Tuesday, October 25, 2011

வெடியார்ப்பணம்

உள்ளாட்சி தேர்தலினால் இந்த வருஷம் பட்டாசுக்கடைகள் கொஞ்சம் லேட். தீவுத்திடல் போன்ற பெரிய மைதானங்களில் தான் பட்டாசு விற்பனை செய்யவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. சந்துபொந்திலெல்லாம் சாக்கு டெண்ட் அடித்து கூவிக்கூவி விற்கிறார்கள். “யப்பா! நாம எப்ப வாங்கப்போறோம்” என்று ஊசிப் பட்டாசாய் வெடித்த என் பிள்ளைகளை இன்று நாளை என்று இழுத்தட்டித்து போன சனிக்கிழமை இழுத்துக்கொண்டு போனேன். வளர்ந்தாலும் நானும் சிறு பிள்ளைதான், எனக்கும் பட்டாசு கொளுத்தப் பிடிக்கும்.

எண்பதுகளில் ஒரு தீபாவளிக்கு ”தம்பி நூறு ரூபாய்க்கெல்லாம் வெடி கிடையாது” என்று மிலிட்டரி ஆபீசர் மாதிரி வீட்டில் கறாராக சொல்லிவிட்டார்கள். ”ஒத்தைவெடிக்கட்டு தெனம் ஒரு ரூபாய்க்கு வாங்கி ஒரு மாசமாக கொளுத்தி ஏற்கனவே காசைக் கரியாக்கியாச்சு. இன்னமுமா..” என்று என் வாயை லட்டால் அடைத்துவிட்டார்கள். 98 ரூபாய்க்கு ஒரு இரண்டடி நீள சாக்குத் துணிப்பை வழியவழிய வெடி வாங்கி இனாமாக ஒரு சாணி பத்தியும் கொளுத்துவதற்கு தந்தார்கள். இப்போது சாணி பத்தி பத்து ரூபாய். “இவ்ளோ ரூபாய்க்கு வாங்கறோம். இது கூட ஃப்ரீயாக் கிடையாதா?”ன்னு கேட்டால், “எனக்கு யாரும் ஃப்ரீயாத் தரலையே சார்”னு கல்லாவில் உட்கார்ந்து கொண்டு ஐஐடி-ஜெஈஈ கேள்வி ரேஞ்சுக்கு கேட்டுவிட்டோம் என்கிற மமதையில் உள்நாக்கு தெரியும் வரை ”ப்ஹா...ப்ஹா” சிரிக்கிறார் அந்த வெடிச்சிரிப்பு வெடிகடைக்காரர்.

98 ரூபாய் சரக்கில் வீட்டுக்குப் போவதற்குள் கையைவிட்டுத் துழாவித் துழாவி கணக்கெடுத்தால் எலெக்ட்ரிக் ஸ்டோனும் மத்தாப்பூ தீக்குச்சியும் இல்லை. பை நிறையா கொட்டியிருக்கிற வெடியில சந்தோஷம் கிடைக்காம வாங்காத அந்த ரெண்டு ஐட்டம் அந்த தீபாவளியை ஒட்டுமொத்தமாக புஸ்ஸாக்கிக் கொண்டிருந்தது. நரகாசுரன் செத்தே இருந்திருக்க வேண்டாம் என்று அவனுக்காக அனுதாபப்பட வைத்துவிட்டது.

ஜென்ம ஜென்மங்களாக தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாகவே மொத்த வெடிக் கொள்முதல் செய்து பாட்டி வடாம் காய வைப்பது போல மொட்டை மாடியில் படியேறும் இடத்து சன்ஷேடில் உட்கார்ந்துகொண்டு வெடி அடியில் இங்கிலீஷ் பேப்பர் போட்டு சுள்ளென்று அடிக்கும் வெய்யிலில் காய வைப்போம். “ரெண்டு நாள் வெய்யில்ல இருந்தா சவுண்டு டபுள் மடங்கு வரும்” என்று யாரோ வெடி பல்கலைக்கழக பட்டாசாராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றுக் கண்டுபிடித்து சொன்னதைப் போன்று வாரம் முழுக்க மொ.மாடியில் பரப்பி எந்தெந்த வெடியை முதல் நாள் இரவு கொளுத்தனும் எது முதலில் எது கடைசி எது கார்த்திகைக்கு என்று அட்டவணை தயாரிக்கப்படும்.

அந்த வருஷ தீபாவளிக்கு பெருமழை வானத்தைப் பிய்த்துக்கொண்டு பண்டிகை கொண்டாடவிடாமல் கொட்டோ கொட்டென்று கொட்டியது. வங்காளவிரிகுடாவில் புயல் மையம் கொண்டிருப்பதாகவும், மூன்றாம் எண் எச்சரிக்கைக் கொடி பட்டொளி வீசிப் பறப்பதாகவும் பதபதைக்கும் தகவல். ஆகாய கங்கையாக மழை பொழிந்துகொண்டிருந்ததில் தான் அனைவருக்கும் தீபாவளி கங்காஸ்நானம்.

எப்போதுமே திருச்சி விவிதபாரதி இன்று மழை பெய்யும் என்றால் வெய்யில் அடிக்கும், மிதமான சீதோஷனம் என்றால் கிருஷ்ண பரமாத்மா கோவர்த்தனகிரியை குடையாய் பிடிக்கும் அளவிற்கு பொத்துக்கிட்டு ஊத்தும். ஆனால் அம்முறை பெய்யெனப் பெய்யும் மழையாக ஏகத்துக்கும் அவர்கள் வானிலை அறிக்கைச் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடித்துப் பெய்தது. ”ஐப்பசியில் அடை மழை” என்று ஊஞ்சலாடிய பாட்டியின் பழமொழி வேறு எங்களை வதைத்தது. அது ப்ளாஸ்டிக் காரி பேக்குகள் புழக்கத்தில் இல்லாத மாசற்ற காலம். பாட்டம் பாட்டமாக பெய்யும் ஒரு மழைக்கும் அடுத்த மழைக்கும் இருக்கும் இண்டெர்வெல்லில் வெடி வாங்கி வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தாகிவிட்டது.

கட்டு பிரித்து ஒரு லக்ஷ்மி வெடி வைத்துவிட்டு பத்தடிக்கு நாய் துரத்தும் அவசரத்தில் ஓடிப்போய் காதைப் பொத்திக்கொண்டு காத்திருந்ததில் கொஞ்சம் கொஞ்சமாக மருந்து சுருட்டிய பேப்பர் வரைக்கும் வந்து லக்ஷ்மியை பேப்பராக சிதறடிக்க மனமில்லாமல் திரியிலிட்ட நெருப்பு பொசுக்கென்று அணைந்து போனது. வெடியனைத்தும் மந்திரிகள் மேல் போட்ட ஊழல் கேஸ்கள் போல புஸ் ஆனதில் பக்கத்து வீட்டு துடிப்பான நண்பன் ஒரு உபாயம் செய்தான். எல்லா வெடியையும் பாக்கெட்டோடு ஒரு பெரிய சட்டியில் போட்டு வறுத்தால் சூடாகி வெடிநிலைக்குத் தயாராகிவிடும் என்ற மதிநுட்பத்தோடு அறிவார்ந்த ஒரு செயலில் இறங்கினான்.

லெக்ஷ்மி வெடி, சிவாஜி வெடி, குருவி, அன்னம், சரம், ஆட்டம் பாம் என்று அனைத்து ரக வெடிகளையும் எடுத்து ஒரு ஈடு வறுத்துவிட்டு மறு ஈட்டுக்கு மீதியைப் போடலாம் என்று அடுப்பில் இரும்புச் சட்டியில் வைத்துவிட்டு வாசலுக்கு வந்தான். அனலிலிட்ட சிவாஜியும், லக்ஷ்மியும் சூடு தாங்காமல் கொதித்தெழுந்து அவர்கள் வீட்டு சமையலறையை துவம்சம் செய்துவிட்டார்கள். எங்கள் எல்லோருக்கும் முன்னதாக முதலில் தீபாவளி கொண்டாடியவனுக்கு கோரஸாக சேர்ந்து வாழ்த்து சொன்னோம்.

மத்தாப்பு கொளுத்தும் மங்கையரின் எண்ணத்திலும் அன்றைக்கு அந்த பெருமழையோடு இடியும் சேர்ந்து விழுந்தது. வீட்டில் “வர்ற மார்கழி தாண்டாது” என்றிருக்கும் பெருசுகளை கூடத்தில் மத்தாப்பு கொளுத்தி புகையோடு மேலே வெண்புகை தவழும் தேசத்திற்கு அனுப்பிவிடப் போகிறார்கள் என்று முன்ஜாக்கிரதையாக வெடி கொளுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டார்கள். வீதிகளில் பிஜிலி கொளுத்தும் குஜிலிகளைக் காணாது ஆண் சமுதாத்திற்கு அன்று பேரிழப்பு ஏற்பட்டது.

வெடிகொளுத்தும் பேரார்வத்தில் சைக்கிள் கேரியரை ராக்கெட் லான்ச்சராக பயன்படுத்தி விண்ணில் செலுத்தியதில் அது மண்ணில் பாய்ந்து புது பட்டு வேஷ்டியை டப்பாக் கட்டு கட்டி வந்த கடைக்கோடி வீட்டு மாமாவின் தொடையில் பாய்ந்து துளைத்துவிட்டது. அவர் எழுப்பிய மரண ஓலத்தில் தெரு நிசப்தமானது. அவருடைய பாரியாளின் சாபத்தில் கேட்போர் காதுகள் ரணகளமானது. ”புதுத்துணி நெருப்புப் பட்டு தீஞ்சு போனா ஆகாதும்பா” என்று அவருக்கு ஆதரவாக பீதி கிளப்பிய இன்னொரு பாட்டியால் புதுவஸ்திராசையும் அந்தத் தீபாவளியில் அடியோடு ஒழிந்து போனது.

மழை இடைவிடாமல் இந்தத் தீபாவளிக்கும் வெற்றிகரமாகப் பெய்துவருவதால் இந்தப் பதிவையே வெடியார்ப்பணமாக என் நண்பர்களுக்கு சமர்ப்பித்து என்னுடைய இதயங் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை  தெரிவித்துக் கொள்கிறேன்.


அடிச்சொருகல்: எனக்காக சரம் வெடித்த பாவனாவுக்கு ஒரு நன்றி. பாவனா படம் எனக்களித்த நண்பர் பாரதிராஜாவுக்கு ஒரு நன்றி. போன வருஷ தீபாவளி சமயத்தில் மன்னையில் கொண்டாடிய தீபாவளி பற்றிய பதிவுக்கு இங்கே சொடுக்கவும்.

-

40 comments:

இராஜராஜேஸ்வரி said...

முதல் வெடியார்ப்பணம் சமர்ப்பித்து இதயங் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

அருமையான பதிவு
தங்கள் பதிவைப் படிக்கப் படிக்க
முன்பு ஒவ்வொரு சின்னச் சின்ன ஆசையை
தீர்த்துக் கொள்வதற்கும் முழுமையாக
பெரியவர்களைச் சார்ந்து மிகுந்த கடின முயற்சியில்
கிடைத்த சிறிது அல்லது கிடைக்காமல் போனது எல்லாம்
இப்போது நினைத்துப்பார்க்க வண்ணமயமான
நினைவுகளாக அனைவருக்குள்ளும் விரிகிறது
அருமையான சிறப்புப் பதிவு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவாருக்கும்
இனிய மனம் கனிந்த தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
த.ம 2

settaikkaran said...

இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

Rekha raghavan said...

வெடியார்ப்பணம் படித்தேன். உங்களுக்கு "பட் பட்" என எழுத வருகிறது.உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

ரிஷபன் said...

தீபாவளி நல்வாழ்த்துகள்.
வெடிச்சிரிப்பு சிரித்து ஆரம்பித்து வைத்த உங்கள் வெடியார்ப்பணத்திற்கு எங்கள் சிரிப்பு சமர்ப்பணம்

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் மைனரே....

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

பிஜிலி கொளுத்தும் குஜிலிகள்....ஹா..ஹா...

சரவெடிப் படம் சின்னதாகப் பார்க்கும் போது சரண்யா மோகன் மாதிரித் தெரிந்தது. பாவனாவா...ஓகே ஓகே...

தீபாவளி வாழ்த்துகள்.

Madhavan Srinivasagopalan said...

பாத்துப்பா.. எப்படியாவது.. கஷ்டப் பட்டாவது.. காப்பி அடிச்சாவது.. சொதப்பலா ஒரு பதிவு போட்டுடு.. திருஷ்டி கழிஞ்சுடும்..
படவா.. என்னமா எழுதுற..

சவால் சிறுகதைக்கு ஒரு சின்ன பிளாட் கெடைச்சுது.. டெவலப் பண்ணத் தெரியாம முழிக்கறேன்.. உன்ன மாதிரி ஆளா இருந்தா டென் தௌசண்ட் -வாலா கணக்கா பொளந்து கட்டிருப்ப..

(ஒருமையில் பேசுவதற்கு காரணம்.. ஆர்.வி.எஸ். எனது சக-வகுப்புத் தோழன்)
-------------

ஸ்ரீராம் சார்..
ஹிந்தியில் 'பிஜிலி' என்றால், 'மின்னல்' மற்றும் 'மின்சாரத்தை' குறிக்கும்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வெடியார்ப்பணம் சூப்பர்!
எப்படித் தான் ஊசி வெடி மாதிரி எழுதறீங்களோ?

Angel said...

இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்

Matangi Mawley said...

என்னதான் இருந்தாலும்- அந்த வெடி வாங்கினப்ரம் தான் தீபாவளி வந்த feel ஏ வருது...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.... :)

தக்குடு said...

என்னடா இது மைனர்வாள் ப்ளாக்ல எதோ ஒளிவட்டம் வந்தமாதிரி இருக்கே!னு நினைச்சுண்டே பாத்தா நம்ப பாவனா....:) தீபாவளி வாழ்த்துக்கள் மைனருக்கும் அவரை சமாளிக்கும் அக்காவுக்கும் & 2 இளவரசிகளுக்கும்! :)

அப்பாதுரை said...

தீபாவளியன்னிக்கு மழையா? ப்ச்!
98 ரூபாய்..para ரொம்ப ரசித்தேன். வாங்கினது காணாம போச்சா, வாங்காமலே காணாம போச்சா? (!)
வாழ்த்துக்கள்.

ஹ ர ணி said...

வெகுநாட்களுக்குப் பின்னால் வந்தேன். மனசு முழுக்க மகிழ்ச்சி ததும்ப அனுப்விக்க வைத்துவிட்ட பதிவைத் தந்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள். இனிய தீபாவளி நாளில்

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றி மேடம். உங்களுக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள். :-)

RVS said...

@Ramani
பாராட்டுக்கு நன்றி சார். மனசுக்குள் சுருள் சுருளாய் மடிந்து கிடந்தது வெளியே வருகிறது. :-))

RVS said...

@சேட்டைக்காரன்
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

மீண்டும் மீண்டும் வருக. :-))

RVS said...

@ரேகா ராகவன்
பாராட்டுக்கு நன்றி சார். நீங்க சுருக்குன்னு ஒரு பக்கத்துல எழுதறத நா நீட்டி முழக்கி எழுதறேன் சார். :-))

RVS said...

@ரிஷபன்
மிக்க நன்றி சார். உங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகள். :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
தீபாவளி வாழ்த்துகள் தல. உங்கள் வீட்டாருக்கும் வாண்டிற்கும் சொல்லிவிடுங்கள். நன்றி. :-)

RVS said...

@Rathnavel
ஐயா. மிக்க நன்றி. தங்களுக்கு என இதயப்பூர்வமான தீபாவளி நல்வாழ்த்துகள். :-)

RVS said...

@ஸ்ரீராம்.
கமெர்ஷியலாக வாழ்த்து சொல்ல ஆசைப்பட்டேன். பத்திரிக்கை உலக நண்பர் பாரதிராஜா உதவினார். போட்டுவிட்டேன். நன்றி :-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
ரிவர்ஸ் பாராட்டுக்கு நன்றி மாதவா! இன்னொரு சவால் சிறுகதை எழுதியிருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் வெளியிடுவேன். கருத்து சொல்லவும். :-)

RVS said...

@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
பாராட்டுக்கு நன்றி சார்! உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். :-)

RVS said...

@angelin
வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க. :-)

RVS said...

@Matangi Mawley
நன்றி மாதங்கி. வெடிபுராணம் இன்னும் நிறைய இருக்கு. அடுத்தடுத்த வருஷம்லாம் என்ன எழுதறதுன்னு அடக்கி வாசிச்சிட்டேன். நன்றி. :-)

RVS said...

@தக்குடு
//அவரை சமாளிக்கும்///
லொல்ளு?
இரண்டு மாசத்துக்கப்புறம் பார்த்துக்கிறேன்.

தீபாவளி வாழ்த்துக்கள் க.கா.மன்னா. :-)

RVS said...

@அப்பாதுரை
பாராட்டுக்கு நன்றி சார். வாங்கினது வாங்காததுன்னு வார்த்தை ஜாலம் பண்றீங்க... :-))

RVS said...

@Harani
வருகைக்கு மிக்க நன்றி. ரொம்ப நாளாச்சு உங்களை இங்க பார்த்து. தீபாவளி நல்வாழ்த்துகள் சார். :-)

RVS said...

@மாதேவி
நன்றிங்க. உங்களுடைய குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள். :-)

Sivakumar said...

Belated Diwali Wishes to you!!

RVS said...

@! சிவகுமார் !
Thank you Siva. :-)

சாந்தி மாரியப்பன் said...

பத்து தவுசண்ட்வாலாக்கள் ஒண்ணா வெடிச்சது போல் இருக்கு :-)

இனிய தீபாவளி வாழ்த்துகள் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் .

raji said...

என்னதான் இருந்தாலும் சின்ன வயசுல நாம கொண்டாடின தீபாவளி சுவாரஸ்யம் நிறைந்ததுதான்

ஆமா அதென்ன மத்தாப்பு கொளுத்தும் மங்கையர்?! ஏன் நாங்கள்லாம் 10000 வாலா கொளுத்த மாட்டோமா?
நைஸா அதெல்லாம் நீங்களே வச்சுக்கிட்டு எங்க சைடுல மத்தாப்பை தள்ளி விட்ர வேண்டியது

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எப்பவுமே ஒங்க நான்ஃபிக்‌ஷனுக்கு நான் ரசிகன் ஆர்.வி.எஸ்,

போட்டு சாத்தி எடுத்துவிட்டீர்கள் வெடிவெடியா.

எல்லாமே எல்லோருமே செய்திருந்தாலும் யார் முந்திக்கிறாங்களோ அவங்களுக்குத்தான் க்ரெடிட்.இப்ப க்ரெடிட் உங்களின் வெடியார்ப்பணத்துக்கு.

தொடையில் ராக்கெட் தாக்குதலை எதிர்கொண்ட மாமாவுக்கு பக்கெட் அனுதாபங்களுடன் ஒரு கள்ளச்சிரிப்பும் இணைப்பாய்.

RVS said...

@அமைதிச்சாரல்
நன்றிங்க... உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவிச்சுக்கிறேன். :-)

RVS said...

@raji
சரிங்க... லக்ஷ்மி வெடி வெடிக்கும் லெக்ஷ்மிக்கள்... போதுமா? :-))

RVS said...

@சுந்தர்ஜி
ஹா..ஹா.. நன்றி ஜி! :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails