஜுரத்துல படுத்துருவேன். ஆனா அன்னிக்கு, அப்படி ஒரு யான பலம் எப்படி வந்ததுன்னு எனக்கே தெரியல. கார் ரிப்பேர் ஆனதால அவ நடந்து இந்த வழியாத்தான் காலேஜ் போய்க்கிட்டு இருந்தா. அவ்ளோ கார் இருந்தும் ஒரு தடியனும் அன்னிக்கி வரல. அன்னிக்கு காலையில எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. லீவ் போட்டுட்டு டாக்டரை பார்க்க போய்கிட்டு இருந்தேன். அந்த கோடி வீட்டு காசுக்கார தடிப்பய முன்னாடி பின்னாடி போய் அந்த தங்கத்தை உரசி உரசி பார்த்தான்.   சொல்லிப் பார்த்து, கொஞ்சி பார்த்து, கெஞ்சி பார்த்து ஒத்து வராம போட்டேன் தலையில பக்கத்துல கிடந்த பாறாங்கல்லை தூக்கி.


5மயங்கி தான் கீழ சாஞ்ஜான்னு நினைச்சேன். ஆனா அவன் அப்புறமா எழுந்திரிக்கவே இல்லை.  மேல போய் சேர்ந்துட்டான். அங்கேர்ந்து நாலு கால் பாய்ச்சல்ல ஓடிட்டேன். ரெண்டு மூனு நாள் யார் கண்ணுலேயும் படாம அங்ஞாதவாசம் இருந்தேன். அவளை பார்க்காம இருக்க முடியலை. கண்ணு ரெண்டும் எங்க பார்த்தாலும் அவளையே எனக்கு காட்டிச்சு. மறஞ்சு மறஞ்சு வந்து நீங்க இங்க பார்க்கிற இந்த இடத்தில நின்னு பார்த்தேன். அவளுக்கு அப்படியே அழுகை பொத்ததுக்கிட்டு வந்தது. என்னாலதானே உனக்கு இந்த நிலைமை அப்படின்னு ரொம்ப அழுதா. நா அவளைத் தேத்திட்டு,  கவலைப்படாதே நான் வந்துடுவேன் அப்படின்னு ஆறுதல் சொன்னேன்.

6அவ கிட்ட பேசிட்டு அடுத்த தெரு வறதுகுள்ள  போலீஸ் என்னை சுத்தி வளச்சிட்டாங்க. ஒன்னும் செய்ய முடியலை. கொலை குத்தம் சொல்லி என்னை ஜெயில்ல போட்டுட்டாங்க. ஜெயில் கம்பியில, கிறுக்கின செவுருல, கக்கூசுல இப்படி எங்க பார்த்தாலும் அவ நினைப்புதான். நாலு பாரா முன்னாடி அவ கார்ல லிப்ட் கொடுத்தப்ப வேண்டாம்ன்னு சொன்ன நான் ஏன் எப்படி ஆயிட்டேன்னா அது அவளோட அந்த கொள்ள அழகு. எல்லாரையும் அவ பின்னாடி சுத்த விடுற அழகு. நாட்கள் ஓடிக்கிட்டே இருந்திச்சு. மனசு சொல்லிகிட்டே இருந்திச்சு. எப்படியாவது இங்கேர்ந்து தப்பிச்சு போயிடனும் அப்படின்னு திட்டம் போட்டு ஒரு நாள் ஜெயில்ல பின்னாடி இருந்த ஒரு கதவு, நீங்க இங்க பாக்குறீங்களே அந்த கதவுதான், அது வழியா தப்பிச்சு ஓடி வந்தேன்.

7அங்கேர்ந்து நேரா அவ காலேஜுக்கு போனேன்.... அங்க அவ இல்லை... போற வர ப்ரொபசர் ஸ்டுடென்ட் எல்லார்ட்டையும் கேட்டேன். யாருக்கும் ஒன்னும் தெரியலை... என்னை மலங்க மலங்க பார்த்தானுங்க.. காதல் வந்த ஒருத்தனை இப்பதான் முத முதல்ல பார்க்கறானுங்க போலன்னு நினைச்சேன்..


8

அங்கேர்ந்து அவர் கார்ல வீட்டுக்கு போற வழிய ஓடினேன்... கரண்ட் கம்பி மேல உட்கார்ந்திருந்தா காக்கால்லாம் என் வேதனைய பார்த்து அழுது கத்தி கூட்டமா பறந்து போச்சு... எனக்கு ஒன்னுமே புரியலை.. அவங்க வீட்டுப் பக்கம் போனா அங்கே யாருமே இல்லை... கால் வலிக்க வலிக்க ஊர் முழுக்க மறஞ்சு மறஞ்சு ஓடினேன்... என்ன பன்றதுன்னே தெரியலை.. அதுக்குள்ள ஊர்ல போலீஸ் தேட ஆரம்பிச்சிட்டுது..








9இப்படி இருக்குற போதுதான் அவங்க கார் ரிப்பேர் பண்ற மெக்கானிக் செட்டுக்கு போய் பார்க்கலாம்ன்னு போனேன். ஒன்னு ரெண்டு ஜீப்பு நின்னுச்சு.. யாரையும் காணலை. கடைப் பையன்ட எங்கடா முதலாளி அப்படின்னு கேட்டேன்... அவன் ரெண்டு வண்டி தாண்டி கீழ காட்டினான்.



10குனிஞ்சு கீழ படுத்திருந்த மெக்கானிக்கை பார்த்தேன். அவன் என்னை பார்த்ததும் அலர்ட் ஆயிட்டான். எப்படியும் போலிசை கூப்பிடுவான்னு தெரியும். அதுக்குள்ள அவனை மடக்கி எங்க என் முதலாளி குடும்பம் அப்படின்னு கேட்டேன். அவன் எங்க முதலாளி குடும்பம் சீரழிஞ்ச கதையை சொல்லிட்டு, அவங்க ஊருக்கு வெளியே இருக்கிற ஒரு பலமாடி குடியிருப்புல  ஒரு ஒண்டி குடித்தனத்துல இருக்காங்க அப்படின்னு சொன்னான்... அங்கேர்ந்து ஓடினேன்...





11அந்த காலனியை நான் அடைஞ்சபோது எனக்கு உண்டான சந்தோஷத்தை சொல்ல எனக்கு வார்த்தையில்லை. அவளோட என்ன பேசணும், எப்படி இருப்பா இப்படி பல கனவுகளை எனக்குள்ள வளர்த்துகிட்டு நான் போனா.... அங்க நான் பார்த்தது வேற... சொட்டையா... அசிங்கமா ஒருத்தன் அவள்  தோளைத் தொட்டு பேசிக்கிட்டு இருந்தான். ஒரு சின்ன அரை நிஜார் போட்ட பையன் அவ இடுப்புல... பக்கத்து கடைக்காரன் அவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி அப்படின்னு சொன்னான். அப்படியே இடிஞ்சி போயிட்டேன்.

12வழக்கமா எல்லா கதையிலும் அவ எப்படி இருந்தாலும் நல்லா இருக்கட்டும் அப்படின்னு சொல்ற மாதிரி நானும் மனசுக்குள்ள சொல்லிட்டு,  அந்த இடத்தை காலி பண்ணிட்டு, நம்ம ஊர்ல இடத்துக்கா பஞ்சம், சிலையெல்லாம் நிறையா இருக்குற பீச் பக்கமா ஒதுங்கினேன். அந்த சிலை கீழேயே மூஞ்சியில துண்டைப் போட்டு மணல்ல படுத்து தூங்கினேன். காலையில ஒரு காளை மாடு அந்த சிலை பக்கம் ஒதுங்கினப்ப எனக்கு விழிப்பு வந்திச்சு..

16நான் இப்ப ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இனிமே  நமக்கு வெளிஉலகம் சரிப்பட்டு வராது. அவ இல்லாத உலகம் நமக்கு சிறை தான் அப்படின்னு நினைச்சுக்கிட்டு வானத்த அண்ணாந்து ஒரு தடவை பார்த்துட்டு நேர ஜெயிலப் பார்க்க நடையை கட்டினேன்.

Monday, July 5, 2010

வேலை வெட்டி இல்லாத வேளை

"வீட்டுக்கு அமிச்சிட்டாங்க, சம்பளத்துல கை வச்சிட்டாங்க, அரை நாள் வேலை பார்த்தா போதும்னு சொல்லி வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாங்க.." இப்படி ஏகத்துக்கு பஞ்சப் பாட்டு பாடும் 55% வயதுக்கு வந்தவர்கள் (Adults) முப்பது மாதங்களுக்கு முன்பு வெற்றிநடை போட்டு ஆரம்பித்த பொருளாதார மந்த நிலையில் தங்களது நிலை பற்றி
Pew Research Center என்ற  ஆராய்ச்சி  நிறுவனம் செய்த வயத்தெரிச்சல் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வில் மேலும், அமெரிக்கர்களின்  கார்டு தேய்த்து கடன் வாங்கும் மற்றும் செலவழிக்கும் பாணி முற்றிலும் மாறிவிட்டதென்றும், பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய முடிவுகள் பற்றிய அக்கறை தற்போது இல்லை என்றும், தங்களது பணி ஓய்வுக் கால திட்டங்கள் முற்றிலுமாக மறந்து விட்டார்கள் என்றும்,  பர்ஸ் மற்றும் வீட்டின் மதிப்பு போன்றவை நல்ல நிலைக்கு உயர இன்னும் பல வருடங்கள் பிடிக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.

இந்த வேலை வெட்டி இல்லாத ஏழரை நாட்டு சனி வேளை தங்கள் தேசத்தை பிடித்த வேளையில் தங்களுக்கு என்னவெல்லாம் நிகழ்ந்ததென்று அவர்கள் வாயாலேயே கேட்டு இந்த பட்டியலை தயாரித்திருக்கிறார்கள். 

1. விலை நிறையா வச்சு விக்கிற உசத்தி கம்பெனி பொருளை வாங்குறதை விட்டுட்டு கம்மியா பிளாட்பாரத்தில போட்டு விக்கிற கம்பெனி சாமானை வாங்குறோம்.
2. காசை பாங்கிலும் கார்டிலும் சுத்தமா வழிச்சிக்கிட்டு புள்ள குட்டியோட பல ஊர் சுத்துறதை சுத்தமா நிறுத்திட்டு சைக்கிள்ல சொந்த ஊர்ல தெருக் கோடி வரை போய் வயல் வரப்பை பார்த்துட்டு அதையே சுற்றுலாவா நினைச்சு திருப்தி பட்டுக்குறோம்.
3.கொஞ்ச நஞ்சம் இருக்கிற கைக்காசை ரத்தன் லால் சேட்டு மாதிரி வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறோம்.
4. உற்சாக பானம், கடா மார்க் பீடி, சிகரெட் போன்ற லாஹிரி வஸ்த்துக்கள் உபயோகிப்பதை சுத்தமா  நிறுத்திவிட்டோம். நம்மூர் தாய்மார்கள் இங்கே இந்த நிலைமை வாராதா என்று ஏக்க பெருமூச்சு விடுவது அமெரிக்காவிற்கு ஆடிக் காற்று போல இருப்பதாக எல்.ஏவில் இருக்கும் என் அத்தைப் பையன் போன் போட்டு சொல்கிறான்.
5. உடம்புக்கு ஒரு சீக்கு வந்தாக் கூட மருந்து வாங்க காசு இல்லை.
6. ரெண்டு நாள் முந்தி பழகினவன்ல ஆரம்பிச்சு இருவது வருஷமா நண்பனா இருக்கறவன், ஒன்னு விட்ட ரெண்டு விட்ட மூனு விட்ட சித்தப்பாவோட பசங்க அப்படின்னு எந்த வித்தியாசமும் பார்க்காம தலையில் கவுத்த தொப்பியை கையில ஏந்தி திருவோடா மாத்தி பிச்சை எடுக்குறோம்.
7. வீட்டு வாடகை வாங்கறத்துக்கு ஓனர் வந்தா வெளிக்கதவை வெளிப்பக்கமா நவ்தால் பூட்டு போட்டு தாப்பா போட்டு கட்டிலுக்கு அடியில போய் ஒளிஞ்சுக்குறோம்.
8. கட்ட பிரம்மச்சாரியா இருக்கிறவங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்ன்னு இருக்கோம், கல்யாணம் பண்ணிகிட்டவங்க பண்ணியும் பிரம்மச்சாரியா இருக்காங்க என்கிற அதிர்ச்சியான உண்மையை ஒத்துக்கிட்டிருக்காங்க.
9. அப்பா அம்மாட்ட விரச்சுக்கிட்டு வீட்டை விட்டு தனியா ஓடிவந்த நாங்க திரும்பவும் எங்களை பெற்ற தெய்வங்களின் பாதங்களையே சரணாகதியாக தஞ்சம் அடைந்துள்ளோம்.
10. பாங்க்ல நோட்டீஸ் விட்டு லோன்-ல வாங்கின வீட்ட அவங்கள்ட்ட கொடுத்துட்டு வீட்டை விட்டு விரட்டி விட்டுட்டாங்க.

மேலே குறிப்பிட்டது அவர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கூரிய பல வயற்றெரிச்சல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து.

தகவல் உதவி:  http://andrewsullivan.theatlantic.com
பட உதவி: http://funkyminds.blogspot.com/

Friday, July 2, 2010

ஆங்கில கெட்ட வார்த்தைகளின் அகராதி

ஆங்கில படங்களில் மற்றவரை அவமானப்படுத்த வாய்க்கு வந்தபடி திட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு காட்சிகளின் தொகுப்பு இது. ஆங்கில கெட்ட வார்த்தைகளின் சொற்களஞ்சியம். சில காட்சிகள் பார்பதற்கு நிஜமாகவே நன்றாக இருக்கிறது. நம்மூர் படங்களில் வாயை மட்டும் அசைத்து பின்னணி இசை அமைத்து திட்டுவதை இவர்கள் முகத்துக்கு நேரே கையை நீட்டி, கண்கொட்டாமல் பார்த்து அசிங்க அசிங்கமாக திட்டுகிறார்கள். கெட்ட வார்த்தை கேட்க மனமில்லாதோர் தயவுகூர்ந்து இந்த வீடியோவை பார்க்காமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

காதுகளில் இரத்தம் வழிகிறதா? Same Blood.....

Thursday, July 1, 2010

சாப்ட்வேர் இன்ஜினியர்களின் மேலான கவனத்திற்கு

கீழ்காணும் வீடியோவில் மைக்ரோசாப்ட் .நெட் Vs ஜாவாவை ஒரு சினிமா போல் ட்ரைலர் ஒட்டி காண்பித்திருக்கிறார்கள். மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த வீடியோ காட்சியில் 2:42 லிருந்து 2:44 வரை  வெறும் இரண்டு நொடிகள் மாத்திரமே ஆங்கில படங்களில் வரும் அந்த மாதிரி ஒரு அசைவக் காட்சியும் இருக்கிறதால் இதை இங்கு பதிப்பிக்கிறேன். ஜாக்கிரதை! அந்த இரண்டு நொடி 'A' காட்சியினால் இதை இங்கே பிரசுரிக்காமல் விட்டால் மென்பொருள் உலகம் வன்பொருள் கொண்டு என்னை தாக்கும்.  மற்றபடி உண்மையிலே ஒரு சூப்பரான ஒரு ட்ரைலர்... ENJOY!!!!




இந்த ட்ரைலரால் விளங்கும் நீதி என்னவெனில், ஜாவா படிச்சா SCALA JOHANSSON மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கும்.

Tuesday, June 29, 2010

கட்டை விரலின் மூன்று மடங்கு?

வாயிலிருந்து உணவு வயிற்றுக்கு செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் ஏழு வினாடிகள்.

மனித முடி மூன்று கிலோ எடைவரை தாங்கும் சக்தி கொண்டது.

ஆண்களின் மெயின் சுவிட்ச் கட்டை விரலின் மூன்று மடங்காக இருக்கும்.

தொடை எலும்புகள் கான்க்ரீட் அளவிற்கு கடினமானவை.

பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தைவிட வேகமாக துடிக்கும்.

ஆண்கள் பத்து முறை கண் இமைத்தால் அதே நேரத்தில் பெண்கள் இருபது முறை இமைக்கிறார்கள்.

நாம் நன்றாக நிற்பதற்கு 300 தசைகளை உபயோகிக்கிறோம்.

மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் மகளிர் படித்து முடித்துவிட்டனர்.
ஆண்கள் இன்னமும் கட்டை விரலையே பார்த்துக் கொண்டிருகின்றனர்.
 
இந்த மனித உடற்க்கூறுகளின் அளப்பரிய ஆதாரம் அனைத்தும் படமாக கீழே உள்ள சுட்டியில் (இதை சனிக்கிழமை சங்கதிக்கு உபயோகித்திருக்கலாமோ??? )


பட உதவி: http://icanread.tumblr.com/post/721431440

Monday, June 28, 2010

அடங்கும் அறைகலன்கள்

இத்தாலி நாட்டின்  (ஆமாங்க அன்னை சோனியா காந்தி ஊருதான்) ரிசோர்ஸ் பர்னிச்சர்ஸ் (அறைகலன்கள்) என்ற நிறுவனம் இரண்டு படுக்கை குடியிருப்பில் இருபது பேர் வசிப்பதற்கான வழிமுறைகளை டேபிள், கட்டில், சேர் முதலியவற்றை நீட்டி, மடக்கி நிமிர்த்தி, சாய்த்து உபயோகிக்க வடிவமைத்துள்ளது.  ஒரே இடத்தில் கால் நீட்டி படுக்க, மடக்கி உட்கார்ந்து படிக்க, சாப்பிட என்று சர்வ காரியங்களையும் செய்வதற்கு ஏதுவாக அறைகலன் வடிவமைப்பு செய்துள்ளது. கீழ்காணும் வீடியோ காட்சியில் அந்த நிறுவனத்தின் ப்ரிசிடென்ட் ரோன் பார்த் வீட்டின் அறைகள் முழுவதும் சுவரோரத்தில் இருக்கும் எததையோ சாய்த்து, மடக்கி கட்டில் போட்டுக் காண்பிக்கிறார்.  எல்லா அறைகளையும் படுக்கையறை ஆக்குகிறார். அவர் கூட டெமோ காண்பிக்கும் அந்த பாண்டியராஜன் பட ஏலம் விடும் அம்மணி கட்டில் சேர்களை அலுங்காமல் குலுங்காமல் உட்கார்ந்து எழுந்து அசால்ட்டாக மடக்கி நிமிர்த்தி போடுகிறார். வசிக்கும் குடியிருப்பில் இரண்டாவது படுக்கையறை சிறியதாக இருக்கிறது என்று அங்கலாய்த்துக் கொண்டவர்கள் இப்போது தங்களது இரு பிள்ளைகளையும் மிகச் சௌகரியமாக கட்டிலில் போட்டு "ஆராரோ.. ஆரிராரோ" பாடுகிறார்கள் என்கிறார் பார்த். ஒவ்வொன்றின் வடிவமைப்பும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.  பாருங்கள்...





இந்த மாதிரி செட்டப்பை பார்க்கும்போது இன்கம்டாக்ஸை ஏமாற்றி சொத்து சேர்த்திருக்கும் அனைவரும் இதை வாங்கி கீழே சி.டி, ஆவணங்கள் போன்ற அனைத்தையும் அடுக்கிவிடுவார்கள் போலிருக்கிறது. இந்தியா மாதிரி நாடுகளில் ஏக கிராக்கி இருக்கும் விற்பனை பொருளாக பிரகாசமான வாய்ப்புள்ள பொருள் இது.
 
அதுசரி நம்மூர்களில் வீடுதோறும் பரண்களில் வண்டிவண்டியாக லோடு ஏற்றி வைத்திருக்கிறார்களே அதையெல்லாம் என்ன செய்வது?

Sunday, June 27, 2010

சனிக்கிழமை சங்கதி - உமிழ்நீர் உலை நீராவது எப்போது?

தவிர்க்க இயலாத காரணங்களால் இப்பகுதி ஒருநாள் தாமதமாக வெளியாகிறது.

திரிலோக சஞ்சாரியான நாரதர் போல நாமும் வானவீதியில் ஹாயாக பறக்க முடியுமா? இந்த கேள்விக்கான விடையை அமெரிக்க விண்வெளி நிறுவனம் NASA ஒரு கேள்விக்கான பதிலாக வெளியிட்டுள்ளது.  விண்வெளியில் அதற்க்கான ஹெல்மெட், ஜாக்கெட் போன்ற ஆடை அணிகலன்கள் இல்லாமல் எவ்வளவு நேரம் உயிர்வாழலாம் என்ற கேள்விக்கு, சுவாசத்தை அடக்கவில்லை என்றால் ஒன்றிரண்டு நிமிட நேரத்தில் உயிர் பிரிய வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். முதல் பத்து நொடிகளுக்குள் உடலெங்கும் "முண்டு முடிச்சுகள்" போன்று உருவாகும் ( தசைகள் மற்றும் அதனடியில் உள்ள திசுக்களினால்). சற்று நேரத்தில் ஆக்சிஜென் குறைப்பாட்டால் நினைவிழக்கும். அப்புறம் எருமை மீதேறி வரும் எமன் பாசக்கயிற்றை வீசி உங்களை "வா வா"  என்றழைப்பது உங்களுக்கே நிதர்சனமாக தெரியும் என்கிறார்கள்.

தசைகளின் வெப்பம் காக்கும் தன்மையினாலும், ரத்தத்தின்  இடைவிடாத சுழற்ச்சியினாலும் உடலில் ரத்தம் உடனடியாக கொதிப்படைந்து நாம் வெடித்துவிட மாட்டோம். அதேபோல வான்வெளியில் உள்ள மிக குளிர்ச்சியான சீதோஷ்ணத்தால் உடலில் உள்ள வெப்பம் அவ்வளவு சீக்கிரம் வெளியாக முடியாதலால் உடனடியாக நாம் உறைந்துவிடவும் மாட்டோம்.

விண்வெளியில் அதிக சிரமும், உயிரையும் பயணம் வைத்து செல்வோரை, நாம் விண்வெளி வீரர்கள் என்போம், ஆனால் ஆராய்ச்சி கூடத்தில் அவர்களை 'சப்ஜெக்ட்' என்பார்கள். 1965 ம் வருடம் Joe Kittinger என்ற 'சப்ஜெக்ட்' தனக்கு ஏற்ப்பட்ட அனுபவத்தை சொல்கையில், தனக்கு பதினான்கு நொடிகள் நினைவு இருந்ததாக சொல்லியிருக்கிறது. இந்த பதினான்கு நொடிகள் வரை நுரையீரலிலிருந்து மூளைக்கு ரத்தம் சென்றுகொண்டிருக்கும்.  அடுத்த முப்பது நொடிகளுக்குள் மீண்டும் காற்றுப்பைக்குள் ஆக்சிஜெனை நிரப்பி சப்ஜெக்ட்க்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். உயிரோடு பூலோகம் வந்தடைந்த சப்ஜெக்ட்டிடம் "எப்படீப்பா இருந்தது" என்று குசலம் விசாரிக்கையில், தனக்கு காற்றுக் கசிவு மிகத்தெளிவாக கேட்டதாகவும், உணர்ந்ததாகவும் சொல்லிவிட்டு கடைசியாக நினைவு தப்பிப் போகையில், நாவில் சுரந்த நீர் அடுப்பில் உலை கொதிப்பது போல் சூடாக இருந்ததாக சொல்லிற்றாம்!!!

பட உதவி: http://www.ballardian.com
தொடர்புடைய சுட்டி: http://imagine.gsfc.nasa.gov/docs/ask_astro/answers/970603.html

Friday, June 25, 2010

க.மு. க.பி.

தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா இருக்கா?

கீழே உள்ள படத்தில் கண்ணாடிக்கு முன் கண்ணாடிக்கு பின் ஒருவருடைய பர்சனாலிடி அடையும் மாற்றத்தை அட்டகாசமாக சித்தரித்திருக்கிறார்கள்...

kamu kapi

கடிகாரச் சுற்றுப் பிரகாரம்:

க.மு: லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
க.பி:  பேராசிரியர் பெத்தண்ணா .

க.மு:  ஜாலி ஜலஜா
க.பி:  சீரியஸ் ஷில்பா 

க.மு:  கடாவெட்டி கந்தசாமி
க.பி: ஆர்டிஸ்ட் அப்பாசாமி

க.மு: அடியாள் ஆறுமுகம்
க.பி: ஆடை ஆல்பர்ட்டு


பட உதவி: http://images.wildammo.com/2010/06/12/oh-the-difference-glasses-can-make/

Thursday, June 24, 2010

பா.ஜ.க பேந்த்தர்ஸ், காங்கிரஸ் கோப்ராஸ், சி.பி.ஐ. கேடர்ஸ்.....

இமெயிலில் நண்பர் மாதவன் மூலமாக வந்தது இது. ஐ.பி.எல்லை நாட்டுடமை ஆக்கினால் என்னென்ன அற்புதங்கள் நிகழும் என்று கற்பனையாக கீழ்காணும் 21 கருத்துக்களை கலாயலாக சொல்லியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சலின்  தமிழ்ப் படிவம் கீழே....அடியில் சிரித்துக்கொண்டு போஸ் கொடுப்பவர்கள் போட்டியின் போது கண்களுக்கு விருந்தளித்து உற்சாகப்படுத்தும் ஐ.பி.எல் நடன மங்கையர்கள்...ஒரு நினைவுகூர்தலுக்காக.....

IPL cheerleaders


1. லலித் மோடியை வீட்டுக்கு அனுப்பும் புதிய ஐ.பி.எல் ஆணையர் 1989-ம் வருஷத்தில் ஐ.ஏ.எஸ் தேறிய அதிகாரியாக இருப்பார். அவர் நிச்சயம் எப்.சி.ஐ போன்ற பொதுத்துறை நிறுவனத்திலிருந்து மாற்றலாகியிருப்பார்.  கிரிக்கெட்டில் எவ்வளவு கோல் போடுவார்கள் என்று கேட்பார்.

2. புது ஆள் திருவாளர் தலித் மோடி தன்னுடைய ஆளாக இருக்க வேண்டும் என்பார் மாயாவதி. இல்லையேல் மத்தியில் ஆதரவு வாபஸ்.


3. பூர்வாங்கமாக மும்பை இந்தியன் என்ற பெயரை மும்பை மன்னர்கள் என்று மாற்றுவார்கள். மகாராஷ்டிரா மக்கள் மட்டுமே களமிறக்கப்படுவர் (அதிமுக்கியமாக மகாராஷ்டிரா பிராமணர்கள்). மகாராஷ்ட்ரம் அல்லாதோருக்கு போட்டிக்கு முன் கால் முறிந்துவிடும். ஜாகிர் கான், இர்பான் பதான், முஹம்மது கைப் போன்றோரது வீடுகளுக்கு தீ வைக்கப்படும். பால் தாக்கரே பிட்ச் நோண்டாமல் இருப்பார்.

4. சென்னை சூப்பர் கிங்க்ஸ் திராவிட கிரிக்கெட் கழகமாக மாற்றியமைக்கப்படும். நிச்சயம் குறைந்த கால அவகாசத்திலேயே பிளவு ஏற்பட்டு DCK (DMK) மற்றும் AIADCK (AIADMK) என்று கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அணியாக பிரிந்து நிற்கும். கூட்டணி கட்சிகள் கதி என்ன ஆகும்? Substitute ஆட்களாக இருப்பார்களா?

5. காங்கிரஸ் கோப்ராஸ்,  பா.ஜ.க பேந்த்தர்ஸ், சி.பி.ஐ. கேடர்ஸ், சமாஜ்வாடி ஸ்ட்ரைக்கர்ஸ், சி.பி.எம் சாலன்ஜெர்ஸ், திரினாமூல் டைகர்ஸ் என்று ஒவ்வொரு அரசியல் கட்சியும் அவர்களுக்கென்று ஒரு அணி வைத்திருப்பர். அடி ஆட்களுக்கு பதில் மைதானத்தில் மட்டும் மட்டை பிடித்து அடித்து ஆடும் ஆட்கள் வைத்திருப்பார்கள்.

6. அணிக்கு விளையாட்டு வீரர்களை ஏலம் எடுப்பதை விடுத்து, அனைவரிடமிருந்தும் டெண்டர் கோரப்படும். எவர் அடிமாட்டு விலைக்கு போகிறாரோ அவரே போட்டியில் பங்கேற்ப்பார். சீல் வைக்காத டெண்டர்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. காலையில் டெண்டர் அறிவித்து மாலையில் வாங்குவது நிறுத்தப்படும்.

7. மகிழ்ச்சியூட்டும் ஜிலுஜிலு ஆடை ஆட்ட மங்கையர் வெளியேற்றப்பட்டு மாண்புமிகுக்கள் அந்த இடைப்பட்ட நேரங்களை தங்கள் ஊக்கமூட்டும் சொற்பொழிவால் நிரப்புவார்கள். உணர்ச்சியூட்டும் எழுச்சி பிரசங்கத்தால் நாலு அடிப்பவர்கள் ஆறு அடிப்பார்களா? நாலு ஆறு என்பது மொத்த ஓட்டங்கள்.

8. சோனியா காந்தி முப்பது சதவீத இடங்களை எல்லா அணியும் பெண்களுக்காக ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்துவார். டென்னிஸில் "மிக்ஸட் டபுள்ஸ்"  போல "மிக்ஸட் லவன்" அணி உருவாகும் போல.

9. சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் மைதானத்தில் ரன் எடுக்க எல்லோரும் ஓடும் 22 யார்டுக்கு பதிலாக 18 யார்ட்கள் தான் ஓடுவார்கள் என்று மாயாவதி வீதியில் நின்று குரல் கொடுப்பார். இப்படி ஜாதி மத வித்தியாசம் பார்க்காமல் யாரால் பாண்டி ஆடக் கூட நொண்டி நொண்டி ஓட முடியாதோ அவர்களுக்கு அந்தச் சலுகை வழங்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவர்.

10. மூன்றாவது நடுவருக்கு அனுப்பப்படும் முறையீடுகள் இரண்டு கார்பன் தாள்கள் நகலும் ஒரு அசலும் சேர்ந்து மூன்று படிகள் நிரப்பி சட்ட ரீதியாக சத்தியப் பிரமாணம் செய்த சட்ட அதிகாரியால் கையெழுத்திட்டு அங்கீகரிக்கப் படவேண்டும். கையெழுத்துக்கு எவ்வளவு 'சி'?

11. மூன்றாவது நடுவர்களின் தீர்ப்பு இணை நாடாளுமன்றக் குழுவின் முடிவுக்கு உட்பட்டது. பொதுவாக ஆளுங்கட்சியின் முடிவே இறுதியானது. தேவைப்பட்டால் சி.பி.ஐ விசாரணைக்கு அனுப்பப்படும்.

12. இதுமுதல் ஐ.பி.எல் டிக்கெட்டுகள் எல்லா அஞ்சலகம் மற்றும் பி.எஸ்.என்.எல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 12:45 மணி வரை பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். 10:30 மணியிலிருந்து 11:30 மணி வரை தேநீர் இடைவேளையின் போது டிக்கெட் வழங்கப்பட மாட்டாது.

13. கை காலில் அடிபட்டு ஆட முடியால் இருக்கும் அயல் நாட்டு வீரருக்கு பதிலாக மாற்று ஆள் விளையாட அனுமதிப்பதற்கு அரசு மருத்துவர் பார்த்த 48 மணிநேரத்திற்கு பிறகு தட்கல் விண்ணப்பபடிவம் செலுத்தியபிறகே ஏற்றுக்கொள்ளப்படும். தட்கல் போலவே (EQ) எமர்ஜென்சி கோட்டாவும் அறிமுகப்படுத்தப்படும்.

14. மாண்புமிகுக்கள் தவிர்க்க இயலாத காரணங்களால் வர இயலாது போனால் ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து பணி ஓய்வு பெற்ற முதிர் மகளிர் மகிழ்வாட்டம் ஆடும் பணியை மேற்கொள்வார்கள். அதே யூனிபார்ம் புடவையை இடுப்பில் தூக்கி சொருகிக்கொண்டு ஆடுவார்கள்.

15. இப்படி மகிழ்ச்சி ஊட்டும் ஆட்டம் ஆடும் பெண்டிர் அவர்களது மாநிலங்களுக்கு தக்கவாறு அந்தந்த மாநிலத்தின் கிராமிய நடனங்களை கூத்துக் கட்டுவர். தமிழ்நாடு பங்குபெறும் போட்டிகளில் புஷ்பவனம் குப்புசாமி அனிதா தம்பதியர் பாடுவார்களா?

16. ஐ.பி.எல் போட்டிகளை தூர்தர்ஷன் மட்டுமே ஏகபோக உரிமை கொண்டாடி ஒளிபரப்பும். பொதிகை, DD-NEWS, DD-NATIONAL, DD-SPORTS என்று சலக தூர்தர்ஷன் சானல்களிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்புவார்கள்.

17. ஒவ்வொரு இன்னிங்க்ஸ் இடைவேளையின் போதும் இந்தியில் செய்திகளும் அதனைத் தொடர்ந்து காற்றில் இருகைகளையும் வீசி காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கான செய்திகளையும் ஒளிபரப்புவார்கள். இன்னமும் அந்த புஷ்டியான பாப் முடி திருத்திய நாற்பது வயது பெண்மணி தான் இருகைகளால் சைகை செய்கிறார்களா?

18. மட்டையை துடுப்பு போல் உபயோகித்து பெருமாளை தோளில் தூக்கி சேவை சாதிக்கும் கருடாழ்வார் போல் ஆடுவதெல்லாம் "துடுப்பு நேரம்" மட்டும் தான் என்ற புதிய விதிமுறை அமுலுக்கு வரும். துடுப்பு நேரம் போல களை பிடுங்கும் நேரம், நாற்று நடும் நேரம், கதிர் அறுக்கும் நேரம் போன்றவைகளை கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் முன்னணி கொடி பிடிக்கும்.

19. வார விடுமுறை நாட்கள் மற்றும் பிராந்திய/தேசிய விடுமுறைகளில் போட்டிகள் கிடையாது. மாநில மற்றும் தேசிய பந்த் அனுசரிக்கும்போது (அரசாங்க அனுசரணையோடு) போட்டிகள் உண்டா?


20. மூன்று விக்கெட் குச்சிகளுக்கும் காவி, வெள்ளை மற்றும் பச்சை வர்ணம் பூசப்படும். நாளடைவில் அணியில் அதிக பங்கு (பண முதலீட்டில்) வகிக்கும் கட்சியின் கொடி நிறங்கள் ஸ்டம்ப்களில் தீட்டப்படும்.


21. தூராங்கார அண்டைநாட பாகிஸ்தான் பி.பி.எல் என்ற புதிய கிரிக்கெட் பந்தையத்தை தோற்றுவிக்கும். அந்நாட்டு தலைவர்கள் வாஷிங்டன் சென்று ஒபாமாவை சந்தித்து ஒரு பில்லியன் டாலர் நிதிஉதவி வழங்குமாறு பணிப்பார்கள். காஷ்மீர் ஓரத்தில் நமக்கு சல்லை கொடுத்துவரும் தீவிரவாத அன்பர்கள் அணியில் முன்னணி இடம் பிடிப்பார்கள்.

மேலே கருப்பில் மின்னஞ்சல் சிவப்பில்  நம்ம சொந்த சரக்கு... எப்புடி?

Wednesday, June 23, 2010

அப்பாக்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்

சென்ற ஞாயிற்றுக்கிழமை நிறைய நாடுகளில் கொண்டாடப்பட்ட தந்தையர் தினத்திற்கு டியுரெக்ஸ் என்ற ஆணுறை நிறுவனம் வெளியிட்ட "எங்களது போட்டியாளர்களின் உற்பத்தியை உபயோகப்படுத்தும் அனைவருக்கும், தந்தையர் தின வாழ்த்துக்கள்" என்ற விளம்பரம் ஒன்று உலகெங்கிலும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.  இந்த ஒரு விளம்பரத்தில் சர்வலோக அப்பாக்களுக்கு இருவரிகளில் அன்பு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறது. மாங்காய் ஊறுகாயிலிருந்து உயரே பறக்கும் வானூர்திகள் வரை எங்கும் எதிலும் அரையாடை அணிந்த பெண்டிரை அங்குமிங்கும் ஓடவைத்து, உறிஞ்சவைத்து, உடுத்தவைத்து, படுக்கவைத்து, அவிழ்க்கவைத்து, குதிக்கவைத்து, ஆடவைத்து, பாடவைத்து, பார்க்கவைத்து, படிக்கவைத்து, இன்னும் பல வைத்து விளம்பரம் தயாரிப்போர் கவனத்திற்கு...
 
fathers day



சில தந்தையர் தின சிந்தனைகள்

வீட்டிலிருக்கும் பணி ஓய்வு பெற்ற தந்தையை போற்றி மதித்தால் அதுவே அவருக்கு அவருடைய நாள், அதாவது FATHER'S DAY!!!! 

ஒரு படத்தில் கவுண்டர் தனக்கு செந்தில் அப்பாவாக நடித்தும் கூட "அப்பா... அப்பா டா...அப்பா டேய்..." என்று திட்டும் காட்சி ஏனோ அனாவசியமாக அழுக்காக நினைவுகளில் வந்து சென்றது. 

"அம்மா என்றழைக்காத" என்ற மன்னன் படப்பாடல் போல  "அப்பா என்றழைக்காத" என்று ஏதாவது படத்தில் பாடல் எழுதினால் அனைத்து "தமிள்" பேசும் தொலைக்காட்சிகளிலும், ரேடியோ பொட்டிகளிலும் "இப்ப உங்களுக்காக ஒரு அப்பா பாட்டு வந்துகிட்டேயிருக்கு.. கேளுங்க..." என்று அரைமணிக்கு ஒருமுறை போட்டு அப்பா பக்தியை அதிகரிக்கலாம்.

பிள்ளைகளுக்கு பிடித்தது அப்பாவா? அம்மாவா? என்று ஏன் எந்த தொலைகாட்சியிலும் பாப்பையாவோ, லியோனியோ பட்டிமன்றம் போடவில்லை?

"அப்பா நீ சரியான லூசுப்பா!!" என்று நான் சென்ற ஞாயிற்றுக்கிழமை என்  குட்டிப் பெண்ணிடம் வாங்கிய செல்லத் திட்டுதான் எனக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.

Tuesday, June 22, 2010

காமமே கண்ணாயினர்!

என்னுடைய பதின்ம வயதுகளில் பதினொரு மணிக்காட்சி என்று எங்களூருகளில் பல விசேஷ படங்கள் சில பிரத்தியேக கொட்டகையில் மட்டும் போட்டு காட்டுவார்கள். மொத்தமே ஒரு மணி நேரம் அல்லது ஒரு அரை மணி சேர்த்து (கொஞ்சம் ஹிட் படம் என்றால்)  மட்டுமே ஓடும். சேர்ந்தார்ப்போல் இருநூறு முன்னூறு பேர் உட்கார்ந்து பார்த்தால் அதிகம். முக்கால் வாசிப் பேர் கட்டம் மற்றும் பூப் போட்ட கைலி அணிந்து காலக்காட்சி யூனிபாஃர்மில் இருப்பார்கள். அதில் என்பது சதம் சிகரட், பீடி, சுருட்டு என்று ஏதாவது ஒரு லாஹிரி வஸ்த்து கொண்டு வெண்புகை பரப்பி தியேட்டரை தேவலோகமாக்குவர்.  ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டாலோ அல்லது முகம் பார்த்து சிரித்துக் கொண்டாலோ, பழகியவராக இருப்பினும்,  படத்தில் கவனம் சிதறிவிடும் என்றெண்ணி முகத்தை "உம்" என்று வைத்துக்கொண்டு இழவு வீட்டுக்கு வந்ததுபோல் அமைதி காப்பர். தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறைக்கால காலைகாட்சிகள் பண்டிகைகள் போலவே கோலாகலமாக இருக்கும். கொட்டகைகள் நிரம்பி வழியும். இண்டர்வல் அதிக பட்சம் பத்து நிமிஷம். இந்த மாதிரி படக் காட்சிகளில் எல்லோரும் ஓரினம். அதாவது முதல் இரண்டு என்று தரம் பிரித்து உட்காரவைக்கும் வகுப்பெல்லாம் கிடையாது. ஒரே கட்டணம் ஒரே வகுப்பு. சர்வமும் ஒன்றே.

இந்தக் காலைக் காட்சியில் தாரளமாக இடம் பெறுபவை யானை, என்ட ஸ்னேக ரோஸி, லயனம், ஆதி தாளம் போன்ற மலையாள மற்றும் கொஞ்சம் ஆங்கில திரைப்படங்கள் மட்டுமே. ஜெயதேவன், ஐ.வி.சசி போன்ற புகழ்பெற்ற இயக்குனர்களின் கைவண்ணத்தில் வெளிவந்த படங்கள் ஏராளம். இந்தப் படங்களில் நடித்து புகழ்பெற்ற டி.ஜி.ரவி போன்ற நாயகர்கள் நடித்த படங்கள் மினிமம் கியாரண்டி. அவர்களுக்கு ரசிகர் மன்றம் கூட ஓரிரு இடங்களில் வைத்திருக்கலாம். காலை பதினொரு மணி ஒன்றும் கட்டாயம் இல்லை. வரிசையில் நின்றால் யாராவது பார்த்தால் கெளரவம் கெட்டுவிடும் என்றெண்ணி படம் போட்டு விளக்கணைத்து தியேட்டர் இருட்டானதும் மொத்த கூட்டமான இருநூறில் நூறு பேர் ஒரு ஓரமான சீட்டைப் பிடித்து யாருக்கும் தெரியாமல் மறைந்து உட்கார்ந்துகொள்வார்கள். தனக்கு இருட்டில் நடக்கப்போவதை அல்லது நடப்பதை இருட்டிலேயே உட்கார்ந்து பார்க்கும் பழக்கம் மனோரீதியாக இவர்களுக்கு பிடித்திருக்கலாம். இடைவேளையின் போது யார் கண்ணிலும் படாமல் இருப்பதற்காக அவசரமாக நம்பர் ஒன் வந்தால் கூட வெளியே செல்ல மாட்டார்கள். அடக்கிக்கொண்டு முற்றிலுமாக ஓரத்திலேயே முடங்கி அடங்கிவிடுவார்கள். இடைவேளைக்கு முன் இரண்டு பிட் இ.பின் இரண்டு பிட் வெளியே வந்து விடுவார்கள். நல்ல அறிய பல தகவல்கள் அடங்கிய பிட் காட்சிகள் இருப்பின் மொத்த படமுமே நிச்சயம் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும். படக் கொட்டகை உரிமையாளருக்கு கரண்ட் செலவு மிச்சம். பார்வையாளருக்கு நேரச்செலவு மிச்சம். இருவருக்கும் WIN-WIN நிலைமை.

ஒரு காலத்தில் இப்படியாக சினிமா கொட்டகைகளில் வளர்ந்து வந்த காமக்கலை, தற்போது மொபைல், ஐபாட், லேப்டாப், கம்ப்யூட்டர் என்று பதின்ம வயது பையன்கள் முதல் இளைஞர்கள், பெருசுகள் வரை எல்லோரிடமும் சகஜமாக புழங்கும் அனைத்து எலக்ட்ரானிக் உபகரணத்திலும் சீரழிகிறது. மூன்று ஷா நடிகை குளிப்பது அவர் துவட்டிகொள்ளும் முன் அனைவரையும் வந்தடைந்தது. கடந்து சில மாதங்களுக்கு முன் யூட்யூப் தேடல்களில் முன்னணி வகித்து ஸ்டார் நட்சத்திரமானவர்கள் நம்ம(?) நித்யா ரஞ்சிதா ஜோடிதான். கூகிள் தமிழ்த் தேடல்களில் நம்முடைய அரிச்சுவடி படிக்கும் காலத்தில் முதன்முதலில் எழுதிப்பழகிய உயிர் எழுத்து "அ" அடிப்பதற்காக a அடித்தவுடன்  வருவதை கீழே உள்ள படத்தில் காணலாம்.....

goo


இணையத்தில் எவ்வளவோ நற்காரியங்களும், நல்ல பல விஷயங்களும் பகிரப்படும் இவ்வேளையில், இன்டர்நெட்டில் வாத்ஸ்யாயனரின் பாடத்தின் நிலை என்ன, அதைப்படிக்கும் ஆண் பென் விகிதாசாரம் என்ன, எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள்,  எங்கே பார்க்கிறார்கள் என்பது பற்றிய முழுத் தகவல்கள் அடங்கிய ஒரு விவரப்படம் கீழே.. அதெல்லாம் சரி இதனால் ஊருக்கு என்ன பயன் என்று நாலு பேர் கேட்பது என் காதில் விழுகிறது. நாட்டு நடப்பு நமக்கு தெரியவேண்டாமா? சொல்லுங்க....


Via: Online MBA

Monday, June 21, 2010

கேரட்டும் கேளிக்கையும்




நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த 2010 விக்ருதி வருஷ  ஜூன் மாதத்தில் சில பேருக்கு தற்போதைய முதுகு சாய்க்கும் நாற்காலியிலிருந்து தலை சாய்க்கும் அளவிற்கு சாய்வு நாற்காலி பெரியதாயிருக்கலாம், மாதத்திற்கு இரண்டு சனிக்கிழமை இரவுகள் பீர் குடிப்பது நான்கு சனிக்கிழமைகள் வயிற்றுப் பானைக்குள் ஊற்றிக்கொள்ளும் அளவிற்கு ஊதியம் உயர்ந்திருக்கலாம், மத்திமர்களுக்கு பிள்ளைகளின் ஸ்கூல் பீஸ் இத்யாதிகள் கட்டிய பிறகு ஏதாவது இரண்டு வார விடுமுறைகளில் சரவணபவனில் பசியாற பணம் கிடைத்திருக்கலாம், இன்னும் சிலர் ஸ்விஸ் பாங்கில் கரண்ட் அக்கவுன்ட் சேர்க்கும் அளவிற்கு மூட்டையாக வண்டியில் ஏற்றி வீட்டுக்கு போயிருக்கலாம். இதில் சிலர் ஓடி ஓடி ஓடாய் தேய்ந்து  தினமும் ஒன்பது மணிவரை உழைத்திருக்கலாம், சிலர் வெட்டியாய் பல் குத்தி, சீட் தேய்த்து, அதிகாரிக்கு முதுகு சொரிந்து, மற்றவர் மேல் ஏறி அமர்ந்து தனது பர்ஸை நிரப்பியிருக்கலாம்.  சிலர் பார்க் ஷெரட்டனில் பார்ட்டி கொடுக்கும் அளவிற்கு மகிழ்ந்திருக்கலாம், சிலர் "மவனே இரு உன்ன வச்சுக்கறேன்.." என்று கொதித்து போய் தக்க சமயத்தில் தவிக்கவிட உள்ளுக்குள் கருவிக்கொண்டிருக்கலாம், மற்ற சிலர் தற்போது வேலை செய்யும் நிறுவனத்திற்கு "டாட்டா பை  பை " காண்பித்திருக்கலாம்.

எது எப்படியோ, 250 வருடங்களாக லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பகுதியிலிருந்து மனித சமுதாயத்திற்கு ஞானப் பால் புகட்டும் தொண்டு சேவையில்  ஈடுபட்டிருக்கும் RSA என்ற அமைப்பு மக்களுக்கு பயன்படும் பல நல்ல அறிய தகவல்களை ஒரு சிறந்த கல்வியாளர் அல்லது புகழ்பெற்ற சிந்தான சிற்பி ஒருவரை சிறப்புரை ஆற்ற வைத்து அவர் பேச்சின் ஒலிப்பின்னணியில் கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் மூலம் ஒரு வெள்ளை பலகையில் கருப்பு சிகப்பில் படத்துடன் வரைந்து காண்பிக்கிறார்கள்.

அல் கோர் அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்தபோது அவர்க்கு பேச்சு தயாரித்துக் கொடுத்த டான் பிங்க் என்ற கனவான் நம்மை ஊக்கப்படுத்தும் காரணிகளைப் பற்றி சப்பளாக்கட்டை இல்லாமல் உபன்யாசிக்க பின்னே மார்க்கர் பேனா கொண்டு வரைந்து தள்ளியிருக்கிறார்கள். இவர் எழுதிய பல நூல்கள் நியூ யார்க் டைம்ஸ் போன்ற புகழ் பெற்ற பத்திரிகைகளின் பதிப்பாக வெளிவந்திருக்கின்றன. நிறைய நன்றாக  மில்லியன் கணக்காக விற்றுத்தள்ளியவை. பணியில் நம்மை உற்சாகப்படுத்தும், ஊக்கப்படுத்தும் காரணிகள் பற்றி லண்டன் மற்றும் இந்தியாவில் இங்கிலாந்தின் M.I.T நடத்திய ஒரு ஆய்வில் கிடைத்த சில முக்கிய தகவல்களை இந்த பதிவில் இணைத்திருக்கும் வீடியோவில் அவர் பகிர்ந்துகொள்கிறார்.  ஆய்வின் இரு முக்கிய தகவல்களாக

ஒன்று:
எந்த இடத்திலும் எந்நேரத்திலும் ஆணி புடுங்குதல், மூட்டை தூக்கி பிழைத்தல், ஒரு  மணி நேரத்தில் 100 சட்டைக்கு வைத்த கை எடுக்காமல் காஜா எடுத்தல், ரோட்டோரங்களில் ஐந்தடி ஆழத்திற்கு அயராமல் தோண்டுதல் மற்றும் இதுபோன்ற உடலுழைப்பை கொண்டு செய்யப்படும் வேளைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு துட்டு நிறைய கொடுத்தால் வேலையும் நிறைய செய்வார்கள். அவர்களுக்கு அதுவே டானிக். வேலைச் சோர்வை நீக்கும்.

இரண்டு:
ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு மக் டீயை மேசையின் மேல் வைத்துக் கொண்டு, மானிடர் பார்த்துக்கொண்டு பொட்டி தட்டுபவர், மென்பொருள் தயாரிப்பவர் மற்றும் அலுங்காமல் குலுங்காமல் ANCHOR அடித்தது போல உட்கார்ந்து அறிவுசார் தொழில் புரிவோருக்கு பணப்பையின் கனத்தை மட்டுமே அதிகரிக்க அதிகரிக்க வேலை செய்வது மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவை குறைகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்க்கு பதிலாக FUN ஆக்டிவிட்டிகள் மூலமாகவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் முடியும் என்கிறார்கள். இதுவே இவர்களுக்கு கிரியாஊக்கி.

ஓவர் டு டான் பிங்க்: ( ஒரு பத்து நிமிடம் பிரமாதமாக பேசுவார். நன்றாக இருக்கும்)







பட உதவி: http://www.betterresponseblog.com

டிஸ்கி: எந்த உழைப்பாளிக்காவது எந்த நிர்வாகமாவது இந்த முறை அள்ளிக்கொடுக்காவிட்டலும் கிஞ்சித்தும் ஒரு கிள்ளு கிள்ளியாவது (அவர்களது கஜானாவிலிருந்து, உங்களை அல்ல )  ஏதும் தராமல் இருந்தால், கிடைக்காமல் இருந்தால், இந்த வீடியோ வெறுப்பேற்றியிருந்தால், தயவு செய்து மன்னிக்கவும்.

Saturday, June 19, 2010

சனிக்கிழமை சங்கதி - நெக்லஸ் பாலம்


நம்மூரில் பாலம் கட்டுவோர் கவனத்திற்கு:-
ஹாங்காங்கில் உள்ள காரோட்டிகள் இந்தியா போல சாலையின் இடது புறம் பயணிப்பார்கள், சைனாவின் சப்பை மூக்கு சாரதிகள் வலது புறம் ஓட்டுவார்கள். ஹாங்காங் மக்களும் சீனர்களும் புறம் மாறாமல் இங்குமங்கும் செல்வதற்கு ஏதுவாக பேர்ல் நதியின் மீது கட்டுவதற்கு ஒரு நெக்லஸ் போன்ற பாலத்தை என்.எல் ஆர்கிடெக்ட்ஸ் என்ற டச்சு கம்பனி வடிவமைத்துள்ளார்கள்.

நம்மூர் மக்களுக்கு இப்படி ஏதும் தேவைப்படும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் எல்லோருமே வலமும் இடமும் நுழைந்து நுழைந்து ஓட்டி நடு ரோடில் வாகனத்தால் நெக்லஸ் டிசைன் போடுகிறார்கள். நேற்று கூட பல்சரில் சென்ற வாலிபன் சோழாவரத்தில் போவது போல டயரின் கால் பாகம் தரையில் பட சுழன்று சுழன்று சென்றுகொண்டிருந்தான். 

கூவத்துல போட் விடுவதற்கு பதிலா பாதி டிராபிக்கை மேற்கண்ட பாலம் போட்டு திருப்பி விட்டா எப்படி இருக்கும்? பாலம் கட்டி பஸ் விட்டுடலாம் ஆனா கூவத்து மேல ஸ்டாப்பிங் வச்சா மக்கள் எப்படி ஏறுவாங்க? மூக்கப் பொத்திக்கிட்டுதான்!!! :)

பாலம் கட்டிய பரமாத்மாவே வருக வருக!! அப்படின்னு பாலம் தொறந்துவைக்க அந்த நாட்டு அமைச்சரை ஆளுயர கட் அவுட் வச்சு கூப்பிடுவாங்களோ. பார்ப்போம்.

பட உதவி: http://www.nlarchitects.nl

Thursday, June 3, 2010

மைக்ரோஸாஃப்ட் வழங்கும் சிரிப்பிற்கான சர்டிபிகேட்

Microsoft Certified Sirippu Professional    (MCSP)

ஜன்னல் தயாரிக்கும் கேட்ஸ் நகைச்சுவையுணர்வை வகைப்படுத்தி மைக்ரோஸாஃப்ட்  எஜுகேஷன் வலைதளத்தில் வெளியுட்டுள்ள ஒரு அட்டவணை என்னை கொஞ்சம் பாடாய் படுத்தியது. மின்சார அவனில் ஷாக் அடிக்காமல் சாப்பிடும்படி சமைப்பதற்கு, கால் கியர் உள்ள இரண்டு சக்கர வாகனத்தை இரு கை பிடித்து எதிரே வரும் மாமி மேல் விடாமல் ஓட்டுவதற்கு, "வாட் இஸ் யூவர் நேம்?" என்று கேட்டால் மூச்சு விடாமல் பேசி எதிராளி மூர்ச்சை ஆகும்படியாக நன்றாக வாயாடியாவதர்க்கு, மார்கழி மாதம் மட்டும் முதல் நாள் இரவே கோலம் போடுவதற்கு, கை காலை வானத்திற்கும் பூமிக்குமாக அசைத்து உடற்பயிற்சி என்று ஒன்று செய்வதற்கு, பொது இடங்களில் அனகோண்டா மாதிரி வாயை திறந்து எட்டூருக்கு கேட்கும்படி "ப்ஆ...ப்ஆ" என்று ஏப்பம் விடாமல் சாப்பிடுவதற்கு, நாய் குளிப்பாட்டுவது எப்படி?, புடவை தோய்த்தும் வீடு பெருக்கியும் கூட எப்படி பொண்டாட்டியிடம் அடி வாங்காமல் இருப்பது என்பதற்கு, மேலை நாட்டு பாணி கக்கூசுகளில் இரண்டு காலையும் கம்மோடு மேலே தூக்கி வைக்காமல் மலஜலம் கழிப்பதற்கு என்று ஒன்றுவிடாமல் எல்லாவற்றுக்கும் புத்தகம்/குறிப்புகள் போட்டது பத்தாமல் பல் காட்டி சிரிக்கத்தெரிந்த ஒரே விலங்கான மனிதனை அந்த விதத்திலும் வகை தொகை படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட். மொத்தம் நான்கு வகையறாக்கள். சாதாரண ஆள், மத்திம ஆள், முன்னேறிய ஆள், கை தேர்ந்த ஆள்.  என்னவென்று பார்ப்போம். இதற்க்கு கீழே அவர்களது அட்டவணை.

சாதாரண ஆள்:
  1. "ஈச்சட்டி தலையா, தேங்கா மண்டையா" என்றெல்லாம் திட்ட மாட்டார்கள்.
  2. கழிவறையிலிருந்து வெளிவரும் கவுண்டரை செந்தில் போல் "என்னன்னே சாப்டாச்சா?" என்று கேட்க மாட்டார்.
  3. மயான அமைதியும் கோபம் கொப்பளிக்கும் இடங்களில் புன்னகை மன்னன் சாப்ளின் கணக்காக சேஷ்டைகள் செய்து உக்கிரத்தை குறைப்பார்.
  4. கீழ்ப்பாக்கம் கேஸ் போல "ஹி... ஹி ..." என்று ப்ளாட்பாரம்களில் தனியாகவும் எதிர் ஆளை பார்த்தும் சிரிப்பார்.

மத்திம ஆள்:
  1. ஒரு பெரிய கும்பலை "அது அவ்வளவு பெருசு.." என்று 'கெட்ட' காரிய ஜோக்குகள் சொல்லி ஒன்றுபடுத்துவார்.
  2. பொண்டாட்டி வீட்டை விட்டு  ஓடிப்போனவரை பார்த்து "இன்று உன்னுடையது நேற்று மற்றொருவனிடம் இருந்தது" என்று கீதை சொல்லி இன்னொருவனிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும் என்று சமாதானப்படுத்துவார்.
  3. விழுந்து விழுந்து சிரித்து அரை வேஷ்டி நழுவி கீழே விழும்படி செய்து  டியர்ட் ஆக்குவார். 
  4. காதில் "சேம் ப்ளட்" சொல்லும் வடிவேலுவிடம் தலையில் டீ ஊற்றி அசிங்கப்படும் விவேக் போல இருப்பார்.

முன்னேறிய ஆள்:
  1. செத்த வீட்டில் கெக்கேபிக்கே என்று சிரிக்க மாட்டார். "உனக்கு மட்டுமா பொண்டாட்டியா இருந்தா..ஊருக்கே... " என்று செந்தில் போல கதை பேச மாட்டார்.
  2. ஐயா மேல படுத்திருக்கார் என்று சொல்லும்போது நான் அப்புறம் பேசறேன் சொல்லும் எஸ்.வீ.சேகர் போல இருப்பார்.
  3. எங்கே ஜோக் சொன்னால் செருப்படி விழும் விழாது என்று நன்றாக தெரிந்து வைத்திருப்பார்.
  4. மேடை போட்டு கும்பல் கூட்டி சிரிப்பது கூட்டத்திற்கு உகந்தது என்று புரிந்து வைத்திருப்பார்.

கை தேர்ந்த ஆள்:
  1. நான், நீ, நாய், பூனை, சாமியார், மாமியார்  என எல்லாவற்றிலும் சிரிப்பே நீக்கமற நிறைந்திருப்பது என்பார்.
  2. தனக்கு ஜோக் சரியாக வராவிட்டால் யாரயாவது தனக்கு ஜோக்குக்கு துரோனாச்சாரியாராக இருக்க வேண்டி இறைஞ்சுவார்.
  3. நகைச்சுவை மூலம் இந்தியா பாக்கிஸ்தானுக்கு ஒரு நட்பு பாலத்தை உருவாக்குவார்
  4. அடுத்த ஆள் தன்னை ஓட்டினாலும் ரத்தம் வர பிறாண்டினாலும் அதற்க்கும் ஒத்துழைப்பார்.
(மைக்ரோசாப்ட்ன் அட்டவணை)  
சுட்டி: http://www.microsoft.com/education/competencies/humor.mspx

Tuesday, May 11, 2010

ரப்பர் மேன்

தற்காலத்து நவீன சுந்தரிகள் காதுகளில் அணியும் அளவிற்கு ஒரு சிறிய வளையத்துக்குள் தலையை உள்ளே நுழைந்து வெளியே வந்துகொண்டிருந்தது அந்த சிறுமி. பக்கத்தில் மேளம் அடித்து,  தவழ்ந்து தரை மண்ணை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளும் ஒரு பாலகனை பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த சிரிக்காமலே கன்னங்களில் குழி விழுந்த அந்த நடுத்தர வயதுப் பெண்மணி. மக்களுக்காக சிரித்து, பவுடர் பூசி, பச்சை ஃபிரேம் போட்ட கருப்பு கண்ணாடி அணிந்து அந்த கூண்டு வண்டி கூம்பு ஸ்பீக்கர் பாடிய "கரிகாலன் காலைப் போல..."வுக்கு ஆடிக் கொண்டிருந்தான் அந்த சிகப்பு அரைக்கை சட்டை, கருப்பு பேன்ட் போட்ட குடும்ப தலைவன். இதுபோல் பாட்டுக்கு ஆடி, வளையத்துக்குள் நுழைந்து, கம்பி மேல் நடந்து வேடிக்கை காட்டுவோருக்கு ஐந்து, பத்து என்று தட்டுகளில் சில்லரை விழும். இப்போதெல்லாம் இவர்கள் யார் கண்ணிலாவது தென்படுகிறார்களா என்று தெரியவில்லை.


மக்கள் ஒரு குழுவாக, கூடாரமிட்டு சிங்கம், புலி, யானையுடன் சேர்ந்து கொண்டு இதைவிட கொஞ்சம் பெரிய கூட்டம் சேர்த்துக் கொண்டு உயரத்திலிருந்து குதித்து, சுற்றும் கட்டையை வாயில் கவ்வி சுற்றிக் கொண்டே மேலேறி சென்று,  சிங்கத்தின் வாயில் தலையை விட்டு எடுத்து, பெரிய யானையை ஒரு சிறிய முக்காலியில் உட்காரவைத்துக் காட்டினால் அதற்க்கு சர்க்கஸ் என்று பெயரிட்டு, கட்டணம் கட்டி, சீட்டு வாங்கி, பெஞ்சுகளில் அமர்ந்து கைதட்டி ரசிக்கிறோம். இந்த இரண்டு கலைகளுமே இப்போது கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்ட நிலையில் இருக்கிறது. மேலே இருக்கும் படத்தில் அச்சு அசல் கஜமுகனே உட்கார்ந்திருப்பது போல் உள்ளது. ஆனால் அந்த காதருகில் தொங்கும் கவர்ச்சிக்கன்னி தான் லாஜிக்கை கொஞ்சம் இடிக்கிறாள்.

இது போல் ஒரு குரூப் ஆக இல்லாமல், தனி ஒருவராக கொஞ்சம் குதித்தும், அக்கம் பக்கம் இருக்கும் சுவர்களில், கதவுகளில், கட்டிடங்களில், கூரைகளில் ஏறியும் காண்பிக்கும் வித்தைக்கு பார்கூர்  (Parkour) என்று பெயர். இது கிட்டத்தட்ட குற்றாலம், வண்டலூர் மற்றும் "ஆட்ரா ராமா... ஆட்ரா ராமா..." என்று தெருத் தெருவாக குச்சி ஆட்டி காட்டப்படும் நமது மூதாதையர்கள் போல நிறைய செயல்கள் செய்யவேண்டும். வெளிநாடுகளில் அநேகம் பேர் இதை ஒரு கலையாக பயிற்சி பெறுகிறார்கள்.  மேலும் இதை பல நாடுகளில் இராணுவத்தில் ஒரு பயிற்சிமுறையாக கூட பின்பற்றுகிறார்கள். ஓடிக்கொண்டே இருக்கும் போது நடு நடுவே ஏற்படும் தடைகளை நம்ம கேப்டன் விஜயகாந்த் செய்வது போல பக்கச் சுவர்களில் காலை வைத்து ஏறி, குதித்து மீண்டும் ஓட வேண்டும். காலை பின்னால் தூக்கி பத்து பேரை அடிக்கெல்லாம் கூடாது. நாக்கை தொங்கப் போட்டு ஒரு அரை கிலோ கறி நம்மிடம் எடுக்க ஒரு நாய் துரத்தினால் நாமும் பார்கூர் 'உடுக்கை இழந்தவன் கைபோல' செய்வோம். தொடர்ந்து ஓடிக்கொண்டே தாண்டியும், ஏறியும் முன்னோக்கியும் சென்றுகொண்டே இருக்கவேண்டும். 

'சிவாஜி' ரஜினி கூட ஒரு காட்சியில் இதுபோல் ஓடிக்கொண்டே தன்னை துரத்துபவர்களை அடிப்பார். விஜய், அஜித், சரத், விஜயகாந்த், ரஜினிகாந்த் என்று பாகுபாடு இல்லாமல் நம்முடைய பல கோலிவுட் ஆதர்ஷங்கள் இந்த சாகச விளையாட்டுகளை/வித்தைகளை டூப் போட்டு நமக்கு வெள்ளித்திரையில் காட்டுகிறார்கள். இன்னும் சில 'நிஞ்சா' படங்களில் இந்த மாதிரி மரத்துக்கு மரம், கோபுரத்துக்கு கோபுரம் ஏறி "நரி ஊளையிட்டு' சண்டைபோடும் காட்சிகள் நிறைய பார்த்திருக்கிறோம். நம்ம 'மெகா பட்ஜெட்' ஷங்கர் கூட அந்நியனில் வரும் அந்த கராத்தே சண்டைக் காட்சியை இதுபோல் படம் பிடித்திருப்பார்.

இந்த பார்கூரை மிக அநாயாசமாக செய்யும் டேமியன் வால்டேர்ஸ்ன் ஒரு வீடியோ காட்சி கீழே உங்கள் பார்வைக்கு. இவர் சூப்பர் மேன், பேட் மேன், ஸ்பைடர் மேன் போல ரப்பர் மேன். உங்கள் பார்வைக்குன்னு சொன்னா அது உங்கள் பார்வைக்கு மட்டும் தான்  ஏன்னா, இந்த வீடியோவில் ஒரு இடத்தில் ஒரு எம்பு எம்பிக்  குதித்து கார் கதவை திறக்காமல் ஜன்னல் வழியாக காரினுள் உட்காருவார் பாருங்கள் அத்தனை அதி அற்புதமான சீன். நம்ம கோடம்பாக்கம் ஆசாமிகள் யார் கண்ணிலாவது பட்டுவிட்டது என்றால் நீங்கள் தொலைந்தீர்கள். அடுத்த எறா, நகல், ராமண்ணா, ஜிலேபி போன்ற படங்களில் அதைப் பார்த்து புண்பட்டு போவீர்கள். அதோடு மட்டுமல்லாமல் "சூரிய" தொலைக்காட்சி அதை விற்க எடுத்தால் மீண்டும் மீண்டும் அந்த காட்சியை நிமிடதிற்க்கொருதரம் திரும்ப திரும்ப போட்டு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவார்கள். ஜாக்கிரதை.


ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails