Monday, October 4, 2010

குந்துமணி தங்கம்

goldmine
விவரம் கீழே டிஸ்க்கியில் பார்க்க..
இந்த ஞாயிற்றுக்கிழமை தாலிக்கு கோர்க்க குந்துமணி அளவிற்கு ரெண்டு தங்க குண்டுகள் வாங்கலாம் என்று என்னை மந்திரித்து தி.நகர் அழைத்துப் போனார்கள். சாதாரணமாக தி.நகர் பஜாரில் ரெண்டு காலை சற்று அகலமாக விரித்து நின்றாலே நடுவில் கொண்டுவந்து ஆட்டோ விட்டு "ஓரமா நில்லுப்பா" என்று சீறுவார்கள். இதில் நாலு கால் வாகனத்தை நிறுத்த இடம் கிடைப்பது  சென்னையில் புகழ்மிகு பள்ளிகளில் ப்ரி கே.ஜி எல்.கே.ஜி சீட் கிடைப்பது போன்று பெருமை படைத்தது. பனகல் பார்க் பக்கம் வலது பக்கம் சந்து கிடைத்தால் சொருகலாம் என்று பார்த்துக்கொண்டே வந்தால் திரும்ப விடாமல் பாதசாரிகளும் புல்லட்சாரிகளும் சாரி அணிந்த சாரிகளும் சரமாரியாக ராமபானம் போல நுழைந்து கொண்டே இருப்பார்கள். ஒரு செலுத்தப்பட்ட அம்பு போல நேர் கொண்ட பார்வையாக சுறுசுறுப்பாக நாம் அக்கடான்னு நிற்பதை துளிக்கூட கண்டுகொள்ளாமல் நில்லுடான்னு போவார்கள். ஐந்து நிமிடம் "நடை கண்டேன்... நடை பாதையை கண்டேன்..." என்று பார்த்த விழி பார்த்தபடி நின்றால் நின்றால் பூமி அதிர, வண்டி அதிர நம் உள்ளம் பதற பின்னால் இருந்து காது கிழிந்து தொங்கும் வரையில் ஒரு ஹார்ன் அடிப்பார்கள். சரி இப்போது யாரும் இல்லை திரும்பலாம் என்றால் உங்கள் பானெட் முன் நின்று கை தட்டி ஆட்டோ நண்பரை சவாரிக்கு அழைத்து கார் எதிரில் உங்களை பார்க்கவிட்டு ஆட்டோ ஏறிப் பறந்து போவார்கள். எப்போது டி.நகர் கூப்பிட்டாலும் இந்த மரண அவஸ்த்தைகள் தான் முதலில் ஞாபகம் வரும். அய்யனாரிடம் அழைத்து செல்லப்படும் ஆடு போல பேய் முழி ஒன்றை முகத்தில் தாங்கி சரி போகலாம் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு புறப்பட்டேன்.

உங்கள் வண்டிகளை நிறுத்துவதற்கு ஆள் வைத்திருக்கிறோம் என்று விளம்பரம் செய்த நான்கு மாடி நகைக்கடை போகலாம் என்று தன்னிச்சையாக முடிவெடித்து ஏகோபித்த ஆதரவில் அங்கேயே செல்வது என்று தீர்மானமாகியது ட்ரைவனாகிய எனக்கு இமாலய சந்தோஷமே. போய் இறங்கியவுடன் பவ்யமாக கார் சாவி வாங்கிக்கொண்டு டோக்கன் சீட்டு கொடுத்தார்கள். நுழைந்தவுடன் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இது என்ன நகைக் கடையா அல்லது பலசரக்கு விற்கும் நாட்டார் கடையா என்று. கவுண்டருக்கு கவுண்டர் ஃபுல்லாக க்யூ கட்டி நின்றது ஜனம். ஹலோ யாருங்க அது இந்தியாவை ஏழை நாடுன்னு சொன்னது. ஜூவல் மார்க்கெட்டில் ஒரே மீன் மார்க்கட் சத்தம். நிமிடத்திற்கு ஐம்பது முறையாவது "கோல்ட் இன்னிக்கி என்ன ரேட்?" என்ற கேள்விக்கு முகத்தில் புன்னகை தாங்கி பதிலளித்த அந்த விற்பனையாளருக்கு சிறந்த கோல்ட் ஸ்மித்துக்கான ஒரு ஆஸ்கார் விருது கொடுக்கலாம். பார் தங்கமாக இல்லாமல் ஒரு சின்ன வளை வளைத்துக்கொடுத்தாலும் செய்கூலி, சேதாரம் என்று விலையை ஏகத்திற்கு ஏற்றிவிடுகிறார்கள். முகம் பார்க்கும் கண்ணாடியை கடையின் கண்ணாடி டேபிள் முன்னால் நிறுத்தி ஒரு கடிகார பெண்டுலம் போல முகத்தை ஆட்டி ஆட்டி தான் அணிந்த அட்டிகையை பார்த்துக்கொண்டிருந்தாள் ஒரு அம்மணி. பக்கத்தில் அடக்கத்துடன் நின்றுகொண்டிருந்த வீட்டுக்காரரின் பார்வை போன போக்கை பார்க்க வேண்டுமே. "எப்டீங்க இருக்கு?" என்று கேட்டால்

எல்லா பெரிய கடைகளிலும் இப்போது உள்ளேயே சிறுபிள்ளைகள் விளையாடுவதற்கான உள்விளையாட்டு அரங்கம் ஒன்று உள்ளது. அப்பாவித்தனமாக அங்கு பிள்ளையோடு நிற்கும் தந்தைமார்களையும் தாத்தாமார்களையும் சொர்னாக்காதான் காப்பாற்ற வேண்டும். அவ்வப்போது நகை வாங்கும் களைப்பு தீர கணவன் தோளில் மாட்டிய வாட்டர் பாக்ல் இருந்து தாகசாந்தி வேறு செய்துவிட்டு போனாள் ஓர் செக்கச்செவேலென இருந்த பேரிளம்பெண். அடியே உன் தேகம் ரத்தம் ஓட்டம் பாய்கிற தங்கம்... என்று காதலனுக்காக வைரமுத்து எழுதிய பாடல் நினைவுக்கு வந்தது.

குந்துமணியோ கூடை நிறையவோ எவ்வளவு வாங்கினாலும் கஸ்டமர் கஸ்டமர்தான். நம்முடைய குந்துமணி சரக்கு ஐந்து நிமிடத்தில் வாங்கி முடித்தாலும் ரசீது தருவதற்கு கொஞ்சம் லேட் செய்தார்கள். "மேடம் வேற ஏதாவது பாருங்க" என்று சும்மா இருப்பவர்களை சீந்தி விடுகிறார்கள். நிற்கிற நேரத்திற்கு வேற ஏதாவது பார்க்கலாம் என்று பெண்டென்ட், ஹாரம், ரெட்டை வடம், தேர் வடம் என்று சுற்றுலா கிளம்புபவர்களை கண்டு பர்ஸ் பையை கடித்து கூப்பிட்டது. "மடையா. சீக்கிரம் ரசீது கேள். என் மீது உனக்கு அக்கறை இல்லையா?" என்று. எங்களுடன் வந்த என் மனைவியை பெற்ற புண்ணியவதி "என்ன சார். எதுவும் கிஃப்ட் இல்லையா?" என்று ஆர்வமாக விசாரித்ததில் அவர்கள் பெயர் போட்ட விளம்பரம் தாங்கிய  பர்ஸ் ஒன்றை பரிசாக கொடுத்தார்கள். 

கொடுத்த பர்ஸும் எம்ப்டி, கொண்டு போன பர்ஸும் எம்ப்டி.

பட விவரம்: மேலே போட்டோவில் ஜொலிப்பது தங்கச் சுரங்கமான ஒரு சேரனன்னாட்டிளம் பெண். கல்யாண கோலத்தில் எடுத்த படம். ஈமெயில் மூலம் நண்பர் ரவி அனுப்பியிருந்தார். அந்த மெயிலில் Thank you World Malayali Club என்று போட்டிருந்தது. சத்தியமா நான் குந்துமணி சைசுக்கு தான் தங்கம் வாங்கினேன். நம்புங்க.. ப்ளீஸ்.
-

24 comments:

பொன் மாலை பொழுது said...

இரு இரு .....அடுத்த தடவ பனகல் பார்க் பக்கம் வரும்போது இருக்குடீ .....ஒனக்கு ......

ஹிஹி ......வேற ஒண்ணுமில்ல .....ரெண்டுபேரும் போயி கூலா ஜிகர்தண்டா அடிக்கலாம் .அதான்.
நான்தா வாங்கித்தருவேன். சரியா ...?!

Gayathri said...

haa haa evlo kashtam shopping that too in tnagar athum with car...gr8

இளங்கோ said...

//கொடுத்த பர்ஸும் எம்ப்டி, கொண்டு போன பர்ஸும் எம்ப்டி.//
Super :)

RVS said...

ஜிகர்தண்டாவிர்க்கு நன்றி கக்கு ;-)

RVS said...

பொன்னகை வாங்க புன்னகையுடன் போகலாம் என்று தான் விருப்பப்பட்டேன் காயத்ரி. ஆனால் அந்த ஏரியா.... கூட்டத்தை கண்டால் எனக்கு அலர்ஜி.

RVS said...

நான் எம்ப்டி ஆனதை பாராட்டியதற்கு நன்றி இளங்கோ.. ;-) ;-) ;-);-)

Madhavan Srinivasagopalan said...

//கொடுத்த பர்ஸும் எம்ப்டி, கொண்டு போன பர்ஸும் எம்ப்டி.//

Super..

Dear RVS.. I feel it would be better to avoid fotos of individuals.Also, this fotos is full of 'gold' why to show it on public domain.

Hope u do not take my words in negative sense.

Thanks.

RVS said...

Dear Madhavan,
Thanks. This is one of the photograph from a set of ten which hit my email INBOX as a forwarded message. I have not degraded any one with the photo. Hope you understand. Anyway, in future I try to avoid publishing these kind of photos.

சைவகொத்துப்பரோட்டா said...

நகைக்கடை சென்றால் கண்டிப்பாக பர்ஸ், எம்ப்டிதான் :))

RVS said...

சுத்தமா வழிச்சி துடைச்சி எடுத்துர்றாங்க சை.கொ.ப. ;-)

ஹேமா said...

சத்தியமா என்னை இந்த இடத்தில சேர்க்காதீங்க ஆர்.வி.எஸ்.எனக்குத் தங்க நகைகள் உண்மையில் பிடிப்பதில்லை.பாவம்தான் நீங்க !

RVS said...

தங்களுக்கு தங்க நகைகள் பிடிப்பதில்லையா... என்ன ஹேமா சொல்றீங்க நீங்க... தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை... தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை.. அப்படின்னு வைரமுத்து மிஸ்டர். ரோமியோ படத்தில் பாட்டா எழுதியிருக்காரு...

ManiSekaran said...

Boss, enthiran review quicka podunga.. We are waiting eagerly..

Mani

அப்பாதுரை said...

கேள்வி 1: அவங்க போட்டிருக்குற தங்கம் தோராயமா எவ்வளவு தேறும்?
கேள்வி 2: இப்பத்தான் மாதவன் கமென்டைப் படிச்சேன், அதனால நோ கேள்வி.

RVS said...

அப்பா சார். மாதவன் கமெண்ட்டை படிச்சுட்டு நீங்க ஒன்னும் விசனப்பட வேண்டாம். இந்த அலங்கார மங்கையைப் போல ஐந்தாறு மாப்பிள்ளை பொண்ணு ஜோடி போட்டோ மெயில்ல அனுப்பியிருந்தாங்க. இந்த மெயில் வந்ததும் என்னோட இன்பாக்ஸ் ஜொலித்தது. அதோட நாம ஒன்னும் தப்பா எதுவும் போடலையே... என்ன நான் சொல்றது.

RVS said...

மணி பாஸ், ரெண்டு நாள் கூட்டம் ஒயட்டும்ன்னு வெயிட்டிங். அப்புறம் கோயிங். அதுக்கப்புறம் எழுதிங். நத்திங் டு வொரி. விசாரிப்புக்கு நன்றி..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பதிவு empty இல்ல..அது full!

RVS said...

இப்பதான் பர்ஸ் நிறையுது ஆர்.ஆர்.ஆர். சார்.

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ்.. தங்கம் வாங்குற காசிருந்தா ரெண்டு
எந்திரன் படம் எடுக்கலாமே! உங்க தி நகர் அலைச்சலை சுவையாய் எழுதியிருக்கீங்க. தங்கம் பத்தி.. வேணாம் .நான் எதையாவது சொல்வேன். அடடான்னு ஆலத்தி எடுப்பீங்க..
ஒரு க்ரூப்பாத்தான் அலையிரோமோ?

இப்பத்தான் இதைப் படிச்சேன்.. இன்னிக்கு நாங்க எந்திரன் பாத்துட்டோமில்ல??

பத்மநாபன் said...

கொடுத்ததும் , கொண்டு வந்ததும் எம்ட்டி... சரி காதை குடுங்க ஒரு கேள்வி , டெபிட் / க்ரிடிட் கார்டெல்லாம் எப்படி கண்ல படாம மறைச்சிங்க....

இப்படி படங்களை கேரள மக்கள் காட்டுவது வெகு ஜகஜம்..மிகவும் பெருமைக்குரிய விஷயமாக எடுத்துக்கொள்கிறார்கள்.... ஊர் சென்று திரும்பியவுடன், சர்வசாதரணமாக மாப்பிள்ளைகள் தனக்கமைந்த பெண்ணின் இப்படத்திற்கு சற்றும் குறைவில்லாத பொன்சூட்டலை காட்டி மகிழ்வார்கள்...அப்பாக்களும் ஓடாக தேய்ந்து சேர்த்தை ஒரேடியாக பொண்ணுக்கு பூட்டி படமெடுத்து வருவார்கள்.....

நாம் தான் `` பொன்னகையை விட புன்னகை மேல் என்று நினைப்பவர்களாச்சே``

RVS said...

எந்திரன் பார்த்த இந்திரன் மோகன்ஜிக்கு ஒரு ஜே!! நமக்கு இன்னும் டிக்கெட் கிடைக்கலை சாமி!!

RVS said...

பத்துஜி நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை! ஒத்துக்குறேன். மாதவா பத்துன்னாவின் கமெண்ட்டை பார்க்கவும். நான் கூட இந்த படத்தை போட்டுட்டு கொலைக் குத்தம் பண்ணினா மாதிரி தவிச்சேன். காப்பாற்றியதற்கு நன்றி.

Unknown said...

காரினால் சில சமயம் இப்படித் தொல்லைகள் வரும். அதுக்கு பேசாம இறங்கி
நடந்தே போயிடலாம்னு தோணும்.


உங்க ப்ளாக் பேருல மன்னைனு இருந்துச்சு.
அதான் உங்களுடைய ஊரு மன்னார்குடியா? கேட்டேன்.என்னோட பிறந்த ஊரும் மன்னார்குடிதான்.

RVS said...

கிரேட். ஒ.கே ஜிஜி

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails