Thursday, October 14, 2010

பெங்களூரு பாட்டுக்காரன்

சமீபத்தில் அலுவல் காரணமாக பெங்களூரு சென்றிருந்தேன். மிக அற்புதமான சீதோஷ்ணம். நான்கு நாட்கள் சேர்ந்தார்ப்போல் எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் களைப்படையாமல் வேலை செய்யலாம். என்ன இருந்தாலும் மக்கள் இயல்பு வாழ்க்கை பிறழாமல் உழைத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து எங்கள் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தோம். நல்ல போக்குவரத்து நெரிசல். உங்கள் இஷ்ட தெய்வமே எதிர் பக்கம் நின்று கூப்பிட்டாலும் இரண்டு தெரு கிழக்கிலும் மேற்கிலும் சென்று வடக்கிருந்து எதிர்சாரிக்கு செல்லலாம். அவ்வளவு ஒரு வழிப்பாதைகள். 'வாழ்கையே ஒரு ஒருவழிப்பாதை' என்று எங்கோ எப்போதோ படித்தது ஞாபகம் வந்தது.

இன்ஃபான்ட்ரி ரோடு சிக்னலில் காத்திருந்தோம். திடீரென்று நில அதிர்ச்சி வந்தது போல் எங்கள் வண்டி குலுங்க ஆரம்பித்தது. வெளியே 'டம் டம் டம் டம்' என்று ஒரு சப்தம். ஜீப்பின் கதவில் கை வைத்தால் நமது உடம்பு லேசாக குளிர் ஜுரம் வந்தது போல நடுங்கியது. வெளியே எட்டி பார்த்தேன். ஒரு வெளிநாட்டு உயர்ரக காரின் அனைத்து ஜன்னல்களையும் திறந்து விட்டு, மார்கழி மாதம் மாரியம்மன் கோயிலில் கூம்பு ஸ்பீக்கர் கட்டிய மாதிரி சப்தத்துடன் இசை பொழிந்து வெளியே வழிந்து கொண்டிருந்தது. பாட்டு தனக்கு இல்லை என்பது போலவும், ஓமன் போன்ற பேய் படங்களில் சைத்தான் ஏறியவன் வெறித்து பார்ப்பது போல் ரோட்டை பார்த்த விழி பார்த்தபடி ஒரு யுவன் இருந்தான். கைகள் மட்டும் ஸ்டியரிங்-ல் தாளமிட்டபடி இருந்தது. அவன் ஒரு தேகப்பயிற்சியாளன் என்பதற்கான அடையாளங்களை கால் பாகம் கை வைத்த நீல கலர் டிஷர்ட் காட்டியது. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல சிக்னல் விட்டவுடன் பறந்து போனான். நீண்ட நேரம் என் காதிற்குள் "டம் டம்" கேட்ட வண்ணம் இருந்தது. 

பின் குறிப்பு: இது ஒரு மீள் பதிவு.

26 comments:

பொன் மாலை பொழுது said...

அம்பி, இங்க மட்டும் என்னவாம்? இதே போன்ற விடலைகளை சென்னையில் நிறைய காணலாம். அப்பன் உழைப்பில் ,மிதப்பில் வண்டி வாங்கி ஓட்டிக்கொண்டு, இப்படி சத்தமாக அலற விட்டு, மேஜிக் வலைகள் செய்து , பிறர் "தம்மை பார்க்கவேண்டி " கோணங்கி தனங்கள் செய்யும் கிறுக்குகளை. சமீபத்தில் என் கண்ணில் பட்ட ஒரு வண்டியின் பின்புற வாசகம்:
"Yes, This is my Grand Faa's Road! " கேனபயளுவ ,அல்லது புது பணக்காராணுவ !இவனுங்க பெரும்பாலும் ஏதாவது ஒரு அரசியல் அல்லது ஜாதி கட்சி ஆட்களின் பிள்ளைகளாக இருக்கும்.

Anonymous said...

//பின் குறிப்பு: இது ஒரு மீள் பதிவு //
இது மட்டும் தாண்ணே நல்லா புரியுது :)

Madhavan Srinivasagopalan said...

//பின் குறிப்பு: இது ஒரு மீள் பதிவு.//

I knew it while reading first few lines..

RVS said...

கக்கு ரொம்ப கொதிச்சு போறீங்க... கூல் டவுன். என்ன பண்றது. இது பணநாயகம் உள்ள ஜனநாயக நாடு.

RVS said...

பாலாஜி தம்பி.. தங்களுக்கு என்ன புரியலைன்னு எனக்கு புரியலை. இது புரியுதா? ;-) ;-)

RVS said...

மாதவா.. நீ இந்த ப்ளோகின் ஆதி வாசகன். உனக்கு தெரியாமல் இங்கே ஒரு பதிவு அரங்கேறுமா?

Chitra said...

என்னவோ போங்க! டம் டம் டம்.... !!!

RVS said...

ஆமாங்க சித்ரா.. டம். டம் டம்.டம்.... ;-) ;-)

சைவகொத்துப்பரோட்டா said...

இது மாதிரி கேட்டா காருக்குள்ள இருப்போர் சீக்கிரம் "டமாரம்"தான்.

RVS said...

சை.கொ.ப... டமாரமாத்தான் இருந்திருப்பானோ?

Unknown said...

நம்ம நாட்டுல இப்படியும் சுயநலவாதிகள் இருக்கத்தான் செய்யறாங்க.பகிர்வுக்கு நன்றி

RVS said...

காதைக் கிழிக்கும் மியூஜிக். எப்படி உள்ளே இருந்தாரோ அந்த ஆள். ஜிஜி ;-)

எஸ்.கே said...

இந்த மாதிரி சவுண்டா வீட்ல கூட இப்பல்லாம் வெச்சிக்கிறாங்க! கேட்டா ஹோம் தியேட்டராம்! தாங்க முடியலை!:-)

RVS said...

நாலு சுவத்துக்குள்ளே என்ன வேணா பண்ணட்டுமே எஸ்.கே. ;-

எஸ்.கே said...

நான் எங்க பக்கத்து வீட்டில் இதுமாதிரிங்க! தாங்க முடியலை! என்ன பண்ண?! எல்லாம் சின்ன பசங்க!:-)
இதுபோல் ரோட்ல போகும்போது வைத்தா ட்ராஃபிக் சவுண்ட் கேட்காது இதனால அவங்களுக்கு கஷ்டமோ இல்லையோ நமக்கு கஷ்டம்தான்!

RVS said...

ஆமாம் எஸ்.கே. ;-)

Gayathri said...

namma chennai ecr road la indha kodumai nirayave nadakkum sir enna seyya ellam thaan savudaavathu illama suththi irukuravangalai aakkaporanga

RVS said...

ஆமாம் பார்த்திருக்கிறேன் காயத்ரி. ;-)

மோகன்ஜி said...

இப்படிப் போகும் 'லெளட் ஸ்ப்பீக்கருக்குப் பொறந்த லபக்தாஸ்கள்' நாடெங்கும் உண்டு ஆர்.வீ.எஸ்!

விஷாலி said...

இப்படி போயிடிருன்தவர் தான் நம்ம கருப்பு பாடி நடிகர் சென்னை அண்ணாநகரில் - இப்ப படமும் ஓடல காரையும் அப்படி ஓட்ட முடியல - என்ன பண்றது காலத்தின் கட்டாயம் இது.

அப்பாதுரை said...

அது வேறே ஒண்ணுமில்லே... பூம் பூம் ஆளு தேகப்பயிற்சியாளனா தெரியலின்னா அன்னியன் கணக்கா எறங்கியிருப்பாரு RVS அண்ணாத்தே..

அப்பாதுரை said...

//நம்ம கருப்பு பாடி நடிகர் சென்னை அண்ணாநகரில் ..

யாரு?

RVS said...

ஆர்வம் அதிகமாயிடுச்சு... ம. நண்பன்.
யாரு?.....

RVS said...

ஆமாம் அப்பா சார். அந்த இடத்துக்கு அவன் அந்நியன் மாதிரி தான் இருந்தான். அவுங்க ஊரு பாட்டுக்காரன். ;-)

பத்மநாபன் said...

பெண்களுருக்கு போய் டிராபிக் சூப்பெரெண்டெண்ட் வேலையா... போனமா ......

RVS said...

வந்தோமான்னு தான் இருக்கணும் பத்துன்னா... என்னபண்ற கண்ணு அலைபாயறதே... பெண்களுருக்கு போயிட்டு கண்ணை கட்டிண்டு போக முடியுமா. கண்ணை கட்டிண்டு போனாலும் காதைக் கட்ட முடியுமா? மோகன் அண்ணாவோட காது பதிவுல காஸ்யபன் சொல்லியிருந்தாரே.. ஞாபகம் இருக்கா? ;-) ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails