Saturday, November 13, 2010

இன்னிசை அரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

p suseelaஇன்று எழுபத்தாறாவது பிறந்தநாள் கொண்டாடும் பின்னணி பாடகி "இன்னிசை அரசி" பி. சுசீலா அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சுசீலா கானம் பாடி எனக்கு பிடித்த சில டூயட் பாடல்களை இங்கே பதிவிடுகிறேன். ரஜினி அப்புறம் ஒரு விஜயகாந்த் அப்புறம் ஒரு ராஜேஷ் அப்புறம் ஒரு பிரதாப் போத்தன் திரும்பவும் ரெண்டு ரஜினி அப்புறம் ஒரு சந்திரசேகர் நடித்த மீடியம் ஹிட் பாடல்கள். பழைய கருப்பு வெள்ளை படப் பாடல்களை பதிவிட்டால் ஆர்.வி.எஸ். ஒரு வயோதிகன் என்று எல்லோரும் எண்ணக் கூடும் என்பதால் என்பது தொன்னூறுகளில் எஸ்.பி.பி மற்றும் ஜேசுதாஸ் உடன் ஜோடி சேர்ந்து பாடிய காதல் ரசம் ததும்பும் பாடல்களை இங்கே தருகிறேன். இது ஒரு முடிக்க இயலா பட்டியல். இருந்தாலும் இருகையையும் இருக்க கட்டி முடித்துக்கொண்டேன்.விடிய விடிய சொல்லித் தருவேன்..

மாலையில் மல்லிகை.. அந்தியில் பஞ்சனை.. ஊரெல்லாம் பார்க்குதே... உன்னிடம் கேட்கிறேன்... என்று சரணத்தில் ஆரம்பிக்கும் சுசீலா ஒரு மந்திரம் போட்டது போல பாட்டிற்குள் நம்மை அழைத்துச் செல்கிறார். எஸ்.பி.பி யையும் ராஜாவைப் பற்றியும் சொல்லவேண்டிய தேவை இல்லை. ஒரு காதல் பாடலுக்கு எங்கு குழைய வேண்டுமோ அங்கு குழைந்து சிணுங்கி எல்லாம் செய்வார் எஸ்.பி.பி. இப்பாடலிலும்...
முத்து மணி மாலை...


ஒரு வயலினில் ஆரம்பித்து இழு இழு என்று இழுத்து குழலில் முடித்து பல்லவி ஆரம்பிக்கும் இளையராஜாவுக்கு என்ன பரிசு கொடுப்பது. யாரோடும் ஜோடி சேரும் எஸ்.பி.பி. இந்தப் பாடலில் பி.சுசிலாவின் தேன் குரலுக்கு ஜோடியாய்...ஆவாரம் பூவு... ஆறேழு நாளா...

இந்தப் பாடலில் முதலில் வரும் பி. சுசீலாவின் ஹம்மிங்கும் அடுத்து வரும் ஆலாபனையும் அப்படியே  தன்னாலேயே நம் காதை இழுத்துவிடும். அந்தப் பெரிய பொட்டு வச்சுகிட்டு சரிதா மரத்தை பிடிச்சி பிடிச்சி ஏன் ஆடறாங்க தெரியுமா? ராஜேஷை பிடிச்சி ஆடறதும் அந்த மரத்தை பிடிச்சி ஆடறதும் ஒண்ணுன்னு டைரக்டர் சொன்னாராம். சும்மா ஜோக்குக்கு.. பின்னால எஸ்.பி.பி வருவாரு. அதுக்கப்புறம் பாட்டு களை கட்டும்.  அம்சமான பாடு.பூவண்ணம் போல நெஞ்சம்...

இந்த பசி ஷோபாவை ஏனோ ரொம்ப பிடிக்கும். மூக்கை ஒரு மாதிரியா வச்சுகிட்டு முகத்தை சுருக்கி சிரிப்பாங்க. ரொம்ப நல்லா இருக்கும். இவங்களும் சரிதாவை சொன்ன மாதிரி பெரிய பொட்டு கேஸ். பளிச்சுன்னு இருக்கும் முகம். பாவம் அல்ப ஆயுசுல போய்ட்டாங்க. நிழல்ல ஷோபாவை சிரிக்க  விட்டு எடுத்துட்டு ஒரு வாய்க்காலுக்கு அந்தப் பக்கம் தலைப்ப ஒத்தைல போட்டுக்கிட்டு ஜோடியை விட்டுட்டு ஒத்தைல சிரிச்சுகிட்டே ஓடி வரும்போது பின்னால பி.சுசீலா குரல்.. அடடா.. அருமை..பேசக்கூடாது.... (தக்குடுக்கு ரொம்ப புடிச்ச பாட்டு... ஏன்னா இதுல சிலுக்கு ஆடறா...)

இது தான் என் மொபைலோட காலர் டுயூன். நிறைய கால் வர்றதால எடுத்ததுடன் இப்படி சொல்லிட்டா சில பேர் மொபைல வச்சிடுவாங்க அப்டீங்கற நப்பாசைல வச்சேன். இப்பதான் கால் நிறைய வருது. எனான்னு கேட்டா பாட்டு நல்லா இருக்காம். பாட்டோட ஆரம்பித்தில பேசக்கூடாதுன்னு எஸ்.பி.பி ஆரம்பிச்சதும் சிலுக்கு ரஜினியை விட்டு சினுங்கிகிட்டே மான் போல துள்ளி ஓடுவாங்க. அப்பப்பா... இதிலும் எஸ்.பி.பி யின் ரகளை அதிகம். இருந்தாலும் பி. சுசீலாவின் காதல் ததும்பும் குரலும் அருமை.காத்தோடு பூ உரச... பூவ வண்டுரச...

இது ராஜாவின் மணிமகுட பாட்டு. பல்லவி ஆரம்பிக்கும் முன் ஒரு காற்றில் இலை பறந்து கீழே எப்படி விழுமோ அதுபோல ஒரு வேணுகானம் கிளம்பும் பாருங்கள். கொஞ்சம் கேளுங்களேன். அதற்க்கப்புறம் சுசீலாம்மா ஆரம்பிப்பாங்க. தூள். "உன்னோடு நான்.. என்னோடு நீ.. பூவா காத்தா உரச..." டாப்.  தலைவரோட முரட்டுக்காளை படம்.  சூப்பெர்ப். ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்....

செகப்பு சட்டை சந்திரசேகர் ஓடி வந்து சிரிச்சதுக்கப்புறம் சுசீலாம்மா ஒரு "தன தன தன்" ஒன்னு குடுப்பாங்க. கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கும். சங்கர் கணேஷ் இசையமைப்பில் வந்த பாட்டு இது. அற்புதமான பாடல்.இன்னும் நிறைய இருந்தாலும்... இந்த பாடல் தொகுப்பை பி. சுசீலாவின் பிறந்த நாள் பரிசாக உங்களுக்கு அளித்ததில் பெருமை அடைகிறேன். நன்றி.

பின் குறிப்பு: லட்சோபலட்சம் பழைய பி.சுசீலா பாடல்களை தங்களுடைய இளமைக் காலத்தில் கேட்டு அகமகிழ்ந்த அன்பர்கள் பின்னூட்டமாக பகிரலாம்.

பட உதவி: beta.thehindu.com

-

46 comments:

VISA said...

நல்ல தொகுப்பு. எனக்கு பேசக்கூடாது பாட்டு ரொம்ப பிடிக்கும். சிலுக்குக்காக அல்ல என்பதை சொன்னால் நம்புங்களேன்.

R. Gopi said...

'சின்னஞ் சிறிய வண்ணப் பறவை...' பாட்டு. பாடம் குங்குமம். ஒரு பக்கம் டிஎம்எஸ் உயிரை கொடுத்துப் பாடுவார். இவங்க ரொம்பக் கூலா பாடுவாங்க. சரியான பாட்டு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்ல தொகுப்பு. முத்து மணி மாலை திரும்ப திரும்ப கேட்டாலும் அலுக்காத பாடல். மிகச்சிறந்த தாலாட்டு பாடல்களில் ஒன்றான அத்தை மடி மெத்தையடி பாடலும், சொன்னது நீதானா பாடலும் என் ஃபேவரிட்.

சைவகொத்துப்பரோட்டா said...

இனிமையான தொகுப்பு! இன்னிசை குயிலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அப்பாடி, என்ன ஒரு அருமையான தேர்வு. இன்னும் பழைய பாடல்கள் கூட சேர்த்திருக்கலாம். : )))) சுசீலாம்மாவுக்கு இதை விட சிறந்த பிறந்த நாள் பரிசு கொடுத்திருக்க முடியுமா தெரியவில்லை.

எல் கே said...

அட்டகாசமான தொகுப்பு ...பேசக் கூடாது எனக்கும் பிடிச்சப் பாடல்தான். அதுக்கு காராணம் எஸ் பி பி

பத்மநாபன் said...

சுசிலா அம்மாவின் உச்சரிப்பு பிசகாத பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்..எல்லாம் பிடிக்கும் என்றாலும் ’’ஆலய மணியின் ஓசையை ‘’ ஆல் டைம் ஃபேவேரைட்..

உங்க காலர் ட்யுன் ‘’பேசக்கூடாது’’ கேட்டு ..பாட்டு கேட்பதற்காகவெ கொஞ்ச நேரம் ஆர்.வி.எஸ் எடுக்காட்டி பரவாயில்லை நினைத்தது உண்டு :)....

RVS said...

@VISA
ரைட்டு.. நம்பிட்டோம்.. ;-)

RVS said...

@Gopi Ramamoorthy
கரெக்ட்டுதான்.. நான் கருப்பு வெள்ளை பக்கம் போகலை.. அப்புறம் இந்தப் பதிவு அனுமார் வால் போல் நீண்டுவிடும்... நன்றி ;-)

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
அந்த சொல் சொல் அப்படின்னு பாடும்போது... கொலைக்குத்தம் பண்ணினவன் கூட ஒத்துக்கொண்டு விடுவான்.. மிக அற்புதமான பாடல். ;-)

RVS said...

@சைவகொத்துப்பரோட்டா
ஓ.கே. பரிசா ஒரு பரோட்டா பார்ஸல் பண்ண வேண்டியதுதானே.. ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி ;-) ராமமூர்த்தி கோபி அவர்களுக்கு இட்ட பதிலை பார்க்கவும். இல்லையென்றால் பாடல் தருவதென்றால் நமக்கு ரொம்ப இஷ்டமாக்கும். ;-) ;-)

RVS said...

@LK
எஸ்.பி.பி பற்றி ஆயிரம் பதிவு போடலாம். அவ்வளவு சரக்கு இருக்கு. சின்ன பாடகியோ பெரிய பாடகியோ அண்ணன் கூட பாடும்போது ஒரு மாத்து குறைச்சல்தான் எனக்கு.. யாரும் அடிக்க வராதீங்கோ.... ;-)

ஸ்ரீராம். said...

தேன் குரல்.....'ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல'...'பொன்மேனி தழுவாமல்' பாட்டு கேட்டிருக்கிறீர்களா? சொல்ல சொல்ல இனிக்குதடா என்று கண்ணன் வருவான் கதை சொல்லுவான் னு காத்திருக்க முடியுமா...அல்லது இப்போ நேரமில்லை நாளை இந்த நேரம் பார்த்து ஓடி வா என்று சொல்ல முடியுமா? கங்கைக் கரைத் தோட்டத்தில் அமர்ந்து அமைதிப் புறாவே அமைதிப் புறாவே அழைக்கின்றேன் உன்னை என்று பாடி விட வேண்டியதுதான். எனவே நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் என்று வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்...

பாஹே said...

டி ஏ பெரிய நாயகி, பி லீலா, ஜிக்கி என்று தொடங்கிய நீண்ட இசைப் பயணத்தின் இன்றும் நின்று தொடரும் பாடல் வரலாறு சுசீலாம்மா...

RVS said...

@பத்மநாபன்
அந்த உச்சரிப்பு மேட்டரை சொல்லுங்க.. யாருக்கும் இப்ப அட்சர சுத்தமாய் பாட வரலை. ஜானகி, சித்ரா, வாணி ஜெயராம், மறைந்த சுவர்ணலதா, சுசீலா, உமா ரமணன் இப்படி எல்லா குயில்கலும் பாடி நம்மை வானத்தில் பறக்க விட்ருவாங்க..
நிஜமாவே ஒன்னு சொல்லட்டா! எனக்கு புதுசா ஃபோன் பண்ற நூத்துல தொண்ணூறு பேர் "நாங்க பேசலை... " அப்படின்னு சொல்லிட்டு தான் பேசவே ஆரம்பிக்கறாங்க... இது எப்படி இருக்கு... ;-) ;-)

RVS said...

@பாஹே
ஆமாங்க... (சார்/மேடம்)
சாரா மேடமான்னு தெரியலை... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. ;-) ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
இப்பதான் தீபாவளி முடிஞ்சுது... தேன் குழல்ன்னு கேக்கறா மாதிரி தேன் குரல்...
இப்படி நிறைய சொல்லனும்ன்னு தான் தான் பழங்காலத்தை டச் பண்ணலை..
பாடல் பின்னூட்டத்திற்கு நன்றி.. ;-)

அப்பாதுரை said...

எனக்கு இன்னும் மீசை முளைக்கலே... அத்தனை இளமையிலிருப்பதால் இவங்க பாட்டை கறுப்போ வெளுப்போ சிவப்போ எதுவானாலும் தெரியமலிருப்பதற்கு மிக மிக மிக மிக வருந்துகிறேன். பெரியவங்க நீங்க சொன்னா சரிதான்.

RVS said...

எனக்குகூட பத்துஜி மோகன்ஜி போன்ற பெரியோர்கள் தான் சொல்லிக்கொடுத்தாங்க.. ரொம்ப ரொம்ப பெரியவங்க அவங்க சொன்னா சரிதான்.... ;-)
நானுன் உங்க கேசுதான்... மீசை கூட அரும்பாத பச்சிளம் பாலகன்..

பத்மநாபன் said...

புலவர் மோகன்ஜி வராம போர் அடிக்குதே....

பச்சிளம் பாலகனுக்கு விரல வாயில் வெச்சா கடிக்கத்தெரியாது..ஆனா சிலுக்கின் மான் துள்ளல் மட்டும் கரெக்டா தெரியும் ...

நீச்சல்காரன் said...

தகவல்கள் அற்புதம். பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

நல்ல சாங் கலெக்சன்ஸ் , அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

RVS said...

@பத்மநாபன்
நெசெம்மாவே எனக்கு தெரியாது...மானத் தெரிந்ததால் அந்த துள்ளல் தெரிஞ்சுது...

மோகன்ஜி ஆள் அட்ரெஸ் காணும். எங்க போய் தேடறது...

RVS said...

@நீச்சல்காரன்
நீச்சல்காரரே.. இன்னும் ரெண்டு பாட்டு மிஸ்ஸிங்... விட்டுட்டேன்.. ;-) ;-)

RVS said...

@மங்குனி அமைச்சர்
அமைச்சரே... வருகைக்கு நன்றி... வாழ்த்துக்கும் நன்றி.. அந்தக் கடைசியில.. அம்மாவுக்கு... என்னாதிது... வேற யாருக்கும் வாழ்த்து சொல்லலையே.. ;-) ;-);-)

ADHI VENKAT said...

அத்தனையும் அருமையான பாடல்கள். அதிலும் ”சிவப்பு மல்லி” படத்தில் வரும் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல். ”சோலை புஷ்பங்களே” என்று பாடல் மிகவும் இனிமையாக இருக்கும். சிறந்த பாடல்களை தேர்ந்தெடுத்து போட்டமைக்கு வாழ்த்துக்கள்.

RVS said...

@கோவை2தில்லி
நன்றி.. ;-)

இளங்கோ said...

அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :).

balutanjore said...

dear rvs

arumaiyana collection

konja neram sokkipponen

amam unga phone no konjam kudukkaradu

(romba bore adikka matten)

balu vellore

RVS said...

@இளங்கோ
எல்லோரும் எந்த அம்மாவுக்கு சொல்றீங்கன்னு தெரியலை.. ஓ.கே ;-) ;-)

RVS said...

@balutanjore

Please give me your email ID... I will send my mobile no...

Thanks.

அப்பாதுரை said...

மான் துள்ளறதை zooல பாத்திருக்கேன்.. சிலுக்குனா எங்க ஹிஸ்டரி புக்ல வருமே சில்க் ரோட்னு அதுவா? சில்க ரோட்ல மான் துள்ளுமா? பெரியவங்க கிட்டேந்து எத்தனை கத்துக்க முடியுது! அடடா! ஸ்கூல் கூட போக வேண்டாம் போலிருக்கே?

balutanjore said...

dear rvs

my e mail id is

balutanjore@gmail.com


balu vellore

R.Gopi said...

//காத்தோடு பூ உரச... பூவ வண்டுரச...

இது ராஜாவின் மணிமகுட பாட்டு. பல்லவி ஆரம்பிக்கும் முன் ஒரு காற்றில் இலை பறந்து கீழே எப்படி விழுமோ அதுபோல ஒரு வேணுகானம் கிளம்பும் பாருங்கள். கொஞ்சம் கேளுங்களேன். அதற்க்கப்புறம் சுசீலாம்மா ஆரம்பிப்பாங்க. தூள். "உன்னோடு நான்.. என்னோடு நீ.. பூவா காத்தா உரச..." டாப். தலைவரோட முரட்டுக்காளை படம். சூப்பெர்ப்//

***********

RVS

This is from the movie ANBUKKU NAAN ADIMAI (Devar Films) and not Murattu Kalai....

Good selection of songs....

பத்மநாபன் said...

அப்பாஜி கொஞ்ச நாள்ல தவழ ஆரம்பிச்சிருவாரு போல...
அப்பதான்,இவ்வளவு அப்பாவியா இருக்காரேன்னு ஜெயமாலினி, அனுராதா கதையெல்லாம் நீங்க எடுத்துவிடுவீங்க....

சில்க் ரோட்டின் கதையை கோடுகாட்டியதற்கு அப்பாஜிக்கு நன்றி..பட்டின் கதை பாரம்பர்யம் மிக்கது போல..நதியை ஒட்டி நாகரிகம் வளர்ந்தது போல் பட்டை ஒட்டி வணிகமும் பரவியிருக்கிறது..எதற்கு அம்மணிகள் பட்டிற்கு பறக்கிறார்கள் என்பது விளங்கிற்று...கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றியது பட்டு ..என்று சொல்லலாம்....

RVS said...

@பத்மநாபன்
ஊரில் நான் பார்த்த வயதான பட்டுவும், மனையாளின் பாட்டி பட்டுவும், சாமுத்ரிகா பட்டு (விளம்பரப் படுத்தியதால்...) என்று இவையெல்லாம் தான் பட்டு என்று எனக்கு தெரியும். இதுவல்லாமல் கையில் மருதாணி போட்டுக் கொள்ளும் பாலகனாக இருந்த போதும், கல்யாணத்திற்கு கையில் இட்டுக் கொள்ளும் போதும் "பட்டாட்டம் பத்திருக்கே..." என்றார்கள். அதை நான் ஒன்றும் சிலுக்காட்டம் பத்தியிருக்கே என்று நினைத்துக் கொள்ளவில்லை. விகல்பம் இல்லா மனசு ஐயா... இன்னமும் எவ்வளவு முறை சொல்வது.. அப்பப்போ வீட்டம்மாவும் என் ப்ளாக் பார்க்கராங்கன்னு...

யாரோ ஜெயமாலினியாம், அனுராதாவாம், டிஸ்கோ சாந்தியாம் (என்னது அந்தப் பேரை அவங்க சொல்லலையா...)..... சரி சரி......

RVS said...

@R.Gopi
ரதி படம் என்றால் முரட்டுக்காளை தான் என்று நெஞ்சில் பதிந்த இவனுக்கு அந்த வீடியோவிலேயே "அன்புக்கு நான் அடிமை" என்று போட்டது கூட பார்க்காமல் நான் எழுதியதை சுட்டிக்காண்பித்து கொட்டியமைக்கு நன்றி... ;-)

அப்பாதுரை said...

ஜெயமாலினி கேள்விப்'பட்டு'ருக்கேன்.. அனுராதா?

bogan said...

ரசிகனய்யா நீர்!

RVS said...

@அப்பாதுரை
//ஜெயமாலினி கேள்விப்'பட்டு'ருக்கேன்.. அனுராதா? //
நம்ம ரம்பாவுக்கு முன்னாடி தொடைஅழகி அனுராதா..
ரெண்டு காலையும் பப்பரக்கான்னு விரிசிசிகிட்டு... டிஸ்கோ லைட் பின்னாடி அணைஞ்சு அணைஞ்சு எரிய நிறைய படங்கள்ல "கவுர்ச்சி(கவுச்சி..)" நடனம் ஆடினவங்க...
இப்ப சன் டி.வியில் முழுக்க போர்த்திக்கிட்டு குடும்பப்பாங்கான அம்மா வேஷத்துல நடிக்கறாங்க.. எனக்கு தெரிஞ்ச அளவுக்கு சொன்னேன்.. இதை விட நிறைய தெரிஞ்ச மேதாவிங்களும் இந்த லோகத்தில உண்டு...
;-) ;-)

RVS said...

@bogan
ரசிக்க வைப்பவர் நீர்!!!! உமது கவிதைகளின் மூலம்... நன்றி.. ;-) ;-)

வல்லிசிம்ஹன் said...

சுசீலா அம்மாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டு, சிலுக்கையும் மத்தவங்களையும் அலசக் கூடாதோ:)
அம்மாவின் குரல் அமுதக் கடல் எந்தத் துளியும் இனிக்கத்தான் செய்யும்.
ரொம்ப நன்றி.

RVS said...

@வல்லிசிம்ஹன்
முதல் வருகைக்கு நன்றிங்க... அப்பாதுரை சார் ஆரம்பிச்சு வச்சது அலசல் அமோகமா போய்கிட்டு இருக்கு .. பின்னூட்டத்துல...;-)

அப்பாதுரை said...

நல்ல கதையா இருக்கே? நம்ம ரம்பாவாமே? என்னை இழுத்துட்டீங்களே? தொடையழகி வேறேயா? பலே பலே.. (வூட்ல சொல்டீங்களா ஆர்வீஎஸ்ஸு?)
>>நம்ம ரம்பாவுக்கு முன்னாடி தொடைஅழகி

RVS said...

@அப்பாதுரை
விகல்பமே இல்லாத வெள்ளை உள்ளம் படைத்த என்னை இழுத்து சந்தியில் உடறீங்களே.. அப்பாஜி.. நோ நோ ஜி.. அன்ன ஆகாரம் கிடைக்க உட மாட்டீங்க போலிருக்கே... ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails