Monday, April 18, 2011

பெண்ணெழுத்து பொன்னெழுத்து

eppodhum penபெண்ணெழுத்து எப்போதும் கொள்ளை அழகு. குண்டு குண்டாக மணி மணியாக சீராக பார்ப்போரை வசீகரிக்கும்படி எழுதுவார்கள். எதிலும் பொறுமையும் சிரத்தையும் மனம் ஒருமித்து உள்ளவர்களால் மட்டுமே அதுபோல சிறப்பாக எழுத முடியும். ஔவையார் பெண்ணெழுத்துகளின் தானைத் தலைவி. Don. பக்தி இலக்கியம் மற்றும் நிறைய நன்னெறிகள் நயமாக நச்சென்று போதித்தவள். இந்தக் கிழவி ஒரு தொந்திக் குழந்தையுடன் கொஞ்சியது என்றால் ஒரு குமரி தலையில் மயிற்பீலி சொருகிய ஒரு கள்வனோடு குலாவியது. ஆண்டாள் எழுதிய திருப்பாவை பெண்ணினத்தின் காதல் வெளிப்பாடுகள். நான் பொதுவாக எழுத்துக்களில் HE SHE வித்தியாசம் பார்ப்பதில்லை. பெண்கள் கைப்பட எழுதினால் தான் அது பெண்ணெழுத்து என்று நான் எடுத்துக்கொள்வதில்லை. பெண்மையை போற்றும் எதுவும் பெண்னெழுத்தே. எப்போதுமே Macho ரசம் மிகும் எந்த எழுத்துமே பெண் எழுதினாலும் ஆண்மை மிளிரும் தன்மை உடையதாக மாறுகிறது. எழுத்தில் நளினம் வந்துவிட்டால் அது பெண்பாற் எழுத்தாக உருமாறி விடுகிறது. நான் படித்த வரையில் தி.ஜா, லா.ச.ரா போன்ற நிறைய பழம்பெரும் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் கதைகளில் நாவல்களில் அது உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்பட்டிருக்கிறது.

இந்தப் பெண் எழுத்துக்களில் இரண்டு ஆடவர்களை நான் இங்கே சேர்த்துக்கொள்வேன். ஒருவர் முண்டாசுக்கவி பாரதி. இரண்டாமவர் சுஜாதா. சுஜாதாவின் "எப்போதும் பெண்" ஆண் எழுதிய ஒரு அற்புதமான பெண்ணிலக்கியம். பெண்களின் நட்பு, காதல், பொறுப்புணர்ச்சி, பாசம், கடமை, மடமை, விவாகரத்து என்று சகலத்தையும் அக்கக்காக அலசிய கதை. சின்னு என்ற பெண் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை படும் பாடுதான் கதை. நடு நடுவே வரும் பாட்டிகளும், சிநேகிதிகளும், அம்மாக்களும், புதியதாய் கல்யாணம் கட்டியவர்களும், புள்ளைதாச்சிகளும் என்று எப்போதும் பெண்ணில் எங்கெங்கும் பெண். தி.ஜாவின் 'சிலிர்ப்பில்' ஒரு ஏழைப் பெண் குழந்தையின் மனமொருமித்த வேலைக்குணம் பற்றி எழுதி கண்களில் நீரை வரவழைப்பார். என்னைப் பொறுத்த வரையில் அதுவும் பெண் எழுத்தே! லா.ச.ரா கல்யாணம் ஆகி கணவனைப் பிரிந்து தனியாளாக இருப்பவள் கணவனுக்கு எழுதும் கடிதமாக 'பாற்கடல்' எழுதியிருப்பார். அது ஒருவகையில் ரசனையான பெண் எழுத்து.

சிவசங்கரி, வாஸந்தி, லக்ஷ்மி என்று தமிழில் நிறைய ஜாம்பவானிகள் உண்டு. கரண்டி பிடித்த பல கைகள் பேனா பிடித்து சங்கப்பலகை பார்த்ததுண்டு. சங்க இலக்கியங்களில் காக்கை பாடினியார் நச்செள்ளை, வெள்ளிவீதியார் போன்ற பெண்பாற்புலவர்கள் பலர் பாடல் பாடியது உண்டு. நம்மில் அவர்கள் வெகு பரிச்சயம் என்பதால் நான் படித்த ஒரு சில வங்காளப் பெண் எழுத்தாளர்களின் கதைப் புஸ்தகத்தில் இருந்து ஒன்றிரண்டு உதாரணங்கள் தருகிறேன்.

Three Sides of Life

தௌலி - மஹாஸ்வேதா  தேவி
தாழ்ந்த ஜாதிப் பெண் ஒருத்தியின் அவல நிலையை படம் பிடித்துக் காட்டிய இந்தச் சிறுகதை பெண் இலக்கியத்தில் ஒரு வரலாறு. மாமனார் மாமியார் நாத்தனார் என்று ஒரு வட்டத்திற்குள் அடங்கும் கதைகளுக்கு இடையில் இது போன்ற எழுத்துக்கள் என்னை வெகுவாக ஈர்க்கிறது. ஒரு உயர்ந்த ஜாதி பண்ணையாரின் கடைசி மகனை லவ்வினாள் தௌலி. எல்லாப் பெரியமனுஷன் வீட்டுப் பிள்ளைகளைப் போல அவள் வயிற்றை நிரப்பி விட்டு தந்தையின் பேச்சை மீற முடியாமல் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு நகரத்திற்கு போய் விடுகிறான். வயிறு வளர்பிறையாக வளர்ந்து மடிகனத்தை ஊருக்கு காட்டிகொடுகிறது. அவள் தாய் அக்கருவை அழிக்கச் சொல்லுகிறாள். மறுதலித்த இவள் தைரியமாக பெற்றுப் போடுகிறாள். இங்குமங்கும் அலைக்கழிக்கப்பட்டு கடைசியில் நகரத்தில் ஒரு விலைமாதாகிப் போகிறாள். தனி ஒருத்தியாக போராடிய ஒரு பெண்ணின் ஆசாபாசங்களை புட்டுபுட்டு வைத்திருக்கிறார் கதாசிரியர். தௌலி என்றால் அழகான பெண் என்று அர்த்தம்.

தி காயக் -  நபனீத தேவ் சென்
காயக் என்றால் ஒருவர் மட்டுமே செல்லும் படகு என்று அர்த்தமாம். கெளஷிகி என்ற பேத்தி அமேரிக்கா செல்கிறாள். இந்தியாவில் தனியாக விட்டு விட்டு வந்த அவளின் பாட்டியை பற்றிய நினைவலைகள் தான் கதை. அமெரிக்க நாட்டில் உள்ள ஒரு நண்பியின் வீட்டில் அவளுடைய பாட்டியை எப்படி நடத்துகிறார்கள் என்பதை பார்த்து மனம் பதபதைக்கிறாள். ஒரு பாட்டி-பேத்தி உறவை அதி அற்புதமாக கதைப்படுத்தியிருப்பார். பாட்டியை பற்றிய இடங்களில் பெண்களின் பல பரிமாணங்களை தொட்டிருப்பார் இக்கதாசிரியர். இக்கதையின் தலைப்பை பாட்டியின் வாழ்க்கையுடன் சேர்த்துப் படிக்கவேண்டும். இதுவும் ஒரு அக்மார்க் பெண்ணெழுத்து.


ஹாரி பாட்டர் - ஜே.கே ரவ்லிங்  
துடப்பக்கட்டையை இரு கால்களுக்கு இடையே சொருகி கேரக்டர்களை பறக்கவிட்டு சிறார்களையும் அவர்கள் கூடவே சிறகடிக்க வைத்த பெருமை இந்த வெள்ளைக்கார ரவ்லிங் அம்மையாருக்கு உண்டு. அண்டமெங்கும் இருக்கும் பாலகர்களை மயக்கிய பெருமைக்கு உரிய எழுத்து அது. எப்போதுமே தாத்தா கதைகளை விட பாட்டி சொல்லும் கதைகளுக்கே மவுசு அதிகம். இந்தப் பாட்டியின் அதீத கனவுகள் எல்லா வயதினரையும் கவர்ந்திழுத்த எழுத்தானது இவ்வுலகிற்கு பாக்கியமே.

கடைசி பத்து பக்கங்கள் கிழிந்த ஒரு புஸ்தகத்தை படிக்க மாட்டேன் என்று மறுத்த நண்பரிடம் அவரது உறவினர் "அறுநூறு பக்க புஸ்தகத்தில் கடைசி பத்து பக்கங்கள் இல்லை என்று 590 பக்க சுவாரஸ்யத்தை ஏன் வேண்டாம் என்று இழக்கிறீர்கள்" என்று கேட்டாராம். அதுபோல ஆண்/பெண் பேதம் பிரித்துப் பார்க்காமல் பெண்ணினத்தை சிறப்பிக்கும், தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் எந்த எழுத்தும் பெண் எழுத்தே என்று வாசிப்போம்.

இந்தத் தொடர் பதிவிற்கு அழைத்த ராஜிக்கு நன்றி சொல்லிக் கீழ் கண்ட பதிவர்களை அழைக்கிறேன்.
பத்மநாபன்
கக்கு-மாணிக்கம்
அறிவன்
மோகன்ஜி
சுந்தர்ஜி
மாதங்கி மாலி 
இப்படிக்கு இளங்கோ

பின் குறிப்பு: மேற்கண்ட இரு வங்காளக் கதைகளும் படித்த கதைத் தொகுதி.
Three Sides of Life - Short stories by Bengali Women Writers.
Oxford University Press
Price: Rs. 350

பட உதவி: thehindu.com மற்றும் uyirmmai.com
-

37 comments:

பொன் மாலை பொழுது said...

படிக்கும் போதே வாசனை அடிக்குதைய்யா....அம்மாவின் புடவை மனம்தான். தமிழில் எழுதிய பெரும்பாலான பெண்மணிகளின் நாவல்களை எல்லாம் கல்லூரி விடுமுறை காலங்களில் விழுந்து விழுந்து படித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. உண்மையில் "பொன்மாலை பொழுது" என்ற என் பிளாக்கின் தலைப்பே ஒரு பெண் நாவலாசிரியரின் கதையின் தலைப்பே!அந்த நாவல் என் மனம் கவர்ந்த ஒன்று.கும்பகோணத்தில் ஆரம்பிக்கும் அந்த நாவல். பெயர் சரியாக நினை வில்லை......சுப்பிரமணியம் என்று முடியும்.தெரிந்தால் சொல்லுங்கள்.

///இந்தக் கிழவி ஒரு தொந்திக் குழந்தையுடன் கொஞ்சியது என்றால் ஒரு குமரி தலையில் மயிற்பீலி சொருகிய ஒரு கள்வனோடு குலாவியது///

உங்களின் ரசனைக்கு தலைவணங்குகிறேன் R.V.S. சத்தியமாக இவ்வளவு அழகாக ,எழிலாக இதுவரை அந்தக்கிழவியையும் குமாரியையும் எவரும் பெருமை படுத்தியதில்லை.
இந்த வயது வரை நான் எந்த விஷயத்திலும் பொறாமை கொண்டதில்லை . அது எனக்கு பிடிக்காது ஒன்று. ஆனால் உங்கள் தமிழைகண்டால் எனக்கு பொறாமையாக வருகிறது.


அதுசரி ...... என்னையும் தொடர்பதிவுக்கு மாட்டி விட்டாச்சா மைனரே!

goma said...

கரண்டி பிடித்த பல கைகள் பேனா பிடித்து சங்கப்பலகை பார்த்ததுண்டு. சங்க இலக்கியங்களில் காக்கை பாடினியா...

எங்கே இலக்கியத்தில் இடம் பிடித்து விடுவார்களோ என்று பயந்துதான் அந்தக்காலத்திலேயே கரண்டியைக் கையில் கொடுத்துவிட்டார்கள்..
.ஔவையார் அந்த சூழ்ச்சி தெரிந்துதான் கல்யாணமே வேண்டாம் என்று கிழவியானர்....

Chitra said...

வித்தியாசமான கோணத்தில் எழுதி இருக்கீங்க.... :-)

சக்தி கல்வி மையம் said...

அசத்தல்.

Madhavan Srinivasagopalan said...

//அறுநூறு பக்க புஸ்தகத்தில் கடைசி பத்து பக்கங்கள் இல்லை என்று 590 பக்க சுவாரஸ்யத்தை ஏன் வேண்டாம் என்று இழக்கிறீர்கள்" என்று கேட்டாராம்.//

Indexஆக இருந்ததாலும் Referenceஆக இருந்ததாலும்.. கடைசி பத்து பக்கங்கள் இல்லையன்றால்..
ம்ம்ம்ம்.. கஷ்டம்தான்..

நான் சொல்வது புஸ்தகத்திற்கு மட்டுமே

Anonymous said...

//பெண்ணெழுத்து எப்போதும் கொள்ளை அழகு//

'ஜெ' வோட ஆட்டோக்ராப்னு தெளிவா சொல்லுங்க. "கொள்ளை" அழகு? செம கிண்டல்.

ஜெ.கே. ரவ்லிங்கிற்கு கிடைத்த அங்கீகாரம் இங்குள்ள முன்னணி எழுத்தாளர்களுக்கு கிடைக்காதது வருத்தமே...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நேர்த்தியான அலசல் ஆர்விஎஸ். வழக்கமான உங்கள் பாணியிலிருந்து மாறி வேறொரு ராஜபாட்டையில் பயணிக்கிறது இந்த மாதிரி எழுத்து.

நிறைய நேரங்களில் ஆண் போலப் பெண்ணும் பெண் போல ஆணும் யோசிக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.

ஒவ்வொரு ஆணிலும் ஒரு பெண்ணும் ஒவ்வொரு பெண்ணிலும் ஒரு ஆணும் இருப்பது எவ்வளவு சர்வ நிச்சயமோ அதே போல எழுத்திலும்.

வேண்டுமானால் ஸ்வாரஸ்யமான எழுத்து வழுவட்டையான எழுத்து என்று பிரிக்கலாம்.

ம்ம். இதுவரைக்கும் யாருமே கூப்பிடாத படு சோம்பேறி என்னையும் முதன் முதலா தொடர்பதிவுக்குக் கூப்பிட்டுடீங்க ஆர்விஎஸ். தொடரப் பார்க்கிறேன் சீக்கிரம்.

இராஜராஜேஸ்வரி said...

பரந்துபட்ட பட்டறிவுடன் எழுதிய பெண் எழுத்து --பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

தக்குடு said...

பாரதியில் தொடங்கி சுஜாதா வழியாக பயணித்து வங்கத்து எழுத்துக்களை கொஞ்சம் தொட்டு அதே நினைவோடு ஹாரிபாட்டருடன் கொஞ்சம் விண்ணுலக சஞ்சாரம் செய்து திரும்பி இருக்கிறது தங்கள் அழகான பயணம்! வாழ்த்துக்கள்!

ரசிகமணியின் முத்தான எழுத்துக்களையும் ரசிக்க ஆவலுடன் இருக்கும் ரசிகன்.

தக்குடு

A.R.ராஜகோபாலன் said...

வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.................,
உன் தமிழை பாராட்ட
என் தமிழ் முழுமையடையும் போது
என் இந்த பாராட்டும் முழுமை பெரும்
சீர்மிகு சிந்தனையில்
யவ்வன எழுத்துக்கள் வெங்கட் ......

Anonymous said...

நன்றி RVS

என் அம்மாவின் கண் ஆபேரஷன் போது, அவருக்கு லக்ஷ்மியும், சிவசங்கரியும் எழுதிய கதைகளை உரக்க படிப்போம் - 'Modulation' சொல்லி தந்தார் - அது பள்ளியில் 'Non-detail' படிக்க உதவியது) - நடு நடுவே அம்மாவின் விமர்சனங்கள் - கதை இப்படித்தான் முடியும் எனும் ஊகிப்புகள், அப்பப்பா , மீண்டும் பழைய நினைவுகள்.

ரகு

பத்மநாபன் said...

பெண்ணெழுத்து தொடரை பொன்னெழுத்தால் எழுதிவிட்டீர்கள் ... பெண்மையை போற்றும் எழுத்தை பெண் எழுத்தாக பாவித்தது சிறப்பு ... அந்த வரிசையில் எனக்கு பாலகுமாரன் ரொம்ப பிடிக்கும் .. பெண் மனநிலையை படம் பிடித்து கதை சொல்வதில் எழுத்து சித்தர் வித்தகர் ....''பச்சை வயல் மனது '' கதை இன்னமும் பசுமையாக இருக்கிறது ..
தொடர் அழைப்பிற்கு நன்றி .. தக்குடுவின் உசுப்பலும் கூட.... விரைவில் பதிக்க பார்க்கிறேன்

இளங்கோ said...

//நான் பொதுவாக எழுத்துக்களில் HE SHE வித்தியாசம் பார்ப்பதில்லை.//
ஆம் அண்ணா, பெண்மையை போற்றும் அனைத்து எழுத்துக்களும் பெண்ணெழுத்து தான்.

எல் கே said...

நீங்கள் எழுதிய சிறந்தப் பதிவுகளில் இதுவும் ஒன்று. கலக்கி இருக்கேள்

சிவகுமாரன் said...

பெண் எழுத்தாளர்களில் எனக்கு சமூக அக்கறையுடன் எழுதும் சிவசங்கரியின் எழுத்துக்கள் பிடிக்கும்.
நல்ல அலசல். வங்க மொழிக் கதைகள் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி. ( நம்ம மொழி கதைகளை படிக்கவே நேரம் இல்லீங்கோ. உங்களுக்கு எப்படித்தான் நேரம் கிடைக்குதோ )

Anonymous said...

மிகச் சிறப்பான புரிதலோடு சிறப்பாக எழுதப்பட்ட பதிவு அண்ணா! சுஜாதாவின் "எப்போதும் பெண்" மட்டும் படித்திருக்கிறேன். கிரேட்! :)

Asiya Omar said...

மிக நல்ல இங்கிதமான பகிர்வு...

RVS said...

@கக்கு - மாணிக்கம்
உங்கள் வாழ்த்துரைகள் என்னை இன்னும் மேம்பட்டவனாக்கட்டும். நன்றி மாணிக்கம். நீங்கள் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் எழுதுவீர்கள் என்ற nambikkaiyil.... ;-))

RVS said...

@goma
முதல் வருகைக்கு முதற்கண் நன்றி.
அவ்வைக் கிழவியின் அறிவு முதிர்ச்சி அதுபோல கடவுளிடம் கேட்டிருக்குமோ. கருத்துக்கு நன்றி. அடிக்கடி வாங்க சகோ. ;-))

RVS said...

@Chitra
நன்றிங்க சித்ரா! ;-)

RVS said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
Thanks Karun. ;-))

RVS said...

@Madhavan Srinivasagopalan
மாதவா அது Index மற்றும் Bibliography இல்லாத புத்தகமாம். க்ளைமாக்ஸ் கட்டம் தான் கிழிந்துவிட்டதாம். ;-)))

RVS said...

@! சிவகுமார் !
ஒரு அரசியலை புகுத்தாம விட மாட்டீங்களே! ;-)))

RVS said...

@சுந்தர்ஜி
உங்களுடைய எழுத்தில் பெண்னெழுத்தைக் காண ஆவலாக உள்ளேன் ஜி! ;-))

RVS said...

@இராஜராஜேஸ்வரி
ரொம்ப நன்றிங்க மேடம்! ;-)

RVS said...

@தக்குடு
பாராட்டுக்கு கோடி நன்றிகள் தக்குடு. உங்களைப் போலவே நானும் பத்துஜியின் பதிவுக்கு காத்திருக்கிறேன். உங்கள் தோளில் கை போட்டபடி.. ;-))

RVS said...

@A.R.RAJAGOPALAN
ரொம்ப ரொம்ப நன்றி கோப்லி. ஏதோ எழுதுகிறேன். ;-))

RVS said...

@ரகு
என்ன சார் ரொம்ப நாளா ஆளைக் காணோம்!
பாராட்டுக்கு நன்றி. ;-))

RVS said...

@பத்மநாபன்
எனக்கு எழுத்துச் சித்தரை ரொம்ப பிடிக்கும்.அனால் அவரின் சமீப கால ஆன்மீக எழுத்துக்கள் தான் இப்போது நெஞ்சில் நிறைந்திருக்கிறது. சீக்கிரம் எழுதுங்கள் ரசிகமணி. ;-))

RVS said...

@இளங்கோ
தம்பி! தொடர் நீங்களும் எழுதணும். சீக்கிரம்!! ;-)))

RVS said...

@எல் கே
மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி. ;-))

RVS said...

@சிவகுமாரன்
நேரத்தைப் பற்றி பேசாதீங்கோ. வீட்ல தினமும் திட்றாங்க!! ;-))

RVS said...

@Balaji saravana
சுஜாதாவுக்கு உங்களோட சேர்ந்து நானும் போட்டுக்கறேன் ஒரு கிரேட்!! நன்றி தம்பி. ;-)))

RVS said...

@asiya omar
முதல் வருகைக்கு நன்றி சகோ!
கருத்துக்கு மிக மிக நன்றி. அடிக்கடி வாங்க. ;-))))

ADHI VENKAT said...

பெண்ணெழுத்து உங்கள் கோணத்தில் ரொம்ப நல்லாயிருந்தது சகோ.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ஆர்விஎஸ்எம்..
என்னையும் தொடுத்திருப்பதை இன்றுதான் பார்த்தேன்.

நன்றி.

சீக்கிரம் முயற்சிக்கிறேன்.

உங்களது பெண் எழுத்து நிறைவாயிருக்கிறது.....

எப்போதும் பெண் ! மறக்க முடியாத non-branded சுஜாதாவின் எழுத்து..

படித்து விட்டு மனம் ஒருநிலைப்பட எனக்கு இரண்டு நாளாயிற்று...

இந்தப் பதிவும் வழக்கமான திசையன்றி வேறு திசையில் வேறு பாணியில் எழுதப்பட்ட ஒன்று..

வாழ்த்துக்கள்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

போட்டாச்சு...நாளை காலை 10 மணிக்கு வெளிவரும்..

(ஒரு அதிகாலை தூங்கப் போகும் நேரம்)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails