Thursday, September 12, 2013

கொத்தவரங்காய் நறுக்குவது எப்படி? - ஒரு ரிப்போர்ட்

கொத்தவரங்காய் நறுக்குவது அப்படியொன்றும் லேசுப்பட்ட காரியம் இல்லை. பளபளக்கும் ப்ரஸ்டீஜ் ட்ரு-ப்ளேடு கத்தியும் மெல்மாவேர் தட்டையும் எடுத்துக்கொண்டு சப்பரக்கா என்று நடு கூடத்தில் உட்கார்ந்து கொண்டேன். விஜய் டிவியில் “நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி”யை சூப்பர் சிங்கி யாரோ சரியான கட்டையில் எடுக்காமல் பாடினார்கள். டார்ட் போல கத்தியை டிவியை நோக்கி வீசலாமா என்று எண்ணினேன். பொறுப்பான காரியத்தை கையிலெடுத்ததால் அதில் மனத்தை ஒருமுகப்படுத்திச் செலுத்தினேன்.

ஒத்த நீளமுடைய சரிசமமான ரெண்டு கொத்தவரங்காயை ( க்ரூப் ஃபோட்டோவுக்கு முன்னும் பின்னுமாக ஆட்களை நிறுத்துவார்களே... அது போல) நுணி ஆய்ந்து எடுத்துக்கொண்டேன். சீரிய இடைவெளி கொடுத்து பொடிப்பொடியாய் ப்ரஸ்டீஜ்ஜால் நறுக்க ஆரம்பித்தேன். இப்படிச் செய்வதால் நம் ப்ரஸ்டீஜ் என்னாவது என்று வீராப்பாய் வெட்டி நியாயம் பேசுவோர் மறுநாள் கால் வயிற்றுக்குக் கஞ்சிக்கு சிங்கியடிக்க வேண்டுமே என்று யோசித்தால் தாராளமாக வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு உட்கார்ந்துவிடுவார்கள்.

ரெண்டுரெண்டாய் நறுக்குவது இடுப்பொடியும் காரியமாக இருந்தது. கத்தியால் ஒரு கிலோ கொத்தவரங்காய் நறுக்குவது ஆத்து வாசல்ல காத்திருந்து யூயெஸ்ஸுக்கு பஸ் பிடித்து தேசாந்திரம் போவது போல என்று என் குருவி மூளைக்கு உரைத்தது. குடுகுடுவென்று சமையக்கட்டுக்கு ஓடிப்போய் இரும்பு அருவாமனையை எடுத்துவந்து மடக்கின காலுக்கு அடியில் கொடுத்து செருகிப் பிடித்துக்கொண்டேன். இரண்டுக்குப் பதிலாக நான்கு ஆறு எட்டு என்று ஈவன் நம்பரில் ஈவனாகக் கையிலெடுத்து அடிக்கிக்கொண்டு சரக்...சரக்.. என்று நறுக்க ஆரம்பித்ததில் நிமிஷ நேரத்தில் அரை வானாய் நறுக்கிப்போட்டுவிட்டேன். ஆச்சரியத்தில் இப்போதே கொத்தரங்காய் கூட்டு பண்ணின சந்தோஷம்.

இப்படி நறுக்குகையில் கைக்கு அடங்கிய கொத்தவரங்காய் கொத்தின் இடையில் முத்தின காய் ஒன்றிரண்டு இருந்தால் அவ்வளவு சௌகரியமாக நறுக்கமுடியாது. இளசுகளுக்கு இடையே பூந்து கலாசும் பெருசுகள் போல அந்த முத்திய கொத்தவரைகள். அடுக்கும் போதே கைக்குப் பதமாகவும் இளசாகவும் இருந்தவைகளை ஒதுக்கி டீம் பண்ணிக்கொண்டு நறுக்கினால் காரியம் சுலபத்தில் முடியும். முத்தின காய்களை களைந்து ஓரத்தில் எடுத்துவைத்து இராத்திரி பிசாசாய் சென்னை வீதிகளில் அலையும் பசுமாட்டிற்குக் கொடுத்தால் போற வழிக்குப் புண்ணியமாய் போகும்.

கறிகாய் நறுக்குவது சுலபமான வேலை என்று அலக்ஷியம் செய்பவர்களுக்கு நீதிபோதனை செய்வதற்காக சுயமாக சோதித்துப் பார்த்து இங்கு இவ்வியாசத்தை எழுதினேன். மாமியாரைச் சபித்துக்கொண்டு மாமியாரின் விரலாகக் கொத்தவரங்காயை நறுக்குவது ”அவர்களு”க்கு யானை பலத்தைத் தந்து கண்ணிமைக்கும் நேரத்தில் காரியம் முடியும் வாய்ப்பிருக்கிறது. நம்மாட்களுக்கு அந்த யுக்தி ஒத்துவராது. தினப்படி இந்தக் கார்யத்தில் என்னை ஈடுபடுத்திக்கொண்டல் இன்னும் பல தத்வார்த்தமான விஷயங்கள் புலப்படலாம். அர்த்தபுஷ்டியான பல ஐடியாக்களையும் வழங்கலாம்.

ம்.. முக்கியமாக ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேன். கூடத்தில் உட்கார்ந்து காய் நறுக்கின இடத்தைச் சுத்தமாகப் பெருக்கி டஸ்ட் பின்னில் போடவேண்டும். நம்மாட்கள் வீட்டில் எவ்ளோ காரியம் செய்தாலும் இதுபோன்ற நகாசு வேலைகள் செய்யத் தெரியாமல் “அவர்கள்” வாயில் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறோம்.

கற்றுக்கொண்டவர்கள்.. நாளை வீட்டில் காய் நறுக்கிவிட்டு பதிலுரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கு அடாவடியாக கமெண்ட் இடுவோர் அவர்கள் வீட்டில் ஒட்ட நறுக்கப்படுவார்கள். நன்றி!!

28 comments:

ராஜி said...

அரைக்கிலோ கொத்தவரங்காய் வாங்கி வச்சுடேன். ஆஃபீசுல இருந்து “அவங்க” வரட்டும். இந்த பதிவையும், கொத்தவரங்காயையும் கண்ணுல காட்டுறேன்!!

குட்டன்ஜி said...

இப்படியெல்லாம் சிரமப்பட்டாத்தான், கொத்தவரங்காய் பருப்பு உசிலி சாப்பிட முடியும்!
சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு!அம்மா என்னிக்குக் காசி போயிட்டு வந்தாளோ அதுக்கப்புறம் கொத்தவ ரங்காயே கிடையாது!:-(

விஸ்வநாத் said...

வீட்ல சமையல் செஞ்சதே ஏதோ திருவண்ணாமலை கிரிவலம் போயிட்டு வந்தமாதிரி ... என்னா விளக்கம் ? என்னா விளக்கம் ?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒரு நாள் என்றால் செய்யலாம்..
கொஞ்சம் ஆர்வக்கோளாரில் கிச்சன் பக்கம் சென்று கறிகாய் வெட்டும் வேலையை செய்தால் நிரந்தரமாக இந்த பணி நமக்கு வந்துசேரும் என்ற அச்சத்தால் அந்தப்பக்கம் போவதில்லை...


ஒரு கொத்தவரங்கய் நறுக்கியது குறித்து என்ன ஒரு வில்லங்கமான பதிவு...

என்ன சொன்னாலும் நாங்க சிக்கமாட்டோம்

Anonymous said...

ippathan kaai narukkave kathundu irukela saar !? neenga yeppo enga thalaivar maatiri samaikka kathukkarathu.

intha kothavaranga,kosu,beans ithelam konjam kashtam thaan. neenga potato la irunthu aarambingo.

Regards.

T.Thalaivi.

வை.கோபாலகிருஷ்ணன் said...

காய்கறிகள் வாங்கி வருவதும், அவற்றை அழகாக கலையுணர்வோடு, பொடிப்பொடியாக நறுக்கித் தருவதும் இப்போதெல்லாம் என் வேலைகளாக ஆக்கிக்கொண்டுள்ளேன்.

ஏதோ நம்மால் ஆன ஒரு சிறு உபகாரம்.

கொத்தவரங்காயைப் பொறுத்தவரை, மற்ற வெண்டைக்காய், கத்தரிக்காய், அவரைக்காய் போல புழு பூச்சிகள் உள்ளனவா என ஆராய்ச்சி ஏதும் செய்யத் தேவை இருக்காது என்பதில் ஓர் மகிழ்ச்சியுண்டு.

சமமான உயரம் உள்ள காய்களாக பத்துப்பத்தாகக் கூறு கட்டிக்கொண்டு, சூப்பர் கத்தியால் காம்பையும் அடியையும் முதலில் நறுக்கி கையோடு அருகே உள்ள டஸ்ட் பின்னில் போட்டுவிடுவேன்.

காம்பும் அடியும் போக மீதியுள்ள நீண்ட உடல் பகுதியைப் பொடிப்பொடியாக நறுக்கி, அதற்கான பாத்திரத்தில் போட்டுக்கொண்டே போவேன்.

இடையில் நான் எந்த வேலையிலும் ஈடுபட மாட்டேன். முழுக்கவனமும் அதிலேயே தான் இருக்கும்.

இல்லாவிட்டால் கத்தி நம் விரல்களை பதம் பார்த்து விடும்.

குப்பையெல்லாம் சிந்திச் சிதறாமல், துடைப்பத்தால் பெருக்கித்தள்ளி விட்டால் வேலை முடிந்தது.

என்னைப்போலவே நீங்களும் என்பது கேட்க மகிழ்ச்சி.

எனக்கு கத்தி மட்டுமே சரிப்பட்டு வரும். அது ரம்பம் போல ஷார்ப்பான சற்றே பெரிய Foreign கத்தியாக்கும்.

http://gopu1949.blogspot.in/2010/10/blog-post.html

வல்லிசிம்ஹன் said...

தெரிந்திருந்தால் எங்கள் வீட்டு ஆள் வாங்கி அருவாமணையைக் கொடுத்திருப்பேனே:)
அது பரம்பரையாக எல்லோர்ட ரத்தமும் ருசி பார்த்திருக்கிறது.ஆனால் நிமிஷத்துல திருத்திவிடலாம் எல்லா காய்கறியையும்.

வெகு நல்ல பகிர்வு!!!

மாதேவி said...

அசத்துங்கள். வாழ்த்துகள்.:))

நானும் அரைக்கிலோ கொத்தவரங்காயை வாங்கி வைத்துவிடலாம்...... என்ன? வெட்டவேண்டியது நானாகத்தான் இருக்கும்.:(
வோசிங்மெசினில் உடுப்புகள் போட்டு எடுப்பதுதான் எனது வீட்டுக்காரருக்கு தெரியும்.:))


இராஜராஜேஸ்வரி said...

தினப்படி இந்தக் கார்யத்தில் என்னை ஈடுபடுத்திக்கொண்டல் இன்னும் பல தத்வார்த்தமான விஷயங்கள் புலப்படலாம். அர்த்தபுஷ்டியான பல ஐடியாக்களையும் வழங்கலாம்.


ஐடியாக்கள் அள்ளி வழங்கும் வள்ளல்..!

'பரிவை' சே.குமார் said...

பரவாயில்லை... கொத்தவரங்காய் வெட்டக் கத்துக் கொடுத்துட்டீங்க எல்லாருக்கும்....

கொத்தவரங்காய் நறுக்கினதெல்லாம் பதிவாயிருச்சே...

geethasmbsvm6 said...

ஹஹா, முன்னாடியே தெரிஞ்சிருந்தா எங்க வீட்டு அரிவாள்மணையக் கொடுத்திருப்பேன். என் கல்யாணத்தின் போது வாங்கி தீட்டிக் கொடுத்தது இன்னமும் கூர்மையாக எல்லாரையும் பதம் பார்க்கிறது. நம்ம ரங்க்ஸ் இதனால் தன்னோட பேர் கெட்டுப் போகிறதுனு முதல்லே அதைப் பெட்டியில் தூக்கிப் போட்டுட்டார். இப்போ வெண்ணை வெட்டும் கத்தியால் தான் நறுக்கறோம். கொத்தவரைக்காய் நறுக்கிறதிலே முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது காம்பை மட்டும் ஆய்ந்தால் போதுமானது அல்ல. :))) அடிப்பகுதியையும் நறுக்க வேண்டும். அதுக்காகக் காயோடு சேர்த்தும் நறுக்கக் கூடாது.

ஆகவே எப்போதுமே கொத்தவரை நறுக்கும் வேலை என்னைச் சேர்ந்தது. இந்த வம்புக்கெல்லாம் நான் வரலைனு போயிடுவார். :)))))) பின்னாடி குருக்ஷேத்திரம் வராமல் இருக்க முன் கூட்டிய பாதுகாப்புத் தான். :))))))

geethasmbsvm6 said...

வெங்காயம் கூட நறுக்குவீங்களா? நம்ம ரங்க்ஸ் கட்டாயமா வெங்காயம்னா ஓடோடியும் வருவார். ஏன்னு கேட்டா, என் கண்ணில் நீர் வடிய விடமாட்டேன்னு எங்க அப்பாவுக்கு வாக்குறுதி கொடுத்திருக்காராம். :P:P :P :P

pudugaithendral said...

ஒரு நாள் கொத்தவரங்காய் நறுக்கியதே பதிவா வருது.. அப்ப நாங்கல்லாம் எத்தனி பதிவு போடவேண்டி இருக்கும்...

நாகாசு வேலை இல்ல.... அது நல்ல வேலை. இப்படித்தான் தெரிஞ்ச ஒரு நண்பர் மாவு சல்லிச்சுத்தர்றேன்னு சொல்லி ஹெல்ப் செய்ய உக்காந்தார். சலிச்சும் கொடுத்தாப்ல. தங்க்ஸ் வேறவேலையில் இருந்ததால (கோகுலாஷ்டமி)இதைப்பத்தி கவனிக்கலை. மாவை சல்லிச்சு அந்த இடத்தை தண்ணீர் தெளிச்சு துடைக்காம விட்டுட்டார் மனுஷன். தானே அந்த மாவில் வழுக்கி விழுந்து தோள்பட்டை கழண்டுவிட்டது. :(( என்னதான் இருந்தாலும் ரங்க்ஸ்களுக்கு அடுத்தடுத்து என்ன செய்யணும்னு தெரியறதில்லை பாருங்க.

ADHI VENKAT said...

அதானே! ஒருநாள் காய் நறுக்கியதற்கே பதிவுன்னா....நாங்கள்லாம் தினமும் எத்தனையோ வேலைகள் செய்யறோம்...அதெல்லாம் என்ன சொல்றது? என்ன இருந்தாலும் ரங்க்ஸ் எல்லாருமே இப்படித் தான் போல....:))

அரிவாள்மனையை விட்டு பனிரெண்டு வருடமாகி விட்டது. தில்லி சென்றதிலிருந்தே கத்தி தான்...:)திருமணமான புதிதில் என்னவரும் சப்ஜிக்கு காலையில் அழகாக வெட்டி தந்திருக்கிறார். நானும் அவருக்கு ட்ரஸ் எடுத்து வைப்பது, ஷூ பாலீஷ் போடுவது என எல்லாம் செய்திருக்கிறேன். அப்புறம் எல்லாம் உல்டா தான்...:))

ராத்திரியே சாம்பாருக்கு, சப்ஜிக்கு, கறிக்கு, பச்சடிக்கு என எல்லாமே நறுக்கி வைத்துக் கொண்டால் தான் அப்பாவுக்கும், மகளுக்கும் பம்பரமாக வேலை செய்ய முடியும்.....:))

RVS said...

@ராஜி
நல்லா நறுக்கிக் குடுத்தாங்களா? இன்னும் உங்களுக்கு என்னவெல்லாம் நறுக்க முடியலையோ சொல்லுங்க.. பதிவா எழுதிடலாம்... நன்றி! :-)

RVS said...

@குட்டன்
பருப்பு உசிலி பிரமாதமான ஐட்டம். கருத்துக்கு நன்றி! :-)

RVS said...

@விஸ்வநாத்
விசு!! காய் நறுக்கினா கால் வலிக்குமா? :-)

RVS said...

@கவிதை வீதி... // சௌந்தர் //
நியாயமான பயம்தான்.. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க... :-)

RVS said...

@T.THALAIVI,
சமையல் கட்டிற்குள் விடமாட்டேன் என்கிறார்கள். எங்கே நான் நன்றாக சமைத்துவிடுவேனோ என்கிற பயம். :-)

RVS said...

@வை.கோபாலகிருஷ்ணன்
நீங்கள் காய்கறி கலைஞர் சார்! அடேங்கப்பா.. எவ்வளவு நுணுக்கங்கள்.. :-)

RVS said...

@வல்லிசிம்ஹன்
அருவாமனையில் நறுக்கிக்கொண்டால் இனிமே காயே நறுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். தப்பித்துகொள்ளலாம்.. ஐடியா இல்லாமல் போய்விட்டது... நன்றி! :-)

RVS said...

@மாதேவி
எனக்கும் வாஷிங்மெஷினில் “துவைக்க”(?!) தெரியும். கருத்துக்கு நன்றி :-)

RVS said...

@இராஜராஜேஸ்வரி
மிக்க நன்றி மேடம்! :-)

RVS said...

@சே. குமார்
பரவாயில்லைங்க.. கைவசம் ஒரு தொழில் இருக்குன்னு வச்சுப்போம்.. என்ன சொல்றீங்க? :-)

RVS said...

@geethasmbsvm6
ரெண்டையும் நறுக்கிட்டேன் மேடம். முன்னாடி பின்னாடியெல்லாம் நறுக்கின போது “இவ்ளோவா நறுக்கி வீணாக்குவா?”ன்னு திட்டு வாங்கினதெல்லாம் எழுதலை. இப்படி வாயை நோண்டி எல்லாத்தையும் வரவழச்சுடுவீங்க போலருக்கே!! உருளை உரிப்பேன்.. வெங்காயம் உரிப்பேன்... உங்க கமெண்ட்டெல்லாம் பார்த்தா அவர் கண்ல நீர் வராம இருந்தா பத்தாதுன்னு தோணுது.... ஹி..ஹி... நன்றி! :-)

RVS said...

@புதுகைத் தென்றல்
நீங்கெல்லாம்தான் இப்படி ரங்க்ஸுங்களுக்கு ஒண்ணுமே தெரியாம வளர்த்துடறீங்க... அப்புறம் குத்தம் சொன்னா நாங்க என்ன பண்றது? ... கருத்துக்கு நன்றிங்க... :-)

RVS said...

@கோவை2தில்லி
வெ.நா வை எல்லாம் செய்யச்சொல்லுங்க.. உங்களைவிட பெட்டரா செய்வேன்னு ஒருநாள் எங்கிட்ட சொன்னாரு... பத்த வச்சுட்டேன் பாருங்க.. ஹி..ஹி.. :-)

pudugaithendral said...

இந்த காலத்துல ஒண்ணும் குழந்தைகள் கல்யாணம் நடக்கலையே. அடுப்படி வேலையை ஆண்களுக்கு சொல்லிக் கொடுக்காதது அம்மா தப்பா இல்ல கட்டிகிட்டு வந்த பொண்டாட்டி தப்பா..... ஈஸ்வரா.

எங்க வீட்டுல அயித்தான் அவங்க அம்மா ட்ரையினிங்கில் ஓரளவுக்கு நல்லாவே எல்லா வேலையும் செய்வார். நாளைக்கு மருமகள் கிட்ட பேச்சு படக்கூடாதுன்னு மகனுக்கும் ட்ரையினிங் கொடுக்கறேன். (மகளுக்கும் தான்)
:)))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails