Tuesday, January 25, 2011

கண்ணலி... மூக்கலி... காதலி...

villege street

ரெண்டு நாளா தெருவில் பசங்களிடம் தொண்ணூறு சதம் அடிபட்ட வார்த்தை சுஜாதான். முந்தாநாளிலிருந்து பேண்ட்டும் வேஷ்டியுமாய் நாலு விடலைகள் கூடி நின்று அரட்டை அடிக்கும் வேளைகளில் சரியாக இரண்டு நிமிட கேப்பில் அகஸ்மாத்தாகவாவது சுவன்னாவும் ஜாவன்னாவும் தவறாமல் வந்து விழுந்துவிடும். இப்படி பளபளாவென்று பட்டை தீட்டிய கோதுமை நிறத்தில் ஒரு தேஜஸ்வினியான பாவாடை சட்டையை அந்த நகரம் இதற்கு முன்பு வாழ்நாளில் பார்த்தது கிடையாது. அவள் முக்குக்கடைக்கு மீரா சீயக்காய் வாங்க சென்றுவருகையில் தெருவில் மொய்த்த ஈக்கள் எல்லாம் இவர்கள் வாயில் சென்று ரெஸ்ட் எடுக்கும். இசட் பிரிவு பாதுகாப்பு அளித்தது போல இருபத்து நான்கு மணிநேரமும் ஏதாவது இரண்டு கண்கள் அவர்கள் வீட்டை கண்கொத்திப் பாம்பாக எல்லை வீரனார் போல காவல் காத்தது. எத்தனை மணிக்கு எழுந்திருந்து வாசல் தெளித்து கோலம் போடுகிறார்கள், யார் பால் வாங்க வாசலுக்கு வருகிறார்கள், படிக்கும் நியூஸ் பேப்பர் ஹிந்துவா எக்ஸ்ப்ரஸ்ஸா, காலையில் டிகாக்ஷன் போட்டு முதல்தரம் காபி தனக்கும் மாமிக்கும் சேர்த்து கலப்பது வாசு மாமாதான் என்பது வரை சகலத்தையும் அலசி ஆராய்ந்து துப்பறியும் சாம்புவாக ஃபிங்கர் டிப்பில் தகவல்களை சேகரித்து டேடாபேஸ் தயாரித்து வைத்திருந்தார்கள். அரைமணிக்கொருதரம் ஏதாவது ஒரு சாக்கு வைத்துக்கொண்டு டீக்காக டிரஸ் பண்ணிய ஒவ்வொருத்தனாய் அந்தப் புது டிக்கெட்டின் தரிசனம் பெற நடை போட்டு நடை போட்டு ஏழாம் நம்பர் வீட்டு வாசலே ஓரடி தேய்ந்து மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் அளவிற்கு அமுங்கி பள்ளம் விழுந்துவிட்டது.

ஹிந்தியில் "சல்தா ஹை.. நஹி ஹை.." என்று பேசும் ஏதோ ஒரு வடக்கத்தி மாநிலத்தில் ஏதோ ஒரு மத்திய சர்க்கார் பணியிலிருந்து ஏதோ விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு தன் பூர்வீகத்திற்கு வந்த வாசுதேவனின் சீமந்தபுத்ரி தான் சுஜா. குண்டுன்னும் சொல்லமுடியாத அளவான தொப்பை, எலும்பு தெரியும் ஒல்லியின்னும் இல்லாத சரீரம் வாசுதேவனுக்கு. குண்டுன்னும் சொல்லலாம்ங்கற மாதிரி அவரோட ரெண்டாம் பூணூலுக்கு காரணகர்த்தாவாகிய பரிமளம் மாமி. சரியாக அவருடைய இருபத்தைந்தாவது வயதில் பிரம்மச்சாரியிலிருந்து கிருஹஸ்தர் ப்ரமோஷன் கொடுத்தவள். இருவத்தாறாவது வயதில் மூன்றாம் பூணூல் படும் யோக்யிதையை வழங்கியவள். தேங்காய் நார் வைத்து அரைமணி சுரண்டினாலும் அழியாத மாதிரி சிகப்பு கலரில் நெற்றியில் ஸ்ரீசூர்ணம் இட்டிருப்பார். அது முன்னந்தலையின் காலி பிளாட் வரைக்கும் ஏறி ஓடியிருக்கும். அதிகாலை ஐந்து மணிக்கு குளித்தவுடன் மடியாக அதே குச்சியில் அதே கலரில் அதே மாதிரி ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு அதன் கீழ் வெள்ளையாய் ஒரு 'V' போட்டுக்கொள்வாள் பரிமளம் மாமி.

இந்த ஊருக்கு வந்திறங்கியவுடன் மாமியை ரொம்ப பிடித்துப்போன பக்கத்தாத்து ராஜி மாமி அந்த 'வி'யின் அழகில் சொக்கி விஜாரித்த போது "அதுவா..அதுல அவா பேரும் வருதோன்னோ..அதனாலதான் அதுக்கு அத்தனை ஷ்ரேயஸ்.." என்று சொல்லி இந்த வயதிலும் தலை குனிந்து வெட்கச் சிரிப்போடு பட்டுக் கன்னம் சிவந்தாளாம். வாசு மாமாவிற்கு அரைக்கை சட்டை மறைக்காத பாகங்களிலும் காதோரங்களிலும் காடாய் வளர்ந்த புசுபுசு ரோமங்கள். வெள்ளை சட்டை போட்ட நாட்களில் தூரத்தில் நடந்து வரும் போது கருப்பு-வெள்ளையாக தெரிவார். தாவாங்கட்டையில் நம் முகம்பார்க்கும் அளவிற்கு வழவழவென்று கண்ணாடி போல் மழிக்கப்பட்ட முகம். சிகப்பு பச்சையில் ஒரு ஜான் அளவிற்கு மயில்கண் பார்டர் போட்ட எட்டுமுழம் வேஷ்டி. ஆறடி நிலைப்படியில் அரையடி தலையை குனிந்து உள்ளே செல்லும் உயரம் இருந்ததால் கனுக்காலுக்கு மேலேயே வேஷ்டி நின்றுவிடும். "சுஜா...ஆ...ஆ." என்று காதைக் கிழிக்கும் டெசிபலில் வாசலில் இருந்து ரேழியை பார்த்து கூப்பிடும் போது குரலில் அஞ்சு நயா பைசா விலை குறைக்காத கறிகாய்காரனின் கறார்த்தனம் இருந்ததாக நேற்று வாய் பிளந்து வேடிக்கை பார்த்த ஸ்ரீதர் சொன்னான்.

"யா......ர்ர்ர்ர்ர்டா அது?" என்று கண்களில் பல்பு எரிய திறந்த வாய் மூடாமல் ஜொள்ளாறு வழிய கேட்டான் சுதர்சன். அப்படி ஒரு சுண்டி இழுக்கும் அழகை அவன் வயதுக்கு வந்தவுடன் இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் சை அடிக்கிறான். அவனுள் அனைத்து ஹார்மோன்களும் காலை சுழற்றி பாலே நடனம் ஆடின. தமிழ் மலையாள சினிமாக்களில் அவன் பார்த்த அத்தனை சொப்பன சுந்தரிகளும் வரிசையாய் வந்து குத்து டான்ஸ் ஆடிவிட்டு போனார்கள். அவன் சிந்தையை ஸ்வீகரித்த அவளை பார்த்து சித்தம் இழந்தான். இந்தப் பாராவின் முதல் கேள்வியை ரிப்பீட்டினான்.

கார்த்தால அஞ்சரை மணி ஸ்ரீனிவாசா ரோடுவேஸில் தான் ஸ்ரீரங்கத்தில் இருந்து அத்தை பெண்ணுக்கு விவாஹம் முடிந்ததும் கட்டிசாக் கூடை கட்டி சென்னை அனுப்பிவிட்ட கையோடு வந்திறங்கினான். வீட்டு வாசலில் ஐந்து நிமிடம் நிறுத்தி அத்தனை மூட்டை முடிச்சுகளுடன் மொத்த குடும்பமும் இறங்கினார்கள். அவன் கேட்ட ஒன்ஸ் மோர் கேள்விக்கு "ஸு...ஸு...ஸு.... சுஜாடா..." என்று அவனைப் போலவே ஒரு பரவச நிலையில் திறந்த வாய் முடாமல் வெயிட் லூஸான குக்கர் போல "ஸு..ஸு.." ஊதி கூடவே எக்ஸ்ட்ரா ரெண்டு எம்.எம். புன்னகையோடு சொன்னவன் நானா என்கிற நாராயணன். முந்தாநாள் வாசற்படியில் உட்கார்ந்து தெருவில் வருவோர் போவோரை பிலாக்கு பார்த்துக்கொண்டு வெட்டியாக உட்கார்ந்தபோது "தம்பி.. கொஞ்சம் இங்க வாங்களேன்.. ப்ளீஸ்..." என்று அழைத்த வாசுதேவனின் குரலுக்கு வேட்டி அவிழ ஓடோடி சென்று வேனில் இருந்து காத்ரெஜ் பீரோ இறக்குவதற்கு ஒரு கை கொடுத்து சுமந்து களப்பணியாற்றியவன்.

முந்தாநாள் வரை நாற வாய் நாராயணனாக இருந்தவன் "சுஜா" சொன்னவுடன் நல்ல வாய் நானா ஆனான். "சுஜா அன்னநடை பயின்றாள்", "திருவாரூர் தேர் போல நடக்கிறாள்" போன்ற கிளிஷேக்களை உபயோகிக்காமல் "அடாடா..டா... தரையில கால் பாவாம மோகினியாட்டம் நடந்து போறாளே.. தரைக்கு வலிக்குமோ காலுக்கு வலிக்குமொன்னு வெண்ணை மாதிரி வழுக்கிண்டு போறாளே.. " என்று "உச்"சை மூன்று தடவை ஒட்டு மாங்காய் சப்பிய வாயாக கொட்டினான். தலைக்கு ஸ்நானம் பண்ணி ஈரம் காய்வதற்காக பின்னாமல் சேர நன்னாட்டிளம் பெண் போல கேசம் விசிறியாட விரித்து விட்டுக் கொண்டு பின்சட்டையின் அடிபாக ஈரத்தோடு சென்றாள். நூறு வாட்ஸ் கண்களுக்கு ஓரங்களில் மையெழுதி அதன் பிரகாசத்தை இன்னும் ரெண்டு வாட் கூட்டினாள். நடு வகிடு எடுத்த பின்பு வலது இடது புறங்களில் அடங்காமல் காற்றில் ஆடித் திரிந்த ஒன்றிரண்டு ரோமங்கள் அந்தப் பிரதேசத்தை ரொமான்டிக்காக காண்பித்தது. வகிடிர்க்கும் அதன் கீழ் இருக்கும் சிங்காரி அணிந்த சிங்கார் பொட்டிற்கும் சரியாக தொண்ணூறு பாகையில் இருந்தது அவளது முகத்தின் வடிவத்தில் ஒரு எம்.எம். கூட தப்பு செய்யாத பிரம்மனின் தொழில் சுத்தத்தை காண்பித்தது. ஜிமிக்கி தன்னை மாட்டிய இடம் உயர்ந்த இடம் என்பதால் அவள் நடக்க நடக்க ஆனந்த நடனமாடியது. ஒன்றிரண்டு பருப் பவிழங்கள் கன்னத்தில் எட்டிப்பார்த்தது செக்ஸியாக இருந்தது. மற்ற இடங்கள் அவளின் அந்த வயசை எடுத்துக் காட்டின. பாவாடைக்கு கீழே நாலுவிரக்கடை அளவு தெரிந்த செங் காலில் தெருப்புழுதி ஏற கூச்சப்பட்டிருந்தது. செருப்பு கர்வமுடன் அந்தக் காலோடு ஒட்டி உறவாடிக்கொண்டது. "எந்த வீடுடா.." என்று கண்ணின் மையப் பார்வையை விளக்காமல் கேட்ட கேள்விக்கும் நானா "ஏ..ஏ..ஏ..ழு..." என்று ஆச்சர்யமூட்டும் திடீர் திக்குவாயால் அவதிப்பட்டு பதில் சொல்ல சிரமப்பட்டான். இந்த ஆச்சர்ய பார்வைகளும், திடீர் திக்குவாய்களும், சலவை செய்யப் பட்ட சட்டைகளும், பாடிய வாரிய முடிகளும், அம்மா சொல் கேட்கும் பிள்ளைகளாகவும் அந்த தெரு பசங்கள் ஒரு மகோன்னத நிலையை அடைந்தார்கள். ஓர் ஆண்டு சுஜா காலடியிலும் கண்னடியிலும் உருண்டு ஓடியது.

சைக்கிளை பூப்போல எடுத்து நோகாமல் அந்தப் பெண் ஓட்டும்போது மனசை ஹாண்டில் பண்ண முடியாமல் பாரில் போய் விழுந்துவிடுவார்கள். போன வாரம் சனிக்கிழமை வேதியல் சிறப்பு வகுப்பிற்கு போனவளை நூல்விடுவதர்க்காக "எடுடா சைக்கிளை" என்று பாபுவை கிளப்பி, பின்னால் காரியரில் ரெண்டு காலையும் பரப்பி போட்டுக்கொண்டு கை காலை ஆட்டி ஹீரோ வேலை செய்த சுதர்சனின் கோணங்கித் தனம் ஜம்போ சர்க்கஸ் கோமாளி கூட தான் வாழ்நாளில் செய்திருக்கமாட்டான். அவனது ஜாதகப் பயனால் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் ஒரு நாள் எதேச்சையாக அவளது சைக்கிள் செயின் கழல எந்நேரமும் குட்டிப் போட்ட பூனை போல ஆறடியில் அவளை சுற்றிவந்தவன் பாய்ந்து உதவிக்கரம் நீட்டினான். மாட்டி விட்டதற்கு "தேங்க்ஸ்" என்று அவள் சொன்ன போது கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகி சட்டென்று "கிர்ர்..கிர்ர்."ரென்று தலையை சுற்றிக் கொண்டு வந்தது அவனுக்கு. கிரீஸ் அப்பிய கையை வியப்பில் நெற்றியில் வைத்து ஒரு கருப்புப் பட்டை போட்டுக்கொண்டான். உலகத்தின் அதிசிறந்த அசட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்து "நோ மென்ஷன்" சொன்னான்.

அன்று இரவு யார் பேசினாலும் அது அவள் குரலில் தேங்க்ஸாக அவனுக்குள் இறங்கியது. அவள் பார்த்த கூர்ப் பார்வையில் மூளை மழுங்கியது. ஒன்றிரண்டு தடவை அவனின் கிராமத்து தமிழ்ப் பாட்டிக்கு கூட சாதம் பரிமாறும் போது இங்கிலீஷில் "நோ மென்ஷன்" னென்று பிதற்றினான். பாட்டி பொக்கை காட்டி கன்னத்தில் யானைப் பள்ளம் விழ சிரித்தது. சாப்பிடும் போது தட்டை வழித்துச் சாப்பிட்டது போக கடைசியாக தயிர் ஈரம் தோய்ந்த இடத்தில் ஆட்காட்டி விரலால் "சுஜா சுதர்சன்" என்று கிறுக்கி பார்த்தான். ஊர் உறங்கிய பிறகு நடுஜாமத்தில் கூட வாசல் படிக்கட்டில் வந்து உட்கார்ந்துகொண்டு சாலை விளக்கில் அவள் வீட்டையே ஒரு புண்ணிய க்ஷேத்ரமாக எண்ணிக்கொண்டு பக்தியாக பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளாத குறையாக பரவசமடைந்தான். எப்போதும் புன்னகையில் மின்சாரத்தை பாய்ச்சி அந்த சுற்றுவட்டாரத்தையே பிரகாசமா வைத்திருக்கும் அவளை மனதால் வரித்துவிட்டான் சுதர்சன். வீட்டிற்கு விளக்கேற்ற அவளை விட சிறந்த மேட்ச் கிடையாது என்பதை திண்ணமாக முடிவெடுத்தான். காற்றில் காதல் அலைகளில் அவளோடு பறந்தான். அவளுக்கு தன் பிரியத்தை, நேசத்தை, காதலை, அன்பை, லவ்வை, பிரேமையை இப்படி பல வார்த்தைகளில் எப்படி சொல்வது என்று சொல்லகராதி தேடி பிடிபடாத குணா கமலஹாசனாக அவன் தவித்த நேரத்தில் தான் அந்த சம்பவம் நடந்தது.

ராமநவமி திருவிழா கோதண்டராமர் திருக்கோயிலில் தக்கார், தர்மகர்த்தா ஆகியோரின் தாராள தயாள குணத்தால் விமரிசையாக இன மத வேறுபாடின்றி ஆணினமும் பெண்ணினமும் சேர்ந்து கலகலப்பாக கைகோர்த்து கொண்டாடிக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நான் என்றான் என்று ஹீரோ ஹோண்டாவில் உள்ளே புகுந்தான் சுரேஷ். மைனர்வாளின் மேஜர் வால். வேதியல் வகுப்பிற்கு பக்கத்துவீட்டு பங்களா நாயகன். ஷோக்குப் பேர்வழி. ராமநவமி சிறப்பு உபன்யாசமாக இராம காவியத்தை சொல்லும் ராமபத்ர தீட்சிதர் "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.." என்று காதல் சீன் பாடிச் சொல்லும் போது இருவரும் தங்கள் பார்வையை பரிமாறிக்கொண்டனர். க்ஷண நேரத்தில் திக்குமுக்காடிப் போனான் சுதர்சன். காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனது போல ஆச்சே என்று நிதானத்தை இழந்தான். பாதிக் கதையில் விறுவிறுவென்று எழுந்து வேஷ்டியை உதறி வேகமாகப் போனான். ஹீரோ ஹோண்டாவை உதைத்து துவம்சம் செய்து கட்டிப் பிரண்டு உருண்டு வேஷ்டி உருவப்பட்டு உள்ளே வி.ஐ.பி தெரிய எல்லோர் கண் முன்னும் வில்லன் ஆனான்.

இரண்டு நாட்கள் வெட்கத்தில் வெளியே தலை காட்டாமல் வீட்டினுள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவிட்டு ஒரு மரணயோகத்தில் வாசலுக்கு வந்து சுஜா வீட்டின் ஓரமாக போய்க்கொண்டிருந்தவனை வாசல் தாழ்வாரத்தில் பக்கத்தில் இருந்த ஒரு ஐம்பது வயது வெள்ளை வேஷ்டி சட்டையிடம் "Indecent Guy" என்று கௌரவ பட்டம் வழங்கிக் கொண்டிருந்தார் வாசு மாமா.

அர்த்தமே புரியாமல் எல்லாவற்றிக்கும் "எலி" சேர்க்க சொன்ன ராஜி மாமி வீட்டு விஷம ஜில்லுவிர்க்கு வாண்டு சிண்ட்டூ... கண்ணில் கைவைத்தவுடன் "கண்ணலி..." மூக்கில் கைவைத்தவுடன் "மூக்கலி..." காதில் கைவைத்தவுடன் "காதலி" என்று சொன்னவுடன் "அச்சச்சோ.... காதலியா..." என்று கையை உதறி சிரித்துக்கொண்டிருந்தது. தெரு முனையில் ஹீரோ ஹோண்டா சைக்கிளுக்கு டாட்டா காட்டிக் கொண்டிருந்தது.

பட உதவி: http://naranammalpuramwelfare.blogspot.com/

-

53 comments:

மதுரை சரவணன் said...

சூப்பர். வாழ்த்துக்கள்

பொன் மாலை பொழுது said...

அய்யா சாமீ ..உங்க குருநாதர் ....அவர்தான் ....சுஜாதா தேற்றார் போங்க. அடேயப்பா .......நீர் ...........சாரி ....அந்த தெரு இளவட்டங்கள் விட்ட சொல்லால் மன்னார்குடி ராஜ கோபால் சுவாமி கோயில் குளமே ரொம்பி வழிந்த மாதிரிதான்.

// சாப்பிடும் போது தட்டை வழித்துச் சாப்பிட்டது போக கடைசியாக தயிர் ஈரம் தோய்ந்த இடத்தில் ஆட்காட்டி விரலால் "சுஜா சுதர்சன்" என்று கிறுக்கி பார்த்தான்.//

என்ன அய்யிரே ...சொந்த அனுபவம்தானே??

வரிசையாய் ஒரே சங்கீத கச்சேரியை போட்டு கழத்தை அறுத்த பாவம் எல்லாம் போயிந்தே! இந்த மாதிரி எழுதுடா கொழந்தே !! :))

Hats off R V S. Simply superb!! Keep it up Yaaar.

Porkodi (பொற்கொடி) said...

LOL! 1li 2li madhri than nu therinjalum, i liked it! ;-)

raji said...

டூ காய்!

நான் ஒன்னும் இதை இப்ப படிக்க மாட்டேன்

*****************************

காமெடிக்குதான் இப்ப நீங்க தயாரில்ல
அட்லீஸ்ட் கொஞ்சம் என் வலைப்பக்கமா வந்து கண்ணீர் அஞ்சலியோ
மௌன அஞ்சலியோ செலுத்தவாவது முடியுமா பாருங்க உங்க பின்னூட்டம் மூலமா

raji said...

ரசித்தது:
//புது டிக்கெட்டின் தரிசனம் பெற நடை போட்டு நடை போட்டு ஏழாம் நம்பர் வீட்டு வாசலே ஓரடி தேய்ந்து மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் அளவிற்கு அமுங்கி பள்ளம் விழுந்துவிட்டது//


என்ன செய்ய பழக்க தோஷத்துல படிச்சு தொலைச்சுட்டேன்

பக்கத்தாத்து மாமிக்கு பேர் வைக்க வேற பேர் கிடைக்கலையாக்கும் உங்களுக்கு
நக்கல்?

சிவகுமாரன் said...

அப்பாடா. RVS formக்கு வந்தாச்சு.
கதையில காதல் ரசம் சொட்டுது.
சூப்பர்

க ரா said...

kalakal writing boss... pinringa...

அப்பாதுரை said...

சுத்தமா புரியலைங்க.. 'எலி'?

எல் கே said...

அற்புதம்.. ரசிகமணி அற்புதமாய் விமர்சனம் பண்ணுவார்.. ஒரு சின்ன திருத்தம்


//இருவத்தாறாவது வயதில் மூன்றாம் பூணூல் படும் யோக்யிதையை வழங்கியவள்.//

மூன்றாம் பூணூல், குழந்தைக்காக போடுவது அல்ல :)

Unknown said...

சுவன்னா, ஜாவன்னா இவங்க யாரு? தமன்னாவுக்கு சகோதரிகளா?

//பர்ஸ்ட் டைம் சை அடிக்கிறான்.// வாசகர் கவனத்துக்கு! ஹிஹி!

ஹீரோ (ஹோண்டா)வை உதைத்தால் வில்லன் தானே!

கதைப்போக்குல வர்ணனை நல்லா எழுதியிருக்கீங்க ஒரு பாராவுக்குள்ள அவ்வளவு ஜோடனை! //ஒரு ஜான் அளவிற்கு மயில்கண் பார்டர் போட்ட எட்டுமுழம் வேஷ்டி. ஆறடி நிலைப்படியில் அரையடி தலையை குனிந்து உள்ளே செல்லும் உயரம் இருந்ததால் கனுக்காலுக்கு மேலேயே வேஷ்டி நின்றுவிடும். "சுஜா...ஆ...ஆ." என்று காதைக் கிழிக்கும் டெசிபலில் வாசலில் இருந்து ரேழியை பார்த்து கூப்பிடும் போது குரலில் அஞ்சு நயா பைசா விலை குறைக்காத கறிகாய்காரனின் கறார்த்தனம் இருந்ததாக நேற்று வாய் பிளந்து வேடிக்கை பார்த்த ஸ்ரீதர் சொன்னான். //

Unknown said...

--

Anonymous said...

விடலைகளின் வீரதீர பராக்கிரமங்களை அசத்தலாய் எழுதியிருக்கீங்க அண்ணே! உங்களோட ட்ரேட் மார்க் காமெடிகள் அட்டகாசம்! :) Well done!

சாந்தி மாரியப்பன் said...

கதை நல்லாருக்கு..

ரிஷபன் said...

கதை படு சுவாரசியம்

இளங்கோ said...

பச்.. ஒரு தலைக் காதலாக மாறிடுச்சே. :(

தக்குடு said...

//சேர நன்னாட்டிளம் பெண் போல கேசம் விசிறியாட விரித்து விட்டுக் கொண்டு பின்சட்டையின் அடிபாக ஈரத்தோடு சென்றாள். நூறு வாட்ஸ் கண்களுக்கு ஓரங்களில் மையெழுதி அதன் பிரகாசத்தை இன்னும் ரெண்டு வாட் கூட்டினாள். நடு வகிடு எடுத்த பின்பு வலது இடது புறங்களில் அடங்காமல் காற்றில் ஆடித் திரிந்த ஒன்றிரண்டு ரோமங்கள் அந்தப் பிரதேசத்தை ரொமான்டிக்காக காண்பித்தது. வகிடிர்க்கும் அதன் கீழ் இருக்கும் சிங்காரி அணிந்த சிங்கார் பொட்டிற்கும் சரியாக தொண்ணூறு பாகையில் இருந்தது அவளது முகத்தின் வடிவத்தில் ஒரு எம்.எம். கூட தப்பு செய்யாத பிரம்மனின் தொழில் சுத்தத்தை காண்பித்தது. ஜிமிக்கி தன்னை மாட்டிய இடம் உயர்ந்த இடம் என்பதால் அவள் நடக்க நடக்க ஆனந்த நடனமாடியது//

அட! அட! அட! என்ன ஒரு வர்ணனை, வரிக்கு வரி ரசித்தேன். நமக்கு வர்ணனை(யும்)அவ்ளோ கோர்வையா வராது, நீங்க அடிச்சி ஆடி இருக்கேள். எனக்கென்னவோ சுதர்சனோட பேர் RVSஓனு சந்தேகமா இருக்கு..:P கைல காப்பு போட்ட எபக்ட் சூப்பரா தெரியுது

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்குதுங்கோ....

புவனேஸ்வரி ராமநாதன் said...

//சைக்கிளை பூப்போல எடுத்து நோகாமல் அந்தப் பெண் ஓட்டும்போது மனசை ஹாண்டில் பண்ண முடியாமல் பாரில் போய் விழுந்துவிடுவார்கள்.//
அடடா.. இது போல் எத்தனை வரிகள். கலக்கியிருக்கீங்க.

RVS said...

@மதுரை சரவணன்
நன்றி சரவணன். என்ன ரொம்ப நாளா ஆளே காணோம். ;-))))

RVS said...

@கக்கு - மாணிக்கம்
பாராட்டுக்கு நன்றி மாணிக்கம். சொந்த அனுபவம் இதைவிட இன்னும் ஐந்துபடி மேல்!!!.. அப்புறமா.. வேற பதிவுல வச்சுக்கலாம்... ;-) ;-) ;-)

RVS said...

@Porkodi (பொற்கொடி)
அஞ்சலி கதையா இருக்கும்ன்னு நினச்சீங்களோ!! பாராட்டுக்கு நன்றி!! ;-))))))

RVS said...

@raji
உங்க பதிவுக்கு வந்து மௌன அஞ்சலி செலுத்தியாச்சு....

அடுத்த கதையோட டைட்டிலே உங்க பதிவுல பின்னூட்டமா போட்டாச்சு....

பக்கத்தாத்து மாமி பேர் நல்லா இருந்தது இல்ல..நக்கல்லாம் இல்லீங்க மேடம்!!! ;-) ;-) ;-)

RVS said...

@சிவகுமாரன்
பாராட்டுக்கு நன்றி சிவகுமரன்!! பாட்டு போட எனக்கு ரொம்ப பிடிக்கும். கதை விடவும் இப்போது பிடிக்கிறது. ;-))))

RVS said...

@Chitra

Thank You!!! ;-) ;-)

RVS said...

@இராமசாமி
நன்றிங்க.. அடிக்கடி வாங்க... ;-) ;-) ;-)

RVS said...

@அப்பாதுரை
ஸாரி தல.. இன்னும் நல்ல ஸ்டாண்டர்டுக்கு வரலையா.. நல்லா எழுத முயற்சி பண்றேன். நன்றி.. ;-) ;-)

பிம்பம். said...

nallaayirukku..

RVS said...

@எல் கே
வாழ்த்துக்கு ன்றி எல்.கே. தெரியும். ஆனால் மூணாவதுக்கு காரணம் தானே சீமந்தமும்.. ;-) ;-)

RVS said...

@கெக்கே பிக்குணி
தமன்னா!! பிடிச்சீங்க பாருங்க பாயிண்டை!!
ஹீரோவை அடிக்கறவன் வில்லன்.... ஹா..ஹா..
ரசித்துப் படித்ததற்கு நன்றி.. ;-) ;-)

ஆமாம்... ரெண்டாவது கமெண்டுல --- மட்டும் போட்ருக்கீங்க.. என்ன மேட்டர்? ;-) ;-)

RVS said...

@Balaji saravana
பாராட்டுக்கு நன்றி பாலாஜி!!! இதுல எதுவும் நீங்க பண்ணியதுண்டா? ;-) ;-)

RVS said...

@அமைதிச்சாரல்
நன்றிங்க.. ;-) ;-)

RVS said...

@ரிஷபன்
ரொம்ப தேங்க்ஸ் சார்!! ரெண்டு டம்பளர் ஹார்லிக்ஸ் ஊக்கத்திற்கு நன்றி. ;-) ;-)

RVS said...

@இளங்கோ
ஹாப்பி என்டிங் எதிர்பார்த்தீங்களோ!! ;-) ;-)

RVS said...

@MANO நாஞ்சில் மனோ
நன்றிங்கோ... பாட்டு போடறதை நிப்பாட்டிட்டேன்... ;-))))))

RVS said...

@தக்குடு
அன்பின் தக்குடு... ஆர்.வி.எஸ். சுதர்சன் ஆக முடியாது... சுதர்சன் ஆர்.வி.எஸ் ஆக முடியாது.. ஏன்னா ஆர்.வி.எஸ். கதை..... வேண்டாம்.. இதோட நிறுத்திப்போம்.. (கதையை கதையா பாருங்கப்பா... உடனே கும்மி அடிச்சுருவீங்க...) ;-);-) ;-)

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
நன்றிங்க.. ரொம்ப நாளைக்கப்புறம் ஊருக்கு போயிட்டு வந்திருக்கீங்க.. எப்படி இருக்கு ஊரு...

RVS said...

@பிம்பம்.
நன்றிங்க... முதல் வருகை நல்வரவாகுக.. அடிக்கடி வாங்க... ;-) ;-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

நம்மூருக்கென்ன.. சொர்க்கம்.

அப்பாதுரை said...

எழுத்து ரசமாக (ஹ்ம்ம்ம்) இருக்குங்க; 'எலி' மட்டும் நுழையலனு சொன்னேன்; என்னோட குறையாவும் இருக்கலாம்.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா, நல்ல ஃபார்ம்ல இருக்கீங்க! இதுல எத்தனை சொந்த அனுபவம்? :)

Unknown said...

-- மேட்டர் இல்லங்கிறது தான் மேட்டர். இமெயில் ஃபாலோஅப்புக்கு.

பத்மநாபன் said...

எட்டு வாக்கியத்தில் ஒரு காதல் கதை. என்ன.. ஒரு வாக்கியத்திற்கு நூறு வார்த்தைகள் ..உங்கள் வார்த்தை வெள்ளத்தில் காதல் உற்சாக நடனமாடுது..சுஜா,சுஜா என்று சுஜாவில் சுருண்ட அந்த பேராவில் ஒரு விளையாட்டு விளையாடி வீட்டீர்கள்...

தக்குடு said...

//சுதர்சன் ஆர்.வி.எஸ் ஆக முடியாது.. ஏன்னா ஆர்.வி.எஸ். கதை.//
அதுவும் சரிதான் சுதர்சன் இடத்துல மட்டும் 'மன்னார்குடி மைனர்' இருந்திருந்தா கதையே வேற மாதிரி போயிருக்கும். இல்லையா?..:PP

ADHI VENKAT said...

கதை எழுதிய விதம் நல்லாயிருக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சொந்த அனுபவம் கொஞ்சமாவது இல்லாமல், இது போல காதல் ரஸம் சொட்டச்சொட்ட, முழுநீள நகைச்சுவையாக கதை எழுத வராது. மிகவும் ரஸித்துப் படித்தேன்.
வாழ்த்துக்கள்.

[எல்.கே. சொன்ன திருத்தம் சரியே !
மூன்றாவது பூணல் சீமந்தத்திற்கு அல்ல. அது வேறு ஒன்றுக்கு.]

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
ஆமாங்க.. நம்ம கிராமராஜன் பாடினதுதான்.. சொர்க்கமே என்றாலும்.. அது நம்மூரு போல வருமா? ;-)

RVS said...

@அப்பாதுரை
இப்பவும் இந்த அடிமண்டுக்கு புரியலை அப்பாஜி! நேரே மூஞ்சில அடிச்சா மாதிரி சொல்லுங்க பாப்போம் .. ;-) ;-) ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
கதையை அனுபவிச்சு எழுதியிருக்கேன் சார்! வேற ஒன்னும் இல்லை... ;-)

RVS said...

@கெக்கே பிக்குணி
மேட்டர் இல்லேங்கறதே ஒரு மேட்டர் தான் !! எவ்ளோ பெரிய தத்துவத்தை சொல்லிட்டீங்க.. பிசிக்ஸ்ல மேட்டர் பற்றி படிச்சது ஞாபகம் வருது.. ஹி.. ஹி.. ;-) ;-)

RVS said...

@பத்மநாபன்
ரசிகர்களின் தலைவன் சார் நீங்க!! என்னமா பின்றீங்க.. உங்களோட கமேன்ட்டயெல்லாம் தொகுத்து புத்தகமா போடலாம்.. யார் யார் எனக்கு வழிமொழியிரீங்களோ கை தூக்குங்கப்பா.. ;-) ;-)

RVS said...

@தக்குடு
பாம்பின் கால் பாம்பறியும்.. இதுக்கு மேல நான் ஒன்னும் சொல்லலை.. ;-)

RVS said...

@கோவை2தில்லி
நன்றிங்க.. ;-

RVS said...

@VAI. GOPALAKRISHNAN
சார்! முதல் வருகைக்கும் அமர்க்களமான கமெண்ட்டுக்கும் நன்றி.
சொந்த அனுபவம் ஒன்னும் இல்லை சார்! கூர்ந்து பார்த்த அனுபவம் தான். அடிக்கடி வந்து போங்க சார்! நன்றி ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails