Monday, November 1, 2010

மன்னார்குடி டேஸ் - இறுதி ஆட்டம் - II


இறுதி ஆட்டம் முதல் பார்ட் படிக்க இங்கே சொடுக்கவும். முதல் முறையாக நேராக இந்தப் பக்கத்திற்கு வருவோர் "வேதனைடா சாமி" என்று புலம்புவது காதில் கேட்கிறது. ப்ளீஸ் அதைப் படித்துப் பாருங்களேன். அப்புறமாக கீழே போய் எதிரணி ஆடிய கள்ளபார்ட் பற்றிய பதிவான ரெண்டாவது பார்ட் படிக்கவும். ஏற்கனவே படித்தவர்கள் ப்ளீஸ் கம் இன்.

village cricket

அவர்கள் திட்டம் புரிந்து போயிற்று..

எங்கள் துவக்க பந்துவீச்சு மிரட்டலை சாமர்த்தியமாக நெகோஷியேட் செய்வது வந்திருப்பவரின் பணி.. சிவா சொன்னதுபோல அவரை இனி சுவர் என்றே இனம் காணலாம்.. ஆறு ஓவர்களையும் அதிகபட்சம் அவரே சந்திக்கும்படி செய்வது.. அதன்பின்னர், சற்றே வலு குறைந்த எங்களின் மற்ற வீச்சாளர்களைப் பதம் பார்த்து வெற்றியடைவது.. இதுதான் அவர்களின் திட்டம். ஒரு சாதாரண மேட்சுக்கே இவ்வளவு சிந்திக்கும்போது, நாட்டின் பெருமையை முன்வைத்து ஆடப்படும் போட்டிகளில், 4 ஓவரில் 46 ரன் கொடுக்கும் அளவுக்கு ஒரு வீச்சாளரை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று நான் நினைப்பதுண்டு..

சரி..

வெங்கிட்டின் மற்ற பந்துகளை மிக நேர்த்தியாக ஆடியது சுவர்.. கடைசி பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து முனையைத் தக்கவைத்தும் கொண்டது. நாங்கள் ஒரு சோதனை முயற்சியாக, இன்னொரு துவக்க வீச்சாளரை தாக்குதலில் ஈடுபடுத்தாமல், திருஞானம் என்ற வீச்சாளரை போடச்சொன்னோம். இனி வெங்கிட்டின் 3 ஓவர், ரமேஷின் 4 ஓவர் ஆக மொத்தம் ஏழு ஓவர்கள் ரிசர்வில் வைக்கப்பட்டன. சிங்கிள் ஓட்டம் எடுக்க முடியாதபடி பீல்டிங்கை நெருக்கினோம். "நீ முடிந்த அளவுக்கு டிஃபென்ஸ் வை.. எங்களுக்கென்ன .. உன் அணியின் மற்ற மட்டையாளர்கள் வரும்போது எங்கள் முதல்தர வீச்சாளர்கள் வீசுவார்கள்.." இது நாங்கள் அவர்களுக்கு உணர்த்திய செய்தி.. திருஞானத்தின் 5 பந்துகள் மெய்டனாகப் போயின. 6 வது பந்தில் வியூகத்தைத் தளர்த்தினோம். திருஞானம்கூட வேடிக்கையாக எங்கள் கேப்டனிடம் சொன்னான்.. " டேய் சரோ.. என் வாழ்க்கையின் முதல் மெய்டன் வீச நல்ல சான்ஸ் வந்திருக்கு.. ஏண்டா கெடுக்கறே படுபாவி..?"

ஆறாவது பந்தில், சுவர் அழகாக 'லெக் க்ளான்ஸ்' செய்து ஒரு ஓட்டம் எடுக்க முற்பட்டது.. எதிர்முனை மட்டையாளர் மறுதலிக்கவே திருஞானம் வாயெல்லாம் பல்..! அடுத்த ஓவரில் மீண்டும் எங்களுக்கு சிக்கல்.. ஓரளவு நன்றாக அடிக்கக்கூடிய எதிரணி மட்டையாளருக்கு வீசவேண்டும்.. யாரை ஈடுபடுத்துவது..? கூடிப் பேசினோம்.. "நிச்சயம் 1 ரன் எடுக்க மாட்டாங்கடா.. ரெண்டு நாலு போகாம பாத்துக்கிட்டோம்ன்னா சரி.." தணிகாசலம் முருகன் என்றொரு சுழல் வீச்சாளர் எங்களிடம் இருந்தான். மிகவும் வயதில் சிறியவன். பெரிய மேட்ச்களில் அவனைப் பயன்படுத்துவது இல்லை..திறமை இருந்தாலும் அவனிடம் சற்றே தன்னம்பிக்கை குறைவு.. தன்னால் அணி தோற்கக்கூடாது என்று பயப்படுவான்.. இந்தத் தொடர் முழுதும் அவனைப் பயன்படுத்தவே இல்லை.. "தணிகாவை ட்ரை பண்ணிப் பாப்பம்டா..!" யாரோ சொல்ல, அவன் கையில் பந்தைத் திணித்தோம்.. முதலில் தயங்கிய அவன், " நீயே ஃபீல்டிங் செட் பண்ணிக்கடா.." என்று கேப்டன் சொல்ல ஆர்வத்துடன் "சரிண்ணே..!" என்று சம்மதித்தான்..

அவன் செட் செய்த ஃபீல்டிங்கைப் பார்த்து நாங்களே குழம்பிப் போய்விட்டோம்.. மிட் ஆன், மிட் ஆஃப் என்ற இரு பொசிஷன்களை அம்பயரின் இருபுறமும் சற்றுத்தள்ளி நிற்கவைத்தான். அந்த பீல்டர்களைத் தாண்டி அடித்துவிட்டால் போதும்.. பந்து பவுண்டரிதான்.. முதல் பந்தை மட்டையாளர் தடுத்தார்.. தணிகா உடனே ஒரு காரியம் செய்தான்.. அவர் டிஃபென்ஸ் வைத்ததைப் பார்த்து கைதட்டினான்.. அது அவரைப் பாராட்டியா, இல்லை நக்கல் செய்தா என்று புரியவில்லை.. தணிகா, அடுத்த பந்தை நன்கு ஃப்ளைட் செய்ய, மட்டையாளர் காலைத் தூக்கிப்போட்டு அலறியவாறே வெளியேவந்து ஸ்ட்ரெய்ட் ஹூக் செய்தார்.. நாங்கள் அதிர்ச்சியடைந்து மேலே பார்க்க, விக்கெட் கீப்பரிடமிருந்து ஒரு சப்தம்.. "ஹவ் ஈஸ் இட்..!"

பார்த்தால் பந்து கீப்பர் கையில்.. மூன்று ஸ்டம்பும் தரையில் கிடக்க மட்டையாளர் கிரீசுக்குத் திரும்பக்கூடத் தோன்றாமல் பேந்த பேந்த விழித்துக்கொண்டு அசடு வழிய நிற்கிறார்.. " எப்படி இந்த பந்து மட்டையில் படாமல் தப்பித்தது..?" என்ற குழப்பத்தில்.. ! நாங்கள் எல்லோரும் ஓடிச்சென்று தணிகாவைத் தூக்கிக் கொண்டாடினோம்.. அப்போது எங்களுக்கு ஒன்று புரிந்தது.. இதுவரை சின்னப்பையந்தானே என்று அவனை பந்து போடச் சொல்லிவிட்டு பீல்டிங் செட்டப்பை நாங்கள் பார்த்துக்கொண்டோம்.. அவன் தன் விருப்பத்துக்கு பீல்டிங் அமைக்கமுடியாமலும், எங்கள் வியூகத்துக்கு வீசமுடியாமலும் ரன்களை இதற்கு முன்னால் வாரித்தந்திருக்கிறான் என்று.. அந்த ஓவரில் மேலும் ஒருவரை போல்ட் செய்தான் தணிகா..!


அதன் பின்னர், தணிகா போடுவது எல்லாம் முறைப்படியான பந்து வீச்சல்ல என்று க்ளெய்ம் செய்யப்பட்டு அம்பயர் அவனை வீசக்கூடாது என்று உத்தரவிட்டதும், வரலாறு காணாத அளவில் விக்கெட் விழுந்தபிறகு நோ பால் கொடுக்கப்பட்டதும், கீப்பர் கேட்ச் பிடித்து அவுட் கேட்டால் வைடு கொடுத்ததும், மட்டையாளர்கள் அனைத்து ஸ்டம்புகளையும் கவர் செய்து நின்று காலில் வாங்கினாலும் எங்கள் முறையீடுகள் செவிசாய்க்கப்படாது போனதும் எங்கள் அணியைத் தோல்வியுறச் செய்துவிட்டது..

பரிசளிக்க வந்த லோக்கல் வி ஐ பி, எங்களுக்கு இரண்டாம் பரிசை வழங்கும்போது மைக்கில் இப்படிச் சொன்னார்..

"தோல்வியும் வெற்றியும் விளையாட்டில் சாதாரணம்.. இன்று தோல்வியுற்ற மன்னார்குடி வீரர்கள் உற்சாகமிழக்கக்கூடாது.. வெற்றிபெற்ற அணியைப் போல திறமையை வளர்த்துக்கொண்டு, தாங்களும் அவ்வாறு உழைத்து வெற்றிபெற உறுதியேற்க வேண்டும்..!"

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம் அப்படின்னு அந்த தலைவர் அண்ணன் சொன்னது தான் அந்தப் போட்டிக்கே மணிமகுடம் வைத்தார்ப் போன்ற நிகழ்வு. மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார். எல்லோர் உள்ளங்களையும் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கிவிட்டார். அண்ணன் எழுதியது போல கிரிக்கெட் கதைகள் ஏராளம் இருக்கிறது. மென்மேலும் கிரிக்கெட் எழுதி எல்லோரையும் மட்டையால் அடித்து இம்சிக்காமல் அடுத்த மன்னார்குடி எபிசோட் ஒரு இளமை துள்ளலாக வெளிவரும் என்று மகிழ்ச்சியோடு(!) தெரிவித்துக் கொள்கிறேன். அதுவரை மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நன்றி.

படமளித்த தர்மப்ரபு: http://www.sturgeonpublications.co.uk

-

31 comments:

Madhavan Srinivasagopalan said...

என்ன அண்ணே, மொதல்லேயே சோகம்தானா.. அதான்.. தோத்த மெச்சப் பத்தியா.. வஞ்சகமா தோக்கடிக்கப் பட்டாலும், நீங்க ஜெயிச்ச எவ்வளளோ மேட்ச்சைப் பத்தி, உங்களுக்கே உரிய நகைச்சுவையோட சொல்லி ஆரம்பிச்சிருக்கலாமே..
--

RVS said...

@Madhavan
இளையராஜா மியூசிக் போட்டா மாதிரி.... ;-) ;-)

Anonymous said...

முடிவு போன எபிசோட்லையே தெரிஞ்சிருந்தாலும், ஒரு எதிர்பார்ப்பு இருந்துக்கிட்டே இருந்துச்சு..
அடுத்து காதல் எபிசோடா? ம் ம்.. :)

Unknown said...

மன்னார்குடி டேஸ் அருமையா எழுதிட்டு வர்றீங்க. நான் சொன்ன கனகாம்பாள் கோவில் தெருங்கறது, ஆறாம் தெருன்னும் சொல்வாங்க.மூணாம் தெரு தெரியும்தான உங்களுக்கு?பின்லே ஸ்கூல் கூட இருக்கு அங்க.அது திருவாரூர் ரோடு.அதுக்கு அடுத்து நாலாம் தெரு.அதுக்கு அடுத்த தெரு கனகாம்பாள் கோவில் தெரு. அனேகமா இதுதான் இந்தப் பக்கம் கடைசித் தெருவாக இருக்கும்னு நினைக்கிறேன். இந்தத் தெரிவுக்கு அடுத்து வயல்களும், சுடுகாடும் தான் இருக்கு.அதுக்கடுத்து சேராங்குளம்ன்னு சொல்ற கிராமம் இருக்கு.
உங்களுக்கு இதெல்லாம் தெரியுமான்னு தெரியலை.

RVS said...

@ஜிஜி
சேரங்குளம். நம்ம நண்பர்கள் அதிகம் இருக்காங்க. சைக்கிள்ல அந்த சேரங்குளம் ரோடுக்குக்கு கீழ சுடுகாடு ஓரமாவே போய் அந்த சைக்கிள் பாலம் மேல ஏறி சேரங்குளம் போவோம். தெரு பேர்தான் தெரியாம போச்சு. ஆனா நல்லா ஞாபகம் இருக்கு. ;-) ;-)

ஸ்ரீராம். said...

நியாயப் படி உண்மையில் ஜெயித்தது மன்னார்குடி டீம்தான் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அருமை.

RVS said...

@ஸ்ரீராம்.
நன்றி ஸ்ரீராம் ;-) ;-)

RVS said...

ஆமாம் பாலாஜி... ;-)

பொன் மாலை பொழுது said...

அம்பி.........நா கேடுண்ட கேள்விக்கு இன்னும் ஜவாப் தரலை. நேக்கு இந்த கிரிகெட்டு சுத்த த்ராவயச்சே !!
இதை கட்டிண்டு அழுதது போரும். சரி,
ஆத்ல தீவாளி பலகாரம் ஸ்பெஷலா என்ன பண்ணிடுருக்கா ?? எங்காத்துல கோதுமை மா லட்டுடா அம்பி. பண்றதாவது ?
கஸ்தூரி ஸ்வீட்ல நா வாங்கிப்போம்.

RVS said...

@கக்கு - மாணிக்கம்
இனிமேத்தான் பட்ஷனம் பண்ண ஆரம்பிப்பா...
ஓ.கே ;-) நீங்க கஸ்தூரியை என்ஜாய் பண்ணி சாப்பிடுங்க... ;-) ;-)

பொன் மாலை பொழுது said...

// நீங்க கஸ்தூரியை என்ஜாய் பண்ணி சாப்பிடுங்க... ;-) ;-) //
--------------- R V A Said.

நோக்கு ரொம்பத்தான் கொழுப்பு வெச்சிண்டிருக்கு.
படவா :)))

அவா கடைல எல்லாம் பிரமாதமா இருக்கும். வட நாட்டு சேட்டு காரா இல்லியோ அதான்.

சரி சரி. எங்காத்துல நன்னா ஒரு பாட்டு ஓட்டிண்டு இருக்கே ! நீ தான் நன்னா ரசிபியோன்னோ ?
வந்துட்டு போறது !

இளங்கோ said...

//ஒரு இளமை துள்ளலாக வெளிவரும்//
ஒருவேளை அப்படி இருக்குமோ ...? (திங் பண்ணிட்டு இருக்கேன்) :)

RVS said...

@இளங்கோ
எப்படி இருக்குமோ? ;-)

பொன் மாலை பொழுது said...

//நம்ம சுஜாதா குரல் மாதிரி இருக்கு. அன்னிலேர்ந்து இன்னிக்கி வரை அதே குரல் வளம். வயலின் பார்த்தா நம்ம ராஜாதான் மியூசிக். அது நிச்சயம். ரைட்டா.. ;-) //
---------------------R V S Said

அம்பின்னா அம்பிதான், நேக்குதான் தெரியுமே. அது சுஜாதா தான், நம்ம மேஸ்ட்ரோ ராஜாதான் மியுசிக். படம் என்ன தெரியுமோ? கவிக்குயில். சின்னக்கண்ணன் அழைக்கிறான் படம்தான்.

RVS said...

@கக்கு - மாணிக்கம்
தேவலாம் எனக்கு நானே பின்னால தட்டிக்கறேன். ;-)

இளங்கோ said...

//எப்படி இருக்குமோ? ;-) //
அது அப்படித்தானுங்க.

//எனக்கு நானே பின்னால தட்டிக்கறேன்//
ஐயோ பாவம், உங்கள நீங்களே அடிச்சுக்காதிங்க.. வலிக்கும்.. அவ்வவ்.

RVS said...

@இளங்கோ
நன்றி. நிஜமாகவே சிரிச்சேன். ;-) ;-

எல் கே said...

sila samayangalil aaustrlia panra maathiri pannittanga

பொன் மாலை பொழுது said...

// @கக்கு - மாணிக்கம்
தேவலாம் எனக்கு நானே பின்னால தட்டிக்கறேன். ;-//
................R V S - Said

அட அசடே ! உம் முதுகுல நாங்க ,பெரியாவாண்ணா தட்டனும். நீயே தட்டிகிண்ட பாக்கறவா சிரிப்பாலே !

RVS said...

@ எல்.கே
ஆமாம். இதுபோல பல தடவை வீர விளையாட்டாய் முடிந்திருக்கிறது... ;-)

RVS said...

@கக்கு...
எல்லா பின்னூட்டமே ஏன் ஒரே மாதிரியா ஒன்னு மதராஸ் பாஷை அல்லது பிராமண பாஷையிலேயே போடுகிறீர்கள். அலுக்குது... ;-(

துபாய் பாஷையில் ஒன்னு போடுங்களேன்.. ;-)

சிவராம்குமார் said...

எல்லாரையும் தங்கள் இளம் பிராயத்தை திரும்பி பார்க்க வைத்து விட்டீர்கள்! அருமை!!!

RVS said...

@சிவா
நன்றி ;-) ;-)
இன்னும் கொஞ்சம் கூத்துக்கள் தொடரும்.. ;-)

பொன் மாலை பொழுது said...

அது சும்மானாச்சும், வெருபேத்ததான்.:)))
ஏத்தியாச்சு O.K. நீங்க மட்டும் ஒரே கிரிகெட் பத்தியே எழுதி கடுப்பேத்தலாமா செல்லம்?
அந்த "மால்குடி டேஸ்" கூட கிரிகெட் ஒரு சில அத்யாயங்கள் தான் வரும் . நினைவிருக்கா M .C.C. ?
மால்குடி கிரிகெட் கிளப்? நீங்க ஆரம்பிச்சி கடைசிவரைக்கும் ஒரே கிரிகெட்டு தான். சைக்கிள்ல நா முன்னாடி
பாருல தான் உக்காந்திருக்கேன். ஐயோ சாமி , எனக்கு வலிக்கிறது அம்பி. நா வேணா இறங்கி நடந்து வரவா ??
--

sriram said...

அருமை RVS, நண்பருக்கு வாழ்த்துக்கள்..

நாங்களும் இப்படி ஒரு ஃபைனல்ஸ்ல தோத்திருக்கோம்,(ட்ரஸ்ட் புரம், கோடம்பாக்கம் சென்னை மைதானத்தில்) ஒரே வித்தியாசம் ஆர்கனைசர் டீம் அம்பயர் வச்சு ஏமாத்தல, விதிகளை மீறி ஃபைனல்ஸுக்கு மட்டும் First Division players கொண்டு வந்து தோக்கடிச்சாங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

R. Gopi said...

ஏதேது, சுயபுராணம் சூப்பரா இருக்கே.

/ஸ்ட்ரைட் ஹூக்/

ஸ்ட்ரைட் ட்ரைவோ?!

RVS said...

@கக்கு - மாணிக்கம்
//நா வேணா இறங்கி நடந்து வரவா ??//
ச்சே.ச்சே.. இறங்கி நடக்கெல்லாம் வேண்டாம். விஷமம் பண்ணாம கூட வந்தாப் போரும். ;-) ;-

RVS said...

@sriram
அடியாள் வச்சு மிரட்டியே ஜெயிச்ச டீமெல்லாம் இருக்கு. Cricket Crazy People. ;-) ;-)

RVS said...

@Gopi Ramamoorthy
//ஸ்ட்ரைட் ட்ரைவோ?!//

ஆமாம். இது எங்கூரு அண்ணன் எழுதியது. டச் பண்ணாமல் வெளியிட்டேன். நன்றி ;-) ;-)

பத்மநாபன் said...

சிறுவயது கிரிக்கெட் என்றாலே சீண்டலும் சண்டையும் மாக முடிவதும்...ஜன்மவிரோதம் பாராட்டிவிட்டு ,அடுத்த சனி,ஞாயிறு கூடுவதும் தானே வாடிக்கை..உங்கூரு அண்ணன் நன்றாக கோர்த்து எழுதியிருக்கார்..அப்புறம் நீங்கள் மாவட்ட அளவில் ஆடிய விவரங்களையும் அள்ளி விடுங்கள்..

தமிழ் ஜோக்ஸ் ARR said...

ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் தரையோட அடிக்கறது.. ஸ்ட்ரெய்ட் ஹூக் ( பெரும்பாலும் ஃப்ளைய்ட்டட் டெலிவரியை) வீச்சாளர் தலைக்குமேல் தூக்கி அடிக்கறது என்று நம்புகிறேன்..

கிரிக்கெட் ஆடி ரொம்பநாள் ஆனதுல எல்லாம் மறந்துடுச்சு..

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails