மேலாடை அணியாத மங்கையரின் 'கிளு கிளு' காட்சிகள் காண்பித்ததர்க்காக எப் டிவிக்கு ஒன்பது நாட்கள் தடை விதிக்கப்பட்டிருகிறது. ஒரு சின்ன சந்தேகம். அதென்ன ஒன்பது நாட்கள்? காண்பித்த மங்கையருக்கும் இந்த தடை நாட்களுக்கும் ஏதேனும் லிங்க் உள்ளதா? ஒன்பது பெண்களா அல்லது 'ஒன்பது' பெண்களா? மேலே ஒன்றும் அணியாத பெண்ணை காண்பிப்பது நல்ல ரசனைக்கும், நற்பண்பிர்க்கும் எதிராக உள்ளதால் தடை செய்யப்பட்டதாக மத்திய அரசின் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. ரசனை என்பது ஒருவருக்கொருவர் வேறுபடும் என்று நான் விகல்பமின்றி சொன்னதற்கு "அது எல்லோருக்கும் தெரியும்" என்று ஒரு வயோதிக அலுவலக நண்பர் ஆணித்தரமாக அடித்துச்சொன்னார். என்னையில்லை.
எப் டிவி அன்பர்களின் இந்த கலாச்சார கொலை செயலைக் கண்டித்தது போலவே சாமியாரின் 'சாமி' படம் காண்பித்த சன் நியூஸ் சேனலுக்கும் பிற்காலத்தில் தடை வருமா என்று தற்கால அரசியல் தெரியாத அபிஷ்டு என்னிடம் எகத்தாளமாக கேட்டபோது, அது 'சூரியனுக்கே' வெளிச்சம் என்று மட்டும் தான் என்னால் கூற முடிந்தது. இப்படி சன் நியூசுக்கு தடை சொன்னால் வாராவாரம் ஆரவாரமாக ஆறடி ஆஜானுபாகுவான தேகத்திற்கு ஒரு அடி வஸ்திரத்தை சுற்றிக்கொண்டு வந்து 'நாட்டிய' தீர்ப்பு வழங்கும் நமீதா பங்குபெறும் மானாட மயிலாடவுக்கும் தடை வருமா என்று இன்றைய டிரெண்ட் தெரியாமல் பேசிய என் நண்பரை நான் மிகவும் கோபித்துக்கொண்டேன்.
இந்த மேலாடை விவகாரத்தில் ஒரு ஜோக் நியாபகம் வருகிறது, ஒரு ஆதிவாசிப் பெண் மேலாடை இல்லாமல் இடையில் இலையாடை உடுத்திக்கொண்டு உலா வந்து கொண்டிருந்தாள். அதைப் பார்த்த ஆடை நாகரீகம் அடைந்த ஒருவர் "ஏம்மா. இப்படி மேலாடை இல்லாமல் வருவது தவறு. உனக்கு வெட்கமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு பார்க்க கூச்சமாக இருக்கிறது" என்று பெருமூச்சுடன் கேட்டார். இதைக்கேட்டு உடனே என்ன செய்வது என்று அறியாது திகைத்த அந்த ஆதிவாசிப்பெண் இடையை விட்டு இலையாடையை இழுத்து மேலாடையாக போட்டுக்கொண்டாளாம். இந்த ஜோக்கை எப்.டிவிகாரர்கள் சீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டு 'ஆதிவாசி பேஷன் வீக்' என்று கொண்டாடாமல் இருந்தால் மிக்க சந்தோஷம்.
இந்த டாப் ஓபன் காட்சியை மகளிர் சங்கங்கள் கண்டித்து தான் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா என்று தெரியவில்லை ஆனால் 33% மகளிர் மசோதா சட்டமாக்கப்படலாம் என்ற இவ்வேளையில் அந்த சதவிகிதம் அளவிற்காவது இவர்கள் உடை அணிவது சாலச்சிறந்தது என்று நினைக்கிறேன். இது போன்ற தடையுத்தரவுகளினால் இளைஞர் சமுதாயம் திருந்தும் என்று நினைக்கிற இந்த அரசையும், அரசியல்வாதிகளையும், மக்களையும் நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. ஏனென்றால் இதற்க்கு முன்னும் இருதடவைகள் இந்த சேனல் தடை வாங்கி இப்போது மூன்றாம் முறையாக இந்த கலைச்சேவையை மக்களுக்கு வழங்குகிறது.
காலையில் கல்லூரி செல்லும் பஸ் ஸ்டாப்பில் "இதுக்குதான்டா பெருசெல்லாம் பிரதமராக ஆகக் கூடாதுன்னு சொல்றது" என்று இரு சிறுசுகள் அவர்கள் உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்துக்கொண்டிருந்தார்கள்.
2 comments:
பெருசெல்லாம் ப்ளாக் கூட வைக்கக் கூடாதுங்க...
அந்தப் படத்தை முழுசா, பெரிசா போட்டா எதைப் பற்றி சொல்ல வருகிறீர்கள் என்பது தெளிவாய் தெரியும் இல்லை?
//ஏனென்றால் இதற்க்கு முன்னும் இருதடவைகள் இந்த சேனல் தடை வாங்கி இப்போது மூன்றாம் முறையாக இந்த கலைச்சேவையை மக்களுக்கு வழங்குகிறது.//
தண்ணியடிக்கறது.. சிகரெட்டு பிடிக்கறது.. சூதாட்டம் விளையாடுறது -- இந்தமாதிரி கேட்ட பழக்கங்கலேல்லாம் நிறுத்தறது சொம்ப சுலபம்.. நா கூட ஒரு 40 தடவை நிறுத்தி இருக்கேன்ல..
Request to RVSM.. do you really need to have 'word verification' for posting comment? I feel, it may be removed.
Post a Comment